Friday, January 20, 2012

தொழில் தரும் தன்னம்பிக்கை

Thanks by : khaja <takhaja@gmail.com>   Rajaghiri Gazzali <gazzalie@yahoo.com>

நமது நாட்டில் பெரும்பாலான குழந்தைகளும், இளைய தலைமுறையினரும் தக்க கல்வியறிவுபெற்று வருவது பெருமைக்குரியதே. அவர்கள் தம் பெரும்பாலான நேரத்தைப் படிப்பு, விளையாட்டு, தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்கள் பார்ப்பது என்றே செலவிடுகின்றனர்.
மிகச் சிலரைத் தவிர, பிறர் தங்களது அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் சிறு வேலைகளைக்கூட (உதாரணமாக அவர்களது துணிகளை அவர்களே சலவை செய்வது, இஸ்திரி போடுவது, காலணிகளைத் தூய்மையாய்த் துடைத்து பாலிஸ் போடுவது, உடைந்த பட்டன்களை மாற்றுவது தங்களது வாகனங்களைத் தூய்மையாய்த் துடைத்துப் பராமரிப்பது போன்றவைகளை செய்ய முன்வருவதும் இல்லை. செய்வதும் இல்லை.
படிப்பைத்தவிர, நேர்மையான ஏதாவது ஒரு தொழிலை, படிக்கும் காலத்திலேயே, கற்றுத் தன்னம்பிக்கையை வளர்த்துப் பயன்பெறுவோம் என்ற ஆர்வத்தில், பெற்றோர் செய்யும் நல்ல புதிய தொழிலையோ அல்லது நேர்மையான பரம்பரைத்தொழிலிலேயோ தங்களை ஈடுபடுத்திக் கொள்வபர்கள் எத்தனைபேர்?  மிகச் சிலர்தான் என்பதில் ஐயமில்லை.
காரணம், உடலுழைப்பு அதிகம் தேவைப்படும் எந்த நல்ல பரம்பரைத்தொழிலாயினும், பெருவாரியானவர்கள் அதனை மதிப்பதில்லை. நன்கு வேளாண்மை செய்யும் விவசாயிகூட, தனக்குப் பின்னர், தன் வாரிசுகள் வெயிலில் கஷ்டப்பட்டு உழைத்து வாழ்வதை விரும்புதில்லை. எப்பாடுபட்டேனும் தனது மக்கள் படித்துப் பட்டம் பெற்று, மின் விசிறிக்கடியில் குறைந்த உழைப்பில் அதிகம் சம்பாதிப்பதையே விரும்பிச் செயல்படுகின்றனர்.
படிக்கக் குழந்தைகளை அனுப்புவதன் நோக்கமே, கல்வியறிவோடு ஒழுக்கம், நேர்மை, உழைப்பு, தேசப்பற்று போன்ற உயரிய குணங்களையும் கற்று, மனிதனாய் முழுமை பெறத்தான்.
நல்ல தொழிலுக்காக மட்டுமே கல்விகற்பதில் பயனில்லை.  கற்ற கல்வியால் நல்ல தொழிலைத் தேர்ந்தெடுக்கலாம்.  அல்லது தெரிந்த தொழிலை கற்ற கல்வியால் மேம்படுத்தி வெற்றி காணலாம்.  கற்றவர் அனைவருக்கும் அரசாங்கம் வேலை தருவது என்பது இயலாத காரியம்.
நேர்மையான முறையில் செய்யும், எந்த் தொழில் ஒரு குடும்பத்தைக் காக்ககிறதோ. அத்தொழிலைப் பெற்றோர்கள் தம் வாரிசுகளுக்கு பள்ளிப் பருவத்திலேயே பயிற்றுவித்து ஓரளவு அதில் பண்டிதனாக்குவதும் அவசியம்.
இதனைக் கற்றுக்கொண்ட இளைய தலைமுறைக்கு எதிர்காலத்தில் படிப்பு முடித்தவுடன் ஏற்ற வேலை கிடைக்காவிடினும்கூட, தன்னம்பிக்கையோடு இவ்வுலகில் வாழ்ந்துகாட்ட தொழில் இருக்கிறது என்ற மனோபாவம் வரும்.
ஆதலால், ஒரு விவசாயி வேளாண்மை பற்றியும், முடிவெட்டும் தொழிலாளி, சலவைத் தொழிலாளி, செருப்புத் தைக்கும் தொழிலாளி எல்லாம் தம் வாரிசுகளுக்கு தொழிலைக் கற்றுக்கொடுப்பது எள்ளளவும் கேவலமில்லை. இதனைக்  கேவலாமாய் நினைப்பவர்கள் அறிவிலிகள்.
இத்தொழிலைக் கற்றால் இதையே செய்ய வேண்டுமென்ற அவசியம் இல்லை.  அவன் திறமைக்கும் கல்விக்கும் வேறு தொழில் கிடைத்தால் நிச்சயம் செய்யட்டும். ஆனால் இதுவும் ஒரு தகுதியாய் இருப்பது அவனுக்கு மேலும் தன்னம்பிக்கையை வளர்க்கும்.
நேர்மையான எந்தத் தொழிலிலும் கேவலமில்லை என்ற மனப்பக்குவம், தளராத முயற்சி, சலைக்காத உழைப்பு இவையெல்லாம் முன்னேற்றப்படியின் முக்கியப் படிக்கட்டுக்கள்.
ஆக, பெற்றோர்களே!  ஒவ்வொரு வாரிசுக்கும் பள்ளிப் படிப்பு முடியும் முன்னரே தக்கதொரு தொழிலைக் கற்றுக்கொடுங்கள்.
மாணவ மாணவியரே!  நீங்களும் சிரமம்  பாராது, விருப்பத்தோடு கற்றுக்கொள்ளுங்கள்.
பெற்றோரின் தொழில் கற்க (உதாரணமாக தூர அலுவலகங்களில் பணி புரிவோர்) வாய்ப்பில்லையெனில், அருகிலுள்ள அச்சகம், கணிப்பொறி மையம், வாகனப் பட்டறை, தையற்கூடம், இயந்திரத் தொழிற்கூடம், பலபொருள் விற்பனையங்காடி, எலக்ட்ரானிக் சாதனங்களைப் பழுதுபார்க்கும் கூடங்கள் போன்ற ஏதாவதொரு தொழிலகத்திற்குச் சென்று கற்றுத்தேறலாம்.
கற்றுத்தெளிவோம் என்ற ஏக்கத்தோடு கண்ணைத் திறவுங்கள்! ஏரளமான, தொழிலுக்கான வாய்ப்புகள், சற்றே மறைந்திருப்பதைக் காணலாம்.
அட ஒன்றம் இல்லையென்றால்கூட, நமது வீட்டிலேயே துவைத்தல், இஸ்திரிபோடுதல், சமைத்தல், குழந்தைகளுக்கு முடிவெட்டிப் பார்த்தல், வீட்டைப் பெருக்கித் தூய்மையாய் வைத்திருத்தல் போன்ற வேலைகளை திறம்படத் தெரிந்து வைத்திருந்தால்கூட இதனை அடிப்படையாக்க் கொண்டு, தொழில் தொடங்க அல்லது வேலையில் சேர நிறைய வாய்ப்புண்டு.
ஒவ்வொரு வேளை உணவை உண்ணுவதற்கு முன்னர் ஒவ்வொருவரும், ஏதாவது ஒரு வேலையைச் செய்துவிட்டுத்தான் உண்பேன், என்ற கோட்பாட்டைக் கடைப் பிடித்தால் நாட்டில் சோம்பேறிகளும் இருக்கமாட்டார்கள். நாடும் வேகமாய் முன்னேறிவிடும்.
தொழிலுக்கும், உழைப்புக்கும் தக்கவாறுதான் ஊதியம் ஒவ்வொருவருக்கும் கிட்டும் எல்லோரும் இந்நாட்டின் முதல்வராவதோ முதலாளியாவதோ, மருத்துவ பொறியாளர் என்றாவதோ இயலாத காரியம்.  எல்லாத்துறைகளிலும் தக்கவாறு உழைக்க, உழைப்பாளி இருந்தால் தான் நாடு முன்னேறும்.
படிப்புக்குத் தக்க வேலை கிடைக்கவில்லையே என்று தாடி வளர்த்து வருந்திப்பயனில்லை.
பத்தாயிரம் ரூபாய் மாதச் சம்பளத்திற்கு முயற்சிப்பதில் தப்பில்லை. ஆனால் அதுவரை வெட்டியாய் பொழுதைப் போக்கி காலங் கழிக்காமல் நூறு ரூபாய் தின வேலைக்குப் போவதிலும் தப்பில்லை.
கிராமத்தில் பிறந்து வேளாண் தொழிலையும்,, பள்ளிப் பருவத்திலேயே செய்து வந்தமையால் இன்றும் கூட மருத்துவத் தொழில் விட்டு என்னால் திறம்பட விவசாய வேலைகளையும் செய்து முன்னேற முடியும்.
வாழ்வில் எந்த நிலையிலும், இடிந்து போய் தளர்ந்து விடாமல் எப்படியும் உழைத்து வாழ்ந்து காட்டும் மனோதைரியமும், தன்னம்பிக்கையும் எனக்குத் தந்ததே இளமையில் வறுமையும், அதிலிருந்து மீளக் கற்றுக்கொண்ட கடுமையான தொழில்களும்தான் என்றால் அது மிகையாகாது.
துடிப்புமிக்க இளைஞர்களை உருவாக்கி இந்தியாவை முன்னேற்ற இளஞ்செடிக்கு உரமிடுவோம்! இளையதலைமுறையைத் தொழில் கற்கச் செய்வோம்!

Monday, January 16, 2012

என்ன செய்யப்போகிறோம்...?




பையன் பல்லாவரம். பெண் பெசண்ட் நகர். வசதியான குடும்பத்துப் பெண். இருவரும் முஸ்லிம்கள். படிக்கும்போது முகிழ்த்த நட்பு காதலாகத் துளிர்த்தது. பெண் வீட்டாரிடம் இருவரும் தம் காதல் குறித்துத் தெரிவித்துத் திருமணத்திற்காக ஏங்கியுள்ளனர்.


ஏற்கெனவே மாப்பிள்ளை பேசி முடிவாகிவிட்டது; இப்போது ஒன்றும் செய்வதற்கில்லை என்று பெண் வீட்டார் கதவை அழுத்தமாகச் சாத்திவிட்டனர். பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையுடன் பெரிய இடத்துப் பெண்ணின் திருமணமும் நடந்து முடிந்துவிட்டது. இப்போது அவள் ஐந்து மாத கர்ப்பிணி.
இந்நிலையில், அப்பெண் தன் பழைய காதலனுடன் பெங்களூர் ஓடிவிட்டாள். அங்கு ஒரு விடுதியில் அறை எடுத்துத் தங்கிக்கொண்டு, "நாங்கள் சேர்ந்துவாழ விரும்புகிறோம். பிரித்தால் தற்கொலை செய்து கொள்வோம்'' என்று பையனும் பெண்ணும் மிரட்டல் விடுக்கிறார்கள்.


என்ன செய்யப்போகிறோம்...?
பெண் படித்துக்கொண்டிருந்தபோது டியூஷன் சென்டர் போவது வழக்கம் .இதுவும் சென்னையில்தான். அங்கு டியூஷன் எடுத்த ஆசிரியர் இந்து. மாணவி முஸ்லிம். இருவருக்கும் இடையே ஆசிரியர் - மாணவி என்ற உறவுக்கு மேலே காதல் தலைதூக்கியது. பெண்ணின் வீட்டாருக்கு விவரம் தெரியுமோ தெரியாதோ, ஒரு கல்லூரி விரிவுரையாளருக்கு மணமுடித்து வைத்துவிட்டனர். மாப்பிள்ளை முஸ்லிம். சேர்ந்துவாழ்ந்தனர். அடையாளமாக வயிற்றில் ஏழு மாதக் குழந்தை.


இந்நிலையில் திடீரெனப் பெண் காணாமல் போய்விட்டாள். பிறகுதான் தெரிந்தது, அவள் தன் பழைய காதலனுடன் எங்கேயோ சுற்றித் திரிகிறாள் என்று. பின்னர் வீடு திரும்பிய அவளை, விவாகரத்துச் செய்துவிட வேண்டும் என்று மாப்பிள்ளை வீட்டார் ஒற்றைக் காலில் நிற்கிறார்கள். கணவனோ, மனைவியை மன்னித்து ஏற்கத் தயார்.


என்ன செய்யப்போகிறோம்...?
பிராமணப் பெண். பையன் முஸ்லிம். தேனி மாவட்டம். கல்லூரியில் உருவான காதல், இரு வரையும் கண்காணாத இடத்துக்கு அழைத்துச் சென்றுவிட்டது. இருவரும் இப்போது சேர்ந்து வாழ்கிறார்கள் என்பது மட்டும் தெரியும். எங்கே, எப்படி, திருமணம் ஆனதா, இல்லையா எதுவும் பையன் வீட்டாருக்குத் தெரியாது.


கிட்டத்தட்ட இதே பாத்திரம், வேலூர் மாவட்டத்தில் ஒரு முஸ்லிம் குடும்பத்தில்.

தினகரன் நாளிதழில் வந்த ஒரு செய்தி என்ன செய்யப்போகிறோம்...?
இப்படி ஒன்றல்ல; இரண்டல்ல. பல நூறு சம்பவங்கள். நகரம், கிராமம் என்ற வித்தியாசமில்லாமல் நம் குடும்பங்களில் அரங்கேறிவருகின்றன. மேலைநாட்டுக் கலாசாரம், சின்னத்திரை, வண்ணத்திரை என்றெல்லாம் காரணங்களைச் சொல்லிவிட்டால் போதுமா? மலைப் பாம்பாய் வாய் பிளந்து மிரட்டிக்கொண்டிருக்கும் இந்தப் பேராபத்தைச் சமுதாயம் எப்படி எதிர்கொள்ளப்போகிறது? இந்த வைரஸுக்கு வைத்தியம் என்ன?


பெண் கல்வி.
முஸ்லிம் பெண்கள் சுயமாகச் சிந்தித்துச் செயலாற்ற வேண்டும்; பிரச்சினைகளைத் துணிவோடு எதிர்கொண்டு சாதிக்க வேண்டும் என்பதற்காகப் பெண் கல்வியை அனைவரும் வலியுறுத்துகிறோம். அது உண்மையும்கூட.


இப்போதெல்லாம் பெரிய நகரங்களில் மட்டுமன்றி, முஸ்லிம் ஊர்களிலும்கூட சமுதாயக் கண் மணிகள் நிறையவே படிக்கின்றனர். உயர்கல்வியில் தீவிர ஈடுபாடு காட்டத் தொடங்கிவிட்டனர். இளநிலைப் பட்டப் படிப்புக்கும் மேலாக, உயர்நிலைப் பட்டப்படிப்பிலும் முஸ்லிம் மாணவிகள் ரேங்க் ஹோல்டர்களாக ஜொலிக்கின்றனர். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், கல்வி ஒரு பக்கம் வளர்ந்தால், மறுபக்கம் கலாசாரச் சீரழிவு தேள் போல் கொட்டுகிறதே! முன்பு நம் இல்லங்களை அலங்கரித்த ஒழுக்கம், நாணம், அடக்கம் ஆகிய உயர் பண்பாடு களெல்லாம் சிறிது சிறிதாக மலையேறத் தொடங்கிவிட்டனவே!


நாம் என்ன செய்யப்போகிறோம்?
இதற்காகப் பெண் கல்வியை ஓர் எல்லைக்குள் முடக்கிவிட முடியுமா? அப்படியானால், நம் வீட்டு ஆண் பிள்ளைகளும்கூட மாற்றார் தோட்டத்து மான்களுக்குப் பின்னால் ஓடிப்போய் விடுகிறார்களே! ஆண்களும் படிக்கக் கூடாது என்று தடை போட்டுவிட இயலுமா?


கோ எஜுகேஷன்தான் இதற்கெல்லாம் காரணம். எனவே, ஆண்கள் பள்ளியில் ஆண்களையும், பெண்கள் பள்ளியில் பெண்களையும் சேர்த்துவிட்டால், இந்தப் பிரச்சினை வராது என நாம் கூறலாம். ஆனால், இது எல்லா இடங்களுக்கும் பொருந்துமா? பெண்களுக்கெனத் தனியாகப் பள்ளியோ கல்லூரியோ இல்லாத பல ஊர்களில் நம் குழந்தைகள் உயர்கல்வி கற்பது எப்படி?


அடிப்படை மார்க்கக் கல்வி.
சிறு வயதிலேயே இஸ்லாமிய மார்க்க சம்பந்தமான அடிப்படைக் கருத்துகளை குழந்தைகளின் உள்ளங்களில் ஆழமாகப் பதிய வைத்துவிட்டால், இத்தகைய குற்றங்கள் நிகழாமல் தடுத்து விடலாம். உண்மைதான். சிறு வயதிலேயே "குர்ஆன் மதரசா' எனப்படும் ஆரம்ப அரபிப் பாடசாலையில் குழந்தைகள் சேர்ந்து, குர்ஆன் ஓதக் கற்று, மார்க்கச் சட்டங்களையும் அடிப்படைக் கோட்பாடுகளையும் அறிந்து கொண்டால், பின்னாளில் எவ்வளவு பெரிய படிப்புகளைப் படித்தாலும் பிள்ளைகள் கெட்டுப்போகாமல் இருப்பார்கள். முந்தைய தலைமுறையினர் அப்படித்தான் வளர்ந்தார்கள்.


இதற்குக் காரணம் இல்லாமலில்லை. பசு மரத்தில் ஆணி அறைந்தார் போன்று, இளம் உள்ளத்தில் இறையுணர்வு, இறையச்சம், மறுமை நம்பிக்கை, பெற்றோரின் உரிமைகள், பிள்ளைகளின் கடமைகள், பாலியல் தவறுகளால் விளையும் தீமைகள் உள்ளிட்ட பால பாடங்களைப் பதித்துவிட்டால், அது என்றென்றும் பிள்ளைகளை நல்வழிப்படுத்தும்.



ஆனால், இன்றைய இயந்திரத்தனமான வாழ்க்கை முறையில் இதற்கும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது தான் பெரும் கொடுமை. காலையில் எழுந்தவுடன் அரைகுறையாகக் காலைக் கடனை முடித்துக் கொள்ளும் மழலையர், புத்தக மூட்டைகளைச் சுமந்துகொண்டு பள்ளிக்குச் சென்றுவிடுவர். பல வீடுகளில் குழந்தைகள் பள்ளிக் கூடத்துக்குச் செல்லும்வரை பெரியவர்கள் எழுந்தே இருக்கமாட்டார்கள்.


மதியம் அல்லது மாலை நேரம் வீடு திரும்பியபின் சிறிது நேர விளையாட்டு. பின்னர் மீண்டும் வீட்டுப்பாடம். அத்துடன் டியூஷன். பெரியவர்கள் வீடு திரும்புவதற்கு முன்பே குழந்தைகள் உறங்கிவிடுவார்கள். இப்படி தந்தை - மகன் சந்திப்பே பல நாட்கள் நடக்காமல் போய்விடுவதும் உண்டு. இந்த நிலையில் மதரசாவுக்குக் குழந்தைகளை அனுப்ப நேரம் எங்கே? இப்படி பெற்றோர் அலுத்துக்கொள்கிறார்கள்.


தனி உஸ்தாதை நியமித்து வீட்டிலேயே மார்க்க வகுப்பு நடத்தலாம். ஆனால், இது எல்லாருக்கும் சாத்தியமா? வசதி இல்லாதோர் எத்தனையோ பேர்! வசதி இருந்தாலும் உஸ்தாது கிடைக்க வேண்டும். அவர் பொறுப்போடு வந்து கற்பிக்க வேண்டும். குழந்தைகளும் பெற்றோரும் ஒத்துழைக்க வேண்டும்.


நாலு நல்ல வார்த்தை
இதுதான் இல்லை. வளரும் பிள்ளைகள் நாலு நல்ல வார்த்தைகளைக் கேட்க வேண்டுமல்லவா? அந்த வாசலும் அடைபட்டுக் கிடக்கிறது. பள்ளி, கல்லூரிகளின் வகுப்பு நேரங்கள், மாணவர்கள் வெள்ளிக்கிழமை ஜும்ஆ பயானைக் கேட்பதற்குக்கூட அவகாசம் அளிப்பதில்லை. விடுமுறை நாட்களோ வெளியூர் பயணங்கள், குடும்ப நிகழ்ச்சிகள், ஸ்பெஷல் கிளாஸ்கள் எனக் கழிந்துவிடுகின்றன.


மாணவிகளின் நிலை இதைவிட மோசம். மார்க்க உரைகளைக் கேட்பதற்கான முகாந்தரமே அவர்களுக்குக் கிடையாது. ஜும்ஆ இல்லை; சிறப்பு பயான்கள் இல்லை; நல்ல புத்தகங்கள் நம் வீடுகளில் கிடைப்பதில்லை. பல வீடுகளில் இஸ்லாமிய இதழ்களோ நூல்களோ மருந்துக்குக்கூட கண்ணில் படுவதில்லை.


தொலைக்காட்சி உரைகளிலோ -சிலவற்றைத் தவிர- விவரங்களைவிட விரசங்களே அதிகம். அடையாளப்படுத்தவே, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் காசு கொடுத்து நடத்துகிறார்கள். தற்புகழ்ச்சிதான் அதில் மிகைக்கிறது; இறைநெறிகள் சொற்பமே. குறிக்கோல் விளம்பரம். அதில் உண்மையான குறிக்கோல் அடிபட்டுப்போகிறது.


தேர்ந்தெடுப்பு முக்கியம்.
இதற்கு ஒரே தீர்வாக, முஸ்லிம்கள் நடத்தும் பள்ளி, கல்லூரிகளில் பிள்ளைகளைச் சேர்க்கலாம் என்றால், அங்கு மட்டும் என்ன வாழ்கிறது என்றே கேட்கத் தோன்றுகிறது. முஸ்லிம் கல்வி நிறுவனங்கள் பலவற்றில், பெயருக்குக்கூட இஸ்லாத்தைக் காண முடியவில்லை. அரபி மொழி வகுப்புகளோ, இஸ்லாமிய நீதி போதனை வகுப்புகளோ அங்கு நடப்பதில்லை. நடக்கும் ஒருசில இடங்களிலும் வேண்டா வெறுப்பாக நடத்தப்படுகின்றன; மாணவர்கள் வருவதில்லை.


பாடத்திட்டத்திலேயே இஸ்லாமியப் பாடங்கள் இடம்பெற்றிருக்கும் முஸ்லிம் பள்ளிக் கூடங்கள் சில உள்ளன. எல்.கே.ஜி.யில் தொடங்கி மேல்வகுப்புவரை குர்ஆன் பாடங்களும் மார்க்க விளக்கங்களும் அங்கு வழங்கப்படுகின்றன. ஆனால், இந்தப் பள்ளிகளைக் கைவிட்டு எண்ணிவிடலாம். அவற்றிலும், பள்ளிப் பாடங்களின் தரம் குறையாவண்ணம், தீனிய்யாத்தையும் கற்றுக் கொடுக்கும் பள்ளிகளின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு.


இதுதான் இன்றைய எதார்த்தம். மறைக்க வேண்டியதில்லை. இந்தச் சூழ்நிலையில் கல்வி கற்கும் முஸ்லிம் மாணவர்களும் மாணவிகளும் "காதல்' வலையில் சிக்கிக்கொண்டு சீரழிவது நாளுக்கு நாள் பெருகி வருகிறதே தவிர, குறைந்த பாடில்லை. சுருங்கச்சொன்னால், மார்க்கமே இல்லாத மற்ற மாணவர்களின் நிலைதான் நம் பிள்ளைகளின் நிலையும்.


என்ன செய்யப்போகிறோம்...?
சமுதாய இளவல்களை அலைக்கழித்துக் கொண்டிருக்கும் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுதான் என்ன? நம் வீட்டுப் பெண்கள் மாற்றானுடன் குடும்பம் நடத்திக்கொண்டிருக்கும் அவலம் தொடரலாமா? நம் இளைஞர்கள் மாற்றாளுடன் இல்லறம் நடத்தி, நம் வாரிசுகள் அவளது மடியில், அரவணைப்பில், இணைவைப்பில் வாழ்ந்துவரும் கொடுமை நீடிக்கலாமா? சமூக ஆர்வலர்களும் சீர் திருத்தவாதிகளும் சீரியஸாகச் சிந்திக்க வேண்டிய விவகாரமாகும் இது.


இதைத் தடுத்து நிறுத்த வழிகாணத் தவறினோம் என்றால், ஒரு தலைமுறையே மார்க்க மில்லாத தலைமுறையாக, வேற்று மதத் தலைமுறையாக மாறிவிடும் அபாயம் உண்டு. இதன் பாவம் இன்றைய தலைமுறையையே சாரும். நம்மை அல்லாஹ் சும்மா விடமாட்டான். அனைவரும் யோசியுங்கள். நல்ல முடிவு காணுங்கள். சுனாமி எச்சரிக்கை செய்தாகி விட்டது. தற்காப்பு நடவடிக்கை மேற்கொள்வது ஒவ்வொரு வரின் கடமை ஆகும்.


நான் ஒன்று சொல்வேன். பெற்றோர் விழிப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும். இதுதான் முதல் தரமான முக்கியமான நடவடிக்கையாக இருக்கும். பிள்ளைகளின் ஒளிமயமான எதிர்காலத்திற்காகத் தந்தை கடுமையாக உழைக்கிறார். உறக்கத்தைத் தியாகம் செய்கிறார். உணவைக்கூட உதறித் தள்ளுகிறார். மகனுக்கு, அல்லது மகளுக்கு வேண்டிய எல்லா வசதி களையும் செய்து கொடுக்கிறார். படிக்க வைக்கிறார்; பட்டமும் பணியும் வாங்கிக் கொடுக்கிறார். ஆனால், அவனது எண்ணவோட்டத்தைக் கணிக்கத் தவறிவிடுகிறார்.


தாயும் நாவுக்கு ருசியாகச் சமைத்துப் போடுகிறாள். வகை வகையான ஆடை அணிகலன்களை அணிவித்து அழகு பார்க்கிறாள். பிள்ளையின் மனம் கோணாமல் நடந்துகொள்கிறாள். ஆனால், பிள்ளைகளின் அசைவுகளைக் கண்டு விழித்துக்கொள்ள தவறிவிடுகிறாள். பேணி வளர்த்தல் என்பது உணவு உடையில் மட்டும் அல்ல. பண் பாடு, நாகரிகம், கலாசாரம், மறுமை வாழ்க்கை அனைத்தையும் கண்காணித்துச் சீரமைப்பதும் வளர்ப்புதான்.


நம் வீட்டுப் பிள்ளைகள் யார் யாருடன் பழகுகிறார்கள்? யாருடன் அதிகமாகத் தொலை பேசியில் பேசுகிறார்கள்? ஏன் குழப்பமாக இருக்கிறார்கள்? அவர்களுக்கு என்ன பிரச்சினை? முன்னுக்குப்பின் முரணாகப் பேசுவதன் பின்னணி என்ன? தடுமாற்றம் தெரிகிறதே! கலகலப்பு இல்லையே! எதிலும் ஒட்டுதல் காணவில்லையே? காரணம் என்ன?. இப்படியெல்லாம் யோசிக்க வேண்டும். பிள்ளைகளுடன் மனம் விட்டுப் பேச வேண்டும். நீங்கள் காட்டும் பாசத்தால் அவர்கள் மனதில் உள்ளதை மறைக்காமல் உங்களிடம் கொட்ட வேண்டும். அதைக் கேட்டு அவர்களைப் பெற்றோர்கள் நல்வழிப்படுத்த வேண்டும்.


அடுத்து எப்பாடு பட்டேனும், சிறு வயதிலேயே அடிப்படை மார்க்கக் கல்வியை நம் குழந்தை களுக்குக் கொடுத்துவிட வேண்டும். அவரவர் சூழ்நிலைக்கும் வசதி வாய்ப்புக்கும் ஏற்றவாறு இதற்கு நேரம் ஒதுக்கியாக வேண்டும். மார்க்க அறிவும் இறையச்சமும்தான் பிள்ளைகளைத் தீமைகளிலிருந்து காக்கும் கேடயமாகும்.


வேலைக்குச் செல்லும் பெண்களே!
படித்து முடித்தவுடன் வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டிருக்கிறது. முஸ்லிம் பெண்களும் கணிசமான எண்ணிக்கையில் வேலைக்குச் செல்கிறார்கள். இவர்கள் திருமணத்திற்குமுன், பணியாற்றும் இடத்திலேயே ஆண் துணையைத் தேடிக்கொண்டுவிடுகிறார்கள். அவன் முஸ்லிமா இல்லையா, நல்லவனா ஏமாற்றுக்காரனா என்பதையெல்லாம் பரிசோதித்துப் பார்க்காமல், இனக் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு, வாழ்க்கையைத் தொலைத்துவிடுகிறார்கள்.


இஸ்லாத்தைப் பொறுத்தவரை, ஒரு பெண்ணின் பொருளாதாரத் தேவைகளைத் தந்தையோ கணவனோதான் நிறைவேற்ற வேண்டும். பிறந்த வீட்டில் தந்தையும் உடன்பிறப்புகளும் அதற்குப் பொறுப்பு. புகுந்த வீட்டில் கணவன் பொறுப்பு. தன் தேவைகளைத் தானே நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்ற நிலைக்கு ஒரு பெண்ணை நமது மார்க்கம் ஒருபோதும் தவிக்க விடவில்லை.


முஸ்லிம் பெண் தன்னையும் தன் குழந்தை களையும் தானே கவனித்தாக வேண்டும் என்ற நிலை மிகவும் அபூர்வமாக எப்போதாவதுதான் ஏற்படும். பெற்றோர், உடன்பிறப்புகள், கணவன், உறவினர், அரசாங்கம் என யாருடைய ஒத்துழைப்பும் ஆதரவும் இல்லாமல் ஒரு பெண் திண்டாடுகின்ற நிலையில்தான், அவள் வேலை செய்து, தன்னைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயம் நேரும்.


தகப்பன் அல்லது கணவனின் கையாலாகாத் தன்மை, ஆடம்பரம் மற்றும் சொகுசு வாழ்க்கை, சுய தம்பட்டம், அடங்காத் தன்மை போன்ற காரணங்களுக்காக இளம்பெண்கள் வேலைக்குச் செல்வதும், அதை முன்னிட்டு குடும்பத்தில் பல்வேறு பிரச்சினைகள் தோன்ற வழிவகுப்பதும் தேவைதானா? யோசியுங்கள். ஆக, கற்பா கல்வியா என்று வந்தால் கற்பையே தேர்ந்தெடுங்கள். இது ஆண்களுக்கும்தான்.
வள்ளலாரும், வழிகேடர்களும்!!.
படத்தில் குடும்பத்துடன் இருக்கும் இஸ்லாமியர் அமானுல்லா, வடலூர் வள்ளலார் ராமலிங்க அடிகளாருக்கு கோயில் கட்டி, வணங்கி வருகிறார் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை. அன்றாடம் பூஜையும், அன்னதானமும் வழங்கி வருவதால் ஏரியா முழுக்க வள்ளலார் நாமம் வரிசை கட்டுகிறது.
‘‘எனக்கு திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டி சொந்த ஊர். வறுமை காரணமாக, குடும்பம் சென்னைக்குக் குடியேறியது. இங்கே வந்தும், பெரிதாக வளர்ச்சி இல்லை. ஃபோட்டோகிராபராக வேலை செய்தேன். அன் றாடம் வயிற்றுப் பாடு கழிந்தது. திருமணம் முடிந்த பின்னரும் நிலைமையில் முன்னேற்றமில்லை. அப்பதான் ஏழு மலைங்கிறவர் வள்ளலார் ராமலிங்க அடிகளார் பற்றிச் சொன்னார். அவரோடு ஒருமுறை வடலூர் போய்ட்டு வந்தேன்.


என்னுள் ஏதோ ஒரு மாற்றம். வாழ்க்கையில் அ துவரை அனுபவித்து வந்த துன்பங்கள் ஒவ்வொண்ணா விலகற மாதிரியான உணர்வு. ஆச்சரியம். எனக்கு அரசுப் பணியும் கிடைத்தது. அன்று முதல் வள்ளலார் பக்தனாக மாறிவிட்டேன்!’’ என்று நெகிழ்ந்தபடி சொல்லும் அமானுல்லா, சென்னை மாநகராட்சியில் தற்போது ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். வியாழக்கிழமைகளில் பிரதான பூஜைகள் செய்வது, சொற்பொழிவாளர்களை அழைத்துக் கூட்டம் போடுவது என அமர்க்களப்படுத்தவும் அமானுல்லா தவறுவதில்லை.


இஸ்லாமியரான உங்களுக்கு எதிர்ப்பு வரவில்லையா?
‘‘துவக்கத்தில் உள்ளூர் ஜமாத்திலிருந்து (முஸ்லிம் கூட்டமைப்பு) எதிர்ப்பு வந்தது. ‘உருவ வழிபாட்டை இஸ்லாம் ஏற்பதில்லை. கடவுளுக்கு இணை வைப்பதும், அவனைத் தவிர வேறு யாரையும் வணங்குவதும் கூடாது. இறைவனே மிகப் பெரியவன்; அருளாளன்!’ என்றெல்லாம் சொல்லி, எதிர்ப்புத் தெரிவித்தார்கள்.


ஆனால் வள்ளலார் மனி தனாக வாழ்ந்து மறைந்தாலும், ஜோதி வடிவில் மட்டுமே காட்சி தருகிறார். அதனை தரிசிப்பதும், புகழைச் சொல்வதும், வணங்குவதும் தவறில்லை என எனது கருத்தை எடுத்துச் சொன்னேன். ஏற்றுக் கொண்டார்கள்!’’ என்று சிரித்தபடியே சொல்லும் அமானுல்லாவுக்கு மனைவி ஜாஸ்மின், பாத்திமா, ஆஷிகா என்று இரு மகள்கள். அவர்களும் குரல் உயர்த்திப் பாடி, கரம் குவித்து ஜோதியை வணங்குவது அற்புதம்..


நன்றி: குமுதம்.

புதியதூது



படிப்பினை பெறவேண்டிய செய்தி:
தமிழ்நாட்டில் ஏகத்துவத்தின் பிரச்சாரம் முப்பது வருடங்களுக்கு மேலாக நடந்து வந்தாலும், சமீபகாலமாக நம் இயக்கங்கள், ஒன்று இரண்டாகி, இரண்டு நாலாகி, நாலு எட்டாகி ஒருவருக்கொருவர் திட்டி தீர்ப்பதிலேயே தங்களின் நேரங்களையும், பத்திரிக்கைகளையும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் செலவிட்டு வருகின்றனர். இதனால் ஏகத்துவ பிரச்சாரம் எந்த அளவு பலகீனமாகியுள்ளது என்பதையும், இன்னும் நம் மக்களிடையே எந்த அளவு இந்த பிரசாரத்தை கொண்டு செல்லவேண்டியுள்ளது என்பதின் அவசியத்தை உணர்ந்து ஒற்றுமையுடன் செயல்பட முன்வருவார்களா?.

Friday, December 30, 2011

நவீன உலகின் பெற்றோர்களே….கவனியுங்கள்! ஒரு விழிப்புணர்வு பார்வை!



இன்றைய காலகட்டத்தில் நமது நாட்டில் அதிக வேலை வாய்ப்புக்கள் இருக்கும்ஒரு துறையாக கணிணி சார் பணிகளே இருக்கின்றன. வன், மற்றும் மென்பொருள் வல்லுனர்களின் ஊதியங்களை கணக்கில் கொண்டு பார்த்தோமானால்அது மற்ற துறைகளில் இருப்பவர்களின் சம்பள விகிதகங்களோடு ஒப்பிட்டுபார்க்கவே முடியாத உயரத்தில்தான் இருக்கிறது.
இப்படியாக அதிக ஊதியம் பெறும் கணிணி சார்ந்து வேலை செய்பவர்களின்செலவிடும் வேகமும் வாங்கும் திறனும் தன்னிச்சையாக கூடித்தான்போகின்றன். இந்த வாங்கும் திறன் அதிகரிக்கும் போது அது எப்படி அவர்களின்குழந்தைகளைப் பாதிக்கிறது என்ற ஒரு பார்வையை இந்தக் கட்டுரையின் மூலம்பதிகிறோம்.
கட்டுரைக்குள் செல்வோமா ….!!!
இன்றைய கணிணி யுகம் இந்தியாவில் மிக அருமையாக வளர்ந்து கொண்டுஇருக்கிறது. குறிப்பாக தமிழகத்தில் இன்னும் பலமாக முன்னேறிவருகிறது. வன்-மென் பொறியாளர்களின் சம்பளம் வியக்க வைக்கும் அளவுக்கு கிடைப்பது மிக்க மகிழ்ச்சிக்குரிய ஒரு விஷயம். குறிப்பாக இவர்கள் சிறுவயதிலேயே மிக பெரிய அந்தஸ்த்தை இதன் மூலம் அடைந்து விடுகிறார்கள்
நடுத்தர குடும்ப பெற்றோர்கள், ஒரு வீடு பைக்,கார், இன்னபிற வீட்டு உபயோகபொருட்களை அடைய எவ்வளவு காலத்தினை எடுத்துக்கொண்டார்கள்.. ??? அவர்களின் வாழ்க்கை தரம், மற்றும் காலத்தின் கட்டாயம் அந்த மாதிரி இருந்தது…
முன்பெல்லாம் நாம் பெற்றோரிடம் சிறிய அளவிளான விளையாட்டு சாமான்வாங்க எவ்வளவு போராடுவோம்…அதுவும் கிடைத்தால் தான்போச்சு….இல்லையென்றால் அந்த ஆசை நிறைவேறாமலேயே போய் விடும். மற்ற பிள்ளைகளின் விளையாட்டு சாமான்களை ஏக்கத்தோடு பார்ப்போம். இந்தமாதிரி அனுபவம் நம்மில் பலருக்கும் ஏற்ப்பட்டிருக்கும் …
போகட்டும் ….
இன்றைய கணிணி பொறியாளர்கள் மிக சிறிய வயதிலேயே எல்லாவசதிகளையும் பெற்று விடுகிறார்கள். திருமணத்திற்கு முன்பே வீடு,,கார்,,வங்கி சேமிப்பு ,,என்று எல்லாம்வாழ்க்கையில் ஒரு பொருளாதார மேம்பாட்டினை அடைந்து விடுகிறார்கள்.
பிறகு திருமணம், குழந்தைகள் ….
இங்க தாங்க நாம விஷயத்துக்கு வருகிறோம் ….
பெரும்பாலும் கணிணி பொறியாளர்களின் மனைவியரும் இதே துறையில்வேலைக்கு செல்பவர்களாக இருக்கிறார்கள்.
(அல்லது இல்லத்தரசிகளாகவும்,வேறு ஏதோ துறையைச் சேர்ந்தவர்களாக கூடஇருக்கலாம்)இவர்கள் குழந்தைகளை வளர்க்கும் முறை சற்றே கவலை அளிக்ககூடியதாக உள்ளது ….
தற்பொழுது இத்துறையில் பணி புரியும் நண்பர்கள் பணிச் சுமை காரணமாக – வீட்டில் குடும்பத்துடன் சேர்ந்து மகிழும் நேரம் குறைந்து விட்டது என்பதை நாம்அனைவரும் ஒத்துக் கொண்டே ஆக வேண்டும். அதனால் குழந்தைகளிடம் செலவழிக்கும் நேரமும் குறைந்து விட்டது. அதனால் குழந்தைகளின் விருப்புவெறுப்புகளைப் பற்றிச் சிந்திக்கும் நேரமும் குறைந்து விட்டது…
குழந்தைகளின் தேவைகள் பற்றிச் சிந்திக்க நேரமில்லாமல் அவர்கள் கேட்டதை, கேட்ட உடனேயும், கேட்பதற்கு மேலேயும் உடனேயே வாங்கிக் கொடுத்துவிடுகிறார்கள். குழந்தைகளின் மீது இருக்கும் பாசமும், தன்னிடம் இருக்கும்வாங்கும் திறனும் அதிக விலைகளைப் பற்றியெல்லாம் கவலைகள் கொள்ளவைப்பதில்லை.
இவர்களுக்கு இருக்கும் வேலை பளு மற்றும் மற்ற குறிக்கோள்கள் நோக்கியபயணத்தால், தங்களின் பாசத்தையும் அன்பினையும் தங்களின் குழந்தைகளுக்குகாட்ட அதிகமான செலவுகள் செய்து அவர்களுக்கு தேவையான பொருட்களைவாங்கிக் கொடுக்கவும் செய்கிறார்கள்.
இப்படி வளரும் குழந்தைகளின் மனநிலை எவ்வாறு இருக்கும்????
எல்லாமே எளிதாக கிடைக்கும் போது இந்த குழந்தைகள் என்ன நினைக்கும்???
இந்த குழந்தைகளிடம் போராட்ட குணம் இருக்குமா???
மனோதத்துவரீதியாக யோசித்து பாருங்கள்….
மற்ற பிள்ளைகளோடு எந்த அளவுக்கு இவர்கள் போட்டி போட்டு வளர்வார்கள்???
போராட்ட மனப்பான்மை இல்லாமலே ஒரு தலைமுறை வளர்ந்து வருவதுகவலைக்குரிய ஒரு விசயம்தானே…?
இப்படியாக வளரும் பிள்ளைகளிடம் வாழ்க்கை பற்றிய ஒருவித அலட்சியமனப்பான்மை வந்துவிடுவதோடு, தன்னைச் சுற்றி இருக்கும் எதுவும் எளிதாய்கிடைத்து விடுமென்ற ஒரு மனோநிலை அவர்கல் அறியாமலேயே அவர்களின்ஆழ்மனதில் பதிந்தும் விடுகிறது. எதுவாக இருந்தாலும் நம் பெற்றோர்கள்பார்த்துக்கொள்வார்கள் என்ற ஒரு எண்ணம் மேலோங்கியே இருப்பதால், தங்களின் எல்லா தேவைகளுக்குமே பெற்றோரைச் சார்ந்தே அதுவும் சிறிய சிறியவிடயங்களுக்காக கூட எதிர்பார்த்து நிற்கும் ஒரு நிலையும் ஏற்படுகிறது.
எதிர்காலத்தில் இவர்களால் ஒரு சின்ன தோல்விய கூட தாங்கிக்கொள்ளமுடியாமல் மனதளவில் சுருண்டு விடுகிறார்கள்..இவர்கள் பெரியவர்கள் ஆனாபிறகு எந்த அளவிற்கு இந்த உலகத்துடன் போட்டி போடுவார்கள்??? கடுமையானபோட்டிகள் நிறைந்த இந்த உலகத்தில் போரட்டாக் குணம் இல்லாமல் எப்படிவெல்வது? சின்ன சின்ன தோல்விகளை எப்படி தாங்குவது. வெற்றிகள் எல்லாம்சுகமானவைதான் ஆனால் தோல்விகள்தானே மனிதனைப்பக்குவப்படுத்துகின்றன…?
அன்பர்களே, குழந்தைகளுக்கு அனைத்தும் செய்ய வேண்டியது நம் கடமை. இதில் இரு வேறு கருத்துக்கள் நமக்கு இல்லை, ஆனால் அதை ஒரு அளவோடுசெய்வதோடு கஷ்டப்படாமல் எதுவும் எளிதாக கிடைக்காது என்பதையும் புரியவையுங்கள்….
கஷ்டப்படாமல் கிடைக்கும் எதுவும் நிலைக்காது. வரும் காலம் கடும் போட்டிநிறைத்த காலம் நண்பர்களே…!!! நம் குழந்தைகளை போட்டி நிறைந்த உலகத்துக்கு தயார் படுத்துங்கள் ….!
ஏன் கணிணிதுறையில் உள்ளவர்களின் குழந்தைகளை மட்டும்குறிப்பிட்டு சொல்கிறீர்கள் என்று நீங்கள கேட்பது புரிகிறது. மற்ற துறைகளில் பணிபுரிந்து அதிக ஊதியம் வாங்குபவர்களின் வாழ்க்கையிலும் இந்த விஷயம் உண்டுதான்….
ஆனால் மிகையாக வேலை வாய்ப்புக்களும் அதிக ஊதியமும் கிடைப்பது கணிணித் துறையில்தான் என்பதால் கணிணித் துறையை மையமாக வைத்துகட்டுரை செய்துள்ளோம். மற்ற படி பிள்ளைகளுக்கு கேட்ட விலையைப் பற்றி கவலை கொள்ளாமல் உடனே உடனே அவர்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்கும் எல்லா பெற்றோர்களுக்கும், இந்தக்கட்டுரை பொருந்தும்.
Thanks By http://udayanadu.wordpress.com/ - கழுகு

Tuesday, December 20, 2011

§ ஜும்ஆவின் சிறப்பு



 
ஏகஇறைவனின் திருப்பெயரால்.... 
§  ஜும்ஆவின் சிறப்பு
ஜும்ஆவுக்கு நேரத்தோடு பள்ளிக்குச் செல்வதால் கிடைக்கும் நன்மையை அறிந்தால் அதற்காக திட்டமிட்டு மற்ற வேலைகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு பள்ளிக்குச் செல்வதை பழக்கமாக்கிக் கொள்வார்கள்.
 
§  ”பெருந்துடக்கிற்காக குளிப்பது போன்று ஜும்ஆவுடைய நாளில் குளித்து விட்டு பள்ளிக்கு (நேரத்தோடு) செல்பவர் ஓர் ஒட்டகத்தை குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார்.
§  இரண்டாம் நேரத்தில் செல்பவர் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார்.
§   மூன்றாம் நேரத்தில் செல்பவர் கொம்புள்ள ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார்.
§   நான்காம் நேரத்தில் செல்பவர் ஒரு கோழியைத் தர்மம் செய்தவர் போன்றவர் ஆவார்.
§   ஐந்தாம் நேரத்தில் செல்பவர் முட்டையைத் தர்மம் செய்தவர் போன்றவர் ஆவார். இமாம் (பள்ளிக்குள்) வந்து விட்டால் வானவர்களும் (உள்ளே) வந்து (இமாமின்) உபதேசத்தை செவியேற்கிறார்கள்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு , நூல்: புகாரி 881)
 
ஜும்ஆ நாளில் நேரத்தோடு செல்ல வேண்டும். குர்ஆன் ஓதுதல் சுன்னத்தான தொழுகையை தொழுதல், இறைவனை நினைவு கூர்தல் போன்ற வணக்க வழிபாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
 
”ஜும்ஆ நாள் (வெள்ளிக் கிழமை) வந்து விட்டால் வானவர்கள் (ஜும்ஆ தொழுகை நடக்கும்) பள்ளிவாசலின் நுழைவாயில்களில் ஒவ்வொரு வாசலிலும் (இருந்த வண்ணம்) முதன் முதலாக உள்ளே நுழைபவர்களையும் அடுத்தடுத்து உள்ளே நுழைபவர்களையும் (அவர்களின் பெயர்களை) எழுதிப் பதிவு செய்து கொண்டிருப்பார்கள். இமாம் உரைமேடையில் (உரையாற்றுவதற்காக) அமர்ந்து விட்டால் (பதிவு செய்யும்) ஏடுகளைச் சுருட்டி வைத்து விட்டு (அவரது உபதேச) உரையைச் செவிமடுத்த வண்ணம் (உள்ளே) வருவார்கள்’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 3211)
ஜும்ஆவுக்காக பள்ளிக்கு வருவோருக்கு பரிசுகள் வழங்குவதற்காக வருகைப்பதிவேட்டில் வானவர்கள் பதிவு செய்கிறார்கள். இமாம் மிம்பருக்கு வருவதற்கு முன்பே நாம் பள்ளிக்கு வருகை தந்துவிட வேண்டும் என்பதை இந்த ஹதீஸ்கள் விளக்குகின்றன.
 
எவ்வளவோ முயற்சிகள் செய்தும் பள்ளிக்கு சரியான நேரத்தில் வரமுடியாமல் இமாம் ஜும்ஆ உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது தாமதமாக வந்தால் என்ன செய்வது?
 
ஜாபிர் பின் அப்தில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள். ”நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜும்ஆ நாளில் மக்களுக்கு உரையாற்றிக் கொண்டிருக்கையில் ஒரு மனிதர் வந்(து தொழாமல் அமர்ந்)தார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘இன்னாரே! தொழுது விட்டீர்களா?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர் ‘இல்லை’ என்றார். ‘எழுந்து தொழுவீராக!’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்..” (நூல்: புகாரி 930)
 
§  தஹிய்யத்துல் மஸ்ஜித் தொழுகை பற்றிய நபிமொழிகள்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது ஸுலைக் அல் கத்ஃபானி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் வந்தார்கள். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவரிடம், ”நீர் (இங்கு) வருமுன் இரண்டு ரக்அத்கள் தொழுதீரா?” என்று கேட்க, அவர் ”இல்லை” என்றார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ”அப்படியாயின் நீர் இரண்டு ரக்அத்களைச் சுருக்கமாகத் தொழுது கொள்வீராக” என்றார்கள் என ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: இப்னுமாஜா 1114)


 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றுள்ளார்கள்: ”உங்களில் யாரேனும் பள்ளியில் நுழைந்தால் இரு ரகஅத்துகள் தொழாமல் உட்கார வேண்டாம்”. (நூல்: புகாரி.)
 
மக்களுக்கு மத்தியில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் அமர்ந்திருக்கும் போது நான் பள்ளிக்குள் நுழைந்து உட்கார்ந்து விட்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ”நீ உட்காருவதற்கு முன்பாக இரண்டு ரக்அத்துகள் தொழாமல் இருக்க எது தடையாக அமைந்தது” என்று கேட்டார்கள்.
 
§  ”நீ உட்காருவதற்கு முன்பாக இரண்டு ரக்அத்துகள் தொழாமல் இருக்க எது தடையாக அமைந்தது” என்று கேட்டார்கள். அதற்கு, ”நான் அல்லஹ்வின் தூதரே! நீங்கள் உட்கார்ந்து இருப்பதைக் கண்டேன். மக்களும் உட்கார்ந்து இருக்கிறார்கள். (அதனால் நான் உட்கார்ந்து விட்டேன்)” என்று பதில் சொன்னேன்.
குறைக்கப்பட்டு ”உங்களில் ஒருவர் பள்ளிக்குள் நுழைந்ததும் இரண்டு ரக்அத்துகள் தொழாமல் இருக்க வேண்டாம் என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்”. (அறிவிப்பவர்: அபூகதாதா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம், திர்மிதி, அபூதாவூத், நஸயீ)
 
எனவே எந்தப்பள்ளி வாயிலுக்குள் நுழைந்தாலும் இரு ரகஅத்துகள் தொழாமல் உட்காருவது கூடாது.
 
வெள்ளிக்கிழமை இமாம் குத்பா ஓதிக்கொண்டிருந்தாலும் இரண்டு ரகஅத்துகள் தஹிய்யத்துல் மஸ்ஜித் தொழுகை தொழுதுவிட்டுத்தான் உட்காரவேண்டும்

 Thank s by 
khaja mueenudeen takhaja@gmail.com

Monday, December 12, 2011

வெறும் நதிநீர்ப் பிரச்னை அல்ல; இந்திய ஒற்றுமை சம்பந்தப்பட்ட பிரச்னை, நினைவிருக்கட்டும்!


THANKS  BY தலையங்கம்:இதனால் யாருக்கு லாபம்?

First Published : 12 Dec 2011 02:56:46 AM IST

Last Updated : 12 Dec 2011 04:48:49 AM IST
கேரள எல்லையில் குமுளி அருகே சுமார் 80,000 பேர் போலீஸாரின் தடையுத்தரவை மீறி பேரணி நடத்தியதும், போலீஸார் தடுத்து நிறுத்தியதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 பணியில் இருந்த போலீஸாரால் இவர்களைத் தடுக்க முடியவில்லை என்றும்கூட செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தப் பேரணியை பொதுமக்கள் நடத்தினார்கள்; இதை அரசியல் அமைப்புகள் நடத்தவில்லை என்றும் கூறப்படுகிறது. நேற்றைய தினமும் சுமார் 20,000-க்கும் மேற்பட்டோர் பேரணி நடத்தி, எல்லையைக் கடக்க முயன்றுள்ளனர். இவர்களில் 6,000 பேர் மோட்டார் பைக்குகளில் வந்ததாகச் செய்திகளில் குறிப்பிடப்படுகிறது.
 முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் இரு மாநில மக்களின் நலன் கருதி எந்தவொரு பிரிவினை சக்திக்கும் இடம் தராமல் இருக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா பத்திரிகை விளம்பரங்கள் மூலமாக வேண்டுகோள் விடுத்த பின்னர், இத்தகைய பேரணியை அதிமுகவினர் நடத்தியிருக்க வாய்ப்பில்லை. கட்சித் தலைமையை மீறி இத்தகைய பேரணியை நடத்தவும், மறைமுகமாக இயக்கவும்கூட எந்தவொரு அதிமுக மாவட்டச் செயலருக்கும் துணிச்சல் கிடையாது என்பது நிச்சயம். அமைச்சர்களைப் பற்றிச் சொல்ல வேண்டியதே இல்லை.
 அவ்வாறாக அரசியல் சார்பு இல்லாமல் இந்த அளவுக்குப் பெருங்கூட்டம் ஒரு பொது நலனுக்காகத் திரள்கிறது என்பது உண்மையாக இருக்க வேண்டும் என்பதுதான் அனைவரது விருப்பமும். இருப்பினும், கேரள மக்களையும் அரசையும் மேலும் எரிச்சலூட்டவும், ஐயப்ப பக்தர்கள் மீது தாக்குதலை முடுக்கிவிடவும்தான் இந்தப் பேரணியும் அத்துமீறல் ஊர்வலமும் பயன்படுமே தவிர, நிச்சயமாக முல்லைப் பெரியாறு பிரச்னையைத் தீர்க்க உதவாது. இதுபோன்ற செயல்கள் இரு மாநில நல்லுறவை மேலும் சிக்கலாக மாற்றும்.
 கேரள மக்கள் தங்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களுக்குத் தமிழகத்தையே சார்ந்துள்ளனர். கறிக்கோழி, முட்டை ஆகியன மட்டுமே ஆண்டுக்கு ரூ.1,780 கோடிக்கு தமிழகத்திலிருந்து கேரள மாநிலத்துக்குக் கொண்டு செல்லப்படுகிறது. இதே அளவுக்கு நெல்லும் பிற தானியங்களும் செல்கின்றன. கேரள மாநிலத்துக்கு எந்த வாகனமும் செல்லக்கூடாது என்று மறித்தால் அல்லது அத்தகைய சூழ்நிலையை உருவாக்கினால், அதனால் பெரும் இழப்பைச் சந்திக்கப்போவது தமிழர்களும்தான்.
 கேரள மாநிலத்தவர் தமிழகத்தை நம்பாமல் கர்நாடக மாநிலத்தைச் சார்ந்து வாழ்ந்துவிட முடியும் என்றாலும், கர்நாடக மாநிலத்திலிருந்து பொருள்களை வரவழைப்பதில், செலவு அதிகம். இதனால் நெல், காய்கறி, கறிக்கோழி, முட்டை ஆகியவற்றுக்கு கேரள மக்கள் தற்போது கொடுக்கும் விலையைவிட 50 விழுக்காடு அதிகமாகக் கொடுக்கும் நிலைமை உருவாகும். இதைக் கேரள மக்கள் விரும்பவில்லை. விருப்பப்படவும் மாட்டார்கள்.
 முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், அணை நீரால் பயன்பெறும் தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளைக் காட்டிலும் மிக அக்கறையாகவும்; அரிசி, முட்டை, மாமிசம் பெற தமிழகத்தை நம்பியிருக்கும் கேரள மக்களைக் காட்டிலும் அதிக ஆவேசமாகவும், யாரோ சிலர், ஏதோ ஒரு சக்தி, இந்த விவகாரத்தில் கூச்சல்போட்டு, அக்கறையாக மோதலை உருவாக்கப் பார்க்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
 இந்தப் பிரச்னை போதாதென்று, நாமக்கல் மாவட்டக் கல்லூரிகளில் பயிலும் கேரளத்து மாணவர்களைத் தமிழர்கள் தாக்கியதாக, ஒரு மலையாளப் பத்திரிகையில் ஒரு செய்தி வெளியாகி, கேரளத்தில் உள்ள பெற்றோர்களின் வயிற்றில் புளியைக் கரைக்கிறது. ஆனால், அந்தச் செய்தி பச்சைப் பொய் என்பதே உண்மை.
 இதே மலையாளப் பத்திரிகைதான், முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் நிலநடுக்கம் என்ற செய்தியை மிகைப்படுத்தி, கேரளத்தில் இந்த அணைக்கு எதிரான பிரசாரத்தை முதன் முதலாகத் தொடங்கி வைத்தது என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
 முல்லைப் பெரியாறு அணை வலுவாக உள்ளது என்பதும், நிலநடுக்கம் ஏற்பட்டு அணை உடைந்தாலும், 50 கி.மீ. தொலைவில் உள்ள இடுக்கி அணை அனைத்து நீரையும் உள்வாங்கி நிற்கும் என்றும் கேரள அரசின் நீர்வளத் துறைக்கு நன்றாகத் தெரியும். இடுக்கி அணையில் புனல் மின்சாரம் தயாரிக்க இயலவில்லை என்பதால்தான் இந்த அணை மீது கேரள அரசுக்குக் கோபம் என்று நாம் நம்பிக்கொண்டிருந்த வேளையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ள இன்னொரு கருத்து, இப்பிரச்னையின் வேறொரு பரிமாணத்தைக் காட்டுகிறது.
 ""முல்லைப் பெரியாறு அணையின் நீர்உயரம் 136 அடியாக இருக்கும்போது நீர்ப்பரப்பு 4,678 ஏக்கர். அணையில் 155 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கும்போது நீர்ப்பரப்பு 8,591 ஏக்கர். அதாவது 3,913 ஏக்கர் நிலப்பரப்பு கடந்த பல ஆண்டுகளாக நீரில் மூழ்காமல் இருக்கிறது. இந்தப் பகுதிகளில் கேரளத்தைச் சேர்ந்த சிலர் ஆக்கிரமித்து தங்கும் விடுதிகள் மற்றும் கட்டடங்கள் கட்டியுள்ளனர். 136 அடிக்கு மேலாக தண்ணீரைத் தேக்கினால் இந்த ஆக்கிரமிப்புப் பகுதியில் கட்டப்பட்ட விடுதிகள் தண்ணீரில் மூழ்கும். முல்லைப் பெரியாறு அணையைச் செயலிழக்கச் செய்ய இதுவும் ஒரு காரணமாக சிலர் தெரிவிக்கின்றனர்'' என்று முதல்வர் கூறியுள்ளார்.
 சுமார் 4,000 ஏக்கர் பரப்பில் ரிசார்ட் போன்ற விடுதிகள் கட்டியுள்ளவர்கள் யார்? இவர்களின் பின்புலம் என்ன? என்பதைப் பற்றி விசாரித்தால், முல்லைப் பெரியாறு அணையால் யாருக்கு இழப்பு, அதனால் யாருக்கு ஆத்திரம் என்பது வெளிப்படும்.
 நாம் மீண்டும் மீண்டும் வலியுறுத்த விரும்புவது, மாநிலங்களுக்கிடையே உள்ள உறவு சீர்கெடுவது இந்திய ஒற்றுமைக்கு மிகப்பெரிய ஆபத்தாக முடியும் என்பதைத்தான். இந்தப் பிரச்னையில் ஏன் தமிழக, கேரள அரசுகளை விடவும் அதிக அக்கறையும் கவலையும் கொள்ள வேண்டியது மத்திய அரசுதான். இது வெறும் நதிநீர்ப் பிரச்னை அல்ல; இந்திய ஒற்றுமை சம்பந்தப்பட்ட பிரச்னை, நினைவிருக்கட்டும்!

Monday, December 5, 2011

‘சென்னை யாருக்கு?’


‘‘டிராபிக் ராமசாமி போன்ற மனிதர்களை கொண்டாடத் தொடங்கினால்தான் நாடு உருப்படும்” இப்படி முகநூலில் (பேஸ் புக்கில்) ஒரு நண்பர் கூறியிருந்தார். “மனிதர் விடாமல் நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏறி இறங்கி விதிமீறியக்  கட்டடங்கள் சிலவற்றுக்காவது சீல்வைக்கச் செய்துவிட்டாரே” என பாராட்டியிருந்தார்.

அவர் கூறியது ஒருவகையில் சரிதான். தீப்பிடித்துவிட்டதாகவோ, குண்டுவைக்கப்பட்டிருப்பதாகவோ யாரோ ஒரு வதந்தியைக் கிளப்பினால் போதும் பயபீதியில் மிரண்டோடும் கூட்ட நெரிசலில் மிதிபட்டே நூற்றுக் கணக்கில் செத்திருப்பர். கும்பகோணம் பள்ளியில் குழந்தைகள் கருகிச்செத்த கோரக் காட்சி இங்கேயும் அரங்கேறியிருக்கலாம். சீல் வைக்கப்பட்ட பலகட்டடங்களின் நிலை அதுதான்.

அப்படி ஒரு சோகம் நடக்கும் முன்பே சீல் வைக்கப்பட்டது மகிழ்ச்சியே. டிராபிக் ராமசாமியின் பொதுநல வழக்கும் அதில் நீதி மன்றம் காட்டிய கெடுபிடியும் இல்லாமல் இது நிகழ்ந்திருக்காது. இதற்கே 15 ஆண்டு களுக்கு மேல் உருண்டோடிவிட்டது. மாறி மாறி வந்த கழக ஆட்சிகள் விதிமீறிய கட்டடங்களை பணம் காய்ச்சி மரங்களாகத்தான் பார்த்தன. அதற்கேற்ப அடக்கி வாசித்தன. இதெல்லாம் நினைவில் அலைபாயும்போதே வேறு சில காட்சிகளும் மனத்திரையில் ஆடுகின்றன.

பொங்கல் மற்றும் இதரப் பண்டிகையையொட்டி கிராமவீதிகளுக்கே வந்து பெட்ரமாக்ஸ் விளக்கு வெளிச்சத்தில் ஜவுளியை ஏலம் போட்ட நாட்கள் போயொழிந்தன. வீடு தேடி புடவை, வேட்டி, போர்வை என விற்பதும் வழக்கம். பொதுவாக இந்தியச் சந்தையை வெண்டர்ஸ் ஓரியண்டட் அதாவது வீடுதேடி வந்து பொருள் விற்கும் வகையது என்பர். மக்களைத்தேடி இங்கு சந்தைவரும். ஆனால் ஐரோப்பாவிலோ அமெரிக்காவிலோ மக்கள்தான் சந்தையைத் தேடிப் போவார்கள். அதனை ‘மார்க்கெட் ஓரியண்டட்’ என்பர்.

கடந்த நூற்றாண்டில் நகரங்களில் முளைத்த ஜவுளிக்கடைகள் மக்களை ஈர்க்கத்துவங்கின. ஜவுளி என்பதே தமிழ்ச்சொல் அல்ல என்பதிலிருந்து அது நமக்கு புதிய வரவு என்பது சொல்லாமலே விளங்கும். இந்தக் கடைகள் தலைச்சுமையாகவும் சைக்கிளிலும் விற்பனை செய்த பலரை அத்தொழிலைவிட்டே ஓட்டியது. அதேசமயம் புதிய நகரக் கடைவீதிகள் பல்லாயிரம்பேரை வியாபாரிகளாக்கியது. பல்லாயிரம்பேருக்கு வேலை வாய்ப்பானது. நடைபாதை வணிகமும் பெருகியது.

தாராளமய உலகமய கத்தில் இந்தியா நுழைந்ததும் வர்த்தகங்களின் தன்மை மாறலாயிற்று. ஜவுளிக்கடைகள் ஜவுளிக்கடலாயின. மின்னணு ஊடகங்களின் விளம்பரப் பொறியில் மக்கள் விழலானார்கள். மெகா சீரியல், மெகாத் தொடர்கள்,மெகா ஷோக்கள், மெகா தயாரிப்புகள் என எங்கும் மெகா மோகம் தலைவிரித்தாடலாயின. இவ்வளவு ஏன், இருபது கோடிச் செலவில் உண்ணா விரதம் இருந்த அன்னா ஹசாரேவைத்தான் காந்தியவாதி என்கிற காலம் இது. இந்த காலக்கட்டத்தில் பெருநகரங்களில் மெகா ஸ்டோர்கள் உருவெடுத்தன. அவை சின்ன மீன்களை விழுங்கி பெரிய மீன்களாக உருவெடுத்தன. அனைத்து நெறிமுறைகளையும் காலில்போட்டு மிதித்துக் கொழுத்தன. மக்கள் அவற்றை நோக்கிப் படைஎடுக்கும்படி விளம்பர மகுடியை சினிமா நட்சத்திரங்கள் மூலம் ஊதினர். பெருகும் வாடிக்கையாளர் கூட்டத்தின் எதிரொலியாக கட்டடங்கள் வரம்புமீறி வீங்கின; வீதிகள் சுருங்கின; திண றின. எடுத்துக்காட்டாக கூறுவதெனில் சென்னையில் தி.நகர் மெகா வியாபாரக் கேந்திரமானது.

தி.நகரில் சென்று பொருட்கள் வாங்குவதுதான் நாகரிகமானது; கவுரவமானது என்ற மாயை சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்ட மக்களை தொற்றுவியாதியைப் போல் கவ்வியது. அந்த மாவட்டங்களின் நடுத்தர வியாபாரிகள் பிழைப்பில் மண் விழுந்தது. பஸ்-ரயில் போக்குவரத்தும் பெரும் நெரிசலைச் சந்தித்தன.

இதே காலகட்டத்தில் தகவல்தொழில் நுட்பத்துறையில் ஏற்பட்ட வளர்ச்சி, குறிப்பாக கணினித்துறையில் ஏற்பட்ட வளர்ச்சி மத்திய தர மக்களில் ஒரு பகுதியினரிடம் பணப் புழக்கத்தை அதிகரித்தது. வெளிநாடு சென்று வரும் அவர்களிடம் மேலைநாடுகள் போல் இங்கு சாலைவசதி, கார்பார்க்கிங், மெகா வணிக வளாகங்கள், போன்ற எதிர்பார்ப்புகள் ஓங்கின. ஊடகங்களில் எதிரொலித்தன.

இதற்காகவே காயை நகர்த்திய உலக வங்கி, ஐஎம்எப் போன்றவற்றின் செயல் மேடையாக அரசும்,மாநகராட்சியும், பெரு நகரவளர்ச்சிக் குழுமமும் உருமாறின. போக்கு வரத்துக்கு இடையூறு, எனவே அண்ணா சாலையில் ஊர்வலம் போராட்டம் கூடாது. தூய்மை மிகமுக்கியம்.எனவே மெரினாவில் பொதுக்கூட்டங்கள் கூடாது. குடிசைகள் சென்னையின் எழிலையும் சுகாதாரத்தையும் கெடுக்கின்றன. எனவே அப்புறப்படுத்த வேண்டும். நடைபாதைக்கடைகளால் டிராபிக் ஜாம் ஏற்படுகின்றன. எனவே அவற்றை காலிசெய்யவேண்டும்.இவ்வாறான குரல்கள் கேட்கத் தொடங்கின. டிராபிக் ராமசாமிகள் உருவாயினர். பொதுநலவழக்குகள் புனையப்பட்டன. நீதிமன்றங்கள் வர்க்கப்பாசத்தோடு ஒத்து ஊதின. சென்னையின் முகப்பொலிவை மட்டுமல்ல ஆத்மாவையே மாற்றியமைக்கும் உலகவங்கிச் சதி அரங்கேறலாயிற்று.

வெறும் வாயை மென்ற இவர்களுக்கு விதிமீறிய கட்டடங்கள் அவலாயின. 15 ஆண்டுகள் போராடி சீல் வைக்கிற அளவுக்கு வென்றனர். அது சரிதான். அதேநேரம் அந்த வணிகநிறுவனங்களை நம்பி நிற்கிற பல்லாயிரம் தொழிலாளர்களின் வாழ்க்கை திடீரென வீதியில் தூக்கி எறியப்பட்டால் என்ன ஆகும் என்ற கவலை டிராபிக் ராமசாமிகளுக்கும் இல்லை. நீதிமன்றங்களுக்கும் இல்லை. நாயை அடிப்பதானால்கூட தப்பிக்க வழிவிட்டு அடிப்பார்கள். அந்த மிருகாபிமானம்கூட இந்த ஏழைத் தொழிலாளர்கள் மீது காட்டப்படவில்லை. அங்காடித் தெரு சினிமா இவர்களின் வாழ்க்கைப்பாட்டில் ஒரு பகுதியை காட்டின. முழுவதும் அறிந் தால் கண்களில் இரத்தம் கொட்டும். கெட்டும் பட்டணம் போ என பிழைக்க வந்தவர்கள் இன்று சென்னை நகர வீதிகளில் குப்பையாய் கொட்டப்பட்டுள்ளனர். இவர்களின் வாழ்வுரிமை பற்றியும் குறைந்தபட்ச கண்ணியமான பணிச்சூழல் பற்றியும் ஊடகப்புலிகளுக்கோ, அரசுக்கோ, நீதிமன்றத்திற்கோ டிராபிக் ராமசாமிகளுக்கோ அக்கறை ஏதும் எப்போதும் இருந்ததில்லை.

இப்போது இவர்கள் கவலையே வேறு. ஏழைகள் உள்ளே நுழையக்கூட முடியாத எக்ஸ்பிரஸ் அவென்யூக்களும் வால்மார்ட்டுகளும்தான் இவர்களின் ஒரே கனவு. அதற்கு இடையூறாக உள்ள எல்லாம் அவர்கள் கண்களை உறுத்தும்.அந்த கனவு அவென்யூக்களில் கார்பார்க்கிங் செய்யவே ரூ.200/- உள்ளேபோய் வெளியே வந்தால் குறைந்த பட்சம் ரூ.3000/-காலியாகிவிடும். பெரும்பாலோரின் அரை மாதச் சம்பளம் அது. புதைப்பதற்குக்கூட போதுமானதாகஅல்லாத கையகல ரூம் வாடகை ரூ.5000/-யை தாண்டுகிறது. வீட்டுமனை விலையோ பலகோடி. இங்கே சாதாரண மனிதர்கள் பிழைக்க முடி யாது. வாழமுடியாது. நடைபாதை வியாபாரமும் போச்சு. நடுத்தர வியாபாரமும் நொடிஞ்சாச்சு. சின்னமீன்களை விழுங்கி அடாவடிச் செயல்கள் மூலம் கொழுத்த சரவணாக்கள், போத்தீஸ்கள் உட்பட அனைத்தையும் விழுங்க வால்மார்ட் திமிங்கிலங்கள் வாய்பிளந்து நிற்கின்றன. அரசும் நீதிமன்றங்களும் அதற்குத்தான் நடைபாவாடை விரிக்கின்றன.

‘சென்னை யாருக்கு?’ இக்கேள்வியை உரக்க கேட்கவேண்டிய நேரம் வந்துவிட்டது. ஐம்பது ரூபாய் கூலிக்காரன் வாழ கையேந்திபவன்களும், கோடீஸ்வரர்கள் டாம்பீகமாக வாழ நட்சத்திர ஹோட்டல்கள், கடைகளும் என்கிற பன்முனைதான் இந்திய யதார்த்தம் என மேற்கத்திய நிபுணர்கள் பீற்றியதுண்டு. சென்னை நகரில் அதற்கும் ஆபத்து வந்து விட்டது. நடைபாதைக்கடைகள் முதல் பெரிய கடைகள் வரை, குடிசைகள் முதல் சாதாரண மக்கள் குடியிருப்புவரை அனைத்தையும் பிய்த்து எறிந்துவிட்டு வசதிபடைத்தவர்களின் கனவு நகரமாக சென்னையை சிருஷ்டிக்க மௌனமாக ஒரு உலகவங்கிச்சதி அரங்கேறுகிறது. டிராபிக் ராமசாமிகளும் எக்ஸ்பிரஸ் அவென்யூக்களும் அதன் குறியீடு தான். வாய்பொத்தி மெய்பொத்தி இருக்கப் போகிறோமா? ஒரு விழுக்காடு மக்களுக்காகவா? 99 விழுக்காடு மக்களுக்காகவா?என வால்ஸ்ட்ரீட்டுக்கு எதிராக போராட்ட முழக்கம் அமெரிக்கா, ஐரோப்பா முழுவதும் கேட்கிறது. அதைப்போல சென்னை யாருக்கு? வசதிபடைத்தவர்களுக்கு மட்டுமா? அனைவருக்குமா? இக்கேள்வி வீதிகள்தோறும் இடி முழக்கமாய் எதிரொலிக்கவேண்டிய நேரம் நெருங்கி விட்டது.இன்னுமா மௌனம்? உரக்கப் பேசுக.
THANK S BY
- சு.பொ.அகத்தியலிங்கம்
  

முஹர்ரம் பத்தும் மூடப் பழக்கங்களும்!!!!


Thank s by   Ahamed Jamani Ahamed Jamani
Email
  • jamai1977@yahoo.com

முஹர்ரம் பத்தும் மூடப் பழக்கங்களும்!!!! ஃபிர்அவ்னைக் கடலில் மூழ்கடித்து, மூஸா (அலை) அவர்களையும் அவர்களது கூட்டத்தாரையும் காப்பாற்றி, அவர்களுக்கு எகிப்தின் ஆட்சிப் பொறுப்பையும் வழங்கிய நாள் தான் ஆஷூரா நாள் எனப்படும் முஹர்ரம் பத்தாம் நாள். மூஸா நபியை நம்பிய முஸ்லிம்களுக்கு ஆட்சிப் பொறுப்பை வழங்குவதாக அல்லாஹ் அளித்த வாக்குறுதி நிறைவேறிய அந்த நாள் கர்பலாவால் மறைக்கப்பட்டு விட்டது. கதிரவனை மறைக்கும் கிரகணத்தைப் போல ஆஷூரா தினத்தை, கர்பலாவும், அதையொட்டி ஷியாக்கள் கிளப்பி விட்ட மூடப் பழக்கங்களும் மறைத்து விட்டன. ஆஷூரா தினத்தை மையமாக வைத்து நடக்கும் பைத்தியக்காரத்தனமான செயல்பாடுகளையும், இஸ்லாத்திற்கு எதிரான காரியங்களையும், மாற்று மத அனுஷ்டானங்களையும் இப்போது பார்ப்போம். துக்க நாளாகி விட்ட ஆஷூரா ஹுசைன் (ரலி) கொல்லப்பட்ட சோக சம்பவம் முஹர்ரம் பத்தாம் நாளில் நடந்ததால் அந்த நாள் துக்க நாளாக ஒரு போதும் ஆகி விடாது. நபி (ஸல்) அவர்களிடம் திங்கள் கிழமை நோன்பு நோற்பது பற்றி வினவப்பட்ட போது, "அது நான் பிறந்த நாளாகும். அந்த நாளில் தான் நான் இறைத்தூதராக அனுப்பப் பட்டேன்'' என்று பதிலளித்தார்கள். (ஹதீஸ் சுருக்கம்) அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி) நூல்: முஸ்லிம் 1387 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திங்கட்கிழமை மரணித் தார்கள். (நூல்: புகாரி 1387) உலக வரலாற்றில் மிக மிக அருளுக்கும் ஆசிக்கும் உரிய நாள் அல்லாஹ்வின் வேதம் இறங்கிய நாளாகும். அந்த நாளை நபி (ஸல்) அவர்களின் மரணம் மறைத்து விடவில்லை. உலகில் நபி (ஸல்) அவர்களை விட சிறந்தவர் யாரும் கிடையாது. அப்படிப்பட்ட அவர்களின் மரண நாள் நினைவு கூரப்படுவதற்கு மிகவும் பொருத்தமான நாளாகும். ஆனால் அந்த நாளையே நினைவு நாளாக, சோக நாளாக அனுஷ்டிக்க அனுமதியில்லாத போது மற்ற நாளை எப்படி சோக நாளாக அனுஷ்டிக்க முடியும்? இப்படியே இஸ்லாத்திற்காக உயிரை விட்ட நல்லவர்களின் மரண நாட்களைப் பார்த்தோம் எனில் நம் வாழ்நாளில் ஒரு நாள் கூட சந்தோஷ நாளாக இருக்காது. ஒவ்வொரு நாளும் துக்க நாளாகவே இருக்கும். அதனால் இஸ்லாத்தில் நினைவு நாளோ, பிறந்த நாளோ கிடையாது. ஆண்டு தோறும் துக்கம் அனுஷ்டித்தல் இஸ்லாமிய மார்க்கம் உளவியல் ரீதியாக மக்களின் மனதைப் பக்குவப்படுத்தும் மார்க்கமாகும். அதனால் இரவுத் தொழுகை, நோன்பு, தர்மம் போன்ற வணக்கங்களுக்கு ஓர் உச்சவரம்பை நிர்ணயித்தது போல் ஒரு குடும்பத்தில் ஓர் உறவினர் இறந்து விட்டால் அதற்காக சோகம் அனுஷ்டிக்கும் நாட்களுக்கும் ஓர் உச்சவரம்பை விதித்துள்ளது. இல்லையேல் அந்தச் சோகம் மனிதனின் உள்ளத்தில் ஆதிக்கம் செலுத்தி மனதில் அழுத்தத்தை ஏற்படுத்தி விடும். அதனால் அவன் மன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்படுவான். இதையெல்லாம் உடைத்தெறியும் விதமாக நபி (ஸல்) அவர்கள் இதற்கு ஓர் உச்சவரம்பை நிர்ணயிக்கின்றார்கள். இறந்து போனவர்களுக்காக மூன்று நாட்களுக்கு மேல் துக்கத்தை வெளிப்படுத்த நாங்கள் தடுக்கப் பட்டுள்ளோம். ஆனால் கணவன் இறந்த பின் அவனது மனைவி, நான்கு மாதம் பத்து நாட்கள் துக்கத்தை வெளிப்படுத்த வேண்டும். (அதாவது) இந்த நாட்களில் நாங்கள் சுர்மா இடவோ, நறுமணப் பொருட் களைப் பூசவோ, சாயமிடப்பட்ட ஆடைகளை அணியவோ கூடாது. ஆனால் நெய்வதற்கு முன் நூலில் சாயமிடப்பட்டு தயாரிக்கப்பட்ட ஆடைகளை அணியலாம். எங்களில் ஒருத்தி மாதவிடாயிலிருந்து நீங்கு வதற்காகக் குளிக்கும் போது மணப் பொருட்களைப் பயன்படுத்துவது அனுமதிக்கப் பட்டுள்ளது. மேலும் ஜனாஸாவைப் பின் தொடர்ந்து செல்வதை விட்டும் நாங்கள் தடுக்கப்பட்டிருந்தோம். அறிவிப்பவர்: உம்மு அதிய்யா (ரலி) நூல்: புகாரி 313 ஹுசைன் (ரலி) கொல்லப்பட்ட பின் மூன்று நாட்களுடன் அந்தச் சோகம் முடிந்து விடுகின்றது. இதை அவர்களது குடும்பத்தார் பொறுமையுடன் ஏற்றுக் கொண்டு, இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் என்று சொல்லி தங்களுடைய வாழ்நாளில் சகஜ நிலைக்குத் திரும்பி விட்டனர். ஹுசைன் (ரலி)யின் குடும்பத்தார் ஒவ்வோர் ஆண்டும் முஹர்ரம் பத்தாம் நாளை சோக தினமாக அனுஷ்டிக்கவில்லை. ஆனால் ஷியாக்கள் இதற்கு ஒவ்வொரு ஆண்டும் புத்துயிர் கொடுத்து, இஸ்லாத்தின் உண்மையான சித்திரத்தைச் சிதைத்து வருகின்றனர் ஷியாக்கள் மட்டுமல்லாமல் சுன்னத் வல் ஜமாஅத் என்று தங்களைக் கூறிக் கொள்வோரில் சிலரும் இந்தக் காரியங்களில் ஈடுபடுகின்றனர். அவர்கள் செய்யும் கூத்துக்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம். இவர்கள் செய்யும் அனாச்சாரங்கள், அட்டூழியங்கள், கேலிக் கூத்துக்கள் ஆகியவற்றை முதலில் வரிசையாகப் பார்த்து விட்டு, மார்க்க அடிப்படையில் அவற்றின் விளக்கத்தைப் பார்ப்போம். பஞ்சா எடுத்தல் முஹர்ரம் மாதத்தின் முதல் பிறையிலிருந்து, பஞ்சா மையம் கொண்டிருக்கும் அலுவலம் களை கட்ட ஆரம்பித்து விடும். ஒரே ஊரில் தலைமை அலுவலகமும் இருக்கும், கிளை அலுவலகமும் இருக்கும். முஹர்ரம் 1ல் இதன் நடைவாசல்கள் திறக்கப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்காக பஞ்சா கொலு வீற்றிருக்கும். பஞ்சா அலுவலகத்தில் பிரமாண்ட பந்தல். அதில் எப்போதும் மக்கள் வெள்ளம் தான். பலூன் வியாபாரிகள், மிட்டாய் வண்டிகள், பொம்மை வியாபாரிகள், ஐஸ் வண்டிகள் என இந்தப் பகுதி நிரம்பி வழியும். இந்தக் காட்சிகள் அனைத்தும் வேளாங்கண்ணி, திருப்பதி கோயில்களைத் தோற்கடித்து விடும். தெருமுனையில் திருக்கோயில் பொதுவாக தெரு முனைகளில் உள்ள நுழைவு வாயிலில் அரசாங்கமோ, அல்லது தனி நபர்களோ கட்டடம் எதுவும் கட்ட முடியாது. அப்படி யாராவது கட்டினால் அந்தத் தெருவே பொங்கி எழுந்து, அதனைப் பொசுக்கி விடுவர். ஆனால் சந்திப் பிள்ளையார் சன்னதி போல் இந்தப் பஞ்சா அலுவலகத்தை மட்டும் பக்கீர்கள் பரிபாலணக் கமிட்டி, தெருவின் மத்தியில் கட்டி பராமரிக்கும் போது அதை மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றுக் கொள்வர். அது தெய்வீக அருளை அன்றாடம் அள்ளித் தரும் ஆனந்த பவன் என்ற நம்பிக்கையே இதற்குக் காரணம். அதனால் தான் முச்சந்தியில் நிற்கும் இந்த மணி மண்டபத்தை எதிர்த்து யாரும் ஒரு வார்த்தை கூட முணுமுணுப்பதில்லை. பஞ்சாவின் உடல் கட்டமைப்பு பஞ்சா என்றால் ஐந்து என்று பொருள். ஐந்து ஆறுகள் ஓடுவதால் ஒரு மாநிலத்திற்கு பஞ்சாப் என்று பெயர். கிராமத்தில் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதற்கு அமைக்கப்படும் ஐந்து பேர் கொண்ட கமிட்டி பஞ்சாயத் என்று அழைக்கப்டுகின்றது. அது போன்று தான் முஹர்ரம் பத்தாம் நாள் ஹுசைன் (ரலி) நினைவாக எடுக்கப்படும் பஞ்சாவில் ஐந்து விரல்கள் கொண்ட கை ஒன்று வைக்கப்பட்டிருக்கும். இந்த ஐந்து விரல்களும் சிம்பாலிக்காக முஹம்மத் (ஸல்), அலீ, பாத்திமா, ஹஸன், ஹுசைன் (ரலி) ஆகியோரைக் குறிக்கும். சுருக்கமாகச் சொல்லப் போனால் இந்த ஐந்து பேர்களும் கடவுளாக உருவகப்படுத்தப் பட்டுள்ளனர். அதனால் தான் ஒரு கவிஞன், "எனக்கு ஐந்து பேர்கள் இருக்கின்றார்கள், அவர்கள் என்னை நரகிலிருந்து காப்பார்கள். அவர்கள் தாம் முஸ்தபா, முர்தளா (அலீ), பாத்திமா, அவர்களின் பிள்ளைகள் ஹசன், ஹுசைன்'' என்று பாடியுள்ளான். பஞ்சா என்று சொல்லப்படும் ஐந்து விரல்கள் கொண்ட வெள்ளி கைச் சின்னம் மரத்தினால் செய்யப்பட்ட ஒரு சட்டத்தினுள் ஜரிகைத் தாளைப் பின்னணியாகக் கொண்டு குடி கொண்டிருக்கும். இதைச் சுற்றிலும் மல்லிகைப் பூக்கள் வளைத்து நிற்கும். இது தான் பஞ்சா என்ற ஏவுகணையின் உடல் கட்டமைப்பாகும். அப்படியே இந்துக்கள் எடுக்கும் சப்பரத்திற்கு ஒப்பாக இந்தப் பஞ்சா அமைந்திருக்கும். ஏழாம் பஞ்சா பஞ்சா என்ற சப்பரம் பத்தாம் நாள் தான் தன்னுடைய தளத்திலிருந்து கிளம்பும். அதற்கு முன்னால் பக்த கோடிகள் இதனை விட்டு எங்கும் வெளியூர் போய் விடக் கூடாது என்பதால் ஏழாம் பஞ்சா என்று ஒன்று கிளம்புகின்றது. இந்த ஏழாம் பஞ்சாவில் ஹஸன், ஹுசைன் நினைவாக இரண்டு குதிரைகள் தயாராக நிற்கும். அதில் இரண்டு இளைஞர்கள் ஏறி அமர்வார்கள். இவர்கள் மீது அவ்லியாக்களுக்கு மிகவும் பிடித்த நிறமான(?) பச்சை நிறத் துணி போர்த்தப்பட்டிருக்கும். இந்த வீரர்களைத் தாங்கி வரும் குதிரைகளுக்கு பக்தர்கள், பக்தைகளின் கூட்டம் வழிநெடுகிலும் வரவேற்பு அளிக்கும். குடம் குடமாக வந்து தண்ணீரைக் கொண்டு வந்து குமரி மற்றும் குடும்பத்துப் பெண்கள் குதிரையின் கால்களில் கொட்டுவார்கள். இவ்வாறு கொட்டினால் அவர்களின் தேவைகள் நிறைவேறும் என்ற குருட்டு நம்பிக்கையில்! இரு குதிரைகளிலும் சவாரி செய்யும் இந்த வீரர்கள் யார் தெரியுமா? தங்களுக்கு ஆண் குழந்தைகள் பிறந்தால், அல்லது தன் குழந்தைக்கு ஏற்பட்டிருக்கும் நோய் தீர்ந்து விட்டால் அவனை முஹர்ரம் ஏழாம் நாளில் ஹஸனாகவும், ஹுசைனாகவும் கொண்டு வந்து குதிரையில் ஏற்றுவேன் என்று பெற்றோர்களால் நேர்ச்சை செய்யப்பட்டவர்கள். கர்பலாவின் லைவ் காட்சி பச்சைப் போர்வை போர்த்தப்பட்டு பவனி வரும் இவர்களின் பாதடிகளில் தண்ணீராலும் பன்னீராலும் மக்கள் கழுவிக் கொண்டிருப்பார்கள். இதனால் பற்பல பாக்கியங்கள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில்! குதிரையில் தங்கள் குழந்தைகளை ஏற்றுவதற்கும் போட்டா போட்டி நடக்கும். இதற்கென காசை வாரி இறைப்பர். அதிகமான பணம் கொடுத்து முன் பதிவு செய்பவர்களுக்கு எந்த ஆண்டு குதிரை சவாரி செய்ய வேண்டும் என்பதற்கான நாளை பக்கீர்கள் குறித்துக் கொடுப்பர். இவ்வாறு விசா கிடைத்து, குதிரையில் ஏறக் கொடுத்து வைத்த இவர்கள் முஹர்ரம் 10 நாளும் நோன்பு நோற்க வேண்டும். ஆஷூரா 9, 10 நோன்புகளைக் கூட ஹஸன், ஹுசைன் நினைவாகத் தான் பிடிப்பதாக இந்த மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். இந்தக் குதிரை வீரர்கள் போருக்குப் புறப்படுகின்றார்களா? என்று பார்த்தால் அவ்வாறு செய்வதில்லை. குதிரையில் ஆற்றுக்குச் சென்று குளிக்கின்றனர். இவ்வாறு செய்தால் ஷஹாதத் எனும் அந்தஸ்து (?) கிடைத்து விடுகின்றது. பக்தர்களின் வீட்டு வாசல்களுக்கு இந்தக் குதிரை வரும் போது, மக்கள் தாங்கள் நேர்ச்சை செய்திருந்த ஆடு, கோழிகளை இந்தக் கஞ்சா பக்கீர்களிடம் சமர்ப்பிப்பார்கள். பச்சைத் துணியால் மூடப்பட்ட இந்த இளைஞர்கள் அணிந்திருக்கும் கருப்புக் கண்ணாடியில் கர்பலாவின் காட்சி நேரடியாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. அது எப்படி? என்று யாராவது அந்த இளைஞரிடம் பேட்டி கேட்கும் போது, அவர் தான் கருப்புக் கண்ணாடியில் பார்த்ததைச் சொன்னால் தலை வெடித்து விடுமாம். பக்கீர்களின் பகுத்தறிவு சாம்ராஜ்யம் எப்படி கொடி கட்டிப் பறக்கின்றது என்று பாருங்கள். ஒரேயடியாக பத்தாம் நாள் மட்டும் பஞ்சா என்றால் அது பக்தர்களைத் தக்க வைத்துக் கொள்ள உதவாது என்பதால் எட்டாம் பஞ்சா, ஒன்பதாம் பஞ்சா என்று வகை வகையாக பஞ்சா எடுத்து பக்தர்களை மூளைச் சலவை செய்கின்றார்கள். மீன் சாப்பிடத் தடை இந்த முஹர்ரம் பத்து நாட்களும் மீன் சாப்பிடக் கூடாது என்று ஒரு விதியை இவர்களாக தங்கள் இஷ்டத்திற்கு ஏற்படுத்தி வைத்துள் ளார்கள். இதன் விளைவாக பஞ்சா எடுக்கப்படும் ஊர்களில் இந்தப் பத்து நாட்களும் மீன் மிகவும் மலிவு விலையில் விற்கப்படும். தாம்பத்தியத்திற்குத் தடை அது போல் முஹர்ரம் 10 நாட்களும் கணவன், மனைவி தாம்பத்தியத்தில் ஈடுபடக் கூடாது என்று தடையையும் ஏற்படுத்தி வைத்துள்ளார்கள். இந்தத் தடை இதற்கு மட்டுமல்ல! முக்கியமான மூன்று மவ்லிதுகளான சுப்ஹான மவ்லிது, முஹய்யித்தீன் மவ்லிது, ஷாகுல் ஹமீது மவ்லிது போன்ற மவ்லிதுகள் ஓதும் நாட்களிலும் இந்தத் தடை அமுலில் இருக்கும். இந்தத் தடைகளை மீறி யாரேனும் மீன் சாப்பிட்டு விட்டால் அல்லது தாம்பத்தியத்தில் ஈடுபட்டு விட்டால் அதற்குப் பரிகாரமாக பஞ்சா எடுக்கும் பக்கீர்களுக்கு ஆடு, கோழி போன்றவற்றை காணிக்கை செலுத்த வேண்டும். எவ்வளவு திமிர் இருந்தால் இந்தத் தடைச் சட்டத்தை முஸ்லிம்கள் மீது திணித்திருப்பார்கள் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். பத்தாம் பஞ்சா முஹர்ரம் பத்தாம் நாளை அரசாங்கம் முஹர்ரம் பண்டிகை என்று அறிவித்து அரசு விடுமுறையாக அறிவித்துள்ளது. வரலாற்றுப் பிரசித்தி பெற்ற மூஸா (அலை) அவர்களுக்குக் கிடைத்த அந்த வெற்றி நாள் மறக்கடிக்கப்பட்டு, தொலைக் காட்சிகளில் மாரடிக்கும் காட்சிகள் வெளியாகி இஸ்லாத்தின் தூய தோற்றத்தைச் சிதைத்து நாறடித்துக் கொண்டிருக்கின்றது. பத்தாம் நாள் கிளைமாக்ஸ்! நாஸாவிலிருந்து ஏவுகணை கிளம்புவது போன்று பத்தாம் நாள் தான் பஞ்சா என்ற பைத்தியக் காரத்தனத்தின் சின்னம் கிளம்பும் "கவுண்ட் டவுன்' நாள்! மாலையானதும் அதன் மையத்திலிருந்து பக்கீர்கள் தோள் பட்டையில், அல்லது வண்டியில் ஏறியதும் அதன் ஊர்வலம் துவங்கி விடும். பேண்டுக்கு மேல் ஜட்டி பஞ்சாவுக்கு முன்னால் சிலம்பாட்டப் படைகள் சிலம்பாட்டம் ஆடும். இவர்கள் வித்தியாசமாக பேண்டுக்கு மேல் ஜட்டி அணிந்து கொண்டு, பெண்கள் அணியும் நகைகளை அணிந்து கொண்டு சிலம்பாட்டம் ஆடுவார்கள். இந்த சிலம்புச் செல்வர்கள் பஞ்சாவின் முன்னால் வருவதற்கு முன், மேள தாளத்துடன் தெருத் தெருவாக சென்று தங்கள் வீரத்தை அரங்கேற்றுவர். அதன் பின் பஞ்சாவுக்கு முன்னர் வந்து ஆட்டம் போடுவர். தீப்பந்தம் சுழற்றுதல், பட்டை சுழற்றுதல், வாயில் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு எரியும் தீக்குச்சியில் ஊதி தீப்பந்து உருவாக்குதல் போன்ற சாகசங்களைச் செய்து மக்களை பரவசத்தில் ஆழ்த்துவார்கள். புலி வேஷம் போடுதல் இந்தப் பஞ்சாவில் நேர்ச்சை செய்த சிலர் உடல் முழுவதும் சந்தனம் பூசிக் கொண்டு, கோயிலில் சாமி வந்தவர்கள் போல் சுற்றிக் கொண்டிருப்பர். சிலர் புலி வேஷம் போட்டு வந்து மக்களைப் புல்லரிக்கச் செய்வர். ஹுசைன் (ரலி) யின் போர்க்கள நினைவாக தங்களுடன் வாள்கள், ஈட்டிகள் போன்றவற்றை எடுத்துச் செல்கின்றனர். பக்கீர்கள் ஒரு விதப் பொடியைத் தூவி பக்தர்களை மகிழ்ச்சியூட்டுவர். உப்பு மிளகு போடுதல் புரதச் சத்து குறைவாக இருந்தால் உடலில் உண்ணிகள் தோன்றி துருத்திக் கொண்டிருக்கும். இதற்கு வைத்தியம் எல்லாம் பார்க்கத் தேவையில்லை. இந்த உண்ணி போக வேண்டும் என்று நேர்ந்து கொண்டு, பஞ்சா அலுவலகத்தில் கொண்டு போய், உப்பையும் மிளகையும் படைத்து விட்டு வந்தால் போதும். மின்னிக் கொண்டிருக்கும் உடல் உண்ணிகள் பறந்து போய் விடும். அப்படி ஒரு நம்பிக்கை! குழந்தைகள் வேண்டி கொழுக்கட்டை லிங்கம் ஆண் குழந்தை வேண்டுமா? ஆணுறுப்பு வடிவத்தில் கொழுக்கட்டை செய்து பத்தாம் நாளன்று இந்த ஊர்வலத்தில் கலந்து கொள்ளும் மக்களிடம் விநியோகித்தால் போதும். ஆண் குழந்தை பிறந்து விடும். (பெண் குழந்தைகளை யாரும் வேண்டுவ தில்லை) யார் இந்த மாவு லிங்கத்தைப் பெறுகின்றாரோ அவர் பாக்கியம் பெற்றவராவார். இது தவிர ஹஸன், ஹுசைனின் வாள், வேல் போன்ற வடிவத்திலும் கொழுக்கட்டைகள் செய்து வீசப்படும். தீமிதியும், தீக்குளிப்பும் தனக்கு நல்ல கணவன் அமைந்தால் முஹர்ரம் பத்தாம் நாள் வந்து தீக்குளிப்பதாக பருவ வயதுப் பெண் நேர்ச்சை செய்வாள். நல்ல மாப்பிள்ளை வாய்த்த பின்னர் அந்தப் பெண்ணும், அவளது தாயாரும் பஞ்சாவுக்கு வந்து தங்களது தலைகளில் நெருப்பை அள்ளிக் கொட்டி நேர்ச்சைகளை நிறைவேற்றிக் கொள்வார்கள். கோயில் திருவிழாக்களில் தீமிதி நடப்பது போன்று தங்கள் பாவங்கள் தீர, நாட்டம் நிறைவேற தீமிதியும் நடத்துகின்றனர். ஹஸன் (ரலி) அருந்திய நஞ்சு பானம் ஹஸன் (ரலி) அவர்கள் நஞ்சுண்டதன் நினைவாக மக்களும் புளி கலந்த ஒரு பானகரம் என்ற பெயரில் அருந்திக் கொள்கின்றனர். உண்மையில் இவர்களின் நம்பிக்கைப் படி ஹஸன் (ரலி) மீது அவர்களுக்குப் பற்று இருக்குமானால் இவர்கள் நஞ்சை அருந்த வேண்டும். அவ்வாறு நஞ்சை அருந்தினால் இது போன்ற பஞ்சாக்கள் எல்லாம் பஞ்சாகப் பறந்து போகும். காதலர் தினம் இந்தப் பஞ்சாவில் நடைபெறும் ஆனந்தக் கூத்துக்களைக் கண்டு களிக்க காளையரும், கன்னியரும் ஜனத் திரளில் சங்கமித்துக் கொள்வார்கள். ஹுசைன் (ரலி) உயிர் நீத்த அந்த நாளைக் காளையர்கள், கன்னியர்களைப் பார்த்துப் பார்த்து ஹுசைன் (ரலி) யை நினைத்து உருகுவார்கள். பதிலுக்குக் கன்னியரும் திரும்பப் பார்த்து ஹுசைன் (ரலி)யை நினைவு கூர்வார்கள். இவ்வாறாக வீரர் ஹுசைன் (ரலி)யின் நினைவாக இஸ்லாமிய இளைஞர்கள் தங்கள் சமுதாய வீர உணர்வுகளை ஈரப்படுத்திக் கொள்கின்றனர். மாரடித்தல் ஒரு கூட்டம் இப்படி கொட்டு மேள, தாளத்துடன் ஹுசைன் (ரலி)யின் நினைவைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில் இன்னொரு கூட்டம் தங்கள் மார்களில் அடித்துக் கொண்டு ஹுசைன் (ரலி)யை நினைவு கூர்ந்து கொள்கின்றனர். அவர்கள் மாரடித்து அழுது புலம்பி கர்பலா நாளுக்கு உயிர் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். வெள்ளத்தில் மிதந்து வரும் விநாயகர் போல்.. விநாயகர் சதுர்த்தியன்று சிலையைத் தூக்கி வருவது போன்று பக்கீர்கள் தங்கள் தோள் புஜங்களில் இந்தப் பஞ்சாவைத் தூக்கி வருவர். அது வீதியில் உலா வரும் போது அங்குலம் அங்குலமாக நகர்ந்து கொண்டிருக்கும். மாலை மறைந்து இரவு வேளை ஆரம்பிக்கும். வெள்ளிக் கைச் சின்னத்தைத் தாங்கிப் பிடித்திருக்கும் மஞ்சள் ஜரிகையில் பெட்ரோமாக்ஸ் விளக்கின் மஞ்சள் ஒளி பட்டவுடன் அது ஒரு தங்க ஆறு ஓடுவது போன்று காட்சியளிக்கும். இத்தகைய ஒளி வெள்ளத்திலும் அதனைச் சுற்றி மேக மூட்டத்தைப் போன்று மண்டிக் கிளம்பி மணம் பரப்பும் சாம்பிராணி புகை ஓட்டத்திலும் பக்தர்கள் தங்கள் மனதைப் பறி கொடுத்துக் கொண்டிருப்பார்கள். பச்சைத் தலைப்பாகையுடன் பக்கீர்கள் மயில் இறகைக் கொண்டு ஆண், பெண் பேதமில்லாமல் தடவி வருடி விடுவார்கள். இதில் பக்தர்களின் மலைகள் போன்ற பாவங்கள் மழையாகக் கரைந்து போய் விடுமாம். தாய்மார்கள் மனமுருக நின்று அதைப் பார்த்து பிரார்த்தனை புரிந்து கொண்டிருப்பார்கள். இவ்வாறாக இறுதியில் அதை ஆற்றில் கொண்டு போய் கரைத்து விட்டு வருவார்கள். அவ்வாறு கரைத்து விட்டு வரும் போது அந்தப் பஞ்சாவை வெள்ளைத் துணியால் மூடி விட்டு, ஒப்பாரி வைத்து ஓலமிட்டவாறே கலைந்த அந்தப் பஞ்சாவுடன் வீடு திரும்புவார்கள். இதன் பிறகு அது வரை தடுக்கப்பட்ட காரியங்கள் அனைத்தும் இவர்களுக்கு ஹலாலாகி விடுகின்றன. இது வரை நாம் கண்டது பஞ்சா பற்றி ஒரு நேர்முகத் தொகுப்பு என்று கூட கூறலாம். இதில் நீங்கள் கண்ட காட்சிகளைக் கீழ்க்கண்ட பாவங்களாகப் பிரித்துக் கூறலாம். 1. அல்லாஹ்வுக்கு இணை வைத்தல் 2. அல்லாஹ்வின் அதிகாரத்தைக் கையில் எடுத்தல் 3. மாற்று மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றுதல் 4. புதுப்புது வணக்கங்களை மார்க்கத்தில் புகுத்தும் பித்அத் நபி (ஸல்), அலீ, பாத்திமா, ஹஸன், ஹுசைன் (ரலி) ஆகியோரின் நினைவாக ஐந்து விரல்களை உருவாக்கி அவற்றுக்கு தெய்வீக அந்தஸ்து வழங்குவது, இறந்த பிறகும் அவர்களுக்கு ஆற்றல் இருக்கின்றது என்று நம்புவது கடைந்தெடுத்த ஷிர்க் ஆகும். குதிரையின் குளம்புகளிலும், குதிரையின் மீதிருக்கும் இளைஞனின் கால்களிலும் அருள் கொப்பளிக்கின்றது என்று நினைத்து அவர்களின் கால்களில் தண்ணீரைக் கொட்டுவதும் கொடிய இணை வைத்தலாகும். இறந்து விட்ட அந்த ஐவரிடமிருந்தும் இவருக்கு ஆற்றல் கிடைக்கின்றது என்று நம்புவது தான் இந்தச் செயல்களுக்கு அடிப்படை! அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்! "அவர்களுக்கு நடக்கிற கால்கள் உள்ளனவா? அல்லது பிடிக்கிற கைகள் உள்ளனவா? அல்லது பார்க்கிற கண்கள் உள்ளனவா? அல்லது கேட்கிற காதுகள் உள்ளனவா? உங்கள் தெய்வங்களை அழைத்து எனக்கு எதிராக சூழ்ச்சி செய்யுங்கள்! எனக்கு எந்த அவகாசமும் தராதீர்கள்!'' என்று கூறுவீராக! அல்குர்ஆன் 7:194,195 அவர்கள் இறந்தவர்கள்; உயிருடன் இருப்போர் அல்லர். எப்போது உயிர்ப்பிக்கப்படுவார்கள் என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள். அல்குர்ஆன் 16:21 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உட்பட இறந்து விட்ட யாராக இருந்தாலும் அவர்கள் பார்க்கவோ, செவியுறவோ மாட்டார்கள் என்பதை இந்த வசனங்கள் தெளிவாகத் தெரிவிக்கின்றன. குழந்தை பாக்கியம் வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைக்கிறான். தான் நாடியோருக்குப் பெண் (குழந்தை)களை வழங்குகிறான். தான் நாடியோருக்கு ஆண் (குழந்தை)களை வழங்குகிறான். அல்லது ஆண் களையும், பெண்களையும் சேர்த்து அவர்களுக்கு வழங்குகிறான். தான் நாடியோரை மலடாக ஆக்குகிறான். அவன் அறிந்தவன்; ஆற்றல் உடையவன். அல்குர்ஆன் 42:49,50 குழந்தை பாக்கியம் என்பது அல்லாஹ்வின் தனிப்பட்ட அதிகாரத்தில் உள்ளது என்பதை இந்த வசனங்கள் உணர்த்துகின்றன. அதை அடியார்களிடம் கேட்பது பைத்தியக் காரத்தனமும் பகிரங்க இணை வைப்பும் ஆகும். படைத்தல் என்ற இந்தப் பேராற்றல் வல்ல நாயனின் ஆட்சிக்குரிய தனி வலிமை! அந்த வலிமையை உணர்த்தி வார்க்கப்பட்ட சமுதாயதம் தான் இஸ்லாமியச் சமுதாயம்! அப்படிப்பட்ட இஸ்லாமிய சமுதாயம் குதிரையின் குளம்படியில் வந்து கும்பிட்டுக் குப்புற வீழ்ந்து கிடப்பது வேதனையிலும் வேதனை. குழந்தை பாக்கியத்தை நாடி லிங்கத்தின் வடிவில் கொழுக்கட்டை செய்து கூட்டத்தில் விநியோகிப்பது இணை வைத்தல் மட்டுமில்லாமல் கேலிக் கூத்துமாகும். நேர்ச்சை ஒரு வணக்கமே! அனு தினமும் தொழுகையின் போது, அல்ஃபாத்திஹா அத்தியாத்தில், உன்னையே நாங்கள் வணங்கு கின்றோம். உன்னிடமே உதவி தேடுகின்றோம் என்று தொழுபவர்கள் அல்லாஹ்விடம் உறுதி மொழி கொடுக்கின்றார்கள். இதில் இடம்பெறும் வணக்கம் என்ற வார்த்தையில் நேர்ச்சை செய்தலும் அடங்கும். பின்னர் அவர்கள் தம்மிடம் உள்ள அழுக்குகளை நீக்கட்டும்! தமது நேர்ச்சைகளை நிறைவேற்றட்டும்! அல்குர்ஆன் 22:29 இந்த வசனத்தின் படி நேர்ச்சையை அல்லாஹ்வுக்கு மட்டும் நிறைவேற்ற வேண்டும் என்றிருக்க இறந்து விட்ட அடியார்களுக்காக நேர்ச்சை செய்யும் அநியாயமும் அலங்கோலமும் இங்கே நடந்தேறுகின்றது. அதுவும் தீக்கங்குகளைத் தலையில் போட்டுக் கொண்டு இந்தத் தீ(ய) நேர்ச்சையெல்லாம் உடலுக்கு ஊறு விளைவிக்கின்ற, உயிருக்கு உலை வைக்கின்ற நேர்ச்சைகள். இவை இஸ்லாத்தில் தடுக்கப்பட்டவையாகும். அல்லாஹ்வின் பாதையில் செலவிடுங்கள்! உங்கள் கைகளால் நாசத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள்! நன்மை செய்யுங்கள்! நன்மை செய்வோரை அல்லாஹ் விரும்புகிறான். அல்குர்ஆன் 2:195 ஒருவன் தன் கையாலேயே தனக்கு நாசத்தை ஏற்படுத்திக் கொள்ள அல்லாஹ் தடை விதிக்கின்றான். ஒரு முதியவர் தம் இரண்டு புதல்வர்களிடையே தொங்கிய படி கால்கள் பூமியில் இழுபட வந்து கொண்டிருந்தார். அதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், "இவருக்கு என்ன நேர்ந்தது?'' என்று கேட்டார்கள். "(கஅபாவுக்கு) நடந்து செல்வதாக இவர் நேர்ச்சை செய்திருக்கின்றார்'' என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், "இவர் இவ்விதம் வேதனைப் படுத்திக் கொள்வது அல்லாஹ்வுக்குத் தேவையற்றது'' என்று கூறிவிட்டு, அவரை வாகனத்தில் ஏறிச் செல்லுமாறு உத்தரவிட்டார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: புகாரி 1865 அல்லாஹ்வுக்காக நேர்ச்சை செய்தால் கூட, இது போன்று தம்மை வருத்திக் கொள்ளும் நேர்ச்சைகளைச் செய்யக் கூடாது எனும் போது அதை மற்றவர்களுக்காகச் செய்வது எவ்வளவு பெரிய குற்றம் என்பதை விளங்கலாம். அப்படியே பாவமான காரியத்தில் நேர்ச்சை செய்தாலும் அதை நிறைவேற்றக் கூடாது என்ற சட்டமும் இந்த மக்களுக்குத் தெரியவில்லை. அல்லாஹ்வுக்கு வழிபடுவதாக ஒருவர் நேர்ந்து கொண்டால் அவனுக்கு வழிபடட்டும். அல்லாஹ்வுக்கு மாறு செய்வதாக நேர்ச்சை செய்தால் (அதை நிறைவேற்றி) அவனுக்கு மாறு செய்ய வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 6696 இது வரை பஞ்சாவின் மூலம் இறைவனுக்கு இணை வைக்கும் மாபாதகம் நடப்பதைப் பற்றி பார்த்தோம். தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ் வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார். அல்குர்ஆன் 4:48 தனக்கு இணை கற்பிக்கப் படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். இதற்குக் கீழ் நிலையில் உள்ளதை, தான் நாடியோருக்கு அவன் மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் (உண்மையை விட்டும்) தூரமான வழி கேட்டில் விழுந்து விட்டார். அல்குர்ஆன் 4:116 இந்த வசனங்களின் அடிப் படையில் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பது அவனால் மன்னிக்கப்படாத பாவமாகும். சுவனத்திற்குச் செல்வதைத் தடுத்து நரகத்தில் நுழைத்து விடும் பாவமாகும். அல்லாஹ்வின் அதிகாரத்தில் தலையிடுதல் பஞ்சாவில் ஏற்படும் அடுத்த பாவம் அல்லாஹ்வின் அதிகாரத்தில் தலையிடுவதாகும். மார்க்கத்தில் சட்டம் இயற்றல் என்பது அவனுடைய தனிப்பட்ட அதிகாரத்தில் உள்ளதாகும். அதை ஷியாக்களின் வாரிசுகளான இந்தப் பக்கீர் சாஹிபுகள் தங்கள் கைகளில் எடுத்துக் கொள்கின்றனர். நாம் தொழுகையில் தக்பீர் கட்டியவுடன் உண்ணுதல், பருகுதல், பேசுதல் போன்ற அனுமதிக்கப்பட்ட காரியங்களை அல்லாஹ் தடுத்து விடுகின்றான். தொழுகையில் முதல் தக்பீரின் போது இந்தத் தடை அமுலுக்கு வந்து விடுவதால் இது தக்பீர் தஹ்ரீமா எனப்படுகின்றது. அது போல் ஹஜ்ஜுக்குச் செல்லும் போது இஹ்ராமை மனதில் எண்ணி அதற்குரிய ஆடை அணிந்து விட்டால் அது வரை நமக்கு ஹலாலாக இருந்த தாம்பத்தியம், வேட்டையாடுதல், திருமணம் போன்ற காரியங்கள் ஹராமாகி விடுகின்றன. இது போன்று சில குறிப்பிட்ட வணக்ககங்களில் அல்லாஹ் நமக்குச் சில தடைகளை விதித்துள்ளான். இந்த அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டும் சொந்தமான தனி அதிகாரமாகும். ஹஜ்ஜின் போது இந்தத் தடையை மீறி விட்டால் நாம் ஓர் ஆடு அறுத்துப் பலி கொடுத்து பரிகாரம் தேட வேண்டும். இதுவும் அல்லாஹ்வின் அதிகாரத்தில் உள்ளது தான். இப்படி குறிப்பிட்ட வணக்கங்களின் போதும், பொதுவாகவும் ஹராமாக்கும் அதிகாரம் அல்லாஹ்வுக்கே சொந்தமானது. பாருங்கள்! இந்த அதிகாரத்தை, பஞ்சா எடுக்கும் பக்கீர் பண்டாரங்கள் தங்கள் கையில் எடுத்துக் கொண்டு முஹர்ரம் பத்து நாட்களிலும் மீன் சாப்பிடக் கூடாது என்று தடை! தாம்பத்தியத்திற்குத் தடை! இந்தத் தடைகளை மீறி விட்டால் அதற்கு ஆடு, கோழி போன்றவற்றைப் பலி கொடுத்து பரிகாரம் தேட வேண்டும் என்று வைத்துள்ளார்கள். இவர்களுக்கு எவ்வளவு துணிச்சலும் நெஞ்சழுத்தமும் இருந்தால், திமிர் இருந்தால் அல்லாஹ்வின் இந்த அதிகாரத்தைத் தங்கள் கையில் எடுப்பார்கள்? அல்லாஹ் அனுமதியளிக்காததை மார்க்கமாக ஆக்கும் தெய்வங்கள் அவர்களுக்கு உள்ளனரா? தீர்ப்பு பற்றிய கட்டளை இல்லாதிருந்தால் அவர்களுக்கிடையே முடிவு செய்யப்பட்டிருக்கும். அநீதி இழைத்தோருக்குத் துன்புறுத்தும் வேதனை இருக்கிறது. அல்குர்ஆன் 42:21 இவர்களோ அல்லாஹ்வின் இந்தக் கேள்விக்கு, நாங்கள் இருக்கின்றோம் என்று பதில் கூறுவது போல் செயல்படுகின்றார்கள். நபியே! (முஹம்மதே!) உமக்கு அல்லாஹ் அனுமதித்ததை உமது மனைவியரின் திருப்தியை நாடி ஏன் விலக்கிக் கொள்கிறீர்? அல்குர்ஆன் 66:1 என்று நபி (ஸல்) அவர்களை நோக்கி அல்லாஹ் கேட்கின்றான். ஆனால் இவர்களோ அல்லாஹ் அனுமதியளித்ததை தங்கள் இஷ்டத்திற்கு ஹராமாக்கிக் கொண்டு இருக்கின்றார்கள். இது அனுமதிக்கப்பட்டது; இது விலக்கப்பட்டது என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக் கட்டிக் கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டியோர் வெற்றி பெற மாட்டார்கள். அல்குர்ஆன் 16:116 நிச்சயமாக இதையெல்லாம் மார்க்கம் என்ற பெயரில் இட்டுக் கட்டியதால் அல்லாஹ்வின் மீதே பொய்யை இட்டுக் கட்டிய மாபெரும் துரோகத்தைச் செய்தவர்களாகின்றனர். அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டுவதை அல்லாஹ் மிக வன்மையாகக் கண்டிக்கின்றான். அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டுபவனை விட அல்லது அவனது வசனங்களைப் பொய்யெனக் கருதுபவனை விட அநீதி இழைத்தவன் யார்? அநீதி இழைத்தோர் வெற்றி பெற மாட்டார்கள். அல்குர்ஆன் 6:21 அறிவின்றி மக்களை வழி கெடுப்பதற்காக அல்லாஹ்வின் பெயரால் பொய்யை இட்டுக் கட்டுவோரை விட மிகப் பெரிய அநீதி இழைத்தோர் யார்? அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான். அல்குர்ஆன் 6:144 மாற்று மதக் கலாச்சாரம் பஞ்சா எனும் சப்பரத்தை உருவாக்குதல், லிங்க வடிவில் கொழுக்கட்டை செய்தல், மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் அனுஷ்டித்தல், நினைவு நாள் கொண்டாடுதல் போன்றவை மாற்றுமதக் கலாச்சாரங்களில் உள்ளவையாகும். ஆண் குழந்தை வேண்டுமென்று ஆணுறுப்பு வடிவத்தில் கொழுக்கட்டை செய்து விளம்புவது ஆபாசம் இல்லையா? என்று கேட்டால், இது எங்கள் பாட்டன், பூட்டன் காலத்திலிருந்தே நடைமுறையில் உள்ளது என்று கூறுகின்றார்கள். இதை அப்படியே அல்லாஹ் தனது திருமறையில் படம் பிடித்துக் காட்டுகின்றான். அவர்கள் வெட்கக்கேடான காரியத்தைச் செய்யும் போது "எங்கள் முன்னோர்களை இப்படித் தான் கண்டோம். அல்லாஹ்வே இதை எங்களுக்குக் கட்டளை யிட்டான்'' என்று கூறுகின்றனர். "அல்லாஹ் வெட்கக் கேடானதை ஏவ மாட்டான். நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறுகிறீர்களா?'' என்று (முஹம்மதே!) கேட்பீராக! அல்குர்ஆன் 7: 27 லிங்கத்தை உருவாக்கி அதற்கு வழிபாடு நடத்துவது, அதைப் புனிதமாகக் கருதுவதெல்லாம் அவர்களது கலாச்சாரமாகும். இந்தக் கலாச்சாரத்தை அப்படியே இவர்கள் இந்தப் பஞ்சாவில் செயல்படுத்தித் தங்களின் வந்தவழி பாரம்பரியத்தை நினைவுபடுத்திக் கொண்டிருக்கின்றனர். இதற்கு நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் நடந்த சம்பவம் நமக்குச் சரியான பாடத்தைப் புகட்டி, மாற்றுக் கலாச்சாரத்தை நம்மவர்கள் காப்பியடிப்பதை வன்மையாகக் கண்டிக்கிறது. நாங்கள் புதிதாக இஸ்லாத்திற்கு வந்தவர்களாக இருக்க நபி (ஸல்) அவர்களுடன் ஹுனைன் யுத்தத்திற்குச் சென்றோம். அங்கு இணைவைப்பவர்களுக்கென்று ஒரு இலந்தை மரம் இருந்தது. அங்கு அவர்கள் (பரகத்தை) நாடி தங்களின் போர்க்கருவிகளைத் தொங்கவிட்டு அங்கு தங்கி (இஃதிகாஃப்) இருப்பார்கள். "தாத்து அன்வாத்' என்று அதற்குச் சொல்லப்படும். நாங்கள் அந்த மரத்தின் �