2ஜி ஊழலைத் தொடங்கியதே தயாநிதி மாறன்தான்: முரளி மனோகர் ஜோஷி குற்றச்சாட்டு ?
First Published : 04 Jun 2011 01:16:12 AM IST
புது தில்லி, ஜூன் 3: 2ஜி அலைகற்றையை முறைகேடாக ஓதுக்கீடு செய்த விவகாரத்தில் முதலில் தயாநிதி மாறனைத்தான் தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்றும், 2ஜி ஊழலைத் தொடங்கி வைத்தவரே அவர்தான் என்றும் நாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவர் முரளி மனோகர் ஜோஷி தெரிவித்துள்ளார்.
தயாநிதி மாறன் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோதுதான், உரிமங்கள் கொடுக்கும் அதிகாரத்தை, அமைச்சர்கள் குழுவிடமிருந்து தொலைத் தொடர்புத்துறைக்கு மாற்றினார். அவருக்கு இந்த ஊழலில் உள்ள பங்கு குறித்து விசாரிக்க வேண்டும் என ஏற்கெனவே தாக்கல் செய்த பொதுக் கணக்குக் குழு அறிக்கையிலேயே பரிந்துரை செய்திருப்பதாகவும் முரளி மனோகர் ஜோஷி குறிப்பிட்டார்.
2004 ஜூன் முதல் 2007 மே வரை தயாநிதி மாறன் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக பதவி வகித்தார். 2006 முதல் 2008 வரையிலான காலத்தில் ஏர்செல் நிறுவனத்திற்கு அலைக்கற்றை உரிமம் கிடைக்கவில்லை. ஆனால் அந்த நிறுவனத்தை மலேசியாவைச் சேர்ந்த மாக்ஸிஸ் நிறுவனம் வாங்கியவுடன், உடனடியாக உரிமம் கிடைத்தது. இதன் பின்னணியில் தயாநிதி மாறன் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மாக்ஸிஸ் நிறுவனம் தயாநிதி மாறனின் அண்ணன் கலாநிதி மாறன் நடத்தி வரும் சன் டிவியில் ரூ. 800 கோடியை முதலீடு செய்ததைத் தொடர்ந்தே ஏர்செல்லுக்கு 2ஜி உரிமம் கிடைத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளதை தயாநிதி மாறன் மறுத்துள்ளார்.

நன்றி
தலையங்கம்
No comments:
Post a Comment