Friday, December 24, 2010

இணையத்தளம் தொடங்கலாம் பணம் பார்க்கலாம் - 1 தொடர்


இணையத்தளம் தொடங்கலாம் பணம் பார்க்கலாம் - 1 (தொடர்



ஷெல் என்பவர் முப்பத்தேழு வயதுப் பெண்மணி. ஒரு பெரிய அமெரிக்கக் கம்பெனியில் பொறுப்பான பதவியில் இருக்கிறார். ஒரு நாள் அலுவலகத்தில் ஒரு பெரிய தப்பு செய்துவிட்டார்.

அவசரமாக முடிவு எடுத்து, ஆலோசிக்காமல் செயல்பட்டு, அகலக் கால் வைத்துவிட்டார். அவரால் கம்பெனிக்கு பல லட்சம் டாலர் நஷ்டம். தன் மடத்தனம் புரிந்தவுடன் தயங்கிக்கொண்டே முதலாளியிடம் போய் விஷயத்தைத் தெவித்தார்.

இந்த நிலையில் பாஸ் என்ன செய்வார்?

வேறொரு கம்பெனியாக இருந்திருந்தால் உடனே ஷெல்லுக்கு சீட்டுக் கிழிவதுடன், அவருடைய சூப்பர்வைசருக்கு சூப்பர்வைசருக்கு சூப்பர்வைசர் வரை அத்தனை பேருக்கும் அண்டர்வேருடன் நிறுத்தி வைத்து பரேடு நடந்திருக்கும். ஆனால் ஷெல்லின் பாஸ் புன்னகையுடன், “”அப்படியா, தாங்க்ஸ்!” என்றார்.

“”தயங்கித் தயங்கி, ஒரு முடிவும் எடுக்காமல் களிமண் மாதிரி உட்கார்ந்திருப்பவர்கள்தான் தப்பே செய்ய மாட்டார்கள். அடிக்கடி தடுக்கி விழுபவர்கள்தான் நம் கம்பெனிக்குத் தேவை. அவர்கள்தான் நாலு கால் பாய்ச்சலில் ஓடிக் கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தம்!”

இணையத்தில் நம்பர் வன் நிறுவனமான கூகுள் நிறுவனத்தை பற்றிய சுவாராசியமாக அடிக்கடி இணையத்தளங்களில் கூறப்படும் கதை இது.

இணையத்தில் அனைத்தையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் கூகுள் நிறுவனத்தை  லாரி பேஜ் தன் கல்லூரித் தோழர் செர்ஜி ப்ன்னுடன் கல்லூரியில் பயிலும் போதே சேர்ந்து உருவாக்கினார். ஆரம்பிக்கும் போது விளையாட்டாக தான் ஆரம்பிக்கிறோம் என்றனர். தேடு பொறியுடன் ஆரம்பித்து இன்று முழு இணையத்தையும் ஆக்கிரமித்திருக்கிறது கூகுள்.
இந்த கட்டுரையின் தொடர்ச்சியை ஆனந்தி இதழின் ஆன்லைன் பதிப்பில் 36ம் பக்கத்தில் வாசித்து பயன்பெறுங்கள்.

இணைப்பு : www.aananthi.com

No comments:

Post a Comment