Wednesday, September 21, 2011

நாட்டு கோழி வளர்ப்பும் விற்பனையும்!!!




 
எங்கள் ஊருக்கு பக்கத்துக்கு கிராமத்தில்  நாட்டு கோழி பண்ணை அமைத்து வெற்றிகரமாக நடத்தி வரும் திருவேங்கடம் என்ற நண்பரிடம் சேகரித்த தவல்களை இங்கே உங்களிடம் பகிந்துகொள்கிறேன்.நாட்டுகோழி பண்ணை  அமைக்கும் நண்பர்களுக்கு இது உதவிகரமாக இருக்கும் என எண்ணுகிறேன்.இன்றைய நிலையில் ஆர்கானிக்,ஆர்கானிக் என்று மக்கள் இயற்கை  உணவு முறைகளை  நாடி செல்லும் நிலையில்இயற்கையாக கிடைக்கும்  நாட்டு கோழிகளுக்கு இனி வரும் காலங்களில் நல்ல கிராக்கி உண்டு என்பதை மக்கள் உணர ஆரம்பித்துவிட்டார்கள் என்பதை  பெருகி வரும் நாட்டு கோழி பண்ணைகள் மூலமும் நாட்டுகோழிகளின் விலை அதிகரிப்பின்  மூலமும் நாம் அறிந்து கொள்ளலாம் ( பிராய்லர் கோழிகள் மூலம் ஏற்படும் தீமைகள் குறித்த உண்மைகள் ,அதன்  மிக பெரிய வியாபார சந்தை கருதி மூடி மறைக்கப்பட்டு வருவது வேறு விஷயம்.)
பண்ணை அமைப்பு முறை
-----------------------------------------------
நாட்டு கோழிகள் இயல்பாகவே மிகவும் பலமானவை மழை,காற்று,அதிக வெயில்  போன்றவற்றை எளிதாக தாங்கும் குணம் உள்ளவை எனவே இதற்கு ப்ராய்லர் கோழிகளுக்கு அமைப்பதை போன்ற கொட்டகை அமைப்பது தேவை அற்றது.திறந்த வெளியில் கம்பி வேலி அமைத்து எளிதாக  வளர்க்கலாம்,இதற்கு "டயமன்ட் கிரில்" என்ற மிக சிறிய
ஓட்டைகள் உள்ள வேலிகள் அமைப்பதன் மூலம் கோழி குஞ்சுகள் வெளியே செல்வதை தடுக்க முடியும். நாட்டு கோழி தேடி பாம்புகள் வருவது வாடிக்கை. அதனால்வேலியின் கிழே முழுவது வலை அடித்து விடுவதன் மூலம்  பாம்புகளை நாம் தடுக்க முடியும்.பொதுவாக ஒரு ஏக்கருக்கு 2000  கோழிகள் வரை எளிதாக வளர்க்க முடியும்இதற்கு கொட்டகை என்று பெரிதாக ஒன்றும் தேவை இல்லை,மழை,வெயில் போன்றவற்றில் இருந்து ஒதுங்க சிறிய செலவிலான கூரை  போன்ற கொட்டகைபோதுமானது.
கோழி தீவனம்
------------------------------
கோழிகளுக்கு உணவாக  பச்சை கீரைவகைகள்,கோழி தீவனம் ,காய்கள் மற்றும் கலைஞர் அரிசி போன்றவகைகள் வழங்க படுகிறது.பிறகு இது இயற்கையாக சுற்றி திரிவதால் ,காட்டில் உள்ள புழு பூச்சிகளையும் உணவாக உட்கொள்ளும்.
நோய் தடுப்பு
-----------------------
தினமும் அனைத்து கோழிகளையும் நன்றாக கவனிக்க வேண்டும்.ஏதாவது ஒரு கோழிக்கு நோய் வந்தாலும் அது வேகமாக அனைத்து கோழிகளுக்கும் பரவி விடும் எனவே   ஒரு கோழிக்கு நோய் வந்தாலும்  உடனடியாக கண்டு பிடித்து மருந்து கொடுத்து விடுவது அவசியம்.
விற்பனை
-------------------
குஞ்சுகள் வளந்த 80  மற்றும் 90  நாட்களில் இருந்து விற்க ஆரம்பிக்கலாம்,இயற்கையாக வளர்க்கப்படும் கோழிகள் என்பதால் அந்த பகுதில் உள்ள பொதுமக்களே நல்ல ஆர்வத்துடன் வாங்கி செல்வார்கள்.மற்றும் வியாபாரிகளுக்கு குறைந்த விலைக்கு விற்காமல் பக்கத்துக்கு நகர் புறங்களில் உள்ள அசைவ உணவு விடுதிகளுக்கு கோழிகளை சப்ளை செய்வதன் மூலம் அதிக லாபம் பெறலாம் என்று நண்பர் திருவேங்கடம் கூறுகிறார்.வியாபாரிகள் பொதுவாக கிலோ 140  முதல் 155  வரை கிலோவுக்கு கொடுப்பதாகவும்  இவர் கூறுகிறார்.

ப்ராய்லர் கோழி வளர்ப்பில்  லாபம் பார்ப்பது என்பதும் இன்றைய  சுழலில் பெரும் சவாலாகவே  உள்ளது. தெரிந்த நண்பர் ஒருவர் ஏழு லட்சம் ருபாய் செலவு செய்து கொட்டகை அமைத்து ப்ராய்லர் கோழி வளர்த்து வந்தார் இப்பொழுது சுகுணா பாம்ஸ் வருடத்திற்கு இரண்டு முறை மட்டுமே குஞ்சுகள் தருகிறார்கள்(சில வியாபார நோக்கத்திற்காக),வருடத்திற்கு ஆறு மாதங்கள் அவரது கொட்டகை காலியாகவே உள்ளது.அவர் இப்போது மொத்த  முதலிட்டின் வட்டிக்கு தான் லாபம் வருகிறது என்று புலம்பிதிரிகிறார்.ப்ராய்லர் கோழி வளர்ப்பு என்பது சுகுணா போன்ற நிறுவனங்களின்  மொத்த கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் இது போன்று நாட்டு கோழி வளர்ப்பில் ஈடுபடுவது போன்றவை எவரையும் நம்பாமல் நாமே தொழில் செய்து செழிக்க நல்ல வழி என்று நண்பர் திருவேங்கடம் கூறுகிறார்.

To get more information: please contact 919886650235

 

நலம் தரும் நாட்டு கோழி பண்ணை!!!


நாட்டுக் கோழியின் விலை இன்றைக்கு ஒரு கிலோ 250 ரூபாய். காரணம்நாட்டுக்கோழி அவ்வளவாக கிடைப்பதில்லை. இதனால் இதன் இறைச்சியும் விலை அதிகமாக இருக்கிறது.நாட்டுக் கோழி ஏன் டிமாண்ட் ஆக இருக்கிறதுநாட்டுக் கோழிகளை யாரும் "பிராய்லர்" கோழிகள் போல் லட்சக்கணக்கில் பண்ணை முறையில் வளர்ப்பதில்லை. கிராமங்களில் பெண்கள் இவற்றை புழக்கடையில் தான் வளர்க்கிறார்கள். அதனால் இந்த கோழிகள் பெருமளவில் கிடைப்பதில்லை. ஆனால் பிராய்லர் கோழிகளை இன்குபேட்டர் முறையில் பொரிக்க வைத்து எடுப்பதால் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான கோழிக்குஞ்சுகளை பெற முடிகிறது. அவற்றை வளர்த்து கறிக்கோழிகளாக மாற்ற முடிகிறது.இந்த பிராய்லர் கோழிகள் செயற்கையாகவே பிறந்து ஊக்கமருந்துகளால்உப்பிய பலூன் போல பெருத்து 47 நாட்களில் கிலோவை தாண்டி விடுகிறது. இந்த கோழிகளின் நோய் எதிர்ப்பு சக்திக்காக செலுத்தப்படும் மருந்துகள் மனித உடலில் பாதிப்பை ஏற்படுத்துமா என்பது பற்றி இன்னும் சரியான விளக்கம் இல்லை.
ஆக..இந்த நிலையில் நாட்டுக்கோழிகளை அதிக அளவில் உற்பத்தில் செய்தால் ஏராளமாக நாட்டுக் கோழிகள் விற்பனை ஆகும். நாட்டுக் கோழி பண்ணை வைப்பவருக்கு இதனால் லாபம் கொட்டும்.மேலும் நாட்டு கோழி பண்ணை அமைக்க பிராய்லர் கோழிகளை போல மிக அதிக செலவிலான செட் போட தேவையில்லை,சாதாரண  மிக சிறிய  அளவிலான  ஓட்டைகள் கொண்டகம்பி வலை 'பெண்சிங்போதுமானது.இதனை கணக்கில் கொண்டு "தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்'கிராமப்புற பெண்களுக்கும்வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கும் நாட்டுக் கோழி வளர்ப்பது பற்றிய மாத கால தொலை தூர படிப்பை வழங்க உள்ளது. தபால் வழியில் கற்பிக்கப்படவுள்ள இந்த பாடத்திட்டத்தில் கோழியினங்கள்தீவனங்கள்,நோய்கண்டறியும் முறைபண்ணை அமைத்தல் உள்பட எளிதாக நாட்டுக் கோழிகளை வளர்ப்பது பற்றி சொல்லித் தர போகிறார்கள்.
இந்த பாடத்தை படித்து விட்டால்கிராமப்புறத்தில் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்கள் சிறிய அளவில் பண்ணையை தொடங்கி நடத்தலாம். பிறகு வெற்றிகரமாக பெரிய பண்ணைகளை தொடங்கலாம். இந்த நாட்டுக் கோழி வளர்ப்பு தபால் வழி படிப்பில் சேர 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். தமிழில் எழுதப்படிக்க ெத்ரிந்திருக்க வேண்டும். இவ்வளவு தான் தகுதி.
விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தேசிய வங்கி ஒன்றில் 220 ரூபாய்க்கு கல்வி இயக்குநர்தமிழ்நாடு கால்நடை அறிவியல் மருத்துவ பல்கலைக்கழகம்மாதவரம்சென்னை. என்ற பெயருக்கு டிமாண்ட் டிராப்ட் எடுத்து கூடவே ஒரு கடிதத்தில் தங்கள் பெயர்,முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை எழுதி இதே முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
அவர்கள் பாடத்திட்டங்களை அனுப்புவார்கள். படித்து பாஸாகலாம்.
இது பற்றி மேலும் விவரங்கள் அறிய 044-2555 4375, 2555 1586, 2555 1587 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

THANKS BY MOHAMED HALITH 
 
mnhalith@gmail.com

1 comment:

  1. Mikka bayanulla vilakkam.

    Nanri.

    A.v.omkumar

    ReplyDelete