Friday, December 24, 2010

அரசே மதுக்கடைகளை நடத்துவது சரியல்ல? - ராகுல் காந்தி

அரசே மதுக்கடைகளை நடத்துவது சரியல்ல? - ராகுல் காந்தி




AddThis Social Bookmark Button
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் சென்னை கன்னிமாரா உணவகத்தில் நேற்று பல்வேறு தரப்பு மக்களுடன் கலந்துரையாடினார். அப்போது அரசியல்,விவசாயம்,இலங்கை தமிழர் பிரச்சினை உள்பட பல்வேறு விடயங்களில் அவரிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன. அப்போது இலங்கை தமிழர் பிரச்சினையில் காங்கிரஸ் கட்சி சரியான நிலைப்பாடு எடுக்கவில்லை. சரியாக அணுகவில்லை என்று கூறப்படுகிறதே என்று கேள்வி எழுப்பினார் ஒருவர்.

அவரது இந்த கேள்விக்கு பதில் அளித்த ராகுல் காந்தி ' இலங்கை தமிழர் பிரச்சினையை தீர்க்க என்னென்ன செய்ய முடியுமோ, அனைத்தையும் காங்கிரஸ் கட்சி செய்து வருகிறது. அரசியல் தீர்வு காண நாங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று எதை எண்ணி சொல்கிறீர்கள்? போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரண உதவியாக இந்திய அரசு சார்பில் தரப்பட்டுள்ளது. 80 ஆயிரம் வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுத்துள்ளோம். மத்திய மந்திரி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர்,வெளியுறவு செயலாளர் ஆகியோர் இலங்கை சென்று போரினால் பாதிக்கப்பட்ட மக்களையும், மறுவாழ்வு பணிகளையும் பார்த்து வந்துள்ளனர்.எனினும் மறுவாழ்வு பணிகள் திருப்திகரமாக இல்லை. இது விடயமாக மத்திய அரசிடம் பேசுவேன். இலங்கை தமிழர் பிரச்சினையில் நானே நேரில் தலையிட்டு தீர்வு காண முடிவு செய்துள்ளேன். தமிழர்களுக்கு அரசியல் உரிமைகள் கிடைத்திட முயற்சி மேற்கொள்வேன். இலங்கை அதிபர் ராசபக்சே இந்தியாவுக்கு வந்தது குறித்து என்னிடம் கேட்கிறீர்கள். ஆனால் அவரை நான் அழைத்து வரவிலலையே! என்றார்.

அரசே மதுக்கடைகளை நடத்துவது சரிதானா? பூரண மதுவிலக்கை கொண்டு வரமுடியாதா என்ற கேள்விக்கு ராகுல் காந்தி பதிலளிக்கையில் ' மது அருந்துவது ஆரோக்கியமான செயல் அல்ல. அரசே மதுக்கடைகளை நடத்துவது சரியான செயல் அல்ல. நான் இதை ஏற்றுக் கொள்கிறேன். ஒவ்வொரு மனிதனும் குடிக்க மாட்டேன் என்று உறுதி மொழி எடுக்க வேண்டும். குடிக்காதே என்று யாரையும் நிர்ப்பந்தப்படுத்துவது எனக்கு சரியானதாக படவில்லை. இவ்வாறு அவர் பதிலளித்தார்.

No comments:

Post a Comment