Wednesday, December 29, 2010

யுஏஇ:தொழில் ஒப்பந்தம் காலவதியானால் புதிய விசா கிடைக்க 6 மாத விலக்கு இனி இல்லை

யுஏஇ:தொழில் ஒப்பந்தம் காலவதியானால் புதிய விசா கிடைக்க 6 மாத விலக்கு இனி இல்லை


ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை ஒப்பந்தம் காலாவதியான ஒருவருக்கு புதிய வேலை அனுமதி கிடைக்க ஆறுமாத விலக்கு (Ban) நிபந்தனை இனி இல்லை என யு.ஏ.இ தொழில் அமைச்சர் ஸகர் கோபாஷ் அறிவித்துள்ளார்.

இச்சட்டம் வருகிற 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தேதியிலிருந்து அமுலுக்கு வரும் என அவர் தெரிவித்தார்.

மேலும் புதிய சட்டத்தில் தொழில் மாற்றம்(Transfer), ஸ்பான்சர்ஷிஃப் மாற்றம் ஆகியவற்றிலும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இம்முடிவு யு.ஏ.இ கேபினட் கூட்ட தீர்மானத்தின்படி எடுக்கப்பட்டுள்ளது.

வேலை ஒப்பந்தம் முடிந்தபிறகு வேறொரு வேலையில் சேருவதற்கு முன்னாள் உரிமையாளரிடம் (Employer) அனுமதி பெறவேண்டும் என்ற நிபந்தனையும் நீக்கப்பட்டுள்ளது. ஆனால், முன்னாள் ஸ்பான்ஷருடனான வேலை ஒப்பந்தம் முடிந்தபிறகு புதிய விசா கோரி மனு சமர்ப்பிக்கவேண்டும் என்ற நிபந்தனை உள்ளது.

மேலும் ஒருவர் தனது பழைய தொழில் உரிமையாளரின் கீழ் குறைந்தது இரண்டு வருடமாவது வேலைப்பார்த்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் போடப்பட்டுள்ளது. அதாவது, வருகிற ஜனவரி மாதம் முதல் யு.ஏ.இயில் விசாவின் காலாவதி இரண்டு ஆண்டுகளாகும். அவ்வாறெனில் ஒருவர் தனது பழைய தொழில் உரிமையாளரின் கீழ் இரண்டு வருடங்கள் வேலைபார்த்தால் போதும்.

தொழில் உரிமையாளர் மற்றும் தொழிலாளியின்(Employee) சம்மதம் இல்லாமல் ஒப்பந்தத்தை(Contract) ரத்துச்செய்தல்(Cancel), புதிய விசாவுக்கான மனுவை அளித்தல் ஆகியவற்றுக்கு இயலக்கூடிய இரண்டு சூழல்களையும்(Cases) யு.ஏ.இ தொழில் அமைச்சகம் தெளிவுப்படுத்தியுள்ளது.

சட்டரீதியான அல்லது ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள நிபந்தனைகளை தொழில் உரிமையாளர் மீறுவது முதல் சூழலாகும். இரண்டாவது, தொழிலாளிக்கு தொடர்பில்லாத காரணத்தால் அவரை தொழிலிருந்து நீக்கினால் (அதாவது நிறுவனத்தை மூடிவிட்டால்), தொழிலாளி நிறுவனத்தின் மீது புகார் அளித்தால் உருவாகும் சூழலாகும். இத்தகைய சூழல்களில் அந்த நிறுவனம் இரண்டு மாதத்திற்கு மேலாக செயல்படவில்லை
என்பதற்கு விசாரணை அறிக்கை தேவை. மேலும் தொழிலாளி தொழில் அமைச்சகத்தில் புகார் அளித்திருக்க வேண்டும்.

புகாரை அமைச்சகம் நீதிமன்றத்திடம் ஒப்படைக்கும். இதனைத் தொடர்ந்து ஒப்பந்தத்தையோ அல்லது அதில் ஏதேனும் உரிமைகளையோ ரத்துச் செய்திருந்தால் தொழிலாளிக்கு இரண்டுமாத சம்பளமும் இதர சலுகைகளும்(other rights) இழப்பீடும்(Compensation) அளிக்க நீதிமன்றம் தொழில் உரிமையாளருக்கு இறுதி தீர்ப்பு வழங்கும்.

குறைந்தது இரண்டு வருடங்கள் தொழில் உரிமையாளரின் கீழ் வேலைச் செய்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை தொழிலாளி நிறைவேற்றாவிட்டாலும் கூட புதிய தொழிலில் அனுமதி(Permit) கிடைப்பதற்கான மூன்று சூழ்நிலைகளை அமைச்சகம் தெளிவுப்படுத்தியுள்ளது.

அவை:

1. வேலையில் சேரும்பொழுது தொழிலாளி தொழில்முறை வகுப்பில்(Professional Class) ஒன்று, இரண்டு, மூன்று(First, Second and Third) ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் உட்படுவார்.

புதியதாக சேரப்போகும் தொழிலில் வாக்குறுதியளிக்கப்படும் சம்பளம் ஒவ்வொரு பிரிவுக்கும் முறையே 12 ஆயிரம் திர்ஹம், 7 ஆயிரம் திர்ஹம், 5 ஆயிரம் திர்ஹம் ஆகியவற்றிலிருந்து குறைந்துவிடக் கூடாது.

2.தொழிலின் உரிமையாளர் சட்டரீதியான அல்லது தொழில் ரீதியிலான நிபந்தனைகளை கடைபிடிக்காமலிருந்தால் அல்லது தொழிலாளியை காரணமில்லாமல் வேலையிலிருந்து நீக்கினால்.

3.தொழில் உரிமையாளரின் இதர நிறுவனங்களிலோ அல்லது அவர் பங்குதாரராக இருக்கும் வேறு நிறுவனங்களிலோ தொழிலாளியை மாற்றுவது

இந்த மூன்று சூழ்நிலைகளில் தொழிலாளிக்கு நிச்சயிக்கப்பட்ட கால அவகாசம் பூர்த்தியாகமலேயே புதிய விசா கிடைக்கும்.

தொழில் சந்தையை(Labour market) மேலும் நெகிழ்வுத் தன்மையுடையதாக (Flexible) மாற்றுவதுதான் சட்டதிருத்தத்தின் மூலம் நோக்கமாக கொள்ளப்பட்டது என ஸகர் கோபாஷ் தெரிவித்துள்ளார்.

தொழிலாளர் மற்றும் தொழில் உரிமையாளருக்குமிடையேயான ஒப்பந்தத்தில் சமத்துவம் ஏற்படுத்துவதே இதன் நோக்கம். இரு தரப்பினருடைய சட்டரீதியான உரிமைகளை பேணி பாதுகாப்பதற்கு உரிய பொறுப்பு தொழில் அமைச்சகத்திற்காகும்.

சட்டரீதியான நிபந்தனைகளில் முறைகேடுகள் நடந்தால் மட்டுமே தொழில் அமைச்சகம் தொழிலாளி மற்றும் தொழில் உரிமையாளருக்கிடையேயான ஒப்பந்தத்தில் தலையிடும்.

தொழில் சந்தையில் நிலவும் ஏராளமான முறைகேடுகளுக்கு இந்த புதிய சட்டம் பரிகாரமாக மாறும். வல்லுநர்களுடனான கலந்தாய்வுக்கு பின்னரே தற்போதைய சட்டங்களின் தொடர்ச்சியாக புதிய நிபந்தனைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தேசத்தின் முன்னேற்றத்திற்கு இவை உதவிகரமாக இருக்கும் என தொழில் அமைச்சர் ஸகர் கோபாஷ் தெரிவித்தார்.

காட்டு கருவேல மரங்களை வெட்டுங்கள்!

காட்டு கருவேல மரங்களை வெட்டுங்கள்

அமெரிக்க தாவரவியல் பூங்கா , ‘வளர்க்க கூடாத நச்சு மரங்கள்’ என்று ஒரு தனி பட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில் முன்னணியில் இருப்பது தான் நான் குறிப்பிட  போகிற விஷ மரம்.  தமிழ் நாட்டின் ரோட்டின் ஓரங்களிலும், பல கிராமங்களின் வயல்வெளிகளிலும் சகஜமாக இருக்க கூடிய முள் மரம் எனப்படும் ‘காட்டு கருவேல மரம்’ தான் அது. (பேராண்மை படத்தில் கூட ஜெயம்ரவி மாணவிகளுடன் சேர்ந்து காட்டுக்குள் இருக்கும் மரத்தை வெட்டிகொண்டே  விளக்கம் சொல்வாரே ! )
நம் மண்ணின் தன்மையை கெடுப்பதற்காக வெளி நாட்டினர் இந்த மரத்தின் விதையை  இங்கு தூவியதாக ஒரு கருத்தும் ,  கிராம மக்களுக்கு அடுப்பு எரிக்க விறகு வேண்டும் என்பதற்காக ஒரு அரசியல்வாதி (நல்ல எண்ணம்தான், இதன் நச்சு தன்மை பற்றி தெரியாமல் இருந்திருக்கலாம் )  வெளிநாட்டில் இருந்து தருவித்ததாகவும் இரு விதமான கருத்துகள் உலவுகின்றன. உண்மை எதுவென்று ‘ யாம் அறியேன் பராபரமே’
ஆனால் எப்படி வந்தது என்பது அல்ல…., இப்போதைய  பிரச்சனை….!? , இம்மரத்தால் என்னவெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறது என்று பார்பதுதான் அவசியம்.  முதலில் இந்த மரத்தின் தன்மைகளை பார்க்கலாம்.
இதன் கொடூரமான குணங்கள்
இவை எந்த  வித வறட்சியிலும் நன்கு வளரக்கூடியது . மழை பெய்யாமல் போனாலும், நிலத்தில் நீரே இல்லாமல் இருந்தாலும் இவை கவலை படாது.  பூமியின் அடி ஆழம் வரை கூட தன் வேர்களை அனுப்பி நீரை உறிஞ்சி , தன் இலைகளை வாடவிடாமல் பார்த்து கொள்கிறது, ( அடுத்தவர்களின் உழைப்பை உறிஞ்சி வாழும் சில சுயநல  மனிதர்களை போல…! ) இதனால் நிலத்தடி நீர் முற்றிலுமாக  வற்றி அந்த பூமியே வறண்டு விடுகிறது…!
இதன் கொடூரம் அத்துடன் நிறைவு பெறுவது இல்லை, ஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன்னை சுற்றி தழுவி  செல்லும் காற்றில் இருக்கும் ஈரபதத்தையும் இம்மரம் உறிஞ்சிவிடுகிறது….. ??!!  இப்படி காற்றின் ஈரபதத்தையும்  , நிலத்தடி நீரையும் இழந்து அந்த பகுதியே வறட்சியின் பிடியில் தாண்டவமாடும்.
தென் தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களின் வறட்சிக்கு இந்த மரங்களே  முக்கிய காரணம் என்பது அதிர்ச்சியான ஒன்றுதான். ஆனால் இதை அறியாமல் அந்த மக்கள், இன்னும் புதிதாக மரங்களை வளர்த்து பராமரிக்கிறார்கள் என்று என்னும் போது அறியாமையை குறித்து வருந்த வேண்டி இருக்கிறது.
உடம்பு முழுதும் விஷம்
இந்த மரத்தின் இலை, காய், விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும் பயன்படாது.  முக்கியமான விஷயம் ஒன்றும்  உள்ளது , ஆச்சரியமாக இருந்தாலும் உண்மை அதுதான்.  இந்த மரத்தில் கால்நடைகளை கட்டி வைத்து வளர்த்தால்  அவை மலடாகிவிடும் , அதாவது சினைபிடிக்காமலேயே போய்விடும், ஒருவேளை மீறி கன்று ஈன்றாலுமே அது ஊனத்துடன்தான் பிறக்கும்….?!!
ஒருபுறம் இதன் வேர் நிலத்தடி  நீரை விஷமாக  மாற்றிவிடுகிறது மற்றொரு புறம்  இதன் நிழலில் மற்ற உயிரினங்கள் வாழ  முடியாத நிலை இருக்கிறது. இதன் பக்கத்தில் வேறு என்ற செடியும் வளராது, தவிர மரத்தில் எந்த பறவை இனங்களும் கூடுகட்டுவதும் இல்லை.
காரணம் என்னவென்றால் இந்த வேலிகாத்தான் மரங்கள், ஆக்சிசனை மிக குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது , ஆனால் கரிமிலவாயுவை மிக அதிக அளவில் உற்பத்தி செய்து வெளியிடுவதால் சுற்றுப்புற  காற்று மண்டலமே நச்சுதன்மையாக  மாறிவிடுகிறது.
அறியாமை
நமக்கு தெரியாமலேயே இப்படிப்பட்ட மரங்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறோம்  என்பது வருத்தத்துக்கு உரியதுதான்.
கேரளாவின் விழிப்புணர்வு
நமது அண்டை மாநிலமான கேரளாவில் இந்த மரத்தை பற்றிய விழிப்புணர்வை வனத்துறையினர் மக்களிடம் ஏற்படுத்தி உள்ளனர்…..!!  அதனால் கேரளாவில் இந்த மரத்தை ஒரு இடத்தில் கூட காண முடியாது.   ஆனால்  நம் தமிழ்நாட்டில் விறகிற்க்காக இந்த மரத்தை வளர்த்து வருகின்றனர்….??! என்ன முரண்பாடு…?? என்ன அறியாமை..??
ஆராய்ச்சியாளர்களும்,  இந்த மரங்கள் இருக்கும் இடங்களில் வாழும் மனிதர்களின் மனதையும் இந்த மரம் மாற்றி வன்முறை எண்ணத்தை கொடுக்கும் என்று கண்டு பிடித்து உள்ளனர்.
நல்ல மரம் ஆரோக்கியம்
வேப்பமரம் வளர்ப்பது எவ்வளவு நல்லது என்பதை யாவரும் அறிவோம், மற்றும் ஆலமரமும் , அரசமரமும் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது என்பதை உணர்ந்தவர்கள் நாம். இருந்தும் இந்த முள் மரத்தை பற்றி சரியாக விழிப்புணர்ச்சி நம்மிடம்  இல்லையே என்பதே என் ஆதங்கம் .
சுற்றுபுறத்தில் புல், பூண்டை கூட வளரவிடாமல் தடுக்கும் இந்த முள் மரத்தை பூண்டோடு அழிக்கவேண்டும் என்ற விழிப்புணர்வை அரசாங்கம் தீவிர முயற்சி எடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் . சமூக ஆர்வலர்கள் இந்த மரத்தை பற்றிய பிரசாரங்களை செயல் படுத்தலாம், செய்வார்களா?
இந்த பதிவை படிப்பவர்களும் முடிந்தவரை இந்த செய்தியை மற்றவர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் ஒரு சிறிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.
மரங்களை வளர்ப்பது எவ்வளவு அவசியமோ அதை விட இந்த மரத்தில் ஒன்றையாவது வெட்டி அழிப்பது அதை விட அவசியம்….
இந்த மரத்தை வெட்டி வீழ்த்துவோம்…..! நம் மண்ணின் மாண்பை காப்போம்..!!

Tuesday, December 28, 2010

செல்லிடத் தொலைபேசி குறித்த ஒரு பார்வை தோழனா தொல்லையா..? -


யா..? - செல்லிடத் தொலைபேசி குறித்த ஒரு பார்வை

தோழனா தொல்லையா..? - செல்லிடத் தொலைபேசி குறித்த ஒரு பார்வை

AddThis Social Bookmark Button
மனித குலத்தின் ஆறாவது புலனாக மாறியிருக்கிறது செல் போன், ஆரம்பத்தில் பேச மட்டும் பயன் படுத்தபட்ட இவை, தன்  எல்லையை தாண்டி கை அடக்க கணினியாக மாறிவிட்டிருக்கிறது .இளசுகளின் இனிய காதலராகவே மாறியிருக்கிறது. பெற்றோர்களின் மாபெரும் வில்லனான இந்த செல்போன் மீது கதிரலை தாக்க விளைவுகளால் நிறைய உடலியல் மாற்றம், மற்றும் நோய் ஏற்படுத்துகிறது என்கிற நிருபணங்கள் இருந்தாலும், இக்கட்டான சந்தர்ப்பங்களில் ஆபத்பாந்தனாக, உற்ற தோழனாக செல் போன் சில நேரங்களில் பயன்படுகிறது என்பதையும் இங்கே நாம் பார்க்கலாம்!
உதாரணமாக டவர் இல்லாத இடத்தில் ஆபத்தில் மாட்டி கொண்டீர்கள் ,வெளியுலகை தொடர்புகொண்டே ஆக வேண்டிய சூழ்நிலை , கவலையே வேண்டாம் ,உங்கள் செல் போனை எடுங்கள் 112 என்று அழுத்துங்கள் ,உலக நாடுகள் அனைத்திற்கும் பொதுவான எமெர்ஜென்சி நம்பர் அது  .கீ பேட் லாக் ஆகி இருந்தாலும் இந்த எண்னை டைப் செய்ய இயலும் , உங்கள் செல் தானாகவே அக்கம் பக்கத்திலிருக்கும் ஏதாவது ஒரு நெட் வொர்க்கை பிடித்து உங்களுக்கான எமெர்ஜென்சி இணைப்பை ஏற்படுத்திதரும்.
அடுத்து கார் வச்சிருக்கிற எல்லோருக்கும் ரொம்ப ரொம்ப தேவையான விஷயம் , நாம அடிகடி கார் சாவியை கார் உள்ளேயே விட்டு  விட்டு அவசரமாகவோ  , ஞாபக மறதியாகவோ கார் கதவை சாத்திவிடுவோம் , பிறகு நம் பாடு அதோகதிதான் .ஒன்னு பழது பார்ப்பவரை  அழைத்து வந்து கண்ணாடியை கழட்டி சாவியை எடுக்கவேண்டும் ,அல்லது வீட்டுக்கு போய் வந்து மாற்று சாவி எடுத்து வந்துதான் ரிமோட் லாக்கை திறக்க வேண்டியிருக்கும் .இனி அந்த கவலையே வேண்டாம் ,ஞாபக மறதியா லாக் பண்ணிட்டமா ? ஒன்னும் வேண்டாம் உங்க செல் போனை எடுங்க ,வீட்டுக்கு ஒரு போன்  போடுங்க ,வீட்டில் இருக்கும் டுப்ளிகேட் கீயிலிருக்கும் அன்லாக் பட்டனை அழுத்த சொல்லுங்கள் ,உங்கள் செல் போனை டோர் பக்கத்தில் வைத்து கொள்ளுங்கள் ,பிறகென்ன நீங்கள் உலகின் எந்த மூலையிலிருந்தாலும் உங்கள் கார் திறந்து கொள்ளும்.
சும்மா இருக்கும் போதெல்லாம் ஜம்முன்னு இருக்கும் பாட்டரி , ரொம்ப முக்கியமான தருணத்துல, அவசியமா பேச வேண்டிய நேரத்துல ஆப் ஆயிடும் , பவர் தீந்து போய்டும் ,அதுகெல்லாம்  ஒன்னும் டென்ஷனே ஆக வேண்டாம்,உங்க செல்லில் ,*3370# என்ற எண்ணை டயல் செய்யுங்க  உடனே உங்க பாட்டரியில் அய்ம்பது சதமான பவர் ஹிட்டன் பாட்டரி பவரிலிருந்து வந்து சேர்ந்திருக்கும் ,அப்புறமென்ன ,அத்தியாவசிய அழைப்பை அற்புதமாய் பேசி முடிக்கலாமே !
அதிக விலை கொடுத்து வாங்கும் செல் போனை பொண்டாட்டியை பாதுகாப்பது போல் பாதுகாக்க வேண்டியிருக்கிறது ,அதிலும் திருடர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் கடத்தி சென்று விடுகிறார்கள் .இப்படி செல் போன் திருட்டு  நடக்காம இருக்கணும்னா அதுக்கு ஒரே வழிதான் இருக்கு.
திருடுனவன் அந்த செல் போனை விற்க முடியாமலோ ,பயன்படுத்த முடியாமலோ செய்து விட்டால், எவனுமே செல் போனை திருடமாட்டான் .அதற்க்கு கீழ் கண்ட வழிமுறைகளை கடைபிடிக்கவும் *#06# என்று உங்கள் செல் போனில் டைப் செய்தால், உங்கள் போனின்  பதினைந்து இலக்க வரிசை எண் உங்கள் திரையில் தெரியும், அதை பத்திரமாக குறித்து வைத்து கொள்ளுங்கள், செல் திருடுபோனவுடனேயே உங்கள் செல் பேசி இணைப்பு வசதி தந்த நிறுவனத்திடம் நீங்கள் குறித்து வைத்திருந்த பதினைந்து இலக்க எண்ணை கூறி, திருடுபோன தகவலையும் தெரிவியுங்கள், அவர்கள் அந்த செல்போனை செயலிழக்க செய்து விடுவார்கள், பின்பு செல் திருடன் அதை வேறு சிம் மாற்றி கூட பயன்படுத்த முடியாது,யாரிடமும் விற்கவும் , முடியாது.  இப்ப சொல்லுங்க ; இக்கட்டான சூழ் நிலையில் இனிதே உதவும் செல் போனை தொல்லை பேசி என கிண்டலடிப்பீங்களா..?

சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல உணவு வேர்க்கடலை!

களுக்காக ஒரு செய் தி..தருபவர்:
Mohammad Sultan

சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல உணவு வேர்க்கடலை!


Groundnuts are good for diabetics! - Food Habits and Nutrition 
Guide in Tamil
மகாத்மா காந்திக்கு மிகவும் பிடித்தமான உணவு ஆட்டுப் பாலும் வேர்க்கடலையும். வேர்க்கடலையில் அப்படியென்ன இருக்கிறது? என்று கேட்கிறீர்களா? உங்களுடைய கேள்விகளுக்கான பதிலை பிரபல ஊட்டச்சத்து நிபுணர் அனிதா அவர்கள், "சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தம், புற்றுநோய், நரம்புமண்டல நோய்கள், ஞாபக மறதி நோய் போன்ற பல நோய்களைத் தடுக்கும் சக்தி வேர்க்கடலைக்கு உள்ளது" என்றார்.
தஞ்சை "பாரத் காலேஜ் ஆஃப் சயின்ஸ் அண்ட் மேனேஜ்மென்ட்" - இல் 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஊட்டச்சத்துத் துறையில் பேராசிரியராகப் பணிபுரிந்த அவர், தற்போது இருப்பது வேலூர் பாகாயம் பகுதியில். ஊட்டச் சத்து ஆலோசகரான அவரிடம் பேசியதிலிருந்து...
வேர்க்கடலையில் கொழுப்புச் சத்து அதிகமாக இருக்கிறதே, அது எப்படி பிளட் பிரஷரைத் தடுக்கும்?
வேர்க்கடலை, கடலை எண்ணெய் என்றதுமே முதலில் எல்லாருக்கும் ஞாபகத்துக்கு வருவது அதில் உள்ள கொழுப்புச் சத்துதான். வேர்க்கடலை, கடலை எண்ணெயைப் பயன்படுத்தினால் இரத்த அழுத்த நோய் வரும், இதய நோய்கள் வரும் என்ற பயம் பரவலாக உள்ளது. ஆனால் இந்தப் பயத்திற்கு எந்தவித ஆதாரமுமில்லை.
வேர்க்கடலையில் கொழுப்புச் சத்து இருக்கிறது. ஆனால் அது நல்ல கொழுப்பு. உடம்புக்குத் தேவையான கொழுப்பு. வேர்க்கடலையை ஏழைகளின் புரதம் என்று கூடச் சொல்லலாம். அந்த அளவுக்குப் புரதச் சத்து அதிகமாக உள்ளது. அது மட்டுமல்ல, 30 விதமான ஊட்டச் சத்துகள் வேர்க்கடலையில் உள்ளன. சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு வேர்க்கடலை நல்ல உணவு.
சர்க்கரை வியாதிகாரர்களுக்கு வேர்க்கடலை எப்படி நல்ல உணவாகிறது?
நாம் சாப்பிடும் உணவுப் பொருட்கள் ஒவ்வொன்றிலும் இருந்து எந்த அளவுக்கு சர்க்கரை ரத்தத்தில் சேர்கிறது என்பதைக் கண்டறிந்து அளந்து வைத்திருக்கிறார்கள். அதை கிளைசெமிக் இண்டெக்ஸ் என்பார்கள்.
வேர்க்கடலையில் கிளைசெமிக் இண்டெக்ஸ் குறைவு. அதாவது, வேர்க்கடலை சாப்பிட்டால் அதில் இருந்து உடம்பில் சேரும் சர்க்கரையின் அளவு மிக மிகக் குறைவு. எனவே சர்க்கரை வியாதிக்காரர்கள் வேர்க்கடலையை எந்தவிதப் பயமுமின்றித் தாராளமாகச் சாப்பிடலாம். மேலும் வேர்க்கடலையில் உள்ள மெக்னீசியத்திற்கு இன்சுலினைச் சுரக்கும் ஹார்மோன்களைத் துரிதப்படுத்தும் தன்மையும் உள்ளது. இதுவும் சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு நல்லது.
வேறென்ன மருத்துவ குணங்கள் வேர்க்கடலையில் உள்ளன?
ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும் தன்மை சோடியத்துக்கு உள்ளது. வேர்க்கடலையில் சோடியத்தின் அளவு குறைவு. எனவே வேர்க்கடலை சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் அதிகரிக்காது. குறையும்.
வேர்க்கடலையில் நார்ச்சத்து அதிகம். வேர்க்கடலை சாப்பிட்டால் மலச்சிக்கல் ஏற்படாது. உடல் பருமன் குறையும்.
இன்னொரு விஷயம், வேர்க்கடலை சாப்பிட்டவுடன், "சாப்பிட்டது போதும்" என்ற திருப்தி மிக விரைவில் வந்துவிடும். எனவே வேர்க்கடலையைச் சாப்பிட்டு முடித்தவுடன் அடுத்து எதையாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றாது. இதனால் சாப்பிடும் இடைவெளி அதிகரிக்கும். அடிக்கடி எதையாவது சாப்பிட்டு, எதையாவது கொறித்து உடல் எடையை அதிகரித்துக் கொள்ளமாட்டீர்கள்.
வேர்க்கடலையில் வைட்டமின் ஏ, நீரில் கரையக் கூடிய வைட்டமின் பி3 போன்றவை அதிகமாக உள்ளன. இந்த வைட்டமின்கள் கர்ப்பிணிகளுக்கு மிகவும் அவசியமானது. இந்தச் சத்துப் பொருட்கள் குறைந்தால் பிறக்கும் குழந்தை நரம்புக் கோளாறுகளுடன் பிறக்க வாய்ப்புள்ளது. எனவே கர்ப்பிணிகள் வேர்க்கடலையை அதிகம் சாப்பிட வேண்டும்.
வேர்க்கடலையில் சில உயிர் வேதிப் பொருட்கள் உள்ளன. அவை மனித உடலில் புற்றுநோய் உருவாகக் காரணமாக உள்ள செல்களை அழித்துவிடுகின்றன. குறிப்பாக மார்பகப் புற்றுநோய், மலக்குடல் புற்றுநோய், நிணநீர்ப்பை புற்றுநோய் போன்றவை உருவாகக் காரணமாகும் செல்களை வேர்க்கடலையில் உள்ள உயிர் வேதிப் பொருட்கள் அழித்துவிடுகின்றன.
வேர்க்கடலையில் நைட்ரிக் அமிலம் உள்ளது. வேர்க்கடலையைச் சாப்பிடுவதன்மூலம் உடம்பில் உற்பத்தியாகும் நைட்ரேட் ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்கிறது. இதனால் ரத்தம் சீராக ஓடும். ரத்த அழுத்தம் குறையும்.
நாம் சாப்பிடும் உணவு உடலில் சேர்ந்து சக்தியாக வெளிப்படுதல், உடலின் வளர்ச்சியாக உருமாறுதல், கழிவுகள் அகற்றப்படுதல் போன்றவை நிகழ்கின்றன. இந்த நிகழ்ச்சிகளை வளர்சிதை மாற்றம் என்பார்கள். இப்படி வளர்சிதை மாற்றம் நடைபெறும்போது சில தேவையில்லாத பொருட்கள் ரத்தத்தில் சுற்றிக் கொண்டிருக்கும். பின்பு அவை உடலுக்குத் தேவையில்லாத கொழுப்பாக மாறிவிடும்.
ஆனால் வேர்க்கடலை சாப்பிட்டால் அதிலுள்ள உயிர் வேதிப் பொருள்கள் இப்படித் தேவையில்லாமல் ரத்தத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் பொருட்களை கல்லீரலுக்குள் தள்ளிவிட்டுவிடும். தேவையில்லாத அந்தப் பொருட்கள் கழிவாகி வெளியேறிவிடும்.
வேர்க்கடலை சாப்பிட்டால் நரம்பு மண்டலத்துடன் தொடர்புடைய நோய்கள் குறைந்துவிடும். பார்க்கின்ஸன், அல்ஸ“மர் போன்ற ஞாபக மறதி நோய்கள் வராமல் தடுக்க வேர்க்கடலை உதவும். வேர்க்கடலையில் உள்ள உயிர் வேதிப் பொருள்கள் நரம்பு செல்களை நன்றாகச் செயல்படத் தூண்டிவிடுகின்றன. அதனால் நரம்புகள் நன்றாகக் செயல்படுகின்றன.
இதிலுள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்ஸ் உடம்பில் உள்ள தேவையற்ற கழிவுகளை நீக்கிவிடும். வேர்க்கடலையில் நல்ல கொழுப்பு இருக்கிறது.
வேர்க்கடலையில் இருந்து தயாரிக்கப்படும் கடலை எண்ணெயில் கொழுப்புச் சத்து அதிகம்தானே? அது உடலுக்குக் கெடுதி இல்லையா?
தண்ணீரைச் சுட வைத்தால் கொஞ்சம் கொஞ்சமாகச் சூடேறி 100 டிகிரி சென்டிகிரேடு வெப்ப நிலை வந்தவுடன் தண்ணீர் கொதிக்கத் தொடங்கிவிடும். இதை நீரின் கொதிநிலை என்பார்கள். அதைப் போல எண்ணெயின் கொதிநிலையை ஸ்மோக் பாயிண்ட் என்பார்கள்.
எண்ணெய் கொதிக்கத் தொடங்கினால் அதில் உடலுக்குத் தேவையற்ற கெட்ட கொழுப்புகள் உருவாகிவிடும்.
கடலெண்ணெயின் ஸ்மோக் பாயிண்ட் பிற எண்ணெய்களை விட அதிகம். பிற எண்ணெய்களின் ஸ்மோக் பாயிண்ட் 275 இலிருந்து 310 வரை இருக்கிறது.
ஆனால் கடலை எண்ணெயின் ஸ்மோக் பாயிண்ட் 320. இதனால் கடலை எண்ணெய்யைச் சமையலுக்குப் பயன்படுத்தும் போது அது எளிதில் கொதிநிலையை அடையாது. அதாவது கெட்ட கொழுப்புகள் உருவாகாது. அதே சமயம் கடலை எண்ணெய்யில் உள்ள நல்ல கொழுப்பு அப்படியே இருக்கும். இப்போது சொல்லுங்கள், கடலை எண்ணெயை சமையலுக்குப் பயன்படுத்தினால் உடலுக்குக் கெடுதியா?
ஆனால் இதில் கவனிக்க வேண்டிய ஒன்று இருக்கிறது.
சுத்திகரிக்கப்பட்ட கடலை எண்ணெயில் உடலுக்குக் கெடுதி தரும் கொழுப்பு இருப்பதற்கு வாய்ப்புள்ளது. ஏனென்றால் எந்தவொரு எண்ணெய்யையும் சுத்திகரிப்பதற்காக பலமுறை அதிக வெப்பத்தில் கொதிக்க வைக்கிறார்கள். இதனால் உடலுக்குத் தீங்கு செய்யும் கெட்ட கொழுப்புகள் அதில் உருவாகக் கூடிய வாய்ப்பு உள்ளது.
வேர்க்கடலையைப் பச்சையாகச் சாப்பிடலாமா? ஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிடலாம்?
வேர்க்கடலையைப் பச்சையாகச் சாப்பிடுவதைவிட, வேர்க்கடலையை அவித்தோ, வறுத்தோ சாப்பிடலாம். ஆனால் வேர்க்கடலையை எண்ணெயில் போட்டு வறுத்துச் சாப்பிடக் கூடாது. வேர்க்கடலையின் தோலை நீக்காமல் சாப்பிட வேண்டும். ஏனென்றால் அதில்தான் நிறையச் சத்துகள் உள்ளன.
ஒரு நாளைக்கு மாலை வேளைகளில் தின்கிற நொறுக்குத் தீனிகளுக்குப் பதிலாக 50 கிராம் வரை வேர்க்கடலை சாப்பிடலாம்.
வேர்க்கடலையைச் சாப்பிடும்போது கசப்புச் சுவை வந்தால் அந்த வேர்க்கடலையைச் சாப்பிடக் கூடாது. கசப்பேறிய வேர்க்கடலையில் அஃப்லோடாக்ஸின் என்ற பொருள் இருக்கிறது. இது வயிற்றின் ஜீரணத்தைப் பாதிக்கக் கூடியது. எனவே புத்தம் புதிதான வேர்க்கடலையையே சாப்பிட வேண்டும்.
                        
loading
தகவல் தேடி தந்தவர்:

Mohammad Sultan

இருந்தாலும் ... நான் ஒரு முஸ்லிம்!




அல்லாஹ்வின் திருப்பெயரால்...
இருந்தாலும் ... நான் ஒரு முஸ்லிம்!.
ஆக்கம்: அப்துல்லாஹ் மன்பஈ
நான் சரியான இஸ்லாமிய அடிப்படையில் வாழ்கிறேனோ இல்லையோ, இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்! 

மார்க்க சம்பந்தமான அறிவு எனக்கு இருக்கிறதோ இல்லையோ, இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!
என் மனைவி – மக்கள், குடும்பத்தினருக்கு நான் இஸ்லாத்தைப் பற்றி கூறி நல்வழிப் படுத்துகிறேனோ இல்லையோ, இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்! 

எனது இல்லத்தில் இஸ்லாத்திற்கு மாறான செயல்கள் நடப்பதைக் கண்டும் காணாமல் இருந்து விடுகிறேன், இருந்தாலும்...நான் ஒரு முஸ்லிம்! 

மறுமை நாளைக்காக நான் எதை சேர்த்து வைத்திருக்கிறேன் என்று எண்ணிப் பார்க்க இந்த அவசர கால உலகத்தில் எங்கே முடிகிறது இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!
 
ஐந்து வேளைத் தொழுவது கடமை என்பது எனக்குத் தெரியும். ஆனால் என் வேலைப் பளுவினால் என்னால் தொழமுடியவில்லை, இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!
ரமலானில் நோன்பு வைப்பது கட்டாயம் என்பது சிறுபிள்ளைக்கும் தெரியும். இருப்பினும் பசி தாகம் சமாளிக்க.. நோன்பு வைக்க என்னால் முடியவில்லை, இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!
என் தொழிலில் பணம் கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது. எனினும் கணக்குப் பார்த்து ஜகாத் கொடுத்திட மனம் இடம் தரவில்லை, இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!
என் வாழ்நாள் முழுவதும் ஓடி ஓடி உழைத்து ஓரளவு என் குடும்பத்திற்காக உழைத்து சேர்த்து ஓய்ந்து விட்டேன். இப்போது ஹஜ் செல்லும் அளவுக்கு என் உடலில் தெம்பு இல்லை இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!
வீட்டில் அபிவிருத்தி வேண்டி மவ்லீது ராத்தீபுகளை புது புது மெட்டுகளில் ஓதி இறையருள் பெற முயற்சிக்கிறேன். இதெல்லாம் தவறு என்று உள்மனம் கூறுகிறது, இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்! 

உன்னையே வணங்குகிறோம், உன்னிடமே உதவி கோருகிறோம்! என்று தொழுகையில் ஓதிவிட்டு அவ்லியாக்கள், பெரியார்களிடம் உதவி தேடுவது என் இரத்தத்தில் ஊறிப்போய்விட்டது, இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்! 

என் நாட்டம் நிறைவேற சலவாத்துன்னாறியா 4444 தடவை ஓதி துஆ கேட்கிறேன். இது குர்ஆன்-ஹதீஸில் இல்லை என்றாலும் என் மன ஆறுதலுக்காக, அபிவிருத்திக்காக இதை ஓதுவதற்கு ஏற்பாடு செய்கிறேன். இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்! 

பால்கிதாப்-பில்லி-சூனியம்-ஏவல்-தகடு-தட்டு-தாயத்து-பேய்-பிசாசு-ஆவி எல்லாம் நம்புகிறேன், இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்! 

பூனை குறுக்கே செலவது, பல்லி தலையிலே விழுவது, ஆந்தை அலருவது, காகம் கரைவது, ஸஃபர் பீடை மாதம்-கெட்ட சகுனம் என எல்லாம் பார்த்து பார்த்து ஒவ்வொரு வேலையும் செய்கிறேன், இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்! 

பலர் பாராட்ட கத்னா-பூப்புனித நீராட்டு விழாவை விமரிசையாக நான் நடத்துகிறேன், இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்! 

புதுமனை புகுவிழாவிற்கு பால் காய்ச்சி விழா நடத்துகிறேன். குழந்தைக்கு தர்காவில் சென்று முடி இறக்கி மொட்டை போடுகிறேன். அவ்லியா சன்னிதானத்தில் ஆடு, சேவல் பலி தருகிறேன், இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்! 

என் அம்மாவின் கடைசி ஆசைக்காகத்தான் மஹர் கொடுத்து மணம் புரியாமல் வரதட்சணை வாங்கிக் கொண்டு திருமணம் செய்தேன். என் மனைவியின் ஆசைக்காகத்தான் சுன்னத்தான தாடியை சிரைத்துவிட்டேன், இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்! 

என் தந்தையின் வற்புறுத்தலால் என் மகன் திருமணத்தை மேள தாளத்துடன் யானை ஊர்வலத்துடன் மிக ஆடம்பரத்துடன் நடத்துகிறேன், இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்! 

வட்டி வாங்கக்கூடாது என்று வான் மறைக்கூறினாலும் கூட என் தொழில் வளர்ச்சிக்காக குறைந்த வட்டியில் வீடுகட்ட, கடை ஆரம்பிக்க, பைக் சவாரிக்காக வட்டி வாங்க வேண்டிய நிர்பந்தம். என்ன செய்வது? இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்! 

லாட்டரி சூதாட்டம்தான். அரசு அதனை தடை செய்திருந்தாலும் என்ன? நான் வெளி மாநில லாட்டரி சீட்டுகளை வாங்கி மறைத்து விற்பனை செய்து வருகிறேன், இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்! 

குடி குடியைக் கெடுக்கும்! மது ஹராம்தான், ஆனால் எனக்கு டாஸ்மார்க் கம்பெனியில்தான் வேலை கிடைத்தது. கைநிரைய சம்பாதிக்கிறேன், இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்! 

சினிமா பார்க்கக் கூடாதாம்! இந்த காலத்தில் நடக்கக்கூடிய காரியமா என்ன? பேரும் புகழும் பேரின்பமும் பெற்றுத் தரும் கனவுத் தொழிற்சாலையல்லவா அது! பாம்பு மட்டும்தான் படம் எடுக்குமா? மக்கள் பாராட்டும் விதமாக நான் கூட படம் எடுக்கிறேன், இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்! 

அளவு நிலுவையில் மோசடி கூடாதாம். வியாபாரத்தில் பொய் கூடாதாம். (பரக்கத்) இறையருள் கிடைக்காதாம். பொய் சொல்லாமல், மோசடி செய்யாமல் எப்படி விரைவில் பணக்காரன் ஆவதாம்? இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்! 

ஒரு சாண் நிலம் ஆக்கிரமிப்பு செய்தாலும் மறுமையில் ஒரு பூமி அளவு நிலத்தை நான் சுமக்க வேண்டுமாம். பலரின் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த, அந்த நிலத்தை திரும்பக் கொடுத்து விட்டு என் பிள்ளைகளுக்கு எதைக் கொடுத்துவிட்டுப் போவதாம்? இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்! 

மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை கூடாதாம். பிறகு எதற்கு உலகத்தில் வாழ்வதாம்? இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்! 

என் குடும்பத்தில் என் நான்கு பிள்ளைகள், நான்கு மத்ஹப்களில் இருக்கின்றனர். நானும் என் தம்பிகளும் எல்லா அரசியல் அமைப்பிலும் அங்கம் வகிக்கிறோம், இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்! 

கடவுள், பாவம், புண்ணியம், நீதி, நியாயம், உண்மை என்கிறவற்றில் நம்பிக்கை கிடையாது. ஏதோ உலகத்திலே பிறந்துட்டோம். முளைக்கிற செடி வளர்ந்து மரமாகிற மாதிரி நாமும் வளர்ந்துட்டோம். ஏதோ வாழந்துட்டு இருக்கிறோம். ஊரோடு இணைந்து போகத்தானே வேண்டும். இஸ்லாமிய அடிச்சுவட்டில் இக்காலத்தில் வாழ்ந்தால் உலகம் நகைக்காதா? இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்! 

(அல்ஜன்னத்) ஆசிரியர்: போதும்! போதும்!! கொஞ்சம் இடம் கொடுத்தா, பக்கம் பக்கமாக மானம்-விமானம் ஏற்றிடுவீங்க போலிருக்கே..?.

ரேசன் கார்டிலும், வாக்காளர் அட்டையிலும், பள்ளி கல்லூரி சான்றிதழ்களிலும் மட்டுமே முஸ்லிமாக வாழ்பவர்களே! சிந்தியுங்கள். நமது வாழ்வும். மரணமும் தூய இஸ்லாத்தின் அடிப்படையில் மட்டுமே அமைந்திட வேண்டும் என்பதை உள்ளத்தில் பதித்துக் கொள்ளுங்கள்.

நன்றி: அல் ஜன்னத் (செப்டம்பர் 2007).

படைப்புகளை ஆராய்வோம்! படைத்தவனை அறிவோம்

படைப்புகளை ஆராய்வோம்! படைத்தவனை அறிவோம்!


எழுதியவர்/பதிந்தவர்/உரை தேங்கை முனீப்
விரிந்து பரந்த இப்பிரபஞ்சமெனும் புத்தகத்தின் எந்தப் பக்கத்திலும் அதை உருவாக்கியவனின் பெயர் எழுதி வைக்கப் படவில்லை. ஆனால் பிரபஞ்ச புத்தகத்தின் ஒவ்வொரு எழுத்தும் இதனைப் படைத்தவன் ஒருவன் இருக்கின்றான் என்பதைப் பறைசாற்றுகின்றன! அப்படைப்பாளனின் வல்லமைகள், குணநலன்கள் குறித்த தேவையான விபரங்களை அப்புத்தகத்தின் வாக்கியங்கள் நமக்குக் கற்றுத் தருகின்றன.
சிந்திக்கும் திறன் உள்ளவனே மனிதன்! அண்டப் பெருவெளியின் மையத்தில் நிற்கும் அவனிடம் இயற்கையாகவே சில கேள்விகள் எழுகின்றன. அக்கேள்விகள் அனைத்தும் அவனையும் அவனைச் சூழ்ந்திருக்கும் இப் பெருவெளியைக் குறித்தும் அறிய விரும்பும் அவனது ஆவலை வெளிப்படுத்துவதாகும். அறியாப் பாமரன் முதல் அறிவியலாளன் வரை அனைவரது உள்ளத்திலும் இக்கேள்விகள் எழுகின்றன. மனிதனுக்கு எப்போது அறிவும் சிந்தனையும் வழங்கப்பட்டதோ அன்று முதல் அவன் இக்கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருக்கின்றான். நாகரீக வளர்ச்சியின் படித்தரங்களை ஆராய்ந்தால் இதுவே நமக்குப் புலப்படுகிறது.
மனிதனால் முன்வைக்கப்படும் கேள்விகளில் முதன்மையானது இப்பேரண்டத்தை உருவாக்கியவன் யார்? என்பதாகும். சிகரங்களின் உச்சியிலோ கடலின் அடியிலோ ஆகாயத்தின் வெளியிலோ அவற்றை உருவாக்கியவனின் பெயர் எழுதப்படவில்லை. ஆனால் மலைகள், கடல்கள், ஆகாய வெளி, காற்று, நீர் என ஒழுங்காகப் படைக்கப்பட்டிருக்கும் பெருவெளியின் ஒவ்வொரு அங்கமும் இதற்குப்பின்னால் வல்லமை மிக்க ஒரு படைப்பாளன் இருக்கின்றான் என்பதற்கு அமைதியான சாட்சிகளாக இருக்கின்றன!
மனிதப் படைப்பை ஓர் உதாரணமாகக் கொள்வோம். தந்தையால் வெளிப்படுத்தப்படும் இலட்சக்கணக்கான விந்தணுக்களில் ஒன்றே ஒன்று மட்டும் தாயின் கருவறையில் சினை முட்டையுடன் இணைந்து ஒரு கருவாகிறது! ஆரம்ப நிலையிலிருக்கும் இக் கருவுக்கு தான் பிறந்து செல்லவிருக்கும் வெப்பம், குளிர், காற்று, ஒளி, ஒலி எல்லாம் உள்ள உலகத்தைக் குறித்த எந்த அறிவும் இருப்பதில்லை! ஆனால் இவற்றை எல்லாம் அறிந்து கொள்ள உதவும் திசுக்களாக சுயமாகவே பெருக்கமடைகிறது! ஒன்றாக இருந்தது சுயமாகவே பலகோடி திசுக்களாகப் பெருக்கமடைகின்றன. இதயம், நுரையீரல், இரைப்பை முதலான உடலின் உள்ளுறுப்புகள் உருவாகின்றன.. எல்லாவற்றுக்கும் மேலாக இவற்றையெல்லாம் நிர்வகிக்கின்ற மிகப்பெரிய அற்புதமாகிய மூளை உருவாகின்றது! எவ்வாறு இது நடை பெறுகிறது? அற்பமான, புறக்கண்ணால் பார்க்க இயலாத வேறுபட்டிருந்த இரு அணுக்களை ஒன்றிணையச் செய்து, இவ்வளவு அற்புதச் செயல்களை நடைபெறச் செய்பவன் யார்? இவற்றக்குப் பின்னால் உள்ள ஒரு படைப்பாளனை ஏற்றுக் கொள்வதன்றோ அறிவுடைமை?
சிந்தனை செய்து இறைவனைப் பற்றி அறிந்து கொள்ள குர்ஆன் அழைக்கிறது!
படைப்புகளைப் பற்றிய சிந்தனையின் மூலம் படைத்தவனின் உள்ளமையை அறிந்து கொள்ளுங்கள் என்ற அறிவுப்பூர்வமான கோட்பாடைத் திருக்குர்ஆன் கூறுகிறது.
“ஒட்டகத்தை, அது எவ்வாறு படைக்கப் பட்டுள்ளது என அவர்கள் (கவனித்துப்) பார்க்க வேண்டாமா? வானத்தை, அது எவ்வாறு உயர்த்தப் பட்டுள்ளதென்றும், மலைகள், அவை எவ்வாறு நடப்பட்டுள் ளனவென்றும். பூமி, அது எவ்வாறு விரிக்கப்பட்டுள்ள தென்றும் (அவர்கள் கவனித்துப் பார்க்க வேண்டாமா?)”குர்ஆன் 88: 17-20)  (அல்
பரந்து வியாபித்திருக்கும் பேரண்டப் பெருவெளியின் அழகிய படைப்பைக் குறித்து ஆராய்வதன் மூலம் இதற்குப் பின்னாலிருக்கும் மாபெரும் படைப்பாளனின் அதியற்புத சக்தியை விளங்கிக் கொள்ள இயலும்! கற்பனைக் கதைகளுடனும் புரியாத தத்துவங்களுடனும் கடவுளைக் கற்பித்த புராதன கால கட்டத்திலேயே இஸ்லாம் இம்மா பெரும் பிரபஞ்ச நாதனின் வல்லமைகளைக் குறித்த அறிவுப் பூர்வமான விளக்கங்களை அளித்தது! கண்ணை மூடிக் கொண்டு கடவுளை நம்ப வேண்டும் என்பதை விட படைத்தவனைக் குறித்து அறிந்து நம்பிக்கை கொள்ள வேண்டும் என்ற உயர்ந்த தத்துவத்தை இஸ்லாம் கற்றுத் தருகிறது. இறை கொள்கையில் இஸ்லாம் நமக்குக் கற்றுத் தரும் இத்தகைய உயர்ந்த கொள்கை இன்று நடைமுறையில் உள்ள எந்த மதத்திலும் கிடையாது என்பது இஸ்லாமினுடைய தனிச்சிறப்புகளில் ஒன்றாகும். தன்னைப் பற்றியும் தன்னைச் சூழ்ந்துள்ள பிரபஞ்சத்தைக் குறித்தும் ஆராய்வதன் மூலம் இதற்குப் பின்னாலிருக்கும் அந்த இறைவனின் மகத்துவத்தைப் புரிந்து கொள்ளுமாறு மனிதனுக்கு அழைப்பு விடுக்கும் குர்ஆனிய வசனங்கள் பாமரர் முதல் விஞ்ஞானிகள் வரை புரிந்து கொள்ளக் கூடிய அளவில் தெளிவாகவும் எளிதாகவும் உள்ளது. நபி முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு முதன் முதலில் அருளப்பட்ட வசனங்களைப் பாருங்கள்
(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக ‘அலக்’ என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான். ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி. அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான். (96: 1 -4)
மேற்கண்ட வசனங்கள் மனிதனின் சிந்தனை உணர்வைத் தட்டியெழுப்பக் கூடியதாக உள்ளன.
இவ்வுலகில் மனிதனாகப் பிறப்பதற்கு முன் நம் நிலை எவ்வாறிருந்தது? நம் தந்தையின் உடலில் உள்ள கோடிக்கணக்கான விந்தணுவில் ஒரு அணுவாக, தாயின் சினைப்பையில் உள்ள கருமுட்டைகளில் ஒரு முட்டையாக வேறுபட்டுக் கிடந்த ஓர் ஆன்மா. பின்னர் விந்தணுவும் சினை முட்டையும் இணைந்த ஒரு கருவாக. பின்னர் முதிர்ச்சியடைந்த தசைப் பிண்டமாக. பின்னர் அதில் எலும்புகளும் மஜ்ஜைகளும் ஊருவாகி கண், காது மூக்கு, கை, கால் என எல்லா உறுப்புகளும் உருவாகி ஒரு முழு மனிதனாகப் பிறந்து வருகிறோம். இவ்வுலகில் உள்ள கோடிக்கணக்கான மனிதர்களுள் ஒரு மனிதனாக நாமும் வாழ்கிறோம்! நம்முடைய உடலில் பல்வேறு செயல்பாடுகள். எலும்பு மண்டலம், நரம்பு மண்டலம், சுவாச உறுப்புகள், ஜீரண உறுப்புகள், நோய் எதிர்ப்பு என வியக்கத் தக்க செயல்பாடுகள் நடை பெறுகின்றன. இன்னின்னவாறு செயல்படுங்கள் என்று நாம் அவ்வுறுப்புகளுக்குக் கட்டளையிடுவதில்லை! நாம் சாப்பிடுகிறோம், ஜீரணமாகிறது. உடலுக்குத் தேவையான சக்திகளை உணவிலிருந்து தயாரிக்க உறுப்புகள்! கழிவை வெளியேற்ற, இரத்தத்தைச் சுத்தீகரிக்க, சிந்திக்க, செயல்பட, எழுத, பேச என அனைத்தும் உடல் உறுப்புகளின் ஒன்றோடொன்று ஒத்துழைக்கும் வியத்தகு செயல்பாடுகள்! யாருடைய செயல்பாடு இதற்குப் பின்னால் உள்ளன? கண்ணுக்குத் தெரியாத கற்பனை செய்ய முடியாத இரு வேறு கூறுகளாகப் பிரிந்து கிடந்த விந்தணுவையும் சினை முட்டையையும் இணைத்து நம்மைப் படிப்படியாக வளரச் செய்து முழு மனிதனாக்கிய அவ்விறைவனின் அதியற்புத ஏற்பாடு இது! இவ்வாறு படைத்த இறைவனே நம்மைப் படைத்த விதத்தை எடுத்துக்கூறி நம்மை சிந்திக்கச் சொல்கிறான். அறியாத பாமரன் முதல் அறிவியலாளன் வரை இத்தகைய சிந்தனையால் தன் இறைவனைப் பற்றி அறிய உதவும் எளிய கோட்பாடை குர்ஆன் கற்றுத் தருகிறது. இதோ வல்லமை மிக்கவனாகிய அந்த இறைவன் குர்ஆனில் மக்களைப் பார்த்துக் கேட்கின்றான்.
நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான்; பின்பு அவன் உங்களை மரிக்கச்செய்வான்; மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான்; இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள். (2:28)
நிச்சயமாக நாம் (ஆதி) மனிதரைக் களி மண்ணிலிருந்துள்ள சத்தினால் படைத்தோம். பின்னர் நாம் அவனை ஒரு பாதுகாப்பன இடத்தில் இந்திரியத் துளியாக்கி வைத்தோம். பின்னர் அந்த இந்திரியத் துளியை அலக் என்ற நிலையில் ஆக்கினோம்; பின்னர் அந்த அலக்கை ஒரு தசைப் பிண்டமாக்கினோம்; பின்னர் அத்தசைப்பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்; பின்னர், அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம்; பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக (மனிதனாகச்) செய்தோம். (இவ்வாறு படைத்தவனான) அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன் (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன். (23:12-14)
(கர்ப்பப் பையில்) நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக் கவனித்தீர்களா? அதை நீங்கள் படைக்கிறீர்களா? அல்லது நாம் படைக்கின்றோமா? (56: 58, 59)
இவ்வாறான வசனங்கள் நம்மைப் படைத்தவனை நோக்கிய சிந்தனையின் பால் இட்டுச் செல்கிறது. அவ்விறைவனின் மகா வல்லமையை விளங்கிக் கொள்வதன் மூலம் மட்டுமே மனிதனின் ஆன்மீக லௌகீக வாழ்வுகள் சீரடைகின்றன.

Friday, December 24, 2010

அரசே மதுக்கடைகளை நடத்துவது சரியல்ல? - ராகுல் காந்தி

அரசே மதுக்கடைகளை நடத்துவது சரியல்ல? - ராகுல் காந்தி




AddThis Social Bookmark Button
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் சென்னை கன்னிமாரா உணவகத்தில் நேற்று பல்வேறு தரப்பு மக்களுடன் கலந்துரையாடினார். அப்போது அரசியல்,விவசாயம்,இலங்கை தமிழர் பிரச்சினை உள்பட பல்வேறு விடயங்களில் அவரிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன. அப்போது இலங்கை தமிழர் பிரச்சினையில் காங்கிரஸ் கட்சி சரியான நிலைப்பாடு எடுக்கவில்லை. சரியாக அணுகவில்லை என்று கூறப்படுகிறதே என்று கேள்வி எழுப்பினார் ஒருவர்.

அவரது இந்த கேள்விக்கு பதில் அளித்த ராகுல் காந்தி ' இலங்கை தமிழர் பிரச்சினையை தீர்க்க என்னென்ன செய்ய முடியுமோ, அனைத்தையும் காங்கிரஸ் கட்சி செய்து வருகிறது. அரசியல் தீர்வு காண நாங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று எதை எண்ணி சொல்கிறீர்கள்? போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரண உதவியாக இந்திய அரசு சார்பில் தரப்பட்டுள்ளது. 80 ஆயிரம் வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுத்துள்ளோம். மத்திய மந்திரி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர்,வெளியுறவு செயலாளர் ஆகியோர் இலங்கை சென்று போரினால் பாதிக்கப்பட்ட மக்களையும், மறுவாழ்வு பணிகளையும் பார்த்து வந்துள்ளனர்.எனினும் மறுவாழ்வு பணிகள் திருப்திகரமாக இல்லை. இது விடயமாக மத்திய அரசிடம் பேசுவேன். இலங்கை தமிழர் பிரச்சினையில் நானே நேரில் தலையிட்டு தீர்வு காண முடிவு செய்துள்ளேன். தமிழர்களுக்கு அரசியல் உரிமைகள் கிடைத்திட முயற்சி மேற்கொள்வேன். இலங்கை அதிபர் ராசபக்சே இந்தியாவுக்கு வந்தது குறித்து என்னிடம் கேட்கிறீர்கள். ஆனால் அவரை நான் அழைத்து வரவிலலையே! என்றார்.

அரசே மதுக்கடைகளை நடத்துவது சரிதானா? பூரண மதுவிலக்கை கொண்டு வரமுடியாதா என்ற கேள்விக்கு ராகுல் காந்தி பதிலளிக்கையில் ' மது அருந்துவது ஆரோக்கியமான செயல் அல்ல. அரசே மதுக்கடைகளை நடத்துவது சரியான செயல் அல்ல. நான் இதை ஏற்றுக் கொள்கிறேன். ஒவ்வொரு மனிதனும் குடிக்க மாட்டேன் என்று உறுதி மொழி எடுக்க வேண்டும். குடிக்காதே என்று யாரையும் நிர்ப்பந்தப்படுத்துவது எனக்கு சரியானதாக படவில்லை. இவ்வாறு அவர் பதிலளித்தார்.