Saturday, May 28, 2011

அதிரடித் துவக்கம்!

ஜெயலலிதாவின் அதிரடித் துவக்கம்!

E-mailஅச்செடுக்க
ம் ஜி ஆர் 1977 ஆம் ஆண்டு முதன்முதலாக ஆட்சியில் அமர்ந்தபோது, “ஆறு மாதங்கள் வாளா இருப்போம்; அதன் பிறகு வாளாக இருப்போம்." எனப் பொறுப்பான எதிர்க்கட்சித்  தலைவராகக் கருணாநிதி கூறினார். ஜெயலலிதா இரு முறை முதல்வராக இருந்து ஊழல்களும் அதிகார அத்துமீறல்களும் புரிந்து, மக்களால் தண்டிக்கப்பட்டுப் பதவியிழந்து அனுபவப்பட்டவர் என்பதால் அவருக்கு ஆறு மாதங்கள் காலக்கெடு தேவையில்லை. உடனடியாக விமர்சிக்கலாம்; எதிர்க்கலாம்.

இப்போதைய தேர்தலில் தனிப் பெரும்பான்மை பெற்று வென்றவுடன், அரசின் நிதி நிலை மிக மோசமாக இருப்பதாகவும் அரசைச் சீரமைக்கும் பணியில் ஈடுபடப் போவதாகவும் ஜெயலலிதா சொன்னார். புதிதாகப் பதவியேற்கும் எந்த அரசும் பழைய அரசின் மீது வைக்கும் முதல் குற்றச்சாட்டுகளுள் ஒன்று இதுவாகத்தான் இருக்கும். ஜெயலலிதா கூறியதில் உண்மை இல்லாமலுமில்லை. தமிழ்நாடு அரசின் மொத்தக் கடன் பொறுப்புகள் 2009 -- 2010 ம் ஆண்டு இறுதியில் 89,149 கோடி ரூபாயாக  இருக்கின்றன. கடந்த ஆட்சியின் போது தொடங்கப்பட்டு செயல்பட்டு வரும் இலவச / நலத்திட்டங்கள் மட்டுமின்றி, ஜெயலலிதா தம் தேர்தல் அறிக்கையில் வாக்களித்திருந்த இலவசங்களான அம்மி  முதல் ஆட்டுக்குட்டிவரை மக்களுக்கு வழங்கவும் நிதி வேண்டும். இதை எப்படி ஈடுகட்டப் போகிறது புதிய அரசு என்ற வினா எல்லோர் மனங்களிலும் எழுகிறது.

இந்நிலையில் பதவியேற்கும் முன்னரே தலைமைச் செயலகத்தை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தில் இருந்து மீண்டும்  புனித ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றத் துவங்கினர். தமிழக மக்களின் வரிப்பணமான  எழுநூறு கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டத் துவங்கி சுமார் தொள்ளாயிரத்து பத்து கோடி ரூபாய்ச் செலவில் கட்டி முடிக்கப்பட்ட புதிய தலைமைச் செயலகத்தை அம்போ என விட்டு விட்டு மீண்டும் கோட்டைக்குப் போவதற்கான ஊதாரிச் செலவு யார் அப்பன் வீட்டுப் பணம்?.

இதே ஜெயலலிதா 2001- 2006 இல் முதல்வராக இருந்தபோதுதான் மிகப்பழமையான புனித ஜார்ஜ் கோட்டையில் செயல்பட்டு வந்த சட்டசபையும் தலைமைச் செயலகமும் இடப்பற்றாக்குறையாலும் வசதிக் குறைவாலும் சிரமப்படுவதாகச் சொல்லிப் புதிய தலைமைச் செயலகம் கட்டத் திட்டமிட்டார். அதற்காகக் கடந்த 2003 ஆம் ஆண்டில், சென்னை, கடற்கரைச் சாலையில் இருக்கும் ராணிமேரிக் கல்லூரியை இடிக்கவும் முயன்றார். அப்போது மத்திய அரசில் சுற்றுச் சூழல் துறை அமைச்சராக இருந்த டி ஆர் பாலு, கடற்கரைப் பகுதியில் இருக்கும் புராதனக் கட்டிடங்களை இடிக்கவும் ரூ.5 கோடி மதிப்பில் புதிய கட்டிடம் கட்டவும் மத்திய அரசிடம் அனுமதி வாங்க வேண்டும் என்று, அரசு விதிகளைக் காட்டி ஜெயலலிதாவின் முயற்சிக்குத் தடை விதித்தார். இத்தடை உத்தரவை எதிர்த்துத் தமிழக அரசின் சார்பாக உயர்நீதி மன்றத்தில் தடை ஆணை  கோரப்பட்டது. நீதிபதி சதாசிவம் பாலுவின் உத்தரவிற்குத் தடை விதித்தார். அத்தடையாணையை எதிர்த்து டி ஆர் பாலு,  “இந்த வழக்கை நீதிமன்றத்தின் சுற்றுச்சூழல்பிரிவு டிவிஷன் பெஞ்ச் தான் விசாரிக்க வேண்டும்; தனி நீதிபதி இதில் உத்தரவு எதையும் பிறப்பிக்கமுடியாது. எனவே நீதிபதி சதாசிவத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என்று மேல்முறையீடு செய்தார்.

இதனிடையே கல்லூரியை இடிக்க எதிர்ப்புத் தெரிவித்து மாணவிகளும் ஆசிரியைகளும் போராடினர். மாணவியர்  போராட்டத்தை நசுக்க ஜெயலலிதா ராணிமேரிக் கல்லூரியின் தண்ணீர்த் தொடர்பைத் துண்டித்தார். மாணவிகள் கழிப்பறையைக் கூடப் பயன்படுத்த இயலா நிலையை ஏற்படுத்தினார். கல்லூரி முதல்வரையும் ஆசிரியைகளையும் இடமாற்றம் செய்தது அரசு. மாணவியர் போராட்டத்துக்கு ஆதரவாக வந்த ஸ்டாலினையும் தி மு க வினரையும் கைது செய்து கடலூர்ச் சிறையில் பூட்டினார் ஜெயலலிதா . 2006 தேர்தலில் ஜெயலலிதா அரசு வீழ்ந்தபின், அடுத்த முதல்வராக வந்த கருணாநிதி, ஜெயலலிதா சொன்னார் என்பதற்காகப் புதிய தலைமைச் செயலகம் கட்டும் திட்டத்தைக் கைவிட்டு விடவில்லை. மாணவிகள் படிக்கும் கல்லூரியை இடிக்காமல் நகரின் மையமான வேறு இடத்தில் - காமராஜர் சாலையில்  - ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் - புதிய தலைமைச் செயலகம் கட்டினார். . ராணிமேரிக் கல்லூரியை இடித்துப் புதிய தலைமைச் செயலகம் கட்ட முடியாமல் போனதைத் தம் கவுரவத்துக்கு ஏற்பட்ட பெரிய இழுக்கு என ஜெயலலிதா கருதியதாலேயே புதிய தலைமைச் செயலகத்தை வெறுக்கிறார்..

கருணாநிதி கட்டினார் என்பதற்காகப் புதிய தலைமைச் செயலகத்தை ஜெயலலிதாவே, “வசதிக் குறைவானது” என அறிவித்த கோட்டைக்கு மீண்டும் மாற்றுவது, ஜெயலலிதா இன்னும் மாறவில்லை என்பதையே காட்டுகிறது. அதே இறுமாப்பு.......அதே பிடிவாதம்..... அதே ஊதாரித்தனம்........ கருணாநிதி கட்டினார் என்ற ஒரே காரணத்திற்காகவே மக்களின் சுமார் 910 கோடி வரிப்பணத்தை உதாசீனம் செய்து, கோட்டைத் தலைமைச் செயலகத்துக்காக  மக்கள் வரிப்பணத்தை மேலும் வாரியிறைக்க ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். எனில், கருணாநிதி காலத்தில் உருவாக்கப் பட்ட  பாலங்களையும் சாலைகளையும் கூட உடைத்து விடலாமே? கருணாநிதி திறந்து வைத்த அரசு அலுவலகங்களையும் இடித்து விடலாம். கருணாநிதியின் தேர்தல் அறிக்கையை மட்டும் அப்படியே காப்பியடித்த ஜெயலலிதா, மக்களின் வரிப்பணம் பாழாவதைக் கண்டுகொள்ளாமல் மீண்டும் கோட்டையில் கோலோச்ச நினைக்கிறார்.

பள்ளிகள் திறக்கும் நாள் நெருங்கி வரும் இவ்வேளையில் பாடப் புத்தகங்களிலும் கை வைத்து விட்டார் ஜெயலலிதா. கருணாநிதி எழுதிய சில பாடல்களும் அவரைக் குறித்துள்ள சில வரிகளும் பாடப் புத்தகங்களில் இருப்பது ஜெயலலிதாவின் உறக்கத்தைக் கெடுப்பதால் அவற்றைப் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கியே ஆக வேண்டும் என்ற திமிர் பிடித்த உத்தரவும் வந்துள்ளது.

அடுத்து, தலைமைச் செயலகம் கட்டியதில் மாபெரும் ஊழல், நிதி முறைகேடு என்ற குற்றச்சாட்டில் கருணாநிதியும் சில அமைச்சர்களும் கைது செய்யப் படலாம். அதற்கு வசதியாக, ஜெயலலிதாவின் கடந்த ஆட்சியில் கருணாநிதியை "விடியும் முன் கைது"-- pre dawn arrest-- செய்ததால் நாகர்கோவில் போக்குவரத்துக் கழகக் கண்காணிப்புப் பிரிவிற்குக் கருணாநிதியால் கடாசப் பட்ட ஜார்ஜை, சட்டம் ஒழுங்கு ஏ டி ஜி பி ஆக மீண்டும் சென்னைக்குக் கொண்டு வந்துள்ளார் ஜெயலலிதா. முன்னர் உளவுப் பிரிவு ஏ டி ஜி பி ஆக இருந்த அலெக்ஸாண்டரை ஜெயலலிதா மண்டபம் அகதிகள் முகாமிற்குத் தூக்கியடித்ததைப் போல இப்போதும் உளவுப்பிரிவு ஏ டி ஜி பி ஆக இருந்த ஜாஃபர்சேட்டை அதே அகதி முகாமுக்குத் தூக்கியடித்துள்ளார்..

கருணாநிதி மீதும் தி மு க அமைச்சர்கள் மீதும் வழக்குப் போடுவது சரிதான். அதற்காக ஜெயலலிதா ஊழல் கறை படியாத  அப்பழுக்கற்ற அரசியல்வாதி என்று பீற்றிக் கொள்ள முடியாது. ஜெயலலிதாவும் மீள வேண்டிய வழக்குகள் பல உள்ளன. கர்நாடகாவில் நடக்கும் சொத்துக் குவிப்பு வழக்கை, ஆயிரம் நொள்ளைக் காரணங்களைச் சொல்லி இத்தனை ஆண்டு காலம் இழுத்தடிப்பது ஜெயலலிதாதாம். அதுபோல் பிறந்த நாள் பரிசாக வந்த அமெரிக்க டாலர்களைத்  தம் கணக்கில் வரவு வைத்துக் கொண்ட வழக்கும் உள்ளது. லஞ்சம் கொடுப்பதற்குக் கருணாநிதி முன்னர்  ஆண்ட காலத்தில் கவர் (காகித உறை) போதும்.  எம் ஜி ஆர் காலத்தில் ப்ரீஃப் கேஸ், ஜெயலலிதா காலத்தில் சூட்கேஸ் என் லஞ்சம் பரிணாமத்திலும் பரிமாணத்திலும் வளர்ச்சி பெற்றதும் வரலாறு பதிந்து வைத்துள்ளவையே!

கருணாநிதி தம் குடும்பத்தை ஆட்சியிலும் கட்சியிலும் ஆதிக்கம் செலுத்த விட்டார் என்ற குற்றச்சாட்டு இருப்பதைப்போல் மன்னார்குடி வகையறா ஜெயலலிதாவின் ஆட்சியிலும் கட்சியிலும் ஆதிக்கம் செலுத்தியதும் வரலாறுதான். எனவே ஊழல் மற்றும் அதிகார ஆட்டத்தில்  இரண்டு கட்சிகளும் சமமானவையே!

ஜெயலலிதாவுக்கு இப்போது சொல்ல முடிந்த விஷயங்களில் தலையாயவை 2 ஜி ஸ்பெக்ட்ரம், ராசா, ராசாத்தி, கனிமொழி கலைஞர் டி வி, தயாளு போன்ற பெயர்கள் மட்டுமே. அவை மத்திய அரசு சம்மந்தப் பட்டவை என்பதால்  இவரால் ஒன்றும் செய்ய இயலாது. அரசியல் காற்று திசை மாறி வீசத்தொடங்கி இருக்கிறது. சோனியா ஜெயலலிதாவைத் தேநீர் விருந்துக்கு அழைத்திருக்கிறார். காங்கிரஸும் அ இ அ தி மு க வும் நெருங்கி வரும் பட்சத்தில் மேற்சொன்ன பெயர்களுக்கு ஜெயலலிதா மூலம் இடையூறு வரலாம். மதுரை தினகரன் நாளிதழ் அலுவலக எரிப்பில் மூவர் கொலையான வழக்கும் தா கிருட்டினன் கொலையான வழக்கும் புத்துயிர் பெறலாம். ஜெயலலிதாவின் அதிரடிகளும் தொடரலாம்.

தமிழ்நாட்டின்  முன்னேற்றத்துக்கான  அரசாக ஜெயலலிதாவின் அரசு அமையுமானால் மட்டுமே, திமுகவின் மீதான வெறுப்பால் பெற்ற இந்த வெற்றியை அவரால் தக்க வைத்துக்கொள்ள இயலும். மக்கள் மனதிலும் இடம் கிடைக்கும். இல்லையேல், கருணாநிதி ஆட்சியின் மீது கொண்ட கோபத்தின் காரணத்தால் ஜெயலலிதாவின் கடந்த ஆட்சிக் காலங்களில் நடைபெற்ற ஊழல்  அட்டூழியங்களை மன்னித்து,  மீண்டும்  ஜெயலலிதாவுக்கு வாய்ப்புக் கொடுத்த மக்கள், அடுத்த பொதுத் தேர்தலில் ஸ்டாலினை முதல்வராக்க  மீண்டும் திமுகவுக்கு வாய்ப்பு கொடுக்க மாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை! இதனை உணர்ந்து ஜெயலலிதா செயல்பட்டால் அவருக்கும் எம் ஜி ஆர் உருவாக்கிய  அ இ அ தி மு க -வுக்கும் நல்லது என்பதை ஜெயலலிதாவுக்கு நினைவூட்டுகிறோம்.
- ரஸ்ஸல்.

(ரஸ்ஸலின் அனைத்து அதிரடி அலசல்களையும் இங்கு காணலாம்)
Share Link: Share Link: Bookmark Yahoo MyWeb Del.icio.us Digg Facebook Myspace Technorati Stumble Upon Ask myAOL MSN Live
கருத்துக்கள் (19)Add Comment
0
...
எழுதியவர்: Mohamed Ali Jinnah, May 22, 2011
இது அதரடி கட்டுரை அல்ல .நிகழ்ந்த நிலையினை நினைவுக்கு கொண்டுவரும் உண்மையான சிறப்பான சரித்திரம். வரலாறு பாடம் படிப்தற்கு மட்டும் இல்லாமல் வாழ்வின் வழிகாட்டியாக இருந்தால் நன்மை பயக்கும் .அரசியலுக்கு
பழமாக கிடைத்தது சரித்திரம்.இன்றைய அரசியல் நாளைய வரலாறு என்பதனை ஆள்வோர் நினைவு கொள்ளட்டும்.
  • தவறான உபயோகத்தை அறிவி
  • +4
  • - வாக்கு
  • + வாக்கு
0
...
எழுதியவர்: முத்துக்குமார், May 22, 2011
ரஸ்ஸல், பொட்டில் அறைந்த மாதிரி சொல்லி விட்டீர்கள்.

ஆனால், அவன் கிள்ளினான்; இவன் முறைத்தான் என்ற பள்ளிக்குழந்தைகளின் மனநிலையிலேயே ஜெ பழிக்குப் பழி வாங்க துவங்கிவிட்டார். சட்டசபைக் கட்டிடம், பாடப்புத்தகங்கள் என்று தாறுமாறாக தமிழக மக்களின் வரிப்பணம் சாக்கடையில் கொட்டத் துவங்கிவிட்டார்.

பொதுமக்கள் பழிவாங்கினால் தாங்கமாட்டார் என்பதையும் ஜெ நினைவில் கொண்டு நல்லாட்சி தர வேண்டும்.
  • தவறான உபயோகத்தை அறிவி
  • +5
  • - வாக்கு
  • + வாக்கு
0
...
எழுதியவர்: MOHAMED THAMEEM, May 22, 2011
JEYALALITHA ONE OF THE POLITICIANS IN THE WORLD WHO TARNISHED POLITICS. IF SHE HAD BORN AT THE TIME OF HITLER, HITLER MIGHT HAVE ASKED HER IDEAS TO MASSACRE PEOPLE. SINCE SHE IS AN RSS FAN, SHE IS A WRONG SELECTION OF TAMILANS. BUT THERE IS NO CHOICE. BECAUSE OF THE GREEDY KARUNANIDHI.
  • தவறான உபயோகத்தை அறிவி
  • +2
  • - வாக்கு
  • + வாக்கு
0
...
எழுதியவர்: mohamed, May 22, 2011
நீங்கள் திமுக எடுபிடி என்பதை அடிக்கடி நிரூத்துக்கொள்கிறீர்கள்.

//ஜெயலலிதாவுக்கு இப்போது சொல்ல முடிந்த விஷயங்களில் தலையாயவை 2 ஜி ஸ்பெக்ட்ரம், ராசா, ராசாத்தி, கனிமொழி கலைஞர் டி வி, தயாளு போன்ற பெயர்கள் மட்டுமே//
இதில் 2ஜி ஊழல் சாதாரண ஊழல் போன்று சித்தரிக்கிறீர்கள்.

ஜெயலலிதா காலத்தில் சூட்கேஸ் இப்போதுவெறும் வெளிநாட்டில் இருந்து வந்த 'செக்' என்பதை அப்படியே மூடி மறைக்கிறீர்கள்.

பாட புத்தகங்களை மாற்றுவது திமிர் தனம் என்று சொல்லும் நீங்கள் பிஞ்சுக்குழந்தைகளின் பாட புத்தகங்களை முதல்வர் என்கிற காரணத்தால் பாடம் எழுதும் திமிர்தனத்தை அப்படியே மறைக்கிறீர்கள்.

உங்களுக்கு இந்நேரம் கொடுத்துள்ள சுதந்திரத்தை தவறாக பயன்படுத்துகிறீர்கள் என்று உணர்கிறேன். உங்களின் இந்த கட்டுரை காரணமாகவே இந்நேரத்தை வெறுக்க வேண்டி உள்ளது.
  • தவறான உபயோகத்தை அறிவி
  • +0
  • - வாக்கு
  • + வாக்கு
0
...
எழுதியவர்: Riyaz, May 22, 2011
அக அக அக......

சரியாக Sonneer. Kalakkiputtel Ponga
  • தவறான உபயோகத்தை அறிவி
  • +0
  • - வாக்கு
  • + வாக்கு
0
...
எழுதியவர்: எம்.ஏ.முஹம்மது அலீ, May 22, 2011
கருணாநிதி முரசொலியில் புலம்ப வேண்டியதை அவருக்கு பதிலாக புலம்பி கட்டுரையாசிரியர் உதவியுள்ளார் என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. ஆட்சிக்கு வந்து ஒரு வாரமே ஆன ஒருவரை அதற்குள் வெட்டித்தனமாக விமர்சிப்பதே இக்கட்டுரையின் நோக்கமாக இருக்க முடியும். தமிழக வரலாற்றிலேயே மிகப்பெரும் ஊழலாட்சியை வீட்டுக்கு அனுப்பி இப்போதுதான் மக்கள் சற்று பெருமூச்சுவிட ஆரம்பித்துள்ளனர். அதற்குள் ஏன் அவர்களை திசை திருப்ப முயலுவானேன்!. சரியான அவசரக் குடுக்கை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. தி.மு.க.வின் தலைவரைப்போல் இன்னும் மக்களை முட்டாளாக எடை போடாதீர்கள். ''சிலரை பல நாள் ஏமாற்றலாம், பலரை சில நாள் ஏமாற்றலாம், ஆனால் எல்லோரையும் எல்லா நேரத்திலும் ஏமாற்றமுடியாது'' எனும் ஜான் கென்னடி சொன்ன வரிகள் தான் நினைவுக்கு வருகிறது.
  • தவறான உபயோகத்தை அறிவி
  • +1
  • - வாக்கு
  • + வாக்கு
0
...
எழுதியவர்: கொங்குதமிழன், May 22, 2011
Jaya make own logo for Ooty Botanical Garden "100 year celebrate" JJ logo.

garden is public propitiatory. why she makes JJ logo?
this correct or wrong? this correct.

கருணாநிதி எழுதிய சில பாடல்களும் அவரைக் குறித்துள்ள சில வரி - this not wrong
  • தவறான உபயோகத்தை அறிவி
  • +1
  • - வாக்கு
  • + வாக்கு
0
...
எழுதியவர்: அப்துல் மாலிக், May 22, 2011
//எம் ஜி ஆர் 1977 ஆம் ஆண்டு முதன்முதலாக ஆட்சியில் அமர்ந்தபோது, “ஆறு மாதங்கள் வாளா இருப்போம்; அதன் பிறகு வாளாக இருப்போம்." எனப் பொறுப்பான எதிர்க்கட்சித் தலைவராகக் கருணாநிதி கூறினார்.// என்று சுட்டிக்காட்டியிருக்கிறீர்கள். ஆனால் அதுபோல் ஆறு மாதங்கள் வாளா இருந்தாரா? இல்லையே. வரலாறு தெரிந்தவர்களுக்கு தெரிய வாய்ப்பு இருக்கிறது. அந்த வகையில் உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.

// தமிழக மக்களின் வரிப்பணமான எழுநூறு கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டத் துவங்கி சுமார் தொள்ளாயிரத்து பத்து கோடி ரூபாய்ச் செலவில் கட்டி முடிக்கப்பட்ட புதிய தலைமைச் செயலகத்தை அம்போ என விட்டு விட்டு மீண்டும் கோட்டைக்குப் போவதற்கான ஊதாரிச் செலவு யார் அப்பன் வீட்டுப் பணம்?. // என்று கேட்கும் நீங்கள், புதிய சட்டமன்ற கட்டடம் முழுமைப் பெறாத நிலையில் அவசர அவசரமாக திறப்பு விழா வைத்துவிட்டு; ஆர்ட் டைரக்டர் தோட்டாதரணியை வைத்து கட்டடத்தின் மேல் கோபுரத்தை ரூ. 3 கோடி செலவில் செட்டிங் போடவத்தது யார் அப்பன் வீட்டு பண்மோ அதே அப்பன் வீட்டு பணம் தான் என்பதை தாங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். "மாமியார் உடைத்தால் மண் குடம்; மருமகள் உடைத்தால் பொன் குடம்."
  • தவறான உபயோகத்தை அறிவி
  • -1
  • - வாக்கு
  • + வாக்கு
0
...
எழுதியவர்: mohamed, May 22, 2011
முகம்மது அலீ சரியாக சொல்லியுள்ளீர், முரசொலியின் மறுபதிப்பாகத்தான் இந்நேரம் செயல்படுகிறது
  • தவறான உபயோகத்தை அறிவி
  • -2
  • - வாக்கு
  • + வாக்கு
0
...
எழுதியவர்: °µ¿, May 23, 2011
ஆட்சிக்கு வந்த 8 நாட்காளில் மக்கள் பணம் சட்டசபை கட்டிடம் - 950 கோடி , சமச்சீர்கல்வி - 500 கோடி மொத்தம் 1450 கோடி நஷ்டம். இதுக்கு 2G தேவலை... ஏன்னா 2G ஏலம் எடுத்த தொகை 1600 கோடி தான்..
  • தவறான உபயோகத்தை அறிவி
  • +1
  • - வாக்கு
  • + வாக்கு
0
...
எழுதியவர்: தமிலன், May 23, 2011
தம்பி... கருனனிதியும் சும்மா சத்தசபை ஆரம்பிகலெ அதிலெயும் வருமானம் இறுகல்ல...முன்பெ.. ஜயாலித சொனனதனாலெ.. னல்ல சான்ஸாச்சல்ல
  • தவறான உபயோகத்தை அறிவி
  • +1
  • - வாக்கு
  • + வாக்கு
0
...
எழுதியவர்: sathish, May 23, 2011
naangal aatchi amaithal.. koottail than arasu amaiyum yendru election ku munnadiyea solli irunthoom.
  • தவறான உபயோகத்தை அறிவி
  • +0
  • - வாக்கு
  • + வாக்கு
0
...
எழுதியவர்: sathish, May 23, 2011
இது அதரடி கட்டுரை அல்ல. கருணாநிதி முரசொலியில் புலம்ப வேண்டியதை அவருக்கு பதிலாக புலம்பி கட்டுரையாசிரியர் உதவியுள்ளார் என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. 2ஜி ஊழல் சாதாரண ஊழல் போன்று சித்தரிக்கிறீர்கள். தமிழக வரலாற்றிலேயே மிகப்பெரும் ஊழலாட்சியை வீட்டுக்கு அனுப்பி.சரியான அவசரக் குடுக்கை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. தி.மு.க.வின் தலைவரைப்போல் இன்னும் மக்களை முட்டாளாக எடை போடாதீர்கள்.

புதிய சட்டமன்ற கட்டடம் முழுமைப் பெறாத நிலையில் அவசர அவசரமாக திறப்பு விழா வைத்துவிட்டு; ஆர்ட் டைரக்டர் தோட்டாதரணியை வைத்து கட்டடத்தின் மேல் கோபுரத்தை ரூ. 3 கோடி செலவில் செட்டிங் போடவத்தது யார் அப்பன் வீட்டு பண்மோ???

தேர்தல் முடிந்த பிறகு தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி விடுத்த அறிவிப்பு நாட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க முயன்றதாக நாடு முழுவதும் ரூ. 70 கோடி கைப்பற்றப்பட்டது. இதில் ரூ. 60 கோடி தமிழ்நாட்டில் மட்டும் கைப்பற்றப்பட்டது. நாங்கள் ஒரு கோடி ரூபாயைக் கைப்பற்றியிருக்கிறோம் என்றால் 40 முதல் 50 கோடி ரூபாயை விநியோகிக்கவிடாமல் தடுத்து இருக்கிறோம் என்று பொருள் எனக் கூறியுள்ளார்.

அவர் கூற்றுப்படி பார்த்தால் தமிழ்நாட்டில் ரூ. 2,400 கோடி முதல் ரூ. 3,000 கோடி வரை பணம் விநியோகிக்கவிடாமல் தடுக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது. ஜனநாயகத்தைச் சீரழிக்கத் தமிழ்நாட்டில் உங்கள் கட்சியினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி குறித்து நீங்கள் இதுவரை வெட்கமடையவில்லையே, அது ஏன்?
  • தவறான உபயோகத்தை அறிவி
  • -1
  • - வாக்கு
  • + வாக்கு
0
...
எழுதியவர்: அப்துல் மாலிக், May 23, 2011
முகம்மது அலி சொன்னதும், சதிஷ் சொன்னதும் 100/100 உண்மை. இந்நேரம்.காம் முரசொலியின் மறுபதிப்பாகத்தான் செயல்படுகிறது என்பதில் சந்தேகமில்லை.
  • தவறான உபயோகத்தை அறிவி
  • -1
  • - வாக்கு
  • + வாக்கு
0
...
எழுதியவர்: mahadevan, May 23, 2011
I guess Mr. Russel is a pro-DMK writer. Should he ne pointing out the issues, he could have used a better language. But the tone and tenor of the write-up seems to rebuke Jaya and paint her in the darkest of potraits. Nepotism and corruption are Karuna's forte. Moreover, Jaya doesn't face many cases as the writer points out. Its just one and the amount is just 66 crores that to income tax evasion. Compare this to the bulky loot of 1.76 lakh crores. Doesn't the author try to strike parallel between a handful of water and a sea?
  • தவறான உபயோகத்தை அறிவி
  • -2
  • - வாக்கு
  • + வாக்கு
0
...
எழுதியவர்: Saifullah, May 24, 2011
Those who wrongly blamed Russell as pro D.M.K. should read the alasal artcles

htpp://www.inneram.com/2010121112434/jeeva-kakkan-kamaraj-karunanidhi

ஜீவா --கக்கன் --காமராஜர்--கருணாநிதி

http://www.inneram.com/2010121812565/is-karunanidhi-communist

கருணாநிதி ஒரு கம்யூனிஸ்ட்?
  • தவறான உபயோகத்தை அறிவி
  • +0
  • - வாக்கு
  • + வாக்கு
0
...
எழுதியவர்: விடுதலை, May 24, 2011
‘’விடுதலை’’க்கு தடையா? : ஜெ.வுக்கு கி. வீரமணி கண்டனம்
மே.16ஆம் தேதி, முதல் அமைச்சராக செல்வி ஜெயலலிதா பதவி ஏற்கிறார் என்றால் அவசர அவசரமாக அன்றைய தினமே அரசு நூலகங்களில் “விடுதலை” ஏட்டை நிறுத்தும் ஆணை பிறப்பிக்கப்படுகிறது என்றால் இதன் பொருள் என்ன?


2012 மார்ச்சு வரை அரசு நூலகங்களில் “விடுதலை” இடம் பெறுவதற்கான அரசு ஆணை ஏற்கெனவே இருக்கும் நிலையில், திடீரென்று அந்த ஆணையை ரத்து செய்ய வேண்டிய அவசியம் - அவசரம் ஏன்? ஏன்?


மாறுபட்ட கருத்துகள் - விளக்கங்கள் கூடவே கூடாது என்று நினைப்பது ஜனநாயகக் கோட்பாடுகளுக்கு உகந்ததுதானா? ‘விடுதலை’யைப் பொறுத்தவரையில் ஆதரிக்க வேண்டியதை ஆதரித்தும், எதிர்க்க வேண்டியதை எதிர்த்தும் நடைபோடும் பகுத்தறிவு ஏடு.
அரசு என்பது அனைத்து மக்களுக்கும் கருத்துரிமை என்ற அடிப்படைக் கோட்பாடு கொண்டதல்லவா!

அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன், நான் எப்பொழுதும் செயல்படுவதில்லை என்று கூறும் முதல் அமைச்சர் திடீரென்று “விடுதலை”யை நிறுத்தியது எந்த அடிப்படையில்? அல்லது அவர் அறியாமல் “அதி விசுவாசிகளான’’ அதிகாரிகளின் வேலையா இது?
  • தவறான உபயோகத்தை அறிவி
  • +0
  • - வாக்கு
  • + வாக்கு
0
...
எழுதியவர்: sunil, May 24, 2011
It is too early to judge.........jeyalalitha is right or not
  • தவறான உபயோகத்தை அறிவி
  • +0
  • - வாக்கு
  • + வாக்கு
0
...
எழுதியவர்: BMB, May 25, 2011
madam romba nallavanga, entha thappume seyathavangal,ithul ellam oru arasiyalvathiya,naatu makkalai yosikamal karunanithiya patriye yositchu 555 varusham odidum,apuram adutha election la _____________la ratham vara mathri pesi votu ketpanga adun chee,thoo ithellam oru polappa
  • தவறான உபயோகத்தை அறிவி
  • +0
  • - வாக்கு
  • + வாக்கு

கருத்து எழுதுக

 
தொடர்புடைய பிற செய்திகள்:

No comments:

Post a Comment