Sunday, February 26, 2012

தடையில்லா மின்சாரம் சாத்தியமே...எப்படி?




**********
தமிழக மின்சார தடை குறித்து எக்கச்சக்கமாக ஆதங்கப்பட்டு விட்டோம். நம் ஆதங்கத்தை எழுத்துக்களாக கொட்டிவிட்டோம். சரி, இதற்கு தீர்வு என்ன? மக்களாகிய நாம் இது குறித்த நம்முடைய எண்ணங்களை அரசாங்கத்திடம் பகிரலாமே? தடையில்லா மின்சாரம் சாத்தியமா?.... இம்மாதிரியான கேள்விகளுக்கு ஆக்கப்பூர்வமான கருத்துக்களை முன்வைக்க முயற்சிக்கின்றது இந்த கட்டுரை....

இதற்கு தீர்வென்று நீங்கள் கருதும் கருத்துகளையும் பின்னூட்டங்களாக வையுங்கள். இறைவன் நாடினால், அவை அனைத்தும் முதல்வருக்கும், தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கும் அனுப்பி வைக்கப்படும்..
**********

ட்டு மணிநேர மின் வெட்டு தமிழக மக்களுக்குக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலைக்கு கடந்த ஐம்பது ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்த அனைத்து கட்சிகளுமே கூட்டுப் பொறுப்பாளிகளாவார்கள்.

மின்சாரம் தமிழகத்தில் பயன்பாட்டுக்கு வந்தபோது விளக்குகள் எரிவதற்கும், மின் விசிறி சுழல்வதற்கும் மற்றும் நிலத்தடி நீரை மேலேற்றுவதற்குமே பயன்படுத்தப்பட்டு வந்தது. உபரியான மின்சாரம் இருந்தது. தனியார்களால் மின் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகம் செய்யப்பட்ட அந்தக்கால கட்டத்தில் வீடு வீடாக வந்து மின்சாரம் வேண்டுமா என்று மின்துறை ஊழியர்கள் கெஞ்சிக் கேட்டு மின் இணைப்புக் கொடுத்தனர்.

மேலும் மின்சாரக் கட்டணத்தைக்கூட தவணை முறை வியாபாரிகளைப் போல் வீடுகளுக்கு வந்து அலைந்து வசூலித்துச் சென்றனர். மின் உற்பத்தியை விட மின் உபயோகம் குறைவாக இருந்ததால் இந்த நிலை இருந்தது. ஆனால் அடுத்தடுத்த காலகட்டங்களில் மின்சாரத்தில் இயங்கும் நவீனசாதனங்களும், சொகுசான சாதனங்களும் பயன்பாட்டுக்கு வந்தன. விளக்குகளும், விசிறிகளும் சாப்பிடும் மின்சாரத்தை விட நூறு மடங்கு ஐநூறு மடங்கு என மின்சாரத்தை அதிகம் சாப்பிடக் கூடியவைகளாக இவை இருந்தன.

ஏசி, ஹீட்டர், ஃபிரிட்ஜ், ஃபிரீஸர், வாஷிங் மெஷின், மிக்ஸி, கிரைண்டர், மைக்ரோ ஓவன், டீவி, கம்ப்யூட்டர், மின் அடுப்பு, எலக்ட்ரிக் குக்கர், வேக்கம் கிளீனர், ஹேர் டிரையர், அயர்ன் பாக்ஸ், ஸ்டிரியோ சிஸ்டம், டோஸ்டர், டீ மேக்கர், காப்பி மேக்கர் மற்றும் அதிக சக்தி வாய்ந்த மோட்டார் பம்புகள் போன்ற அனைத்துமே மிக அதிக அளவில் மின்சாரத்தைச் சாப்பிடக்கூடியவையாகும். பயன்பாடுகளுக்கு ஏற்ப அனைத்து துறைகளிலும் கவனம் செலுத்தி வந்த ஆள்வோர் மின்சாரத்தை மட்டும் பயன்பாட்டுக்கு ஏற்ப உற்பத்தி செய்வதில் மிக மிக மந்தமாக செயல்பட்டதன் விளைவைத்தான் கடந்த சில ஆண்டுகளாக நாம் அனுபவித்து வருகிறோம்.

இதுவரையில்லாத அளவுக்கு திடீரென்று அதிகப் பற்றாக்குறை ஏற்பட்டதற்கு மற்றொரு சிறப்பான காரணமும் உள்ளது. தொலைக்காட்சிப் பெட்டிக்கு விளக்கை விட அதிக மின்சாரம் தேவை. அதிகமான வீடுகளில் விளக்குகளுடனும், மின் விசிறியுடனும், வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருந்தனர். மின் உற்பத்தி போதுமானதாக இல்லாத நம் மாநிலத்தில் அனைவருக்கும் இலவச கலர் டிவி கொடுக்கும் திட்டத்தினால் தான் பற்றாக்குறை தாறுமாறாக ஏறியது.

ஒரு கோடி குடும்ப அட்டைகளில் 80 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்காவது தொலைக்காட்சிப் பெட்டிகள் கொடுக்கப்பட்டன. தொலைக்காட்சிப் பெட்டி இல்லாதவர்கள் தினமும் 16 மணிநேரம் புதிதாக பெற்ற தொலைக்காட்சிப் பெட்டியை இயக்கினால், எவ்வளவு பற்றாக்குறை ஏற்படும் என்பதைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள். ஒரு டிவி வைத்திருந்த குடும்பம் ஒன்றுக்கு மேற்பட்ட டிவியை இயக்கும் போதும் கூடுதல் மின்சாரம் செலவாகும். இதன் பின்னர்தான் தட்டுப்பாடு தாறுமாறாக ஏறியது.

தற்போது முதல்வர் ஜெயலலிதாவும் ஏதோ ஆடுமாடுகளையோ வீடுகளையோ கொடுக்காமல் மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர் என்று கொடுத்து வருகிறார். இதன் மூலமும் மின் பயன்பாடு அதிகரிப்பதால் மின் வெட்டு எட்டு மணி நேரமாகும் நிலை ஏற்பட்டது. மேற்கண்ட சாதனங்களைப் பயன்படுத்தாமல் இருந்த மக்கள் மீது இவைகள் திணிக்கப்படுவதால் போகப்போக மின் தட்டுப்பாடு அதிகமாகிக் கொண்டுதான் வரும்.

பெருகி வரும் வாகனங்களுக்கு ஏற்ப சாலைகளை விசாலமாகவும், தரமாகவும் போடுவதற்கு அரசாங்கத்துக்கு திட்டமிடத் தெரிகிறது. மித மிஞ்சி சேமிக்கும் அளவுக்கு அரிசி உற்பத்தியைப் பெருக்கும் திட்டங்கள் மூலம் வெற்றி காணத் தெரிகிறது. ஆனால் நவீன சாதனங்களால் தாறுமாறாக உறிஞ்சப்படும் மின்சாரத்தை மட்டும் தேவைக்கு ஏற்ப அதிகரிக்க அரசாங்கத்துக்கு மனமில்லை. இதற்கு அரசியல் ரீதியான காரணங்களும் உள்ளன. சாலை போடுவது என்றால் ஓரிரு வருடங்களில் போட்டு முடித்து விடலாம். அதைச் சொல்லி ஓட்டு வாங்க முடியும். ஆனால் மின் உற்பத்தி நிலையங்களை ஓரிரு வருடங்களில் முடிக்க இயலாது.

ராஜிவ் காந்தி காலத்தில் கட்டப்பட்ட கூடங்குளம் அணுமின் நிலையமே இப்போதுதான் முடிவுக்கு வரும் நிலையில் உள்ளது. இப்போது நாம் மின் உற்பத்தித் திட்டங்களுக்குச் செலவிட்டால் உடனடிப் பலன் கிடைக்காது. நாம் தோற்றுவிட்டால் அடுத்து ஆட்சிக்கு வருபவர்களுக்குப் பெயர் கிடைத்துவிடும். நமக்கு இதில் அரசியல் ஆதாயம்  அடைய முடியாது என்று ஆட்சியில் இருந்தவர்கள் நினைக்கின்றனர்.

இதனால்தான் எத்தனையோ திட்டங்களைத் தீட்டி அதில் முன்னேற்றம் கண்டவர்கள் மின்சாரத்தில் மட்டும் கவனம் செலுத்தாமல் விட்டுவிட்டனர். இப்போதைய ஆட்சி எவ்வளவுதான் நினைத்தாலும் ஓரிரு வருடங்களில் மின்சாரம் கிடைக்கும் வகையில் மின் உற்பத்தி நிலையங்களை அமைக்க முடியாது.

கருணாநிதி ஆரம்பித்து வைத்த சில திட்டங்கள் முழுமையடைந்தால் ஜெயலலிதா அறுவடை செய்வார். இப்போது ஜெயலலிதா ஏதேனும் திட்டத்தைத் துவக்கி வைத்தால், அடுத்து ஆட்சிக்கு வருபவர்களுக்கு நற்பெயரை எடுத்துத் தர அது உதவும். நினைத்தவுடன் சரி செய்யும் அளவிற்கு மின்சார நிலைமை இல்லை என்பதுதான் யதார்த்தமான நிலையாகும். தமிழகம் எந்த அளவுக்கு மின் பற்றாக்குறையில் உள்ளது என்பதை அறிந்து கொண்டால் தான் இது உடனடியாக சரி செய்யக்கூடியதல்ல என்பதை விளங்கிக் கொள்ள முடியும்.

மின்சாரத்தை வாட் கணக்கில் அளவிடுகிறார்கள். தமிழகத்தில் அனைவருக்கும் அனைத்துத் தேவைகளுக்கும் தங்கு தடையின்றி 24 மணி நேரமும் மின்சாரம் வழங்க வேண்டுமானால், இப்போதைய நிலையில் 11 ஆயிரம் மெகாவாட் தேவைப்படும். (இந்த நிலையை நாம் எட்டும்போது மேலும் பல புதிய சாதனங்கள் வந்து கூடுதலாக 1000 மெகாவாட் தேவைப்படும் என்ற நிலை ஏற்பட்டுவிடும் என்பது தனி விஷயம்)

ஆனால் தமிழகத்திற்கு தற்போது கிடைக்கும் மின்சாரத்தின் அளவு சுமார் 8000 மெகாவாட் மட்டுமே.  அதாவது அவசியம் ரூ.100 தேவையுள்ளவனுக்கு ரூ.65 மட்டுமே கிடைப்பது போல் மின்சாரம் மூன்றில் ஒருபங்கு பற்றாக்குறையாக உள்ளது. அதனால்தான் 24 மணி நேரத்தில் மூன்றில் ஒரு பங்கு என்ற அடிப்படையில் எட்டு மணி நேரம் மின் வெட்டு செய்கிறார்கள். இப்போதைய நிலையில் என்னதான் தலைகீழாக நின்றாலும் 11 ஆயிரம் மெகாவாட் என்ற நிலையை எட்ட முடியாது. கூடங்குளம் மின் உலை செயல்பாட்டுக்கு வந்தால் 1000 மெகாவாட் தமிழகத்திற்குக் கிடைக்கும். இதனால் இரண்டு அல்லது மூன்று மணிநேர மின்வெட்டை சமாளிக்கலாம்.

இப்போது கிடைத்து வரும் எட்டாயிரம் மெகாவாட்  இப்படியே தொடர்ந்து கிடைக்கும் என்று சொல்ல முடியாது. மழை குறைந்து நீர் வீழ்ச்சி நின்று விட்டாலோ அணைகளில் தண்ணீர் குறைந்து விட்டாலோ நீர் மின்சாரம் மூலம் இப்போது கிடைத்து வரும் மின்சாரமும் குறைந்து போக வாய்ப்புள்ளது.

நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டால் அதன் காரணமாகவும் அனல் மின்நிலையங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரமும் குறைந்து போகலாம். காற்றாலை மின்சாரத்தையும் நம்ப முடியாது. இது அடிக்கடி காலை வாரிவிடக்கூடியதாகும். புதிய புதிய திட்டங்களை இப்போதே தீட்டினால்தான் எதிர்காலத் தமிழகத்தை இருளில் இருந்து காப்பாற்ற முடியும். எவ்விதத் தட்டுப்பாடும் இல்லாமல் சூரிய ஒளியிலும் மின்சாரம் தயாரிக்கலாம். பரவலாக இதற்கான தகடுகளை அதிகமாகப் பொருத்த வேண்டும். பெரிய அளவில் இது போன்ற மின்சாரத்தை உற்பத்தி செய்ய பல்லாயிரம் ஏக்கர் என்ற அளவில் பிரம்மாண்டமான தகடுகளை அமைத்தால் பகல் முழுவதும் மின் உற்பத்தி செய்ய முடியும்.

நிலக்கரிக்கும், நீருக்கும் அண்டை மாநிலங்களை நம்பி இருப்பது போல் சூரிய ஒளிக்காக யாரையும் சார்ந்து இருக்கத் தேவையில்லை. ஆரம்பத்தில் இதற்கு அதிகபட்சமான செலவு பிடித்தாலும், அத்தியாவசியத் தேவைகளில் செலவு கணக்கைப் பார்க்க முடியாது. இதைப்பற்றி அரசிடம் எந்தத் திட்டமும் இருப்பதாகத் தெரியவில்லை.

மேலும் இரவு பகல் என எல்லா நேரத்திலும் குறைந்த செலவில் கடல் அலைகளினால் கரையில் ஏற்படும் அழுத்தம் மூலமும் மின் உற்பத்தி செய்யலாம். தொடர்ந்து நிரந்தரமாக இதை உற்பத்தி செய்ய இயலும். இதுபோன்ற ஒரு கண்டுபிடிப்பை செய்முறை விளக்கத்துடன் செய்து காட்டும் விஞ்ஞானி ஒருவரை அன்றைய மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி அவர்களிடம் நாம் அழைத்துச் சென்று இத்திட்டத்தை விளக்கச் சொன்னோம். அவரோ "அந்த அதிகாரிகளைப் பாருங்கள்'' என்று வேறொரு அதிகாரியைக் கைகாட்டி விட்டார். அந்த அதிகாரிக்கு மின்சாரம் பற்றிய அடிப்படை அறிவு கூட இல்லாததால் அவர்களால் அதைப் புரிந்து கொள்ளக்கூட முடியவில்லை.  இதெல்லாம் எங்களுக்கு முன்னரே தெரியும் எனவும் கூறிவிட்டார்.

மின் உற்பத்தியைப் பெருக்க இன்னும் எத்தனையோ திட்டங்கள் உள்ளன. அவற்றில் எல்லாம் அரசாங்கம் தன் கவனத்தைத் திருப்பினாலும் உடனடியாக மின்சாரம் கிடைக்கப்போவது இல்லை. போராட்டம் நடத்தினாலும் புரட்சியே வெடித்தாலும் இல்லாத ஒன்றை எந்த அரசாலும் தரமுடியாது என்பதுதான் யதார்த்தமான நிலை. இப்போதைய உற்பத்தியை வைத்துக் கொண்டு தடையில்லா மின்சாரம் வழங்க முடியுமா என்றால் நிச்சயமாக முடியும்.

மின் பற்றாக்குறையைச் சமாளிக்க இப்போது அரசு எடுத்து வரும் நடவடிக்கை முழுமையாகப் பயன்தராது. எட்டு மணிநேரம் மின்வெட்டு செய்வதால் மூன்றில் ஒரு பங்கு மின்சாரம் மீதமாகும் என்று அரசாங்கம் தப்புக் கணக்கு போடுகிறது. இவர்கள் விடாக்கண்டர்களாக  இருந்தால் மக்கள் கொடாக்கண்டர்களாக இருப்பார்கள் என்பதை அரசு கவனிக்கத் தவறிவிட்டது.

எட்டு மணிநேரம் மின்வெட்டால் விளக்கு, விசிறி, ஏசி ஆகிய மூன்றுதான் செயல்படாது. வாஷிங் மெஷின், ஓவன், கிரைண்டர், மோட்டார் பம்ப் உள்ளிட்ட எல்லா மின் சாதனங்களையும் மின்சாரம் வந்தபின் பயன்படுத்துவார்கள். ஓரளவு வசதி இருந்தால் ஒரு இன்வெர்ட்டர் மூலம் மின்சாரத்தை உறிஞ்சி மின்வெட்டின் போது விளக்கையும் விசிறியையும் இயக்கிக் கொள்வார்கள். எட்டு மணிநேர மின்வெட்டால் ஒரு மணிநேர மின்வெட்டின் பயன்தான் அரசுக்குக் கிடைக்கும்.

மண்டையைப் பிய்த்துக் கொண்டு பின்னர் பத்து மணி, 12 மணி என்று நீடித்துக் கொண்டே போவார்கள். இது பயனற்றதாகும். மக்களுக்கு கோபத்தை ஏற்படுத்தக்கூடியதாகும். நாம் முன்னரே சொன்னபடி அவசியத் தேவைக்கான மின்சாரம், சொகுசுத் தேவைக்கான மின்சாரம் எனற இரு வகைகளில் நமக்கு மின்சாரம் தேவைப்படுகிறது. இதை மட்டும் அதிகார வர்க்கம் சரியாகப் புரிந்து கொண்டால் 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்க இயலும்.

விளக்கோ விசிறியோ இல்லாமல் மனிதனால் வாழ முடியாது. ஏசியோ ஃபிரிட்ஜோ இல்லாமல் வாழ முடியும். இந்த அடிப்படையைக் கவனத்தில் கொண்டு பின் வரும் யோசனைகளை அரசு செயல்படுத்தலாம். சில மணிநேர மின் வெட்டு இருந்த காலத்தில் அல்லது மின்வெட்டே இல்லாத காலங்களில் ஒரு வீட்டில் எவ்வளவு யூனிட் செலவானதோ அதில் முப்பது முதல் நாற்பது யூனிட் வரை குறைத்து இதுதான் உங்களுக்கான அளவு என்று ரேஷன் முறையைக் கொண்டு வரவேண்டும். அதாவது மின் வெட்டு இல்லாத நேரங்களில் 200 யூனிட் பயன்படுத்தி இருந்தால், அவர்களின் மின்சார ரேஷன் 140 யூனிட்டுகள்தான் என்று நிர்ணயிக்க வேண்டும்.

மின் ஊழியர்கள் 10 நாள்களுக்கு ஓரு முறை வீடு வீடாகச் சென்று உங்கள் ரேஷனில் இவ்வளவுதான் மீதம் உள்ளது என்று சொல்ல வேண்டும். அவர்கள் உபயோகிக்க வேண்டிய அளவை அடைந்துவிட்டால் அந்த மாதத்தில் எஞ்சிய நாட்களுக்கு அவர்களுக்கு மட்டும் மின்சாரத்தை நிறுத்தலாம். ஊருக்கே நிறுத்த வேண்டியதில்லை. 

இதை கம்ப்யூட்டர் புராக்ராம் மூலமும் (gsm, micro-controller அல்லது வேறு எந்த யுக்திகளை கொண்டும்) செய்ய முடியும். அல்லது ஊழியர்களின் கண்காணிப்பு மூலமும் செய்யலாம். இப்படி ரேஷன் முறையை அமுல்படுத்தினால் குடும்பத்தவர்கள் இரவில் நிம்மதியாகத் தூங்கவும், பிள்ளைகள் படிக்கவும் தேவையான அளவுக்கு மட்டுமே மின்சாரத்தைப் பயன்படுத்தி சொகுசு சாதனங்களை தாங்களாகவே இயக்காமல் நிறுத்திக் கொள்வார்கள், அல்லது குறைத்துக் கொள்வார்கள்.

சொகுசு வாழ்க்கைக்கு மின்சாரம் இல்லை என்பதால் யாரும் புரட்சி செய்ய மாட்டார்கள். அடிப்படைத் தேவைக்கே இல்லாவிட்டால்தான் புரட்சி வெடிக்கும். எனவே மின்சாரம் 24 மணிநேரமும் வந்து கொண்டே இருக்கும். பயன்படுத்துவோர் சுயக்கட்டுப்பாடு செய்து கொள்வார்கள். இதன் மூலம் இருக்கும் மின்சாரத்தை வைத்தே மின்வெட்டு இல்லாமல் சமாளிக்கலாம்.

வர்த்தக நிறுவனங்கள் பொருள்களைக் கவர்ச்சியாகக் காட்டவும், விளம்பரத்துக்காகவும், தாறுமாறாக வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார்கள். அவர்களையும் இந்த ரேஷனில் கொண்டு வர வேண்டும். அப்படிக் கொண்டு வந்தால், அதிக மின்சாரத்தை இழுத்துக் கொள்ளும் நியான், மெர்குரி போன்ற விளக்குகளைத் தவிர்த்துக் கொண்டு தங்களுக்கான ரேஷன் அளவுக்குள் அவர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள்.

தொழிற்சாலைகள், உற்பத்தி சார்ந்தவை மற்றும் மேலதிகச் செலவுவகை என இரு வகைகளில் மின்சாரத்தைச் செலவிடுகின்றன. தொழிற்சாலைகள் இயங்காவிட்டால் பலரது வேலைவாய்ப்பு பறிபோகும் என்பதால் தொழிற்சாலைகளுக்கு 20 சதவிகிதம் அளவுக்கு குறைத்து ரேஷன் நிர்ணயிக்கலாம். இதனால் உற்பத்திக்கு மட்டும் மின்சாரத்தைப் பயன்படுத்துவார்கள். தொழிலாளிகள் வேலை இழக்கும் நிலை இதனால் ஏற்படாது.

விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. இது அவசியமானதுதான். ஆனால் இரண்டு மணி நேரம் மோட்டார் இயங்கினால் போதும் என்ற நிலையில் 24 மணிநேரமும் மின் மோட்டார் இயங்கி தண்ணீரும்,  மின்சாரமும் வீணாவதை யாரும் மறுக்க முடியாது.

ஒரு ஏக்கருக்கு எத்தனை யூனிட் என்று நிபுணர்களைக் கொண்டு மதிப்பிட்டு ஒவ்வொரு இணைப்பிற்கும் எத்தனை யூனிட்டுகள் என்பதை நிர்ணயித்துக் கொள்ளலாம். அதற்கு மேல் பயன்படுத்த முடியாத நிலையை ஏற்படுத்தலாம். அதுபோல் அரிசி கோதுமை போன்ற அத்தியாவசியப் பொருள்களின் உற்பத்திக்கு மட்டும் இலவச மின்சாரத்தை வழங்கிவிட்டு மற்ற பணப் பயிர்களுக்கு கட்டணத்தை நிர்ணயிப்பதுடன் அவற்றிற்கும் உரிய ரேஷனை நிர்ணயிக்கலாம்.

பொதுக்கூட்டமோ மாநாடுகளோ எந்தக் கட்சி நடத்தினாலும், கொக்கி போட்டோ அல்லது இணைப்புப் பெற்றவரிடம் அனுமதி பெற்றோ மின்சாரத்தைப் பயன்படுத்துகின்றனர். ஜெனரேட்டர் வழியாகத் தவிர வேறு வகையில் மின்சாரம் பயன்படுத்தக்கூடாது என்று கடுமையான உத்தரவு பிறப்பிக்க வேண்டும். கட் அவுட்டுகள் மற்றும் சீரியல் விளக்குகளுக்கும் இதையே சட்டமாக்க வேண்டும். ஏனென்றால் இது பலரிடம் வசூல் செய்யப்படுவதால் இதற்கு ஆகும் அதிக செலவு பொதுமக்களைப் பாதிக்காது.

மின் நிலைமை சீராகும் வரை, திருமண மண்டபங்களுக்கு ஜெனரேட்டர் மூலம் மட்டுமே மின்சாரம் பயன்படுத்த உத்தரவிடலாம். கல்யாண மண்டபத்துக்கு லட்சக்கணக்கில் செலவு செய்வோர், மின்சாரத்துக்காக சில ஆயிரங்களைச் செலவு செய்ய தயங்கமாட்டார்கள். சாப்பிடவும், படிக்கவும், தூங்கவும் தடையில்லாத மின்சாரம் 24 மணி நேரமும் கிடைப்பதை உறுதி செய்தால் மக்கள் நிலைமையைப் புரிந்து கொள்வார்கள்.

முட்டை பல்பு எரிக்க வேண்டாம் என்றும், எல்.இ.டி. விளக்குகளையும் எல்.இ.டி. டிவிக்களையும் பயன்படுத்துங்கள் என்றும் நாம் பிரச்சாரம் செய்யத் தேவையில்லை. ரேஷன் முறையைக் கொண்டுவந்தால் பொதுமக்களே தாமாக முன் வந்து குறைந்த மின்சாரம் செலவாகும் சாதனங்களை வாங்கும் நிலை ஏற்படும்.

இதன் மூலம் அவர்களின் பொருளாதாரத்தில் சேமிப்பு ஏற்படுவதால் சிலர் வாழ்த்தினாலும் ஆச்சரியமில்லை. தமிழக அரசும் மின்வாரியமும் இதைக் கவனத்தில் கொள்ளுமா?
உறவினருக்கும் ஏழைக்கும் நாடோடிக்கும் அவரவரின் உரிமையை வழங்குவீராக! ஒரேயடியாக வீண் விரயம் செய்து விடாதீர்! விரயம் செய்வோர் ஷைத்தான்களின் உடன்பிறப்புக்களாக உள்ளனர். ஷைத்தான் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான் - திருக்குர்ஆன் 17:26,27

நன்றி: உணர்வு வாரப்பத்திரிக்கை (edited and posted)

Wednesday, February 22, 2012

அல்லாவினும் பெரியவன் எவனுமில்லை! பிரசுதித்த தினமணி


கட்டுரைகள்
அல்லாவினும் பெரியவன் எவனுமில்லை!

First Published : 22 Feb 2012 01:10:57 AM IST

Last Updated : 22 Feb 2012 02:47:31 AM IST

அண்மையில் மிலாதுநபி விழா வந்து சென்றது. உலகத்தின் பாதி மீது தன்னுடைய மார்க்கத்தின் வாயிலாக ஆட்சி செலுத்தும் நபிகள் பெருமானாரின் பிறந்தநாள் விழா அது.
 உலகத்தில் பல நபிகள் தோன்றினார்கள்; மோசசிலிருந்து ஏசுவரை எண்ணற்றோரை நபிகள் என்று ஏற்கிறது திருக்குரான். ஆனால், முகம்மதுநபிதான் இறுதி நபி!
 முகம்மது நபி "சல்லல்லாகூ அலைஹி வசல்லம்' என்று போற்றப்படுபவர்; சல் என்றால் நபி!
 நபிகள் நாயகம் அரபு மண்ணை மட்டுமன்றி, அனைத்துலகத்தையும் மனத்தினில் கொண்டு, ஒரு புதிய வாழ்வியல் நெறியை உருவாக்கினார். அதைத் "தீன்' என்று இசுலாம் சொல்கிறது.
 அந்தத் "தீனில்' ஈடுபாடு கொண்டோர் ஒரு கூட்டமாக உருவாவது இயற்கை. அந்தக் கூட்டம் தன் மனம் போன போக்கில் உருவாகிவிடாமல், அதை ஒரு சமூகமாக உருவாக்கியதில்தான், ஓர் அமைப்பைக் கட்டியமைப்பதில் நபிகள் நாயகத்துக்கு உள்ள அளப்பரிய திறனும் மேதைமையும் பளிச்சிடுகின்றன. அதை "உம்மா' என்பார் நபிகள் நாயகம்.
 வழிபடு தெய்வத்தை, அதற்குரிய வடிவத்தை வழிபடு மொழியை, வழிபடுவதற்குரிய முறையை, இன்னும் சொன்னால் வழிபடு நேரத்தையும் வழிபடுவோன் முடிவு செய்து கொள்வதில்லை. இவை அத்தனையையும் இசுலாத்தில் நபிகள் பெருமானார்தான் முடிவு செய்திருக்கிறார். இதிலேதான் நபிகளின் அமைப்புக் கட்டும் திறன் ஒளிர்கிறது.
 நபிகள் பெருமானார் கட்டியமைத்த "உம்மா'தான் இசுலாத்தின் வலிமைக்கு அடிப்படை. உம்மா என்பது சமூகம்தான்.
 இசுலாம் முதலில் இறைமீது நம்பிக்கை கொள்ளுமாறு வலியுறுத்துகிறது. இரண்டாவதாக ஐந்து நேரத் தொழுகையை வலியுறுத்துகிறது.
 ஐந்து வேளையும் தொழுவதற்கு "பாங்கு' சொல்லி மக்களை அழைக்கும் பாங்கு இசுலாத்துக்கே உரிய தனிச்சிறப்பு. இன்னின்ன நேரங்களில்தான் தொழுவது என்பது வரையறுக்கப்பட்டிருக்கின்ற காரணத்தால், அவர்களைத் தொழுகைக்கு அழைப்பது இயலக் கூடியதாக இருக்கிறது.
 இமாம் தொழுகையை வழிநடத்தும்போது, எப்போது குனிவது, எப்போது நிமிர்வது, எப்போது காது மடல்களைத் தொடுவது, எப்போது மண்டியிட்டு மண்ணில் நெற்றி படுமாறு வணங்குவது இவற்றை எல்லாம் எந்த வரிசையில் செய்வது என்று அனைத்துமே நபிகளால் வரையறை செய்யப்பட்டிருக்கின்றன.
 இசுலாமியர்கள் கடற்கரையில் பெருந்திரளாகக் கூடி நின்று இரமலான் நோன்பில் தொழும்போது, பட்டாள வீரர்களின் அணிவகுப்பைப் பார்ப்பது போன்ற திகைப்பும் கவர்ச்சியும் ஏற்படுவதற்குக் காரணம் நபிகள் நாயகம் தொழும் முறையைக்கூடத் துல்லியமாக வரிசைப்படுத்தி வைத்திருப்பதுதான்!
 ஆயிரத்தி முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் முகம்மது நபி (ஸல்) எவ்வாறு தொழுதாரோ, அவ்வாறே அதே பாணியில்தான் இன்று நம்முடைய இளையான்குடிபுதூர் அப்துல்லாவும் தொழுகிறார்.
 இசுலாத்தின் அடிப்படை இறைவனுக்கு வடிவமில்லை என்பது. இறைவனுக்கு வடிவம் தேவைப்படுவோர்க்குத்தான் கோயில் தேவைப்படும். வடிவமில்லாத இறைவனை வணங்கப் பள்ளிவாசல் எதற்கு? பள்ளிவாசலில் எங்கும் சுவர்கள்தாமே இருக்கின்றன! மேற்கு நோக்கித் தன்னுடைய வீட்டிலிருந்தும் தொழ முடியுமே! பாங்கு சொல்லி இவர்களை ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு அழைப்பானேன்?
 ஓடுகின்ற தொடர்வண்டியிலும், போர்க்களத்தில் ஒட்டகத்தின் மீதிருந்தும் தொழுவதை இசுலாம் அனுமதிக்கிறது. எனினும், பள்ளிவாசல் தொழுகை இன்றியமையாததாக இருப்பது ஏன்? ஒருவருக்கொருவர் அருகிருந்து தொழும்போதுதான் "உம்மா' என்னும் சமூக அமைப்பைக் கட்டி எழுப்ப முடியும்!
 பள்ளிவாசல் தொழுகைபோல், "ஹஜ் யாத்திரையும்' ஐம்பெருங் கடமைகளில் ஒன்றாக அமைக்கப்பட்டிருக்கிறது.
 வசதியும், உடலும் இடங்கொடுக்கும் ஒவ்வொரு இசுலாமியனும் வாழ்வில் ஒருமுறையாவது ஹஜ் யாத்திரை மேற்கொண்டு மெக்கா சென்று தொழுது வரவேண்டும்.
 பக்கத்து வீட்டுக்காரனோடும், தூரத்து வீட்டுக்காரனோடும் ஒரு பள்ளிவாசலில் கூடித் தொழும்போது ஓர் "உம்மா' உருவாவதுபோல, பக்கத்து நாட்டுக்காரனோடும், தூரத்து நாட்டுக்காரனோடும், மெக்காவில் கபாஆவுக்கு முன்னால் கூடித் தொழும்போது ஓர் அகன்று பரந்த உலகளாவிய "உம்மா' உருவாகாதா?
 ஒரே இறை அல்லா; இறுதி நபி முகம்மது நபி: அல்லாவால் அருளப்பட்ட திருக்குரான்! இவையே இசுலாத்தின் இரண்டாங் கடமையான ஐவேளைத் தொழுகையை நிறைவேற்றும் உள்ளூர்ப் பள்ளிவாசலிலும், இசுலாத்தின் ஐந்தாங் கடமையான ஹஜ் யாத்திரையின் முடிவில் நிகழ்த்தும் மெக்கா தொழுகையிலும் அனைவரையும் ஒன்று குவிக்கும் சிந்தனை மையங்கள்.
 கீழக்கரையில் கட்டப்படும் சிறிய அளவினதான "உம்மா' மேலக்கரையில் மெக்காவில் பேருருக் கொள்கிறது!
 நாட்டின் எல்லைக்கோடுகள் தேய்ந்து போகின்றன; மொழிகள் அற்றுப் போகின்றன; இனங்கள் காணாமல் போகின்றன!
 இராக்கிலுள்ள இசுமாயிலும், சௌதிஅரேபியாவிலுள்ள சௌக்கத் அலியும், ஆப்பிரிக்காவிலுள்ள அகமதுவும் நம்முடைய காயல்பட்டினத்திலுள்ள காதர்பாட்சா ராவுத்தரும் "அல்லாகூ அக்பர், அல்லாகூ அக்பர்' விண்ணதிர முழங்குகின்றபோது, உருகிக் கரைந்து ஒருமை நிலை எய்தி விடுகின்றனர்!
 ஓர் அமைப்பை அதுவும் உலகளாவிய அளவில் கட்டியமைக்கும் திறனில் நபிகள் நாயகத்துக்கு இணையாக யாருமில்லை!
 அமைப்புக் கட்டுமானத்தில் எள்ளளவும் சிதைவு ஏற்பட்டுவிடக் கூடாது என்னும் பெருநோக்கில், தனக்கு நியாயமாக வந்திருக்க வேண்டிய பெரும்புகழைப் புறந்தள்ளினார் பெருமானார்!
 திருக்குரானின் வாசகங்கள் அல்லாவின் வாசகங்கள்! அவை தன் வழியாக வந்து இறங்கின; அல்லாவின் கைகளில் தான் ஒரு கருவி மட்டுமே என்று நபிகள் நாயகம் திண்ணமாகச் சொன்னார்.
 தன்னை வணங்குவதையோ, தன்னுடைய சமாதியை வணங்குவதையோ நபிகள் கடுமையாக மறுத்தார் என்பது மட்டுமன்று; அது ஒரு "அராம்'; குற்றம் என்று மிகக் கண்டிப்போடு விலக்கி வைத்தார்.
 "எல்லாப் புகழும் அல்லாவுக்கே' என்பதுதான் நபிகள் நாயகம் கற்பித்த வாழ்க்கை முறை!
 "தெருவுக்குத் தெரு டிஜிட்டல் பேனர்கள்; சுவர் கொள்ளாத பதினாறு துண்டுச் சுவரொட்டிகள்; நாளிதழ்களில், வார இதழ்களில் திறந்த பக்கமெல்லாம் முழுப் பக்க விளம்பரங்கள்; நிற்பதுபோல், இருப்பதுபோல், நடப்பதுபோல், சிரிப்பதுபோல், சிந்திப்பதுபோல்' ஐயோ எத்தனை எத்தனை கோலங்கள்! ""இளையோர்களின் குலவிளக்கே; முதியோர்களின் தெரு விளக்கே'' என்று எத்தனை எத்தனை துதிகள்!
 இவ்வளவுக்குமான விலை கொடுப்பதற்கு ஒருவனுக்கு வசதி இருந்தால், அன்றே அப்போதே அந்தப் புகழை அடைந்து விடலாம். இடைவிடாமல் மக்கள் கண்ணை உறுத்திக்கொண்டே இருப்பதுதான் புகழ் என்று நினைக்கிறார்கள்.
 ஒரு பற்பசைக் கம்பெனி தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்குக் கடைப்பிடிக்கின்ற உத்திகளை ஒரு மனிதனும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளக் கடைப்பிடிக்கிறான்! புகழ் என்பது சீரழிந்த சமூகத்தில் ஒரு சந்தைப் பொருளாகிவிட்டது.
 ஆனால், நபிகள் நாயகம் தனக்குரிய உண்மை பெரும் புகழை அதன் போக்கிலேயே விட்டிருந்தால், அல்லாவோடு சேர்த்து அவரையும் வணக்கத்துக்குரியவராக உலகம் ஆக்கியிருக்கும். ஆனால், அவர் அதைக் கடுமையாகவும், கண்டனத்தோடும் மறுதலித்து விட்டார்.
 நபிகள் நாயகம் இறந்தவுடனே முதற் கலீபாவாகப் பொறுப்பேற்கப் போகும் அபூபக்கர் அந்தத் துயரமான நிகழ்வை அறிவிக்கின்றார்.
 ""முகம்மது இறந்து விட்டார்; அல்லா இறப்பு அற்றவன்; அவனே வழிபாட்டுக்குரியவன்''.
 பிறப்பு இறப்புக்கு உள்பட்ட எந்த மனிதனும் வணக்கத்துக்குரிய நிலையினன் அல்லன் என்னும் நபிகள் நாயகத்தின் அழுத்தமான கொள்கையைத்தான் அபூபக்கர் இங்கே பேசுகிறார்.
 நபிகள் பெருமானாரின் புகழ்த் துறவு அளப்பரியது.
 திருக்குரானின் ஆசிரியன் அல்லா; அல்லாவின் வாசகங்கள் தன் வழியாக இறங்கின; அவ்வளவே என்று மீண்டும் மீண்டும் அறிவித்தார் நபிகள் நாயகம்!
 கோடானுகோடி மக்களை வரும் வரும் காலங்களில் ஆட்படுத்தப்போகும் ஒப்பற்ற சிந்தனைகள், "எந்த ஒன்றையும் ஓதி அறியாத' தனக்கு எப்படித் தோன்ற முடியும் என்பதே நபிகளின் நிலைப்பாடு! ஆகவே அல்லா ஓதுவித்ததைத் திரும்ப ஓதுகின்றவராகவே தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறார் பெருமானார்.
 தன்னை ஒன்றுமே இல்லை என்று சுருக்கியும் அல்லாவே எல்லாம் என்று பெருக்கியும் வாழ்ந்த பெருமகனார் நபிகள் நாயகம்.
 அல்லாவின் திருக்குரானும் அல்லாவின் தூதர் நபிகள் நாயகமும் எத்தனையோ நாடுகளில் ஊடுருவி வேரூன்றியதுண்டு. அங்கெல்லாம் மார்க்கம் தன்னைத் திருத்திக் கொண்டதில்லை. மண்தான் மார்க்கத்துக்கேற்றவாறு தன்னைத் திருத்திக் கொண்டிருக்கிறது.
 இசுலாமியர்களின் கொள்வினை - கொடுப்பினைகள், திருமண உறவுகள், அதில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுகலாறுகள், திருமண முறிவுகள், அவற்றுக்கான முறைகள் ஆகிய அனைத்துமே அவர்களின் ஷரியத் சட்டத்தில் துல்லியமாக வகுக்கப்பட்டிருக்கின்றன.
 பாங்கு சொல்லி அழைக்கும் முறையில்கூட ஆயிரத்தி முந்நூறு ஆண்டுகளாக எந்த மாற்றமுமில்லை. இசுலாம் அவ்வளவு கட்டிறுக்கமானது. இவற்றையெல்லாம் கவனிக்காமல் அவர்களுடைய "ஷரியத் சட்டத்தை' ஒதுக்கிவிட்டு, ஒரே மாதிரியான உரிமையியல் சட்டத்தை இசுலாமியர்கள் ஏற்க வேண்டும் என்பது எந்த வகையில் நியாயம்?
 உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட் ஷாபானு என்னும் முஸ்லிம் பெண்ணின் திருமண முறிவு வழக்குத் தீர்ப்பில் இந்தியாவுக்கு ஒரே மாதிரியான உரிமையியல் சட்டத்துக்குப் பரிந்துரை செய்தார். ஆனால், ராஜீவ் காந்தி காலத்தில் 1986-ல் நாடாளுமன்றம் குறுக்கிட்டு அதைத் தடுத்துவிட்டது!
 "மகர்' என்னும் முறையை விடுத்து, இந்துத் திருமண முறிவுக்குப்போல், சீவனாம்சம் வழங்க வேண்டும் என்னும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு நாடாளுமன்றம் முற்றுப்புள்ளி வைத்தது.
 இந்துப் பெண்ணின் திருமண முறிவு உரிமை விடுதலை பெற்ற இந்தியாவில் நேரு காலத்தில்தான் சட்டமாக்கப்பட்டது.
 ஆனால், திருமண நாளிலேயே பின்னொருநாள் திருமண முறிவு நேரிட்டால், அதற்கான வழிவகை என்ன என்று சிந்தித்தவர் நபிகள் நாயகம்! முறிவு செய்யப்பட்ட பெண்ணுக்கு "மகர்ப் பணம்' வழங்க வேண்டும் என்பது நபிகள் கண்ட தீர்வு. அந்த "மகர்' திருமணப் பொழுதிலேயே முடிவு செய்யப்படுவது இசுலாத்தின் தனித்தன்மை!
 திருமணம் என்பதை ஆண் பெண்ணுக்கிடையேயான ஓர் ஒப்பந்தம் என்ற அளவிலேயே இசுலாம் பார்க்கிறது. முறிவு செய்த ஆண் "மகர்' வழங்காவிட்டால் குற்றமே ஒழிய முறிவு குற்றம் கிடையாது!
 ஒவ்வொரு மக்கள் கூட்டமும் ஒவ்வொரு வகையான ஒழுகலாறுகளைக் கடைப்பிடிக்கிறது.
 இசுலாமியர்கள் கடைப்பிடிக்கும் ஒழுகலாறுகள், விதிமுறைகள், சட்டங்கள் ஆகிய அனைத்தும் அல்லாவினால் சொல்லப்பட்டு நபிகளின் வழியாக இறங்கியவை.
 அவற்றில் திருத்தம் செய்பவன் அல்லாவை விடப் பெரியவனாக இருக்க வேண்டும். அல்லாவினும் பெரியவன் எவனுமில்லை. ஆகவேதான் அந்த அமைப்பு எந்த விலகலையும் அனுமதிப்பதில்லை.
 ஒரு வாழ்க்கைமுறை அல்லது ஒழுகலாறு நாடு கடந்து இனங்கடந்து, மொழி கடந்து சென்று உலகெங்கணும் ஆங்காங்கே வேரூன்றிய போதும், வேரூன்றிய இடங்களின் போக்குகளுக்கு ஏற்ப மாற்றியமைத்துக் கொள்ள முடியாதபடி, நபிகள் பெருமானார் ஓர் உலகளாவிய "உம்மா'வைக் கட்டியமைத்ததில் அவருடைய சிந்தனைப் பாடுகள் மட்டும் புலப்படவில்லை. அதில் நபிகள் நாயகத்தின் ஈடு இணையற்ற மேதைமையும் ஒளிர்கின்றது!
 ""லாஇலாஹ இல்லல்லாஹ்   முகம்மதுர் ரசுலுல்லாஹ்''
கருத்துகள்

 உம்மா என்கிற உயரிய சமூகத்தைக் கட்டியெழுப்பியதில் நபிகள் நாயகம் அவர்களின் மேதமையை வியப்பது ஒருபுறம் இருந்தாலும், உலகின் இந்த உன்னத சாதனையை இறையாதரவு இல்லாமல் நிறைவேற்ற இயலாது என்பதையும் கட்டுரையாளர் உணர்ந்துகொள்ளவேண்டும். அவ்வாறு உணர்ந்தால், கட்டுரையின் கடைசிவரிகள் அவருக்குள் உயிரோட்டம் பெறும். பிரார்த்தனைகள். 
By பாபு 
2/23/2012 2:49:00 AM
 ஒரே இறைவனின் படைப்புகளே நாமெல்லாம். அந்த மாபெரும் சக்திக்கு மட்டுமே அடிமைகள் நாம் என்று உணருகையில் சமத்துவம் மலருகிறது. நாமார்க்கும் குடியல்லோம். பிறப்பொக்கும் எவ்வுயிருக்கும். நாடுகள், பண்பாடுகள், மொழிகள் என்று இயற்கையாகப் பிரிந்திருக்கும் மனித சமூகத்தை ஒன்று சேர்க்கும் புள்ளி இறைநம்பிக்கை மட்டுமே. அணுவளவு நன்மை செய்தாலும் அதற்கும் நற்கூலி உண்டு. அணுவளவே தீமை செய்திருப்பினும் அதற்கும் தண்டனை உண்டு என்று குரான் குறிப்பிடுகிறது. 
By பாபு 
2/23/2012 2:46:00 AM
 அருமையான கட்டுரை. கட்டுரை ஆசிரியர் திரு. பழ கருப்பையா அவர்களுக்கும் அந்தக் கட்டுரையை பிரசுதித்த தினமணி நாளிதழுக்கும் என் மனம்மார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அஹமது தமீம் மியாமி, அமெரிக்க
By அஹ்மத் தமீம் 
2/22/2012 11:23:00 PM
 அனைத்து மதங்களின் நோக்கமும் ஒன்றுதான். ஆனால், அது உருவான / தோற்றுவிக்கப்பட்ட நாடுகளில் உள்ள, காலம் காலமாக கடைப்பிடிக்கப்படும், கலாச்சாரம், பண்பாடு, மக்களின் பழக்க வழக்கங்கள், உணவு பழக்கம், நாட்டின் தட்ப வெப்ப நிலைகளுக்கு ஏற்ப மாறுகிறது. எனவே அதற்கேற்றவாறு, மாறிக்கொள்வதில் தவறில்லை. சிந்தித்து, செயல்படுவதற்காகதான், ஆண்டவன், நமக்கு அறிவை கொடுத்திருக்கிறான். அதை விட்டு என் மதம் இப்படித்தான் சொல்கிறது என்று கண்ணை மூடிக்கொண்டு நடக்ககூடாது. 
By SESHASAYEE 
2/22/2012 8:44:00 PM
 மிகவும் அருமை. பழ கருப்பையா அவர்களுக்கு இறைவழிகட்டுதல் கிடைப்பதற்கும் அவர் நேர்வழி பெறுவதற்கும் எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன் கட்டுரையை பிரசுரித்த தினமணிக்கு நன்றி 
By அஜீச் லுத்புல்லாஹ் 
2/22/2012 5:25:00 PM
 உணர்வாரா நல்ல தலையங்கம் நன்றி,,இஸ்லாம் தன்னை வாசிக்கும் எவரையும் ஈர்க்கும் தன்மை கொண்டது. ஐயா பழகருப்பையா அவர்கள் இஸ்லாத்தை நேர்மையாக அணுகியிருக்கிறார். இஸ்லாம் என்றாலே பூச்சாண்டியைப் பார்த்த குழந்தையைப்போன்று அஞ்சி நடுங்குபவர்களுக்குஇது ஒரு நல்ல பார்வையை அளித்துள்ளது 
By meera 
2/22/2012 2:45:00 PM
 முஸ்லிம்கள் அல்லாஹ் என்று குறிப்பிடுவது இறைவனை தானேயொழிய வேறு யாரையும் அல்ல. அல்லாஹ் என்ற அரபி வார்த்தைக்கு "ஏக இறைவன் " என்பதே அதன் தமிழ் மொழி பெயர்ப்பாகும் . எனவே நண்பர் தமிழ் மன்னன குழம்ப வேண்டியதில்லை. 
By சிராஜ் 
2/22/2012 2:40:00 PM
 அஸ்ஸலாமு அலைக்கும். மதிப்பிற்குரிய ஐயா, பழகருப்பையா அவர்களுக்கு வாழ்த்துக்கள். இஸ்லாத்தைப் பற்றி பலவரும் தவறாக விளங்கி வைத்திருக்கும் இந்த காலகட்டத்தில் இஸ்லாத்தின் உள்ளடகத்தை மிகத் தெளிவாக விளங்கி கட்டுரை வடித்துள்ளீர்கள். இறைவன் உங்களுக்கு நேர்வழியை அருள்புரிவானாக. இக்கட்டுரையை வெளியிட்ட தினமணிக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். கட்டுரையில் சிற்சில தவறுகள் இருந்தாலும் மிகவும் சூப்பர். 
By அப்துந் நாசிர் 
2/22/2012 2:17:00 PM
 மிக அருமை, மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர். திரு பழ கருப்பையா அவர்களின் சிறந்த இஸ்லாமிய கட்டுரை படித்து மகிழ்ச்சி, இஸ்லாமிய அறிஞா கார்களைவிட தாங்களின் இந்த கட்டுரை மிஹவும் சிறப்பாஹா இருந்தது. நன்றி. தாஜுதீன் 
By tajudeen 
2/22/2012 12:22:00 PM
 நல்ல தலையங்கம் நன்றி,,இஸ்லாம் தன்னை வாசிக்கும் எவரையும் ஈர்க்கும் தன்மை கொண்டது. ஐயா பழகருப்பையா அவர்கள் இஸ்லாத்தை நேர்மையாக அணுகியிருக்கிறார். இஸ்லாம் என்றாலே பூச்சாண்டியைப் பார்த்த குழந்தையைப்போன்று அஞ்சி நடுங்குபவர்களுக்குஇது ஒரு நல்ல பார்வையை அளித்துள்ளது. மீரா 
By meera 
2/22/2012 11:45:00 AM
 மரியாதைக்குரிய பழ. கருப்பையா அவர்களின் கட்டுரை மிகத் தெளிவாகவும் துல்லியமாகவும் உள்ளது. இஸ்லாத்தின் கடவுள்கொள்கை குறித்து ஆழமாக அவர் விவாதித்துள்ளார். சமயங்கள் ஒருவரையொருவர் புரிந்துகொள்வதற்காகவே அன்றி சாடுவதற்காக அல்ல. ஒருவர் மற்றவரின் சமயங்களைச் சரியாகப் புரிந்தாலே மனங்கள் இணையும். எம்மதமும் சம்மதம் என்ற கோட்பாட்டைவிட அவரவர் மதம் அவரவர்க்கு சம்மதம் என்பதே நியாயமானதாகும். ஆனால், இன்று மனித மனங்கள் நிம்மதியைத் தேடி அலைகின்றன. நிம்மதி என்ற பெயரால் ஆன்மிகத்தைக் கொச்சைப்படுத்தியுள்ளனர் ஆன்மிகவாதிகள். சமய பாகுபாடின்றி எல்லா தரப்பாருக்கும் இது பொருந்தும். எனவே, சமயங்களைச் சரியாக அறிவோம்; பேதங்களைக் களைவோம். சரியான தருணத்தில் சரியான கருத்துகளைப் பதிவு செய்த ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள், நன்றிகள். அதைப் பிரசுரித்த தினமணி ஆசிரியர் குழுவினருக்கு நன்றி நன்றியுடன்... முஹம்மது புகாரீ ரஹ்மத் பதிப்பகம் சென்னை 
By முஹம்மது புகாரீ 
2/22/2012 10:53:00 AM
 kisthvarkal easavai kadaul anru sollavilai kartharthan kadaul - avaraithan allah anru muslimkal solhinranar kulappm veandam 
By masthanali 
2/22/2012 9:30:00 AM
 அஸ்ஸலாமு அலைக்கும் . இன்றைய தினமனி கருப்பையா அவர்களின்கட்டுரை மிகச் சிறப்பாக இருக்கிறது.இஸ்லாமிய மார்கத்தின் அடிப்படையை அழகாக விளக்குகிறது. இஸ்லாமிற்க்கு எதிராக பொய்களைப் பரப்பும் இன்றைய ஊடக மனநிலைக்கு மத்தியில் துணிந்து உண்மையை மக்களுக்கு வழங்கிய தினமனிக்கு நன்றி. 
By Ibnu 
2/22/2012 9:07:00 AM
 கிறிஸ்தவர்கள் இயேசு ஒருவர்தான் கடவுள் என்றும் இஸ்லாமியர்கள் அல்லா ஒருவர்தான் கடவுள் என்றும் சொல்கிறார்கள் . ஹிந்துக்களோ பலவித கடவுள்களை வழிபடுகிறார்கள் . தலை சுற்றுகிறது ...... 
By ThamilMannan 
2/22/2012 8:12:00 A
 
 கட்டுரை ஆசிரியர் திரு. பழ கருப்பையா அவர்களுக்கும் அந்தக் கட்டுரையை பிரசுதித்த தினமணி நாளிதழுக்கும் என் மனம்மார்ந்த நன்றி

Monday, February 20, 2012

கண்களுக்கு ஒளிதரும் பீட்ரூட் கீரைகள்


!Beet Leaves

அன்றாட உணவில் பயன்படுத்தப்படும் காய்கறியான பீட்ரூட்டில் இருந்து கிடைக்கும் இலைகளான பீட்ரூட் கீரைகள் ஊட்டச்சத்து நிறைந்ததாகும். இது மருத்துவ குணம் கொண்டதாகவும் உள்ளது. பீட்ரூட்டை உணவில் சேர்த்துக்கொள்கின்ற அளவிற்கு பீட்ரூட் கீரையை நாம் பயன்படுத்துவதில்லை. ஆனால் ஐரோப்பியர்கள் இக்கீரையை விரும்பி தங்கள் உணவை சேர்த்துக் கொள்கின்றனர். இது ஐரோப்பா கண்டத்தை பிறப்பிடமாகக் கொண்ட போதிலும் சமீபத்தில்தான் உலகம் முழுவதும் பயிரிடப்பட்டு வருகிறது.ஐரோப்பாவிலும், வடஅமெரிக்காவிலும், கீரைக்காகவே பீட்ரூட்டைப் பயிரிடுகின்றனர்.. சைபீரியாவில் கால்நடைகளின் உணவிற்காகவே முற்காலத்தில் இந்த கீரையும் கிழங்கும் பயிரிடப்பட்டது எனச் சொல்லப்படுகிறது. கோழிகள் இக்கீரையை விரும்பி உண்கின்றன. எனவே இது ஒரு கோழித் தீவனமாகவும் பயன்படுகின்றனசுவையான கீரைபீட்ரூட்டுக்கு சுகந்தா என்ற என்ற வேறு பெயரும் உண்டு. இந்தியாவில் கூட கிழங்குக்காக மட்டுமின்றி கீரைக்காகவும் இதனை பயிரிடுகின்றனர். இக்கீரையை பொரியலாகவோ, துவரம் பரும்புடன் சேர்த்து கூட்டாகவோ செய்யலாம். பாசிப்பயறு, தட்டைப்பயிறு, முதலியவற்றுடன் சேர்த்துக் கூட்டுக்கறிகள் ஆக்கலாம். இப்பயிர்களுடன் சேர்க்கப்பட்ட கீரை மிகவும் சுவையாக இருக்கும். சாலட் செய்யவும் இக்கீரை பயன்படுகிறது.கரோட்டின் உயிர்சத்துபீட்ரூட் கீரைகளில் நரம்புகள் அதிகம் உள்ளது. இந்நரம்புகள் அதிகம் உள்ளது. இந்நரம்புகளில் கரோட்டின் எண்ணும் உயிர்சத்து அதிகம் உள்ளது. இந்த கரோட்டின் வைட்டமின் ஏ சத்தை அதிகம் சேர்த்து வைக்கின்றன. எனவே இதனை வைட்டமின் ஏயின் சேமிப்புப் பட்டரை என்றே கூறலாம். பச்சையாக உண்பதால் வைட்டமின் ஏ நேரடியாக நம் உடலில் சேருகிறது. இதனை கத்தியைக் கொண்டு பறிக்கக் கூடாது. கையால் திருகி பறிக்கவேண்டும். புரதம், தாது உப்புக்கள்பீட்ரூட் கீரை ஒரு சிறந்த உணவாக அமைவதோடு புரதம் மற்றும் தாது உப்புகள் உயிர்சத்துக்கள் நிறைந்த கீரையாகும். தையாமின், ரிபோஃப்ளோவின், நிக்கோடின் அமிலம், வைட்டமின் சி போன்றவை அதிகம் உள்ளது.பீட்ரூட் கீரை சிறுநீரைப் பெருக்கி அதனை மிதமாக வெளியேற்றுகிறது. மலத்தை இளக்கி வெளியேற்றும் ஆற்றல் பெற்றது. மலச்சிக்கலைத் தவிர்க்கும் இக்கீரை கல்லீரலுக்கு வலிவு கொடுக்கிறது.கண்நோய்கள் குணமாகும்உடலில் ஏற்படும் எரிச்சலுக்கு இந்த இலையில் சாற்றினை தடவ எரிச்சல் தணியும். வைட்டமின் ஏ அதிகமாக இருப்பதால் கண் நோய்களை இக்கீரை போக்குகிறது. கண்ணுக்கு தெளிவையும், பார்வையும், கூர்மையும் ஏற்படுகிறது. உடற்சூட்டால் ஏற்படும் கண் வீக்கம், அழற்சி முதலியவற்றுக்கு இக்கீரையின் சாற்றை கண் இமைகளில் பூச குணம் கிடைக்கும். கீரையை உணவாக உட்கொண்டாலும், கண் நோய்கள் குணமடையும் என்றும் உணவியல் வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
நன்றி:tamil.boldsky.com@
 


Engr.Sulthan
@
My Best Friend  
khaja mueenudeen
 
takhaja@gmail.com

Thursday, February 16, 2012

இதற்கு இப்போதே முடிவு கட்டியாக வேண்டும் ?



மௌலவி அ. முஹம்மது கான் பாகவி


காதலில் கள்ளக் காதல் என்ன? நல்ல காதல் என்ன? எல்லாக் கண்றாவியும் ஒன்றுதான். காதல் மயக்கத்தில் விழுந்த ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும், அந்தப் போதை தெளியும்வரை நிஜத்தை நிமிர்ந்து பார்ப்பதே இல்லை.

தன்னை மறந்து, தன்னைப் பெற்றவர்களை மறந்து, உற்றாரையும் உறவினரையும் மறந்து, சமுதாயத்தை மறந்து, சமயத்தை மறந்து... இப்படி எதார்த்தங்கள் அனைத்தையும் மறந்துவிட்டு, அந்தச்... சுகம் ஒன்றே இலட்சியம் என்று கிறுக்குப் பிடித்து அலையும் காதல் மோகம் தேவைதானா?

அல்லது கையிலிருக்கும் காசையும் கழுத்திலிருக்கும் நகையையும் பறித்துக்கொண்டு, கற்பையும் சூறையாடிவிட்டு அந்தக் காமுகன் ஓடிப்போகும்வரை சுற்றுச்சூழலையே மறந்துகிடந்தவள் நடுத்தெருவில் நிர்க்கதியாகக் கைவிடப்படுகிறாளே அந்தப் பேதைக்கு இக்கதி தேவைதானா?

அல்லது வங்கி இருப்பெல்லாம் இல்லாமலாகி, கையிலிருந்த கடிகாரமும் அலைபேசியும்கூட மார்வாடி கடைக்குப் போனபின்பும் அந்தக் காமுகியின் கோரப்பசி அடங்காமல், உடுத்திய வேட்டி மட்டுமே அந்த முட்டாள் பையனிடம் எஞ்சியிருக்கும் நிலையில், இனி உன்னை நம்பிப் பயனில்லை என்று கை கழுவிவிட்டு வேறொரு ஏமாளியைத் தேடி அந்த விலைமாது ஓடுகிறாளே, அவனுக்கு இந்த அவலம் தேவைதானா?

அல்லது இருவரும் இணைந்து சில ஆண்டுகள் ஆனந்தமாக வாழ்ந்து, குழந்தைகளையும் பெற்றுக்கொண்டுவிட்டு, பண நெருக்கடியோ மன நெருக்கடியோ ஏற்படும்போது, உன்னை நம்பி நான் வந்தேனே! என்று ஒருவருக்கொருவர் பரஸ்பரம் நொந்துகொண்டு, தற்கொலையில் அல்லது மணமுறிவில் போய் நிற்குமே! இந்தக் காதல் இருவருக்கும் தேவைதானா?

ஆய்வின் முடிவு

இதை நாம் வாதத்திற்காகவோ வருத்தத்திற்காகவோ குறிப்பிடவில்லை. ஆய்வின் முடிவு இதுதான்:

ஹெலன் ஃபிஷர் என்ற மேற்கத்திய ஆராய்ச்சியாளர் ஒருவர், காதலர்களின் மூளையை ஸ்கேன் செய்து பார்த்தாராம்! 1. காம்ம் 2. உணர்வுபூர்வமான காதல் 3. நீண்டகாலப் பிணைப்பை முன்னிருத்தும் காதல் ஆகிய மூன்று வகையான உணர்வுகள் இருப்பதைக் கண்டறிந்தார்.

இவற்றில் காமம்தான் முதலிடத்தைப் பெற்றது. இரண்டாவது இடம் உணர்வுபூர்வமான காதலுக்கு. மிகமிகக் குறைவாகவே நீண்டகாலப் பிணைப்பை முன்னிருத்தும் காதல் மூளையில் தென்பட்டதாம்!

இப்போது சொல்லுங்கள்! காதல் என்ற பெயரில் காமம்தானே விளையாடுகிறது! இதில் போலி எது? அசல் எது என்பதை அவனோ அவளோ எப்படிப் பகுத்தறிய முடியும்?

அண்ணன் – தங்கையாகத்தான் பழகுகிறோம் என்று சொல்லிக்கொண்டு, இளம்பெண்ணின் தாயார் தன் கரத்தால் அன்போடு சமைத்துப்போட்டதையெல்லாம் பல நாட்கள் ருசித்துவந்த ஐந்து மாணவர்கள், ஒருநாள் அவளுக்குக் குளிர்பானத்தில் மதுவைக் கலந்துகொடுத்து, இரவு முழுக்க அந்த ஐந்து நாய்களும் கடித்துக் குதறிய சம்பவம் சென்னை மட்டுமன்றி, தமிழகத்தையே உலுக்கி எடுத்ததே!அவர்களில் சிவானந்தம் (19) என்பவன் பல ஆண்டுகளாக அவளைக் காதலித்தவனாம்!

இது காதலா? காம வெறியா? அதையும் தாண்டி, மற்றவனுக்குக் கூட்டிக்கொடுக்கும் ஈனத்தனமில்லையா இது?

அது மட்டுல்ல; மணவிலக்கு (டைவர்ஸ்) கோருவோரில் கணிசமான எண்ணிக்கையினர் காதல் திருமணம் செய்துகொண்டவர்களே என்பதும் ஆய்வின் முடிவாகும்.

எதையோ எதிர்பார்த்து கண்ணும் கண்ணும் உரையாடுகின்றன. எதிர்பார்ப்பு பூர்த்தியாகிவிட்ட பிறகு, அல்லது ஏமாற்றம் ஏற்பட்ட பிறகு அதே கண்கள் உரையாடாவிட்டாலும், சாதாரணமாகப் பார்த்துக்கொள்வதுகூட இல்லை. மறுக்க முடியுமா?

கலாசாரச் சீரழிவு

கற்பும் காசும் பறிபோவதோடு காதல் போதை தெளிகிறதா என்றால், மார்க்கம் தாண்டிப்போய் ஓர் இறைமறுப்பாளனின் வாரிசை சமுதாயப் பெண்ணொருத்தி சுமக்கின்ற தாங்க முடியாத கொடுமையும் அல்லவா அரங்கேறிக்கொண்டிருக்கிறது! அல்லது ஒரு முஸ்லிமின் வாரிசு இறைமறுப்பாளியின் வயிற்றில் உருவாகி, அவள் மடியில் தவழ்கிறதே! என்ன சொல்ல?

பள்ளிவாசலுக்கு வந்திருப்பானோ வரவில்லையோ! ஓரிறைக் கோட்பாட்டை இதுவரை கைவிட்டிருக்கமாட்டான் அல்லவா? இன்று அவன் சர்ச்சில் அல்லது கோயிலில் காதலியுடன் வழிபாடு செய்கிறான். அல்லது நீ நீயாக இரு; நான் நானாக இருக்கிறேன் என்று சமத்துவம் பேசிக்கொண்டு, குழந்தைகளை நரகத்தில் தள்ளுகின்றான்.

திருக்குர்ஆன் என்ன சொல்கிறது தெரியுமா?
இணைகற்பிக்கும் பெண்கள் (ஏக)இறைநம்பிக்கை கொள்ளாத வரை, அவர்களை நீங்கள் மணக்காதீர்கள். இணைவைப்பவள் உங்களை (எவ்வளவுதான்) கவர்ந்தாலும், அவளைவிட இறைநம்பிக்கை கொண்ட ஓர் அடிமைப் பெண்ணே சிறந்தவள். 
(அவ்வாறே,) இணைகற்பிக்கும் ஆண்கள் (ஏக)இறைநம்பிக்கை கொள்ளாத வரை, அவர்களுக்கு (உங்கள் பெண்களை) மணமுடித்துக் கொடுக்காதீர்கள். இணைவைப்பாளன் உங்களை (எவ்வளவுதான்) கவர்ந்தாலும், அவனைவிட இறைநம்பிக்கை கொண்ட ஓர் அடிமையே சிறந்தவன். அவர்கள் (உங்களை) நரகத்திற்கு அழைக்கிறார்கள். ஆனால், அல்லாஹ்வோ தனது ஆணையின்பேரில் சொர்க்கத்திற்கும் பாவமன்னிப்பிற்கும் அழைக்கிறான். (2:221)
இன்று முஸ்லிம் சமுதாயம் சந்தித்துவரும் இழிவு நிலைக்கு எவ்வளவு பொருத்தமான, அழுத்தமான திருவசனம் பார்த்தீர்களா? பெற்றோர்களேகையில் விளக்கைப் பிடித்துக்கொண்டே, நரகம் என்று தெளிவாகத் தெரிந்துகொண்டே உங்கள் கண்மணிகள் அதில்போய் விழுந்துகொண்டிருக்கிறார்களேங்களுக்கு எப்படி தூக்கம் வருகிறது? சோறு இறங்குகிறது? மானம், சூடு, சுரணை என்பதெல்லாம் உங்கள் சமுதாயத்திற்குக் கொஞ்சம்கூட இல்லையா என்று கேட்கும் மாற்றுமத நண்பர்களுக்கு என்ன பதில் சொல்வது?

எழுதிவிட்டேன் பலதடவை

முஸ்லிம் இளைஞர்களும் இளம்பெண்களும் தமிழ்நாட்டில் காதலின் பெயரால் அழிந்துகொண்டிருப்பது குறித்து புள்ளிவிவரங்களுடன் நானும் பலமுறை எழுதிவிட்டேன். கடந்த 2011 ஜூலை 13ல் வெளியான தமிழக அரசின் கெஜட்டில் உள்ளபடி மதம் மாறிய 106 பேரில் 9 பேர் முஸ்லிம்கள் என்ற உண்மையை வெளியுலகுக்குக் கொண்டுவந்து, சமுதாய ஏடுகள் அனைத்திற்கும் கட்டுரை அனுப்பினேன். பெரும்பாலான இதழ்களில் வெளிவந்தது.

நமது வலைத்தளத்திலும் வெளியிட்டோம். பல அன்பர்கள் தங்கள் கருத்துகளைப் பதிவும் செய்தார்கள். தமிழகத்தில் சென்னை, திருச்சி போன்ற இடங்களில் இக்கொடுமையைத் தடுத்துநிறுத்த ஜமாஅத் நிர்வாகிகளும் உலமாக்களும் கலந்துகொண்ட கலந்தாய்வுக் கூட்டங்களும் நடந்தன.

சென்னை மஸ்ஜித் மஃமூர் பள்ளிவாசலில் 17.01.2012 அன்று நடந்த கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினேன். அதன் ஒலிப்பதிவு நமது முகநூல் பக்கத்தில் வெளியாகியும் உள்ளது. m(அதன் இணைப்புகளை க்ளிக் செய்து செவியுறலாம்) https://www.facebook.com/khanbaqavi?sk=wall http://f.cl.ly/items/1Z2A3m0K1Y432z3M3C0d/Khan%20Baqavi%20Speech%20@%20mamoor%2017.01.2012.mp3 இன்னும் பல கட்டுரைகளும் எழுதியிருக்கிறேன். அக்கட்டுரைகளைத் தொகுத்து புத்தக வடிவில் சென்னை ஜமாஅத்துல் உலமா சபை வெளியிட்டுள்ளது. சமுதாயத்தில் ஓர் அசைவு தென்படுகிறது. அல்ஹம்து லில்லாஹ்...

ஆனாலும், வேகம் போதாது. போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டிய ஒரு ஆபத்துக்கு, நத்தை வேகத்திலான முயற்சிகள் எப்படி ஈடு கொடுக்கும்? மதம்விட்டு மதம்மாறி காதல் செய்வதற்கும் திருமணம் செய்வதற்கும் முஸ்லிம் பெற்றோர்களே சம்மதம் தெரிவிக்கும் அடுத்த கட்டத்திற்கு சமுதாயம் போய்விட்டதாகத் தெரிகிறது.

அண்மையில் சில திருமண அழைப்பிதழ்கள் பார்வைக்கு வந்தன. இரண்டிலும் மணமகன் முஸ்லிமல்லாதவன். மணமகள் முஸ்லிம் பெண். அவரவர் தத்தம் பெற்றோர் பெயர்களையும்அவ்வண்ணமே கோரும்’ இடத்தில் முஸ்லிம் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பெயர்களையும் கூச்சமின்றி குறிப்பிட்டிருக்கிறார்கள். பெற்றோர், உற்றார் உறவினர் இசைவின்றி இது நடக்குமா? சமுதாயம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது?



மறுமை நாளின் அடையாளம்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (பயனுள்ள) கல்வி அகற்றப்படுவதும் அறியாமை நிலைப்படுவதும் மது (மலிவாக) அருந்தப்படுவதும் விபசாரம் வெளிப்படையாக நடப்பதும், மறுமை நாளின் அடையாளங்களில் அடங்கும். (ஸஹீஹுல் புகாரீ – 80)
அண்மையில் ஒரு செய்தி படித்தேன்காஞ்சிபுரம், திருவள்ளூர், தூத்துக்குடி போன்ற நகரங்களில் தொழில் வளர்ச்சி சிறப்பாக இருந்தாலும் அங்குள்ள மக்களின் வறுமை விகிதம் குறையவில்லை. காவிரி டெல்டா மாவட்டங்களான நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் வறுமையின் அளவு குறைவாக இருக்கிறது. இதற்குக் காரணம் விவசாயம். அங்கு விவசாயத் தொழில் பரவலாகவும் பாரம்பரியமாகவும் நடைபெறுவதால் பொதுமக்கள் பசி பட்டினியின்றி வாழ முடிகிறது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் தனிநபர் ஆண்டு வருவாய் ரூ. 2,576 ஆக இருக்கிறது. தனிநபர் வருவாய் குறைவாக இருந்தாலும் அங்கு வறுமையின் விழுக்காடு 10.9 மட்டுமே. திருவாரூர் மாவட்டத்தில் தனிநபர் ஆண்டு வருவாய் ரூ. 2,341; ஆனால், வறுமை 16.6 விழுக்காடு மட்டுமே.

முஸ்லிம்களைப் பொறுத்தவரை பழைய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் வேளாண்மை நிலங்களை விற்றுவிட்டு, வெளிநாடுகளுக்கு ஆண்கள் படையெடுத்துவிட்டனர். ஒரு சில முஸ்லிம்களிடம் மட்டுமே விவசாய நிலங்கள் உள்ளன. வெளிநாட்டு வாசல் ஒருநாள் அடைக்கப்பட்டால், நமது நிலை என்னவாகும் என்பதைச் சிந்திக்காமல், நிலங்களை விற்றுவிட்டு வெளிநாடுகளுக்குப் போய்விட்டார்கள்.

அயலகங்களில் ஆண்கள் பல மாதங்கள், சில வேளைகளில் பல ஆண்டுகள் தங்கிவிடும்போது உள்ளூரிலே பெண்கள் இயற்கையான உறவுகளுக்கு ஏங்குகிறார்கள். ஆட்டோ ஓட்டுநர், கார் ஓட்டுநர், பால்காரன், கேபிள் டி.வி. ஆபரட்டர், பொருட்கள் விற்க வருபவன், வங்கி ஊழியன், உறவுக்காரன் எனப் பல வகையான ஆண்களுடன் பேசுவதற்கும் பழகுவதற்குமான சந்தர்ப்பங்கள் வாய்க்கின்றன.
“ஓர் ஆண் (அந்நியப்) பெண்ணுடன் தனிமையில் இருக்க வேண்டாம்! அங்கு மூன்றாவது ஆளாக ஷைத்தான் இருப்பான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள். (அபூதாவூத்)
நபியவர்களின் எச்சரிக்கை பல ஊர்களில் உண்மையாகிவருகிறது. அங்கெல்லாம் ஷைத்தானின் கொடி பறக்கிறது. அக்கொடியின் நிழலில் கற்பு பறிபோகிறது.
கண்ணின் விபசாரம் பார்வை; நாவின் விபசாரம் பேச்சு; மனமோ ஆசைப்படுகிறது;இச்சிக்கிறது. உறுப்பு அதை மெய்ப்பிக்கிறது; அல்லது (விலகி) பொய்யாக்கிவிடுகிறது. என்பதும் நபிமொழிதான் (ஸஹீஹுல் புகாரீ – 6243). பார்வைக்கும் பேச்சுக்கும் ஏன் கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது என்பது இப்போது தெரிகிறதா?
இதுவெல்லாம் ஒருபுறம் இருக்க, சொகுசு வாழ்க்கைக்குப் பழக்கப்பட்டுவிடும் பெண்கள், தம் வீட்டு ஆண்கள் அனுப்பிவைக்கும் பணம் போதவில்லை என்று சொல்லி, கொடும் பாவத்தை ஒரு தொழிலாகவே செய்யும் துணிச்சல் பெற்றுவிட்டார்கள் என்பதுதான் கொடுமையிலும் கொடுமை.

தாயே மகளை அனுப்பிவைப்பதையும் மாமியாரே மருமகளை வண்டியில் ஏற்றிவிடுவதையும் உங்களால் நம்ப முடிகிறதா? என்னால் நம்ப முடியவில்லை. பிறகு தாய்மைக்குத்தான் என்ன அர்த்தம்? குடும்பத் தலைவி என்பதற்குத்தான் என்ன பொருள்?

தீக்குண்டத்தில் நிர்வாணமாக

நபி (ஸல்) அவர்கள், தாம் நரகத்தில் கண்ட காட்சிகளை விவரித்தார்கள்; அப்போது பின்வருமாறு கூறினார்கள்:

அடுப்பு போன்ற ஒரு பொந்து. அதன் மேற்பாகம் குறுகலாகவும் அடிப்பாகம் விசாலமானதாகவும் இருந்த்து. அதற்குக் கீழ் தீ எரிந்துகொண்டிருந்தது. தீ அதிகமாகும்போது அந்தப் பொந்தின் அடியில் உள்ளவர்கள் வெளியேற முயன்றார்கள். (ஆனால், மேற்பகுதி குறுகலாகயிருந்ததால் வெளியேற முடியவில்லை.)

தீ அணைந்ததும் பழைய (கீழ்ப்) பகுதிக்கு அவர்கள் வந்துவிட்டார்கள். அதில் ஆண்களும் பெண்களும் நிர்வாணமாகக் கிடந்தார்கள். நான், இவர்கள் யார்?” என்று கேட்டேன். வானவர்கள், இவர்கள்தான் விபசாரத்தில் ஈடுபட்டவர்கள் என்று சொன்னார்கள். (ஸஹீஹுல் புகாரீ – 1386)

அழகான பெண்கள் வசிக்கும் பகுதியில் வடநாட்டுக் கும்பல் கடைகளைத் திறப்பார்கள். அடகு கடை, நகைக் கடை, துணிக்கடை போன்ற வணிகத் தலங்களைத் திறந்து, மறைமுகமாக விபசாரத் தொழிலையும் மேற்கொள்கிறார்கள். நகை வாங்க வரும் பெண்களுக்கு வலியச்சென்று உதவுவதுபோல் உதவி செய்து வலையில் சிக்கவைத்து, இனி திரும்ப நினைத்தாலும் திரும்ப முடியாத நெருக்கடியில் தள்ளிவிடுவார்கள்.

புதுவகை நகைகள்மீதும் துணிகள்மீதும் பெண்களுக்கு இருக்கிற மோகத்தை நன்கு பயன்படுத்திக்கொள்ளும் இந்த அயோக்கியர்கள். மீளமுடியாத படுகுழியில் தள்ளிவிடுகிறார்கள். வெளியே சொன்னால் குடும்பத்தையே அழித்துவிடுவோம் என்ற மிரட்டல் வேறு.

இவர்களுக்கு வகைவகையான புரோக்கர்கள்; சட்ட சிக்கலில் இருந்து தப்பிக்க காவல்துறை, வழக்கறிஞர்கள், நீதிபதிகள் என எல்லாரும் துணை; கூட்டணி. இந்தப் பாவத்திற்குத் துணைபோகின்றவர்களிலும் முன்னின்று ஏற்பாடு செய்கின்றவர்களிலும் கலிமா சொன்ன முக்கியப் புள்ளிகளும் இருப்பதுதான் வன்கொடுமை.

இது ஒரு பெரிய நெட்வொர்க் என்று சொல்லப்படுகிறது. திருமண வீடியோ, பள்ளி நிகழ்ச்சிகள் வீடியோதான் பெண்களுக்கு வலைவீச இவர்களுக்குச் சரியான வாய்ப்பை ஏற்படுத்தித் தருகின்றன. இவ்வாறு சிக்கும் அழகான இளம்பெண்களை மாநிலம் தாண்டி விபசாரத்திற்கு அனுப்பிவைப்பதுடன், பாலியல் படங்கள் எடுக்கவும் போதைப் பொருள் கடத்தவும் இக்கயவர்கள் பயன்படுத்துகின்றனர்.

ஆக, பெண்கள் மார்க்கத்திற்கு வெளியே; ஆண்கள் விரக்தியின் விளிம்பில். இதற்கு ஒரு முடிவு கட்டியே ஆக வேண்டும். எப்படி என்பதுதான் தெரியவில்லை. யோசித்து யோசித்து தூக்கம் கெட்டதுதான் மிச்சம்.

இது பரசிக்கொண்டுவரும் பேராபத்து. அங்குதான்; இங்கு இல்லை என்றெல்லாம் பிரித்துப்பார்க்க முடியாது. ஒவ்வொருவரும் கவலையோடும் அச்சத்தோடும் இது குறித்து சிந்திக்க வேண்டும். தனிமையில் அழுது புலம்புவதில் புண்ணியமில்லை. எப்பாடுபட்டேனும் இந்தச் சமூக்க் கொடுமையை, பெண்ணினத் தீமையை தடுத்து நிறுத்தியாக வேண்டும்!

பிப்ரவரி 14ஆம் தேதி ‘காதலர் தினம்’ என்றொரு கொடுமை அரங்கேறிக்கொண்டிருக்கிறது. இதற்கு ஏறத்தாழ எல்லா நாடுகளும் சட்ட அனுமதி அளிக்கின்றன. இத்தகைய நரகச் சூழலில்தான் பண்பாடு மிக்க முஸ்லிம்களும் வாழ்ந்தாக வேண்டிய கட்டாயம் உள்ளது. நாம்தான் நம் வீட்டுப் பிள்ளைகளைக் கண்ணும் கருத்துமாக இருந்து பாதுகாத்திட வேண்டும்.

நம் வீட்டு ஆடுகள் வேலியைத் தாண்டும் அளவுக்கு வந்துவிட்ட இன்றையச் சூழலில் வேலியே இல்லாவிட்டால் என்னவாகும் என்பதைப் பெற்றோர்கள் சிந்திக்க வேண்டும்.


----------------
என்றும் மாறா அன்புடன்...
குவைத்திலிருந்து...
பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ