ஏர்செல்லுக்கு 2ஜி அலைகற்றை: தயாநிதி மாறனிடம் ஜேபிசி விசாரணை?
First Published : 02 Jun 2011 01:57:28 AM IST
நன்றி
புது தில்லி, ஜூன் 1: ஏர்செல் நிறுவனத்துக்கு அலைக்கற்றை ஒதுக்கியது தொடர்பாக மத்திய அமைச்சர் தயாநிதி மாறனிடம் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தக்கூடும் எனத் தெரிகிறது.
2004 முதல் 2007 வரை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் பதவி வகித்தார்.
அப்போது இந்திய தொலைத் தொடர்பு நிறுவனங்களில் வெளிநாட்டினர் முதலீடு செய்யும்வகையில் விதிமுறைகள் மாற்றப்பட்டன. இந்திய நிறுவனங்களில் வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் முதலீட்டை 24 சதவீதத்திலிருந்து 74 சதவீதமாக உயர்த்திக் கொள்ள அனுமதி தரப்பட்டது.
தமிழகத்தில் ஏர்செல் நிறுவனம் முதலில் ஒரு மண்டலத்தில் செயல்பட்டு வந்தது. பின்னர் இந்த நிறுவனத்துக்கு 14 மண்டலங்களில் சேவை வழங்க அனுமதி வழங்கப்பட்டது.
இந்த ஏர்செல் நிறுவனத்தில் மலேசியாவைச் சேர்ந்த மாக்சிஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் 74 சதவீத பங்குகளை வாங்கியுள்ளது. ஏர்செல் நிறுவனத்திடம் இருந்து பங்குகள் வாங்கியதால் ஆதாயமடைந்த இந்த மாக்சிஸ் நிறுவனம் தனது மற்றொரு நிறுவனமான அஸ்ட்ரோ நிறுவனம் மூலம் சன் குழுமத்தில் முதலீடு செய்திருப்பதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்தப் பிரச்னை குறித்து பிரதமர் மன்மோகன் சிங் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
இந் நிலையில், இது குறித்து தயாநிதி மாறனிடம் நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை நடத்த வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.
இது குறித்து சி.பி.ஐ.யும் விசாரிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடரில் பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போர்க் கொடி உயர்த்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாஜ்பாயிடமும் விசாரணை? இந் நிலையில் இந்த விவகாரத்தில் பா.ஜ.க.வையும் இழுக்க காங்கிரஸ் தீவிரமாக உள்ளது. அதன் ஒரு பகுதியாக பா.ஜ.க. ஆட்சியில் நடந்த அலைக்கற்றை ஒதுக்கீடுகள் குறித்து விசாரிக்கவும் முடிவு செய்துள்ளது.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயரையும் சாட்சிகள் பட்டியலில் நாடாளுமன்றக் கூட்டுக்குழு சேர்த்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கும் நோட்டீஸ் அனுப்பி வரவழைத்து விசாரிக்க காங்கிரஸ் எம்.பி. சாக்கோ தலைமையிலான நாடாளுமன்ற கூட்டுக்குழு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
வாஜ்பாய் கடந்த சில வருடங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தீவிர அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கி இருக்கும் அவருக்கு நோட்டீஸ் அனுப்ப திட்டமிட்டிருப்பது பா.ஜ.க. தலைவர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் தொடர்புள்ள தயாநிதி மாறன் மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

6/2/2011 1:15:00 PM
6/2/2011 11:06:00 AM
6/2/2011 8:35:00 AM