Monday, September 26, 2011

வாடிக்கையாளருக்குச் சாதகமான விதிமுறைகள் வருவது எப்போது?


திருப்பூரில் பட்டப்பகலில் ஒரு தனியார் நிதிநிறுவனத்தில் ஆறு பேர் நுழைந்து ரூ.2 கோடி மதிப்புள்ள தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றிருக்கிறார்கள். இதில் தொடர்புடையவர்களைக் காவல்துறை கண்டுபிடிக்கும், கைது செய்யும். ஆனால், இத்தகைய சம்பவங்களுக்குப் பின்னால், பாதிக்கப்படும் வாடிக்கையாளர் நிலைமையைப் பற்றி வங்கிகளோ, தனியார் நிதிநிறுவனங்களோ எண்ணிப்பார்ப்பதே இல்லை.

 அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள், தனியார் நிதிநிறுவனங்களைப் பொறுத்தவரை அவற்றின் பல கிளைகளில் ஏதோ ஒரு கிளையில் திருட்டு அல்லது கொள்ளை நடைபெற்றுள்ளது. அவர்களது மொத்த நிதியை ஒப்பிடும்போது, திருட்டு அல்லது கொள்ளைபோன பணத்தின் மதிப்பு மிகக் குறைவாக இருக்கும். இதற்கான காப்பீட்டுத் தொகை பெறுதல், காவல்துறை புலனாய்வின் மூலம் இழந்ததைப் பெறுதலுக்கான சாத்தியங்களும் உண்டு. அதற்கான காலஅவகாசம் அவர்களது கழுத்தை நெரிக்கும் சுமையாக இருப்பதில்லை.
 ஆனால் நுகர்வோர் அல்லது வாடிக்கையாளர் நிலைமைதான் எப்போதுமே பெருந்துயரமாக இருக்கிறது. அடமானம் வைக்கப்பட்ட நகை ரசீதுடன் போனால், போலீஸ் விசாரணை முடிந்த பிறகு இதுபற்றிப் பேசுவோம் என்பார்கள். மேலும், எந்தவொரு நகைக்கும் அதன் முழு மதிப்பில் 75 விழுக்காடுதான் நகை மதிப்பீட்டுத் தொகையாகக் குறிக்கப்படும். சில தனியார் நிறுவனங்கள் தங்கள் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்த விரும்பாமல், ரசீதுகளில் குறிப்பிட்டுள்ள நகை மதிப்பீட்டுத் தொகையை திருப்பித் தந்தாலும், குறைந்தபட்சம் 25 விழுக்காடு மதிப்பீட்டை ஒரு நுகர்வோர் மறைமுகமாக இழக்க நேரிடுகிறது. அதுவும் இந்த மதிப்பீடு, அடகுவைத்த தேதியில் இருந்த தங்கத்தின் மதிப்பைப் பொறுத்தது.
 ஒரு வங்கி வளாகத்துக்குள் நடக்கும் எந்தத் திருட்டுக்கும் வங்கி நிர்வாகம்தான் பொறுப்பு. அதாவது பணம் செலுத்துவதற்காகவோ அல்லது பணம் பெற்றுக் கொண்டோ வங்கி வளாகத்தில் இருக்கும்போது நடைபெறும் திருட்டுகளுக்கு வங்கி நிர்வாகம்தான் பொறுப்பு. அவர்களுக்குப் பாதுகாப்பு அளித்திருக்க வேண்டிய வங்கிகள், அவ்வாறு செய்யத் தவறியதால் அவர்கள்தான் பொறுப்பு என்று நீதிமன்றத் தீர்ப்புகள்கூட தெளிவாகச் சுட்டுகின்றன. ஆனால், எந்தக் கிளை மேலாளரும் இதை ஒப்புக்கொள்ள மாட்டார். சில வங்கிகளில் காசாளர் கவுன்ட்டர் முகப்பிலேயே, "நாங்கள் பொறுப்பல்ல' என்று எழுதி வைத்திருக்கிறார்கள்.
 நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளில் அளிக்கும் பாதுகாப்புப் பெட்டக வசதியும்கூட, நுகர்வோர் அல்லது வாடிக்கையாளருக்குச் சாதகமானதாக இருப்பதில்லை. பெட்டியை வாடகைக்குத் தந்தவர், வாடகைக்கு எடுத்துக்கொண்டவர் என்ற அடிப்படையில்தான் ஒப்பந்தமே தவிர, அதில் உள்ள பொருள்கள் காணாமல்போனால், நாங்கள் பொறுப்பல்ல என்கின்றன வங்கிகள். வாடிக்கையாளர் வைக்கும் நகை, ஆவணங்கள் குறித்து எந்தப் பதிவும் எங்களிடம் இல்லாதபோது நாங்கள் எப்படி அவர்கள் சொல்லும் மதிப்பீட்டுக்கு இழப்பீடு வழங்க முடியும் என்று சொல்கிறார்கள்.
 பத்து ஆண்டுகளுக்கு முன்பு கோவை குனியமுத்தூரில் உள்ள நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கியின் சுவரைப் பெயர்த்து, பாதுகாப்புப் பெட்டகத்தின் பின்பக்கமாக வெல்டிங் கருவிமூலம் வெட்டியெடுத்து, திருட்டு நடந்தது. வழக்குப் பதிவானது. ஆனால், யார்யார் என்னென்ன நகை வைத்திருந்தனர் என்பதைக் காவல்துறையிடம் கொடுக்கும்படியும், அவை மீட்கப்பட்டால் கேட்டுப்பெற, அல்லது காவல்துறையே வழங்க ஏதுவாக இருக்கும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. சில வங்கிகள் மிக எச்சரிக்கையாக, உங்கள் ஆவணங்கள், ரொக்கப்பணம் செல்லரிக்கப்பட்டால் வங்கி நிர்வாகம் பொறுப்பல்ல என்றும் நிபந்தனையை சேர்த்துக் கொள்கின்றன.
 பணம் புழங்கும் நிறுவனங்கள் எல்லாவற்றிலும், தனியார் நிதிநிறுவனங்கள், வங்கிகள் அனைத்திலும் சிசிடிவி வைக்கப்பட வேண்டும், பயிற்சி பெற்ற பாதுகாவலர்கள் துப்பாக்கியுடன் காவலுக்கு நிறுத்தப்பட வேண்டும் என்று காவல்துறை வலியுறுத்துவதாகவும், ஆனால் பல வங்கிகள் இவற்றை நடைமுறைப்படுத்துவதில்லை என்றும் இந்தச் சம்பவத்தில் போலீஸ் உயர் அதிகாரிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
 இதற்கு முக்கிய காரணம் வங்கி ஊழியர்களின் அலட்சியம்தான். சிசிடிவி வைத்தால், அது திருடர்களை மட்டுமல்ல, வேலை செய்யாமல், இருக்கையிலேயே உட்காராமல் இருக்கும் ஊழியர்களையும் பதிவு செய்யுமே என்பதுதான் அவர்களது கவலை. கொஞ்சம் தைரியமான மேலாளராக இருந்தால், இதை வைத்தே அந்த ஊழியர் மீது அத்தாட்சியுடன் நடவடிக்கை எடுத்துவிட்டால் தாங்கள் பாதிக்கப்படலாம் என்கிற முன்னெச்சரிக்கை உணர்வுகூட காரணமாக இருக்கலாம்.
 வங்கியில் பணம் செலுத்தும்போது, ரூபாய் நோட்டு கள்ளநோட்டாக இருந்தால், கிழித்து விடுகிறார்கள். நல்லது. அதைத் திருப்பித் தந்தால் மீண்டும் புழக்கத்துக்குப்போகும் என்பதால் அதைக் கிழிப்பதுதான் முறையான செயல். ஆனால், அந்த வாடிக்கையாளர் குறிப்பிட்ட இடத்தில் உள்ள குறிப்பிட்ட வங்கியின் ஏடிஎம்-மில் எடுத்த பணம் என்று முறையிட்டால், அதைக் குறைந்தபட்சம் பதிவுசெய்ய வேண்டாமா? எப்படி நம்புவது என்று கேட்கிறார்கள்.
 வங்கிகள், நிதிநிறுவனங்களில் திருட்டு, கொள்ளை, கையாடல், பொருள்இழப்பு ஏற்பட்டால் அவை வாடிக்கையாளருக்கு இழப்பை ஏற்படுத்துவதாகவே இருக்கிறது. வாடிக்கையாளருக்குச் சாதகமான விதிமுறைகள் வருவது எப்போது?
THANK S BY DINAMANI 
தலையங்கம்: வாடிக்கையாளர்கள் ஏமாளிகள்!

First Published : 26 Sep 2011 02:53:01 AM IST

Last Updated : 26 Sep 2011 04:30:10 AM IST

 

Thursday, September 22, 2011

Al-Qari'a



بسم الله الرحمن الرحيم
திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி). (1) திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி) என்ன? (2) திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி) என்ன வென்று உமக்கு எது அறிவித்தது? (3) அந்நாளில் சிதறடிக்கப்பட்ட ஈசல்களைப் போன்று மனிதர்கள் ஆகிவிடுவார்கள். (4) மேலும், மலைகள் கொட்டப்பட்ட பஞ்சைப் போன்று ஆகிவிடும். (5)எனவே, (அந்நாளில்) எவருடைய (நன்மையின்) நிறை கனத்ததோ- (6) அவர் திருப்தி பொருந்திய வாழ்வில் இருப்பார். (7) ஆனால் எவனுடைய (நன்மையின்) நிறை இலேசாக இருக்கிறதோ- (8)அவன் தங்குமிடம் "ஹாவியா" தான். (9)இன்னும் ('ஹாவியா') என்ன என்று உமக்கு அறிவித்தது எது? (10) அது சுட்டெரிக்கும் (நரகத்தின்) தீக்கிடங்காகும். (11)

At-Takathur



بسم الله الرحمن الرحيم
செல்வத்தைப் பெருக்கும் ஆசை உங்களை (அல்லாஹ்வை விட்டும்) பராக்காக்கி விட்டது-(1) நீங்கள் கப்றுகளைச் சந்திக்கும் வரை. (2)அவ்வாறில்லை, விரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள். (3) பின்னர் அவ்வாறல்ல, விரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள். (4) அவ்வாறல்ல - மெய்யான அறிவைக் கொண்டறிந்திருப்பீர்களானால் (அந்த ஆசை உங்களைப் பராக்காக்காது). (5) நிச்சயமாக (அவ்வாசையால்) நீங்கள் நரகத்தைப் பார்ப்பீர்கள். (6) பின்னும், நீங்கள் அதை உறுதியாகக் கண்ணால் பார்ப்பீர்கள். (7) பின்னர் அந்நாளில் (இம்மையில் உங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த) அருட் கொடைகளைப் பற்றி நிச்சயமாக நீங்கள் கேட்கப்படுவீர்கள். (8)
Thank s By http://tanzil.net

Al-Asr



بسم الله الرحمن الرحيم
காலத்தின் மீது சத்தியமாக. (1) நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். (2)ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை). (3)


Thank s by http://tanzil.net

Al-Humaza



بسم الله الرحمن الرحيم
குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான். (1)(அத்தகையவன் செல்வமே சாசுவதமென எண்ணிப்) பொருளைச் சேகரித்து எண்ணிக் கொண்டே இருக்கின்றான். (2) நிச்சயமாகத், தன் பொருள் தன்னை (உலகில் நித்தியனாக) என்றும் நிலைத்திருக்கச் செய்யுமென்று அவன் எண்ணுகிறான். (3) அப்படியல்ல, நிச்சயமாக அவன் ஹுதமாவில் எறியப்படுவான். (4)ஹுதமா என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? (5) அது எரிந்து கொண்டிருக்கும் அல்லாஹ்வின் நெருப்பாகும். (6) அது (உடலில் பட்டதும்) இருதயங்களில் பாயும். (7) நிச்சயமாக அது அவர்களைச் சூழ்ந்து மூட்டப்படும். (8)நீண்ட கம்பங்களில் (அவர்கள் கட்டப்பட்டவர்களாக). (9)
Thank s by http://tanzil.net

Al-Fil




بسم الله الرحمن الرحيم
(நபியே!) யானை(ப் படை)க் காரர்களை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா? (1) அவர்களுடைய சூழ்ச்சியை அவன் பாழாக்கி விடவில்லையா?(2) மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங் கூட்டமாக அவன் அனுப்பினான். (3)சுடப்பட்ட சிறு கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன. (4) அதனால், அவர்களை மென்று தின்னப்பட்ட வைக்கோலைப் போல் அவன் ஆக்கி விட்டான். (5)
Thank s by http://tanzil.net

Quraysh



بسم الله الرحمن الرحيم
குறைஷிகளுக்கு விருப்பம் உண்டாக்கி, (1) மாரி காலத்துடையவும் கோடைக்காலத்துடையவும் பிரயாணத்தில் அவர்களுக்கு மன விருப்பத்தை உண்டாக்கியமைக்காக- (2) இவ்வீட்டின் (கஅபாவின்) இறைவனை அவர்கள் வணங்குவார்களாக. (3) அவனே, அவர்களுக்கு பசிக்கு உணவளித்தான்; மேலும் அவர்களுக்கு அச்சத்திலிருந்தும் அபயமளித்தான். (4)

Thank s by http://tanzil.net

ஷைத்தானுடன் ஒரு உரையாடல்.



ஷைத்தானுடன் ஒரு உரையாடல்.. நன்றி;அஹ்மது ஸாஹிபு.. ஒரு நாள் இரவு நான் ஆழ்ந்த நித்திரையில் இருக்கும் பொழுது பஜ்ர் தொழுகைக்கானபாங்கொலி கேட்டது. பள்ளிக்குச் சென்று ஜமாத்தோடு தொழ வேண்டும் என்ற எண்ணத்தில் எழ முற்பட்டேன். அப்பொழுது ஷைத்தான் அங்கு வந்தவனாக விடிவதற்கு இன்னும் நேரம் இருக்கிறது. ஒரு குட்டித்தூக்கம் போடு என்றான்.தூங்கினால் ஜமாத்தோடு தொழ முடியாமல் போய் விடுமே என்றேன். அதற்கு ஷைத்தான் நான்அதை மறுக்கவில்லை. பகல் முழுவதும் நீ வெயிலில் கஷ்டப்பட்டு உழைத்து களைத்துப்போய் இருக்கிறாய். இந்த இமாமிற்கு என்ன வேலை? நிழலில், பள்ளியின் உள்ளே அமர்ந்துகொண்டு எந்த வேலையும் செய்யாமல் இருக்கிறார். தொழ மறந்தால் வீட்டில் தனியாகதொழ அனுமதி இருக்கிறதே! உன்னை வருத்திக் கொள்ளாதே! இஸ்லாமிய மார்க்கம்இலேசானது. அதை கடினமாக்கி விடாதே! என்றான். அவன் பேச்சில் மயங்கி உறங்கிவிட்டேன். சூரியன் உதயமாகி நன்கு வெளிச்சம் பரவிய பின்பே விழித்தேன். அப்பொழுது ஷைத்தான் எதிரில் வந்து வருத்தப்படாதே! நன்மை சம்பாதிக்க பல வழிகள் இருக்கிறது என்றான். நான் தௌபா செய்ய நாடினேன். உடனே ஷைத்தான் உன் இளமைப் பருவம் முடியுமுன் அதை முழுமையாக அனுபவி என்றான். நான் மரணம் வந்து விடுமே என அஞ்சுகிறேன் என்றேன். அதற்கவன் பைத்தியம் மாதிரி பேசாதே. உன் வாழ்வு இப்பொழுது முடிவடையாது என்றான். நான் அல்லாஹ்வின் ஞாபகத்தில் (திக்ர்) ஆழ்ந்தேன். உடனே அவன் என் உள்ளத்தில்உலகத்தின் பல்வேறு இன்பங்களைப் பற்றிய எண்ணங்களை விதைத்தான். நான்அல்லாஹ்விடம் துஆ செய்வதை நீ தடுக்கிறாய் என்றேன். இல்லை, இல்லை. நீ இரவுபடுக்குமுன் துஆ செய்யலாமே என்றான்.நான் உம்ரா செல்ல நாடியுள்ளேன என்றேன்.நல்லது. ஆனால், சுன்னத்தை விட பர்ளுதானே முக்கியம். நீ உம்ரா செல்லாதே, ஹஜ் செல்ல முயற்சி செய என்றான். நான் குர்ஆன் ஓத முற்பட்டேன். உடனே அவன் நீ ஏன் பாடல், கவிதைகளை பாடி உன்னை சோர்விலிருந்து விடுவிக்க மறுக்கிறாய்? என்றான். நான் பாடல் பாடி கூப்பாடு போடுவது ஹராம் என்றேன். உடனே அவன் மார்க்க மேதைகளிடையே இசை, பாடல்குறித்து கருத்து வேற்றுமை உள்ளது என்றான். இசையை ஹராம் என்று கூறும் ஹதீஸ்களை நான் படித்துள்ளேன் என்றேன். உடனே அவன் அந்த ஹதீஸ்களின்அறிவிப்பாளர்கள் வரிசை பலஹீனமானது என்றான். அந்த சமயத்தில் ஒரு அழகிய இளமங்கை என்னை கடந்து சென்றாள். நான் என் பார்வையை வேறு புறம் திருப்பிக் கொண்டேன். உடனே அவன் என்ன வெட்கப்படுகிறாய்?முதல் பார்வை தான் அனுமதிக்கப்பட்டுள்ளதே! என்றான். அந்நியப் பெண்ணை பார்ப்பது நரகில் தள்ளிவிடும் என அஞ்சுகிறேன என்றேன். அவன் சிரித்து விட்டு இயற்கை அழகை கலைக்கண்ணோடு ரசிப்பது அனுமதிக்பட்டது தான என்றான் நான் தாவா-அழைப்புப்பணி செய்ய நாடியுள்ளேன் என்றேன். உடனே அவன், ஏன் நீ தர்மசங்கடமான சூழ்நிலையில் சிக்க விரும்புகிறாய்? என்றான். என் நோக்கம் இஸ்லாத்தை பிறருக்கு எடுத்து இயம்புவது என்றேன். உடனே அவன் இல்லை உன் நோக்கம் உன்னை எல்லோரும் பெரிய பேச்சாளன் எனப் பாராட்ட வேண்டும். இந்த பெருமை தான் உன்அனைத்து நன்மைகளையும் அழித்துவிடும். அதனால், தாவாவை விட்டு விட்டு உன் சொந்தவேலையை செய என்றான். நான் இமாம் அஹமது இப்னு ஹன்பல் பற்றி நீ என்ன நினைக்கிறாய்? என்றேன். அதற்குஅவன் அவர் மக்களை குர்ஆன் மற்றும் சுன்னத்தின் பக்கம் அழைத்து என்னை எதிர்த்தார் என்றான்.நான் இமாம் இப்னு தைமிய்யாவை பற்றி என்ன சொல்ல விரும்புகிறாய்? என்றேன்.அதற்குஅவன் அவருடைய வார்த்தைகள் என் தலையை பிளக்கின்றன. என்றான்.நான் இமாம் புகாரி எப்படி? என்றேன். அதற்கு அவன் அவர் தொகுத்த ஹதீஸ் கிதாப் என்வீட்டில் இருந்தால் என் வீட்டையே கொளுத்தி விடுவேன என்று கோபமாகக் கூறினான். நான் ஸலாவுதீன் அய்யூபி எப்படி? என்றேன். அதற்கு அவன் அவரைப் பற்றி பேசாதே.என்னையும், என் தோழர்களையும் கேவலப்படுத்தி, எங்களை மண்ணோடு புதைத்தார் என வெறுப்போடு கூறினான்.நான் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் என இழுத்தேன். அதற்கு அவன், நீ என்னை கோபப்படுத்துகிறாய். அவருடைய பேச்சும், எழுத்தும் எரி நட்சத்திரம் போன்று என்னைசுட்டெரிக்கிறது எனக் கத்தினான். நான் அல் ஹஜ்ஜாஜ் பற்றி? என இழுத்தேன். அதற்கு அவன் அவர் போன்று இன்னும் 1000மனிதர்கள் வர வேண்டும். அவர் தன் நடவடிக்கைகள் மூலம் என்னையும், என் தோழர்களையும் சந்தோஷப்படுத்தியது போன்று யாரும் செய்யவில்லை என்று உற்சாகமாகக் கூறினான்.நான் பிர்அவ்ன் எப்படி? என்றேன். அதற்கு அவன் அவனுக்கு என் ஆதரவு உண்டு. அவன் வெற்றி பெற விரும்பினேன் என்றான். நான் அபு ஜஹ்ல் பற்றி என்ன நினைக்கிறாய்? எனப் பேச்சை மாற்றினேன்.அதற்கு அவன், அப்படிக் கேளு. நானும், அவனும் உடன் பிறவா சகோதரர்கள் என்றுஉற்சாகமாகக் கூறினான்.நான் அபூ லஹப் எப்படி? என்றேன். அதற்கு அவன் நாங்கள் என்றென்றும் இணைபிரியாததோழர்கள் என்றான்.நான் லெனின் எப்படி? என்றேன். அதற்கு அவன். என் சிறந்த சீடர், ஸ்டாலின் என்ற என் சிறந்த தளபதியை உருவாக்கினார். என்றான். நான் மஞ்சள் பத்திரிக்கைகள் பற்றி? என இழுத்தேன். உடனே அவன் அவை தான் என் வேத புத்தகங்கள் என்றான்.நான் மார்க்கப் பத்திரிக்கைகள் பற்றி என்ன கூறுகிறாய்? என்றேன். அதற்கு அவன் அல்-ஜன்னத், சமரசம், விடியல் வெள்ளி, அல் முபீன், ஒற்றுமை, முஸ்லிம் பெண்மணி பற்றித்தானே கேட்கிறாய்? அவர்கள் எல்லாம் காசு சம்பாதிக்கும் எழுத்து வியாபாரிகள். அவற்றைநான் படிப்பது வீண் விரயம் என்றான் கேலியாக. நான் டி.வி., சாடிலைட் சேனல் பற்றி என்றேன். அதற்கு அவன் அவை தான் மக்களை என்றென்றும் என் ஞாபகத்திலேயே வைத்திருப்பவை என்றான்.நான் பிபிசி, சிஎன்என் சேனல் பற்றிக் கூறு என்றேன். அதற்கு அவன் அவை மட்டுமல்ல சன், ஜெயா, விஜய், ஸ்டார், ஜீ, ஸஹாரா, தமிழன், சோனி, பொதிகை, தூர்தர்ஷன், ராஜ் இவையெல்லாம் என் ஆயுதங்கள். அதன் மூலம் தான் விஷம் தடவிய தேனை மக்கள்பருகுமாறு செய்கிறேன். முஸ்லிம்களுக்கு, இஸ்லாத்துக்கு எதிரான பிரச்சாரத்தை இவை மூலமே வெற்றிகரமாக நடத்தி வருகிறேன் என்று பெருமையாகக் கூறினான். நான் காபி ஷாப், இண்டர்நெட் கஃபே எப்படி? என்றேன். அதற்கு அவன் அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், நேர்வழியிலிருந்தும் மக்களைத் திசை திருப்பும் எந்த செயலையும் நான் வரவேற்கிறேன் என்றான்.நான் சூப்பர் மார்க்கெட், டிபார்ட்மென்டல் ஸ்டோர், பிளாஸா பற்றி என்ன கூறுகிறாய்?என்றேன்.அதற்கு அவன் அவை தான் என் தோழர்கள் கூடும் சங்கம்-கிளப் , என்றான். நான் கம்யூனிஸ்ட் கட்சி பற்றி என்ன நினைக்கிறாய்? என்றேன். அதற்கு அவன் என்எண்ணங்கள், நோக்கங்கள், பிரார்த்தனைகள், சொத்துக்களை அவர்களுக்கு அளித்து,அவர்களை இஸ்லாத்துக்கு எதிராக உருவாக்கினேன் என்று பெருமையோடு கூறினான்.நான் இஸ்ரேல் யூத நாடு பற்றி என்ன நினைக்கிறாய்? என்றேன். அதற்கு அவன் நீ புறம்பேசாதே. என் விருப்பத்திற்குரிய என் தாய் நாட்டை பற்றி தவறாக பேசி என்னை நோகடிக்காதே என்றான்.நான் வாஷிங்டன் பற்றி என்ன சொல்கிறாய்? என்றேன். அதற்கு அவன் அதுவே என் புகுந்தவீடு. என் இராணுவம் அங்கு தான் நிலை கொண்டுள்ளது. என் தலைமை அலுவலகமும்அதுவே என்று பெருமையாகக் கூறினான். நான் மக்களை எவ்வாறு வழிகெடுக்கிறாய்? என்றேன். அதற்கு அவன் பேராசை, சந்தேகம்,வீண் பொழுது போக்கு அம்சங்கள், பாடல், ஆட்டம், குழப்பம் மற்றும் பொய், போலியான நம்பிக்கைகள் மூலம் தான். இன்னும் புறங்கூறுவது, வீண் வதந்திகளைப் பரப்புவது,நேரத்தை வீணடிப்பது, தேவையற்ற விவாதங்கள், இவற்றின் மூலம் வழிக்கெடுக்கின்றேன்.ஆமாம், என்ன நீ என் தொழில் ரகசியங்களை கேட்கின்றாயே, எதற்கப்பா? என்றுவினவினான். சரி மார்க்க அறிஞர்களை எப்படி வழிதவறச் செய்கிறாய்? என்று நான் வினவினேன். அதற்குஅவன் அது தான் மிகவும் சுலபம். பெருமை, புகழ், பாராட்டு, கர்வம், பொறாமை, இயக்கம் மூலம் தான் என்றான். சரி வியாபாரிகளை எப்படி உன் வழிக்கு கொண்டு வருகிறாய்? என்று நான்வினவினேன்.அதற்கு அவன் அவர்களை லஞ்சம் கொடுக்கவும், வட்டிக்கு கடன் வாங்கவும்,கொடுக்கவும் மற்றும் ஜகாத், ஸதகா கொடுப்பதை விட்டு தடுப்பது, கலப்படம், மோசடிசெய்யத் தூண்டியும் அவர்களை சரிகட்டுகிறேன் என்றான். நான் பெண்களை எப்படி வழி கெடுப்பது? எனப் பேச்சை மாற்றினேன். அதற்கு அவன் சபாஷ்.நீ அவர்களை வழி கெடுக்க யோசனை கேட்கிறாய். எக்ஸலண்ட். என் வழிமுறை என்ன தெரியுமா? அவர்கள் உள்ளத்தில் பேரழகி என்ற மாயையை, போதையை ஏற்படுத்தி, தங்கள் அங்க அவயங்களை அந்நிய ஆண்களின் கண்களுக்கு விருந்தாக்கத் தூண்டுவது.ஹலாலைவிட ஹராமை சிறந்ததாக அவர்களுக்கு போலியான தோற்றத்தை உண்டாக்குவது.ஒரு பெண்ணை வழிகெடுத்தால் அவள் மூலம் குறைந்தது நான்கு ஆண்களை வழிதவறச்செய்யலாம். 1. தந்தை, 2. சகோதரன், 3. கணவன், 4. மகன். சுருங்கச் சொன்னால் ஒருபெண் மூலம் ஒரு குடும்பத்தையே வழிகெடுக்கலாம் என உற்சாகம் கொப்பளிக்கக்கூறினான். நான் இளைஞர்களை எப்படி சரிகட்டுகிறாய்? என்றேன். அதற்கு அவன் சினிமா, இசை,இண்டர்நெட், டிஸ்கோ, காதல், சிகரெட், போதை மருந்து, கவர்ச்சியாக உடைஉடுத்துவது, சைட் அடிப்பது, மார்க்க விஷயத்தில் அசட்டை, அரசியல், இயக்க வெறி மற்றும்ஹராமை பேண போலியான ஆதாரங்களை காட்டுவது மூலம் தான் என்றான். நான் புதிய கலாச்சாரம் பற்றி கூறேன் என்றேன். அதற்கு அவன் என் கொள்கைகளை முழுவதும் பின்பற்றி, பரப்பும் சினிமா மற்றும்பத்திரிக்கை உலகைச் சார்ந்த என் சகோதரர்களால் ஏற்படுத்தப்பட்ட கலாச்சாரம் மக்களை இஸ்லாத்தை விட்டு வெளியேற்றுகிறது. ஆகவே அது சிறந்தது தானே? என்றான். நான் மூட நம்பிக்கைகள் குறித்து என்ன கூறுகிறாய்? என்றேன். அதற்கு அவன் அது தான் என் ஈமான். அதை பரப்புபவர்கள் மந்திரவாதிகளும், ஜோஸ்யர்களும். நாங்கள் மூவருமேவௌ;வேறு பெயர்களுடைய ஒரு தாய் மக்கள் என்றான். நான் ஏகத்துவத்தை நோக்கி மக்களை அழைப்பவர்களை விமர்சனம் செய் என்றேன்.அதற்கு அவன் கோபமாக அவர்கள் என்னை சிறுமைப்படுத்தி, நோவினை செய்கிறார்கள். என் பலத்தைக் குலைத்த சதிகாரர்கள்.நான் கஷ்டப்பட்டு வழிகெடுத்தவர்களையெல்லாம் நேர்வழிக்கு திருப்பிய சண்டாளர்கள். நான்பேச ஆரம்பித்தால் அவர்கள் குர்ஆன் ஓதுகிறார்கள். நான் பாட ஆரம்பித்தால் அவர்கள் திக்ர்செய்கிறார்கள். என் பேச்சை அவர்கள் மதிப்பதே இல்லை. என்னை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறார்கள் என்று இயலாமை கலந்த வருத்தத்தில் கூறினான். நான் காரூனிடம் என்ன வித்தை காட்டினாய்? என்று கேட்டேன்.அதற்கு அவன் உற்சாகமாக, நான் அவன் காதுகளில் கிசுகிசுத்தேன். கிழவனின்இளமையான மகனே! உன் பொக்கிஷங்களை நிரப்பு. நீ தான் கடவுள் என்றேன். குஷியாகஎன் வலையில் வீழ்ந்தான் என்று கூறினேன்.நான் பிர் அவ்ன் எப்படி உன் வலையில் வீழ்ந்தான் என்று கேட்டேன்.அதற்கு அவன், நான் பிர் அவ்னிடம் கூறினேன். நீ தான் மாபெரும் சக்தியாளன். உன்னைஎதிர்ப்பவர் இந்த எகிப்திலோ, பூமியிலோ உள்ளனரா? என்றேன். அவனும் என்அடிமையானான் என்று கூறினான். நான் ஒரு மனிதனை எப்படி மதுவிற்கு அடிமையாக்குகிறாய்? என்று கேட்டேன்.அதற்கு அவன் அது மிகவும் எளிது. இது திராட்சை ரசம். உன் உடல் நோய்கள்அனைத்தையும் இது தீர்க்கும். இது குற்றம் இல்லை. அப்படியே இருந்தாலும் மன்னிப்புதேடுவதற்கு உனக்கு ஆயுள் இருக்கிறதே. ஏன் அஞ்சுகிறாய்? என்று மயக்குவேன் எனக்கூறினான்.நான் உன் துஆ எது? என்றேன். அவன் சினிமா பாடல்கள் என்றான்.நான் உன் குறிக்கோள் என்ன? என்றேன். அதற்கு அவன் மக்களிடையே பொய்யானநம்பிக்கையை ஏற்படுத்தி அவர்களை வழிகெடுப்பது என்றான். நான் எது உன்னை அழிக்கும்? என்று கேட்டேன். அதற்கு அவன், குர்ஆனில் உள்ளஆயத்துல் குர்ஸி 2வது அத்தியாயம் 255வது வசனம் யார் ஓதுகிறார்களோ அவர்களை என்னால் ஒன்றும் செய்ய முடியாது. அவர்களுக்கு அல்லாஹ் பாதுகாப்பு அளிக்கிறான் என்று கூறினான்.நான் அடடே! அப்படியா, எனக் கூறிவிட்டு ஆயத்துல் குர்ஸியை ஓத ஆரம்பித்தேன். உடனேஷைத்தான் கூக்குரலிட்டவாறு, அவ்விடத்தை விட்டு வெருண்டோடி மறைந்தான். மூலம் - - ஷேக் அயாத் அகிலங்களின் இறைவனான அல்லாஹ் தன் திருமறையாம் குர்ஆனில் கூறுகின்றான்,நம்பிக்கை கொண்டோர்களே! நீங்கள் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள்.ஷைத்தானுடைய அடிச்சுவட்டைக் கூட பின்பற்றாதீர்கள். ஏனெனில், அவன் உங்களுக்குபகிரங்க விரோதி ஆவான் குர்ஆன் 2 : 208 ஆகவே, இன்ஷாஅல்லாஹ் நாம் அனைவரும்ஷைத்தானுடைய பாதையில் செல்வதிலிருந்து இறைவனிடம் பாதுகாவல் தேடுவோம்.நம்முடைய மற்ற சகோதர, சகோதரிகளையும் அங்ஙனம் செயல்பட அறிவுறுத்துவோம்.
Thank s by இஸ்லாம் இனிய மார்க்கம் was tagged in Ayusha Begum's photo. — withMohideen K Razool and 28 others