அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வால் யாருக்கு அதிக பலன் என்று கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம், பேப்பர் கப் தயாரிப்பவர் களுக்கு என்று! டீ கடையில் ஆரம்பித்து, கல்யாண வீடு வரை தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துவிட்டது பேப்பர் கப்கள்.
சந்தை வாய்ப்பு!
தயாரிப்பு முறை!
மூலப் பொருளான பேப்பர் ரோல்களை வாங்கி மெஷின் மூலம் எளிதாக தயாரித்து விடலாம். மெஷினை இயக்கத் தெரிந்தால் போதுமானது. தயாரான கப்களை பேக்கிங் செய்துவிட்டால் மார்க்கெட்டுக்கு ரெடி!முதலீடு!
மூலப்பொருள்!
இதன் முக்கிய மூலப்பொருளான பேப்பர் தமிழ்நாட்டிலேயே கிடைக்கிறது. இந்த பேப்பர் ரோலின் தரத்தைப் பொறுத்துத்தான் பேப்பர் கப்பின் தரமும் இருக்கும். ஜி.எஸ்.எம். அளவு களைப் பொறுத்தே இதன் தரம் இருக்கும்.கட்டடம்!
இயந்திரம்!
பேப்பர் ரோல்களை இயந்திரத்தில் கொடுத்தால் விரும்பிய அளவிலான கப்கள் கிடைக்கும். இந்த இயந்திரங்கள் தமிழ்நாட்டி லேயே கிடைக்கிறது என்பது கூடுதல் சிறப்பு.மானியம்!
பேப்பர் கப் தயாரிப்பு பிரதமரின் சுயவேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வருவதால் மானியம் கிடைக்கிறது. முதலீட்டு தொகையில் நகரம் எனில் 25%மும், கிராமம் எனில் 35 சதவிகிதமும் மானியம் கிடைக்கும். உதாரணமாக பத்துலட்ச ரூபாய் முதலீடு என்றால் இரண்டரை லட்ச ரூபாய் மானியமாக கிடைக்கும். இந்த மானியத் தொகையை நமது வங்கிக் கணக்கில் வரவு வைத்து விடுவார்கள். நான்கு வருடங்களுக்கு பிறகு இத்தொகையை நமது கடனில் வங்கி கழித்துக் கொள்ளும். மேலும் நாம் வங்கியில் வாங்கியிருக்கும் கடனில் மானியத் தொகை போக மீதமுள்ள தொகைக்கு வட்டி கட்டினால் போதுமானது. .உற்பத்தித் திறன்!
ஆண்டுக்கு 300 நாட்கள், நாள் ஒன்றுக்கு ஒரு ஷிஃப்ட் வீதம் வேலை பார்த்தால், 75 லட்சம் கப்களைத் தயாரிக்கலாம். இதற்கான மூலப்பொருளான ஒரு டன் பேப்பருக்கு 74,000 ரூபாய் செலவாகும்.வேலையாட்கள்!
திறமையான வேலையாட்கள் - 2, சாதாரண வேலையாட்கள் - 8, மேலாளர் - 1 , விற்பனையாளர் - 1 என மொத்தம் 12 ஆட்கள் தேவைப்படும்.மின்சாரம்!
பிளஸ்!
* ஆண்டு முழுவதும் தேவை இருக்கும்.* உடனடியாக விற்காவிட்டால் கெட்டுப்போய்விடும் என்ற பிரச்னை இல்லை. .
ரிஸ்க்!
* பலரும் இத்தொழிலில் இறங்க வாய்ப்புண்டு என்பதால் எதிர்காலத்தில் போட்டி அதிகமாகி, நாம் விற்கும் பொருட்களுக்கான விலை குறையலாம்.* பேப்பர் விலை அதிகரிக்கும் பட்சத்தில் மூலப்பொருள் செலவு அதிகரித்து, விலை உயர்த்த வேண்டி வரும்.
* பேப்பர் கப்கள் மிக லேசானவை என்பதால் மிகுந்த ஜாக்கிரதையோடு கையாள வேண்டும்.
அதிகப்படியான நிலம் தேவையில்லை; வேலையாட்கள் தேவையில்லை; மிகப் பெரிய தயாரிப்பு முறையும் கிடையாது என்பதால் இளைஞர்கள், பெண்களுக்கு மிகவும் சாதகமான தொழில். குறிப்பாக சுயஉதவி குழுக்கள் மூலம் பொருட்களைத் தயாரிக்கும் பெண்கள் இத்தொழிலில் சுலபமாக இறங்கலாம்.
''படிப்பே தேவையில்லாத பிஸினஸ்!'' ''இன்றைய தேதியில் பேப்பர் கப் தயாரிப்பு, போட்டியே இல்லாத தொழில் எனலாம். உள்ளூர் தேவையில் 5%கூட இன்னும் பூர்த்தியாகவில்லை. பெரிய டெக்னிக்கல் அறிவு தேவையில்லாத தொழில். படிப்பறிவு இல்லாத பெண்கள்கூட இதில் நுழைந்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம். புதிதாக இந்தத் தொழிலில் இறங்குபவர்கள்கூட நல்ல லாபம் பார்க்க முடியும்.பிரசன்னா ஏ.வி.பி. பேப்பர்ஸ், திருச்சி சந்தை வாய்ப்பு என்று பார்த்தால் சாதாரண டீக்கடை முதல் பெரிய கார்ப்பரேட் நிறுவனம் வரை பேப்பர் கப்கள் பயன்படுத்தப்படுகின்றன. சாதாரணமாக ஒரு டீக்கடைக்கு ஒரு நாளைக்கு 1,000 முதல் 2,000 கப்கள் தேவைப்படும். வெறும் 10 லட்சம் ரூபாய் முதலீட்டில் மாதம் 60,000 வரை லாபம் பார்க்கலாம். மெஷின் ஆபரேட்டருக்கு 15 நாட்கள் பயிற்சி போதுமானது. ஒரு நாளைக்கு ஒரு மெஷினில் அறுபதாயிரம் கப்கள் வரை தயாரிக்கலாம். ஒரு கப்புக்கு 5 பைசா லாபம் என வைத்துக் கொண்டாலும் தினசரி லாபமாக 3,000 ரூபாய் வரை கிடைக்கும். ஒரே மெஷினில் எல்லா அளவு கப்களும் செய்யலாம். உள்ளூர் என எடுத்துக் கொண்டால் 185 ஜி.எஸ்.எம். தரமுள்ள கப்புகளே போதும். ஏற்றுமதி செய்யும்போது ஒவ்வொரு நாட்டுக்கும் இந்த தரம் மாறுபடும். உதாரணத்துக்கு, அமெரிக்காவுக்கு 330 ஜி.எஸ்.எம். கப்கள்தான் ஏற்றுமதி செய்ய முடியும்.'' - க.ராஜீவ்காந்தி |
No comments:
Post a Comment