தயாநிதி மாறனால் இழப்பு ரூ.440 கோடி? சி.பி.ஐ. விசாரணையில் சிக்கியது எப்படி?
First Published : 02 Jun 2011 02:00:41 AM IST
Last Updated : 02 Jun 2011 04:44:51 PM IST
தொலைத்தொடர்புத் துறை அமைச்சகத்துக்கு சி.பி.ஐ. அனுப்பிய ஆவணத்தின் நகல்
சென்னை, ஜூன் 1: தயாநிதி மாறனின் குடும்ப வர்த்தக நோக்கத்துக்காக இந்த தனி இணைப்பகம் பயன்பட்டது என்ற மோசடியை சி.பி.ஐ. எப்படி, எதனால் விசாரிக்க நேரிட்டது என்பது தனிக்கதை. அதைத் தெரிந்துகொள்வதற்கு, சில சம்பவங்களை நினைவுகூர்வது அவசியம்.
திமுக தலைவர் மு. கருணாநிதியின் அக்கா பேரனான தயாநிதி மாறன் 2004 ஜூன் முதல் 2007 மே வரையில் மத்திய அரசில் தகவல் தொடர்புத்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். கருணாநிதி குடும்பத்தில் ஹிந்தி மொழியில் சரளமாகப் பேசத் தெரிந்த அவர்தான் கருணாநிதிக்கும் சோனியாவுக்கும் இடையில் கண்களாகவும் காதுகளாகவும் - தொடர்பாளராக - செயல்பட்டார். இளமையும் துடிப்பும் மிக்க தயாநிதி மாறன் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதல் அரசில் மிகவும் செல்வாக்குடன் திகழ்ந்தார். அந்தக் கூட்டணியில் திமுகவின் ஆதரவு காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் தேவைப்பட்டது.
அப்போது மாறன் எவ்வளவு செல்வாக்குடன் திகழ்ந்தார் என்பதற்கு சான்று வேண்டுமா? டி.டி.எச். நிறுவனத்தில் ரத்தன் டாடாவுக்கு இருந்த பங்குகளில் மூன்றில் ஒரு பங்கைத் தங்களுடைய குடும்ப நிறுவனத்துக்குத் தர வேண்டும், இல்லாவிட்டால் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று ரத்தன் டாடாவையே மிரட்டினார் என்று பேசப்பட்டது. அத்தோடு மட்டும் அல்ல, நான் மிரட்டினேன் என்பதை வெளியில் சொல்லக்கூடாது என்று கூடுதலாக வேறு மிரட்டியிருக்கிறார்.
அப்படி இருந்த மாறன் திடீரென கோபுரத்திலிருந்து குப்பைமேட்டுக்கு வந்துவிட்டார். எல்லாம் குடும்ப ஊடகங்கள் மிதமிஞ்சிய கர்வத்தில் செய்த கோளாறுதான். தமிழக அரசியலில் செல்வாக்கு மிக்க தலைவர்கள் யார் என்று வாசகர்களிடையே கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்தி, அதில் கருணாநிதியின் மற்றொரு மகனான மு.க. அழகிரிக்கு மு.க. ஸ்டாலினைவிட செல்வாக்கு மிகவும் குறைவு என்று முடிவை வெளியிட்டது.
இந்த முடிவு வெளியான 9.5.2007-ல் மதுரையில் மிகப் பெரிய வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றன. கலாநிதி மாறனின் தினகரன் பத்திரிகை அலுவலகத்துக்குள் அழகிரியின் ஆதரவாளர்கள் என்று கருதப்படும் ஒரு கும்பல் புகுந்து அங்கிருந்த ஊழியர்களைத் தாக்கி, பொருள்களைச் சேதப்படுத்தி வன்முறையில் இறங்கியது. அதில் அப்பாவிகளான 3 பேர் உயிரிழந்தனர். கருணாநிதி உடனே அழகிரிக்கு ஆதரவாகச் செயல்பட்டு தயாநிதி மாறனை மத்திய அரசிலிருந்து விலக்கினார். அந்த நேரத்தில்தான் மத்தியப் புலனாய்வுக் கழகம் (சி.பி.ஐ.) தயாநிதி மாறன் தன்னுடைய குடும்ப வியாபார நோக்கத்துக்குப் பயன்படுத்திய இந்த தனி இணைப்பகம் குறித்த தகவல்களைச் சேகரித்தது.
மாறன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 2007 செப்டம்பர் மாதமே சி.பி.ஐ. பரிந்துரைத்தது. ஆனால் அதற்குப் பிறகு கடந்த 44 மாதங்களாக சி.பி.ஐ. இந்த விஷயத்தில் கும்பகர்ண தூக்கம் தூங்கிக் கொண்டிருக்கிறது. தயாநிதி மாறன் துறைக்கு ஆ. ராசா அமைச்சரானார். ஆ. ராசாவிடம் ஒப்புதல் பெற்று மேல் நடவடிக்கைக்கு வழி செய்யுமாறு தொலைத்தொடர்புத்துறை செயலருக்கு சி.பி.ஐ. கடிதம் எழுதியது.
இதற்கிடையே 2009-ல் மக்களவை பொதுத் தேர்தலைச் சந்திக்க வேண்டியிருந்ததால் கருணாநிதியின் குடும்பத்தில் சமாதானக் கொடி ஏற்றப்பட்டது. மகன்களுக்கும் அக்கா பேரன்களுக்கும் இடையில் சமரசத்தை ஏற்படுத்தி மீண்டும் குடும்பத்தில் ஒற்றுமையை நிலைநாட்டினார் கருணாநிதி. அனைவரும் ஒற்றுமையாக இருக்கும் இக்காட்சியைக் காணும்போது நெஞ்சம் நெகிழ்கிறது, கண்கள் பனிக்கின்றன என்று உருகினார் கருணாநிதி. ஒரு வேளை சி.பி.ஐ.யின் அந்த கடிதத்தைக் காட்டித்தான் அக்கா பேரன்களை வழிக்குக் கொண்டுவந்தாரோ என்னவோ?
2009 மக்களவை பொதுத் தேர்தலுக்குப் பிறகு மீண்டும் தொலைத்தகவல் தொடர்புத்துறையைப் பெற தயாநிதி மாறன் முயற்சி செய்தார், ஆனால் வெற்றி பெறவில்லை. அதன் பிறகு ஜவுளித்துறை அமைச்சரானார், இன்றுவரை அந்தப்பதவியில் நீடிக்கிறார்.
குடும்பத்துக்குள் பூசல் தணிந்துவிட்டபடியால் சி.பி.ஐ. கடிதமும் கவனிக்கப்படாமல் தொலைத்தகவல் தொடர்புத்துறையில் எங்கோ தூங்குகிறது. 2ஜி அலைக்கற்றை ஊழல் புகார் காரணமாக 2010 நவம்பரில் ஆ. ராசா பதவியை ராஜிநாமா செய்தார். கபில் சிபல் அத்துறை அமைச்சரானார். அன்றிலிருந்து கபில் சிபலும் சி.பி.ஐ.யின் கடிதம் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் சும்மாவே இருக்கிறார்.
ஜவுளித்துறை அமைச்சர் என்ற வகையில் தயாநிதி மாறனும் கபில் சிபலோடு சேர்ந்து மத்திய அமைச்சரவைக் கூட்டங்களில் பங்கேற்கிறார். சி.பி.ஐ. கடிதம் எழுதி 44 மாதங்களாகியும் ஒரு நடவடிக்கையும் இல்லை.
எங்காவது ஊழல் நடந்தால் கணமும் தாமதிக்காமல் மிகத் தீவிரமாக விசாரித்து நடவடிக்கை எடுப்பேன் என்று ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கப் போவதாக மிரட்டும் யோகாசன குரு பாபா ராம்தேவுக்குக் கடிதம் எழுதுகிறார் பிரதமர் மன்மோகன் சிங்.
தயாநிதி மாறனுக்கு மிகவும் நெருக்கமானவர் என்று கருதப்படும் சோனியா காந்தியோ இன்னமும் ஒருபடி மேலேபோய், ஊழலை என்னால் சகித்துக் கொள்ளவே முடியாது - அதாவது மற்றவர்களின் ஊழலை - சகித்துக்கொள்ளவே முடியாது என்பதை அறிவித்துக் கொண்டே இருக்கிறார்.
ஊழலுக்கு எதிராக சோனியா விடுத்துள்ள போர்ப்பரணியும், காலதாமதம் செய்யாமல் ஊழலை ஒழித்தே தீருவேன் என்று பிரதமர் மன்மோகன் சிங் செய்துள்ள கர்ஜனையும் நம்மை விலா நோகச் சிரிக்க வைக்கின்றன. பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பை ஏற்படுத்தியவரை எதிரில் வைத்துக் கொண்டே இவர்கள் செய்யும் அட்டகாச அறிவிப்புகளைக் கண்டு வேறு என்னதான் செய்வது?
பின்குறிப்பு: தயாநிதி மாறன் கடந்த சில நாள்களில் சோனியா காந்தியையும் பிரதமர் மன்மோகன் சிங்கையும் தனித்தனியே சந்தித்து நீண்டநேரம் ஆலோசனையில் ஈடுபட்டதாகத் தெரியவருகிறது. ஊழல் செய்தவரைப் போலவே இவர்களுக்கும் வெட்கம் இல்லை என்று தெரிகிறது.

கருத்துகள்
சுமா என்ற நபர் சொல்வது மிக சரி. சோனியா ஒரு இத்தாலிப் பெண். நம் பாரத நாட்டை ஒரு சுத்த இந்தியன், சுதந்திரமாக முடிவெடுத்து ஆட்சி செய்ய வேண்டும். தமிழகத்தை ஒரு சுத்தத் தமிழன் மட்டுமே ஆட்சி செய்ய வேண்டும். இத்தனை கோடிப் பேரில்,ஒரு தமிழன் கிடைக்கவில்லை? கருணாநிதி ஒரு தெலுங்கன். ஜெயலலிதா கன்னடம். கேவலமா இருக்கு.
By ramachandran
6/2/2011 10:58:00 PM
6/2/2011 10:58:00 PM
அண்ணா ஹசாரே தான் நமக்கு நல்ல வழிகாட்டி
By வடிவேலன் ,சவுதி
6/2/2011 10:46:00 PM
6/2/2011 10:46:00 PM
ஐயா, இப்ப இருக்கிற உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதிக்கு இன்னும் இரண்டு வருடம் பதவி நீடிப்பு கொடுங்கள். இல்லா விட்டால் இவர் ஒய்வு பெற்றவுடன் அத்தனை பேரும் வெளியே வந்து விடுவார்கள். நாடு தாங்காது.
By karikalan
6/2/2011 9:34:00 PM
6/2/2011 9:34:00 PM
thanks to thinamani. Now Maran says that he had only one connection and he had used in his limit. the connections are in the name of CGM, chennai. How the politicians make our officers curruptive and what for our officers did the politicians wants with out any fear, with out any shy. Oh, Tamil People, thanks a lot to throw this family by their votes.
By R.G.Sankar
6/2/2011 9:34:00 PM
6/2/2011 9:34:00 PM
தன் வினை தன்னை சுடும் ...குடும்ப வினை கழகத்தை சுடும்...பல நாள் கஷ்டப்பட்டாலும் நம்பளால சின்னதா ஒரு சொந்த வீடு கூட கட்ட முடியில ..இவனுங்க கோடி கோடி யா கொள்ள அடிகிரானுங்க நாடோட சொத்த..திரு கருணாநிதி அண்ட் குடும்பத்த நாடு கடத்தனும் ...ஜெய் ஹிந்த்
By indian
6/2/2011 7:59:00 PM
6/2/2011 7:59:00 PM
The CBI note is self explanatory and the Prime Minister should sack Dayanidhi Maran, recover the loot and prosecute him
By VTVenkataram
6/2/2011 7:56:00 PM
6/2/2011 7:56:00 PM
i want to tell u all one thing.. please stop showing finger on politicians. Y cant some one change the current politics??? no one is daring to do that and as always we do one thing, taking about some one or something. if u can do some thing do it else be silent and do your work. please dont waste ur time by commenting someone.
By eswar
6/2/2011 7:39:00 PM
6/2/2011 7:39:00 PM
OUR CURRENT CHIEF MINISTER, MS. JAYALALITHA SHOULD PASS A RESOLUTION, DEMANDING CENTRAL GOVERNMENT TO TAKE ACTION AGAINST MR DAYANIDHI MARAN. SHE SHOULD ALSO CO-ORDINATE WITH OTHER STATE GOVERNMENTS DEMANDING PUNITIVE ACTION BY CENTRAL GOVT., AGAINST MR DAYANIDHI MARAN. IF THERE IS A LEGAL WAY TO SHUT DOWN AND/OR TAKE CONTROL OF SUN TV AND DINAKARAN FOR THE ABUSE OF TELECOMMUNICATION NETWORK, OUR CURRENT CHIEF MINISTER SHOULD ACT IMMEDIATELY. THE LICENCE CONDITION FOR TV BROADCAST AND NEWSPAPER PUBLICATION WOULD HAVE BEEN BREACHED, WITHOUT ANY DOUBT. IF MS. JAYALALITHA DOES IT IMMEDIATELY, SHE WILL BE APPLAUDED BY THE PEOPLE OF TAMILNADU. KATHERINE GEORGE
By Katherine George
6/2/2011 7:08:00 PM
6/2/2011 7:08:00 PM
எகிப்து மாதிரி காங்கிரஸ் ஆட்சியை துக்கி எரிய வேண்டும்
By murugan
6/2/2011 7:07:00 PM
6/2/2011 7:07:00 PM
முதலில் சோனியாவை சரி செயுங்கள் . அவரிடம் இருக்கு ஆயிரம் ஓட்டைகள்.
By chandru
6/2/2011 6:46:00 PM
6/2/2011 6:46:00 PM
இன்னும் மாறன் மீது 700 கோடி 2G ஊழல் வெளியாகியுள்ளன.முதலில் 2G ஊழல் ஆரம்பிக்க சுழி போட்டதே மாறன்தான் என்கிறது தெஹெல்கா.
By Stephen Raj
6/2/2011 6:10:00 PM
6/2/2011 6:10:00 PM
தூ..தூ... இது ஒரு திருட்டு குடும்பம்.
By முருகன்
6/2/2011 2:50:00 PM
6/2/2011 2:50:00 PM
sun tv is looting money throught india. i am one among the victims. pl arrange to verify maran brothers I T returns throR T I act expose them
By emmjayjay
6/2/2011 2:25:00 PM
6/2/2011 2:25:00 PM
It is not a surprise that the family members of Sri MK is learing Hindi language or having capability of speaking in Hindi. But Sri.Mk misled the entire tamil youngsters to hate the Hindi language. The tamils should aware that we should learn any language if we so desire as well as familiar with mother tongue. As far as Sri.Maran is concerned there is no useful to Tamil nadu,he is very particular and concentration on his own commitments.
By v.thatchanamoorthy
6/2/2011 1:21:00 PM
6/2/2011 1:21:00 PM
நாளை தன் பிறந்த நாள் விழாவில் " திகார் முன்னேற்ற கழகம் " என தனது குடும்ப கட்சியின் பெயரை கருணாநிதி மாற்றி கொள்ள வேண்டும்.
By S . பாலன்
6/2/2011 1:21:00 PM
6/2/2011 1:21:00 PM
super
By arun
6/2/2011 12:40:00 PM
6/2/2011 12:40:00 PM
பெரிய திருடன், இவன் ஒரு மக்கள் விரோத (எதிர்) சக்தி,
By வேல்மாறன்
6/2/2011 12:38:00 PM
6/2/2011 12:38:00 PM
பல தி மு க வினர் ஹிந்தி எதிர்ப்பில் சிறைக்கு சென்று அடிவாங்கிய வேளையில்,தயாநிதி மாறன் பின்பக்க கோபாலபுர வாசலில் ஹிந்தி வகுப்புகளுக்கு சென்றிருக்கிறார்!.வெளிநாட்டு வாழ் இலங்கைத் தமிழர் பலர்-சுனாமி,வன்னி மக்கள் படுகொலை "பரிதாபத்தை" வைத்து சம்பாதித்த(வசூல்) பணத்தை கோயம்புத்தூர்,திருப்பூர் "ஜவுளித்துறையில்" ,சினிமாத்துறையில்,கலாநிதி,தயாநிதி மாறன்கள் மூலம் முதலீட்டு செய்துள்ளனர்!.
By மொழிப்போர் முட்டாள்
6/2/2011 11:34:00 AM
6/2/2011 11:34:00 AM
போட்டு இவுனுங்க முக திரைய கிளிங்க
By விவேக்
6/2/2011 11:34:00 AM
6/2/2011 11:34:00 AM
குடும்பமே திருட்டு குடும்பம் திருடி தின்பதற்கு பதில் பிச்சை எடுக்கலாம்
By kumar
6/2/2011 11:14:00 AM
6/2/2011 11:14:00 AM
சன் டி வீ வளர்ச்சி குறிச்சு பெருமை பட்டது போய் உலகத்தில் இல்லாத கனவானி தனம், அயோக்கிய தனம் பண்ணி தான் வளர்ச்சி பெற்று இருக்கிறார்கல் என்பதை படிக்கும் பொழுது இவனுகளை சென்னை மவுண்ட் ரோட்டில் அம்மனக்கட்டையை ஓடவிட்டு கல்லாலே அடிச்சு சாகடிக்கனும்
By mirudan
6/2/2011 10:58:00 AM
6/2/2011 10:58:00 AM
ஜெயலலிதா 2007 ஆம் வருடத்திலேயே தயாநிதி மாறனின் இந்த ஊழல் குறித்து அறிக்கை கொடுத்துள்ளார் அது குருமூர்த்தி அவர்கள் மூலமாக இப்போது வெளிவந்துள்ளது வக்கில்லாத சோனியாவின் எடுபிடியான மன்மோஹன்சிங் தொலைந்தால்தான் நாட்டுக்கு நல்லது
By கே.ராஜகோபாலன்
6/2/2011 10:52:00 AM
6/2/2011 10:52:00 AM
I request mukesh ambani and ratan tata to keep sufficient suitcase so that you can distribute all the political parties including judges, ramdev and baba. the judge will deliver no scam proved by cbi i.,e prosecution failed to prove that dayanithi maran, kanimozhi and raja is corrupted or tainted political. Next parliment all the three will be given bharat ratna by sonia gandhi or raghul gandhi. Please keep it up
By murali
6/2/2011 10:52:00 AM
6/2/2011 10:52:00 AM
இது போன்ற அரசியல் ஊழல் பேர் வழிகளை நீதி மன்றத்தில் நிறுத்தி ஆயுள் தண்டனையோ அல்லது மரண தண்டனையோ தர கூடாது . அவர்களின் அத்தனை உரிமைகளையும் பறித்து அனாதையாக இந்த உலகில் நடமாட செய்ய வேண்டும். இது இந்தியாவில் வாழும் சராசரி மனிதனின் குரல்.
By Ambedkardasan
6/2/2011 10:44:00 AM
6/2/2011 10:44:00 AM
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தானே அனைத்து அமைச்சர்களும் ..நாம் நினைத்தால் எதுவும் செய்யலாம்..இப்போது ஆளும் மத்திய அரசுதான் ஊழலின் பிறப்பிடம்..அதை முதலில் பதவியில் இருந்து அனுப்ப வேண்டும்..
By suma
6/2/2011 10:24:00 AM
6/2/2011 10:24:00 AM
இதுக்குதான் படிச்சவன் அரசியலுக்கு வரணும் என்பதோ
By anban
6/2/2011 10:01:00 AM
6/2/2011 10:01:00 AM
எவனெல்லாம் பார்ப்பனன், பார்ப்பன சூழ்ச்சி என்று திட்டுகிறானோ, எவனெல்லாம் சாதி சாதி என்று பேசி கூட்டம் சேக்கிறானோ, எவனெல்லாம் ஆரிய சதி, மேல் வர்க்கம் என்று அரசியல் செய்கிறானோ, எவன் தன்னைத் தானே தாழ்ந்த சாதி என்று சொல்லிக்கொண்டு சாதிரீதியாக நல்ல மக்களைக்கூட கூமுட்டைகலாக எண்ணிக்கொண்டு கூட்டம் சேர்க்கிறானோ அவன் இப்படித்தன் கொள்ளை அடிப்பான். காசு சேக்கத்தான் இவர்கள் சாதியைப் பயன்படுத்துகிறார்கள். தவறு செய்ய லைசன்ஸ் - சாதி லைசன்ஸ் இருப்பதாக நம்பவைக்கிறார்கள். பார்ப்பன சமுதாயத்தை திட்டுபவன், பாப்பாத்தியை மட்டும் டாவடிச்சி இஸ்துகினு வருவான்... மக்களே இப்போ தெரிஞ்சுக்குங்க... எவனெல்லாம் அடுத்தவன் சொத்தை திருடுறானோ, மக்கள் பணத்தை சொந்தமக்கிக்ரானோ, கொள்ளை அடிக்கிறானோ அவனேல்ல்ம் தாழ்ந்த சாதிக்காரன். இதைத்தன் நம்ம திருவள்ளுவர் அய்யா அந்தக்காலத்துலயே சொல்லிவெச்சார். பிறப்பால் வருவது சாதி இல்லை... நடத்தையால் வருவதே சாதி...
By தமிழினியன்
6/2/2011 10:00:00 AM
6/2/2011 10:00:00 AM
இந்த நாட்டில் சாமானிய மக்கள் வாழ்வது கேள்விகுரியகிவிட்டது ! இந்தமாதிரி கேவலமான வாழ்க்கை வாழ இவர்களெல்லாம் கண்டிப்பாக தலை குனியவேண்டும் .
By பொதுமக்கள்
6/2/2011 9:59:00 AM
6/2/2011 9:59:00 AM
"தயாநிதிமாறனால் இழப்பு 440 கோடி"என்பதைவிட "தயாநிதிமாறனால் திருடப்பட்ட அரசு சொத்து 440 கோடி"என்பதே சரியான தலைப்பாக இருக்கும்.
By இராம,பில்லப்பன்,சிவகங்கை.
6/2/2011 9:50:00 AM
6/2/2011 9:50:00 AM
மாநில அரசே இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்கலாம். ஜெயா செய்வாரா?
By brammasthiram
6/2/2011 9:38:00 AM
6/2/2011 9:38:00 AM
இப்படிப்பட்ட கலவாநிகளோட கை கோத்து காங்கிரஸ் ஆட்சி செய்ய வேண்டுமா உங்களுக்கும் விரைவில் மிக பெரிய கெட்ட பெயர் வந்தவுடன் தான் விலகுவீர்கள் என்று நினைக்கிறேன் அப்போது காங்கிரஸ் என்ற இயக்கம் மக்களை நேரடியாக பார்க்க கூட முடியாது புரிந்து கொள்ளுங்கள் விலகுங்கள்
By வே ரெங்கநாதன்
6/2/2011 9:11:00 AM
6/2/2011 9:11:00 AM
மாறனை அமைச்சர் பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்து சிறையில் அடைக்க வேண்டும்
By கே.ஸ்ரீனிவாசன், சத்தியமங்கலம்
6/2/2011 9:09:00 AM
6/2/2011 9:09:00 AM
தூங்கும் மக்களை எழுப்பாதே ...எழுப்பினால் தாங்கமட்டர்கள் ...உடன் பிறப்புகள் கொதித்து எழுவார்கள் ...தானை தலைவனுக்குத் தெரிந்தால் ,நூல்கள் செய்த லீலைகள் என்று மங்களம் பாடுவார் ...வேதனை ஒரு பக்கம் என்றால் சோதனை மறு பக்கம் ..உறவுகளால் வேதனை தான் மிச்சம் என்றால் சொச்ச காலத்தை விரட்டுவது எப்போது
By நாகை ஜெகத்ரட்சகன்
6/2/2011 8:54:00 AM
6/2/2011 8:54:00 AM
சி .பி.ஐ யில் வேலை செய்யும் நாட்டு பற்று உள்ள அதிகாரிகள் ஊழலை ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை அளிக்கிறார்கள். ஆனால், இத்தாலிய பெண்ணான சோனியா , தன் கை பொம்மையான பிரதமர் மூலம் சி.பி.ஐயின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தி நம் நாட்டை சீர்குலைக்க பார்க்கிறார் !
By S .பாலன்
6/2/2011 8:32:00 AM
6/2/2011 8:32:00 AM
முதலில் மாறனை உள்ளே தள்ளி இருந்தால் டு ஜி ஸ்பெக்ட்ரம் உழல் நடந்து இருக்காது .ஆ.ராஜாவும் ,கனிமொழியும் ஜெயிலுக்கு போயிருக்கமாட்டார்கள்.மேலும் தமிழ் நாட்டில் தி.மு.க.,ஆட்சியை பறிகொடுத்திருக்காது.நேற்று டாடாவை மிரட்டியவர் ,அடுத்து சோனியா காந்தி மற்றும் மன்மோகன் சிங் கை கூட ப்ளாக்மெயில் செய்வார் .கலாநிதி மாறனும் ,தயாநிதி மாறனும் கடைந்தெடுத்த அரசியல் வியாபாரிகள் .எனவே இந்த இரண்டு பேரையும் திஹார் ஜெயிலுக்கு அனுப்ப சி.பி.ஐ.,நடவடிக்கை எடுக்கவேண்டும் .மேலும் சன் நெட் ஒர்க்கை சேர்ந்த 24 டி.வி .சானல்களை முடக்கவேண்டும் .எஸ்.சி .வி .,கேபிள் டி.வி .,ஐ அரசு உடமை ஆக்கவேண்டும்.தமிழகத்தை இந்த மாபியா கும்பலிருந்து ஜெயலலிதா அவர்கள் விடுவிக்கவேண்டும் .மேலும் தமிழ் திரை உலகத்தை இவர்கள் பிடியில் இருந்து காப்பார்ற்ற வேண்டும் .
By ரஜினி பாலா
6/2/2011 8:29:00 AM
6/2/2011 8:29:00 AM
தினமணியின் இந்த செய்திக்கு மிக்க நன்றி....மக்கள் தெரிந்து கொள்ளட்டும்....
By Vijay
6/2/2011 8:22:00 AM
6/2/2011 8:22:00 AM
இந்த சொரிப்பயலை மூஞ்சியில் செருப்பை வைத்து அடிக்க சோனியா பரிந்துரைக்க வேண்டும்
By thamilmannan
6/2/2011 8:17:00 AM
6/2/2011 8:17:00 AM
வெளிநாட்டில் இருக்கும் பலருக்கு தயநிதிமீது மதிப்பில்லை. எப்போது மலேசியாவின் பில்லியானரோடு தொடர்பு சன் டிவிக்கும் ஏர்செல் நிறுவனத்துக்கும் உண்டு என்பது Fortune பத்திரிக்கை மூலம் தெரிந்ததோ அப்போதே சன் டிவியின் வளர்ச்சியும், கலாநிதி மாறனின் பில்லியனர் எழுச்சியும் ஊழல் மட்டுமே அன்றி உழைப்பு அல்ல என்பதே உண்மை!
By தமிழ் நண்பன்
6/2/2011 8:06:00 AM
6/2/2011 8:06:00 AM
பத்திரிக்கைகள் குறிப்பாக ஹிந்துவும் தினமணியும் கூட்டாக சேர்ந்து பல உண்மைகளை மக்களுக்கு தெரிவித்து வருவது பாராட்ட தக்கது. மேலும், பலரும் ஒன்று சேர வேண்டும்; ஊழலால் பேர்வழிகளை உண்டு இல்லை என்று செய்யாமல் ஓயக்கூடாது. மக்களின் பேராதரவு நிச்சயம் உண்டு. மக்கள் இப்போது ஊழலை எதிர்க்க ஆரம்பித்து விட்டார்கள். இனி ஒரு நல்ல எதிர்காலத்தை சாதிகளற்ற சமுதயதியா உருவாக்குவோம்!
By velumani
6/2/2011 7:48:00 AM
6/2/2011 7:48:00 AM
"அப்படி இருந்த மாறன் திடீரென கோபுரத்திலிருந்து குப்பைமேட்டுக்கு வந்துவிட்டார்". ஹி ஹி ஹி ஹி ....நல்ல வாக்கியம் . இப்படி கொண்டு வரவேண்டும் எல்லமோசடி கும்பலையும் ......
By akash
6/2/2011 6:46:00 AM
6/2/2011 6:46:00 AM
யாருக்கும் வெட்கம் இல்லை.வெட்கப்படுபவர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள்,அப்படியே வந்தாலும் கேவலமான ஊழலில் ஈடுபட மாட்டார்கள்.எல்லாவற்றிலும் உள்ள 2%-5% கமிஷன் பெரும் இவர்களுக்கு அவை போதாதா ?கருணாநிதியும் நாட்டுக்கு ஒரு நன்மையை செய்துள்ளார்.உலகப்பெரும் ஊழலை செய்ததன் மூலமும் மாட்டிக்கொண்டதன் மூலமும் அரசியல்வாதிகளால் எந்த அளவுக்குக் கொள்ளையடிக்கமுடியும் என்பதை மக்களை அறியசெய்த அவருக்கு கோடானகோடி நன்றிகள் .மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய அவருக்கு நன்றி
By இராம,பில்லப்பன்,சிவகங்கை.
6/2/2011 4:10:00 AM
6/2/2011 4:10:00 AM
திருடர்களையும் கொள்ளையர்களையும் பக்கத்தில் வைத்துக்கொண்டே திருட்டையும் கொள்ளையும் ஒழிப்பதற்கு PM க்கும் சொனியாஜிக்கும் திறமை இருக்கும்போது நாட்டுமக்களுக்கு வேறு என்ன கவலை வேண்டும். திமுக உடன் ஆட்சி என்றாலே மக்கள் அறிந்து கொள்ள வேண்டாமா அவர்களுக்கு மக்களை எவ்வாறு சமாளிப்பது என்பது கற்று தேர்ந்திருப்பார்கள் என்று. கே.நாகராஜன். fm USA.
By K.Nagarajan
6/2/2011 4:06:00 AM
6/2/2011 4:06:00 AM
ஐயா! வினை விதைத்தவன் வினை அறுப்பான் இப்போ உடனுக்குடன் செய்த பாவத்துக்கு தண்டனையும் இந்த ஜன்மத்திலே கிடைக்குது. . மேல் லோகம் கீழ் லோகம் என்று ஒன்னும் இல்லையோன்னா நரகமும் இங்கேதான் சொர்கமும் இங்கே தான் .இது தெரியாதோ ?
By தர்மராஜா -செரன்க்கொன், மலேசியா
6/2/2011 3:27:00 AM
6/2/2011 3:27:00 AM
நெத்தியடி ! அடேயப்பா !! வெட்கம் இல்லை
By Ramamoorthy
6/2/2011 3:04:00 Am
6/2/2011 3:04:00 Am