Saturday, October 2, 2010

சட்டம் படித்த அறிஞர்களா?

சட்டம் படித்த அறிஞர்களா? முதல் நிலை  (x ) ?
இந்திய  நீதிபதிகளின் கேடு கெட்ட தீர்ப்பு.
RASMIN  M.I.Sc


உலக நாடுகளில் ஜனநாயகம் பேணும் மிக முக்கியமான நாடு என பேரடுத்த இந்தியாவின் தற்போதைய நிலை அந்நாட்டையே வெட்கித் தலை குணிய வைத்துள்ளது.

கடந்த ஐம்பது வருடங்களுக்கும் மேலாக இழுபரியாக இருந்த பாபரி மஸ்ஜித் தொடர்பான வழக்கின் தீர்ப்பு கடந்த 30ம் தேதி வெளியிடப் பட்டது.

இந்தியாவின் அயோத்தியில் பாபர் மஸ்ஜித் இருந்த சுமார் 2.77 ஏக்கர் நிலத்தை மூன்றாகப் நீதிமன்றம் மூன்றாகப் பிரித்து தீர்பளித்துள்ளது.

தீர்ப்பின் சுருக்கம்

இந்தியாவின் உத்திரப்பிரதேசத்தில் இருக்கும் அயோத்தியில் பாபர்மசூதி இருந்த நிலத்தை மூன்றாக பிரித்து ஒரு பகுதி முஸ்லீம்களுக்கும்இ இரண்டாவது பகுதி நிர்மோகி அகாரா என்கிற இந்து சாதுக்களின் அமைப்புக்கும்இ மூன்றாவது பகுதி மற்ற இந்து அமைப்புகளுக்கும் அளிக்கும்படி அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ கிளை தீர்ப்பளித்திருக்கிறது.

அதே நேரத்தில்இ ஹிந்து கடவுளான ராமர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டுவரும் இடம்இ ஹிந்துக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்தியாவில்இ 60 ஆண்டுகளாக நீடித்துவந்த சர்ச்சைக்குரிய அயோத்திப்பிரச்சினை வழக்கின் தீர்ப்பைஇ அலகாபாத் உயர்நீதி மன்றத்தின் லக்னோ பெஞ்ச் வியாழனன்று பிற்பகல் வழங்கியது.

அந்தத் தீர்ப்பில்இ சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை மூன்றாகப் பிரித்துஇ ஒரு பகுதியை ஹிந்து மகாசபைக்கும்இ இன்னொரு பகுதியைஇ ஹி்ந்து சாதுக்களின் கூட்டமைப்பான நிர்மோகி அகாராவுக்கும்இ இன்னொரு பகுதியை முஸ்லிம்களின் சுனி வக்ஃப் வாரியத்துக்கும் வழங்க வேண்டும் எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

நீதிதிகள் அகர்வால் மற்றும் எஸ்.வி. கான் ஆகியோர்இ சர்ச்சைக்குரிய இடத்தை மூன்றாகப் பிரிக்க வேண்டும் என்று பெரும்பான்மை தீர்ப்பு வழங்கிய நிலையில்இ நீதிபதி தரம்வீர் ஷர்மா மட்டும்இ அந்தப் பகுதி முழுவதும் ஹிந்துக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.

குறிப்பாகஇ கடந்த 1992-ம் ஆண்டு ஹி்ந்து கடு்ம்போக்குவாதிகளால் இடிக்கப்பட்ட மசூதியின் மையப்பகுதி இருந்த சர்ச்சைக் குரிய இடம்இ ஹிந்து மகாசபைக்கு வழங்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதில் மூன்று நீதிபதிகளும் ஒருமித்த கருத்தைக்கொண்டிருந்தார்கள். அந்த இடத்தில்தான் முதலில் 1949 ஆண்டும் பிறகு 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகும் ராமர் சிலைகள் வைக்கப்பட்டன.

அதேபோல்இ சீதா தேவியின் சமையலறை மற்றும் ராமரின் உடைமைகள் இருந்ததாகக் கூறப்படும் பகுதிகளை நிர்மோகி அகாராவுக்கு வழங்க வேண்டும் என நீதிபதிகள் தீர்ப்பளித்திருக்கிறார்கள்.

முஸ்லிம்களைப் பொருத்தவரை அவர்களுக்கும் மூன்றில் ஒரு பகுதி வழங்கப்பட வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். எந்த ஒரு தரப்புக்கும் மூன்றில் ஒரு பகுதி சரியாகக் கிடைக்காவிட்டால் மத்திய அரசு கையகப்படுத்தி வைத்துள்ள அருகில் உள்ள பகுதியிலிருந்து தேவையான இடத்தை அவர்களுக்கு வழங்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த தீர்ப்புத் தொடர்பாக பிரபல இஸ்லாமிய அறிஞர் சகோதரர் பி.ஜெய்னுலாப்தீன் அவர்கள் வெளியிட்டுள்ள கட்டுரையை அப்படியே தருகிறோம்.

 நீதி செத்தது

பாபர் மசூதி வழக்கில் இப்போது வழங்கப்பட்டது போன்ற சட்டத்துக்கும் தர்மத்துக்கும் எதிரான தீர்ப்பு  உலக வரலாற்றில் இதற்கு முன் எப்போதும் வழங்கப்பட்டிருக்க முடியாது. அலஹாபாத் நீதிமன்றம் நீதியை அப்பட்டமாகக் குழி தோண்டிப் புதைத்து சமாதி கட்டி விட்டது.

முஸ்லிம்கள் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்பார்கள் என்றால் அதன் பொருள் அத்தீர்ப்பு சட்டப்படி வழங்கப்பட்ட வேண்டும் என்பது தான். 

இந்தத் தீர்ப்பு சட்டத்தின் அடிப்படையில் வழங்கப்படவில்லை.

ராமர் அங்கு தான் பிறந்தார் என்று நீதி மன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளதைக் கண்டு உலகமே காரித் துப்புகிறது. கோடனு கோடி ஆண்டுகளுக்கு முன்னால் ஒருவர் இந்த இடத்தில் தான் பிறந்தார் என்று ஒருவன் கூறினால் அவன் மன நோயாளியாகத் தான் இருப்பானே தவிர அறிவு நிரம்பிய நீதிபதியாக இருக்க மாட்டான்.

ராமர் அங்கே பிறந்தார் என்பதைச் சட்டப்படி இவர்கள் நிரூபிக்க முடியுமா? அப்படியே அவர் அங்கே பிறந்திருந்தால் அதனால் அந்த இடத்திற்கு அவர் உரிமையாளராகி விடுவாரா? இப்படித் தான் இனி மேல் சிவில் வழக்குகளுக்கு இந்த நாட்டில் தீர்ப்பு அளிக்கப்படுமா?

அண்ணன் தம்பிகளுக்கு இடையில் சண்டை வந்தால் இது இவனுக்கு அது அவனுக்கு என்று தீர்ப்பு அளிப்பதில் அர்த்தம் இருக்கிறது. பங்காளிகளாக இல்லாத இருவர் ஒரு சொத்து குறித்து வழக்கு கொண்டு வந்தால் ஆக்ரமித்தவனுக்கு இரண்டு ஆகரமிக்கப்பட்டவனுக்கு ஒன்று எனத் தீர்ப்பு அளிபதில் என்ன சட்ட அம்சம் இருக்கிறது? தாதாக்களின் கட்டப் பஞ்சாயத்து இதை விட சிறப்பானதாக இருக்கும்.

எட்டப்பன் போன்றவர்களுக்கு வரலாற்றில் ஒரு இடம் உண்டு. அது போல் சட்டத்தை மீறி அப்பட்டமாக அநீதி இழைத்த நீதிபதிகள் என்ற பெயர் இந்த நீதிபதிகளுக்கு வரலாற்றில் கிடைப்பது உறுதி.

பள்ளிவாசல் முஸ்லிம்களிடம் இருந்ததையும் அது அப்பட்டமாக இடிக்கப்பட்டதையும் உலகமே பார்த்துக் கொண்டிருந்தது. அந்த உலகம் இந்தியாவின் மீதும் இந்த தீர்ப்பை வழங்கியவர்கள் மீதும் காரித்துப்பும் என்பதில் சந்தேகம் இல்லை.

நாங்கள் நீதிம்னறத் தீர்ப்புக்கு கட்டுப்பட மாட்டோம் என்று கூறி வந்த சங்பரிவாரம் இத்தீர்ப்புக்கு முன்னர் அமைதி காக்க வேண்டும் என்று கூறியதும்இ எங்களுக்குச் சாதகமாகத் தான் தீர்ப்பு வரும் என்று கூறியதும் இது பேசி வைக்கப்பட்ட தீர்ப்பு என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

இந்தியாவில் பெரும்பான்மை மக்கள் விருப்பம் சட்ட விரோதமாக இருந்தாலும் அது சட்டத்தின் படி அங்கீகரிக்கப்படும். முஸ்லிம்களின் சட்டப்படியான உரிமைகளாக இருந்தாலும் பெரும்பான்மை மக்கள் அதை விரும்பாவிட்டால் அது சட்ட விரோதமானதாகக் கருதப்படும் என்ற செய்தி சந்தேகத்துக்கு இடமில்லாத வகையில் முஸ்லிம்களுக்குச் சொல்லப்பட்டுள்ளது.

இனிமேல் முஸ்லிம்கள் இது போன்ற பிரச்சனைகள் வந்தால் நீதி மன்றம் சென்று முறையிடலாம் என்ற எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். நீதி மன்றம் சென்று பல ஆண்டுகள் சட்டப்போராட்டம் நடத்தி கடைசியில் நம் தலையில் நாம் மண்ணை அள்ளிப்போட வேண்டுமா என்ற முடிவுக்கு முஸ்லிம்கள் நிச்சயம் வந்திருப்பார்கள்.

இத்தீர்ப்பு மூலம் முஸ்லிம்களின் கடைசி நம்பிக்கையும் தகர்ந்து விட்டது.

இனி மேல் நாம் ஏன் விசுவாசமாக செயல் படும் என்ற எண்ணம் சிலருக்கு ஏற்படுமானால் அதற்கு அவர்கள் பொறுப்பாக மாட்டார்கள். இந்த நீதிபதிகளே பொறுப்பாவார்கள்.

நீதிமன்றங்களில் முஸ்லிம்கள் எப்போதே நம்பிக்கை இழந்து விட்டனர் என்பதையும் இது போல் காவித் தீர்ப்பு தான் வரும் என்பதையும் சென்ற மாதம் உணர்வு தலையங்கத்தில் நான் சுட்டிக் காட்டினேன்.

அது தான் இப்போது நடந்துள்ளது.

அந்தத் தலையங்கம் இது தான்

பாபர் மசூதி வழக்கு நீதி கிடைக்குமா?

பாபர் மசூதி நிலம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கு விசாரணை முழுமை பெற்று விட்டது. அனேகமாக இந்த மாதம் தீர்ப்பு அளிக்கப்பட உள்ளதாக அரசு வட்டாரம் கருதுகிறது.

தீர்ப்பு அளிக்கப்பட்ட உடன் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பதற்காக அமைச்சரைவையில் ஆலோசனை நடக்கிறது. அனைத்து மாநிலங்களும் உஷார் படுத்தப்பட்டுள்ளன. உளவுத்துறை மூலம் இந்துக்களின் மனநிலை முஸ்லிம்களின் மனநிலை எப்படி இருக்கும் என்று தகவல்கள் திரட்டப்படுகின்றன.

இந்தியாவில் உள்ள சிவில் சட்டப்படி தீர்ப்பளிப்பதாக இருந்தால் இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பளிக்க ஒரு மாத காலமே போதுமானதாகும். ஆதாரங்கள் அவ்வளவு தெளிவாக உள்ளன. ஆனால் நீதிமன்றங்கள் இந்த வழக்கில் சரியான நீதி வழங்கும் என்ற நம்பிக்கையை முஸ்லிம்கள் என்றோ இழந்து இழந்து விட்டனர்.

ஏராளமான நீதிபதிகள் சட்டத்தின் படி தீர்ப்பளிக்காமல் தாங்கள் சார்ந்துள்ள மத உணர்வுக்கும் இன உணர்வுக்கும் ஏற்றவாறு தான் தீர்ப்பு அளிப்பதை நாம் காண்கிறோம்.

இதற்கு ஒன்றல்ல இரண்டல்ல; ஆயிரக்கணக்கில் உதாரணங்கள் உள்ளன.

பாபர் மஸ்ஜிதில் நள்ளிரவில் சிலை வைக்கப்பட்டது. அதைக் காரணம் காட்டி பள்ளிவாசலுக்கு பூட்டு போட்டது நமது நாட்டு நீதியரசர்கள் உத்தரவின் படி தான்.

பூட்டப்பட்ட பள்ளிவாசலில் வைக்கப்பட்ட சிலைகளுக்கு பூஜை நடத்துவதற்காக அதைத் திறந்து விட வேண்டும் என்று தீர்ப்பு அளித்தவர்களும் நமது நாட்டின் நீதியரசர்கள் தான்.

நீதி மன்ற உத்தரவை மீறி பள்ளிவாசலை இடித்த அத்வானியின் மீது தொடரப்பட்ட நீதி மன்ற அவமதிப்பு வழக்கில் கோர்ட் கலையும் வரை சிறைத் தண்டனை வழங்கி நீதியைக் கட்டிக் காத்ததும் நமது நீதிமான்கள் தான்.

பாபர் மசூதி வழக்கில் மட்டும் அல்ல. எண்ணற்ற வழக்குகளில் தங்களின் ஒரு தலைப்பட்சமான போக்கை நமது நாட்டு நீதிபதிகள் பல சந்தர்ப்பங்களில் நிரூபித்துள்ளனர்.

இந்துத்துவா என்பது அரசாங்கத்தின் கொள்கையாக இருக்க முடியாது என்று பாஜக ஆட்சியில் வழக்கு தொடரப்பட்டது. இந்துத்துவா என்பது மதத்தைக் குறிக்கும் சொல் அல்ல; அனைத்து மதத்துக்கும் பொதுவான சொல் தான் என்று தீர்ப்பளித்த காவிபதிகள் நமது நாட்டு நீதிபதிகளாக உள்ளனர்.

ஒரு முஸ்லிம் குடும்பத்தின் விவாக ரத்து வழக்கு வந்த போது அந்த வழக்குக்குச் சம்மந்தமில்லாமலும்இ சட்ட விரோதமாகவும் பொது சிவில் சட்டத்தை உருவாக்க வேண்டும் என்று உத்தரவிட்டவர்களும் நீதிமான்களாக உள்ளனர்.

ஒரு குற்றவாளி கொடுத்த வாக்கு மூலத்தைக் காரணம் காட்டி ஊணமுற்ற அப்துல் நாசர் மதானியைக் கைது செய்யச் சொல்வதும்இ நாட்டில் ஏராளமான பயங்கரவாதச் செயல்களை நிகழ்த்திய இன்னும் நிகழ்த்திக் கொண்டிருக்கின்ற பால் தாக்கரே ராஜ்தாக்கரேஇ முத்தாலிக் போன்றவர்களை நோக்கிச் சுண்டு விரலைக் கூட நீட்ட வக்கற்றவர்களாக இருப்பது நமது நீதிபதிகள் தான்.

12 ஆண்டுகள் 14 ஆண்டுகள் வெறும் விசாரணைக் கைதிகளாக நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் உள்ளனர். அவர்களின் வழக்கில் தொடர்ந்து ஜாமீன் மறுத்து உலக அரங்கில் மதவறி பிடித்த நாடாக அடையாளம் காட்டியதும் நமது நீதிபதிகள் தான்.

உலகில் எந்த நாட்டிலும் குற்றம் நிரூபிக்காமல் இவ்வளவு காலம் யாரும் சிறை வைக்கப்பட்டதில்லை. சிறையில் விசாரணைக் கைதிகளாக இருந்த முஸ்லிம்களைத் தவிர வேறு எந்த இயக்கத்தினருக்கும் நீதிமன்றங்கள் இத்தனை ஆண்டுகள் ஜாமீன் வழங்க மறுத்ததில்லை.

அன்ஸாரி ஆஃதாப் அஹ்மது என்பவர் இந்திய விமானப்படை ஊழியராவார். அவர் இஸ்லாம் கூறும் மதச் சட்டப்படி தாடி வைக்க அனுமதி மறுக்கப்பட்டார். இராணுவத்தில் மத அடையாளம் கூடாது என்பது இதற்குச் சொல்லப்பட்ட காரணம். இதை எதிர்த்து அவர் நீதிமன்றத்தை அணுகினார். சீக்கியர்கள் மட்டும் மத அடையாளத்துடன் இராணுவத்தில் இருக்கலாம் என்றால் முஸ்லிம்களுக்கு மறுப்பது என்ன நீதி? என்று அவர் நீதி மன்றத்தில் வாதிட்டார். சீக்கியர்களுக்கு உள்ள அந்த உரிமையை முஸ்லிம்களுக்கு வழங்க நீதி மன்றம் மறுத்து மதச் சார்பின்மையைப் பேணிக்காத்தது.

மத்தியப் பிரதேசத்தில் ஸலீம் என்ற மாணவர் தாடியுடன் பள்ளிக் கூடம் சென்ற போது அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. சிலுவை அணிந்து கொண்டும் நெற்றியில் பொட்டு திரு நீறு இட்டுக் கொண்டும் வரலாம் என்றால் தாடி வைத்துக் கொண்டு வருவதைத் தடுப்பது என்ன நீதி என்று கருதி அவர் நீதி மன்றத்தை அணுகினார். இஸ்லாம் மார்க்கத்தை பேணுவதற்கு எனக்கு உரிமை உள்ளது. இதைத் தடுக்க அரசுக்கு உரிமை இல்லை என்று உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடினார். அவரது மத உரிமைக்கு எதிராகவே உச்ச நீதி மன்றம் உத்தரவு போட்டது.

அது மட்டுமின்றி தாடி வைப்பது பர்தா அணிவது போன்ற தாலிபானிசத்தை இந்தியாவில் அனுமதிக்க முடியாது என்று மத துவேசத்துடன் உச்ச நீதி மன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜு தீர்ப்பின் போது குறிப்பிட்டார். இவர் கூறியதற்கு எந்தச் சட்ட ஆதாரமும் இல்லை.

இஸ்லாத்துக்கு எதிராக இவர்கள் உள்ளத்தில் எத்தகைய விஷம் ஊற்றப்பட்டுள்ளது என்பதற்கு இது ஒரு சான்றாக உள்ளது. உலக நாடுகளில் இவரது நச்சுக்கருத்துக்கு எதிரான பிரச்சாரம் இல்லாதிருந்தால் இதற்காக இவர் மன்னிப்பு கேட்டிருக்க மாட்டார்.

சென்னையில் ஒட்டகம் குர்பானி கொடுக்க ஒரு நீதிபதி தடை விதித்தார். தடையை மீறி ஒட்டகம் குர்பானி கொடுக்கப்படும் என்று தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்ததால் மறுநாள் தீர்ப்பு மாற்றிக் கூறப்பட்டதை நாம் மறந்து விட முடியாது.

கற்பழிப்பு வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த முதியவர் ஒருவரை முன்னதாகவே நீதி மன்றம் விடுதலை செய்தது. அதோடு நிறுத்திக் கொள்வதை விட்டு விட்டு இனி மேல் ஒழுங்காக சாமி கும்பிட வேண்டும். பூஜை செய்ய வேண்டும் என்று தனது மத நம்பிக்கையை இதில் நீதிபதி நுழைக்கிறார். பூஜை செய்பவர்கள் தான் அதிகம் குற்றம் புரிகிறார்கள் என்பது கூட இவருக்குத் தெரியவில்லை என்பது கூடுதல் விபரம்

சென்னையில் முக்கிய பிரமுகர் வீட்டு விவாக ரத்து வழக்கு தீர்ப்பளிக்கும் போது காஞ்சி சங்கராச்சாரியார் அறிவுரைகளைக் கேட்டு தம்பதிகள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பளிக்கிறார். சட்டத்தை விட இவர்களின் மத வெறியே இவர்களுக்குப் பெரிதாகத் தெரிகிறது. ஆனால் இவர் இவ்வாறு கூறிய சில மாதங்களில் சங்கராச்சாரி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டது தனி விஷயம்.

ஆந்திராவில் முஸ்லிம்களுக்கு அற்பமான அளவுக்குத் தனி இட ஒதுக்கீடு அளித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளித்தது சட்ட விரோதம் என்று ஆந்திர உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு கூடும் என்றும் மத அடிப்படையில் கூடாது என்றும் கூறுவதற்கு எந்தச் சட்ட நியாயமும் இல்லை. சாதி என்பதே மதத்தின் ஒரு அங்கம் தான். ஆனாலும் முஸ்லிம்கள் என்பதால் நீதிபதிகளுக்கு மூளையும் வரண்டு விடுகிறது.

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட ஒருவருக்குக் கூட ஜாமீன் வழங்காத நீதிமன்றங்கள் அதற்கு முன் 19 முஸ்லிம்களைக் கொன்றுஇ குண்டு வெடிப்புக்குத் தூண்டிய அனைவருக்கும் உடனே ஜாமீன் வழங்கி நீதியை நிலை நாட்டின.

நாட்டில் நடக்கும் காதல் கள்ளக் காதல் ஆகியவற்றுக்கு ஆதரவாகவே நீதிமன்றங்கள் தீர்ப்பளித்து வருகின்றன. ஆனால் கேரளாவில் முஸ்லிம் இளைஞனைக் காதலித்த இந்துப் பெண் முஸ்லிமானாள். இதை விசாரித்த கேரள நீதி மன்றம் லவ் ஜிஹாத் என்ற பெயரில் ஒரு கும்பல் செயல்படுகிறது என்றும் கட்டாய மத மாற்றத்தைத் தடை செய்ய வேண்டும் எனவும் மத வெறித் தீர்ப்பை அளித்தது.

வட்டியில்லா கடனை அடிப்படையாகக் கொண்ட இஸ்லாமிய வங்கியை கேரள அரசு துவக்க இருந்த போது அதில் தலையிட்டு கேரள உயர் நீதிமன்றம் தடை விதித்தது.

தடை செய்யப்பட்ட சங்பரிவாரத்தின் ஆர் எஸ் எஸ் இயக்கத்துக்கு விதிக்கப்பட்ட  தடையை நீக்கிய நீதி மன்றங்கள் சிமி என்ற இயக்கத்திற்கு மட்டும் பாரபட்சமான நீதியை வழங்கியது.

குஷ்புவுக்கு எதிரான வழக்கில் அவருக்கு ஆதரவாக தீர்ப்பளித்த நீதிபதிகள் பகவான் கிருஷ்னரும் ராதையும் திருமணம் செய்யாமல் வாழ்ந்துள்ளதால் குஷ்பு கூறியது தவறில்லை என்று கூறினார்கள். சட்டத்தை மட்டும் சொல்லி தீர்ப்பளிக்காமல் புராணத்தை மேற்கோள் காட்டுவது தான் மதச் சார்பின்மையா?

இப்படி பட்டியல் நீள்கிறது. இது போல் தான் பாபர் மசூதி வழக்கையும் நீதி மன்றம் கையாளுமோ என்ற சந்தேகம் முஸ்லிம்களுக்கு உள்ளது.

ஒரு சொத்து யாருக்குச் சொந்தம் என்பதை விசாரிக்க ஆவணமும் அனுபவ பாத்தியதையும் தான் தேவை. ஆனால் அகழ்வாராய்ச்சி செய்து அந்த இடத்தில் ஏதாவது ஒரு காலத்தில் கோவில் இருந்ததா என்று விசாரிக்க நீதி மன்றம் உத்தரவிட்ட போதே தனது நேர்மையை சந்தேகத்துக்கு உள்ளாக்கி விட்டது.

ஒரு சொத்து யாருக்குச் சொந்தம் என்பதைத் தீர்மானிக்க அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டும் என்பது சட்ட விரோதமானது. எந்த இடத்தைத் தோண்டிப் பார்த்தாலும் ஏதாவது கிடைக்கத் தான் செய்யும். கடுகளவு அறிவு உள்ளவன் கூட செய்யத் தயங்குவதை நீதி மன்றம் செய்தது. இப்படி எல்லா சிவில் வழக்குகளிலும் குழி தோண்டிப்பார்க்கும் படி தீர்ப்பளிப்பது நீதிபதிகள் தீர்ப்பளீப்பது இல்லை.

எனவே பாபர் மசூதி வழக்கில் நீதி மன்றம் சட்டத்தின் படி தீர்ப்பளிக்குமா? தனது உணர்வுக்கு ஏற்பத் தீர்ப்பளிக்குமா என்பது தீர்ப்பு வந்தால் தான் தெரியும்.

நீதிபதிகளிடம் காவிச் சிந்தனையும் மதவெறியும் உள்ளதாகக் கூறுவது அனைத்து நீதிபதிகளைப் பற்றிய பொதுவான கருத்து அல்ல. நியாயத் தராசை சரியாகப் பிடிக்கும் நீதிபதிகள் பலர் உள்ளனர். அது போல் நாம் சுட்டிக்காட்டியது போல் மதத்துவேஷம் உள்ளவர்களும் கனிசமாக உள்ளனர் என்பதை யாரும் மறுக்க முடியாது.

முஸ்லிம்களுக்கு உரிய நியாயம் நீதி மன்றத்தில் கிடைத்தாலும் அதைச் செயல் படுத்தும் திராணி மத்திய அரசுக்கு நிச்சயம் இருக்காது. ஏதாவது சாக்கு போக்கு சொல்லி இழுத்தடிக்கவும் மேல் முறையீடு என்ற பெயரில் இன்னும் காலம் கடத்தவும் மத்திய அரசு திட்டமிடும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஆட்சி செய்பவர்களும் சரி இல்லை. நிதிபதிகளிலும் காவிகள் மலிந்து விட்டனர். இந்த நிலையில் இம்மாதம் அளிக்கப்படும் தீர்ப்பின் காரணமாக ஒரு பிரயோஜனமும் முஸ்லிம்களுக்கு ஏற்படாது என்ற சந்தேகத்தை அரசும் நீதித் துறையும் நீக்குமா?



மேலப்பாளையம் பதிவுகள்

Thursday, September 30, 2010

என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? ஒரு முழுமையான தமிழ் வழிகாட்டி!

இப்போது உங்கள் முன்னால் ஒரு பிரமாதமான விருந்துச் சாப்பாடு வைக்கப்பட்டுவிட்டது. அதில் நீங்கள் விரும்பும் உணவு வகை எது என்று தேர்ந்தெடுத்து முடிவுசெய்யவேண்டியது உங்களுடைய பொறுப்புதான்.

நீங்கள் உணவைத் தேர்ந்தெடுக்கும்போது, சுவையை அடிப்படையாக வைத்து முடிவெடுக்கலாம். அதேசமயம் அந்த உணவு ஆரோக்கியமானதாக இருக்கவேண்டும், சரியாக ஜீரணமாகவேண்டும்.

அதேபோல் இங்கே பலவிதமான படிப்புகள் உள்ளன.

மாணவர்களும் பெற்றோரும் இதிலிருந்து தங்களுக்குப் பொருத்தமான ஒன்றைத் தேர்ந்தெடுக்கவேண்டும்.

அது அவர்களுடைய விருப்பத்துக்கு ஏற்றதாக இருக்கலாம், எதிர்காலத்தை மனத்தில் வைத்து அமையலாம், சம்பந்தப்பட்ட மாணவரின் திறமை, தகுதியைப் பொறுத்ததாக இருக்கலாம்.

நான் ஒரு படிப்பை முடிவெடுத்துவிட்டேன். இதுபற்றி ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்னால் நம்மை நாமே சில கேள்விகளைக் கேட்டுக்கொள்ளவேண்டும்.

1.நான் என் பெற்றோரின் அறிவுரை, வற்புறுத்தலால் இந்த முடிவை எடுத்திருக்கிறேன்.

  • உங்கள் குழந்தைகள் உங்களுடைய குடும்பத்துக்கு மட்டுமல்ல, இந்த உலகத்துக்கும் ஒரு சிறப்புப் பரிசாகத் திகழ்கிறவர்கள். அவர்கள் எதில் ஆர்வம் செலுத்துகிறார்களோ, எதைச் சிறப்புத் தகுதியாக வளர்த்துக்கொள்கிறார்களோ அதை மட்டுமே அவர்களால் சாதிக்கமுடியும். ஒருவருக்குச் சதுரங்கத்தில் ஆர்வம் இருக்கிறது, கிரிக்கெட்டில் இல்லை என்றால் அவர்களைக் கிரிக்கெட் விளையாடும்படி வற்புறுத்தக்கூடாது. அப்படிச் செய்தால், அவர் உங்களுடைய லட்சியத்தை நிறைவேற்றுவதற்காக விளையாடுவார், தன்னுடைய லட்சியத்தை எண்ணி அல்ல! 
  • உங்கள் குழந்தைகளுடன் இதுபற்றிப் பேசுங்கள். அவர்களுடைய எண்ணத்தைத் தெரிந்துகொள்ளுங்கள். அதன் பிறகே நீங்கள் அவர்களுக்கான படிப்பை முடிவு செய்யவேண்டும்.
  • சில பெற்றோர், அவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் தவறவிட்ட படிப்புகளைத் தங்கள் பிள்ளைகள்மீது திணிக்கிறார்கள். அவர்கள் மூலம் அதைச் சாதித்துவிடலாம் என்று எண்ணுகிறார்கள். மேஸ்ட்ரோ இளையராஜாவின் தந்தை அவரை எஞ்சினியரிங் அல்லது சி.ஏ. படிக்க வற்புறுத்தியிருந்தால், நாம் ஒரு மிகச் சிறந்த இசைஞானியை இழந்திருப்போம். உங்கள் பிள்ளைகள் நீங்கள் நினைப்பதைவிடச் சிறந்த திறமைசாலிகளாக இருக்கலாம்.
  • மாணவர்களும் இதுபற்றித் தங்கள் பெற்றோரிடம் பேசவேண்டும். எந்த அடிப்படையில் அவர்கள் இந்தப் பாடத்தைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். தங்கள் கருத்துகளைச் சொல்லவேண்டும்.
  • பெற்றோர் உணரவேண்டிய ஒரு விசயம். இப்போது நீங்கள் தேர்ந்தெடுக்கும் படிப்பு வருங்காலத்தில் தவறானதாக அமைந்துவிட்டால், அதற்காக உங்கள் பிள்ளையைக் குற்றம் சொல்லக்கூடாது. ஒட்டுமொத்தக் குடும்பமும் உட்கார்ந்து பேசி ஒரு தீர்வைக் கண்டறியவேண்டும். உதாரணமாக, ஒரு மாணவர் கணிதத்தில் திறமைசாலியாக இருக்கிறார். ஆனால் அவருடைய தந்தை அவரை ஆசிரியர் பயிற்சியில் சேர்க்கிறார். அந்த ஆசிரியர் பயிற்சி அனுமதி பெறாதது, நீதிமன்றம் அதனை மூடிவிடுகிறது. அந்தத் தந்தைக்கு மிகவும் வருத்தம். ஆனால், இனிமேல் எதுவும் செய்யமுடியாது. ஆகவே, அந்த மகன் வாழ்நாள் முழுவதும் தன் தந்தையைக் குற்றம் சொல்லிக்கொண்டிருந்தான். உங்களுக்குத் தரப்பட்டிருப்பது ஒரே ஒரு வாழ்க்கைதான். ஒருவேளை நீங்கள் மறுபடி பிறந்தாலும் கூட மீண்டும் இதே நபராகப் பிறக்கமுடியாது. ஆகவே, இந்த வாய்ப்பைத் தவறவிடாதீர்கள்.
2.நான் என் உறவினர்கள்/நண்பர்களைப் பார்த்துப் பேசி ஒரு படிப்பைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்.

சின்ன வயதில் நான் ஒரு ஐஸ் க்ரீம் விற்பனையாளனாக விரும்பினேன். அப்போதுதானே நான் நாள்முழுவதும் ஐஸ் க்ரீம் சாப்பிட்டுக்கொண்டே இருக்கமுடியும்! நான் ஓர் எஞ்சின் டிரைவரைப் பார்த்துப் பரவசப்பட்டேன். அவரைப்போலவே நான் எப்போது பயணம் செய்துகொண்டிருக்கவேண்டும் என்று நினைத்தேன். ஆனால், ஒருவேளை நான் இந்த வாய்ப்புகளைத் தேர்ந்தெடுத்திருந்தால் எனக்கு எல்லாப் பலன்களும் கிடைத்திருக்குமா?

  • உங்கள் நண்பரின் தந்தை தன் மகன் ஒரு படிப்பை முடித்தபிறகு அதே துறையில் அவனுக்கு வேலை கிடைக்க உதவி செய்வாராக இருக்கலாம். ஆனால் நீங்கள் படிப்பை முடித்தபிறகு நீங்களேதான் சொந்தக் காலில் நிற்கவேண்டியிருக்கும்.
  • உங்கள் நண்பர், உறவினரிடம் பேசும்போது அவர்கள் எந்தக் காரணத்துக்காக இந்தப் படிப்பைத் தேர்ந்தெடுத்தார்கள் என்று விவாதியுங்கள். அந்தக் காரணம் உங்களுக்குப் பொருந்துமா என்று யோசியுங்கள்.
  • ஒரு வீட்டில் அம்மா, அப்பா மருத்துவர்கள். அவர்களுக்குச் சொந்தமாக ஒரு மருத்துவமனையும் இருக்கிறது. ஆகவே அவர்கள் தங்கள் பிள்ளைகளும் மருத்துவம் படிக்கவேண்டும் என்று விரும்புகிறார்கள். படித்து முடித்தபிறகு அந்தப் பிள்ளைகள் வேலை தேடுவதைப்பற்றிக் கவலைப்படவேண்டியதில்லை. ஆனால் அது உங்களுக்குப் பொருந்துமா? யோசித்துக்கொள்ளுங்கள்
3. நான் சமீபத்திய சந்தை ஏற்றதாழ்வுகள், நிகழ்வுகளின் அடிப்படையில், அதிக சம்பளம் கிடைக்கக்கூடிய ஒரு படிப்பைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்.

ஒருவேளை உங்களுக்குப் பிடிக்காவிட்டால், உங்களால் சிறப்பாகப் பணியாற்ற முடியாது. இதனால் நீங்கள் திறமைக்குறைவு காரணமாக வேலையை இழக்க நேரலாம். அல்லது வாழ்நாள் முழுவதும் சலிப்பாக உணர்வீர்கள். ஒரே இடத்தில் தேங்கிப்போவீர்கள். அதேசமயம், அந்த வேலை உங்களுக்குப் பிடித்திருந்தால் விளையாட்டு மைதானத்துக்குச் செல்வதுபோன்ற உற்சாகத்தோடு அலுவலகத்துக்குக் கிளம்பிச் செல்வீர்கள்.

  • ஒரு படிப்பைத் தேர்ந்தெடுக்கச் சம்பளம் மட்டும் சரியான அளவுகோல் அல்ல. நம்முடைய சந்தை என்பது சுழற்சிபோல மாறி மாறி வரும். ஒருகாலத்தில் வங்கியில் பணிபுரிவது மிகவும் கவர்ச்சிகரமாக இருந்தது. அதன்பிறகு மருத்துவர்கள், இப்போது ஐடி (தகவல் தொழில்நுட்பம்), நாளைக்கு என்ன என்பது நமக்குத் தெரியாது. ஆகவே, நீங்கள் இப்போது விரும்பித் தேர்ந்தெடுக்கும் படிப்பு முடியும்போது அல்லது அதன்பிறகு இதேமாதிரி மதிப்பு இருக்கும் என்பது நிச்சயமில்லை. அது உங்கள் பணி/வாழ்க்கையைப் பாதிக்குமா என்று நன்றாக யோசித்துக்கொள்ளுங்கள்.
  • ஒவ்வொரு துறையிலும் அதிகச் சம்பளம் பெறும் வேலைகள், குறைந்த சம்பளம் பெறும் வேலைகள் உண்டு. நீங்கள் எவ்வளவு உயரம் செல்கிறீர்கள் என்பதைப் பொறுத்து உங்கள் சம்பள விகிதமும் மாறும். இன்றைக்கு இஅஇ உணஞ்டிணஞுஞுணூடிணஞ்இ அணடிட்ச்வடிணிண மற்ற பல துறைகளும் ஐ.டி.க்கு இணையாக அதிகச் சம்பளம் தரக்கூடியவையாக இருக்கின்றன. ஆரம்பத்தில் நீங்கள் உள்ளே நுழையும்போது நன்றாக இருக்கலாம்இ ஆனால் நீங்கள் வளர வளர அந்த உற்சாக நின்றுவிடும்
4. அதிக மதிப்பெண் பெறவேண்டும் என்கிற நோக்கத்துடன் நான் என்னுடைய படிப்பைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்.

உங்களுக்குக் குறுகிய காலக் கண்ணோட்டமே இருக்கக்கூடாது. உங்களால் நிறைய மதிப்பெண் எடுக்கமுடியும் என்பதால் மட்டும் உங்களுக்கு ஒரு துறையில் ஆர்வம் வந்துவிடவேண்டும் என்கிற அவசியம் இல்லை. சில சமயங்களில் நீங்கள் நன்கு மனப்பாடம் செய்யக்கூடியவராக இருக்கலாம். அதனால் நல்ல மதிப்பெண்களைப் பெறலாம். ஆனால் நீங்கள் செய்யப்போகும் வேலை மிகவும் கடினமாக அமைந்துவிடலாம்.

நான் பல மாணவர்களைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் கம்ப்யூட்டர் சைன்ஸை விரும்பித் தேர்ந்தெடுப்பார்கள். எப்படியோ மனப்பாடம் செய்து நல்ல மதிப்பெண் பெற்றுவிடுவார்கள். ஆனால் வேலை என்று வந்துவிட்டால் அவர்கள் முழுத்தோல்வி அடைகிறார்கள். எனக்குத் தெரிந்த பல கம்ப்யூட்டர் சைன்ஸ் மாணவர்களுக்கு எளிய ப்ரொக்ராம்கள் கூட எழுதத் தெரிவதில்லை. ஆகவே அவர்கள் அந்த வேலைக்குத் தகுதியற்றவர்களாகி விடுகிறார்கள்.

நீங்கள் ஒரு பாடத்தைப் புரிந்துகொள்ளவேண்டும் என்கிற நோக்கத்தோடு படிக்கவேண்டும். அப்போதுதான் நீங்கள் பணியில் நன்றாகச் செயல்படமுடியும்.

  • மதிப்பெண் பெறுவது உங்களுடைய பணி வாழ்க்கைக்கு நல்ல மைல் கல் ஆகாது. +2-வில் ஒரு குறிப்பிட்ட பிரிவில் சேர்வதற்கு அது பயன்படலாம். ஆனால் நீங்கள் கல்லூரிக்குச் செல்கிறபோது உங்களுடைய மதிப்பெண்கள் மட்டும் உங்களுக்குப் பட்டம் வாங்கித் தந்துவிடாது. இப்போதெல்லாம் நிறுவனங்கள் உங்களுடைய தகவல் பரிமாற்றத் திறமை, மற்றவர்களுடன் கலந்து பழகும் தன்மை, தலைமைப் பண்புகள், பிரச்னைகளைத் தீர்க்கும் திறமை, அணியில் சேர்ந்து பணிபுரியும் திறமை என்று பல விசயங்களைப் பார்க்கிறார்கள். எதார்த்த வாழ்க்கையில் தங்கப் பதக்கமும் முதல் வகுப்பும் நல்ல மதிப்பெண்கள்மட்டும் வாங்கியவர்களுக்குக் கிடைப்பதில்லை. ஒரு மாணவர் பள்ளி கல்லூரியில் சுமாராகப் படிக்கிறவராக இருந்தால்கூட, அதோடு பல கூடுதல் ஆர்வங்களை ஏற்படுத்திக்கொண்டு நன்கு பேசக்கூடியவராக பாடப் புத்தகங்களுக்கு வெளியிலும் விசயங்களை அறிந்து வைத்திருக்கிறவராகத் தன்னை மேம்படுத்திக்கொண்டு இதுபோன்ற கௌரவங்களைப் பெறுகிறார்கள்.
  • படிப்பு என்பது வெறும் ஏட்டுச் சுரைக்காய்தான். ஆனால் வாழ்க்கை, வேலை என்பது எதார்த்தமான விசயம். அதை மறந்துவிடாதீர்கள்.
5. என் பெற்றோரால் மற்ற படிப்புகளுக்குச் செலவழிக்கமுடியாது. ஆகவே எங்கள் வசதிக்கு இணங்க நான் இந்தப் படிப்பைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்.

இப்போதெல்லாம் கல்விக் கடன் மிகவும் சகஜமாகிவிட்டது. ஆகவே உங்கள் பெற்றோரால் செலவழிக்கமுடியாது என்று எண்ணி ஒரு குறிப்பிட்ட படிப்பைத் தவறவிடாதீர்கள். எதையும் ஒருமுறைக்கு இரண்டுமுறை யோசியுங்கள். ஆனால் ஒருவேளை அந்தத் தொகை கல்விக் கடனாலும் பெறமுடியாத அளவுக்கு அதிகமாக இருக்குமானால் அந்தப் படிப்பைத் தேர்ந்தெடுப்பது பற்றி நீங்கள் நன்றாக யோசித்துக்கொள்ளவேண்டும்.

நீங்கள் உங்கள் கனவைப் பின்னர் வேறொரு வாய்ப்பு வரும்போது நிஜமாக்கிக்கொள்ளலாம். உங்களுக்குத் தெரியும், திரு.அப்துல் கலாம் அவர்கள் ஒரு போர் விமானியாகவேண்டும் என்றுதான் விரும்பினார். ஆனால் பல காரணங்களால் அந்த எண்ணம் நிறைவேறவில்லை. அப்போதும் அவர் நம்பிக்கை இழக்கவில்லை. ஒரு சிறந்த ராக்கெட் விஞ்ஞானியாக உருவானார். படிப்படியாக முன்னேறி இந்தியாவின் ஜனாதிபதியானார். கடைசியாக அந்த ஜனாதிபதி பதவியில் இருந்தபடி அவர் ஒரு போர் விமானத்தில் பறந்தார்.

  • நீங்கள் மிகவும் எதார்த்தமாகச் சிந்திக்கிறீர்கள். நல்ல விசயம்! 
  • நீங்கள் கல்விக் கடனுக்கு முயற்சி செய்தீர்களா? இன்றைக்குக் கல்வி என்பது உங்களுடைய உரிமை. ஒரு குறிப்பிட்ட படிப்புக்கான அனுமதிக் கடிதத்தைப் பெற்றுவிட்டால் போதும். செலவுகளைச் சமாளிக்கக் கடன்கள் உதவும். 
  • உங்கள் திறமைக்கு வானமே எல்லை. ஒருவேளை நீங்கள் விரும்பும் விசயம் இப்போது உடனடியாகக் கிடைக்காவிட்டாலும் அதோடு உலகம் முடிந்துவிடாது. உங்கள் இலக்கை அடைய வேறு வழிகளை அணுகுங்கள் (கூடுதல் தகவல்களுக்கு எங்களின் "இலக்கு நிர்ணயித்தல்' வழிகாட்டியை அணுகவும்).
  • ஒருவர் அமெரிக்காவில் படிக்க விரும்பினார். ஆனால் அவருடைய குடும்ப நிலைமையால் அது முடியவில்லை. அவர் மாற்று வழிகளைத் தேடினார் B.Sc., Computer Science படிக்கச் சேர்ந்தார். அதை முடித்துவிட்டு அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். சில வருடங்கள் இந்தியாவில் வேலை பார்த்துவிட்டு அமெரிக்கா சென்றார். அங்கே மிகச் சிறந்த பல்கலைக்கழகம் ஒன்றில் சேர்ந்து படித்தார். தன்னுடைய நிறுவனத்தின் உதவித்தொகை பெற்றுப் படிப்பைப் பூர்த்தி செய்தார். இங்கே அவர் முதன்முறை அமெரிக்கா செல்ல முடியாததற்காகவும் மாற்று வழியைத் தேர்ந்தெடுத்ததற் காகவும் சந்தோசப்படவேண்டும்.
6. என்னுடைய உறவினர் இந்தத் துறையில் பெரிய பதவியில் உள்ளார். அவர் தன் நிறுவனத்தில் நல்ல வேலை தருவதாக உறுதியளித்துள்ளார். ஆகவே நான் இந்தப் படிப்பைத் தேர்ந்தெடுத்துள்ளேன்.

வாழ்க்கையில் இப்படி நடக்குமோ, அப்படி நடந்துவிடுமோ என்பது போன்ற குழப்பக் கேள்விகளுக்கு இடமே இல்லை. உங்கள் உறவினர் அதே நிறுவனத்தில் தொடர்ந்து வேலை செய்வார் என்பது என்ன நிச்சயம்? அப்படியே இருந்தாலும், நீங்கள் படிப்பை முடிக்கும் நேரத்தில் அவர் உங்களை வேலைக்குச் சேர்க்கும் அளவு செல்வாக்குடன் இருப்பார் என்பது யாருக்குத் தெரியும்? ஒருவேளை அவர் உங்களுக்கு வேலை கொடுத்தாலும்கூட நீங்கள் ஒழுங்காக வேலை செய்யாவிட்டால் அந்தப் பணியில் தொடரமுடியாது. ஆகவே உங்களுக்குப் பிடித்த வேலையில் சேர்கிற வாய்ப்பை வழங்கும் படிப்பைத் தேர்ந்தெடுங்கள்.

  • எங்களுடைய ஆலோசனை இந்த விசயத்துக்கு மிகக் குறைந்த முக்கியத்துவம் கொடுங்கள். இன்றைக்கு ஒவ்வொரு நிறுவனமும் தங்களுடைய வேலை காலியிடங்களைப் பூர்த்தி செய்யச் சிறந்த திறமையாளர்களைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். உங்களுடைய உறவினர் எவ்வளவு செல்வாக்கு மிகுந்தவர் என்பது உங்களுக்குத் தெரியாது. தவிர நீங்கள் உங்கள் திறமைமீது நம்பிக்கை வைக்கவேண்டும். வாழ்க்கையின் நோக்கம் சவால்களை எதிர்கொள்வது. அவற்றை ஒவ்வொன்றாகச் சாமாளிப்பது. இதுமாதிரி நேரத்தில்தான் நாம் பலமாகவேண்டும். வாழ்க்கையின் பாடங்களைக் கற்றுக்கொண்டு சவால்களைச் சந்திக்கவும் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளவும் பழகவேண்டும்.
  • இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் திரு.நாராயணமூர்த்தி ஒரு பேட்டியில் சொன்னது, "என்னுடைய பிள்ளைகளுக்கு நானாக இன்ஃபோசிஸில் வேலை தரப்போவதில்லை. அவர்கள் தங்களுடைய திறமைகளை வளர்த்துக்கொண்டு முறைப்படி எங்கள் நிறுவனத்தின் செயல்முறைகளைப் பின்பற்றித் தங்களுக்கான பதவியைப் பெறவேண்டும்.'
ஆகவே, நீங்கள் உங்களுக்கான படிப்பை எப்படித் தேர்வு செய்யவேண்டுமென்றால் : நான் இந்தப் படிப்பைத் தேர்ந்தெடுக்கக் காரணம் இதற்குத் தேவையான சிறப்புத் திறமைகளும், இந்தத் துறையில் ஆர்வமும் எனக்குள்ளது. என்னால் இந்தத் துறையில் மிகச் சிறப்பாகச் செயல்படமுடியும் என்கிற நம்பிக்கை உள்ளது.

ஆகவே, ஒரு படிப்பைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்னால் கீழ்க்கண்ட கேள்விகளை நீங்களே கேட்டுக்கொள்ளவேண்டும். அதற்குத் திருப்தியான பதில் பெற்றுக்கொள்ளவேண்டும்.

  • இந்தத் துறைபற்றி நீங்கள் முழுமையாகப் புரிந்துகொண்டுவிட்டீர்களா
  • இந்தப் படிப்புக்குத் தேவையான செலவுகள், கல்விக்கடன், உதவித்தொகை போன்றவற்றைப்பற்றித் தெரிந்துகொண்டீர்களா? உங்களுடைய பின்னணிக்கு இது எந்த அளவு பொருந்தும் என்று யோசித்துவிட்டீர்களா? இதற்கான படிப்புச் செலவுகளைச் சமாளிக்க என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்?
  • இந்தத் துறை உங்களுடைய தனிப்பட்ட மற்றும் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான ஒரு வேலையைக் கொடுக்குமா?
  • இந்தப் படிப்பு எவ்வளவு காலம் நீடிக்கும்? அதன்பிறகு என்னவெல்லாம் படிக்கவேண்டியிருக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
  • M.B.B.S-ஐ பொறுத்தவரை நீங்கள் ஒரு குறிப்பிட்ட அளவுவரை மேல்படிப்புக்குச் செல்லவேண்டும். அதற்குப் பத்து வருடங்கள்வரை ஆகலாம். இந்தப் படிப்பை முடித்தபிறகு உங்கள் பணி வாழ்க்கை உறுதிப்பட மூன்று அல்லது நான்கு வருடங்கள் ஆகலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? உதாரணமாக, சட்டப்படிப்பை எடுத்துக்கொண்டால், அதைப் படித்து முடித்தவர்கள் இன்னொரு பெரிய வழக்கறிஞர் அல்லது நிறுவனத்தின்கீழ் பணிபுரிந்து பயிற்சி பெறவேண்டும். அதன்பிறகுதான் அவர்கள் சொந்தமாகத் தொழில் செய்யமுடியும்.
  • இந்தத் துறையில் உள்ள தொழிற்சார்ந்த ஆபத்துகளைப்பற்றி உங்களுக்குத் தெரியுமா? அவை உங்களுடைய இயல்புடன் பொருந்திப்போகிறதா என்று யோசித்துக்கொண்டீர்களா? 
  • உதாரணமாக, நீங்கள் எப்போதும் வீட்டில் இருப்பதையே விரும்புகிறவர் என்றால், Marine Engineering படிப்பு/வேலையைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்னால் நீங்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துக்கொள்ளவேண்டும்.
  • ஒருவேளை நீங்கள் வருங்காலத்தில் உங்களுடைய தந்தை/குடும்பத் தொழிலைச் செய்யலாம் என்று முடிவுசெய்திருந்தால் இப்போது தேர்ந்தெடுத்திருக்கும் படிப்பு அப்போது உங்களுக்கு உதவியாக இருக்குமா என்று பார்த்துக்கொள்ளுங்கள்.
  • ஒருவேளை உங்களுடைய நிலைமை இப்படி இருந்தால்! நான் இன்னும் என்னுடைய படிப்பைத் தேர்வு செய்யவில்லை எதைத் தேர்ந்தெடுப்பது என்று எனக்குத் தெரியவில்லை. என் பெற்றோர் என்னை ஒரு படிப்பில் சேர்ப்பார்கள். எனக்கு எது தேவை என்று அவர்களுக்குத் தெரியும். ஒவ்வொருவரும் சில சிறப்புத் திறமைகளோடுதான் பிறக்கிறார்கள். உங்களுடைய சிறப்புத் திறன்கள் என்னென்ன என்று உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். அந்த ஆர்வத்தை நீங்கள் தேடத் தொடங்கலாம். அது கிடைக்கும்வரை நிறுத்தாதீர்கள். இப்போதைக்கு உங்களுக்கு நல்ல வழிகாட்டக்கூடியவர்களை அடையாளம் காணுங்கள்! பின்பற்றுங்கள்!!
இவையனைத்தையும் மீறி, பெற்றோர்களும், பள்ளி, கல்லூரி முடித்து வெளியே வரும் மாணவ மாணவிகளும் மேற்கொண்டு "என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்?" அதற்கான வழிகாட்டிகள் எங்கு கிடைக்கும் என்ற ஆயிரமாயிரம் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் http://www.studyguideindia.com/ என்ற நிறுவனம் சுமார் 100 அத்யாவசியமான படிப்பு முறைகளை பல்வேறு பேராசிரியர்களையும், தொழில் நுட்ப வல்லுனர்களையும், வெளிநாடுகளில் பணிபுரியும் சிறந்த பணியாளர்களையும், தொழிலதிபர்களையும் ஆலோசித்து "என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம்" என்ற ஒரு முழுமையான கல்வி வழிகாட்டியை மிகத் தெளிவாக எளிய தமிழிலும், ஆங்கிலத்திலும் அறிமுகம் செய்துள்ளது. இந்த வழிகாட்டி குறிப்பாக கிராமப் புறத்திலிருந்து வரும் மாணவ மாணவிகளுக்கு பெரிதும் பயனுள்ளதாக அமையும் என்பதில் துளியளவும் ஐயமில்லை.

குறிப்பு: இந்த வழிகாட்டி நூல் தமிழகத்தில் எல்லா முன்னணி நூல் விற்பனையாளர்கள் மூலமாகவும், http://www.studyguideindia.com/ என்ற இணையத்தின் வாயிலாகவும் ரூ.250/-க்கு பெற்றுக்கொள்ளலாம்

நன்றி வேலன்.

WITH REGARDS

M.YOUSUF ANSARI



 
இனி இந்த இணைய தளத்தை பார்க்கலாம். இந்த
 தளத்தை பார்வையிடஇங்கு கிளிக் செய்யவும்.www.tanzil.info  
இந்த இனையதளம் இஸ்லாமியர்களுக்கு மிக
 பயனுள்ளது. திருகுராஅனை கற்று கொள்பவர்களுக்கு
 மிக மிக இந்த தளம் பயனுள்ளது. நீங்கள் கிளிக்
 செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் 
ஆகும்.பயனுள்ளது
இதன் மேல்புறம் பார்த்தீர்களேயானால் உங்களுக்கு கீழு்கண்ட விண்டோதெரியும;.தேவையானமொழியைத்தேர்வு செய்துகொள்ளலாம்
இதில் Search பகுதிக்கு சென்று நமக்கு தேவையானவற்றை 
எழுதுக்களின்மூலம்  தேவையான ஆயத்துகளை தேடிக்
கொள்ளலாம்அரபி டைப்தெரியவில்லை என்றால் 
அருகில் இருக்கும் Roots  மூலமாக  அரபி
 எழுதுக்களை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

Browse பகுதியில் நமக்கு தேவையான சூராக்கள்,ஆயத்துக்கள்,
பக்கங்களை தேடிக்கொள்ளலாம் மட்டுமின்றி அருகில் காணப்படும்
 (-),(+)மூலமாக எழுத்துருக்களை பெரியதாகசிறியதாக அமைத்துக்
கொள்ளலாம்,Recitation பகுதியில் நமக்கு பிடித்தமான ஓதுபவர்களின் பெயர்களைதேர்ந்தெடுக்கொள்ளலாம் அதன் அருகில்
 காண்ப்படும் பெருக்கல் குறிஎன்பதுஒதுப்படுகின்ற வரிகளை  
ஒருதடவைகேட்க நினைத்தால் பெருக்க்ல் குறியை ஒரு முறையும்
இரண்டு அல்லது மூன்று தடவை கேட்க நினைப்பவர்கள் 
விருப்பதிற்கேற்ப அதில் கிளிக் செய்து தேர்வு செய்துகொள்ளலாம்

Translation பகுதியில் சென்று தமிழை தேர்வு செய்து 
மேலே காணப்படும்Quran பகுதியில் கிளிக் செய்தால் 
ஒதப்படும் ஆயத்துகளின் மேல் Mouse  வைத்தால் 
அதன் விளக்கம் தமிழில் தெரியும்,  மேலே
 காணப்படும்Translation பகுதியில் கிளிக் செய்தால்
 குரான் முழுவதையும் தமிழில்காணலாம்.
Translation பகுதியில் கீழ் காணப்படும் 
Fixed Translation Box என்பது ஓதுகின்ற 
போது தானாக அதன் விளக்கம் அருகில் தெரியும்
Translation on Mouse Over
 என்பது ஓதப்படுகின்ற போது  Mouse   
ஆயத்துகளின்மேலே வைத்தால் தமிழில் விளக்கம் 
தெரியும்


Quran என்ற பகுதிக்கு சென்று அரபி எழுத்துகளை
தேர்ந்தெடுத்துக்கொள்ளாலம்





ஆங்கிலத்திலும் நீங்கள் விளக்கங்கள் பெறலாம்.



Display Options  சென்றும் எழுத்துருக்களின்அளவு 
மற்றும் Align  செய்து கொள்ளலாம்முயற்சி 
செய்து பாருங்கள்நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்.

மதம் சம்பந்தமான பதிவு என்பதால் இதில்
 ஏதேனும் தவறு இருந்தால் மன்னிக்க வேண்டுகின்றேன்.
 
 
மதங்களை கடந்து மனித நேயம் வளர வாழ்த்துக்கள்.

நன்றி
வேலன்.

திருக்குர்ஆன் பிரகடனப்படுத்தும் சாதனையாளர்கள்!

திருக்குர்ஆன் பிரகடனப்படுத்தும் சாதனையாளர்கள்!

First Published : 23 Jul 2010 01:05:00 PM IST


உலகமயமாக்கல் பெரும் பொருளாதார இடைவெளியை மனித குலத்தில் தோற்றுவித்துள்ள காலகட்டம் இது. மத நெறியாளர்களும், சமூக ஆர்வலர்களும் அடித்தட்டு மக்களைத் துன்புறுத்தும் பொருளாதார ஆதிக்கத்தால் மிகுந்த கவலையடைந்துள்ளனர்.   "பணம் இல்லையென்றால் பிணம்தான்' "ஏழை சொல் அம்பலமேறாது' "பணம் பத்தும் செய்யும்' "பணம் பாதாளம் வரை பாயும்' - என்று பணம், சொத்து உள்ளிட்ட உடைமைகளின் வலிமையைப் பழமொழிகளும் பறைசாற்றுகின்றன.   இஸ்லாம் மதத்தின் கண்ணோட்டத்தில் பணத்தின் மதிப்புதான் என்ன?         சம்பாதித்த பணம் அனைத்தையும் தன்னிடமே பாதுகாப்பாக வைத்துக் கொள்பவனை, ""அவனது சொத்து அவனுக்குப் பயனளிக்காது' என்று திருக்குர்ஆன் (அத்தியாயம் 92, வசனம் 11) எச்சரிக்கிறது. ""பணம் பத்தும் செய்யாது; பாதுகாப்பும் அளிக்காது'' என்பதே இதன் அர்த்தம்.    அதேசமயம் செல்வத்தை தானமாக வழங்கி, தன்னைத்தானே பரிசுத்தமாக்கிக் கொள்பவர்களை மிக நல்லவர்களாக திருக்குர்ஆன் (92-18) அடையாளப்படுத்துகிறது. பிறருக்குப் பொருள் வழங்கி உதவுவதால் அகமும், புறமும் சுத்தமாகும். இல்லையேல் பொறாமை, கொலை, கொள்ளை அதிகரிக்கும்; உலகம் அசுத்தமாகும்.    தேவைப்படுவோருக்கு உரியதை வழங்கி, தன்னை பரிசுத்தமாக்கிக்கொள்ளும் இயல்பினரை திருக்குர் ஆன் (87-14) வெற்றியாளராகப் பிரகடனப்படுத்துகிறது. பணம் சம்பாதித்தவரை வெற்றி வாகை சூடியவராக உலகம் புகழ்கிறது. ஆனால் திருக்குர்ஆன், வாரி வழங்குபவரையே சாதனையாளராகப் பிரகடனப்படுத்துகிறது.    அளவற்ற பற்றுடன் இறைவனை நம்புவது, தொழுகையைக் கடைப்பிடிப்பது, வறியோருக்கு வழங்குவது என ""மெய்யான இறை மார்க்கத்திற்கு'' திருக்குர் ஆன் (98-5) இலக்கணம் கூறுகிறது.    மதத்தின் அடிப்படைக் கூறு என்பது இறைவனை நம்புவதுதான். இதற்கான பகிரங்க அடையாளம் தொழுகை. ஆனால் இவற்றுடன் அறநெறி முடிந்துவிடவில்லை. பிறருக்குப் பொருளுதவி வழங்குவதும் இறைநெறிப் பணியாக வலியுறுத்தப்படுகின்றது.    "இரக்க குணத்தை மறுப்போர் மத மறுப்பாளர் ஆவர்' என்கிறது திருக்குர் ஆன் (107-7). அதாவது இறைவனை மறுப்பதும், இரக்கத் தன்மையை மறுப்பதும் ஒன்றாகும்.   எப்போதும் பணத்தை சேகரித்துக் கொண்டிருப்பதையும், பணக் கட்டுகளை எண்ணிக் கொண்டிருப்பதையும், பணத்தையே நம்பிக் கொண்டிருப்பதையும் வாழ்வின் முழு நோக்கமாய், மூச்சாய்க் கொண்டு இயங்குபவர்களின் போக்கினை,  ""வாழ்வின் நோக்கம் சம்பாதிப்பது மட்டுமன்று'' என்று திருக்குர்ஆன் (104-4) மறுத்துரைக்கிறது.      "பணம் பாதுகாக்கும்' என்ற கோட்பாட்டை திருக்குர்ஆன் ஒப்புக் கொள்ளவில்லை. ""கல்லறை செல்லும் வரை பணம் சம்பாதிக்கும் ஆசை மனிதனை விடுவதாயில்லை. போட்டி மனப்பாங்குடன் சொத்து குவிப்பது, வெறித்தனமாகச் செல்வம் சேர்ப்பது ஆகியவை வாழ்வின் உயர் குறிக்கோளை இடறச் செய்துவிடும்'' என்கிறது திருக்குர் ஆன் (102-1)    நரக நெருப்பைக் கண்ணால் பார்க்கும் வரை இத்தகையோரின் சொத்து சேர்க்கும் வெறி குறையவே குறையாது. ஆனால் வாழ்க்கையின் அட்டகாசங்கள் குறித்து இவர்களிடம் கேள்விக் கணக்குக் கேட்கப்படும்.    சொத்தையும், பணத்தையும் நேசிப்பவன் மீது "நன்றி கெட்டவன்' (திருக்குர் ஆன்- 100-6) என்று இறைவன் கோபப்படுகிறான். வளங்கள், மனித நலன்கள் அனைத்தும் இறைவனிடமிருந்தே அருளப்படுகின்றன. அணு அளவு தீமை புரிந்தாலும் அதற்குரிய "தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும்' என்பதே திருக்குர் ஆன் (99-8) வலியுறுத்தும் வாழ்வியல் கோட்பாடாகும். குறுக்கு வழியில் பல தவறுகள் புரிந்து, பிறரின் உரிமைகளை அபகரித்து, ஆதிக்கம் செலுத்தி, சொத்தைக் குவித்துக் கொண்டு, பிறகு கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுக்களை இறைவன் சன்னிதானத்தில் சமர்ப்பிப்பதால் பயன் ஏதும் விளையாது.    இலக்கு, நோக்கம் முக்கியம். அதை அடையும் வழியும் முக்கியம். மது விற்பனையில் கிடைத்த பணம், லஞ்சப் பணம் என்று தீய வழியில் கிடைத்த செல்வத்தைக் கொண்டு அறச் செயல் புரிவதாக நடிப்பதன் மூலம் இறையருளைப் பெற முடியாது.   பணம் பெறுவதற்குக் கையாளப்படும் வழி மிக முக்கியம். பொது ஜன விரோத வழியை மதம் அங்கீகரிக்கவில்லை. முதலும், கடைசியுமாக மனித குல உபகாரமே மதத்தின் அடிப்படைச் சித்தாந்தமாகும். முதலில் துரோகம்; பிறகு உதவுவது என்பதெல்லாம் ஏற்புடையதல்ல.   மனிதன் இயல்பாகவே சொத்து, செல்வம், பணம் போன்றவற்றுடன் அளப்பரிய பிரியத்துடன் தன்னைப் பிணைத்துக் கொள்கிறான். சமயக் கண்ணோட்டத்தில், செல்வத்திற்கு யாதொரு மதிப்புமில்லை. பணம் இல்லாதோரை இழிவுப்படுத்துவதை சமயம் முற்றாக நிராகரிக்கிறது.    இறைவன் தான் நினைத்தோருக்கு செல்வத்தை வாரி வழங்குகிறான். இன்னும் பலருக்கு ஏழ்மையே வாழ்வுப் போக்காகி விடுகிறது. ஆனால் வறியவர்களுக்கு வாழ்வளிப்பதை செல்வந்தர் தம் முதல் கடமையாகக் கருத வேண்டும். இல்லையேல் இறைவன் கட்டளையை மறுத்து நன்றியைக் கொன்ற குற்றம் வந்து சேரும்.பணம் உள்ளோர் தமது சாதனையை எண்ணிப் பெருமை, இறுமாப்பு கொள்ளாமல் வாரி வழங்கிப் பிறரின் வறுமையை நீக்க முயல வேண்டும். சொத்தை இறைவனின் அருட்கொடையாக நம்ப வேண்டும். உலகக் காரியங்களை, நடப்புகளை இறை கருணையே நடத்துகிறது, பணமல்ல என்பதனை மனிதன் உணர வேண்டும்.-  ஏ.எம். ரசூல்மொஹிதீன்

சொர்க்கத்தின் திறவு கோல்

வெள்ளிமணி
சொர்க்கத்தின் திறவு கோல்

First Published : 10 Sep 2010 12:22:47 PM IST


    அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க, ரமலான் மாதம் முழுவதும் பகல் பொழுதில் நோன்பு நோற்றும், புனித வேத நூலான குர் ஆனை ஓதியும், ஐவேளைத் தொழுகையை பரிபூரணமாக நிறைவு செய்தும், மற்றும் அனைத்து நோன்பு நாட்களின் இரவிலும் தராவீஹ் என்ற சிறப்புத் தொழுகையை தொழுபவர்கள், "ஈதுப் பெருநாள்' அன்று மகிழ்ச்சியாக இருக்க வேண்டியே அல்லாஹ் இத்திருநாளை மக்களுக்கு அளித்துள்ளான்.    இந்தச் சிறப்பான நாளை உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியுடன் அனுஷ்டிக்க வேண்டும். அதற்காக இறைவனுக்கு நன்றி செலுத்தும் முகமாக ஷவ்வால் மாதம் முதல் நாளன்று பெருநாள் சிறப்புத் தொழுகையும் ஒவ்வொரு இஸ்லாமியரின் மீதும் கடமையாக்கப்பட்டுள்ளது.    புண்ணியங்கள் பூத்துக் குலுங்குகின்ற மாதம் ரமலான் மாதமாகும்.  ஹிஜ்ரி வருடத்தில் உள்ள பன்னிரண்டு மாதங்களில் ரமலான் மாதம் மிகவும் சிறப்பான, கண்ணியம் மிக்க மாதமாக இருக்கின்றது. ஏனெனில் அந்த ஒரு மாதத்தில்தான் ஈமான் கொண்ட மக்கள், இறைவன் வகுத்துக் கொடுத்துள்ள ஐந்து கடமைகளில் மூன்றை-அதாவது தொழுகை, நோன்பு மற்றும் "ஜக்காத்' கடமைகளை ஒரு சேர நிறைவேற்றுகின்ற வாய்ப்பு ஏற்படுகின்றது.    நோன்பில்லாத மற்ற நாட்களில் உண்ண உணவு கிடைக்காத வறியோர்களின் மன நிலையை வசதி படைத்தவர்களுக்கு உணர வைப்பதுதான் ரமலான் நோன்பின் தலையாய நோக்கமாகும். இதன் அடிப்படையில்தான் ஈகைப் பெருநாள், ஈத்துவக்கும் நாளாகிறது. அதன்படி ஏழைகளுக்கு கொடுத்து மகிழ்கின்ற நாள் இது என்று சொல்லப்படுகின்றது. நோன்பு வைத்து வசதி படைத்தவர்கள் தனது குடும்பத்தாருடன் அந்நாளில் மகிழ்ச்சியாக இருப்பதைப்போல, வறியோர்களும் அந்நாளில் குறைந்த அளவு மகிழ்ச்சியுடனாவது இருக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் "ஜக்காத்' என்ற ஏழை வரியை, இஸ்லாமிய மக்களுக்கு அல்லாஹ் கட்டாயக் கடமையாக ஆக்கி உள்ளான்.     குர்ஆனில் 80க்கும் மேற்பட்ட இடங்களில் தொழுகை மற்றும் ஜக்காத் கொடுப்பதன் அவசியம் பற்றி அல்லாஹ் விளக்கமாக அருளியுள்ளான். அவைகளில் சில :      "'பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் வறிய நிலையில் உள்ளவர்களுக்கு பொருள் உதவி செய்து வாருங்கள்'' என்றும், ""உங்கள் மேல் விதிக்கப்பட்ட ஜக்காத்தை அதைப் பெறத் தகுதியானவர்களுக்கு முறையாகக் கொடுத்திடுங்கள்'' என்றும் வலியுறுத்தியுள்ளான்.      "செல்வம்' என்பது சென்று கொண்டே இருப்பது ஆகும். அதாவது செல்வம் இன்று நம்மிடம் இருக்கும். அடுத்த நாள் அடுத்தவரிடம் போகும். இப்படியே அதன் பயணம் ஒரு தொடர் கதையைப் போன்றது.  அச்செல்வம் செல்வந்தர்களுக்குள்ளேயே சுழன்று கொண்டு இருப்பது அல்ல! எனவேதான் ஜக்காத்தைப் பெறத் தகுதியானவர்களைத் தேடிச் சென்று கொடுக்க வேண்டும் என்பதாகச் சொல்லப்பட்டுள்ளது. அப்பொழுதுதான் செல்வத்தால் ஏழை மற்றும் வறியோர்களுக்கும் பயன் ஏற்பட வாய்ப்பு கிடைக்கும் என்று திருமறையில் அல்லாஹ் அருளியுள்ளான்.     பொருள் வசதி படைத்தவர்கள் தங்கள் மேல் கடன் சுமை இல்லாத நிலையில் தன்னிடம் உள்ள தங்கம், வெள்ளி மற்றும் கிடைக்கின்ற வாடகை வருவாய் இவைகளில் கிடைக்கின்ற மொத்த வருமானத்தில் இரண்டரை சதவீதம் எனக் கணக்கிட்டு ஏழை வரியாகக் கொடுத்திட வேண்டும்.     ஜக்காத் கொடுப்பதனால் ஒருவரிடமிருக்கின்ற செல்வம் தூய்மையாக்கப்படுகின்றது என்ற கருத்தும் உள்ளது.      நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ""ஏழை மற்றும் வறியோர்களையும் நீங்கள் நினைவு கூர்ந்து, உங்கள் வாழ்க்கையைச் செம்மையாக வாழ்ந்திடுங்கள்'' என்று கூறியுள்ளார்கள். அவைகளில் சில :1. ஜக்காத் கொடுப்பதால் உங்கள் செல்வம் குறைவது இல்லை. மாறாக அது "பரக்கத்' என்ற அபிவிருத்தி அடைகின்றது.2. தண்ணீர் நெருப்பை அணைத்து விடுவதைப்போல நீங்கள் செய்கின்ற தான தர்மங்கள் உங்கள் பாவத்தை அழித்துவிடுகின்றன.3. உங்கள் கைப் பொருள் உங்கள் கையை விட்டுப் போவதற்கு முன்பு தர்மம் செய்வதில் விரைந்து செயல்படுங்கள். 4. திண்ணமாக ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு திறவுகோல் இருக்கின்றது. ஜக்காத் கொடுப்பது, சொர்க்கத்தின் திறவுகோல் ஆகும்.5. தான தர்மங்கள் செய்வதால் பொருள்கள் மற்றும் செல்வங்கள் பாதுகாக்கப்படுகின்றன.      ஆம்! நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மேற்படி அறிவுரைப்படி ஈதுப் பெருநாளைக் கொண்டாடுவோம்!

வெள்ளிமணி

வெள்ளிமணி
காந்தியடிகள் போற்றிய கலீஃபா

First Published : 08 Oct 2010 12:00:00 AM IST

Last Updated :

ரலாறு என்பது மனித குலத்தின் வளர்ச்சி! அதன் அமைப்புகளை ஆராய்ந்தறிந்து கூறும் உயிருள்ள தொகுப்பு! இஸ்லாத்தின் இரண்டாவது கலீஃபா உமர் (ரலி) அவர்களின் வரலாற்றைக் காண்போம் (கலீஃபா-தலைவர்).  அரபு நாடுகளில் அவர்களின் இயற்பெயரை விட, அவர்களுடைய தந்தையின் பெயரை குறிப்பிட்டு, "இன்னாருடைய மகன்' என்று கூறுவதே பிரபல்யம் பெற்று விளங்குகிறது. உதாரணம்; உமறு இப்னு கத்தாப் (கத்தாபின் மகன் உமறு). "இப்னு' என்றால் மகன் என்றும், "பின்த்' என்றால் மகள் என்றும் பொருள்படும். இப்படி அழைப்பது அரபிகளின் மரபு. ஆகையால் இஸ்லாத்தின் இரண்டாவது கலீஃபா உமர் (ரலி) அவர்களை "உமறு இப்னு கத்தாப்' என்றே அந்நாட்டு வழக்கப்படி எல்லோரும் அழைத்து வந்தனர்.  கலீஃபா உமர் (ரலி), நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைவிட பதிமூன்று வயது இளைஞர். இவர் ஆரம்பக் காலகட்டங்களில் நபிகளார் அவர்களையும், அவர்களது மார்க்கத்தையும் கண்மூடித்தனமாக எதிர்த்து வந்தார்.  நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கொல்வதற்காக கையில் வாளுடன் சென்ற உமர், தம் சகோதரி இஸ்லாத்தை ஏற்ற செய்தி கேட்டு ஆத்திரமடைந்தார். அவர், தன் சகோதரி வீட்டை அடைந்தபோது, அந்தச் சகோதரி, "குர்ஆன்' ஓதுவதைக் கேட்டார். குர்ஆன் வாசகங்களில் தம் மனதைப் பெரிதும் பறி கொடுத்தார்; இறை வசனங்களில் அவர் உள்ளம் பெரிதும் உருகியது. அவர் மனம் மாறி நபிகளாரிடம் சென்று இஸ்லாத்தில் இணைந்து கொண்டார்.  நபிகளார் அன்று முதல் உமரை, "பாரூக்' (உண்மையையும், பொய்யையும் பிரித்தவர்) என அழைத்தார். நபிகளார், மதீனமா நகரில் முதன் முதலாக இறைவனைத் தொழ ஒரு பள்ளிவாயிலை உருவாக்கினார். ஐந்து நேரமும் இறைவனைத் தொழ மக்களை பள்ளிவாயிலுக்கு அழைக்க, உமர், தம் கனவில் கண்ட "அதான்' முறையில், ""ஒருவரை "பாங்கு' சொல்லச் செய்வன் மூலம் தொழுகைக்கு அழைக்கலாம்'' என்று ஒரு யோசனையைக் கூறினார். நபிகளாரும் அதை ஏற்றதால், அம்முறை இன்றுவரை கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. உலக முடிவு நாள் வரை அது தொடரும்.  போர் செலவுகளுக்கென தம் சொத்தில் சரிபாதியைப் போர் நிதியாக நபிகளாரிடம் அளித்துள்ளார் உமர். நபிகளார் மறைவுக்குப் பின், அபூபக்கர் (ரலி) அவர்களை முதல் கலீஃபாவாக அறிவித்தவர் உமர்தான். இவர் பெரும் செல்வந்தராக இருந்த போதிலும், மிக எளிமையான வாழ்வே வாழ்ந்து வந்தார்.  உமர் (ரலி) அவர்களை இஸ்லாத்தின் இரண்டாவது கலீஃபாவாக பொறுப்பில் அமரச் செய்தனர். கலீஃபா உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலம், உலக வரலாற்றில் போற்றப்படுவதாக அமைந்திருந்தது. நமது தேசப்பிதா மகாத்மா காந்திஜீ, ""கலீஃபா உமரின் ஆட்சிபோல் நமது இந்திய திருநாட்டில் அமைய வேண்டும்'' எனக் கூறியுள்ளார்.  மைக்கேல் ஹெச்.ஹார்ட் என்னும் அமெரிக்க வரலாற்று ஆசிரியர், ""அந்த நூறு பேர்'' என்ற ஒரு நூலில், முதலிடத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றிய வரலாற்றை எழுதியுள்ளார். அவ்வரலாற்று நூலில் இரண்டு முஸ்லிம் பெயர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளன. ஒன்று நபிகளார் வரலாறும், மற்றொன்று கலீஃபா உமர் (ரலி) அவர்களின் வரலாறும் ஆகும்.  கலீஃபா உமர் (ரலி) அவர்கள், நீதி வழுவாது ஆட்சி செலுத்தி வந்தனர். அதற்கு ஒரு சான்றினைக் காண்போம். கலீஃபாவின் மகன் அப்துல்லா, ஒரு நாள் காரணமின்றி ஒருவனை அடித்துவிட்டார். கலீஃபா முறைப்படி விசாரித்து, தம் மகன் குற்றவாளி எனக் கண்டறிந்தார்; தான் பெற்ற மகன் என்று பாரபட்சம் பார்க்காது தண்டனை வழங்க உத்தரவிட்டார் என்பது வரலாறு.  மக்களின் குறைகளை நேரடியாகத் தெரிந்து கொண்டு களைய, கலீஃபா உமர் (ரலி), இரவில் நகர் வலம் செல்வது வழக்கம். ஒருநாள் இரவு ஒரு பெண் பானையில் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்துக் காய்ச்சிக் கொண்டிருந்தார். குழந்தைகள், ""நம் அம்மா நமது பசியைப் போக்கத்தான் அடுப்பில் சோறு சமைத்துக் கொண்டிருக்கிறார்'' என எண்ணியவர்களாக பசி மயக்கத்தில் உறங்கிப் போய் விடுகின்றனர். இது குறித்து அப்பெண்ணிடம் காரணம் கேட்டபோது, அப்பெண்ணின் குடும்பத்தில் வறுமை வாட்டுவது தெரிய வருகிறது. உடனே அரசு சேமிப்புக் கிடங்குக்குச் சென்று, தமது தோளில் ஒரு மூட்டை மாவை சுமந்து வந்தார் கலீஃபா உமர்(ரலி). அதைக் கொண்டு அப்பெண், தனது குழந்தைகளின் பசியைப் போக்கினாள். இக்காட்சி, கலீஃபாவின் உள்ளத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.  கலீஃபா உமர் (ரலி) அவர்களின் வாழ்க்கையில் நடைபெற்ற இன்னொரு சம்பவத்தைக் காண்போம். வழக்கம்போல் கலீஃபா நகர் வலம் வரும்போது, ஒரு நாட்டரபியின் இல்லத்தில் முக்கி முனகி அழும் குரல் கேட்கிறது. கலீஃபா, ""என்ன?'' என்று வினவுகின்றார். நாட்டரபியின் மனைவிக்குப் பேறு காலம் நெருங்கிவிட்டதையும், அவருக்கு உதவ வேறு பெண் இல்லை என்பதையும் அறிந்து கொண்டார் கலீஃபா உமர்(ரலி). உடனே தன் அரண்மனை சென்று, மனைவி உம்முகுவ்தூமை அழைத்து வந்து, அப்பெண்ணுக்கு மருத்துவம் பார்க்கச் செய்தார். கலீஃபாவின் மனைவியின் உதவியால், நாட்டரபியின் மனைவி ஓர் ஆண் குழந்தையை நல்லபடியாகப் பெற்றெடுத்தாள். அப்பொழுது கலீஃபாவின் மனைவி உம்மு குல்தூம் அவர்கள், மகிழ்ச்சியின் மிகுதியால், ""அமீருல் முஃமினீன் அவர்களே! தங்களின் நண்பருக்கு குழந்தை பிறந்துவிட்டது. அவருக்கு வாழ்த்துச் சொல்லுங்கள்'' என்று வெளியில் நின்று கொண்டிருந்த கலீஃபா அவர்களிடம் கூறினார்கள்.  இந்த உரையாடலைக் கேட்ட அந்த நாட்டரபி, பெரிதும் வருந்தினார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இவ்வாறெல்லாம் நமக்குப் பேருதவி செய்தவர் கலீஃபா உமர் (ரலி) அவர்களே என அறிந்து அந்நாட்டரபி பயந்து நடுங்கியவராக கலீஃபாவிடம் மன்னிப்பு கேட்டார்.  ஆனால் கலீஃபா அவருக்கு ஆறுதல் கூறி, மறுநாள் அரசவைக்கு வரும்படி அழைத்தார்; அந்நாட்டரபிக்கு உதவித் தொகைகளை வழங்கினார்.  இவ்வாறு நேர்மை- நீதி- இரக்க குணம் ஆகியன அனைத்து நற்குணங்களும் ஒருங்கே அமையப் பெற்று, எதற்கும் அஞ்சா நெஞ்சுரம் கொண்டவராய், தமது நண்பர்களுடன் கலந்தாலோசித்து நல்லாட்சி செய்ததால்தான் உலகத் தலைவர்கள், கலீஃபா உமர்(ரலி) அவர்களின் ஆட்சியைப் புகழ்ந்துரைத்துள்ளார்கள்.  எனவே, பண்டைப் பெருமை பேசி நின்றிடாமல், பண்டைய வாழ்வோடு, இன்றைய வாழ்வையும் ஒப்பிட்டு நேர்மையும்- நீதியும் தன்னலமற்ற தன்மையில் இன்னோரன்ன பிற நற்பண்புகளும் வாய்க்கப்பெற்று நமது வருங்காலத்தை வகுக்க வேண்டும்! அதற்கு எல்லாம் வல்ல இறைவன் நல்லருள் புரிவானாக!

என்று குறையும் இந்தப் புகைச்சல்?

கட்டுரைகள்
என்று குறையும் இந்தப் புகைச்சல்?

First Published : 20 Sep 2010 12:00:00 AM IST


பொது இடங்களில் புகைபிடிக்க மத்திய அரசு தடைவிதித்து வரும் காந்தி ஜயந்தி தினத்துடன் இரண்டு ஆண்டுகள் முழுமையாக முடிகின்றன. ஆனால், பொது இடங்களில் புகைபிடிப்போரின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறதே தவிர குறைந்ததாகத் தெரியவில்லை.   இரு ஆண்டுகளில் பொது இடங்களில் புகை பிடித்ததற்காக அபராதம் விதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை வேண்டுமானால் தொடலாம். ஆனால், நாள்தோறும் பல லட்சம் பேர் இன்னமும் பொது இடங்களில்தான் புகைத்துக் கொண்டிருக்கின்றனர். பொதுமக்கள் அதிகம் கூடும் பேருந்து, ரயில் நிலையங்கள், திரையரங்குகள் மற்றும் தேநீர் கடைகள் போன்றவற்றில் புகைபிடிப்போர் தொடர்ந்து எவ்வித அச்சமுமின்றி தங்கள் பணியைச் செவ்வனே தொடர்கின்றனர்.   தீயவற்றைப் பார்க்க, கேட்க, பேசக் கூடாது என வலியுறுத்தி கண், காது, வாயைப் பொத்திக் கொண்டிருக்கும் மூன்று பொம்மைகள் பிரபலமானவை. பொது இடங்களில் குழந்தைகள், முதியவர்கள், நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என எவர் குறித்தும் கவலைப்படாமல், தங்களை மறந்து புகைபிடிப்பவர்களோ நம்மை மூக்கைப் பொத்தவைத்து நான்காவது பொம்மையாக்கி விடுகின்றனர்.   மதுவைப்போலவே புகையிலைப் பொருள்களையும் மாணவப் பருவத்தினர் அதிகம் பயன்படுத்துவது அண்மைக்காலமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.   கவலைக்கு மருந்து, ஸ்டைலுக்காக, டென்ஷனைக் குறைக்க, விளையாட்டாக ஒரு பொழுது என தங்களுக்குத் தாங்களே சமாதானம் கூறிக் கொண்டு இளம் பருவத்தினர் விளையாட்டாகத்தான் இப்பழக்கத்தைத் தொடங்குகின்றனர்.    ஆனால், சில நாள்களுக்குப் பின்னர் அவர்கள் விட நினைத்தாலும் இப் பழக்கம் அவர்களை விடுவதில்லை. இப் பழக்கத்துக்கு மாணவிகளும், மகளிரும்கூட அடிமையாகி விடுகின்றனர். நம்புவதற்கே கடினமாக இருந்தாலும் அதுதான் உண்மை என்ற அதிர்ச்சித் தகவல்களை ஆய்வறிக்கைகள் மூலம் அறிய முடிகிறது.   விஷம், தீ போன்றவற்றை மனித உயிர்களைக் கொல்லும் நேரடியான எதிரிகள் என்றால் சிகரெட், பீடி போன்ற புகையிலைப் பொருள்களை மறைமுக எதிரிகள் எனக் குறிப்பிடலாம். காரணம், அவை தங்கள் மீது பற்றுவைத்து தங்களைப் பற்ற வைப்பவர்களின் உதட்டோடு உறவாடி பகையைத் தீர்த்துக் கொள்(ல்)பவை.   விலையேற்றத்தை ஊதித்தள்ள இயலாமல் அனைத்துத் தரப்பினருமே தவிக்கின்றனர். ஆனால், புகைபிடிப்பவர்களுக்கோ எந்தக் காலத்திலும் விலையேற்றம் ஒரு தடையாகவோ, பிரச்னையாகவோ இருப்பதாகவே தெரியவில்லை. விண்ணை முட்டும் விலைவாசி உயர்விலும் அவர்கள் இடைவிடாமல் ஊதித்தள்ள சளைப்பதுமில்லை, அஞ்சுவதுமில்லை. பேருக்கு ஒரு சட்டம் இயற்றி, அதைத் தங்கள் ஆட்சியின் சாதனைப் பட்டியலில் பத்தோடு பதினொன்றாக ஆக்கிக் கொள்ளாமல் பொது இடங்களில் புகைபிடிப்பதை முற்றிலும் தடுக்க வேண்டுமானால் தண்டனையை அரசு கடுமையானதாக்க வேண்டும்.  அபராதத் தொகையும் அதிகரிக்கப்பட வேண்டும்.   அப்போதுதான் பொது இடங்களில் புகைபிடிப்போரின் எண்ணிக்கை முற்றிலும் குறையும். புகைமூச்சு விடும் பொதுமக்களும் நிம்மதி பெருமூச்சு விடுவர்.   புகையிலைப் பொருள்கள் அவற்றைப் பயன்படுத்துவோருக்கு மட்டுமன்றி அருகில் இருப்போர் மற்றும் புகையை சுவாசிப்போருக்கும் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு கொடிய நோய்களை ஏற்படுத்துகின்றன என அறிவுறுத்தப்பட்டாலும், புகைபிடிப்போர் பிறரை நினைத்துப் பார்ப்பதுமில்லை; தங்களைக் குறித்தும் கவலைப்படுவதுமில்லை.   இப்போது இழுத்துவிடும் ஒவ்வொரு மூச்சுப் புகையும் நாளடைவில் துன்பத்தில் இழுத்துவிடும் நோய்களின் தூதுவர்கள் என, புகைபிடிப்போர் யோசித்துப் பார்க்க வேண்டும். புகையிலைப் பொருள்களை பொது இடங்களில் பயன்படுத்த மட்டுமல்லாது அவற்றுக்கு முற்றிலும் தடைவிதிக்க வேண்டும். மாறாக, அவற்றைப் பொது இடங்களில் மட்டும் பயன்படுத்தத் தடைவிதிப்பது விஷ மரத்தை வேரோடு அழிக்காமல் இலைகளையும், கிளைகளையும் அகற்றிக் கொண்டிருப்பதற்குச் சமம்.   புகையிலைப் பொருள்களில் மண்டையோடு சின்னத்தைப் பொறிப்பதா வேண்டாமா என மிகப் பெரும் ஆராய்ச்சியில் இறங்கி மண்டையை உடைத்துக் கொள்வதற்குப் பதிலாக அத்தகைய பொருள்களே வேண்டாம் என அரசு முடிவெடுக்கலாமே!   இளைய சமுதாயம் என்னும் வருங்கால இந்தியத் தூண்கள் நலமாகவும், வளமாகவும் உருவாக வேண்டுமானால் அவர்கள் உலகில் நல்ல எண்ணங்களையும், நல்லவற்றையும் விதைக்க வேண்டும்.   அதே நேரம் இதுபோன்று உடலுக்கும், உயிருக்கும் மிகப்பெரும் கேடு விளைவிக்கும் புகையிலைப் பொருள்கள்போன்ற விஷ(ய)ங்கள் அவர்கள் பார்வையில் படாதிருக்க வேண்டும். அதற்கு ஒரேவழி புகையிலைப் பொருள்களுக்குத் தடைவிதிப்பதல்ல, புகையிலைக்கே தடைவிதிப்பதுதான்! மா. ஆறுமுககண்ணன்

சுறா மீன்

ஞாயிறு கொண்டாட்டம்
சுறா மீன்

First Published : 26 Sep 2010 12:00:00 AM IST


வானத்தில் விமானம் பறந்து செல்வதைப் போல கடலுக்குள் தனிக்காட்டு ராஜாவாக ஜாலியாக சுற்றிக் கொண்டிருப்பவையே சுறா மீன்கள். மிக ஆழத்திலும் கடலின் மேற்பரப்பிலும் பவனி வரும் இம்மீன்கள் மற்ற மீன்களில் இருந்து முற்றிலும் வேறுபட்ட உடலமைப்புகளை உடையது என்றும் இதன் சிறப்புக்களையும் பற்றி ராமநாதபுரத்தை சேர்ந்த கடல் உயிரியலாளர் ர.செந்தில்குமார் கூறியதாவது...""உலகம் முழுவதும் 300 வகைகள் இருந்தாலும் அவையனைத்தும் 8 வெவ்வேறு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. சாதாரண வகை மீன்களுக்கும் சுறா மீன்களுக்கும் ஏராளமான வேறுபாடுகள் இருப்பது இதன் சிறப்பம்சம். மற்ற மீன்களுக்கு உடலில் முட்கள் இருக்கும். ஆனால் சுறாக்களுக்கு மென்மையான திசுக்களை உடைய விரைவில் மக்கிப் போகும் தன்மையுடைய எலும்புகளே இருக்கின்றன.எந்த மீனாக இருந்தாலும் அவை தண்ணீரில் மிதப்பதற்கு அதன் வயிற்றில் உள்ள காற்றுப் பைகளே சுருங்கி விரிந்து உதவும்.ஆனால் சுறாவுக்கோ அதன் ஈரல்களில் உள்ள லேசான எண்ணெய் தான் மிதப்பதற்கு உதவுகிறது. இந்த எண்ணெய் தண்ணீரைவிட லேசானது.           தண்ணீரில் மிதக்கும்போது தனது உடலை நிலை நிறுத்திக் கொள்ள உடலின் முன்புறத்தில் உள்ள துடுப்புகளைப் பயன்படுத்தி விமானம் போல பேலன்ஸ் செய்து கொள்கிறது. கடலுக்கு அடியில் மிக ஆழத்தில் செல்பவையாக இருந்தாலும் நினைத்தவுடன் கடலின் மேற்பரப்புக்கு வந்துவிடும் சிறப்பும் வேறு எந்த மீனுக்கும் இல்லை. நீர்மூழ்கிக் கப்பல்களின் வடிவமைப்புக்கும் கட்டுமானத்துக்கும் இம்மீன்களைப் பற்றிய ஆராய்ச்சிகள் பெரிதும் பயன்படும்.மற்ற மீன்கள் செதில்கள் மூலமே சுவாசிக்கும்.கடலின் ஆழத்தில் வசிக்கும் சுறாக்கள் செதில்களாலும் மற்ற சுறாக்கள் அதனது தோலின் மூலமாகவும் சுவாசிக்கின்றன.             முட்டையிடும் சுறாக்களும் உண்டு,குட்டி போட்டு இனப்பெருக்கம் செய்யும் சுறாக்களும் உண்டு. குட்டி போட்டு இனப்பெருக்கம் செய்யும் சுறாக்கள் 5 மாதம் வரை கருவுற்று 6வது மாதத்தில் குட்டி போடுகின்றன. இவை 5 வருடங்கள் கழித்தே முதிர்ச்சியடைந்தாலும் சுமார் 25 வருடங்கள் வரை உயிர்வாழக் கூடியவை.திமிங்கிலம் போன்று தோற்றமளிக்கும் ஒரு வகை பெரிய சுறா தான் திமிங்கில சுறா எனப்படுகிறது. நுண்ணிய மிதவை உயிரினங்களைத் தண்ணீரின் வழியாக உறிஞ்சி உண்பது தான் இதன் விருப்ப உணவு. இச்சுறாக்களை இறைச்சிக்காகவும் அதன் துடுப்புகளுக்காகவும் பெருமளவில் வேட்டையாடுகின்றனர். இவற்றின் துடுப்புகளில் இருந்து செய்யப்படும் சூப்புகளுக்கு ஆசிய நாடுகளில் அதிக தேவையிருப்பதால் சில நாடுகளில் இதன் துடுப்புகளை மட்டும் வெட்டி எடுத்துக் கொண்டு உடலை கடலில் எறிந்து விடுகின்றனர். இவற்றின் ஈரலில் உள்ள எண்ணெய் வைட்டமின் ஏ ஆகவும் பயன்படுகிறது.மற்ற மீன்களைவிட தோற்றத்திலும்,உடலமைப்பிலும் பல்வேறு சிறப்புக்களை உடைய இந்த விநோத ஜீவன் மனிதர்களைக் கடிப்பதில்லை'' என்றார்.

மதவாதமா? மதச்சார்பின்மையா?

கட்டுரைகள்
மதவாதமா? மதச்சார்பின்மையா?

First Published : 24 Sep 2010 12:15:52 AM IST


உச்ச நீதிமன்றம் வர இருக்கும் தீர்ப்பை ஒரு வாரம் ஒத்தி வைத்திருக்கிறது என்றாலும், அலாகாபாத் உயர் நீதிமன்றம் எத்தகைய தீர்ப்பை "பாபர் மசூதி' பிரச்னையில் வழங்கப் போகிறது என்பதை நாடே எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. மத்திய அரசும், உத்தரப் பிரதேச மாநில அரசும் பத்து நாள்களுக்கு முன்பிருந்தே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளன. நாடு முழுவதிலும் தீர்ப்புக்குப் பிறகு மதரீதியான மோதல் வெடித்துக் கிளம்புமோ என்ற பதற்றமும் அச்சமும் நிலவுகிறது. நீதிமன்றத் தீர்ப்பை ஏற்க மாட்டோம் என்று வெறி பிடித்துக் கூச்சலிடும் கூட்டம் ஒருபுறம். நீதிமன்றத் தீர்ப்பை மதித்து ஏற்க வேண்டும் என்ற மத்திய அரசின் முழுப்பக்கப் பத்திரிகை விளம்பரங்கள் மறுபுறம். நீதிமன்றங்களில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன. எனினும் இந்த ஒரு தீர்ப்பு குறித்து மட்டும் ஏனிந்த பதற்றம்? அச்சம்? ஒரு வழக்கின் பயணம் உயர் நீதிமன்றத்துடன் முடிந்து முற்றுப்பெறப் போவதில்லை. தீர்ப்பை ஏற்காதவர்களுக்கு இருக்கவே இருக்கிறது உச்ச நீதிமன்றம். அதில் மேல்முறையீடு செய்து காத்திருக்கலாம். ஏற்கெனவே இந்த வழக்கு, தீர்ப்புக்காக 125 ஆண்டுகள் காத்திருந்தது. மேலும் சில பல ஆண்டுகள் உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்குத் தொடர்வதால் நாட்டில் பெரிதாக எதுவும் நிகழப்போவதில்லை. ஆனால், மதவெறிக் கூட்டம் இதுபற்றியெல்லாம் அக்கறைப்படாமல்,  மக்களிடையே மதஉணர்வைத் தூண்டிவிட்டு மலிவான வழியில் "அரசியல் ஆதாயம்' அடைய நினைப்பதால்தான் பல கோடி வழக்குகளில் ஒன்றான "பாபர் மசூதி வழக்கு' பூதாகாரப்படுத்தப்படுகிறது. இதுவே மதவாத சக்திகளுக்குக் கிடைத்துவிட்ட வெற்றி என்பது வேதனைதரும் உண்மையாகும். இந்த வழக்கின் தீர்ப்பைப் பரபரப்பாக்கியதில் "விஸ்வ இந்து பரிஷத்' அமைப்புக்கும், ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கும் முக்கிய பங்குண்டு. இவ்விரண்டு அமைப்புகள்தாம் செப்டம்பர் 24-ல் தீர்ப்பு வழங்கப்படும் என்று செய்தி வெளியானவுடன் ""நீதிமன்றத்திற்கு பகவான்  ராமர் பிறந்த இடம் குறித்து தீர்ப்புச் சொல்ல அதிகாரமோ - தகுதியோ கிடையாது'' என பகிரங்கமாக இந்திய அரசியல் சட்டத்துக்கு எதிராகவும் - நீதிமன்றங்களை அவமதிக்கும்படியும் பேசின; பிரசாரத்தைக் கட்டவிழ்த்து விட்டன. இந்த வழக்கின் விவரங்களைப் பார்ப்போம். 1885-ல் பாபர் மசூதிக்கு அருகில் உள்ள இடத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கு பைசாபாத் துணை நீதிமன்றத்தில்தான் முதன்முதலாக பிரிட்டிஷ் அமைச்சருக்கு எதிராக ரகுபர்தாஸ் என்பவர் வழக்குத் தொடுத்தார். 1949 டிசம்பர் 23-ல் நாடு விடுதலை பெற்றதற்குப் பிறகு ஐம்பதுக்கும் மேற்பட்ட கும்பல் ஒன்று திருட்டுத்தனமாக பாபர் மசூதிக்குள் நுழைந்து "ராமர்' உள்ளிட்ட சில விக்ரகங்களை வைத்துவிட்டனர். பின்னர் அவர்கள் கோபால்சிங் விஸ்ராட் என்பவர் மூலம் 1950 ஜனவரியில் பைசாபாத் சிவில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். ராமர் உள்ளிட்ட விக்ரகங்களை அகற்ற அரசு தடை விதிக்கக் கோரியும் - அந்த விக்ரகங்களுக்கு பூஜை நடத்த அனுமதிக்கக் கோரியும் அந்த வழக்குத் தொடரப்பட்டது. இது இரண்டாவது வழக்காகும். 1950 டிசம்பரில் தொடுக்கப்பட்ட இதேபோன்ற வழக்கு 1990 ஆகஸ்டில் மனுதாரரான பரமஹம்ச ராமச்சந்திரதாஸôல் வாபஸ் பெறப்பட்டுவிட்டது. இந்த விவகாரம் குறித்த நான்காவது வழக்கு டிசம்பர் 1959-ல் அலாகாபாத் உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டது. இத்தனைக்கும் பிறகுதான் 1961 டிசம்பரில் முஸ்லிம் வக்ஃப் வாரியத்தின் மூலம் பாபர் மசூதியைத் தங்கள் வசம் ஒப்படைக்க உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. 28 ஆண்டுகளுக்குப் பிறகு இதே பிரச்னைக்காக ஐந்தாவது வழக்கு 1989 ஜூலையில் தொடுக்கப்பட்டது. ஒரு வழக்கு மட்டும் வாபஸ் பெற்றுக் கொள்ளப்பட்டதால் மற்ற நான்கு வழக்குகளையும் உத்தரப்பிரதேச மாநில அரசின் கோரிக்கையை  ஏற்று உயர் நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது. அதன் தீர்ப்பைத்தான்நாடு இப்போது எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. நீதி கேட்டு நெடும்பயணமாக 125 ஆண்டுகள் பயணித்த வழக்கு, இது ஒன்றாகத்தான் இருக்கும். இந்த வழக்குகளின்போது நிலவிய அரசியல் சூழ்நிலையைக் கூர்ந்து கவனித்தால், தாமதத்துக்கான காரணம் புரியும். ஏன் சென்றவாரம்கூட இந்தத் தீர்ப்பைத் தள்ளிவைக்க வழக்குத் தொடுக்கப்பட்டது. இப்போது தீர்ப்பு ஒருவார காலத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதாவது பிரச்னையை முடிந்துவிடாமல் பார்த்துக்கொள்வதில் சிலருக்கு மிகுந்த அக்கறை உள்ளது. 1982-ல் தான் "விஸ்வ ஹிந்து பரிஷத்' அமைப்பு பாபர் மசூதி பிரச்னையைக் கையில் எடுத்தது. ராமர் பிறந்த அயோத்தியில் ஏற்கெனவே இருந்த இந்துக்கோயிலை இடித்துவிட்டு மொகலாய மன்னர் பாபர் மசூதியைக் கட்டினார் என்றும், எனவே பாபர் மசூதியை இடித்துவிட்டு ராமர் பிறந்த அந்த இடத்திலேயே கோயிலைக் கட்டுவோம் எனவும் அந்த அமைப்பு அறைகூவல் விடுத்தது. இதற்காக நாடு முழுவதிலுமிருந்து செங்கற்கள் கூட ஊர்வலமாகத் திரட்டப்பட்டன. கோயில் கட்டுவதற்காக வெளிநாடுவாழ் இந்துக்களிடம் பல நூறு கோடி ரூபாய் நிதி வசூலிக்கப்பட்டது. ராமர் கோயில் பிரச்னை சூடுபிடிக்கத் தொடங்கியவுடன் அதிலிருந்து அரசியல் ஆதாயம் அடைய முதன்முதலாக பாஜகவினர் "பாலம்பூர்' (இமாச்சல பிரதேசம்) தேசிய செயற்குழுவில் ஜூன் 1989-ல் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி, தங்களை இந்தக் கோயில் கட்டும் இயக்கத்தோடு இணைத்துக் கொண்டனர். பாஜக தலைவர் அத்வானி, குஜராத்தில் தொடங்கிய "ர(த்)த யாத்திரை' பல மாநிலங்களின் வழியாகச் சென்று இறுதியில் பிகார் மாநில அரசால் தடுத்து நிறுத்தப்பட்டது. எனினும் அதற்குள் ஏராளமான மதக்கலவரங்கள் எண்ணற்ற உயிர்ப்பலிகள் நிகழ்ந்துவிட்டன. அரசியல் ரீதியாக பாஜக புத்துயிர் பெற்றது. உத்தரப் பிரதேசத்தில் ஆட்சியைப் பிடித்தது. பின்னர் மத்திய அரசையும் ஆறாண்டு காலம் நடத்தியது என்பதெல்லாம் சமீபத்திய வரலாறு. அது ஒருபுறம் இருக்க, மதச்சார்பற்ற கட்சியென்று தன்னை அடையாளங் காட்டிக்கொள்ளும் காங்கிரஸ் கட்சி,  இந்தப் பிரச்னையில் என்ன நிலை எடுத்தது? 1986-ல் ராஜீவ் காந்தியின் காங்கிரஸ் அரசு பைசாபாத் மாவட்ட நீதிபதியின் தீர்ப்பை நிறைவேற்றுவதாக கூறிக் கொண்டு, பாபர் மசூதியின் பூட்டுகளைத் திறந்து அனைத்துப் பிரச்னைகளுக்கும் வழிதிறந்துவிட்டது. ஒரு மாவட்ட நீதிமன்றத் தீர்ப்பை அலறி அடித்துக் கொண்டு நிறைவேற்றியிருக்க வேண்டியதில்லை. மத்திய அரசு மேல்முறையீடு செய்திருக்கலாம். ஆனால் செய்யவில்லை. ஒரு மாவட்ட நீதிமன்றத் தீர்ப்புக்கு இவ்வளவு மரியாதை அளித்த ராஜீவ் காந்திதான்,  முஸ்லிம் பெண்களை விவாகரத்து செய்தால் முஸ்லிம் ஆண்கள் அவர்களுக்கு வாழ்வூதியத்தை "ஜீவனாம்சம்' எனும் பெயரில் வழங்கிட வேண்டுமென "ஷாபானு' தொடுத்த வழக்கில், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தடம்புரளச் செய்வதற்காகவே அவசரச் சட்டத்தைப் பிறப்பித்தார் என்பது காட்டும் உண்மை என்ன? இஸ்லாமிய மதவாதிகளின் வற்புறுத்தல்களுக்கு அடிபணிந்தார் என்பதுதானே அதன் பொருள். இதன் மூலம் சிறுபான்மை சமுதாயத்தினரின் நல்லெண்ணத்தைப் பெறுவதுதானே அந்த அவசரச் சட்டத்தின் நோக்கம்? ஷாபானு வழக்கில் இஸ்லாமியர்களின் நல்லெண்ணத்தைப் பெற முயன்ற ராஜீவ் காந்தி அரசு, அயோத்தியா பாபர் மசூதிப் பிரச்னையில் பைசாபாத் மாவட்ட நீதிபதியின் தீர்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு இந்துக்களின் நல்லெண்ணத்தையும் - வாக்குகளையும் பெற விழைந்தது.  இதேபோலத்தான் 1989 நவம்பரில் நாடாளுமன்றத் தேர்தல் தொடங்குவதற்கு சில தினங்களே இருந்த சூழலில், ராஜீவ் காந்தி அரசாங்கம் "விஸ்வ ஹிந்து பரிஷத்' அமைப்பினர் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டும் பூஜை நிகழ்ச்சியை நடத்த அனுமதித்தது. பாபர் மசூதிக்கு எந்த ஆபத்தும் வராமல் பாதுகாப்பேன் என்று நீதிமன்றத்தில் அளித்த உறுதிமொழியை மீறி 450 ஆண்டு பழமை வாய்ந்த - புராதனச் சின்னமான பாபர் மசூதியை கரசேவகர்கள் என்ற வேடத்தில் காலிகள் இடித்துத் தள்ளுவதை வேடிக்கை பார்த்தவர் அன்றைய உத்தரப் பிரதேச முதல்வர் கல்யாண்சிங். மசூதி இடித்துத் தள்ளப்படுவதை கண்ணாரக் கண்டு ஆனந்தக் கூத்தாடி அருகிலிருந்து களித்தவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சுஷ்மா ஸ்வராஜ். இவர்களெல்லாம் பாஜகவின் உயர்மட்டத்  தலைவர்கள். பாபர் மசூதி கரசேவகர்களால் இடித்துத் தள்ளப்படும் என்ற உளவுத்துறையினரின் எச்சரிக்கையை அலட்சியப்படுத்திவிட்டு, பாபர் மசூதி இடிந்து வீழ்ந்தால் ஒரு பிரச்னை முடிவுக்கு வரும் என்று அமைதி காத்தவர் அன்றைய காங்கிரஸ் கட்சிப் பிரதமர் நரசிம்ம ராவ்.  மொத்தத்தில் காங்கிரஸ் கட்சியினரும், பாஜகவினரும் ராமர் கோயில் பிரச்னையில் - பாபர் மசூதி இடித்துத் தள்ளப்பட்டதில் ஒரே மாதிரியான நிலை எடுத்ததுபோல தோன்றுவதற்கு காரணம் எது? "வாக்கு வங்கி' அரசியலுக்கு முக்கியத்துவம் அளித்து பெரும்பான்மையாக வாழும் இந்துக்களிடம் நல்ல பெயர் வாங்கிக்கொள்ள இரண்டு கட்சிகளிடையே பெரிய போட்டியே நடக்கிறது. இவர்களை நம்பினால் இந்தியாவின் மதச்சார்பின்மையைக் காப்பாற்ற இயலுமா என்ற ஐயம், இன்று இந்திய மக்களுக்கு வந்துவிட்டது. இவ்விரு கட்சிகளுக்கும் மாற்றான ஓர் அரசியல் சக்தி எழும்போதுதான் உண்மையில் மதவாதம் அழிவுறும். சமயச்சார்பின்மை வலுப்பெறும். அயோத்திப் பிரச்னை பற்றிய வழக்கின் தீர்ப்பு வழங்கப்படுமா, மீண்டும் ஒத்திவைக்கப்படுமா என்று தெரியாத தொங்கல் நிலை நீடிக்கும் இந்த வேளையில் ஏற்படும் உரத்த சிந்தனைதான் எனது இந்தக் கருத்துகள்.