Wednesday, May 11, 2011

கடைசியில் குப்பைக்கே வந்து விட்டது தமிழக அரசு வழங்கிய இலவச கலர் "டிவி'


கடைசியில் குப்பைக்கே வந்து விட்டது தமிழக அரசு வழங்கிய இலவச கலர் "டிவி'


Bookmark and ShareShare  
பதிவு செய்த நாள் : மே 10,2011,23:57 IST
மாற்றம் செய்த நாள் : மே 11,2011,01:40 IST
புதுச்சேரி : தமிழக அரசால் வழங்கப்பட்ட இலவச கலர் "டிவி' குப்பை மேட்டிற்கு வந்து விட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.கலர் "டிவி' என்பது துவக்க காலத்தில் சாதாரண மக்களுக்கு எட்டாக்கனியாக இருந்தது. பின், தனிநபர் வருமானம் உயர்ந்ததால், சாதாரண மக்கள் கூட கலர் "டிவி'யை வாங்கி மகிழ்ந்தனர்.இந்நிலையில், கடந்த தமிழக சட்டசபை தேர்தலில், ஆட்சியை பிடிப்பதற்காக, மக்களிடையே பல இலவச திட்டங்களை தி.மு.க., அறிவித்தது. அவற்றில் முக்கியமான திட்டம் இலவச கலர் "டிவி!'ஆட்சிக்கு வந்த பிறகு, பல கட்டங்களாக இலவச "டிவி'க்களை மாவட்டம்தோறும் வழங்கியது. "டிவி' வழங்கும் இடத்திலேயே வாங்குபவர்கள் விற்பனை செய்வதும் அரங்கேறி வந்தது. இந்நிலையில், இத்திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட பல "டிவி'க்கள் கொடுத்த சில மாதங்களிலேயே திடீர் திடீரென வெடித்த சம்பவங்களும் நடந்தன.

விழுப்புரம் மாவட்டத்தில் தி.மு.க., தொண்டரின் "டிவி' அடிக்கடி பழுதானதால், 500, 1,000 ரூபாய் என தண்டச் செலவு செய்து வெறுத்து போன அவர், அரசு கலர் "டிவி'யை நடுரோட்டில் போட்டு உடைத்த சம்பவமும் நடந்தது.இதற்கு எல்லாம் உச்சக்கட்டமாக, தமிழக அரசால் சில மாதங்களுக்கு முன் வழங்கப்பட்ட (வீணான) "டிவி'யை, புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியில் உள்ள கிராமத்தில் இருந்து, ஆலங்குப்பம் காயிலான் கடைக்கு எடைக்கு போட ஒருவர் கொண்டு வந்தார். இதை கடைக்காரர் வாங்க மறுத்ததால், ஆத்திரமடைந்த அந்த நபர், கடைக்கு எதிரில் (சாலையோரத்தில்) சாதாரண குப்பையை வீசுவது போல், தமிழக அரசு வழங்கிய இலவச "டிவி'யை வீசி சென்று விட்டார்.இலவச "டிவி' திட்டத்துக்கு செலவழித்த பணத்தை, தமிழக அரசு ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு பயன்படுத்தி இருந்தால், தமிழகம் வளர்ச்சி பாதையை எட்டி இருக்கும்.
ன்றி தகவல்
மேலும் பொது செய்திகள்:Dinamalar - No 1 Tamil News Paper

No comments:

Post a Comment