Wednesday, July 27, 2011

வாழ்வின் அடித்தளம் இறையச்சம்!




Thank s By அந்நஜாத்

அந்நஜாத்தில் வரும் ஆக்கங்களை வாசகர்கள், மற்றும் இணையத்தளங்கள் எவரும் பதிவு எடுத்துக்கொள்ளலாம். அனுமதி தேவையில்லை.

S.N. குத்புதீன், B.A., பொதக்குடி
வழிமேல் விழி வைத்து “ரமழான்” மாதத்தை எதிர்கொண்டழைக்க நோன்பு நோற்போரைக் காட்டிலும் இறைச்சிக் கடைக்காரர்கள், காய் கறிக்கடைக்காரர்கள் …. தயாராகிக் கொண்டிருப்பது கண்கூடு. காரணம் அந்த மாதத்தில் பொருளீட்டி இலாபம் சம்பாதிப்போர் அனைவரும் அம்மாதத்தை இரு கரம் நீட்டி வரவேற்பர். (அம்மாதத்தால் வியாபாரம் குறையும் நிலையேற்படும். ஒரு சில வியாபாரிகள் மட்டும் உள்ளுக்குள் வெதும்புவர்.) ஆனால் எந்த இலாபத்தையடைய இறைவன் நோன்பை விதியாக்கினானோ அந்த இலாபத்தை அடையவேண்டுமென்ற இலட்சியத்தில் நம்மில் நோன்பு நோற்போர் எத்தனை பேர்…
மார்க்கம் கட்டாயக் கடமையாக்கியுள்ளவைகளைச் செயலாக்குவோர், சொற்பத்திலும் சொற்பம். அதிலும் இறைவனுக்காக மட்டுமே செய்ய வேண்டும் என்ற எண்ணம் கூட சருகி வருகிறது. இறைவனுக்காக செய்ய வேண்டுமென்ற எண்ணம் கருகி விடுமானால்… அந்த செயல் பதராகி வடும். வெறும் வெற்றுச்சடங்காக உருமாறிவிடும் (அல்லாஹ் காப்பாற்ற வேண்டும்)
ஆண்டுதோறும் தவறாமல் நோன்பு நோற்போர் ஒவ்வொருவரும் தம்மைத்தாமே கேட்டுக் கெள்ள வேண்டியது.
“நோன்பு எந்த இலட்சியத்துக்காக நம்மீது விதியாக்கப்பட்டிருக்கிறது. அந்த இலட்சியத்தை நாம் எட்டிப்பிடித்திருக்கிறோமா…?
எத்தனை பேரிடம் சரியான விடையிருக்கும்!
சிந்தித்து பாருங்கள்!
நோன்பின் மாண்பை நாம் நன்கறிவோம். நோன்பால் நாம் எந்த மாண்பைப் பெற வேண்டுமோ, அந்த மாண்பைப் பெற்றிருக்கிறோமா, வேண்டாத விளக்கம் கொடுப்பதிலும், விதண்டாவாதம் புரிவதிலும் பொன்னானக் காலத்தைப் புண்ணாக்கிறது போதும் இனியும் அந்நிலையைத் தொடராது – உண்மையை உள்ளதை உள்ளபடி உணர்ந்து அதை உறுதியாக செயலுறுவாக்கி மற்றவர்க்கும் உணர்த்தி, உருப்படியாய் வாழ்ந்து உயர்வுக்காண நம்மில் ஒவ்வொருவரும் முன் வருவோமாக.
நோன்பின் முழுமுதல் முக்கிய குறிக்கோள் மானுடத்தைப் புடம் போட்டத் தங்கமாய் மிளிரச் செய்ய வேண்டுமென்பதே மானுட வாழ்வு தக்வா என்ற உறுதியான – அடித்தளத்தில் மட்டுமே எழுப்பப்பட வேணடம். அதன் மூலம் முழு வாழ்விலும் தக்வாவை மட்டுமே மனிதன் பிரதிபலித்திட வேண்டும்.
“இத்தக்குல்லாஹ் ….” “இத்தக்குல்லாஹ்…” என்ற சொற்றொடர் ‘குத்பா’ மேடைகளில் மற்றும் சமய சந்தர்ப்பத்திற்கேற்ப பல்வேறு நேரங்களில் தேவைக்கேற்ப முழங்கப்படுகிறது. முழங்கியவர்களில் பெரும்பாலோராவது அதன் பொருளை முழுமையாக உணர்ந்திருப்பாரா? என்பதே ஐயத்திற்குரிய தென்றால் செவியேற்பவரின் நிலையைச் சொல்லவும் வேண்டுமா?
“இத்தக்குல்லாஹ்…” “-அல்லாஹ்வை அஞ்சுங்கள்;” “முத்தகீ” -” இயைறச்சமுடையோர்” போன்ற வார்த்தைகள் திருக்குர்ஆனில் பல்வேறு இடங்களில் கோடிட்டு காட்டப்படுவதன் மூலம் – தக்வாவின் முக்கியத்துவம் பல்வேறு கோணங்களில் மானிடத்திற்கு – குறிப்பாக, இஸ்லாமிய வாழ்க்கை நெறியைக் கொள்கையாலும், செயலாலும் தங்க் வாழ்வில் பிரதிபலிக்க விரும்பும் ஈமான் கொண்டோருக்கு உணர்த்தப்படுகிறது.
“தக்வாவை” உண்டாக்குவதே நோன்பின் இலட்சியமென்று அல்லாஹ்(ஜல்) எடுத்துக்காட்டுகிறான்.
“விசுவாசங் கொண்டவர்களே! உங்களுக்கு முன்னிருந்தவர் மீது நோன்பு விதியாக்கப்பட்டது பேர்று உங்கள் மீதும் நோன்பு கடமையயாக்கப்பட்டது. (அதனை நோற்பதன் மூலம்) நீங்கள் பயபக்தியுடையவர்களாக ஆகலாம். (அல்குர்ஆன் 2:18)
“லஅல்லகும் தத்தகூன் (அல்குர்ஆன் 2:18) என்ற சொற்றொடர் மூலம் இறையச்சம் வலியுறுத்தப்படுகிறது. நீங்கள் பயபக்தியுடையவர்கள் ஆகலாம்” என்பதே அதன்பொருள்.
ஆண்டு முழுவதும் அடியான் இறையச்சம் உடையோனாய் வாழ வேண்டுமென்பதற்காக – ஒரு மாதம் பயிற்சி பெற வேண்டுமென்பதே இறைவனின் திட்டம்.
ஆனால், நோன்பு நோற்பதன் மூலம் இறையச்சம்யுடையோனாய் வாழ வேண்டுமென்ற எண்ணத்(நிய்யத்)தயாவது ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோமா? இல்லையென்ற வேதனைதான் நம்முன் விடையாக விரியும்.
“தக்வா” வின் அடிப்படையில் வாழ்வு அமைந்தால்தான் “நஜாத்” (மேன்மை-ஈடேற்றம்) அடைய முடியும் என்பதையுணர்த்த இன்ஷா அல்லாஹ், அக்கட்டுரைத் தொடர்வழி -குர்ஆன், ஹதீஸ் ஆதார அடிப்படையில் தக்வாவின் பொருள் விளக்கம் ஆய்வு செய்யப்படுகிறது. முஸ்லிம்களனைவரும் ஊன்றிப்படித்து சிந்தித்து தக்வா உடையவர்களாய் வாழ முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
அரபியல்லாத வேறு மொழிகளில் தக்வா என்பதற்கு இதுதான் -அதன் நேரடி மொழி பெயர்ப்பென்று மட்டுப்படுத்தி- வரையறை செய்யவியலாத – விரிந்த பொருளையும் விள்கத்தையும், ஆழமான வாழ்க்கைத் தத்துவத்தையும் உள்ளடக்கிய ஒரு வார்த்தை தான் “தக்வா”.
இறையச்சம் என்ற தமிழ் மொழி பெயர்ப்பின் மூலம் இதன் உண்மைப் பொருனை முழுமையாக உணர்த்திட முடியாது. ஹதீது வழி வரும் விளக்கம் ஒன்றின் மூலம் இதன் உண்மைப் பொருளை ஓரளவாவது உணர முடியும்.
ஓர் தனிமையான, இனிய சூழ்நிலை அங்கு இருவரை தவிர வேறெவருமில்லை. வாலிய முறுக்கோடு போட்டி போடும் ஆடவனும், பெண்ணும், மணமாகாத அந்த வாலிபனைத் தகாத உறவின் மூலம் தன் காம இச்சையைத் தனித்தக் கொள்ள படுக்கைக்கழைக்கிறாள், மங்கையவள்
மறுக்கின்றான்……..அந்த வாலிபன்………(பொன்னான வாய்ப்பை பாழடித்த பேடி என்று இதையறிந்தால் இன்றைய உலகம் அவனை இகழும். என்றாலும், “ஏன் மறுத்தான் அந்த வாலிபன்…..?”
“இந்தத் தகாத உறவை இறைவன் தடுத்திருக்கிறான். ஆனால் இதிலிருந்து என்னை நான் தடுத்துக் கொள்கிறேன்….
அந்ம தகாத உறவின் மூலம் எத்தனை நன்மைகள், அனுகூலங்கள் ஏற்பட்டாலும், அது எனக்கும் தேவையில்லை. மாறாக அந்த தகாத உறவில் ஈடுபடாததற்காக எத்தனை இன்னல்கள் ஏற்படினும், அவை அத்தனையும் சந்திக்கவும் தயார்” என்ற உறுதியை ஒருவன் பெற்றுவிட்டால் – அவன்தான் தக்வாவிற்கு உண்மையான வாரிசு.
சொல்ல எளிதான, கேட்க இனிமையான, அருமையான வாழ்க்கைத் தத்துவந்தானிது……! இப்படிப்பட்ட கட்டுத் திட்டத்தோடு நடைமுறை வாழ்வில் மனிதன் ஒழுக முடியுமா…..?
நாகரீக உலகில் …அறிவியலின் உச்சத்தை எட்டிப்பிடித்துக் கொண்டிருக்கும் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அநாகரீக வாழ்க்கைக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு (அய்யாமுல் ஜாஹிலிய)அறியாமை காலத்திற்குள் தஞ்சமடைந்து கொண்டிருக்கும் நம்மில் பலர் இப்படி வினவுகின்றனர்.
ஆம் அப்படி மனிதன் வாழ்ந்து காட்ட முடியும் என்பதை இறைமறை தெளிவுறக் காட்டுகிறது… ( இன்ஷா அல்லாஹ் விரியும்.)

No comments:

Post a Comment