Friday, November 9, 2012

தோட்டக்கலை :: நறுமணப் பர்கள் :: புதினா


gg English Version

இரகங்கள்
ஜப்பான் புதினா     -     எம்ஏஸ் 1, எம்ஏ 2, ஹபிரட் 77, சிவாலிக் ஈசி – 41911
ஸ்பியர்                  -     எம்எஸ்எஸ்-1,5, பஞ்சாப் ஸ்பியர் மின்ட் -1
பெர்கோ            -     சிரன்
மிளகு              -     குக்ரைல்
மண் மற்றும்  தட்பவெப்பநிலை
வடிகால் வசதியுடைய இருபொறை மண், காரத்தன்மையுடைய மற்றும் அங்க்கச் சத்த நிறைந்த மண்வகைகள் அனைத்தும் சாகுபடிக்கு உகந்தவை. மிதவெப்ப மண்டலங்களில் சராசரி ஆண்டு மழையளவு 100-150 செ.மீ இருத்தல்வேண்டும். 
விதை மற்றும் விதைப்பு
வேர் விட்ட தண்டுக்குச்சிகள் மூலம் புதினா இனப்பெருக்கம் செய்யப்படுகின்றது.
நிலம் தயாரித்தல்
நிலத்தை உழுது நன்கு பண்படுத்தவேண்டும். பின் எக்டருக்கு 10 டன் மக்கிய தொழு உரம் இட்டு தேவையான அளவில் பாத்திகள் அமைக்கவேண்டும். பின் வேர் விட்ட தண்டுக்குச்சிகளை 40 x 40 செ.மீ இடைவெளியில் ஜ¤ன் - ஜ¤லை மாதங்களில் நடவு செய்யவேண்டும்.
ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை
அடியுரம் : ஒரு எக்டருக்கு 30,60,10 கிலோ தழை, மணி மற்றும்  சாம்பல் சத்து இடவேண்டும்.
மேலுரம் : நடவு  செய்த 60 மற்றும் 120வது நாளில் ஒரு எக்டருக்கு 30 கிலே தழைச்சத்து உரத்தை இரண்டு முறை  பிரித்து இடவேண்டும்.
நீர் நிர்வாகம்
பின்செய்நேர்த்தி
தேவைக்கேற்ப கைக்களை எடுத்து களைகளை கட்டுப்படுத்தவேண்டும்.
ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு
பொதுவாக புதியானவை பெருமளவில் பூச்சி மற்றும் நோய் தாக்குவதில்லை.
அறுவடை
நடவுசெய்த 5வது மாதத்தில் முதல் அறுயடையும் அதன் பினான்ர் மூன்று மாத இடைவெளியிலும் அறுவடை செய்யவேண்டும். நல்ல முறையில் பராமரிப்பு செய்தால் நான்கு ஆண்டுகள் வரை லாபகலமான மகசூல் எடுக்கலாம்.
மகசூல்
இலைப்பாகம் - ஒரு வருடத்திற்கு ஒரு எக்டரிலிருந்து 15 - 20 டன்
எண்ணை - ஒரு வருடத்திற்கு ஒரு எக்டரிலிருந்து 50 - 100 டன்

THANK S BY  http://agritech.tnau.ac.in

No comments:

Post a Comment