நண்பனே, இறைவன் உனக்கு நல்ல சிந்தனையை கொடுக்க பிரார்த்திக்கிறேன். உண்மையில் உன்மீது எனக்குக் கடும் கோபம், வீட்டிற்கு போன் செய்தபோது அம்மா சொன்னார்கள் " நீ இன்று என் வீட்டிற்கு பயணம் சொல்ல வந்தாயாம்.இது ஆறாவது முறை ! மீசை முளைக்காத வயதில் கண் கலங்க வார்த்தைகளை மென்று முழுங்கி முதன்முதலாக "வெளிநாடு போகிறேன்" என்று பயணம் சொல்ல வந்தாய்.பதினான்கு வருடத்திற்கு பிறகு இன்றும் பயணம் சொல்லிக் கொண்டிருக்கிறாய். இன்னும் எத்தனை முறை பயணம் சொல்வாய்..? 14 வருடமாக அப்படி என்னதான் சம்பாதித்து விட்டாய் ? உன் திறமைக்கும்,உழைப்புக்கும்,படிப ்பிற்கும் இங்கேயே 14 வருடத்தில் நிறைய சம்பாதித்திருக்க முடியும். முதன் முதலாய் திரும்பி வந்தபோது உன் அம்மாவின் நோயையும் அவர்கள் படும் கஷ்டத்தையும் அருகிலிருந்து பார்த்த பிறகும் கூட நீ விடுமுறை முடிந்து போனாய்....கல்நெஞ்சக்காரன் நீ....! அதற்கடுத்து ஏதோ ஒரு விடுமுறையில் நீ வரும்போது உன் அப்பா இல்லை. உன்னைத் தூக்கி வளர்த்த உன் அப்பாவின் மரணத்திற்கு தொலைபேசியில் கதறினாய்.ஒரு வாரமாய் சாப்பிடாமல் தவித்தாய்..இதுதான் பெற்றோருக்குச் செய்யும் கடமையா ..? கடைசி காலத்தில் மருந்து கூட வாங்க ஆளில்லாமல் பிள்ளையிருந்தும் அனாதையாய்தான் இறந்து போனார்.அவரின் பிணத்தை கூட உன்னால் பார்க்க முடியவில்லை. கோடி ரூபாய் அப்பா,அம்மாவிற்கு அனுப்பினாலும் கடைசி காலத்தில் அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைக்கு உன் வெளிநாட்டு வாழ்க்கை என்ன பதில் தரும் ? உன் தங்கச்சி படிப்பிற்கும் பணம் அனுப்பினாய் ,திருமணத்திற்கு நகை,பணம் தந்தாய். அன்பும்,அரவணைப்பும் இல்லாத பாசங்களை காகிதத்திலே பரிமாறும் உறவாகி நிற்கிறாள் அவள். நண்பா, கல்யாணத்திற்கு முன்பு எப்படியோ..! ஆனால் உன்னையே வாழ்க்கை என்று வந்த மனைவியை விட்டுவிட்டு 45 நாட்களில் வெளிநாடு போனாய்.எப்படிடா மனம் வந்தது ? நீ கோபப்பட்டாலும் சரி..உன் மீது உரிமையுடன் கேட்கிறேன்..எதற்காக திருமணம் செய்தாய் நீ ? 45 நாட்கள் அன்பையும்,பாசத்தையும் அள்ளி அள்ளித் தந்து விட்டு ஏங்கித் தவிக்க பறந்து விட்டாயே..! பணம் மட்டும்தான் வாழ்க்கையா ? எல்லாவற்றையும் விடு இந்த முறை உனக்கான ஒரு வாரிசு...! அந்தப் பிஞ்சு முகத்தை மறந்து செல்லத் துணிந்து பயணம் சொல்ல வந்திருக்கிறாய்.அன்புக் குழந்தையின் பொக்கை வாய் சிரிப்புக்கு...உன் லட்சங்கள் தூசுதான். நீ உயிரோடிருந்தும் உன் குழந்தை தந்தையின் அரவணைப்பு,கணடிப்பு,அறிவுரையில் லாமல் வளரப் போகிறது. வேண்டாம் நண்பனே...! இப்படிச் சம்பாதிக்கச் சொல்லி யாரும் உன்னை நிர்பந்திக்கல..! சென்னையில் கூட என்னால் இருக்க முடியவில்லை,நம் மண்னைத் தேடுகிறது, நம் ஊர் காற்றுக்கு உயிர் ஏங்கி தவிக்கிறது.அம்மாவின் மடியில் தலை வைத்து ஊர் கதை கேட்க ஆவல் கொள்கிறது.அப்பாவிற்கு சொடக்கு விட..தம்பியை அதட்டி படிக்க் சொல்ல...தெருவில் உள்ளவர்களுடன் உறவாட.... இதற்கெல்லாம் எத்தனை கோடி ஈடாகும்..? அப்பா,அம்மா,மனைவி,மக்கள்,குடும ்பம்,சொந்தம்,கா தல், கனிவு, சுற்றம்,பந்தம்...எல்லாவற்றையும ் விட..இளமையைத் தியாகம் செய்து விட்டு...எத்தனை...எத்தனை...நண் பர்கள் நம்மூரிலே...! 14 வருடத்தில் 6 விடுமுறை ! ஒரு விடுமுறைக்கு 2 மாதம் வீதம் 1 வருடம் ஊரோடு இருந்திருக்கிறாய்.13 வருடம் அகதியாய் வாழ்ந்திருக்கிறாய். இம்மண்ணின் மைந்தன் நீ! வந்தாரை வாழவைக்கும் தமிழகம் இது! உன் வாழ்வுக்கா இங்கு வழியில்லை? ஊரிலே நல்லதொரு தொழில் தொடங்கு அல்லது உன் படிப்புக்கு வேலை தேடு .கால் வயிறு கஞ்சின்னாலும் மனம் நிறைஞ்சு வாழணும்... உன் பயணத்தை ரத்து செய்..ஊரில் தொழில் துவங்கு...உன் முதல் பார்ட்னர் நான்..! மற்றவை நேரில் பேசுவோம்...போய் விடாதே! நான் வரும்போது நீ ஊரில் இருக்கணும்..?! எதிர்பார்ப்புடன் உன் நண்பன் முகவை சேக்>>>
முகவை சேக் அதிகமாக சம்பாதித்து சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதற்காக, தங்கள் சொந்த நாடுகளை விட்டு, வளமான நாடுகளுக்கு செல்வோர், உண்மையில் அப்படி சந்தோஷமாக இருக்கின்றனரா என்று ஓர் ஆய்வு சமீபத்தில் நடத்தப்பட்டது. ஆய்வின் முடிவு எதிர்மறையாகத் தான் அமைந்தது.
ReplyDeleteநடுத்தர மற்றும் குறைந்த வருமானம் உள்ள நாடுகளில் உள்ளவர்கள், பிரிட்டன், அமெரிக்கா போன்ற வளமான நாடுகளுக்குச் சென்று தங்கள் திறமைக்கேற்ப அதிகளவில் சம்பாதித்து அதன் மூலம் வாழ்வில் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று அந்நாடுகளுக்குச் செல்கின்றனர். சொந்த நாடுகளிலிருந்து அயல் நாடுகளுக்குப் புலம் பெயர்ந்து செல்வோரின் வாழ்க்கை சந்தோஷகரமானதாக இருக்கிறதா அல்லது அவர்கள் சென்ற நாட்டில் மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனரா என்று சமீபத்தில் ஓர் ஆய்வு நடந்தது.
"பொருளாதார புலம் பெயர்வும் மகிழ்ச்சியும்: தாயகத்தினர் மற்றும் குடியேறுவோருக்கு இடையிலான ஓர் ஒப்பீடு' என்ற தலைப்பில் பிரிட்டனைச் சேர்ந்த சமூகவியலாளர் டேவிட் பர்ட்ராம் என்பவர் இந்த ஆய்வை நடத்தினார். மொத்தம் 1,400 பேர் இந்த ஆய்வில் கலந்து கொண்டனர். ஆய்வின் இறுதியில், குடியேறுவோர் தாங்கள் எதிர்பார்த்த படி மகிழ்ச்சியாக இல்லை என்பது தெரிய வந்துள்ளது.
இது குறித்து டேவிட் கூறியதாவது: அதிகளவில் சம்பாத்தியம் செய்வதால் மகிழ்ச்சி கிடைத்து விடும் என்ற மக்களின் எதிர்பார்ப்பு தவறானது என்பதை தான் இந்த ஆய்வு நமக்கு காட்டுகிறது. அயல் நாடுகளிலிருந்து வளமான நாடுகளுக்கு குடியேறியவர்களில் பெரும்பாலோர் மனச்சோர்வுடன் தான் உள்ளனர். புலம் பெயர்ந்தோர் அதிகளவில் சம்பாதித்தாலும், தங்கள் உறவுகளை அவர்களால் முழுமையாகப் பேணிக் கொள்ள முடிவதில்லை. அதனால், சொந்த நாட்டுக்காரர்களை விட அந்த நாட்டில் குடியேறியவர்கள் மிகவும் குறைவான அளவிலேயே மகிழ்ச்சி அடைகின்றனர்.
தற்போதைய நிலையை விட அதிகமாகச் சம்பாதித்தால் மகிழ்ச்சியாக வாழலாம் என்று நினைத்துத் தான் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். ஆனால், அங்கு சென்றவுடன் மேலும் அதிகமாகச் சம்பாதித்தால் தான் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்ற நிலை உருவாவதும் இதற்கு ஒரு காரணம். சம்பாத்தியத்துக்கு ஏற்றாற்போல விருப்பங்களும் அதிகரித்து விடுகின்றன. நம்மில் பெரும்பாலோர், மகிழ்ச்சியை விட பணத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறோம். இந்த ஆய்வும், அது புலம் பெயர்வோர் விஷயத்தில் சரி தான் என்பதை காட்டுகிறது. ஆனால், வளமான ஒரு நாட்டில் வந்தேறியாக வாழ்வது என்பது மிகவும் கடினமானது. இவ்வாறு தெரிவித்தார்.
02 April at 11:39 · Like · 2 people