First Published : 11 May 2011 01:53:18 AM IST
Last Updated : 11 May 2011 03:32:23 AM IST
புது தில்லி, மே 10: தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு அதிகம் இருப்பதாக சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சியும், திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று ஹெட்லைன்ஸ் டுடேவும் தெரிவித்துள்ளன.
தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநில பேரவைத் தேர்தல் முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 13) வெளியாக உள்ளன. இந்த மாநிலங்களில் முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்கள், வாக்குப் பதிவுக்குப் பின்னர் நடத்திய கணிப்பு முடிவுகள் செவ்வாய்க்கிழமை இரவு வெளியிடப்பட்டன.
தமிழகத்தில் முந்துகிறது அதிமுக: சி.என்.என்.-ஐ.பி.என். கணிப்பின்படி அதிமுக கூட்டணிக்கு 120 முதல் 132 இடங்களும், திமுக கூட்டணிக்கு 102 முதல் 114 இடங்களும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக கூட்டணிக்கு 46 சதவீத வாக்குகளும், திமுக கூட்டணிக்கு 44 சதவீத வாக்குகளும் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலை ஒப்பிடும்போது திமுக கூட்டணி ஒரு சதவீத வாக்கை இழந்திருப்பதாகவும், அதிமுக கூட்டணிக்கு 6 சதவீத வாக்குகள் அதிகரித்திருப்பதாகவும் சி.என்.என்.-ஐ.பி.என். தெரிவித்துள்ளது.
ஹெட்லைன்ஸ் டுடே- ஓ.ஆர்.ஜி. நிறுவனங்கள் இணைந்து நடத்திய கணிப்பில், திமுக கூட்டணி 115- 130 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 105- 120 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவிஜி நியூஸ்- சி வோட்டர் இணைந்து நடத்திய கணிப்பில், தமிழகத்தில் 234 பேரவைத் தொகுதிகளில் அதிமுக கூட்டணிக்கு 168 முதல் 176 இடங்களும், திமுக கூட்டணிக்கு 54 முதல் 62 இடங்களும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊழல் குற்றச்சாட்டு காரணமாக திமுக கூட்டணிக்கு 6 சதவீத வாக்கு வங்கி குறைந்திருப்பதாகவும், அதிமுக கூட்டணிக்கு 4 சதவீத வாக்கு வங்கி அதிகரித்திருப்பதாகவும் கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸ்டார் நியூஸ் தொலைக்காட்சி நடத்திய கணிப்பில், தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு 124 இடங்களும், அதிமுக கூட்டணிக்கு 110 இடங்களும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளத்தில் ஆட்சி மாற்றம்? 140 உறுப்பினர்கள் கொண்ட கேரள சட்டப் பேரவையில், ஆளும் இடதுசாரி முன்னணிக்கு 69- 77, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணிக்கு 63- 71 இடங்களும் கிடைக்கும் என்று சி.என்.என்.-ஐ.பி.என். கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஹெட்லைன்ஸ் டுடே- ஓ.ஆர்.ஜி கணிப்பில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி 85-92 இடங்களிலும், ஆளும் இடதுசாரி கூட்டணி 49- 57 இடங்களிலும் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 83 முதல் 91 இடங்களையும், ஆளும் இடதுசாரி கூட்டணி 49 முதல் 57 இடங்களையும் கைப்பற்றக்கூடும் என்று சிவிஜி நியூஸ்- சி வோட்டர் கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்திலும் ஆட்சி மாற்றம்: மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகளில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கூட்டணி 222- 234 தொகுதிகளைக் கைப்பற்றி அமோக வெற்றி பெறும் என்றும், இடதுசாரி முன்னணிக்கு 60- 72 இடங்கள் கிடைக்கும் என்று சி.என்.என்.-ஐ.பி.என். கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஹெட்லைன்ஸ் டுடே, ஓ.ஆர்.ஜி. கணிப்பின்படி, மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கூட்டணிக்கு 210-220 இடங்களும், இடதுசாரி கூட்டணிக்கு 65- 70 இடங்களும் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
திரிணமூல் காங்கிரஸ் கூட்டணி 184 முதல் 192 இடங்களையும், ஆளும் இடதுசாரி கூட்டணிக்கு 48 முதல் 56 இடங்கள் மட்டுமே கிடைக்கக்கூடும் என்று சிவிஜி நியூஸ்- சி வோட்டர் தெரிவித்துள்ளது.
அசாமில் கூட்டணி ஆட்சி? அசாமில் மொத்தமுள்ள 126 தொகுதிகளில் ஆளும் காங்கிரஸ் 64- 72 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று சி.என்.என்.-ஐ.பி.என். கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அசாம் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று சிவிஜி நியூஸ்- சி வோட்டர் தெரிவித்துள்ளது. ஆளும் காங்கிரஸýக்கு 41 முதல் 45 இடங்களும், பாஜகவுக்கு 14 முதல் 18 இடங்களும், அசாம் கண பரிஷத் கட்சிக்கு 31 முதல் 35 இடங்களும் கிடைக்கக்கூடும். இதனால், ஆட்சியை தக்க வைப்பதில் காங்கிரஸýக்கு பின்னடைவு ஏற்படும் என்றும், மாநிலத்தில் கூட்டணி ஆட்சி அமையக்கூடும் என்று சிவிஜி நியூஸ்- சி வோட்டர் கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹெட்லைன்ஸ் டுடே, ஓ.ஆர்.ஜி. கணிப்பின்படி, காங்கிரஸ் 41- 47 இடங்களிலும், பாஜக 16- 18 இடங்களிலும், அசாம் கண பரிஷத் 13- 15 இடங்களிலும் வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது.
முன்னணி செய்தி தொலைக்காட்சி நிறுவனமான சி.என்.என்.- ஐ.பி.என்., 2006 பேரவைத் தேர்தலில் வெளியிட்ட வாக்குக் கணிப்பை ஒட்டியே தேர்தல் முடிவுகளும் அமைந்திருந்தன. அதன் விவரம்:
2006 பேரவைத் தேர்தல் வாக்குக் கணிப்பு முடிவு
அதிமுக கூட்டணி 64- 74 வரை
திமுக கூட்டணி 157- 167 வரை
தேர்தல் முடிவு
அதிமுக கூட்டணி 69
திமுக கூட்டணி 163
2011 பேரவைத் தேர்தல் வாக்குக் கணிப்பு முடிவு
அதிமுக கூட்டணி 120- 132 வரை
திமுக கூட்டணி 102- 114 வரை
தேர்தல் முடிவு
வெள்ளிக்கிழமை வரை காத்திருப்போம்.

5/11/2011 5:43:00 PM
5/11/2011 5:24:00 PM
5/11/2011 5:24:00 PM
5/11/2011 5:23:00 PM
5/11/2011 5:03:00 PM
5/11/2011 4:55:00 PM
5/11/2011 4:48:00 PM
5/11/2011 4:43:00 PM
5/11/2011 4:21:00 PM
5/11/2011 4:08:00 PM
5/11/2011 3:57:00 PM
5/11/2011 3:52:00 PM
5/11/2011 3:45:00 PM
5/11/2011 3:37:00 PM
5/11/2011 3:37:00 PM
5/11/2011 3:33:00 PM
5/11/2011 3:33:00 PM
5/11/2011 3:23:00 PM
5/11/2011 2:51:00 PM
5/11/2011 2:42:00 PM
5/11/2011 1:58:00 PM
5/11/2011 1:32:00 PM
5/11/2011 1:32:00 PM
5/11/2011 1:17:00 PM
5/11/2011 1:14:00 PM
5/11/2011 1:12:00 PM
5/11/2011 1:11:00 PM
5/11/2011 1:04:00 PM
5/11/2011 12:55:00 PM
5/11/2011 12:53:00 PM
5/11/2011 12:53:00 PM
5/11/2011 12:53:00 PM
5/11/2011 12:45:00 PM
5/11/2011 12:41:00 PM
5/11/2011 12:39:00 PM
5/11/2011 12:27:00 PM
5/11/2011 12:23:00 PM
5/11/2011 12:23:00 PM
5/11/2011 12:10:00 PM
5/11/2011 12:10:00 PM
5/11/2011 12:07:00 PM
5/11/2011 12:06:00 PM
5/11/2011 12:06:00 PM
5/11/2011 12:04:00 PM
5/11/2011 12:04:00 PM
5/11/2011 12:02:00 PM
5/11/2011 12:00:00 PM
5/11/2011 12:00:00 PM
5/11/2011 12:00:00 PM
5/11/2011 12:00:00 PM
5/11/2011 11:59:00 AM
5/11/2011 11:55:00 AM
5/11/2011 11:54:00 AM
5/11/2011 11:52:00 AM
5/11/2011 11:46:00 AM
5/11/2011 11:44:00 AM
5/11/2011 11:44:00 AM
5/11/2011 11:41:00 AM
5/11/2011 11:39:00 AM
5/11/2011 11:39:00 AM
5/11/2011 11:33:00 AM
5/11/2011 11:24:00 AM
5/11/2011 11:20:00 AM
5/11/2011 11:20:00 AM
5/11/2011 11:14:00 AM
5/11/2011 11:09:00 AM
5/11/2011 11:08:00 AM
5/11/2011 11:03:00 AM
5/11/2011 11:00:00 AM
5/11/2011 10:33:00 AM
5/11/2011 10:26:00 AM
5/11/2011 10:21:00 AM
5/11/2011 9:36:00 AM
5/11/2011 9:33:00 AM
5/11/2011 9:20:00 AM
5/11/2011 9:06:00 AM
5/11/2011 9:05:00 AM
5/11/2011 8:45:00 AM
5/11/2011 8:45:00 AM
5/11/2011 8:29:00 AM
5/11/2011 8:26:00 AM
5/11/2011 7:49:00 AM
5/11/2011 7:43:00 AM
5/11/2011 7:26:00 AM
5/11/2011 6:54:00 AM
5/11/2011 2:54:00 AM