அமெரிக்க சிறையில் சிறைக்கைதியை சித்திரவதைச் செய்யும் காட்சி வெளியானது( வீடியோ)
சிறை அதிகாரிகளின் முன்னிலையில் சக கைதியொருவர் முஸ்லிம் சிறைக் கைதியை கொடூரமாக தாக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
அசோசியேட் ப்ரஸ்ஸிற்கு கிடைத்த வீடியோ காட்சிகள் அமெரிக்க சிறையில் உள்ளத்தை அதிர்க்குள்ளாக்கும் விதமாக நடத்தப்படும் சித்திரவதையை வெளியுலகுக்கு வெளிச்சம்போட்டு காட்டியுள்ளது.
ரகசிய கேமராக்கள் மூலம் இக்காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. மூன்று சிறை அதிகாரிகள் முன்னிலையில் இச்சித்தரவதை நடத்தப்படுகிறது. பல நிமிடங்கள் நீளும் இந்த வீடியோ காட்சிகளில் தாக்கப்படும்போது அவர் உதவிக்காக கெஞ்சிய பொழுதிலும் 24 வயதான ஹன்னி இலாபத்தை எவரும் கண்டுக்கொள்ளவில்லை.
தாக்குதலில் ஹன்னியின் மூளைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அவர் ஒருபோதும் பழைய நிலைக்கு திரும்ப முடியாத அளவிற்கு நிரந்தர நோயாளியாக மாறிவிட்டதாகவும் குடும்ப உறுப்பினர்களை மேற்கோள்காட்டி செய்தி நிறுவனம் கூறுகிறது.
கடந்த ஜனவரியில் படம் பிடிக்கப்பட்டுள்ளன இந்த காட்சிகள். இச்சம்பவம் வெளியானதைத் தொடர்ந்து இதனைக் குறித்து விசாரிப்பதற்கான நடவடிக்கைகளை எஃப்.பி.ஐ துவக்கியுள்ளது.
'தி கரக்ஷன்ஸ் கார்ப்பரேசன் ஆஃப் அமெரிக்கா' என்ற தனியார் நிறுவனத்தின் மேற்பார்வையில் இச்சிறை உள்ளது. சிறை அதிகாரிகளிடம் தனக்கு அளிக்கப்படும் சித்திரவதைகள் குறித்து முறையிட்ட பொழுது நடவடிக்கையொன்றும் எடுக்கப்படவில்லை என ஹன்னி தனது குடும்பத்தாரிடம் முன்னரே தெரிவித்துள்ளார்.
இந்நிறுவனத்திடம் நஷ்ட ஈடு கேட்டு கடந்த ஏப்ரல் மாதம் ஹன்னி வழக்கு தொடுத்துள்ளார். ஃபலஸ்தீன் வம்சாவழியைச் சார்ந்தவர் ஹன்னி இலாபத் என்பது குறிப்பிடத்தக்கது.
News:தேஜஸ் மலையாள நாளிதழ்
No comments:
Post a Comment