Thursday, July 26, 2012

கடை வீதிகளில் கழியும் கண்ணியமிகு ரமளான்..!



கடை வீதிகளில் கழியும் கண்ணியமிகு ரமளான்..!

 
ஒன்றுக்கு அடுத்தது இரண்டு. இரண்டுக்கு அடுத்தது மூன்று. இது யாருக்குத்தான் தெரியாது.

இது எல்லோருக்கும் தெரியும் என்றால், ரஜப் அடுத்தது ஷஅபான், அடுத்தது ரமளான். இதுவும் எல்லோருக்கும் தெரிந்திருக்க வேண்டியதுதானே. இங்கே மட்டும் தெரியாதது போல ஏன் நடந்து கொள்கிறீர்கள். புரியவில்லையே?

நம்மில் பலர் ஏதோ ரமளான் திடீர் என முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல் வந்து விட்டது போல, ரமளானில் நோன்பிருந்து, இபாதத் செய்து, குர்ஆன் ஓத வேண்டிய நேரத்தில் கடை வீதிகளில் அலைந்து கொண்டிருக்கிறார்களே, அது ஏன்? ஈகைப் பெருநாளைக்கு ரமளான் மாதத்தில்தான் கடைக்குச் சென்று துணிமணிகள் வாங்க வேண்டுமா? பெருநாளைக்குக் குறைந்த பட்சம் ஒரு மாதம் முன்பாகவே துணிமணிகள் வாங்கி விடலாமே. கடைசி நேரத்தில் தான் மக்களைக் கவர பெருநாள் ஸ்பெஷல்னு புதுவகைகள் வரும் என்று சொல்லுகிறார்கள். புதுவகை துணிகள் போடுவதால் அதிக நன்மைகள் கிடைக்குமா?
புனித ரமளானில் தொழுது, ஓதி, துஆ கேட்பதால் அதிக நன்மைகள் கிடைக்குமா? யோசியுங்கள்!

காலை 10 - 12க்கு மின்தடை. 9.50க்குள் மிக்ஸியில் அரைக்க வேண்டிய எல்லாவற்றையும் அரைத்து ரெடி பண்ணிக் கொள்ள தவறுகிறோமா? இல்லையே! இங்கே மட்டும் நம் தேவையை முன்கூட்டியே செய்துகொள்ளும் நாம் ரமளானின் சிறப்புகள் தெரிந்தும், ரமளானுக்குரிய தேவைகளை முன்கூட்டியே செய்து கொள்வதில்லையே, அது ஏன்?


ரமளான் கண்ணியத்துக்குரிய மகத்தான மாதம். அருள்வளங்கள் பொழியும் மாதம். ரமளானில் செய்யப்படும் ஒரு நற்செயல், ரமளான் அல்லாத பிற மாதங்களில் நிறைவேற்றப்படும் ஒரு பர்ளுக்கு (கட்டாய வழிபாட்டிற்கு) சமமாகிறது. ரமளானில் செய்யப்படும் ஒரு பர்ளு, ஏனைய மாதங்களில் செய்யப்படும் எழுபது பர்ளுக்கு சமமாகிறது.
இது பொறுமையின் மாதம். பொறுமையின் கூலி சொர்க்கம் ஆகும். இந்த மாதத்தில் இறை நம்பிக்கையாளனின் வாழ்வாதாரம் அதிகரிக்கப்படுகிறது. இந்த மாதத்தில் நாம் செய்ய வேண்டிய சில முக்கியமான விஷயங்கள் :

1. ‘லாஇலாஹா இல்லல்லாஹ்’ என்ற திருக்கலிமாவை அதிகமதிகம் ஓதுவது.
2. குர்ஆனுடன் அதிக தொடர்பு.
3. அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கேட்பது.
4. அல்லாஹ்விடம் சொர்க்கம் தரும்படி கேட்பது.
5. நரக நெருப்பிலிருந்து பாதுகாப்பு வேண்டுவது.

“நற்செயல்கள் அனைத்திற்கும் வானவர்களின் மூலம் பிரதிபலனை வழங்குகிறேன். ஆனால் நோன்பு எனக்காகவே நோற்கப்படுவதால் அதன் கூலியை நானே வழங்குகிறேன்” என்கிறான் அல்லாஹ்.
அல்லாஹ்வே நேரிடையாகத் தரும் கூலியைப் பெற நாம் ஆயத்தமாக வேண்டாமா? சொர்க்கம் அலங்கரிக்கப்படுவதும் இந்த மாதத்தில்தான். ஷைத்தான்கள் விலங்கிடப்படுவதும் இந்த மாதத்தில்தான்.

ரமளானில் ஆயிரம் மாதங்களை விட சிறந்த ஓர் இரவு அதிகமான நன்மைகளும் அருள்வளங்களும் பொருந்திய இரவு - அதுதான் லைலத்துல் கத்ர் இரவு இருக்கிறது. ரமளானில் சில முஸ்லிம்கள் பின்பற்றும் மிகவும் அசிங்கமான, அருவருக்கத்தக்க ஒரு விஷயம் என்னவென்றால் -

நோன்பாளி நோன்பு துறக்கும் நேரத்திற்கு முன்பாக அல்லாஹ்விடம் கையேந்தி விசேஷமாக துஆ கேட்பதிலும், பாவமன்னிப்பு கேட்பதிலும் ஈடுபட வேண்டும். அந்த நேரத்தில் கேட்கப்படும் இறைஞ்சுதல்கள் அனைத்தையும் அல்லாஹ் நிறைவேற்றித் தருகிறான். அத்தகைய அருமையான நேரத்தில் இஸ்லாமியப் பெண்மணிகள் ஜவுளிக் கடைகளுக்குச் செல்லுகிறார்கள்; கடைக்காரர்கள் தருவதைக் கொண்டு இஃப்தார் முடித்துக் கொண்டு ஜவுளியும் வாங்கி வந்து விடலாம் என்ற திருப்தியுடன். இஃப்தாருக்காக வாடிக்கையாளர்களைக் கவருவதற்குக் கடைக்குக் கடை போட்டி போட்டுக் கொண்டு அதிகமான தின்பண்டங்களும் குளிர் பானங்களும் தரப்படுவதால், இதனால் கவரப்பட்டு பெண்கள் நோன்பு துறக்கும் அந்த மக்ரிப் நேரத்தில் கடைக்குப் போவதை வாடிக்கையாகக் கொள்கிறார்கள். கடைக்காரர்கள் தொழவும் இடவசதி செய்து தருகிறார்கள்.

அதிலும் சிலர் நேற்று அந்தக் கடையில் இஃப்தாருக்கு இதெல்லாம் தந்தான், நீ போன கடையில் என்ன தந்தான் என்று கேட்டு அதிகமாக தரும் கடைகளுக்குச் சென்று ஜாலியாக நோன்பைத் திறந்துவிட்டு வருவதும் உண்டு. இதில் இன்னுமொரு கொடுமையும் நடக்கிறது. நோன்பு இல்லாத முஸ்லிம்களும் குழந்தைகளை அழைத்துக் கொண்டு போய் இஃப்தார் நேரத்தில் சும்மாவேனும் சாப்பிட்டு விட்டு வருவதும் உண்டு. இவர்கள் செய்யும் இந்த அற்ப காரியங்களால் எவ்வளவு பெரிய பாவமூட்டையை மறுமையில் சுமக்கத் தயார் ஆகிறார்கள் என்பதை அவர்களே உணர்வதில்லை. இது போன்ற காரியங்களில் ஈடுபட்டு நம் நன்மைகளைக் குறைத்துக் கொள்ளாமல், வரவிருக்கும் ரமளானை எதிர்நோக்கி, உள்ளச்சத்தோடு உண்மையானவர்களாக, நோன்பை நோற்று, ஏனைய வணக்க வழிபாடுகளிலும் ஈடுபட்டு இறைவனின் அருளை, அவன் வாரி வழங்க உள்ள நன்மைகளை முழுமையாகப் பெறுவோம் என்ற சங்கல்பத்துடன் ரமளானை வரவேற்கத் தயாராவோம்.

நோன்பு ஒரு கேடயம்

நோன்பு (பாவங்களிலிருந்து காக்கின்ற) கேடயம் ஆகும். எனவே நோன்பாளி கெட்ட பேச்சுகளைப் பேச வேண்டாம். முட்டாள் தனமான செயல்களில் ஈடுபட வேண்டாம். யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால் “நான் நோன்பாளி” என்று இரு முறை கூறட்டும். என் உயிர் எவன் கைவசம் இருக்கின்றதோ அ(ந்த இறை)வன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை, அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விட சிறந்ததாகும்.
(அபூஹுரைரா (ரலி), புகாரி)

நோன்பாளிகளின் சிறப்பு

சொர்க்கத்தில் ‘ரய்யான்’ என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது. மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்.
(ஸஹ்ல் (ரலி) புகாரி)

சுவர்க்கம் திறக்கப்பட்டு, நரகம் மூடப்படுகிறது ரமளான் வந்து விட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன. நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்.
(அபூஹுரைரா (ரலி), புகாரி)

நோன்பாளியின் மகிழ்ச்சி
நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்பு துறக்கும் போது அவன் மகிழ்ச்சியடைகிறான். தன் இறைவனைச் சந்திக்கும் போது அவன் மகிழ்ச்சி அடைகிறான்.
(அபூஹுரைரா (ரலி), புகாரி)

ஹாஜியா S.சான் பேகம் - நன்றி; சமரசம் 

பிள்ளைகளிடம் தாய் எப்படி நடந்து கொள்ளவேண்டும் !!!


பிள்ளைகளிடம் தாய் எப்படி நடந்து கொள்ளவேண்டும் !!!
 
உலகிலேயே தனது அம்மாவைப் போல சிறந்தவர் இருக்க முடியாதுசிறந்த அறிவாளி யாரும் இருக்க முடியாது என்றுதான் ஒவ்வொருகுழந்தையும் நினைக்கும்தனது குழந்தையிடம் அதிக நெருக்கமாகவும்பாசமாகவும் இருக்க வேண்டும் என்றுதான் ஒவ்வொருஅம்மாவும் விரும்புவார்குழந்தைக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்க வேண்டிய தாய்அந்தக் குழந்தையுடன் நெருக்கமாக இருக்கவேண்டியது அவசியமாகிறதுஎனவேதனது குழந்தையிடம் நெருக்கமாக இருக்க பல்வேறு வல்லுநர்களும்புத்தக ஆசிரியர்களும்வழிகளை பட்டியலிட்டு உள்ளனர்.
 
குழந்தைதங்களிடம் நெருக்கமாக இருக்க வேண்டும் என்பதற்காகபெரும்பாலான பெற்றோர்அவர்களைக் கட்டுப்படுத்தத்தவறிவிடுகின்றனர்இதுகுழந்தையின் வாழ்க்கையில் மற்றவர்கள் தலையிட வழி ஏற்படுத்திவிடும்எனவேகுழந்தைகளுக்குகட்டுப்பாடுகள் அவசியம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
 
குழந்தைகளுடன் மனக்கசப்பு ஏற்பட்டால்அந்த குறிப்பிட்ட விஷயம் குறித்து குழந்தையின் தலையைக் கோதியபடிஇரவு நேரங்களில்படுக்கையில் இருக்கும்போது மெதுவாக அறிவுரை கூறுங்கள்இது உறவை வலுப்படுத்த உதவும்.
 
தனது அம்மாவுக்கு எல்லா விஷயங்களும் தெரிந்திருக்கும் என்று குழந்தைகள் நினைப்பார்கள்., பணிக்குச் செல்லும் தாய்மார்கள்தனதுபணியிடத்தில் நடந்த சுவாரசியமான சம்பவங்களை குழந்தைகளிடம் எடுத்துக் கூறலாம்தன்னார்வலராக இருந்தால்மற்றவர்களுக்குஎவ்வாறு உதவி செய்ய முடியும் என்று விவரிக்கலாம்இது குழந்தைகளிடம் அம்மாவின் மதிப்பை உயர்த்தும்.
 
மாலை நேரங்களில் நண்பர்களுடன் ரிலாக்ஸாக வெளியில் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
 
அன்றாடப் பணிகளில் உங்களுக்கு என்று தனித்துவமிக்க வழிமுறையை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்அதன்படியே செயல்படுங்கள்.எனது முன்னோர் இப்படித்தான் இருந்தார்கள்நானும் அப்படித்தான் இருப்பேன் என்று செயல்படுவதை தவிருங்கள்
 
குழந்தைகள் ஒவ்வொருவரும் தங்களுக்கு உள்ள கிரகிக்கும் திறனைக் கொண்டு கற்றுக் கொள்கின்றனர்அவர்களை இப்படித்தான்கற்றுக் கொள்ள வேண்டும் என்று கட்டாயப் படுத்தாதீர்கள்அவர்களின் நிலையை அறிந்துஅதனை மேம்படுத்த ஆலோசனைகளைமட்டும் வழங்குங்கள்.
 
தோல்விதான் பல விஷயங்களைக் கற்றுத் தருகிறதுகுழந்தைகளின் எல்லா முயற்சிகளையும் ஆதரியுங்கள்சைக்கிளிலிருந்து கீழேவிழுந்தால் பதறாதீர்கள்சைக்கிளை தொடக்கூடாது என்று கண்டிக்காதீர்கள்முயற்சி போதாது என்பதை குழந்தைகளிடம் எடுத்துக்கூறுங்கள்குழந்தைகள் அடுத்தடுத்து வெற்றி பெறும் வாய்ப்பு கிடைக்கும்.
 
குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடுவதை முடிந்தவரை தவிருங்கள்பெற்றோருடன் இணைந்து விளையாடும் குழந்தைகள்,தனியாக விளையாட விருப்பமின்றிஒவ்வொரு முறையும் பெற்றோரையே எதிர்பார்க்கும் நிலை ஏற்படும்எனவேபெரியஅளவிலான விளையாட்டுக்களைத் தவிர்த்து மற்ற விளையாட்டுக்களில் குழந்தைகளை தனியாக விளையாட அனுமதிப்பதுஅவர்களிடையே தன்னம்பிக்கையை வளர்க்க உதவும்.
 
உங்களுக்கு கிடைத்த வேலை சரியாக இல்லைவாழ்க்கை சீராக
 
அமையவில்லைஇப்படியாக புலம்பாதீர்கள்கிடைத்த வேலையை எவ்வளவு சிறப்பாக செய்ய முடியும் என்று பாருங்கள்இதுமுன்னேற்றத்துக்கு வழிவகுக்கும்.
 
குழந்தைகளின் அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்றிவிடக் கூடாதுஅப்போதுதான்ஏமாற்றத்தை ஏற்றுக் கொள்வது எப்படிஎன்பதை குழந்தைகள் கற்றுக் கொள்ளும்நாம் எதிர்பார்க்கும் அனைத்தும் கிடைத்துவிடாது என்பதை அவர்கள் உணர்வதற்குசந்தர்ப்பத்தை உருவாக்குங்கள்குழந்தைகளின் எதிர்காலத்துக்கு இது பயனுள்ளதாக அமையும்.
 
ஒவ்வொரு நாளும் எப்படி இருந்தது என்று குழந்தைகள் சொல்லும்போதுஅதனை பொறுமையாகவும்கவனமாகவும் கேளுங்கள்இதுகுழந்தைகளின் செயல்பாடுகளில் முன்னேற்றம் ஏற்படுத்தும்அவர்கள் சொல்ல வரும் விஷயத்தை கேட்கத் தவறினால்அல்லதுமட்டம் தட்டி மறுதலித்தால் அவர்களுக்கு வருத்தம் ஏற்படும்முன்னேற்றத்துக்கு தடையாக அமையும்.
 
குழந்தைகள் தங்களுடைய வேதனைகள் அனைத்தையும் பெற்றோரிடம் வெளிப்படையாக பேச மாட்டார்கள்அப்படிப் பட்ட நேரத்தில்,குழந்தைகளிடம் உள்ள சோகத்தைப் புரிந்து கொண்டு அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும்அவர்களைக் கட்டாயப்படுத்தாமல்பொறுமையாக பேசி வேதனைக்கான காரணங்களை உணர்ந்து அதைப் போக்க உதவ வேண்டும்.
 
குழந்தைகளைச் சுற்றிலும் அதிக அளவில் உறவினர்கள் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்இது குழந்தைக ளுக்கு ஊக்கம்அளிக்கும்.
 
குழந்தைகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை நீங்கள் தீர்மானிக்காதீர்கள்அவர்களுடைய திறமையையும் விருப்பத் தையும்அறிந்து அதில் முன்னேற்றத்தை ஏற்படுத்த முயற்சியுங்கள்.
 
குழந்தைகளை வளர்க்கும் விதம் பற்றி மற்றவர்கள் குறைகூறக்கூடும்அவர்கள் கூறுவதைக் கேளுங்கள்அவர்களு டைய கூற்றுதவறாக இருந்தால் அதை ஏற்காதீர்கள்அதேசமயம்அவர்கள்மீதுகோபப்படாமல் மென்மையாக பதில் அளியுங்கள்.
 
இன்று நான் நிறைய தவறுகளை செய்துவிட்டேன் என்று குழந்தைகள் கூறக்கூடும்அப்படிப்பட்ட சமயத்தில்நானும் நிறையதவறுகளை செய்திருக்கிறேன் என்று கூறுங்கள்உங்கள் தவறுகளை எப்படி திருத்தினீர்கள் என்று விளக்குங்கள்அவர்களுடையதவறுகளையும் திருத்திக் கொள்ள அறிவுரை வழங்குங்கள்பெரிய மனிதர்களும் தவறு செய்கிறார்கள் என்பதை உணர்ந்துதம்மிடம்உள்ள வேதனைகளை மறந்துவிடுவார்கள்குழந்தையிடம் கோபமாக பேசினால்அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்ளுங்கள்.கோபப்படக் கூடாது என்பதை குழந்தைகள் உணரும் வாய்ப்பை ஏற்படுத்துங்கள்.
 
சில விளையாட்டுக்களில் குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடுங்கள்குழந்தைகளை வெளியே அழைத்துச் சென்றுஅவர்களுடையவிருப்பங்களை நிறைவேற்றுங்கள்உங்களுக்கும்குழந்தைக்கும் உள்ள உறவை இது வலுப்படுத்தும்.
 
தினந்தோறும் காலையில் எழுந்தவுடன்குறைந்தது 5 வேளை கடவுளை வணங்கவேண்டும் மற்றும் 5 பேருக்கு அல்லது செயல்களுக்குநன்றி தெரிவிக்குமாறு குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுங்கள்இந்த முயற்சிகுழந்தைகளிடம் தன்னம்பிக்கையைவளர்க்கும்.எல்லாமே நல்ல வழிகள்தானேஇவற்றை செயல்படுத்திப் பாருங்கள்எனது அம்மா ரொம்ப நல்லவங்க என்று நிஜமாகவேகுழந்தைகள் ஒப்புக்கொள்ளும்உங்கள் கழுத்தைக் கட்டிக் கொண்டு கன்னத்தில் முத்தம் கொடுக்கும்
THANKS  by