பின்லேடன் புகைப்படத்தை நம்ப மறுக்கும் அமெரிக்கர்கள்
உலக சரித்திரத்திலேயே இல்லாத வகையில் தேடப்படும் பிரபல குற்றவாளியை அவசர அவசரமாக நடுக்கடலில் சமாதி கட்டியதோடு, உலக மகா தீவிரவாதி என்று கடந்த 10 ஆண்டுகளாக நாட்டு மக்களை நம்பவைத்து வந்த அமெரிக்கா,அவர் கொல்லப்பட்டதாக வெளியிட்ட புகைப்படம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
நவீன தொழில்நுட்ப உதவியுடன் போட்டோக்களில் ஏமாற்றும் வித்தையை பள்ளிக்குழந்தைகளால்கூட செய்ய முடியும் என்பதால் ஒசாமாவினுடையது என்று வெளியிடப்பட்டிருக்கும் புகைப்படம், ஏற்கனவே கொல்லப்பட்ட வேறு நபரின் புகைப்படத்த்தை வெட்டி ஒட்டியது என்ற கருத்து உலகெங்கும் டிவிட்டர் மற்றும் ப்ளாக்குகளிலும் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் கொல்லப்பட்டது பின்லேடன்தான் என்று அமெரிக்கா ராணுவம் மரபணு சோதனை நடத்தி உறுதி செய்ததாக காட்டுகத்து கத்தினாலும் இதை அமெரிக்கர்களில் பெரும்பாலோர் நம்பவில்லை. கொல்லப்பட்டதாகச் சொல்லப்படுவது பின்லேடன்தான் என்று அல்கொய்தாவும் உறுதி செய்யாதவரை அதை பெரும்பாலோர் நம்பத் தயாராக இல்லை.
கொல்லப்பட்ட பின்லேடன் உடலை அமெரிக்காவுக்கு கொண்டு வராமல் அவசர அவசரமாக கடலில் மூழ்கடித்து விட்டதாக அமெரிக்க அரசு சொல்வதும் பலருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் அமெரிக்க துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் பிரன்னன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
பின்லேடனின் மரணம் குறித்து யாரும் சந்தேகம் தெரிவித்து விடக் கூடாது, சர்ச்சைகள் ஏற்பட்டு விடக் கூடாது என்று நாங்கள் உறுதியாக இருக்கிறோம். எனவே விரைவில் புகைப்படங்களை வெளியிடுவது குறித்து யோசித்து வருகிறோம்.பின்லேடன் உடல் குறித்த புகைப்படங்களை வெளியிடுவது குறித்து யோசித்து வருகிறோம். இதன் மூலம் பின்லேடனின் மரணம் குறித்த சர்ச்சைகளைத் தவிர்க்க முடியும் எனக் கருதுகிறோம்.பின்லேடன் இறந்து விட்டது உண்மைதான் என்பதையும் இதன் மூலம் நாங்கள் நிரூபிக்க முடியும் என்றார் பிரன்னன்.
பின்லேடனை சர்வசாதாரணமாகக் கொன்றுவிட்டதாகச் சொல்லி அமெரிக்கர்களின் ஒட்டுமொத்த வாக்குகளையும் எதிர்வரும் தேர்தலில் அள்ளலாம் என்று திட்டமிட்டிருந்த ஒபாமாவுக்கு,அமெரிக்கர்களின் போட்டோஷாப் ஐயம் பெரும் தலைவலியைக் கொடுத்துள்ளது.
No comments:
Post a Comment