Wednesday, July 13, 2011

அன்புள்ள சகோதர்களே!

 
சகோ. கா.அ.மு. பழுலுல் இலாஹி அவர்கள் தங்களுடைய செய்தியில் சகோ. ஷம்சுல் லுஹா வையும் குறிப்பிட்டு உள்ளதால் அவர்க்கு சகோ. ஷம்சுல் லுஹா அவர்கள் பதில் அளித்து உள்ளார்கள்.  இதனை அனைத்து சகோதரர்களும் அல்லாஹ்வை பயந்து படித்து பார்த்து எந்த விதமான சப்பை கட்டும் கட்டாமல் இந்த செய்தியை பரப்பிய சகோதரரை சகோ. லுஹாவுடன் முபாஹலாவுக்கோ அல்லது ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும். இல்லையெனில் இப்பேற்பட்ட பொய்யர்களுக்கு எதிராக மறுமையில் அல்லாஹ்விடம் வழக்கு தொடுக்கப் படும் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்.
அன்புடன்
மு. சஜிதூர் ரஹ்மான்
 
அன்புள்ள கொள்கைச் சகோதரர்களுக்குஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
திருவாளர் கா.அ.மு. பழுலுல் இலாஹி மஸ்ஜிதுர்ரஹ்மான் நிர்வாகக் கமிட்டியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு என் மீது பல்வேறு அவதூறுகளையும் பொய்யான குற்றச்சாட்டுக்களையும் அள்ளி வீசிக் கொண்டிருந்தார். அதன் பின்னர் தமுமுகவிலிருந்து நீக்கப்பட்ட பிறகு தமுமுக தலைவர்கள் மீதும் இதே போன்ற குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசினார். தமுமுகவிலிருந்து பி.ஜே. வெளியேறிய பின் தமுமுகவினருடன் சேர்ந்து கொண்டு பி.ஜே. மீதும் தவ்ஹீத் ஜமாஅத் மீதும் வரம்பு மீறி பொய்க் குற்றச்சாட்டுக்களைக் கொட்டித் தள்ளினார்.
இதில் தனிப்பட்ட முறையில் என் மீது அதிகமான தாக்குதலைத் தொடுத்தார். இதற்குக் காரணம் தமுமுக மற்றும் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராக அவர் கிளம்பிய போது நான் அவருக்கு ஆதரவாகச் செல்லாதது தான். அவருடன் நான் கொண்டிருந்த நட்பின் காரணமாகஇவருக்குப் பின்னால் நான் செல்வேன் என்று எதிர்பார்த்தார். அந்த எதிர்பார்ப்பு பொய்யானதும் என்னை எப்படியேனும் ஒழித்து விட வேண்டும் என்ற நோக்கில் என் மீது பல பொய்க் குற்றச்சாட்டுக்களை சாட்டிக் கொண்டே இருந்தார். அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்.
முதன் முதலில் என் மீது பொருளாதாரக் குற்றச்சாட்டைச் சுமத்தி மேலப்பாளையம் முழுவதும் ஆயிரக்கணக்கான பிரசுரங்களை அச்சிட்டு அவற்றை வீடு வீடாககடை கடையாகவீதி வீதியாக அவரது தம்பியை வைத்து வினியோகிக்கச் செய்தார். அவ்வாறு வினியோகித்த மறு வாரம் அவரது தம்பியை அழைத்து மஸ்ஜிதுர்ரஹ்மானில் ஜும்ஆ முடிந்த பிறகு ஜமாஅத்தார்கள் முன்னிலையில் நானும் சகோதரர் எம்.எஸ். சுலைமானும் அந்தக் குற்றச்சாட்டுக்களைப் பொய்யென நிரூபித்தோம். அதன் பின்னால் அல்லாஹ்வின் கிருபையால் அவர் என்ன குற்றச்சாட்டு சொன்னாலும் அது மக்களிடம் எடுபடவே இல்லை.
இப்படிப்பட்டவர் தான் இப்போது ஓர் அபாண்டமானஅபத்தமானபகிரங்கப் பொய்யான ஒரு குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளார்.
மேலப்பாளையத்தில் ஒருவர் ஏதோ வியாபாரம் என்று சொல்லி பணம் திரட்டி ஏமாற்றி விட்டாராம். நான் அந்த வியாபாரத்தை ஹலால் என்று ஃபத்வா கொடுத்தேனாம். இதை நம்பி பலர் பணம் போட்டார்களாம். இவருக்கு மறுமை நம்பிக்கை இருக்கின்றதாஎன்ற சந்தேகம் தான் ஏற்படுகின்றது.
இன்னார்இன்ன வியாபாரம் செய்கிறார். அதில் பணம் போடலாமாஎன்று என்னிடம் கேட்டவர் யார்?அந்த வியாபாரம் ஹலாலானது தான் என்று நான் யாரிடம் ஃபத்வா கொடுத்தேன்?அந்த ஃபத்வாவை நம்பி பணம் போட்டது யார்?
இப்படி யாராவது ஒருவரைக் காட்ட முடியுமாஅப்படி யாராவது கூறினால் அவர் என் முன்னால் வந்து நிரூபிக்கட்டும். வருபவன் உரிய சாட்சிகளைக் கொண்டு வர வேண்டும். இல்லையேல் முபாஹலாவுக்குத் தயாராக வர வேண்டும்.
இந்தக் குற்றச்சாட்டுக்களைக் கூறும் பழுலுல் இலாஹி பொய்யன் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் என்பதால் அவனுக்குப் பதில் எழுதுவதற்காக இந்தக் கடிதத்தை எழுதவில்லை. பொதுவாகவே இவர் அனுப்பும் மெயில்களைப் படிப்பதும் இல்லை. வேறு நண்பர்கள் அனுப்பியதால் தான் இதைப் பார்க்க நேர்ந்தது. எதிரிக்கு எதிரி நண்பன் என்ற அடிப்படையில் இவனது கடிதத்தைப் பரப்புவதற்குச் சிலர் இருக்கிறார்கள் என்பதால் இந்தக் கடிதத்தைப் பொதுவாக எழுதியுள்ளேன்.
உண்மையில்இப்படி ஒரு வியாபாரம் நடப்பதே எனக்கு ஒரு சில மாதங்களுக்கு முன்பு வரை தெரியாது. அதில் யார் யார் பணம் கொடுத்திருக்கிறார்கள் என்பதும் எனக்குத் தெரியாது.
பணம் கொடுத்தவர்களுக்குப் பணம் வராமல் பாதிப்புக்குள்ளான பிறகு தான் ஒவ்வொரு பூதமாக வெளிவருவதைப் பார்த்து எல்லோரையும் போன்று நானும் தெரிந்து கொண்டேனே தவிர இதுபற்றிய விபரம் எனக்கு அறவே தெரியாது.
நமது ஜமாஅத்தைச் சேர்ந்த சிலர் கூட்டாக ஒரு கம்பெனி நடத்தி வருகின்றனர். மருத்துவத் தொழிலுக்கான உபகரணங்கள் விற்பனை செய்யும் அந்தக் கம்பெனியில் தற்போது மோசடிக் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் அந்த நபரும் ஒரு பங்குதாரர். அந்த அடிப்படையில் அவரை எனக்குத் தெரியும். மேற்படி ஜமாஅத் சகோதரர்களின் தொடர்பில் அவரிடம் சில தடவை கார் வாங்கிப் பயன்படுத்தியிருக்கின்றேன். அதுவும் இந்தக் குற்றச்சாட்டு எழுந்த பிறகு அதையும் நிறுத்தி விட்டேன். அவருடன் உள்ள தொடர்பே மேற்கண்ட ஜமாஅத் சகோதரர்களை வைத்துத் தான்.
மற்றபடி அவர் என்ன தொழில் செய்கிறார்அவரிடம் யாரெல்லாம் பணம் கொடுத்துள்ளார்கள் என்ற விபரங்கள் எனக்குத் தெரியாது. கார்கோ தொழிலில் பணம் போட்டதாகத் தற்போது ஏமாந்த சகோதரர்கள் தெரிவிப்பது தான் எனக்கும் தெரியும். அவர் கார்கோ தொழில் செய்தாராஅதற்கு லைசன்ஸ் வைத்திருக்கிறாராஎன்பன பற்றி எனக்குத் தெரியாது. தெரிய வேண்டிய அவசியமும் எனக்கு ஏற்படவில்லை.
அல்லாஹ்வின் கிருபையால் நான் இந்த ஜமாஅத்தில் இருப்பதால் என்னைச் சுற்றி புலன் விசாரணையுடன்பூதக் கண்ணாடி போட்டுக் கொண்டு ஆயிரமாயிரம் பேர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நான் நன்கு உணர்ந்திருக்கிறேன். அந்த வகையில் இந்த ஜமாஅத்தில் இருப்பதன் மூலம் அல்லாஹ் எனக்கு ஒரு பாதுகாப்புக் கவசத்தையும்,பாதுகாவல் அரணையும் அளித்திருக்கின்றான். இதை நான் பெருமையாகவும் பெரும் பாக்கியமாகவும் கருதுகின்றேன்.
அண்மையில் எனக்குத் தெரிந்த ஒரு சில நண்பர்கள் என்னிடம், “ஒரு லட்சம் ரூபாய் தாருங்கள். உங்களை எங்களது ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் சேர்த்துக் கொள்கிறோம். நீங்கள் எந்த முயற்சியும் இருக்க வேண்டாம். கிடைக்கும் லாபத்தில் உங்களுக்குப் பங்கு தருகிறோம்” என்று சொன்னார்கள்.
ஒரு லட்ச ரூபாய் என்னிடம் இல்லாவிட்டாலும் யாரிடமாவது கடன் வாங்கி அந்த நண்பர்களிடம் கொடுத்திருக்க முடியும்.
நான் பார்த்தது ஒன்றே ஒன்று தான். ரியல் எஸ்டேட் என்பது ஹலாலான வியாபாரம் தான். ஆனால் அதில் ஏதாவது ஒரு வில்லங்க நிலம் மாட்டிஅதில் ஒருவன் ஏமாந்து விட்டால் அது தவ்ஹீது வளர்ச்சிக்குத் தடைக்கல்லாகி விடும் என்று பயந்தே அதில் சேர மறுத்து விட்டேன்.
அல்லாஹ்வின் அருளால் இதுவரை இதில் மிகக் கவனமாக இருந்து தான் என்னுடைய ஏகத்துவப் பிரச்சாரப் பயணத்தைத் தொடர்கின்றேன்.
அல்லாஹ் எனக்கு தவ்ஹீதுக்கு வழிகாட்டிய பிறகு எனது திருமணம் நபிவழி அடிப்படையில் அமைய வேண்டும் என்று சபதமேற்றுக் கொண்டேன். எனக்காக ஒரு பெண்ணும் பேசப்பட்டது. அந்தப் பெண் எனக்கு நெருங்கிய உறவுக்காரப் பெண். இதைப் பற்றி என்னுடைய ஆசிரியர்மத்ரஸத்துர்ரஹ்மானின் முதல்வர் அப்துஸ்ஸலாம் அவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். பெண்ணைப் பற்றியும் அவளது வீட்டின் பின்னணியைப் பற்றியும் சொல்லும் பதுஅந்தப் பெண் வீட்டினருக்கு ஒரு லட்சம் ரூபாய் லாட்டரியில் பரிசு விழுந்திருக்கின்றது என்று குறிப்பிட்டேன்.
உடனே அவர், “என்னிடம் நீ (தவ்ஹீது) பிரச்சாரம் செய்யும் போதுஇவன் லாட்டரி விழுந்த வீட்டில் பெண் கட்டியவன்’ என்று எதிர் பிரச்சாரம் செய்வேன்” என்று சொன்னார்.
அவ்வளவு தான். அது என்னுடைய உள்ளத்தில் ஒரு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. தவ்ஹீதுக்கு முட்டுக்கட்டை என்று எண்ணியும்நபிவழி அடிப்படையில் திருமணத்தை நடத்துவதற்கு இருந்த தடங்கல்களைக் கருத்தில் கொண்டும் இஸ்திகாரா செய்து விட்டு அந்தப் பெண்ணை வேண்டாம் என்று கூறி வேறு பெண்ணை மணந்தேன்.
இதன் பிறகு ஒவ்வொரு செயல்பாட்டிலும் முடிந்தவரை தவ்ஹீது பிரச்சாரத்திற்கு இடையூறு வந்து விடக் கூடாது என்ற அடிப்படையிலேயே செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்.
பம்பாயில் ஒரு அரபிக்கு விபச்சாரம் செய்ய பெண் ஏற்பாடு செய்து கொடுத்தார்;பள்ளிவாசல் பணத்தை பத்து லட்ச ரூபாய் மோசடி செய்து விட்டார் என்றெல்லாம் என் மீது மிகப் பயங்கர அவதூறுகளைக் கூறிய போதும் சரிஇப்போதும் சரி! எனக்கு இருப்பது ஒரே ஒரு வழிமுறை தான்.
இந்தக் குற்றச்சாட்டை என் முன்னால் நேரடியாக வந்து நிரூபிக்க வேண்டும்அல்லது முபாஹலாவுக்கு முன்வர வேண்டும். இப்ராஹீம் நபியின் பாட்டையில் செல்லும் ஒரு தூய்மையான இயக்கத்தில் இருக்கும் ஏகத்துவவாதிகளுக்கு இதுபோன்ற குற்றச்சாட்டுக்களை எதிர் கொள்ள இது தான் வழி என்ற அடிப்படையில் இந்த அறைகூவலை விடுத்து முடிக்கின்றேன்.
இப்படிக்கு
எம். ஷம்சுல்லுஹா


2011/7/12 M.Sajidur Rahman Rahman <asrn65@gmail.com>

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்புடையீர்
யார் ஒருவர் எந்த செய்தியை கொண்டு வந்தாலும் உடனடியாக குறைகளை சொல்லாமல் முதலில் இந்த செய்தி உண்மையா என்பதை விசாரிக்கவும். விசாரணையில் உண்மை என்று தெரிந்தால் அதற்க்கு தகுந்த ஆதாரங்கள் இருந்தால் அந்த நபரின் மீது நடவடிக்கை எடுக்கலாம். உண்மை இல்லையெனில் இவர்களை போன்று பொய்களை பரப்பும் நபர்களை புறக்கநிள்ளவும் வேண்டும்.
அன்புள்ள மேலப்பாளையம் சகோதரர்களே! இந்த செய்தி குறித்து சரியான விசாரணை நடத்தவும். இன்ஷா அல்லாஹ் நானும் எனக்கு தெரிந்த மேலப்பாளையம் சகோதரர்களை கொண்டு விசாரிக்க சொல்கிறேன்.
அன்புடன்
மு. சாஜிதூர் ரஹ்மான்
 
,


 
2011/7/11 Ibnu Jamaal <binjamal.npm@gmail.com>
அல்லாஹ்விற்கு பயந்து கொள்ளுங்கள் இயக்கத் தலைவர்களே! ஈகோ இல்லாமல் இந்தப்பிரச்சனையை அணுகுங்கள்

From: tamilmuslimbrothers@googlegroups.com [mailto:tamilmuslimbrothers@googlegroups.comOn Behalf Of Abu Umar
Sent: Monday, July 11, 2011 9:47 PM
To: tamilmuslimbrothers@googlegroups.com
Subject: Re: |TMB| 
முஸ்லிம்களின் 50 கோடியை மீட்க வழி செய்யுங்கள்.

உண்மை நிலையை சம்பந்தப்பட்டவர்கள் தெளிவுபடுத்த வேண்டும். 
2011/7/11 akbar ali <akbar.anish@gmail.com>
நவூது பில்லாஹ் - அல்லாஹ் நம்மை பாதுகாக்க வேண்டும்.
இந்த விஷயத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் நிலையை சமுதாயத்திற்கு தெளிவாக்க வேண்டும் இல்லைஎன்றால் சமுதாயம் அவர்களை ஒதுக்க வேண்டும்.

2011/7/11 Anvar deen <deen.anvar@gmail.com>
அஸ்ஸலாமு அலைக்கும்

சகோ ஃபஜ்லுல் இலாஹி அவர்களால் சொல்லப்பட்டிருக்கும் இந்த நிகழ்ச்சி உண்மையாக இருக்குமானால்தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும்  அவர்களின் உண்மை முகங்களை சமுதாயத்துக்கு முன்பு அடையாளம் காட்டுவதுதவறுகள்  நடக்கக்கண்டால்............. எனற நபிமொழியின்படிஒவ்வொரு முஸ்லிமின் கடமையாகும்.
- Show quoted text -
- Show quoted text -

thank s by net  மு. சாஜிதூர் ரஹ்மான்

1 comment:

  1. முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன். (அல்-குர்ஆன் 49:12)


    அல்லாஹ்வையும் மறுமை நாளையும் விசுவாசம் கொள்கின்றாரோ அவர் பேசினால் நல்லதையே பேசட்டும் அல்லது மௌனமாக இருக்கட்டும்’ (அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி)

    ReplyDelete