Monday, March 7, 2011
அற்புதப் படைப்பாளன்" - இப்பிரபஞ்சத்தின் இறைவன் !கருத்தரங்கம் 13/03/2011 ஞாயிற்றுக் கிழமை
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அன்புக்குரிய சகோதர சகோதரிகளே! சென்னையில் இயங்கி வரும் "இக்ராமுல் முஸ்லிமீன் சாரிடபுல் டிரஸ்ட்" என்ற அமைப்பின் சார்பாக "அற்புதப் படைப்பாளன்" - இப்பிரபஞ்சத்தின் இறைவன் பற்றிய கருத்தரங்கம் என்ற நிகழ்ச்சியை வரும் 13/03/2011 (ஞாயிற்றுக் கிழமை) அன்று நடத்த உள்ளோம் - இன்ஷா அல்லாஹ். (கருத்தரங்கம் நடைப்பெறும் இடத்தின் முகவரி இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது) நிகழ்ச்சியில்:- 1. சகோதரர் முஹிப்புல்லாஹ் (முன்னாள் புத்த பீட்சு - சுவாமி ஆனந்தாஜி), 2. சகோதரர் M. C. முஹம்மது (முன்னாள் கிருத்துவ போதகர் - கிருஸ்து ராஜா), . 3. சகோதரர் அஹமது சுஃபியான், ஆகியோர் கலந்துக்கொண்டு உரை நிகழ்த்துகின்றனர் மற்றும் 4. டாக்டர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) & 5. முஃப்தி உமர் ஷெரிஃப் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர். சகோதர, சகோதரிகளே! சென்னையை சேர்ந்த, தங்களுக்கு தெரிந்த, அறிமுகமான இஸ்லாத்தை அறிந்துக்கொள்ள நினைக்கும் மாற்று மத சகோதர, சகோதரிகளை இந்நிகழ்ச்சிக்கு அனுப்பி வையுங்கள். அல்லது எங்களுக்கு அவர்களின் முகவரி அல்லது மொபைல் எண் கொடுத்தால் அவர்களை நாங்கள் சந்தித்து / தொடர்பு கொண்டு அழைப்பிதழ் கொடுத்து வரவழைக்கின்றோம். பலர் இஸ்லாத்தை தெரிந்துக்கொள்ள விரும்புகின்றனர் ஆனால் அவர்களுக்கு சரியான தருணங்கள், விளக்கங்கள் கிடைப்பதில்லை. எனவே இதுபோன்ற நிகழ்ச்சி அவர்களுக்கு ஒரு வாய்ப்பாகவும் அமையலாம். மாற்றார்களை இஸ்லாத்தின் பக்கம் வர தாஃவா செய்வது நமது கடமை; அதன் மூலம் அவர்களுக்கு இதாயத் தருவது இறைவனின் உரிமை. இத்துடன் நிகழ்ச்சியின் அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது மேலும் தகவலுக்கு தொடர்பு கொள்ள: +91-91766 33023 - என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அன்புடன் சகோதரன் ஹைதர் ஹுசேன் சென்னை ---------------- என்றும் மாறா அன்புடன்...முத்து இஸ்மாயில்,
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment