Wednesday, September 21, 2011

Al-Fatiha


Al-Fatiha
அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்! (தொடங்குகிறேன்).(1) அனைத்துப்புகழும், அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும். (2) (அவன்) அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன். (3)(அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி(யும் ஆவான்). (4) (இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். (5) நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக! (6) (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி, (அது) உன் கோபத்துக்கு ஆளானோர் வழியுமல்ல, நெறி தவறியோர் வழியுமல்ல. (7)
Thank s by http://tanzil.net

No comments:

Post a Comment