Wednesday, December 22, 2010

டாக்டர் முகமது ஹனீஃபுக்கு நஷ்ட ஈடு: ஆஸ்திரேலியா

உலகம்
டாக்டர் முகமது ஹனீஃபுக்கு நஷ்ட ஈடு: ஆஸ்திரேலியா சம்மதம்

First Published : 22 Dec 2010 01:00:39 AM IST


மெல்போர்ன், டிச.21: பயங்கரவாதிகளுக்கு உதவியதாக கைது செய்யப்பட்ட இந்திய டாக்டர் முகமது ஹனீஃபுக்கு நஷ்டஈடு கொடுக்க ஆஸ்திரேலிய அரசு சம்மதம் தெரிவித்துள்ளது.

3 ஆண்டுகளுக்கு பின்னர் ஆஸ்திரேலியா திரும்பிய ஹனீஃப், பிரிஸ்பேனில் அந்நாட்டு அதிகாரிகளுடன் நஷ்டஈடு பெறுவது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் அவருக்கு நஷ்டஈடு வழங்க ஆஸ்திரேலிய அதிகாரிகள் சம்மதம் தெரிவித்தனர்.

ஆஸ்திரேலிய அரசு, பயங்கரவாதிகளுக்கு உதவினேன் என்ற சந்தேகத்தின் பெயரில் என்னை கைது செய்ததால் எனது டாக்டர் தொழில் முற்றிலும் முடங்கியது. இப்போது அரசு அளிக்கும் இழப்பீடு எனது தொழிலை பழையபடி தொடங்க உதவியாக இருக்கும் என்று ஹனீஃப் தெரிவித்தார்.

டாக்டர் ஹனீஃபுக்கு நியாயமான நஷ்டஈட்டை அளிக்க
ஆஸ்திரேலிய அரசு ஒப்புக்கொண்டுள்ளது என்று அவரது
வழக்கறிஞர் ரூட் ஹோட்சன் கூறினார். ஆனால் எவ்வளவு நஷ்டஈடுத் தொகை அளிக்கப்படவுள்ளது என்பது குறித்து அவர் எதுவும் தெரிவிக்கவில்லை.

பிரிட்டனின் கிளாஸ்கோ விமான நிலையத்தில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக பயங்கரவாதிகளுக்கு உதவினார் என்ற குற்றச்சாட்டில் டாக்டர் முகமது ஹனீஃபை (31) ஆஸ்திரேலிய போலீஸôர் கைது செய்தனர். 12 நாள்கள் அவரை
சிறையில் வைத்து விசாரணைக்கு உள்படுத்தினர்.

2007-ம் ஆண்டில் நடைபெற்ற இந்த சம்பவம் ஆஸ்திரேலியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் ஹனீஃபுக்கும் பயங்கரவாதிகளுக்கும் தொடர்பு இல்லை என தெரியவந்ததை அடுத்து அவர் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து ஹனீஃப், ஐக்கிய
அரபு அமீரகம் சென்றார்.

No comments:

Post a Comment