Wednesday, May 11, 2011

2011-2012 ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு உதவிபெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிறுவனங்களி


2011-2012 ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு உதவிபெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட சிறுபான்மையின மாணவ மாணவியர்களுக்கான கல்வி உதவியை தமிழ்நாடு அரசு சிறுபான்மையினர் நலத்துறை அறிவித்துள்ளது.

  • 11 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, பாலிடெக்னிக், இளங்கலை, முதுகலை, ஆசிரியர் பயிற்சி, ஆராய்ச்சி படிப்பு ஆகியவற்றை பயிலும் மாணவர்கள் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை பெறத் தகுதி பெறுவார்கள்.
  • 11 ஆம் வகுப்பு 12 ஆம் வகுப்பு மாணவர்கள் 30.06.2011க்குள் கல்வி நிறுவனம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
  • டிப்ளமோ, தொழிற்பயிற்சி கல்வி,இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள், ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி படிப்பு உட்பட பயிலும் மாணவர்கள் கல்வி உதவித் தொகை 15.07.2011க்குள் கல்வி நிறுவனம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
  • பெற்றோர் பாதுகாவலர் ஆண்டு வருமானம் ரூபாய் இரண்டு லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
  • முந்தைய ஆண்டின் இறுதி தேர்வில் 50 விழுக்காடு மதிப்பெண்களுக்கு குறையாமல் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
  • பிற்படுத்தப்பட்டோர், ஆதி திராவிடர் இதர துறைகள் மற்றும் நலவாரியங்கள் மூலம் 2011 12 ஆம் ஆண்டில் கல்வி உதவித் தொகை பெறுதல் கூடாது.

பள்ளி தலைமையாசிரியர், கல்லூரி முதல்வர் மாணவ, மாணவியர்களிடமிருது பெறப்படம் விண்ணப்படிவங்களை சரிபார்த்து, மாணவ மாணவியரின் 1-) பெயர், 2) பிறந்த தேதி 3) மதம் 4) தந்தை அல்லது பாதுகாவலர் பெயர் 5) ஆண்டு வருமானம்  6) பள்ளி கல்லூரியின் முகவரி 7) பின்கோடு 8) தொலைபேசி எண் 9) மாணவர்களின் முந்தைய ஆண்டின் இறுதி தேர்வில் மொத்தம் 50 விழுக்காடு 10) சேர்க்கை கட்டணம் 11) கற்பிப்புக் கட்டணம் 12) தேர்வுக் கட்டணம், ஆய்வக¢கட்டணம் 13) இதர பராமரிப்பு கட்டணம் 14) மாணவர் விடுதியில் தங்கி பயில்பவரா அல்லது தங்காமல் பயில்பவரா 15) மாணவர்களின் வங்கி சேமிப்பு விபரங்கள் 16) வங்கியின் பெயர் ஆகியவற்றை புதுபிப்பித்தலுக்கான கேட்புபட்டியலை 10&07&2011 அன்றுக்குள்ளும் புதியதற்கான கேட்பு பட்டியலை 25.07.2011 தங்களது மாவட்ட எல்லைக்குட்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலருக்கு சமர்பித்து அதற்கான ஒப்புகைச் சான்று பெற வேண்டும்.

மேலதிக விபரங்களை http://tnminoritiesscholarship.in/ என்ற இணையதளத்தில் காணலாம்.


.
Hi.gif

No comments:

Post a Comment