அஸ்ஸலாமு அலைக்கும்,
அழுக்கு ஆடையும்
வழுக்கும் குளியலறையும்
இனிமையாய் வரவேற்க;
அட்டவணைப்படி
அடிப்படிகள்
புகையைக் கக்க;
மாலையானதும்
மடிக்கணினிகள்
எங்கள் மடியைக்
கனக்கச் செய்ய;
இரவினில்
சதுரப்பலகை சப்தமிட;
சப்தமில்லாமல்
சமாதானம் வீச;
மனம் மட்டும் ஏங்கும்;
தூங்கா அணுக்கள்
அலைப்பாயும்;
வடு இல்லா வலிகளால்
ரணம் பாயும்;
தினம் விழிக் காயும்!
நாடுவிட்டு;நாடு வந்து;
கூட்டுக்குள் குருவியாய்
குளிர்காயும் பிரம்மச்சாரிகள்;
மணம் முடித்திருந்தாலும்!
முதியோர் இல்லம்
அழுது புலம்பும்
பிரசவத்தில்;
அரை மயக்கத்திலும் உன்
அழும் குரலுக்கு
ஆனந்தமாய் நான் அன்று!
பாலுக்கு ஏங்கி
உன் சிவந்த
இதழ்கள் இரண்டும்
பிதிங்கியதைக் கண்டு;
மனம் பதுங்கியக்
காலம் அன்று!
பள்ளிக்கு
முரண்டுப் பிடிக்கும்
உன் பாதம்
இரண்டையும் பக்குவமாய்
திருப்பியக் காலம் அன்று!
நீ மெத்தப் படிக்க
ஒத்த வீட்டையும்
விற்றுத் தீர்த்து;
உன் படிப்பிற்குத்
தீணியானது அன்று!
தனியாய் நடைப்போடும்
உனக்குத் துணைத்தேடி;
விழி சிலிர்க்கும்
இணையை உன்
கரம் சேர்த்தேன் அன்று!
இன்று
துவண்டுப்போன இளமையால்;
முட்டி நிற்கும் என் முதுமை
உனக்கு பாரினில்
பாரமென்று ஆனதா;
முதியோர் இல்லம் வந்து
சேர்ந்ததா?
ஊனமான நிலம்..
மணக்கும்
மருந்துகளால் ரணமாகி
ஊமையாய்;
ஊனமான நிலம்;
நாவு வறண்டு;
உதடுகள் வெடித்து;
நீர் இல்லாமல்
நிலத்திற்குக் கருக்கலைப்பு!
அடிக்கல் நட்டு
அடிமாட்டு விலையிலிருந்து;
அசுர விலைவரை;
விவசாயத்திற்கு
குழித்தோண்ட;
குழித்தோண்டி வீடுக் கட்ட;
கிரயமாகும் நிலம்!
-
அந்தோ பணத்திற்கு
வாய் விட்டு அழவயது தடுக்க;விழிகள் நீரில்நீச்சலடித்துநீந்திச் செல்ல;கைப்பேசிக் கனமாகி;இதயம் ரணமாக;என் குழந்தையின்முனகல் என் மனதைமுட்டித்தள்ளும் போது!
அருகில் இல்லாமல்போன இல்லாள்;மென்மையானக் குரலில்வன்மையானவார்த்தைகளால்;வழி மொழிவாள்;வருவது எப்போது!பிதுங்கி வரும்;கண்ணீரைக் கண்களுக்கு;அர்ப்பணம் செய்தேன்;அந்தோ!பணத்திற்கு!
--
நம் இலக்கணம்..
தனிமையோடு முகம்வாடி;என் உறவுகளோடு உறவாடி;என் பிரிவால்உன் மனம் வெறிச்சோடி;தொலைவில் இருக்கும்நமக்கு உறவாகத்தொலைத் தொடர்பு!
அழும் குழந்தைக்குஉணவூட்டி;பள்ளிக்கு அனுப்ப;அதற்கு நீ வழியனுப்ப;ஓயாமல் ஓடும்உன் தியாகம்!
மிகுந்துப்போன உணவுகள்குப்பைக்குச் செல்லாமல்;உன் இரைப்பையிற்குச் செலுத்தி;சிக்கனம் பிடிக்கும்உன் இலக்கணம்!
ஒழுக்கத்திற்குஅழுக்கேற்றாமல்;கற்பிற்குக்கரைப் படியாமல்;என் விடிப்பிற்குஒயாமல் ஏங்கும்உன் விழிகளுக்காகஎன் கற்பை விற்காமல்காத்திருகிறேன்உன்னைப்போலவே!
--
நீ அழுதக் கடிதம்..
விருந்து வைத்துவிடைக்கொடுத்து;விட்டுப்பிரிந்து உன்கண்ணீரைத் தொட்டுவிட்டு;கரம் அசைத்து;மரக்கட்டையாகமகிழுந்தில் நான்!
நீ அழுதக் கடிதங்கள்என் விரல் பிடிக்க;நண்பர்களுக்கு வெட்கப்பட்டுக்கண்களிலேக் கரைந்துவிடும்என் கண்ணீர்!
சோகங்களைச்சோர்வடையச் செய்ய;என்னைப் போலவேஏக்கத்துடன்;கூட்டத்துடன் தனிமையில்சுதந்திரச் சிறைஅறை நண்பர்கள்!
கேலியும் கிண்டலும்;அழுது வடியும் மனதை;ஆசுவாசப்படுத்த!
அமைதியைக் கக்கும்இரவோ என் இருதயத்தைகசக்கிப்பிழிய;சப்தமில்லாமல் சரணடையும்என் கண்ணீர் தலையணைக்கு!
--
2011/3/12
இறுதி பிடி...
தொழுகை மறந்தக்காலமும்;உறவுகளை ஒதுக்கித்தள்ளிய நேரமும்நினைக்கையிலே;குமுறும் நெஞ்சம்மரணத்தைக் கண்டுவெடித்து நிற்கிறது!
வறண்ட விழிகள்வழியைப் பார்த்து நிற்க;வலிக்கொண்ட மேனியோக்கதறி நிற்க;முட்டி மோதும் மூச்சியோத்தொண்டைக்குழியைகுத்திக் கிழிக்க;புரியாதப் பயம்தொற்றிக்கொள்ள;காரணமே அறியாமல்கண்கள் நீர் சொரிய!
நிமிடங்களே எனத்தெரிந்தப்பின்னும்;கெஞ்சிக் கேட்கும் உள்ளம்;இன்னொரு முறைஅவகாசம் கிடைக்காதாஎன ஏங்கித் தவிக்கும் மனம்!
முந்தவும் செய்யா;பிந்தவும் செய்ய;மூச்சைப் பறிக்கும்மரணம் வந்தப்பின்னே;குமுறி அழுது என்னப் பயன்;
இருக்கும் காலம்இறைவணக்கத்தைஇறுக்கப் பிடி;இல்லையேல்இறுதி நேரம்இருக்காதுஇலகுவாய்இறைவனின்இறுதிப்பிடி!
--
No comments:
Post a Comment