Friday, July 15, 2011

தினமணிக்கு புத்தி கேட்டு போய்விட்டதா?



தமிழகம்
ரஜினிக்கா இந்த அவமானம்!

First Published : 15 Jul 2011 12:00:00 AM IST

சென்னை, ஜூலை 14: சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிறுநீரகப் பாதிப்புக்குச் சிகிச்சை பெற்று, பூரண குணமடைந்து சென்னைக்குத் திரும்பிய நடிகர் ரஜினிகாந்த்துக்கு, விமான நிலையத்தில் அதிகாரிகளால் தரப்பட்ட அவமானகரமான மரியாதை பலரையும் வேதனைப்படுத்தி இருக்கிறது. புதன்கிழமை இரவு ரஜினிகாந்த் சென்னை திரும்புவதாக "தினமணி' உள்ளிட்ட எல்லா ஊடகங்களிலும் செய்தி வெளியாகி இருந்தும், அவரை வரவேற்கத் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்படாதது, ரஜினி ரசிகர்களை மிகவும் எரிச்சலுக்கு உள்ளாக்கி இருக்கிறது.
ரஜினிகாந்த் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் புதன்கிழமை இரவு சென்னை திரும்பும் தகவல் கிடைத்ததால் அவரது ரசிகர்கள் புதன்கிழமை மதியம் முதலே மீனம்பாக்கம் விமான நிலையத்தில் குவியத் தொடங்கினார்கள். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்ததே தவிர, தகுந்த முன்னேற்பாடுகள் செய்யப்படவில்லை என்பதுதான் உண்மை.
நடிகர் ரஜினிகாந்த், வழக்கமாக முக்கியமான பிரமுகர்கள் விமானத்திலிருந்து வெளியேறும் ஆறாவது வாயில் வழியாக வெளிவந்தார் என்பதும் அங்கே கூடியிருந்த ரசிகர்களைப் பார்த்து தனக்கே உரித்தான பாணியில் தலைக்கு மேல் கையை உயர்த்தி வணக்கம் தெரிவித்தார் என்பதும்தான் பத்திரிகையில் வெளிவந்த செய்திகள். அதற்கு முன்னால் நடந்த சம்பவங்களைப் பற்றிக் கேள்விப்பட்டால், ""ரஜினி ரசிகர்கள் மட்டுமல்ல, யாராக இருந்தாலும் ரஜினிக்கா இந்த அவமானம் என்று நிச்சயம் வேதனைப்படுவார்கள்'' என்றார் விமான நிலைய ஊழியர் ஒருவர்.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்திறங்கிய ரஜினிகாந்தும் மற்றவர்களும் வழக்கம்போல விமானப் பாலம் (ஏரோ பிரிட்ஜ்) மூலம் வெளியே வந்தனர். வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள் இமிக்ரேஷன் என்று அழைக்கப்படும் அனுமதி சோதனைக்குப் பிறகுதான் விமான நிலையத்திலிருந்து வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். முக்கியமான பிரமுகர்கள் இதுபோல வெளிநாட்டுப் பயணம் முடித்து இந்தியா திரும்புவதாக இருந்தால், அவர்களை விமானத்திலிருந்து இறங்கும் இடத்திலேயே வரவேற்று, இமிக்ரேஷன் அனுமதி அளிப்பது உண்டு.
""தொழிலதிபர்களான "இந்தியா சிமென்ட்ஸ்' சீனிவாசன், சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன், விஜய் மல்லைய்யா போன்றவர்களுக்கு நமது அதிகாரிகள் குழைந்தும் நெளிந்தும் விமானத்திலிருந்து இறங்கியதுமே எல்லா சேவகங்களையும் செய்து, சிறப்பு வாகனத்தில் ஆறாவது வாயில் வரை சென்று வழியனுப்புவார்கள். ஆனால், தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டிருக்கும் ரஜினிகாந்த் "இமிக்ரேஷன்' சோதனைக்கு நடத்திச் செல்லப்பட்டார். அவர் மூச்சிரைக்க நடந்து வந்ததைப் பார்க்கவே சங்கடமாக இருந்தது'' என்று விழிகளில் நீர்கோக்க நமக்குத் தெரிவித்தார் பணியில் இருந்த காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவர்.
அதுமட்டுமல்ல, ""இதுபோன்ற நேரங்களில் பிரமுகர்களை ஏற்றிச் செல்ல டாடா சுமோ போன்ற வாகனங்கள்தான் பயன்படுத்தப்படும். ஆனால், ரஜினிகாந்த் ஒரு பழைய பஸ்ஸில் அழைத்துச் சென்று ஆறாவது வாயிலில் இறக்கிவிடப்பட்டார். ரஜினிகாந்த் ஒரு நோயாளியாக சிகிச்சை முடிந்து நாடு திரும்புகிறார் என்று தெரிந்தும் விமான நிலைய அதிகாரிகள் முன்னேற்பாடுகளைச் செய்திருக்க வேண்டாமா?'' என்று கேள்வி எழுப்புகிறார்கள் ரஜினி ரசிகர்களான விமான நிலைய ஊழியர்கள்.
விமான நிலைய ஊழியர்கள்தான் இப்படி என்றால் நமது காவல்துறையின் செயல்பாடு அதைவிட கண்டனத்துக்குரியது. ரஜினியை வரவேற்க நண்பகல் முதலே ரசிகர்கள் குவிகிறார்கள் என்று தெரிந்தும், பிரமுகர்கள் வெளியேறும் ஆறாவது வாயிலின் அருகில் தற்காலிகமாக அதிக விளக்குகளைப் பொருத்தி அதிகளவில் வெளிச்சம் இருக்கும்படி பார்த்துக் கொண்டார்களா என்றால், இல்லை. அங்கிருந்து ரஜினி வெளியேறும் பாதையில் தடுப்புகள் (பாரிக்கேட்) போட்டிருந்தார்களா என்றால் அதுவும் இல்லை. அன்று ஏதாவது அசம்பாவிதம் நடந்திருந்தால் அதற்குப் பொறுப்பாவது முதல்வரும் அரசுமாக இருக்கும் என்று தெரிந்தும் காவல் துறை ஏன் முன்னேற்பாடுகளைச் செய்யவில்லை என்று வருத்தப்படாத ரசிகர்களே கிடையாது.
""இத்தனைக்கும் "இமிக்ரேஷன்' சோதனை நடத்தும் இலாகா ரஜினியின் நண்பரான உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தின் கீழ் வருகிறது. விமான நிலையம் அவரது இன்னொரு நண்பரான வயலார் ரவியின் அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. ரஜினி வருகிறார் என்று ஊரெல்லாம் கொட்டி முழங்குவது இவர்கள் காதில் விழாதது ஏன்?'' என்று ரஜினிக்கு நெருக்கமான சிலர் கேள்வி எழுப்பினார்கள்.
இத்தனை குளறுபடிகளுக்கும் ரஜினி குடும்பத்தினரும் ஒரு காரணம் என்கிறார் ரஜினி ரசிகர் ஒருவர். ""1996-ல் ரஜினி வெளிநாட்டிலிருந்து திரும்பும்போது ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் சத்யநாராயணா முன்னேற்பாடுகளைக் கவனமாகச் செய்திருந்தார். அதேபோல, ரஜினி குடும்பத்தினர் முதல்வரின் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டிருந்தால், நிச்சயமாக அவர் தகுந்த ஏற்பாடுகளுக்கு உத்தரவிட்டிருப்பார். அவர்கள் சொல்லாதது தான் தவறு'' என்று கருத்துத் தெரிவித்தார் அவர்.
""ரஜினிகாந்தின் குடும்பத்தினர் தெரிவிக்கவில்லை. தவறுதான். தமிழகக் காவல் துறையின் புலனாய்வுத் துறை என்ன செய்து கொண்டிருந்தது? இவர்கள் ஏன் முதல்வரிடம் முன்கூட்டியே அறிவித்துத் தகுந்த ஏற்பாடுகளைச் செய்யாமல் விட்டார்கள்? இத்தனைக்கும் ரஜினிகாந்துக்கும் தமிழக முதல்வருக்கும் நல்லுறவு இருப்பது அவர்களுக்குத் தெரியாததா என்ன'' என்று கோபமாகக் கேட்பவர்கள் பலர்.
தொழிலதிபர்களுக்கெல்லாம் தொழுதடிமை செய்யும் நமது அதிகார வர்க்கம், தமிழக மக்களின் ஏகோபித்த அன்பையும் அபிமானத்தைப் பெற்ற நடிகர் ரஜினிகாந்தை, அதுவும் சிகிச்சை பெற்று அவர் திரும்பும் நிலையில், இப்படி நடத்தியிருக்க வேண்டாம் என்று வருத்தப்படாத ரசிகர்களே இல்லை!
கருத்துகள்
 Dinamani  Dinamani Sir. This is too much. Rajani is one of the IndianC Citizen and he is well paid actor. Thats all. 
By Nour 
7/15/2011 10:49:00 AM
 தினமணி ரஜினி ரசிகரோ? நேர்மைக்குப் பெயர்போன தினமணிக்கு சிண்டு முடியும் வேலை தேவைதானா?நான் எந்தக்கட்சியும் இல்லை.யாருக்கும் ரசிகனும் இல்லை.எப்போதும் தினமணியின் துணிச்சலைப் பாராட்டுபவன்.இருந்தபோதிலும் THIS IS TOO MUCH FOR DINAMANI. 
By இராம.பில்லப்பன் 
7/15/2011 10:48:00 AM
 போய் புள்ளைங்கள படிக்க வைங்கய்யா....... 
By Ramesh 
7/15/2011 10:47:00 AM
 தயவு செய்து தினமணி இந்த செய்திக்கு இவ்வளவு முக்கியத்துவம் அளித்து தனது தரத்தை தாழ்த்திக் கொள்ள வேண்டாம் 
By மன்னூர் 
7/15/2011 10:47:00 AM
 இது எல்லாம் படிகதிங் சார். 
By Deven 
7/15/2011 10:38:00 AM
 ரஜினிக்கு வரவேற்ப்பு கொடுக்காததைபற்றி முக்கியத்துவம் கொடுத்து தினமணியின் எழுதும் போக்கு ஏற்கக்கூடியதல்ல .தொழிலதிபர்கள் ,பிரமுகர்களுக்கு குழைவதும்,நெளிவதும் ,சேவை புரிவதும் ஒரு பிச்சைகாரத்தனம் . தமிழனுக்கு இந்த மனப்பான்மை இருக்கும்வரை நாடும் இனமும் எப்போதும் முன்னேறாது . ரஜினியின் குடும்ப உறுப்பினர்கள் ரஜினியின் வருகையைப்பற்றி அறிக்கை விடும் அளவுக்கு,ரஜினி ஒரு சுதந்திர போராட்ட தியாகியும் அல்ல . கோடி கணக்கில் சம்பளம் வாங்கும் ஒரு சாதாரண நடிகன்தான்.புரட்சி நடிகர் எம்.ஜி.ராமச்சந்தரனைப்போல, தான் சம்பாதித்த பணம்,சொத்தை எல்லாம் மக்கள் நலனுக்காக வாரி இரைத்தவரும் அல்ல . இவர் சினிமா துறையில்தான் சூப்பர் ஸ்டார். ஏன் சினிமாத்துறையினர்களும் பிரமுகர்களும் இவருக்கு வரவேற்ப்பு கொடுக்கவில்லை ? 
By MTMoorthi 
7/15/2011 10:37:00 AM
 Tamil proverb says KOOZHUKKUM AASAI MEESAIKKUM AASAI. One has to to create an impression he is fully cured and so No WHEEL CHAIR to be shown, at the same time you lament for his feeling breathless due to walking a short distance. 
By ram 
7/15/2011 10:36:00 AM
 ஒரு நோயாளி என்பதற்காக அவருக்கு உதவி செய்வது தவறு இல்லை. மேலும் ரஜினி முதல் முறை வெளிநாடு சென்று வரவில்லை, எத்தனையோ முறை சென்று வந்தபோது இந்த பிரச்சினை வரவில்லை. இப்போது அவர் ஒரு நோயாளி என்பதால் தினமணியின் ஆதங்கம் சரியே. 
By பாஞ்சை வேந்தன் 
7/15/2011 10:24:00 AM
 தயவு செய்து தினமணி இந்த செய்திக்கு இவ்வளவு முக்கியத்துவம் அளித்து தனது தரத்தை தாழ்த்திக் கொள்ள வேண்டாம் என விரும்புகிறேன். 
By Anand 
7/15/2011 10:23:00 AM
 அய்யா ஆசிரியர் அவர்களே உங்களுடைய இந்த செய்தியை திரு. ரஜினி அவர்களே விரும்ப மாட்டார், எங்களுக்கு ஒரு உண்மை தெரிஞ்ஜாகனும் அப்படி என்ன உங்களுக்கு ரஜினி மேல கோபம் 
By hari 
7/15/2011 10:23:00 AM
 இது முழுக்க முழுக்க ரஜினி குடும்பத்தாரின் தவறு. அவர்கள் மிகவும் கவனத்துடன் செயல்பட்டிருக்க வேண்டும். தேவையில்லாமல் அரசை குறைகூற வேண்டாம். 
By senthil 
7/15/2011 10:22:00 AM
 If they had that much fear on security and clearance, considering the huge wealth he has, he should have used a chartered flight to fly back home, why save pennies when you have thousands of crores of wealth. Or the indian Airport authority should have a rule for VIP treatment every passenger(VIP) should pay a sum of Rs 50,000, by this way the Govt can increase the revenue, but politicians save them money for the filthy rich but tax the poor heavily in our mother land. I have no cinema loyalty, i do not hate any actor nor love anybody, after all the cinema craze is spoiling the lives of too many youngsters in India, cinema is a huge deception and a curse in TN 
By inptilayan 
7/15/2011 10:14:00 AM
 it is too much matter.dinamani tharam thalnthu pokirathu.kavanam thevai. 
By rahmathullah 
7/15/2011 10:07:00 AM
 This article which has appeared in Dinamani appears to have been printed with mischievous intentions to prejudice Rajnikant fans against the present Government by showing that they did not make adequate arrangements for his reception. It was uncalled for and has drawn precisely the kind of response from some readers which would pain his fans. Even our SS would not want any special treatment. Newspapers should avoid printing such suspect and politically motivated articles simply to create controversies and to boost their circulation . 
By Dinesh 
7/15/2011 10:00:00 AM
 Rajni is a simple human person. He is not a Saviour or God. In this case if any person with a medical certificate can be treated well by the Airport authority. I think the news papers should examine their conscience while writing about Rajini. For the news papers, Rajini's sickness has become a good business. My dear people of Tamilnadu, Please don't commit the sin of Idolatry. Purify yourselves from your AVITYA(illusions). 
By Felicks 
7/15/2011 9:58:00 AM
 அய்யா ... ரஜினி மீது உங்களுக்கு ஏன் இவ்வளவு கோபம் னு எனக்கு தெரியல ... 
By Manidhan 
7/15/2011 9:55:00 AM
 This is a grave compromise by Dinamani on Ethical Journalism.As an ardent reader I feel shocked as well as sorry for the paper to have given importance to this news.Rajni may be a good person but as far as his health complications are concerned it was his own making.Rajni like any other citizen is just an ordinary person and if at all he needed some facility at Airport then his people should have asked for it.In fact,TN Govt was very proactive, which was not at all necessary,in arranging police bandobust at Airport.Rajni is a self centered person and even recently his double standards in public life was totally exposed by Media when he communicated with the Present CM and Erstwhile CM of Tamilnadu.Dinamani's carrying this unwanted news may be viewed as a Gimmick by the paper to attract the Fans of Rajni into its subscriber base.Hats Not Off to Dinamani for this. 
By PS Narayanan 
7/15/2011 9:55:00 AM
 ரஜினி யார் . அவருக்கு எதற்காக செய்ய வேண்டும் அவர் மக்களுக்கு எதாவது நல்லது செய்திருக்கிற மனிதனா .இந்த செய்தி நாட்டுக்கு தேவை இல்லாத விஷயம் 
By வெங்கட் ரமணன் 
7/15/2011 9:54:00 AM
 வேற வேலைய பாருங்க சார் . 
By matheyu 
7/15/2011 9:50:00 AM
 Rajini is one of the huge tax payer, so he deserves VIP treatment... Thanks for Dinamani. 
By Rajan 
7/15/2011 9:46:00 AM
 Since i am a fan of superstar, even he himself will not expect special protection. So "Dinamani" has unnecesarily spoiled our thalaivar's image. See the people's response. 
By Prasanna 
7/15/2011 9:46:00 AM
 ரஜினி ஒரு நல்ல மனிதர் . மரியாதைக்கு உரியவர். பல லட்சம் மக்களின் அன்பை பெற்றவர் . அப்படி பட்டவர்க்கு தகுந்த மரியாதையை கொடுப்பதில் எந்த ஒரு தவறும் இல்லை. இன்று எந்த ஒரு அரசியல்வாதிக்கும் தான் ஒரு நாணயமான ,நேர்மையான் , கக்கனை போன்றவர் என்று சொல்லிகொள்ளும் அருகதை கிடையாது.இப்படி பட்ட அரசியல் வாதிகளுக்கு மரியாதையை கொடுக்கும் பொது , ரஜினி போன்றவருக்கு தகுந்த மரியாதையை கொடுப்பதில் எந்த தவறும் இல்லை.. 
By ravi 
7/15/2011 9:38:00 AM
 இவ்வளவு கருத்துக்கள் ரஜினி சாதாரண மனிதர் போல நடத்தப்பட்டது சரிதான் என்று மக்கள் நினைப்பதை காட்டுகிறது. அமைச்சர்கள் தங்கள் நண்பர்களுக்கு சலுகைகள் குடுக்க ஆரம்பித்தால் ஒத்துக்கொள்வீர்களா? கலாநிதி மாறனுக்கு அப்பிடி ஒரு வரவேற்பு கொடுத்திருந்தால் அது விசாரணைக்குரியது. விஜய் மல்லையா ஒரு விமான நிறுவன உரிமையாளர். அதனால் சில சலுகைகள் அடைந்திருக்கலாம்., ஆனாம் அதனால் இம்மிக்ரேஷனில் சலுகைகள் காட்டப்பட்டிருந்தால் அதுவும் தவறே! எத்தனையோ பேர் நோயாளிகளாக விமானத்தில் பயணம் செய்கிறார்கள். அவர்களுக்கு கொடுக்கப்படும் வசதிகளில் மாற்றம் வேண்டும் என்பதே சரியான கோரிக்கையாக இருக்க முடியும். தினமணி , இதை உங்களிடம் இருந்து எதிர் பார்க்கவில்லை. ரசிகர்கள் கூடுமிடத்தில் பாதுகாப்பு வேண்டும் என்பதை தவிர வேறு எந்த இடத்தையும் இந்த கட்டுரையில் நீங்கள் நியாயபடுத்த முடியாது. பிரச்சினைக்குரியவர் அல்லாத நடிகருக்கே இந்த கூப்பாடு என்றால், எனக்கு பயங்கர வாத அச்சுறுத்தல் இருக்கு என்று சலம்பி வருபவர்களின் சலம்பல்கள் நியாயபடுத்தப்பட்டுவிடும். இதற்காக் பாடாய்பட்டு உழைத்து, வரி செலுத்துகிறார்கள் மக்கள்.? 
By Praveena 
7/15/2011 9:36:00 AM
 இதெல்லாம் கொஞ்சம் ஓவர்... இது ஒரு செய்தியா? என்னாச்சு தினமணிக்கு? நம்பர் ஒன் பேப்பர் மாதிரி நடந்துகிறிங்க.... 
By காட்டுமிராண்டி 
7/15/2011 9:34:00 AM
 தினமணிக்கு புத்தி கேட்டு போய்விட்டதா? ஏன் ஐயா அவரும் மனுஷன் தானே? இதெல்லாம் ரொம்பவே ஓவர். 
By அருணன் 
7/15/2011 9:31:00 AM
 முதலில் இந்த செய்தியை நீக்குங்கள்.. ரஜினி ஒரு நடிகன் அவ்வளவுதான். அவனால் நாட்டுக்கு என்ன நன்மை ? 
By காட்டுமிராண்டி 
7/15/2011 9:31:00 AM
 தயவு செய்து தினமணி இந்த செய்திக்கு இவ்வளவு முக்கியத்துவம் அளித்து தனது தரத்தை தாழ்த்திக் கொள்ள வேண்டாம் என விரும்புகிறேன். ரஜினியும் நம்மைப் போன்ற மனிதரே. புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன். 
By சரவணா 
7/15/2011 9:29:00 AM
 why dinamani making this issue big, i am asking simple question, rajini is indian, why he is using pvt airliens from singapore, why he can't use Air india , at least the revenue will come to indian goverment. he will not use indian aviation but he need all support from indian goverment. this is not at all acceptable. point no -2. if rajini family make a pre request to the singapore airlines, they will ensure smooth out way for rajini. point no 3 -come to the fans side , why they need to go to airport to receive him in the afternoon becuse they dont have work. what rajin going to do for them. 
By nancy 
7/15/2011 9:13:00 AM
 சட்டமும், விதிகளும் அனைவருக்கும் ஒரே மாதிரியாக இல்லாத வரை, இந்த நாட்டில் எதுவுமே மாற போவதில்லை. ரஜினி ஒரு நடிகர். நடிக்கிறார். சம்பளம் பெறுகிறார். கூடவே புகழும் பெறுகிறார். எதற்காக அரசாங்கம் இவருக்கு வளைய வேண்டும்? இவர் செய்த தியாகம் என்ன? அண்ணா ஹசாரே எவ்வளவு தியாகம் செய்தார். அவரை போன்ற மனிதர்களுக்கு மட்டுமே தினமணி எழுத வேண்டும். 
By CHANDRASEKARAN 
7/15/2011 9:08:00 AM
 ரஜினிகாந்த் ரசிகர்கள் என்ன செய்துகொண்டிருந்தர்கள் அவர்கள் நல்லபடி வரவேற்புக்கு / பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்துருக்க வேண்டும்.
By ச KUMAR 
7/15/2011 9:06:00 AM
 Dinamani, Even Rajini might not have worried about the non provision of facilities as mentioned. I respect Rajini for his acting, humanity etc., but he himself want to mingle with us why media is trying to built wall in the name of securtiy / facility ?. I am surprised to see this news as headlines in Dinamani. These news are not given much importance earlier by Dinamani. 
By Muralidharan R 
7/15/2011 9:04:00 AM
 திஸ் நியூஸ் டோடல்லி waste by senthilraj 
By senthilraj 
7/15/2011 9:02:00 AM
 why dinamani crying for Rajini, எல்லோரும் இந்நாட்டு மக்கள் .எல்லோரும் சட்டத்தின் கண் முன் ஒன்றுதான் மனிதாபிமானம் ,நேர்மையான கடமை போதும்.மனிதன் மனிதனை தொழவேண்டாம் .மனித நேசம் போதும் 
By kaka 
7/15/2011 9:02:00 AM
 மரியாதைக்குரிய தினமணி, வாங்கி கட்டிக்கொண்டது போதுமா? தேவையா இதெல்லாம்.
வாசகர்களின் எண்ணங்களை தெரிந்து கொள்ளவே இது போன்ற செய்திகளை வெளியிட்டதாக சொல்லி சமாளியுங்கள். c u 
By NS நாயுடு 
7/15/2011 9:01:00 AM
 சிறப்பு சலுகை என்பது யாருக்கு கொடுக்க பட்டாலும் அது தவறுதான். ஆனால் நமது நாட்டில்தான் அது எங்கும் உள்ளதே என்ற எண்ணத்தில் இந்த செய்தியினை தினமணி வெளியிட்டு இருந்தால் - ஒரு அங்கத நகைசுவை போல் என்றால் அது வரவேற்க பட கூடிய ஒன்று. ஆனால் உள்ளம் உருக இந்த செய்தி வெளியிட பட்டு இருந்தால் அது தினமணிக்கு அழகல்ல. உதவி என்பது தேவை கருதி செய்யப்பட வேண்டுமே தவிர அந்தஸ்து கருதி இருக்க கூடாது. வயது முதிர்ந்த எந்த நோயாளி ஆக இருந்தாலும் அவருக்கு சிறப்பு சலுகைகள் என்ன தரப்பட வேண்டும் என்பதை உங்கள் செய்தி உருவாக்குமேயானால் மிகவும் நல்லது. 
By Ravi 
7/15/2011 8:59:00 AM
 உங்களை மாதிரி பத்திரிக்கைகள் ரஜினி கமல் போன்ற ஆட்களை ஏதோ ஆகாயத்தில் இருந்து குதித்தவர்களை போல செய்தி வெளியிட்டு, பெரிது படுத்துகிறீர்கள். இவர்கள் நடித்து பெரிய சம்பளம் வாங்குகிறார்கள் அவ்வளவுதான். மக்களிடமிருந்துதான் இவர்கள் பெறுகிறார்கள். நாட்டிற்கோ மக்களுக்கோ ஒன்றுமே செய்யவில்லை. இவர்களை வைத்து இவரது குடும்பத்தினரும் மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கின்றனர். மீடியாக்கள் இது போல செய்தி வெளியிடாமல் மக்களுக்கு தேவையானவற்றை கொடுத்தாலே போதும். 
By Ayubkhan 
7/15/2011 8:53:00 AM
 இவ்வளவு முக்கியத்துவம் இதற்கு தேவையா?. தினமணியின் ஆசிரியர்குழு வெளியிட்டது போல் இல்லை. யாரோ ஒரு ரஜினி ரசிகர், வெறியர், எழுதியதை போல் இருக்கிறது.தினமணியின் தரத்தை தயவு செய்து தாழ்த்த வேண்டாம். - மா. கருப்பு சாமி 
By மா. கருப்பு சாமி 
7/15/2011 8:46:00 AM
 திஸ் இஸ் நாட் பிக் இஸ்ஸுஎ 
By தினேஷ் 
7/15/2011 8:35:00 AM
 தயவு செய்து தினமணி இந்த செய்திக்கு இவ்வளவு முக்கியத்துவம் அளித்து தனது தரத்தை தாழ்த்திக் கொள்ள வேண்டாம் என விரும்புகிறேன். ரஜினியும் நம்மைப் போன்ற மனிதரே. புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன். 
By Ravi 
7/15/2011 8:30:00 AM


No comments:

Post a Comment