இஸ்லாமிய நாடுகள் இணைந்து 1975-ம் ஆண்டில் இஸ்லாமிய மேம்பாட்டு வங்கியை உருவாக்கின. அதே ஆண்டில் வர்த்தக ரீதியிலான இஸ்லாமிய வங்கி, துபாய் இஸ்லாமிய வங்கி என்ற பெயரில் உருவானது. ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் 300-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. கடந்த 1994-ம் ஆண்டு முதல் பஹ்ரைனில் ஆண்டு தோறும் உலக இஸ்லாமிய வங்கிகளின் மாநாடு நடந்து வருகிறது. இதில், இஸ்லாமிய வங்கிகளின் தலைவர்கள் பங்கேற்று அதன் வளர்ச்சிக்கான திட்டங்களைத் தீட்டி வருகிறார்கள்.
உலக அளவிலான இஸ்லாமிய வங்கிகளில் 60% ஈரானில் மட்டுமே இருக்கின்றன.
மதுபானம், சூதாட்டம் தொடர்பான முதலீட்டு விஷயங்களை இஸ்லாமிய வங்கிகள் தவிர்த்துவிடுகின்றன. |
No comments:
Post a Comment