தலையங்கம்:http://www.dinamani.com/
First Published : 21 Feb
Last Updated : 21 Feb 2011 03:14:00 AM IST
கேரளத்தைச் சேர்ந்த ராய் வர்கீஸ் என்பவர் எதற்காக ராஜஸ்தான் போனார், அவர் ஏன் ஜெய்ப்பூர் சிறைச்சாலையில் இத்தனை ஆண்டுகளாக முறையான விசாரணை இல்லாமல் அடைபட்டுக் கிடந்தார் என்பதெல்லாம் புதிராக இருக்கின்றன. ஜெய்ப்பூர் சிறைச்சாலை ஆவணங்களின்படி அவரது பெயர் ஹிட்லர் பாபாகான் என்று காணப்படுகிறது. கைது செய்யப்பட்டபோது குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஏதாவது பெயர் தரப்பட வேண்டும் என்பதற்காகக் காவல்துறையில் வைக்கப்பட்ட கற்பனைப் பெயராகக்கூட இருக்கலாம் ஹிட்லர் பாபாகான் என்பது.
18 ஆண்டுகளும் நான்கு மாதங்களும் ராய் வர்கீஸ் என்கிற ஹிட்லர் பாபாகான் ஜெய்ப்பூர் சிறைச்சாலையில் ஒரு விசாரணைக் கைதியாகத் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுத் தனது வாழ்க்கையைக் கழித்திருக்கிறார். அவர் என்ன குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டிருக்கிறார் என்பதே கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்புதான் தெரிவிக்கப்பட்டது. அவர் மீது சுமத்தப்பட்டிருந்தது கொலைக்குற்றம். வேடிக்கை என்னவென்றால் அப்படி ஒரு கொலை நடந்தது பற்றியேகூட அவருக்குத் தெரியாது என்பதுதான்.
ராய் வர்கீஸ் எப்போது புத்தி சுவாதீனத்தை இழந்தார் என்று யாருக்குமே தெளிவாகத் தெரியவில்லை. சித்தப்பிரமையுடையவர்களை மனநோய் மருத்துவமனைக்குச் சிறைச்சாலை நிர்வாகம் அனுப்ப வேண்டும் என்பதுதான் விதி, சட்டம். ஆனால், ஹிட்லர் பாபாகான் என்கிற ராய் வர்கீஸ் பல ஆண்டுகளாக ஜெய்ப்பூர் மத்திய சிறைச்சாலையிலுள்ள தனிமைச் சிறையில்தான் அடைபட்டுக் கிடந்திருக்கிறார். தன்மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றம் என்ன என்பதுகூடத் தெரியாத நிலையிலுள்ள ஒருவரை ஏன், எதற்காக இப்படித் தனிமைச் சிறையில் அடைத்து, சித்திரவதை செய்தது சிறைச்சாலை நிர்வாகம் என்பதற்குப் பதில் கிடையாது.
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரிலுள்ள ஒரு கல்லூரியில் விரிவுரையாளராக உள்ள சகோதரி மரியோலா, ஜெய்ப்பூர் மத்திய சிறைச்சாலையில் கைதிகளுக்குப் போதனை செய்வதற்காகவும், மனசாந்திக்காகப் பிரார்த்தனை செய்வதற்காகவும் சென்றிருந்தபோது, ஹிட்லர் பாபாகான் பற்றிய தகவல்களைக் கேட்டறிந்திருக்கிறார். இந்த வழக்கைப் பற்றியும், ஒரு மனநோய் பாதிக்கப்பட்ட மனிதர் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அவலத்தைப் பற்றியும் வெளியுலகுக்குத் தெரிவித்தவர் சகோதரி மரியோலாதான்.
கடந்த ஜனவரி 25-ம் தேதி ஜெய்ப்பூர் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் ஹிட்லர் பாபாகான் என்கிற ராய் வர்கீஸýக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அதுவும் எப்படி? ரூ. 50,000-க்கு உத்தரவாதமும், அவரைப் பாதுகாப்பதாக வாக்குறுதியும் எழுதி வாங்கிய பிறகுதான் 18 ஆண்டுகளாகத் தனிமைச் சிறையில் தனது வாழ்க்கையைக் கழித்த ராய் வர்கீஸ் ஜெய்ப்பூர் மத்திய சிறைச்சாலையிலிருந்து அனுப்பப்பட்டார்.
இப்போது ராய் வர்கீஸ் கேரளத்திலுள்ள தனது சகோதரியின் பாதுகாப்பில் ஒரு மனநோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். 18 ஆண்டுகள் சிறைவாழ்வில் முழுமையாகப் பார்வையை இழந்துவிட்டிருக்கும் அந்த மனிதருக்குத் தன்னைப் பற்றியோ, தான் சிறையில் கழித்த நாள்களைப் பற்றியோ, இப்போது விடுதலையாகித் தனது சகோதரியுடன் இணைந்திருப்பது பற்றியோ எதுவுமே தெரியவில்லை என்பதுதான் கொடுமையிலும் கொடுமையான விஷயம்.
யார் ஹிட்லர் பாபாகான்? அவர் மீது சுமத்தப்பட்டிருக்கும் கொலை வழக்குதான் என்ன? இனிமேல் அதைப்பற்றி யாரும் கவலைப்படப் போவதில்லை. உண்மையான கொலைகாரன் தப்பிவிட்டான். அப்பாவி நிரபராதி ஒருவர் செய்யாத குற்றத்துக்காகத் தண்டனை அனுபவித்து இப்போது மனநோயாளியாக ஊருக்கு அனுப்பப்பட்டு விட்டார். இதுபோல மேலும் 82 விசாரணைக் கைதிகள் ஜெய்ப்பூர் மத்திய சிறைச்சாலையில் இருப்பதாகவும், அவர்களுக்கும், தான் உதவப் போவதாகவும் தெரிவித்திருக்கிறார் சகோதரி மரியோலா.
இது ஏதோ ஜெய்ப்பூர் மத்திய சிறைச்சாலையில் மட்டும்தான் நடக்கிறது என்று நினைக்காதீர்கள். இந்தியாவிலுள்ள ஒவ்வொரு சிறைச்சாலையிலும் ராய் வர்கீஸ் போன்ற ஆயிரக்கணக்கான அப்பாவிகள் முறையான விசாரணைக்கு ஆண்டுக்கணக்காகக் காத்திருந்து தங்களது வாழ்க்கையை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். சுமத்தப்பட்ட குற்றத்துக்கான அதிகபட்சத் தண்டனையில் பாதி நாள்களை சிறையில் கழித்திருந்தால், விசாரணைக் கைதியை சொந்த ஜாமீனில்விட வேண்டும் என்பது விதி. இந்திய சிறைச்சாலைகளில் உள்ள 80% கைதிகள் எழுதப்படிக்கத் தெரியாதவர்களும், கல்வியறிவு இல்லாதவர்களும் என்பதால், இப்படி ஒரு விதி இருப்பதே பல விசாரணைக் கைதிகளுக்குத் தெரியவே நியாயமில்லை.
இந்திய சிறைச்சாலைகளின் நிலைமையை எடுத்துக்கொண்டால், மனித உரிமை மீறலின் உச்சகட்டமே அதுவாகத்தான் இருக்கும். போக்குவரத்து நெரிசலைவிட மோசமான நெரிசல் இந்திய சிறைச்சாலைகளில்தான் காணப்படுகிறது. 2008 புள்ளிவிவரப்படி, இந்தியாவிலுள்ள மொத்தம் 1,356 சிறைச்சாலைகளில், 3,84,753 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தச் சிறைச்சாலைகளில் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச எண்ணிக்கை 2,97,777. ஏறத்தாழ 88 ஆயிரம் பேர் அதிகமாக அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
கைதிகள் எண்ணிக்கை அளவுக்கு அதிகமாக இருக்கின்றன என்பது ஒருபுறம். சிறைச்சாலை ஊழியர்களின் எண்ணிக்கை அனுமதிக்கப்பட்ட 68,920-க்குப் பதிலாக 49,250தான் காணப்படுகிறது என்கிறது தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகம்.
நீதிமன்றங்களின் நிலைமை அதைவிட மோசம். மூன்று கோடிக்கும் அதிகமான வழக்குகள் நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கின்றன. பத்து லட்சம் மக்கள்தொகைக்குக் குறைந்தது 50 நீதிபதிகள்கூட இல்லாத நிலைமையில் வழக்குகளை விரைந்து முடித்து, விசாரணைக் கைதிகளுக்கு இறுதித் தீர்ப்பு வழங்குவது எப்படி?
ராய் வர்கீஸýக்கு ஏற்பட்ட நிலைமை நம்மில் யாருக்கு வேண்டுமானாலும் நேரலாம். ஏதாவது வெளியூரில் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் சந்தேக வழக்கில் அழைத்துச் செல்லப்பட்டு ஏதாவது பெயரில் விசாரணைக் கைதியாக்கப்படலாம்.
இதைப் பற்றி மக்கள் மன்றம் கவலைப்பட மறுக்கிறதே, அதுதான் கவலையளிக்கிறது!
Wednesday, February 23, 2011
எனக்கு வந்த மடல்... உங்கள் நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்...!
புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி
விஜயகுமார் தனக்கு வழங்கப்பட்ட இலவச தொலைக்காட்சிப் பெட்டியை திருப்பிக்
கொடுத்து இலவசத் திட்டங்களுக்கு சாட்டையடி கொடுத்திருக்கிறார்.
கடந்த 23-ம் தேதி கொத்தமங்கலம் கிராமத்தில் புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க.
செயலாளர் பெரியண்ண அரசு தலைமையில் இலவச வண்ணத் தொலைக்காட்சி வழங்கும்
விழா நடந்து கொண்டிருந்தது.அப்போது பயனாளிகள் பட்டியலில் இருந்து
விஜயகுமார் என்ற பெயர் வாசிக்கப்பட்டதும்,கொத்தமங்கலம் மணவாளன் தெருவைச்
சேர்ந்த விஜயகுமார் என்ற விவசாயி மேடையேறினார்.
அவருக்கு வழங்கப்பட்ட தொலைக்காட்சிப் பெட்டியை வாங்கிக் கொண்டார்.ஒரு
விநாடி அங்கே நின்றவர்,டி.வி.யை பெரியண்ண அரசுவிடமே திருப்பிக்
கொடுத்துவிட்டு,கூடவே ஒரு மனுவையும் கொடுத்தார்.ஏதோ கோரிக்கை மனு
கொடுக்கிறார் என்று அரசுவும் சாதாரணமாக வாங்கிப் படித்தார்.
அதில் ‘மனிதனுக்கு டி.வி. என்பது பொழுதுபோக்கு சாதனம்தான். ஆனால் அதைவிட
முக்கியமானது உணவு, உடை, உறைவிடம். தமிழகத்தில் மொத்தம் 88 துறைகள்
இருக்கின்றன. இவை தன்னிறைவு அடைந்து விட்டனவா? குறிப்பாக, விவசாயிகளைப்
பாதிக்கும் மின்சாரத்துறை தன்னிறைவு அடைந்து விட்டதா?
துறைகள் எல்லாம் தன்னிறைவு அடைந்த பிறகு மிதமிஞ்சிய பணத்தில் இந்த
டி.வி.யை வழங்கியிருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். இதற்கு மட்டும்
எங்கிருந்து நிதி வந்தது?இந்தியாவின் முதுகெலும்பான விவசாயிகள்
தமிழகத்தில் அதிகம் வசிக்கிறார்கள். டி.வி. வழங்கும் பணத்தை வைத்து
விவசாயிகளுக்குத் தேவையான மின்சாரத்தைக் கொடுத்திருக்கலாம்.
தமிழகத்திலேயே மிகவும் பின்தங்கிய மாவட்டத்தைக் கண்டறிந்து போதுமான
மின்சாரத்தை தடையின்றிக் கொடுத்து அந்த ஒரு மாவட்டத்தையாவது தன்னிறைவு
அடையச் செய்திருக்கலாம். இலவசம் என்பது எங்களுக்கு வேண்டாம். தரமான
மருத்துவம், கல்வி, மும்முனை மின்சாரம் மற்றும் வேலை வாய்ப்புகளை
வழங்கினாலே போதும்.
அதை வைத்து நாங்களே சம்பாதித்து டி.வி.முதல் கார் வரை அனைத்தையும்
வாங்கிக் கொள்வோம். எங்களுக்கு என்ன தேவையோ அதை நாங்களே பூர்த்தி செய்து
தன்னிறைவு அடைந்து விடுவோம்.
விலைவாசி உயர்வு, எரிபொருள் விலை உயர்வு, குடிநீர் பற்றாக்குறை, லஞ்சம்,
ஊழல் என்று ஆயிரக்கணக்கான குறைகள் இருக்கும்போது ஒரு நடமாடும் பிணமாக
நான் எப்படி டி.வி. பார்க்க முடியும்? எனவே எனக்கு இந்த டி.வி. வேண்டாம்.
முதல்வர் கருணாநிதி மீது எனக்கு மிகுந்த மதிப்பும், மரியாதையும், அன்பும்
உள்ளது.
எனவே,இந்த டி.வி.யை அவருக்கே அன்பளிப்பாகக் கொடுக்க இந்த சந்தர்ப்பத்தைப்
பயன்படுத்திக் கொள்கிறேன்.அவர் இதை ஏற்றுக் கொள்ளாவிட்டால் என் மனம்
மேலும் வேதனைப்படும். அரசு மற்றும் அதிகாரிகள் தங்கள் கடமைகளை சரியாகச்
செய்தாலே போதும். இந்தியா வல்லரசாகிவிடும்’ என்று நீண்டது அந்த மனு.
இதைப் படித்த பெரியண்ண அரசு முகத்தில் ஈயாடவில்லை.அருகில் இருந்த
அதிகாரிகள் அதிர்ந்து போனார்கள். என்றாலும் அந்த மனுவையும் டி.வி.யையும்
வாங்கி வைத்துக் கொண்டு மேலும் பரபரப்பை உண்டாக்காமல் விஜயகுமாரை அனுப்பி
வைத்தார் அரசு.
இதன் பின்னர் விஜயகுமாரிடம் பேசினோம்.
“நான் ஒரு சாதாரண விவசாயி. விவசாயிகள் எல்லாம் மின்வெட்டால்
பாதிக்கப்பட்டு விளைநிலத்தை ரியல் எஸ்டேட்காரன்கிட்ட வித்துட்டு நகரத்துல
போய் கூலி வேலைக்கும்,ஹோட்டல் வேலைக்கும் அல்லாடிக்கிட்டிருக்கான்.
இந்த நிலை, நாளைக்கு எனக்கும் என் பிள்ளைகளுக்கும் வரப் போகிறது.
எதிர்காலத்தை நினைத்து மனம் கலங்கிப் போய் இருக்கிறது. ராத்திரியில
படுத்தால் தூக்கம் வர மாட்டேங்குது.
சாராயத்தை குடிச்சுட்டு, ஒரு ரூபாய் அரிசியை தின்னுட்டு உழைக்கும்
வர்க்கம் சோம்பேறியாகிக்கிட்டிருக்கு.ரொம்ப சீப்பா கணக்குப் போட்டாலும்
ஒரு டி.வி. ஆயிரம் ரூபாய்னு வச்சிக்குங்க. தமிழ்நாட்டில் ரெண்டு கோடி
குடும்ப அட்டைகள் இருக்கு.2கோடி குடும்ப அட்டைக்கும் டி.வி. கொடுத்தால்
இருபது லட்சம் கோடி செலவாகும்.இதை வைத்து 88 துறைகளையும் தன்னிறைவு
அடையச் செய்தாலே போதுமே.
கனத்த இதயத்தோடும், வாடிய வயிறோடும் இருக்குறவனுக்கு எதுக்கு டி.வி.?
அவன் பொழப்பே சிரிப்பா சிரிக்கும்போது அவன் டி.வி. பாத்து வேற
சிரிக்கணுமாக்கும்.அதுனாலதான் நான் டி.வி.யை திருப்பிக் கொடுத்தேன்’’
என்றார்.
டி.வி.யை திருப்பிக் கொடுத்த கையோடு முதல்வர் கருணாநிதிக்கு கடிதம்
ஒன்றையும் எழுதியிருக்கிறார் விஜயகுமார்.
அந்தக் கடிதத்தில் ‘கொத்தமங்கலத்துக்கு வந்த டி.வி.க்கள் 2519. அதில்
2518 மட்டும்தான் வழங்கப்பட வேண்டும். எனக்கான ஒரு டி.வி.யை எனது அன்புப்
பரிசாக நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்’என்று குறிப்பிட்டு அதை ஃபேக்ஸ்
செய்துள்ளார்.
மக்களிடம் இருந்து சுரண்டப்படும் பணத்தில் மக்களுக்கே கொடுக்கப்படும்
லஞ்சம் தான் இலவசங்கள் என்பதை விவசாயி விஜயகுமார் பொட்டில் அடித்தாற்போல்
தெளிவுபடுத்தியுள்ளார். மக்களை சோம்பேறிகளாக்கும் இலவசத்துக்கு எதிராக
போர் தொடுத்திருக்கும் அவரை பாராட்டத்தான் வார்த்தைகளே கிடைக்கவில்ல
--
வளமுடன் வாழ வாழ்த்தும்
என்றும் அன்புடன்,
பத்மநாபன்.பா.

பெட்ரோல், டீசல் விலை குறைக்க மாநில அரசு முடிவு !
பெட்ரோல், டீசல் விலை குறைக்க மாநில அரசு முடிவு
தினமலர்
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 22,2011,23:24 IST
மாற்றம் செய்த நாள் : பிப்ரவரி 23,2011,01:34 IST
தமிழகத்தில் நடக்க உள்ள சட்டசபை தேர்தலையொட்டி, பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதற்கான முயற்சி நடந்து வருகிறது.
இந்தியாவில், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எண்ணெய் வகைகளுக்கு, விற்பனை வரியை அந்தந்த மாநிலங்களே நிர்ணயிக்கின்றன. மகாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் தான், பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றிற்கு அதிகளவு விற்பனை வரி வசூலிக்கப்படுகிறது. ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு, தமிழக அரசு, விற்பனை வரியாக, 30 சதவீதமும், டீசலுக்கு, 21.43 சதவீதமும் விதிக்கிறது. இதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.18ம், டீசலுக்கு ரூ.8ம் விற்பனை வரியாக வசூலிக்கப்படுகிறது. இந்த வரியை பெட்ரோலுக்கு, 20 சதவீதமாகவும், டீசலுக்கு, 11.43 சதவீதமாகவும் குறைக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது, தமிழக அரசு, விற்பனை வரியை குறைத்தால், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ஆறு ரூபாய் வரை குறையும்; டீசல், ஒரு லிட்டருக்கு நான்கு ரூபாய் வரை குறையும்.இது தொடர்பாக எண்ணெய் நிறுவனங்களிடமும், விற்பனைவரித்துறை அதிகாரிகளிடமும் தமிழக அரசு பேசி வருகிறது என, தமிழக பெட்ரோல், டீசல் பங்க் உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன், இந்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிடலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
- நமது சிறப்பு நிருபர் -

பெற்றோர்களே மனம் திறந்து பேசுங்களேன்
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
அஸ்ஸலாமு அலைக்கும்,
அன்பானவர்களே, கடந்த சில நாட்களாக மாணவிகள் தற்கொலை என்ற செய்தி அன்றாடம் தொலைக்காட்சியில் காணமுடிந்தது. அன்மையில் பள்ளி ஆசிரியர் கண்டித்ததால் சென்னையை சேர்ந்த மாணவி ஒருவரும், கும்பகோணத்தில் பள்ளி தலைமையாசிரியர் திருட்டு விசாரனை என்று ஒரு மாணவியை கண்டித்து தண்டித்ததால், தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர், இந்த மாணவிகள் மன உளச்சலுக்குள்ளாகி தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள் என்பது மிக வேதனையான செய்தியே.
பெற்றோர்களே பள்ளிக்கு செல்லும் தங்களின் பிள்ளைகளிடம் இது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பள்ளியில் ஆசிரியர்கள் விதிமுறைக்கு உட்பட்டு கண்டிப்பது சகஜமே என்றாலும் பள்ளியிலிருந்து வீட்டுக்கு வரும் தம் பிள்ளைகளை தங்களின் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும். அவர்களின் stress levelயை கண்டறியவேண்டும்.
மாணவிகள் தற்கொலை என்ற செய்தி, மக்களிடையே அந்த மாணவிகளுக்கு அனுதாபங்கள் ஏற்படுத்தி வருகிறது என்பது உண்மை. ஆசிரியர்களின் கண்டிப்புகளால் சிறிதளவு பாதிக்கப்பட்ட உங்கள் பிள்ளைகளின் மனதில் இது போன்ற செய்திகள் ஏதாவது ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புகள் அதிகம்.
பெற்றோர்கள் மனம்திறந்து தங்களின் பிள்ளைகளிடம் நண்பர்கள் போல் பழகி பேசவேண்டும். அப்போது தான் அவர்கள் தங்களுக்கு ஏற்படும் கஷ்டங்களை நம்மிடம் பகிர்ந்துக்கொண்டு மன அழுத்தத்திலிருந்து விடுபட முடியும். உங்களின் ஹிட்லர் அராஜகத்தை உங்கள் பிள்ளைகளிடம் காட்டி அவர்களிடையே மன உலைசலை ஏற்படுத்தி அவர்களின் மனதை சிதைத்துவிட நீங்களும் காரணமாகிவிடாதீர்கள்.
ஆசிரியர்கள் மாணவ மாணவிகளை விதிமுறைபடி கண்டிப்பது சகஜமே, விதியைமீறி தண்டிக்கும் ஆசிரியர்களை கண்டறிந்து பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் நிச்சயம் புகார் கொடுக்கவேண்டும். தவறுகள் செய்வது மனித இயல்பு, அப்படியே மாணவர்கள் பள்ளிகளில் தவறு செய்தால் அந்த தவறை மீண்டும் செய்யாமல் இருப்பதற்கு கடினமான தண்டனையோ அல்லது கடினமாக கண்டிப்பதோ வழியல்ல, செய்தது தவறு என்பதை அம்மாணவர்களுக்கும் பக்குவமாக புரியவைக்கும் பொறுப்பு ஒவ்வொரு ஆசிரியருக்கும் உள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆசிரியர்களும் பள்ளியில் உள்ள மாணவ மாணவிகள் தங்களிடம் இருக்கும் நேரம் முழுவது அவர்கள் தங்களின் பிள்ளைகள் என்பதை மனதில் வைத்துக் கொள்ளவேண்டும் என்று நாம் ஆசிரியர்களுக்கு சொல்லித்தர வேண்டியதில்லை.
பெற்றோர்களே, நீங்கள் பெற்ற பிள்ளைகளிடம் மனவிட்டு பேசுவதில் என்ன தவறு உள்ளது? பள்ளிக்கு செல்லும் பிள்ளைகள் எவ்வகையான பிரச்சினைகள் சந்திக்கிறார்கள் என்பதை அறிந்து அதற்கான தீர்வுகளை கண்டறிந்து, மன உளச்சல் இல்லாத நிம்மதியான சூழலை படிக்கு நம் பிள்ளைகளுக்கு பெற்றோர்களான நம் எல்லோரின் கடமை. கல்வியிலும், சமூகத்தில் உயர்ந்தவர்களாக உருவாக்க வேண்டுமானால் பெற்றோர்களே மனம் திறந்து பேசுங்களேன் உங்கள் பிள்ளைகளிடம்.
இஸ்லாமிய மார்க்க சிந்தனை நிறைந்த அதிரைப்போன்ற ஊர்களில் தற்கொலை என்ற செய்திகள் அறவே இல்லை என்றாலும், இந்த சனியன் புடிச்ச டிவீ மெகா சீரழிக்கும் சீரியல்களின் காட்சிகள், இது போன்ற நிகழ்வுகளுக்கு காரணமாக இருக்கிறது என்பதற்கு யாருக்கும் மாற்று கருத்து இருக்காது என்றே நம்புவோம். காலம் போகிற போக்கில் இது போன்ற தற்கொலை நிகழ்வுகள் எங்கு வேண்டுமானாலும் நிகழலாம், இதற்காக நாம் எச்சரிக்கையாக இருப்பது மிக அவசியமே. அல்லாஹ் நம்மையும், நம் பிள்ளைகளையும் பாதுகாப்பானாக.
அதிரைநிருபர் குழு | Monday, February 14, 2011 | http://adirainirubar.blogspot.com

Tuesday, February 22, 2011
எத்தனை சீட் முஸ்லிம்களுக்கு?.
இழிச்சவாயர்களா தமிழக முஸ்லிம்கள்!
8
அரசியல் வாதிகளின் பிரித்தாளும் சூழ்ச்சியின் காரணமாக இன்றைய முஸ்லிம்கள் முற்றிலும் வலு விழந்தவர்களாக ஆக்கப் பட்டிருக்கின்றார்கள். இது போதாதென்று முஸ்லிம்களின் இயக்கங்களும், வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போன்று தங்களின் பங்கிற்கு பிளவுபட்ட முஸ்லிம்களை, மேலும் சிறு சிறு குழுக்களாக பிரித்தாண்டு இந்த சமுதாயத்திற்கு நன்மை செய்வதாக நினைத்துக்கொண்டு, நம்மை முடமாக்க எத்தனிக்கின்றனர். முஸ்லிம்களின் அரசியல் கட்சிகளும், இயக்கங்களும், ஜமாத்களும் நம்மை வழி நடத்திய காலம் போய், இன்று நாம் அவைகளை வழிநடத்த அல்லது ஒற்றுமையுடன் இருக்க ஆலோசனை கூறும் நிலைக்கு தமிழக முஸ்லிம்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஆனால் இதற்கெல்லாம் மாற்றமாக கேரள மாநிலத்தில் முஸ்லிம்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவதால், தேர்தல் நேரங்களில் மற்ற அரசியல் கட்சிகள் முஸ்லிம்களைத் தேடி ஓடிவருகின்றன.
எந்த ஒரு கட்சியும் முஸ்லிம்களுக்கு அவர்களுக்குரிய உரிமைகளை வழங்கிட எந்த முயற்சியையும் மேற்கொண்டதில்லை, வழங்கப் போவதுமில்லை என்பதே உண்மை!. ஏனெனில் இருக்கும் சீட்டுக்களையும், பதவிகளையும் அக்கட்சிகள் தங்களின் குடும்பத்திற்கு ஒதுக்கினாலே தமிழகத்திற்கு இன்னும் 234 தொகுதிக்குமேல் தேவைப்படும். எப்படி முஸ்லிம் சமுதாயம் தங்களுக்கான ஜக்காத்தினை சரியாக கணக்கிட்டு ஏழைகளுக்கு வழங்காமல், 5,10 ரூபாய்கள் என்று தர்மத்தினை, ஜக்காத் என்று வழாங்குகின்றார்களோ, அதே பார்முலாவைத்தான் இந்த அரசியல் கட்சிகள் முஸ்லிம்களின் எண்ணிக்கைக்கு தகுந்தாற்போல் இடம் அளிக்காமல், பிச்சை போடுவதுபோல் ஒன்று இரண்டு என்று வழங்குகின்றார்கள்!. இவைகள் அத்தனையும் நன்கு அறிந்திருந்தும் இந்த ஜமாஅத்களும், இயக்கங்களும் இன்னும் இந்த அரசியல் கட்சிகளின் அடிமைத்தனத்தை ஆதரிப்பதுதான் வினோதம்!.
காரைக்குடியில் செட்டியார்கள் தொகுதியில் தேவரை நிறுத்த முடியவில்லை!. மயிலாப்பூரில், அய்யர்களின் தொகுதியில் வன்னியரை நிறுத்த முடியவில்லை!. தேவர்கள் அதிகமிருக்கும் தொகுதிகளில் ஒரு தாழ்த்தப்பட்டவரை நிறுத்தினால் கலவரம் வெடிக்கின்றது. ஆனால் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளில் வன்னியர், தேவர், செட்டியார், தாழ்த்தப்பட்டோர், பிராமணர் என்று யார் வேண்டுமானாலும் நிற்கலாம்!. எந்த அரசியல் கட்சியாவது அக்ரஹாரத்தில் அப்துல்காதரை நிறுத்தி ஜெயித்து காட்ட முடியுமா?. ஆனால் அதிரையில், மேலப்பாளையத்தில், கீழக்கரையில், சேப்பாக்கத்தில் அய்யரை, அந்தோணியை நிறுத்தி சட்டமன்ற உறுப்பினராக்க முடியும்!. தாழ்த்தப்பட்டவர்கள் அதிகமிருக்கும் தொகுதிகள் மட்டுமல்லாமல், முஸ்லிம்கள் அதிகமிருக்கும் தொகுதிகள் கூட ரிசர்வ் தொகுதிகளாக்கி அங்கும் வஞ்சிக்கப்படுகின்றது. முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளை, பெண்களுக்கான தொகுதியாக்கப்பட்டு அங்கும் முஸ்லிம் வேட்பாளர்கள் நிற்க முடியாமல் சூழ்ச்சி செய்யப்படுகின்றது.
இவர்கள் தேர்தல் பிரச்சாரத்தின்போது தலையில் குல்லாவை போட்டுக்கொண்டு பள்ளிவாசலில் அஸ்ஸலாமு அலைக்கும் பாய், என்ற வார்த்தைகளை கூறி ஒட்டுக் கேட்டுவிட்டால் போதும்!. அல்லது நான் அம்மணமாக இருந்தாலும் பிறைகொடியுடன் ஊர் ஊராய் திறிந்தேன்!. காயிதேமில்லத் என் அரசியல் வழிகாட்டி!. மீலாதுநபிக்கு விடுமுறை விட்டோம்! என்ற டயலாக் வந்தாலும் போதும்!. உடனே அத்தணை முஸ்லிம்களுக்கும் உச்சி குளிர்ந்து, (கட்டிய வேட்டி அவிழ்ந்து விழுந்தாலும் தெரியாது!) மறக்காமல் இந்த வேட்பாளருக்கு, கட்சிக்கு ஓட்டு போட்டுவிடுவோம்!. யார் கேட்டார்கள் மீலாது நபிக்கு விடுமுறை?. வேண்டுமென்றால் மீலாது நபி விடுமுறையை ரத்துசெய்துவிட்டு 20 தொகுதியை இந்த சட்டமன்ற தேர்தலில் முஸ்லிம்களுக்கு ஒதுக்குங்கள். அரசியல் வாழ்வில் மீலாது இருக்கும் இவர்கள் இதன்மூலம் மீண்டு விடுவார்கள்!.
முஸ்லிம்லீக் கட்சிக்கு ஒன்று இரண்டு தொகுதிகள் வழங்கப்படுகின்றது. அது இரண்டாக பிளவு பட்டால் ஆளுக்கு ஒன்றோ அல்லது இரண்டோ வழங்கப்படுகின்றது. தற்போது ம.ம.க என்ற கட்சி உருவாகி அதற்கும் இரண்டு என்று வழங்கப்படுகின்றது. இதன் மூலம் அயோக்கிய அரசியல் கட்சிகள், நீங்கள் சிதறுண்டு வாருங்கள் ஆளுக்கு இரண்டு என்று உங்களின் எண்ணிக்கையை நாங்கள் அதிகரிக்கின்றோம் என்று சொல்ல வருகின்றார்கள்.அதுமட்டுமில்லை!. இவ்வாறு வழங்கப்படும் தொகுதிகளில் கூட வேண்டுமென்றே, இந்த இரண்டு முஸ்லிம் கட்சிகளையும் ஒரே தொகுதிகளை ஒதுக்கி இவர்களை மோதவிடுவார்கள்!.
இதன் மூலம் இருவரில் ஒருவரை சட்டமன்றத்தில் நுழையவிடாமல் செய்துவிடவும் சூழ்ச்சி செய்யப்படுகின்றது. எனவே இந்த தேர்தலில் அவ்வாறு ஒதுக்கப்பட்டால் இரண்டு கட்சிகளும் நேருக்கு நேர் போட்டியிடாமல் வேறு வேறு தொகுதிகளை கேட்டு பெறவேண்டும். ஒரே தொகுதியில் போட்டியிட சம்மதித்தால் அதைவிட துரோகம் வேறு இல்லை!. இந்த முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் முஸ்லிம்களின் பிரதிநிதிகளாக மொத்தமாக ஓரு கட்சியிடம் பேரம்பேசி 20 முதல் 30 தொகுதிகள் என்று வாங்கி ஏன் அதை தங்களுக்குள் பகிர்ந்து கொள்ளக்கூடாது?.
தமிழ்நாட்டில் இருக்கும் இஸ்லாமிய அரசியல் அமைப்புகள், பிற அரசியல் கட்சிகளிடம் ஒன்றிரண்டு தொகுதிகளை பெற்றுக்கொள்கின்றன. இதை அரசியல் கட்சிகளும் முஸ்லிம்களுக்கு ஏதோ ஒரு நல்ல காரியம் செய்துவிட்டதைப் போன்றதொரு தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. முஸ்லிம்கள் நிறுத்தப்பட்டால் மாத்திரமே இத்தொகுதிகளில் வெற்றிபெற முடியும் என்கிற காரணத்தால் வழங்கப்பட்டதே தவிர, வேறு காரணம் இல்லை. இங்கு முஸ்லிம்களை தவிர வேறு இனத்தவரை நிறுத்தினால் வெற்றிபெற முடியாது என்ற நிலையில் உள்ள தொகுதிகளேயாகும். இதே நிலையைத்தான் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் மற்ற எல்லா தொகுதிகளுக்கும் ஏற்படுத்தப்பட வேண்டும். முஸ்லிம்களின் வாக்கு வங்கிகள் அதிகமாக இருக்கின்ற தொகுதிகளில், எல்லா அரசியில் கட்சிகளும் முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தும் நிலையைதான் முதலில் நாம் ஏற்படுத்த வேண்டும்.
முஸ்லிமை நிறுத்தினால் ஓட்டு!. இல்லை என்றால் சுயேட்சையாக ஒரு முஸ்லிமை நிறுத்தி, மொத்த ஜமாத்தும் இயக்கங்களும் அவருக்கு ஆதரவளித்து முஸ்லிம்களின் வாக்கு வங்கியை நிருபித்து, அடுத்த தேர்தலில் இந்த கேடுகெட்ட அரசியல் கட்சிகளுக்கு நம் பலத்தை புரியவைக்க வேண்டும், இனி இந்த தொகுதியில் முஸ்லிமை நிறுத்தினால் மட்டுமே இங்கு வெற்றி பெறமுடியும் என்று பாடம் கற்பிக்க வேண்டும். இதை தவிர இனி முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்களை அதிகரிக்க செய்யவே முடியாது!.
ஏனெனில் எல்லா அரசியல் கட்சியும் இரண்டு சீட் என்ற கோட்பாட்டில் இருந்து வெளிவர மாட்டார்கள். எனவே இனி அவர்கள் கட்சியில் முஸ்லிம்களின் சட்டமன்ற உறுப்பினரை அதிகரித்து அதன் மூலம் மட்டுமே சட்டமன்றத்தில் முஸ்லிம்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியுமே தவிர, நீங்கள் சிதறுண்டு கிடப்பதால், இனி இன்னும் பத்து சட்டமன்ற தேர்தல் வந்தாலும் முஸ்லிம் இயக்கங்களுக்கு அதிக எண்ணிக்கையிலான சட்டமன்ற தொகுதிகளை கேட்டுப்பெரும் வலிமை வர வாய்ப்பேயில்லை!.
முஸ்லிம் விரோத கட்சியை தவிர்த்து, மாற்று அரசியல் கட்சியைச் சார்ந்தவராக இருந்தாலும் பரவாயில்லை, அவர் முஸ்லிம் என்கிற காரணத்தால் வேட்பாளருக்கு நம் வாக்குகளை அளித்து வெற்றிபெறச் செய்யவேண்டும். சட்டமன்றமோ, நாடாளுமன்றமோ செல்லும் முஸ்லிம் உறுப்பினர்கள், முஸ்லிம்களுக்கு ஒரு கஷ்டமான சூழ்நிலை என்றால் தாம் சார்ந்திருக்கும் கட்சியிலிருந்து வெளியேற்றப்படுவோமோ என்கின்ற காரணத்தால், முஸ்லிம்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பமுடியாத சூழ்நிலை உள்ளதையும் நாம் மறுக்க முடியாது!. சமுதாய பிரச்சனைகளை அவைகளில் பேசாத, பிரதிநிதிகள் இருப்பதும் இல்லாமலிருப்பதும் ஒன்றே என்றும் நாம் வாதிடலாம். இப்படியே வாதிட்டு வாதிட்டு இருந்ததை நாம் இழந்தோமே தவிர எண்ணிக்கையை அதிகரிக்க எந்த முயற்சியையும் நாம் செய்யவில்லை!.
சமீபத்தில் கூட த.த.ஜ இட ஒதுக்கீடு தொடர்பாக, காங்கிரசின் ஹாரூன் எம்.பி யை பிரதமர், மற்றும் சோனியா வரை சந்திக்க பயன்படுத்தியதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும். இன்ஷாஅல்லாஹ் இதுபோல் மற்ற உறுப்பினர்களையும் இதுபோன்று பயன்படுத்திக் கொண்டோமேயானால் ஓரளவிற்கு நம் பிரச்சனைகளை உயர்மட்ட அளவில் கொண்டு செல்லமுடியும். சமுதாய நலனை எடுத்து செல்லும் உறுப்பினர்களை மட்டும், தாங்கள் சார்ந்த கட்சியில் சீட்டு மறுக்கப்படும் போது அவரை தனியாகவே நிறுத்தி முஸ்லிம்கள் அவரை வெற்றிபெற செய்ய வைக்கவேண்டும். கட்சி கைவிட்டாலும் சமுதாயம் கைவிடாது என்ற எண்ணத்தினை அவர்கள் பெற வேண்டும்.
முஸ்லிம்கள் வேட்பாளராக நிறுத்தப்பட்டால், நிச்சயம் வெற்றிபெற முடியும் போன்ற தொகுதிகளில் முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றுகூடி ஒரு பொது வேட்பாளரை ஏன் நிறுத்தக்கூடாது? கண்டன ஊர்வலங்களும், நாம் நடத்தும் கோரிக்கைப் பேரணிகளும் ஊர்வலங்களும் செவிடன் காதில் ஊதிய சங்காகதான் இருக்கும். அல்லது ஓரளவிற்கே அது பலனை தரும். ஆனால் முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்களை அதிகரிக்க செய்து அவர்கள் மூலம் நம் கோரிக்கையை இந்த மன்றங்கள் மூலம் தீர்மானமாக கொண்டுவரும்போது மட்டுமே வலிமை மிக அதிகம் என்பதையும் நாம் மறக்ககூடாது.
இந்திய முஸ்லிம்களை ஒன்றிணைத்து வழிநடத்திச் செல்ல முன்னுதாரணமாக தமிழகம் வழி காட்டட்டும். இந்தியாவிலேயே, ஏன் உலகத்திலேயே இல்லாத வகையில் தமிழகத்தில் மட்டும்தான் முஸ்லிம்களிடையே எண்ணற்ற பிரிவுகளும், தேவையில்லா அமைப்புகளும் உள்ளன. இதன் காரணத்தால் முஸ்லிம்களின் ஓட்டு வங்கி உடைந்து, வலுவிழந்து நிற்கிறது. இன்ஷா அல்லாஹ் இந்த இஸ்லாமிய சமுதாயத்தின் நலன் நாடும் அனைவரும் ஒன்றிணைந்து தமிழகத்தின் இஸ்லாமியர்கள் அனைவரையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வருவது காலத்தின் கட்டாயமும் அவசியமுமாகும்.
பழைய மக்கள்தொகை கணக்கின்படி, தமிழகத்தில் முஸ்லிம்களின் மக்கள்தொகையானது, மொத்த தமிழக மக்கள் தொகையில் 6% என அரசு பதிவேடு கூறுகிறது. அதாவது 6.5 கோடி மக்கள் தொகையில் 6% முஸ்லிம்களின் எண்ணிக்கை 39 இலட்சம். இதில் ஓட்டுரிமை உள்ள முஸ்லிம்கள் மட்டுமே 40% சட்டசபை இடங்களை வெற்றி தோல்வியை நிர்ணயிக்குமெனில், தமிழகத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் சுமார் 90 முதல் 95 தொகுதிகள் முஸ்லிம்களின் வாக்குகளின் மூலம் வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்யும் தொகுதிகளாகும்.
1965ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தொகுதி சீரமைப்பின் போது முஸ்லிம்கள் அதிகம் வாழும் அதிராம்பட்டினம் தொகுதி பட்டுக்கோட்டையுடன் இணைக்கப்பட்டது. அன்றுமுதல் இன்றுவரை அதிரை மீண்டும் தனி சட்டமன்ற தொகுதியாக்கபடவில்லை. 1967ஆம் ஆண்டு முதல் பட்டுக்கோட்டை தொகுதியிலேயே 60 ஆயிரம்பேர்களை முஸ்லிம்களாக கொண்ட அதிராம்பட்டினம் இருந்து வருகிறது. ஆனால் இன்றுவரை ஒரு முஸ்லிம் இங்கே சட்டமன்ற உறுப்பினராகவில்லை.
1967,1971 வெற்றி பெற்றவர்: ஏ.ஆர்.மாரிமுத்து (பிரஜா சோசலிஸ்ட் பார்ட்டி சார்பில்) 1977 ஏ.ஆர்.மாரிமுத்து (காங்கிரஸ் சார்பில்)
1980 எஸ்.டி.சோமசுந்தரம் (அ.தி.மு.க) 1984 பி.என்.இராமச்சந்திரன் (அ.தி.மு.க)
1989 கா.அண்ணாதுரை (தி.மு.க.) 1991 கே.பாலசுப்ரமணியம் (அ.தி.மு.க)
1996 பி.பாலசுப்ரமணியன் (தி.மு.க)
2001 என்.ஆர்.ரெங்கராஜன் (த.மா.க சார்பில்) 2006 என்.ஆர்ரெங்கராஜன் (காங்கிரஸ் சார்பில்)
அதிரையில் இருந்து இந்த கட்சிகளின் சார்பில் போட்டியிட. ஒரு முஸ்லிமிற்கு கூட சீட் கிடைக்காதது ஏன்?. இதே நிலைதான் தமிழகமெங்கும் உள்ளது.
சட்டசபை தொகுதிகளில் உள்ள முஸ்லிம் வாக்காளர்கள் ஒருங்கிணைந்து தமது வாக்குகளையும் முஸ்லிம் வேட்பாளர்களுக்கே அளிப்பார்கள் எனில், தமிழக சட்டசபையில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் முஸ்லிம்களே என்கிற நிலை ஏற்படும். தேர்தல் காலங்களில் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு முஸ்லிம்கள் வாக்களிக்க வேண்டும் என்ற நிலையை மாற்றி முஸ்லிம்கள், முஸ்லிம் வேட்பாளருக்கே வாக்களிக்கவேண்டும் என்ற நிலையை தற்போது ஏற்படுத்தினால் மட்டுமே சட்டமன்றத்தில் முஸ்லிம்களின் பிரதிநித்துவத்தினை அதிகரிக்க முடியும். பின் இந்த முஸ்லிம் சட்டமன்ற உறுபினர்களை சமுதாய இயக்கங்கள் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற பயன்படுத்திக்கொள்வது மட்டுமே தற்போதுள்ள சூழ்நிலைக்கு தீர்வாகலாம்.
-- அதிரை முஜீப்
நன்றி: http://adiraimujeeb.blogspot.com/2011/02/blog-post_19.html
அதிரைநிருபர் குழு | Sunday, February 20, 2011 | அதிரை முஜீப் , அரசியல் , தேர்தல் , முஸ்லீம்கள்

மன ஊனமில்லா மணமகன் தேவை ?
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
‘’பெண்களுக்கு அவர்களின் மணக்கொடைகளை கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள்!’’ (அல்குர்ஆன் : 4:4)
வல்ல அல்லாஹ் மணமகளுக்கு
மஹர் கொடுத்து மணமுடி என்று சொல்ல
நீ கொடுக்க வேண்டிய மஹரை
பெண்ணான என்னிடம் கேட்க
நீ கேட்ட மஹரை கொடுக்க
என் தந்தையோ இன்னும் பாலை வெயிலில்
தன் அனைத்து சுகங்களையும் இழந்து!
என்னைப் பார்க்க வந்த
உன் தாயும், உன் சகோதரியும்
பெண்ணுக்கு என்ன கொடுப்பீர்கள்
என்றவுடன் என் தாயோ நடுக்கத்துடன்
வெளிறிய பார்வையுடன் என்னை பார்த்து
எங்களால் ஆனதை கொடுப்போம் என்கிறார்
நீங்கள் தெளிவாக சொன்னால்தான்
அடுத்த பேச்சுகளை தொடங்குவோம்!
உன்தாயின் பட்டியல் தொடங்கியது
லட்சத்துடன் - பால்குடம், தயிர்குடம்
பிறை அனைத்தையும் கணக்கு எடுத்து
ஒரு வருட விதவிதமான சீர், நகை பின்
எத்தனை பேருக்கு சாப்பாடு தருவிய
எத்தனை பேருக்கு பசியாற தருவிய!
(சாப்பாட்டையே பார்க்காத மாதிரி)
மனை உள்ளது வீட்டை
கட்டி கொடுத்து விடுங்கள்!
(தற்பொழுது குடிசைதான் வீடாம்)
என் குடும்ப சூழ்நிலையில்
இந்த சம்பந்தம் அமையுமா
மணமேடையில் அமருவோமா
என்று மனதுக்குள் அழ!
என் தந்தையோ நோயின்
வாசல்படியை தட்ட
நானோ வீட்டின் நிலைப்படியில்!
எத்தனையோ பேர் என்னை
பெண் பார்த்து சென்ற பிறகும்
இன்னும் முதிர் கன்னியாக
உனக்கு கொடுக்க என்னிடம் தங்கம் இல்லை!
ஆனால் என் தலையிலோ நிறைய வெள்ளிகள்!
பெண் பார்க்க
வந்தவர்களில் சிலர்
என் பையன் சிகப்பு பெண்தான்
பார்க்க சொல்கிறான்
பெண் கருப்புதான்
இருந்தாலும் நாங்கள் கேட்பதை
(வரதட்சனையை) தந்து விட்டால்
என் பையனை
சம்மதிக்க வைத்து விடுகிறோம்!
பணம் படைத்தவர்களின்
கருப்பு நிற பெண் கரையேறி விடும்!
பணம் இல்லா குடும்பத்து
கருப்பு நிற பெண்களை
கடலில் தள்ளி விடலாமா?
பெண்ணை பெற்றவன்
ஜமாத்தில் லட்டர் வாங்கி
ஊரில் பிச்சை எடுத்தால் கேவலம்
என்று முகம் தெரியா ஊரில்
பள்ளியில் தொழுகை முடிந்தவுடன்
பாவா குமராளி வந்திருக்கிறேன்
திருமணம் நிச்சயம் ஆகிவிட்டது
உதவி செய்யுங்கள் என்று
துண்டை ஏந்தி நிற்பதை
பார்த்திருக்கிறாயா? பார்த்தவுடன்
கோபம் வரவில்லையா?
என்ன செய்தாய் நீ?
என் தாய் தந்தை மனம்
கோணாமல் நடப்பேன் என்றாய்!
இளைஞனே திருமணம் முடிக்கும்
நாள்வரை வீரபேச்சுக்கள் உன்னிடத்தில்
மணப்பெண் பார்க்க ஆரம்பித்தால்
இதுநாள்வரை தாய், தந்தை
பேச்சைகேட்காத நீ கூட திருமண
பேச்சு வார்த்தையில் மட்டும்
என் தாய் தந்தையின் மனம்
நோக நடக்கமாட்டேன் என்கிறாய்!
இளைஞனே உன் தெருவில்
திருமண வயதில் ஏழை பெண்ணிருக்க
நீயோ பணம் படைத்த வீட்டில்
பெண்ணை தேட!
அவளும் திருமண வயதை தாண்டிய பிறகு
வேற வழி இல்லை என்று
பிறமத பையனோடு ஓட!
இப்பொழு வருகிறது உனக்கு கோபம்
என் தெரு பெண்எப்படி ஓடலாம்!
அவளை கண்டால் வெட்டுவேன் என்று!
அவள் ஓடியதற்கு நீயும்
உன்னை போன்றவர்களும்
காரணம் இல்லையா?
முகமூடி திருடன் இரவில் திருடுகிறான்
நீயோ முகமூடி இல்லாமல் குடும்பத்தோடு
பகல் நேரத்தில் பலரின் அங்கீகாரத்தோடு
கொள்ளை அடிக்கிறாய் வரதட்சனை
என்ற பெயரில் மணமகள் வீட்டில்
மனசாட்சியும் இல்லை!
மறுமை பயமும் இல்லை உனக்கு!
மணமகனே நான்
உன்னிடம் கேட்கிறேன்
நீ என்ன மஹர் தருவாய்
எனக்கு - எதற்காக என்கிறாயா?
உன் வீட்டில் வந்து
ஆயுள் முழுவதும் உனக்கும்
உன் குடும்பத்திற்கும்
சேவை செய்வதற்கும்!
குடும்பத்தலைவன் என்ற பட்டத்திற்காக!
உன் பிள்ளையை பெற்று தந்தவுடன்
நானும் தகப்பன் என்று
பெருமிதம் அடைவதற்காக!
என் தாய் தந்தையை
என் உடன்பிறந்தவர்களை, தோழிகளை
நான் வாழ்ந்த இடத்தையே
விட்டு விட்டு நீ காட்டில் இருந்தாலும்
வெளிநாட்டில் இருந்தாலும் உன்னோடு
வருவதற்கு! - எத்தனை லட்சம்? மஹர் தருவாய்?
இளைஞர்களே! இன்னுமா உறக்கம்!
உறக்கத்திலிருந்தும் மன ஊனத்திலிருந்தும்
விழித்தெழுங்கள்!
இந்த பூமி பந்தில் தப்பித்து விடலாம்
நாளை மஹ்ஷர் பெருவெளியில்
இறுதி தீர்ப்பின் நாளின்
அதிபதியாம் வல்ல அல்லாஹ்விடம்
என்ன பதில் சொல்வாய்
தாய் தந்தையை கை காட்டுவாயா?
முடியாது இளைஞர்களே!
நீங்கள் மட்டும்தான் உங்களின்
காரியத்திற்கு பதில் சொல்வீர்கள்
வல்ல அல்லாஹ்வை அஞ்சுங்கள்!
பிறமதக்கலாச்சாரத்தில் இருந்து
நம் சமுதாயத்தில் வேரோடி இருக்கும்
இந்த வரதட்சனை என்னும் கொடுமையை
அகற்றி முதிர் கன்னி இல்லா நிலைக்கு
மஹர் கொடுத்து மணமுடியுங்கள்!
இம்மை மறுமையில் வெற்றியடைங்கள்.
-- Alaudeen.S
அதிரை ஜமீல் (காக்கா) அவர்களால் சத்தியமார்க்கம் தளத்தில் பதியப்பட்டுள்ள 'ஒழியட்டும் வரதட்சனை' என்ற கட்டுரையையும் படித்து பயன்பெறலாம். http://adirainirubar.blogspot.com
அதிரைநிருபர் குழு | Monday, October 11, 2010 | Alaudeen.S , இஸ்லாம் , மஹர் , விழிப்புணர்வு

இதை படிங்க முதல்ல - நன்றி மறப்பது நன்றன்று !
அதிரைநிருபர் குழு | Wednesday, October 27, 2010 | :www.adirainirubar.blogspot.com
வெயிலின் அருமை நிழலில் தெரியும் என்பார்கள். அது போல நமக்கு அல்லாஹ் வழங்கிய எண்ணிலடங்கா அருட்கொடைகள் அது திரும்பப் பெறப்படும்போது நமெக்கெல்லாம் புரிய வரும். உலகில் மனிதனாய் பிறந்திட்ட ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான கஷ்டங்கள்: அல்லாஹ் சிலரை வறுமையால் சோதிக்கின்றான்.சிலரை நோய்,நொடிகளால் சோதிக்கின்றான், இன்னும் சிலர்களை கடன் தொல்லைகளால் சோதிக்கின்றான்.
ஆக, ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமான சோதனைகள். நாம் நினைத்து கொண்டிருக்கிறோம், நமக்கு மட்டும்தான் இவ்வளவு சோதனைகள் என்று, கொஞ்சம் திரும்பிப்பார்த்தால் புரியவரும் மற்ற மனிதர்களும் நம்மை போன்றோ, நம்மை விடவோ சோதனைகுள்ளக்கப்படுகிறார்கள் என்று.
சரியாக சிறுநீர் வெளியேறாமல், வயது முதிர்ந்த ஒரு மனிதர், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார், அங்கு அவருக்கு சிறுநீர் வெளியேற்றுவதற்கான கருவிகளைப் பயன்படுத்தி சிறுநீர் வெளியேற்றப்படுகிறது. சில நாட்களுக்குப்பின்பு அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார், அவருக்கு செய்யப்பட மருத்துவத்திற்காக பில் கொடுக்கப்படுகிறது. அதனை பார்த்துவிட்டு பெரியவரின் கண்களில் கண்ணீர்த்துளிகள் வழிந்தோடியது, இதைப்பார்த்த மருத்துவர்கள், ஏன் பெரியவரே அழுகின்றீகள், என்று கேட்டதற்கு பதிலேதும் பேசாமல் மறுபடியும் அழத்தொடங்கினார். அருகில் உள்ள மற்ற உறவினர்கள் அனைவரும் மறுபடியும் கேட்க, கண்களைத்துடைத்தவாறு பெரியவர் சொன்னார், "நான் என்னிடம் கொடுக்கப்பட்ட மருத்துவ செலவைப்பார்த்து அழுகின்றேன் என்று யாரும் நினைத்து விடவேண்டாம், இரண்டு நாட்கள் சிறுநீர் வெளியேற்றியதற்காக என்னிடம் இவ்வளவு பணம் கேட்கின்றீர்களே, அருளும் அன்பும் உடைய எனது இறைவன், கடந்த 60 வருடங்களாக சிறுதும் தடங்கலின்றி சிறுநீர் வெளியாக்கியதர்காக இதுவரை என்னிடம் ஒரு பைசா கூட கேட்டு பில் அனுப்பவில்லையே! என்று எனது இறைவனின் அருளை நினைத்து அழுகின்றேன் என்றார்.
ஆக ஒருவருக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட அருட்கொடைகள், திரும்பப்பெறப்படும்போதுதான் அதன் அருமை தெரிய வரும். உலக விஷயங்களைப் பொறுத்துவரை நமக்கு கீழ்நிலையில் உள்ளவர்களைப் பார்த்து அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் குணம் நம்மிடையே இருந்தால் நம்முடைய குறைகள் சற்றே நிமிடத்தில் மறைந்து விடும்.
அல்லாஹ் தன் திருமறையில் முஃமின்களே!) அல்லாஹ் உங்களுக்கு அளித்துள்ளவற்றிலிருந்து ஹலாலான நல்லவற்றையே நீங்கள் புசியுங்கள்; நீங்கள் அவனையே வணங்குபவர்களாக இருப்பின் அல்லாஹ்வின் அருட்கொடைக்கு நன்றி செலுத்துங்கள். அல்குர்ஆன் - (16:114) என்று கூறியிருக்கிறான்.
கால் வழியால் அவதிப்படுபவர்கள் கால்களே இல்லாதவர்களைப் பார்த்து, தனக்கு கால்களை வழங்கிய அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துதல் வேண்டும்.
சிறுநீர் சீராக கழிக்க முடியாமல் அவதிப்படுபவர்கள், இரண்டு சிறுநீரகங்களும் செயழிழந்து உயிருக்காக போராடும் எத்தனையோ மனிதர்களைப் எண்ணிப் பார்த்து, இறைவனுக்கு நன்றி செலுத்துதல் வேண்டும்.
அதற்காக, நபி (ஸல்) அவர்கள் “நோய்க்கு மருத்துவம் செய்யுங்கள்” என்ற கருத்துப்பட கூறியிருப்பதை யாரும் மறந்து விடுதல் கூடாது
சொந்தங்களைப் பிரிந்து வெளிநாடுகளில் வாழும் நமக்கெல்லாம் தொலைபேசி எனபது இன்றியமையாத ஒன்று என்பதை நாம் அறிந்ததே. இதன் மூலம் நினைத்த மாத்திரத்திலேயே நாம் சொல்ல நினைப்பதை பரிமாறும் அளவுக்கு தொழில்நுட்பத்தை அல்லாஹ் நமக்கு அருளி இருக்கிறான் .
எனக்கு தெரிந்த ஒரு வாய்ப்பேச முடியாத நபர் துபாயில் வேலை செய்துவருகிறார் அவரால் தன் தாயிடமோ தந்தையிடமோ ஏன் தன் பாசமிகு மனைவியிடம் கூட அவரால் பேச முடியாது. எதாவது ஒரு செய்தியை தன குடும்பத்தாரிடம் சொல்லவேண்டுமெனில் சில தூரம் நடந்து வந்து தன் நண்பரிடம் விஷயத்தை விளக்கி தன் குடும்பத்தாரிடம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்வார்.
அவருக்கு சத்தம் என்ற சொல்லுக்கு இதுவரை அர்த்தம் தெரியாது.
அவருக்கு தன் பாசமிகு தாய், தந்தை, மனைவியின் குரல்கள் எப்படி இருக்குமென்று தெரியாது
அவரால் தனக்கு என்ன நோய் ஏற்பட்டிருக்கிறது என்று கூட மருத்துவரிடம் விளக்கி கூற முடியாது
நம்மெல்லாம் அலாரம் வைத்து எழுந்திருப்பதுபோல் அவரால் எழுந்திருக்க முடியாது
இதுவெல்லாம் என் கண்ணிற்கு தெரிந்த சில விஷயங்களே, எனக்கு தெரியாமல் எத்தனை விஷயங்களிலோ அவர் படும் துயரத்தை அல்லாஹ் ஒருவனே அறிவான்.
எனக்கு இப்படி ஒரு குறையை அல்லாஹ் தந்துவிட்டானே என்று ஒரு முறை கூட அவர் சொல்லி நான் கேட்டதில்லை.
மாறாக சில சமயங்களில் அல்லாஹ் எனக்கு அழகிய கண்களைக் கொடுத்து இருக்கின்றானே என்பதை நினைத்து அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தியது என் நினைவிற்கு வருகிறது.
அப்படியானால் நமது உடல் உறுப்புக்களை ஒரு சிறிதும் குறை இல்லாமல் படைத்த நம் அல்லாஹ்வுக்கு நாம் எவ்வளவு நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளோம் என்பதை சிந்தித்து அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் அடியார்களாக ஆவோமாக ஆமீன்
நீங்கள் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்திக் கொண்டும், (அவன் மீது) ஈமான் கொண்டும் இருந்தால்; உங்களை வேதனை செய்வதால் அல்லாஹ் என்ன இலாபம் அடையப் போகிறான்? அல்லாஹ் நன்றியறிவோனாகவும், எல்லாம் அறிந்தவனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன் - 4:147)
-- Azeezudheen.

கலரி சோரும், கலாட்டாவும்....!
அதிரைநிருபர் குழு | Saturday, October 02, 2010 | crown , நினைவுகள்http://adirainirubar.blogspot.com
என்னடா மாப்ள இன்னக்கி பள்ளி வாசல்ல இவ்வோ கூட்டம். வேரெ எதுக்கு காதர் சாயிபு காக்கா வீட்ல அவர் மொவனுக்கு சின்னத்து சாப்பாடு, நா கூட அங்க தான் போறேன் .உங்க ஊட்ட கூப்பிடலேயா? எங்க உம்ம சொல்லல மாப்பள.
நா, அஸ்லம், செய்புதீன், குஞ்சி, நைனா எல்லாரும் போரோ(ம்). எங்க சகனுக்கு ஆள் இருக்கு! நீயும் வரண்டா வாடா!
கூப்டாம எப்படிடா வரது. நீ எப்பவும் கூப்புட்டுதான் போவியா? டேய் சும்ம விளையாடாதே! சும்ம விளயாட்டுக்கு சொன்னா கொச்சுக்கிரிய மாப்ள இல்ல மாப்ள நான வெயிட் பன்றெ(ன்) , பசங்கல நிறுத்தி வக்கிரெ(ன்) நீ உங்க உம்மாட்ட சொல்லிட்டு வா.
உங்க உம்மா மரந்திருப்பாங்க! அது எப்டிடா உங்க ஊட்ட கூப்புடாம இருப்பாங்க? நாம ஒரே தெரு ஆனாக்கா பழஞ்செட்டி தெருவுல யெல்லம் கூப்புட்டு இருக்காக இவ்ளொ தூரத்துல கூப்டிகும்போது, அதும் சொல்ல போன நீங்க தாயபுள்ள.
மாப்ள ஜமாத் வய்க போராங்க தொலுதோனி துவா கேக்காம நீ உன்க உம்மாட்ட கேட்டுட்டு உங்க வூட்டு வாசல்லஇரு. பசங்கள கூட்டிட்டு நாவரேன்.
(நா சொன்னமாரி இக்பால் ஊட்ட கூப்புட்டத அவன் உம்மா மறந்துட்டாங்க நாலைக்குதா(ன்) கலரின்னு நினச்சுக்கிடாங்கலாம்)
மாப்ள கைய குட்ரா, உம்மாத(ன்) மரந்துடிச்சு நீ சொன்னது சரிதான்டா
போலாம மாப்ள! (மற்ற கூட்டாளிங்க இக்பால்ட வாழ்துச் சொல்றான்க!ஏதோ படிப்புள பஸ்ட் வந்தவனுக்கு சொல்ற மாரி) அடிசுவுடு மச்சான் ,கலகிடனுன்டா (என்னத?).
டேய் செய்பு ,இக்பால் சகனுக்கு எக்ஸ்ட்ரா அதனாலெ நம்ம பசங்க யாராச்சும் வரலேனாக்கா 3 பேரா உக்கருவோ(ம்)!
என்ன சொல்ரானுவன்னு பாப்போ(ம்).
மச்சான் சொன்னா சரிதான் - சைபு(தீன்).
(அனைவரும் சின்னத்து வீடு அடைறாங்க .வாசல்ல வரவேக்க அங்க ஊட்டு காரங்க யாருமில்ல கபீராக்க மட்டும் எம்.ஆர்.ராதா குரலில் கத்திக்கிட்டு இருக்கார்).
தம்பி! அந்த ஊட்டுக்கு போங்க இங்க புல்லாகிடுச்சி.. (அனைவரும் காதர் சாகிபு காக்கா வீட்டு அடுத்த வீட்டு ஹால்ல போய் உக்காருராங்க.)
மாப்ள இன்கெய உக்கராலான்டா - குஞ்சி.
பேப்பர் போட்டாங்க, டேய் எக்ஸ்ரா பேப்பர் கேளூ, கைய துடைக்க வேனு(ம்)-நான் .
சமர்த்தா ரெண்டு சகனுக்கு 3 பேரா குக்காந்து, என்ஸ்ரா பேப்பர் கைதுடைக்க வாங்கி ஜமுகமா மடிச்சி, சதுரமா 4 பீஸா கிழிச்சி, எக்கல்ல ஆளாலுக்கு வச்சிக்கிட்டோம்.
அஸ்லம் சோறு வருதுடா அத வாங்கு.
மாப்பிள இங்க எங்களுக்கும் சொல்றா - இக்பால்.
நீ யே கேலுடா, இது என்ன காலெஜ் சீட்ட நா வாங்கி தரத்துக்கு - நான்.
(எல்லாரும் இக்பாலப் பாத்து சிரிகிராங்க ஒரே சத்தம், 4 சகன் தள்ளி அப்பாத்துர மாப்ள சரியா சொன்னேடான்னு எனக்குப்பாராட்டு.அதற்குள்ள இக்பால் சகனுக்கு சாப்பாடு வந்துரிச்சி), மாப்ள தண்னீ பாக்கெடு இல்லடா! - அஸ்லம்.
''மத்தெதெல்லாம் இருக்கானுப்பாரு அது மரு சோரு சகன இருக்கப்போது'' மருபடியும் நான் இப்படிசொன்னதும் ஒரே சிரிப்பு.
சைபுக்கு பொற ஏறிக்கிடுச்சி னெஞ்ச் புடிச்சபடி- டே தண்ணி பாக்கட்ட ஒடைங்கடா நெஞ்சு அடைக்குது.(கண்ணீர் வடிந்தது சைபுக்கு)
மாப்ள தலைல தட்டுடா - குஞ்சி.
ரொம்ப தட்டாத மூள கலங்கிடும் - இக்பால்,
அவனுக்கு அது இருந்தாதானே ? நான்,
?????????( கெட்ட வார்தைங்க! வட்டார ஸ்பெசல்). சைபு
கம்கட்ல பேப்பர் கட்டோட சுத்திக்கிட்டு இருந்த கபிர் காக்காகிட்ட இந்தாங்க காக்கா என்க சகனுக்கு தண்ணி பாக்கெட் வய்கல - இக்பால்.
மூணு, மூணு பேரா உக்கந்துட்டு தண்னி பாக்கெட் வேனுமா! (கபிர் காக்கா முனங்கலாக மறுபடியும் எம்.ஆர். ராதா குரலில்).
''அவர் கபிர் காக்கா யிலாடா கர்னாடக காக்கா'' (கடசி சகனிலிருந்து அப்துல் காதர் காக்கா சேட உட) மருபடியும் ஒரே சிரிப்புதான் போங்க!
பொறவு காதர் சாகிபு காக்கா காதுல சைதி போயி தண்ணிப்பாக்கெட்டு கொண்டு வந்தார்.
''டே நம வச்சிருந்த பிர்னிய யாரோ எடுத்துட்டானுவ' '- நான்.
நல்லா தேடு! டேய் அல்தாப் மருவாதையா சொல்லிடு நீதேனெ எடுத்தே!
இன்ட்ட ஏன்டா கேக்குற, ?????! (கெட்ட வார்த்தை)
டேய் ????? (கெட்ட வார்த்தை) அது ,இதுன அப்ப நடக்குறது வேர!- நான் .
இன்னாடா செய்வ? - அல்தாப்.
டே உடுங்கட சண்டய" இஸ்மாயில் சகன்ல ரெண்டு பிர்னி இருக்குது பாரு அவனுவதான் எடுத்து இருப்பானுவ" - குஞ்சி சொல்லிகிட்டு இருக்கும் போது யாரொ என் முதுகுள இறச்சி முள்ளால அடுச்சானுவ "யார்ரா ??????? (கெட்ட வார்த்தை) நான் எழுந்ததும் - மருபடியும் ஒரு எறச்சி முள் என் விலாவுல உலுந்தது.
எனக்கு கெட்ட கோபம் யார்ரா---ப் பையன்?
தம்பி சும்ம உடுங்க நீங்க நாணய கார உட்டுப்புள்ள நீங்கலெ இப்படி அசிங்கமா பேசலாமா? - புகாரி காக்கா.
அப்படி சொல்லிவிட்டு அவரு சொன்னார். எந்த ?????? வோ (கெட்ட வார்த்தை) இப்படிதான் நடந்துக்கானுவ .ஏன் காக்கா திட்ரிய-- நான். '
பின்னெ என்ன தம்பி எந்த பொரம்போக்கோ எம்மேல முள்ள வுட்டு அடிகிரானுவ திட்டாம கொஞ்ச சொல்ரியலா?
என்னடா உலகம் தனக்கு ஒரு நீதி மற்றவர்களுக்கு ஒரு நீதியா?(மனசுக்குள் நினைத்துக்கொண்டேன்..)
மாப்ள நீ நானயக்கார வூட்டுப்புள்ளன்னா நாங்கள் எல்லாம் அநியாய ஊட்டுப்புள்ளயா? - யூசுப் .
நான் என்ன பதில் சொல்ல? (பொறவு காதர் சாயிபு காக்கா வர பிர்னி பிரச்சனையும் தீர்ந்தது).
தீடிரென்டு, யார்ரா எம்மேல தண்ணி பாச்சுனது - காதர் சாயிபு காக்கா.
(பெரும் ரகல பசங்க சாப்ட்டுட்டு வெளியில ஓடராங்க! எல்லாரிடமும் அவசரம் 3 மணிக்கு இந்தியா,சிரிலங்கா கிரிக்கெட் மேட்ச் டி.வியில) .
-- தஸ்தகீர்
CROWN

Saturday, February 5, 2011
காலமாற்றமும், குழந்தையின்மையும்!.
( இந்த மாத பெண்ணே நீ இதழில் வெளியானது
ஆகஸ்ட் 4, 2008 இல் 11:36 மு.பகல் (பிற)
உறவு, ஐடி, குடும்பம், குழந்தை, திருமணம், மன அழுத்தம்
வாழ்வின் ஆனந்தம் என்பது மழலைகளின் சிரிப்பிலும், கூட்டுக் குடும்ப உணர்விலும் எனும் நிலையிலிருந்து உலகம் கொஞ்சம் கொஞ்சமாக விலகிக் கொண்டிருக்கிறது. வாழ்க்கையின் சுவாரஸ்யம் கேளிக்கைகளும், பொருளீட்டுதலும், மனம் போன போக்கில் வாழ்தலும் எனும் நிலை உருவாகிவிட்டது.
கணினித் துறையின் மறுமலர்ச்சி இளைஞர்களையும் இளம் பெண்களையும் குடும்பம் எனும் ஆனந்தமான சூழலை விட்டு தூரமாய் விரட்டிக் கொண்டிருக்கிறது என்று தான் சொல்லவேண்டும். ஏற்கனவே இயற்கையை விட்டு வெகுதூரம் வந்துவிட்ட மனிதன், இப்போது குடும்பத்தை விட்டும் வெகுதூரம் சென்று விட்டான்.
எனவே தான் எப்போதும் இல்லாத அளவுக்கு மென்பொறியாளர் தம்பதியினரிடையே மனக்கசப்பும், மணமுறிவும் அதிகரித்திருக்கிறது. இதைவிடப் பெரிய சிக்கல் என்னவெனில் கூடி வாழும் தம்பதியினருக்கும் கொஞ்சி மகிழ குழந்தையில்லை எனும் இன்னலும் உருவாகியிருக்கிறது.
திருமணமான தம்பதியினரில் ஐந்து பேருக்கு ஒருவருக்கு கருத்தரிப்பதில் தாமதமும், சிக்கலும் நிலவுகிறது. இதன் முதல் காரணம் மன அழுத்தம், இரண்டாவது காரணம் அலுவலகத்துக்கும், பணத்துக்கும் கொடுக்கும் முன்னுரிமை. இப்போது இதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது என பிரான்ஸ் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். அது ஆண்களின் வயது !
பெண்ணின் திருமண வயது 21 என்று ஆட்டோக்களின் பின்னால் எழுதப்பட்டிருப்பது இப்போது நகைச்சுவையாகி விட்டது. திருமணத்துக்கான வயது பல்வேறு காரணங்களால் கொஞ்சம் கொஞ்சமாக நீட்டிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. சுமார் முப்பது வயதை நெருங்கும் நிலையில் பெண்களும், முப்பதைத் தாண்டிய பிறகே ஆண்களும் திருமணம் செய்ய விரும்புகின்றனர்.
இப்படி இளைஞர்கள் திருமணத்தைத் தள்ளிப்போட்டு, பின்னர் குழந்தைப் பிறப்பைச் சிலகாலம் தள்ளிப் போடுவதே குழந்தையின்மைக்கும், குழந்தைகளின் ஆரோக்கியக் குறைவுக்கும் முதன்மையான காரணமாகிறது என்கிறது இந்த ஆராய்ச்சி.
முப்பது வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு குழந்தை பிறக்கும் வாய்ப்புகள் கணிசமான அளவுக்குக் குறைகின்றன எனவும், கருவுறும் பெண்களுக்குக் கருச்சிதைவு நேர்வதற்கும் ஆண்களின் வயது காரணமாகி விடுகிறது எனவும் இந்த ஆராய்ச்சி அதிர்ச்சித் தகவலை அறிவித்திருக்கிறது.
சரியான வயதில் குழந்தை பெற்றுக் கொள்ளாமல் தள்ளிப் போட்டு முப்பதுகளின் கடைசியில் குழந்தை பெற்றுக் கொண்டால் அந்தக் குழந்தைகளுக்கு இதயம் தொடர்பான சிக்கல்கள் உட்பட பல்வேறு நோய்கள் வரும் வாய்ப்பு அதிகரிக்கிறதாம். நாற்பது வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு சிக்கலின்றி குழந்தை பிறக்கும் வாய்ப்பு பெருமளவில் குறைகிறதாம்.
பெண்களின் வயது மட்டுமே குழந்தைப் பிறப்புக்குத் தேவை, ஆண்களின் வயது ஒரு பொருட்டல்ல, 90 வயதிலும் ஆண்களால் குழந்தை பெற்றுக் கொள்ளமுடியும் என்றிருந்த ஆண்களின் மீசை முறுக்கலுக்கு இந்த ஆராய்ச்சி ஒரு முற்றுப் புள்ளி வைத்திருக்கிறது.
கூடவே குடும்ப உறவுகளைக் குறித்த ஆழமான உணர்வு இல்லாமல், மேனாட்டுக் கலாச்சாரத்தின் வால்பிடித்து, கேளிக்கைகளுக்கும், பணத்துக்கும் முன்னுரிமை கொடுத்து அலையும் இளம் வயதினருக்கு இந்த ஆராய்ச்சி ஓர் எச்சரிக்கை மணியாகவும் ஒலிக்கிறது.

இன்றைய தேவை!
இப்னு சித்திக், கடையநல்லூர்
இப்பேரண்டத்தைப் படைத்துப் பரிபாலனம் செய்து வரும் அல்லாஹ் மனித சமுதாயத்தை பலவீனமான நிலையிலேயே படைத்துள்ளான்.
அல்லாஹ் (தன் கட்டளைகளை) உங்களுக்கு இலகுவாக்கவே விரும்புகின்றான். மனிதன் பலவீனமானவனாகவே படைக்கப்பட்டுள்ளான். (திருகுர்ஆன் 4:28)
இப்படி பலவீனமான மனித சமுதாயம் நித்தமும் பாவம் எனும் ஆற்றில் நீந்திக் கரைசேர இயலாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. நன்மை, தீமைகளை பிரித்தறியக் கூடிய ஆற்றலை மனிதனுக்கு இறைவன் வழங்கியும் பாவ காரியங்களை மிகச் சர்வ சாதாரணமாக, நாம் பாவம் செய்கிறோம் என்ற நாணம் கூட. ஏன் எண்ணம் கூட இல்லாமல் செய்து வருவதை நம்மைச் சுற்றியிருப்பவர்களை நோக்கினாலே தெளிவாகத் தெரியும். இன்னும் சொல்லப்போனால் நேரான வழியில் நடக்க வேண்டும், பாவங்களை விட்டும் விலகி இருக்க வேண்டும் என்று முயலும் மனிதன் கூட தன் அரைகுறை ஈமானையும் இழந்து விடும் அளவுக்கு எங்கு நோக்கினும் பாவத்தின் ஊற்றுக் கண்களே தென்படுகின்றன.
இன்றைய நாம் வாழும் சமூகத்தில், ஒருபுறம் தர்ஹா, கந்தூரி, உரூஸ, ஜண்டா என்று அவ்லியாக்களை நேசிக்கிறோம். புகழ்கிறோம் என்ற பெயரில் படைத்து இறைவனுக்கு மட்டும் செய்ய வேண்டிய சிரம் பணிதலையும், நேர்ச்சைகளையும், பிரார்த்தனைகளையும் அவுலியாக்களுக்கும், மற்றவர்களுக்கும் செய்து இணை வைத்தல் எனும் கொடிய, இறைவனால் மன்னிக்கப்படாத பாவத்தை ஏதோ புண்ணியம் செய்கிறோம் என்று கருதி பயபக்தியுடன் பாவத்தை அரங்கேற்றுகின்றனர். அது போல் தன்னுடைய வாழ்க்கையின் சரிபாதியை பகிர்ந்து கொள்ளவிருக்கும் மனைவியிடம் கைநீட்டி யாசகம் (வரதட்சணை) பெறும் ஆண்மையற்ற பேடிகள் மறுபுறம்; இரட்டிப்பாகும் வட்டியும் வியாபாரத்தைப் போன்றது என்று வியாக்கியானம் கொடுத்து வறியவர்களைச் சுரண்டும் பகல் கொள்ளையர்கள் ஒருபுறம். மதிமயக்கும் மதுவை உண்டு. மண்ணில் புரண்டு காற்றில் மானத்தை பறக்க விடும் போதைப் பிண்டங்கள் மறுபுறம். பிறர் பொருளைப் பறித்து தனதாக்கிக் கொள்ளும் மோசடிப் பேர்வழிகள் ஒருபுறம். கடமையைச் செய்வதற்கு கூசாமல் லஞ்சம் கேட்கும் ஊழல் பெருச்சாளிகள் மறுபுறம். இப்படி எங்கு நோக்கினும் பாவம்! பாவம்! என்ற நிலையையே நம்மால் காணமுடிகிறது.
ஏன்! சாதாரணமாக நாம் பேருந்தில் பயணம் செய்கிறோம் என்றால் கூட அங்கும் நம் கண்கள் பாவத்தை சம்பாதிக்க ஷைத்தான் ‘சினிமா’ எனும் ஆயுதத்தை பயன்படுத்துகிறான். அதிலிருந்து தப்பிக்க நம் கவனத்தை பேருந்திலிருந்து வெளியேவிட்டால், பல வண்ணங்களில், முப்பரிமாண, ஆளுயர திரைப்பட ஆபாசச் சுவரொட்டிகள், இதற்கு பயந்து கண்ணயர்ந்து தூங்குவோம் என்றால், பேருந்தில் ஒலிக்கும் திரைப்படப் பாடலின் டிஜிட்டல்(Digital) இசைத்தொல்லை நம் காதைக் கிழிக்கும். இவ்வாறாக ஒரு சாதாரண பேருந்துப் பயணம் கூட பாவப் பயணமாக மாறிவிடும் மோசமான சூழலில் நம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
நம்மைச் சூழ்ந்திருக்கும் பாவ வெள்ளத்தில் நாம் அடித்துச் செல்லப்படாமல் இருக்க வேண்டுமென்றால் அதற்கு என்ன வழி? நம்முடைய இரத்த நாளங்களில் ஓடிக்கொண்டு, நம்மை தவறில் தள்ளிவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் நம்முடைய முதல் எதிரியான ஷைத்தானின் வலையில் அகப்படாமல் தப்பிக்க என்ன வழி?
தக்வா எனும் உள்ளச்சத்தையும் இறை ஆதரவையும் தவிர வேறு வலிமையான ஆயுதம் உண்டோ?
ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, இறைத்தூதர் அவர்களே! ஒருவர் தனது உள்ளத்தைத் தூய்மைப்படுத்திக் கொள்வதற்கான வழி என்ன? என்று கூறுங்கள் என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் தான் எங்கு இருந்தாலும், தன்னை இறைவன் கண்காணித்துக் கொண்டிருக்கின்றான் என்ற உணர்வோடு அவர் இருக்கட்டும் என்று கூறினார்கள்.அப்துல்லாஹ் இப்னு புஷ்ர்(ரழி) நூல்: திர்மிதி.
நபியவர்களே! எனக்கு ஏதாவது அறிவுதை கூறுங்கள் என்று ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், “எந்தச் சூழ்நிலையிலும் பயபக்தியை(தக்வா) கைவிட்டு விடாதீர்; ஏனென்றால் அதுதான் அனைத்து நன்மைகளின் இருப்பிடமாகும். இறைவனை நினைவு கூறுவதையும், அவனது நெறி நூலான அல்குர்ஆனை பொருள் அறிந்து படிப்பதையும் கடைபிடிப்பயாக! ஏனென்றால் நிச்சயமாக அது பூமியில் உனக்குப் பிரகாசமாகவும், வானத்தில் உன்னைக் குறித்து புகழ்ந்து பேசுவதற்குக் காரணமாகவும் அமையும். இதல்லாமல் நல்ல விஷயங்களைத் தவிர மற்றவைகளை பேசுவதிலிருந்து உனது நாவைக் கட்டுப்படுத்துவாயாக! ஏனென்றால் உறுதியாக அதன்மூலம் நீ ஷைத்தானை வென்று விடலாம்” என்று உபதேசித்தார்கள். அபூ ஸயித்(ரழி) நூல்: அல்முஃஜமுஸ்ஸகீர்
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்சி ஆதரவு வைக்க வேண்டிய முறைப்படி அஞ்சி ஆதரவு வைக்க வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள். ஆதரவு வையுங்கள். (திருகுர்ஆன் 3:102)
(நபியே!) ஷைத்தானுடைய யாதொரு ஊசலாட்டம் (தீய காரியங்களைச் செய்யும்படி) உம்மைத் தூண்டும் சமயத்தில் (உம்மை அதிலிருந்து) பாதுகாத்துக் கொள்ளும்படி அல்லாஹ்விடத்தில் நீர் கூறுவீராக! நிச்சயமாக அவன் (அனைத்தையும்) செவியுறுபவனும் நன்கறிபவனாகவும் இருக்கிறான். (ஆதலால் அவன் உம்மை பாதுகாத்துக் கொள்வான்)(திருகுர்ஆன் 41:36)
… என் இறைவனே! (பாவ காரியங்களைச் செய்யும்படி தூண்டும்) ஷைத்தானுடைய தூண்டுதல்களிலிருந்து காப்பாற்றும்படி நான் உன்னிடம் கோருகிறேன்.
என் இறைவனே! ஷைத்தான் என்னிடம் நெருங்காமலிருக்கவும் நான் உன்னிடம் கேட்கிறேன் என்று நீங்கள் பிரார்த்தித்துக் கொண்டிருங்கள். (திருகுர்ஆன் 23:97-98)
எனவே பாவத்திலிருந்து தப்பிக்க இறையச்சமும், ஆதரவும், பிரார்த்தனையுமே நமது இன்றைய தேவையாக இருக்கிறது.
உள்ளச்சத்தோடு, ஷைத்தானை விட்டு பாதுகாவல் தேடி நம் வாழ்க்கையை சீர்படுத்திக் கொள்வதற்கு எல்லாம் வல்ல இறைவன் தவ்ஃபீக்-அருள் புரிவானாக.
http://www.annajaath.com

குமுதம்: பத்து ரூபாயில் (? )ஒரு ஆய்வு !
தமழக மக்களது சமூக அறிவுத் தரத்தை குமுதம் பத்திரிகை நிர்ணயிக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல. தற்போது இந்தப் பணியினை தமிழ் சேனல்கள் செய்து வருகிறது என்றாலும் இவையும் குமுதத்தின் பாணியினையே பின்பற்றி செயல்படுகின்றன. அரசியலோ, சமூக அக்கறையோ எதுவாக இருந்தாலும் ஒரு மலிவான கிசு கிசு ஆர்வம் போல மாற்றித தரும் குமுதம் மக்களின் நேர்மறை மதிப்பீடுகளை அழிக்கும் ஒரு வைரஸ். அதைப் பற்றி ஆய்வு செய்யும் புதிய கலாச்சாரக் கட்டுரையை இங்கே பதிவு செய்கிறோம். இந்தக் கட்டுரை வெளிவந்து 8 ஆண்டுகள் ஆகிவிட்டது, வாசகர்கள் எண்ணிக்கை, விலை, பக்கங்கள், விற்பனை விவரம்….. முதலியன இன்று மாறியிருக்கிறது, ஆனால் குமுதம் வழங்கும் சிட்டுக்குருவி லேகியத்தில் எந்த மாற்றமும் இல்லை.
குமுதம்: பத்து ரூபாயில் ‘பலான அனுபவம்’ ஒரு ஆய்வு !
“குமுதம் பத்திரிகை குறைவான விலையில் அதிகமான பக்கங்களை வெளியிடும்போது, உங்க பத்திரிகை குறைவான பக்கங்களை சற்று அதிக விலையில் விற்பது சரியா?” என்ற கேள்வியை புதிய கலாச்சாரம் பேருந்து விற்பனையின் போது தோழர்கள் அவ்வப்போது சந்திக்க நேரிடும். குமுதத்தின் மலிவு விலை இரகசியம் என்ன?
ஏற்கனவே குண்டுப் பத்திரிகையான குமுதம் தற்போது பெருங்குண்டு பத்திரிகையாக மாறியிருக்கிறது. தனது ‘சைஸ்’ பெருத்ததையே காலத்திற்கேற்ப மாறிக் கொள்வதாய் கூறும் குமுதம், தனது லேட்டஸ்ட் கொள்கைப் பிரகடனத்தைக் கீழ்க்கண்டவாறு தெரிவித்திருக்கிறது.
“குமுதம் இனி ஒரு சிலருக்கு மட்டுமல்ல, எல்லொருக்காகவும் வெளிவரும். சமீபத்திய நேஷனல் ரீடர்ஷிப் சர்வேயின்படி குமுதம் படிக்கும் வாசகர்கள் 50 லட்சம். இந்தியாவின் முதல் 10 பத்திரிகைகளில் இடம் பிடித்திருக்கும் ஒரே தமிழ்ப் பத்திரிகை குமுதம் மட்டும்தான்”.
“இந்தச் சாதனையின் அடிப்படை வாசகர்களாகிய உங்களின் ஆதரவுதான். அந்த ஆதரவு எங்களை நெகிழச் செய்து, நன்றியுடன் கடினமாக உழைக்கத் தூண்டுகிறது. இனி, 160 பக்கங்களோடு குமுதம் வெளிவரும். ஒவ்வொரு பக்கமும் புதிதாக இழைத்து, உழைத்து, கவனித்துச் செதுக்கப்படும். விலையையும் அதிகப்படுத்தியிருக்கிறோம். இம்மாற்றம் ஒரு ஆரம்பம்தான். தொடரனும் உங்கள் ஆதரவுதான்.
- அன்புடன் ஆசிரியர்.
ஹிந்து பேப்பர், ஃபில்டர் காபி, பிரஷர் குக்கர், கேஸ் அடுப்பு போன்ற நடுத்தர வர்க்க பட்டியலில் குமுதமும் உண்டு. இரண்டு தலைமுறையாக, படித்த தமிழர்களின் குடும்ப உறுப்பினராக குமுதம் மாறிவிட்டது.
குமுதம் மட்டுமே தனது தோற்றத்திலிருந்து இன்று வரை தனது ஃபார்முலாவை மாற்றாமல் தொடர்கிறது. பழைய கள்ளை பானையிலிருந்து, பாலிதீன் பைக்கு மாற்றியதுதான் குமுதம் காலத்திற்கேற்ப மாறுகிறது என்பதின் பொருள். குமுதம் தனது 50 லட்சம் வாசகர்களுக்காக நன்றியுடன் கடினமாக உழைப்பது என்பதின் பொருள் அந்த ஃபார்முலாவைக் காப்பாற்றுவதுதான். அதைப் புரிந்து கொள்ளும்போது குமுதத்தின் 160 பக்கங்களும் கை நிறையக் கிடைக்கும் கழுதை விட்டைகளே என்பது தெரியவரும்.
ஆசிரியர் குழு
ஏனைய செட்டிக் குடும்பங்கள் வட்டி, மளிகை, வியாபாரம் செய்து வந்த போது, 1943 ஆம் ஆண்டு குமுதத்தைத் துவக்கினார் எஸ்.ஏ.பி. செட்டியார். பகவத் கீதையை அடிக்கோடிட்டு படித்து ரசிக்கும் ஆன்மீகவாதியான செட்டியார், நடிகைகளின் அங்கங்களை ஒப்பிட்டு ரசிக்கும் லவுகீகவாதியாகவும் இருந்தார். இவரது பக்தி + செக்ஸ் கலந்த சிட்டுக் குருவி லேகியம்தான் இன்று வரையிலும் குமுதத்தின் இளமையைக் காற்றாற்றுகிறது. கைலாயம் சென்று விட்ட செட்டியாருக்கு லேகியத் தயாரிப்பில் உதவி செய்தவர்கள் ஜ.ரா.சுந்தரேசன், ரா.கி.ரங்கராஜன் ஆகியோர்.
செட்டியாருடன் பங்குதாரராகச் சேர்ந்த பார்த்தசாரதி ஐயங்கார்தான் குமுதத்தின் பதிப்பாளர். நெற்றியில் நாமமிடும் தீவிர வைஷ்ணவாளாக இருந்தாலும், துட்டு விசயத்தில் இவரிடம் யாரும் நாமம் போட முடியாத அளவுக்கு கறாரான வியாபாரப் பேர்வழி. 90களின் தமிங்கல யுகத்திற்கேற்ப குமுதத்தை மாற்றியவர்களில் சுஜாதாவும், மாலனும் முக்கியமானவர்கள். ‘என்னால்தான் சர்குலேஷன் உயர்ந்தது’ என்று குமுதத்தின் பங்குதாரர்களாக மாற விரும்பியதால் இந்த முன்னாள் ஆசிரியர்கள் வெளியேற்றப்பட்டார்கள். வெளியாட்களை ஆசிரியராகப் போட்டால்தானே இந்தத் தொல்லை என அமெரிக்காவில் மருத்துவத் தொழில் புரியும் செட்டியாரின் மகன் ஜவகர் பழனியப்பனையே ஆசிரியராக்கியிருக்கிறார்கள்.
குமுதத்தின் ஆசிரியர் குழுவினர் வார இறுதியில் உட்லண்ட்ஸ் ஓட்டலில் டிபன் சாப்பிட்டு மாலையில் மெரினாக் கடற்கரையில் அமர்ந்து அடுத்த வார இதழின் செய்திகளை விவதிப்பார்களாம். கடந்த 53 ஆண்டுகளாக வெளிவந்த 2809 குமுதக் குட்டிகளைப் பெற்றெடுத்த பாவம் மெரினாக் கடற்கரையையே சாரும்! ஆயினும் இதே அரட்டையைத்தான் கிராமத்தின் பணக்காரப் பண்ணைப் பெரிசுகள், திண்ணையில் தொந்தி புரள, வாயில் குதப்பிய வெற்றிலையுடன், ‘அடுத்தாத்து அம்புஜத்தை கவனிச்சேளா ஓய்’ என்று பல நூற்றாண்டுகளாய்ச் செய்து வருவதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
இலாபமே துணை
வாரம் 5 லட்சம் பிரதிகள் என ஆண்டுக்கு 265 இலட்சம் குமுதங்கள் விற்பனையாகின்றன. குமுதத்தின் விலையான 5 ரூபாயில், அதன் அனைத்து விதமான செலவுகளையும் கணக்கிட்டால் அடக்க விலை அதிக பட்சமாக ரூ.3.50 வரும். எனில் ஒரு இதழின் லாபம் 1.50. ஆண்டுக்கு 3 கோடியே 97 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய். குமுதத்தின் ஓரிதழில் 30 பக்கங்கள் விளம்பரத்திற்காக ஒதுக்கப்படும். அட்டை, வண்ணம், சிறப்பு என எல்லா விளம்பரங்களையும் கணக்கிட்டால் ஒரு பக்கத்திற்கு 75 ஆயிரம் ரூபாய் வரலாம். இவ்வகையில் வருடத்திற்கு 11 கோடியே 92 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய். தீபாவளி, பொங்கல், புத்தாண்டு என சிறப்பிதழ்களின் கூடுதல் வருமானத்தை சேர்த்தால் மொத்த ஆண்டு வருமானம் 20 கோடியைத் தாண்டும். ரிப்போர்ட்டர், மாலைமதி, பக்தி ஸ்பெஷல் போன்ற குமுதம் குடும்ப பத்திரிகைகளின் வருமானம் தனி.
குமுதத்தின் இட ஒதுக்கீடு
விளம்பரங்கள் போக உள்ள 130 பக்கங்களில் சராசரியான இட ஒதுக்கீடு தலைப்பு வாரியாக பின் வருமாறு. சமூகம் – 5, அரசியல் – 15, சினிமா – 19, தொலைக்காட்சி -5, இசை -1.5, விளையாட்டு – 2, மருத்துவம் – 5, வாசகர் கடிதம் – 2, உலகச் செய்தி – 2, ஜோக் – 3, சிறுகதைகள் – 9, ஒரு பக்க கதைகள் – 4, புதிர் போட்டி – 2, தொடர் கதைகள் – 15, உணவு – 2, சுற்றுலா – 4, பேஷன் – 4, வேலை, கல்வி – 3, கவிதை – 2, வியாபாரம் சுய முன்னேற்றம் – 5, நூல் அறிமுகம் – 1, பக்தி ஆன்மீகம் – 5, அரசு கேள்வி பதில் – 2, இதரவை – 12.5 என ஒதுக்கப்படுகிறது. குமுதல் ஒரு ஃபேன்ஸி ஸ்டோரின் மினுமினுப்பைக் கொண்டிருக்கும். இத்தனை சமாச்சாரங்கள் இருந்தாலும் அத்தனையிலும் குமுத்தின் லேகியம் கலந்திருக்கும்.
இட ஒதுக்கீட்டில் எழுத்து ஒதுக்கீடு
படங்கள் இல்லாமல் குமுதத்தின் ஒரு பக்கத்தில் 200 வார்த்தைகள் இடம் பெறும். குமுதத்தின் எல்லாக் கட்டுரைகளிலும் செய்தி போன்ற அரட்டை, ரசனை நடை, கிசுகிசு நடை, புகைப்படம், ஓவியம், வடிவமைப்பு இடம் ஆகியவை இடம் பெறும். குமுதத்தின் கதைகளுக்குரிய 30 பக்கங்களை கழித்து மீதியுள்ள 100 பக்கங்களைப் பிரித்துப் பார்ததால்,
செய்தி, அரட்டை = 40 பக்கங்கள், படங்கள் = 36 பக்கங்கள், கிசு கிசு நடை = 23 பக்கங்கள் என வரும். இதில் வாசகர்கள் ஓரளவிற்கேனும் துளியூண்டாவது செய்திகளைத் தெரிந்து கொள்வது 40 பக்கத்தில் மட்டும்தான். அதாவது 8000 வார்த்தைகள். இதைப் புதிய கலாச்சாரத்தின் வார்த்தை – பக்க அளவிற்கு மாற்றினால் 13 பக்கங்கள் வரும்.
இந்த 13 பக்க செய்திகளைத் தேர்வு செய்து, கண்டு, கேட்டு, படித்து, சுட்டு, மொழிமாற்றி, இன்னும் மூளையை கசக்கி எழுதினாலும் – ஒருமனித மூளை உழைக்க வேண்டியது அதிக பட்சம் 24 மணிநேரம் மட்டும்தான். இதையே கிசுகிசு – லேகியம் கலந்து ஊதிப்பெருக்கி எழுத கூடுதலாக ஒரு 24 மணிநேரம் வேண்டும். ஆனால் இதற்காகவே புரசைவாக்கத்தில் ஒரு மாளிகையைக் கட்டி, எல்லா நவீன வசதிகளையும் ஏற்படுத்தி, ஒரு பெரும்கூட்டமே வேலை செய்கிறது என்றால் தமிழன் செய்த பாவம்தான் என்ன?
புகைப்படங்கள்
குமுதத்தின் கதைகளில் இடம்பெறும் ஓவியங்களைக் கழித்துப் பார்த்தால் சுமார் 35 பக்கங்களை நிரப்பும் அளவுக்கு புகைப்படங்கள் வருகின்றன. இதில் சினிமா மனிதர்கள் – கவர்ச்சிப் படங்கள் 15 பக்கம், பிரபல அரசியல் தலைவர்களின் விதவிதமான கோணங்கள் 6 பக்கம், ஊருக்கு உபதேசம் செய்யும் தமிழக சமூகப் பிரபலங்கள் 6 பக்கம், இயற்கைக் காட்சிகள் 4 பக்கம், பொது மக்கள் 3 பக்கம் எனவும் இடம் பெறுகின்றனர். அதிலும் பொது மக்கள் ஸ்டாம்ப் சைசில் கறுப்பு-வெள்ளையில் தோன்றுவார்கள். சினிமாத்தோல் மட்டும் பளபளப்பு காகிதத்தில் பல வண்ணத்தில் முழு- அரை- கால் பக்க அளவுகளில் இடம்பெறும்.
ஒரு கட்டுரையின் மையமான விசயத்திற்கு வலு சேர்க்கும் விதத்தில்தான் புகைப்படங்கள், ஓவியங்கள் மற்றும் வடிவமைப்பு போன்றவை இடம் பெறும். ஆனால் குமுதத்தின் குறிப்பிட்ட கட்டுரைக்குள் நுழைவதற்கு ஆசை காட்டி அழைப்பதற்கே இவை பயன்படுகின்றன. இன்னும் பளிச்சென்று புரிய வேண்டுமானால் தரங்குறைந்த மேக்கப்புடன் தெருவோரத்தில் நிற்கும் விலைமாது ‘வாரியா’ என்றழைப்பதைத்தான் குமுதத்தின் புகைப்படங்களும் உணர்த்துகின்றன.
மேலும் சினிமா, பெண், மேட்டுக்குடி வாழ்க்கை, பேஷன் ஆகியவற்றின் புகைப்படங்கள் ஏற்படுத்தும் அழகு பற்றிய படிமங்கள், குமுதத்திற்கு பிரியாணி போடும் விளம்பங்களுக்கு தேவையான ஒன்றாகவும் இருக்கிறது.
விளம்பரங்கள்
‘பெண்களின் கனவு! எல்லா வயதிலும் பெண்களின் கனவு! ஆரோக்கியம்! கட்டுடல்! அழகு! – மெடிமிக்சின் சுந்தரி கேப்சூல் விளம்பரத்தின் வாசகம். குமுதம் உருவாக்க விரும்பும் மனிதர்களின் சாரத்தை ஒரு கவிதை போல 30 பக்க விளம்பரங்களும் தெரிவிக்கின்றன. நுகர்பொருள் நடுத்தர வர்க்கத்தையும் குறிப்பாக பெண்களையும் குறி வைத்து ஏவப்படும் இந்த விளம்பரங்கள் குமுதத்தின் சாரத்தை எளிமையாக புரியவைக்கும். பற்பசை, சோப், தேநீர், ஊறுகாய், காஃபி, பட்டு, பாத்திரங்கள், ஆன்மீகம், அனாதை இல்லம், ஆணுறை, உடலுறவு மாத்திரைகள், பைனான்ஸ், எல்.ஐ.சி. பாலிசி, கம்ப்யூட்டர் கல்வி, கருவளையம், ப்ரா, கூந்தல் தைலம், உடல் மெலிவு மாத்திரைகள், ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம், கூப்பன் காட்டினால் தள்ளுபடி, மெகா பரிசுப் போட்டி என்று நிலைக்கண்ணாடி முன், தன்னையும், தன் வாழ்க்கையையும் பார்க்க, ரசிக்க, அடைய வாசகர்களை பெண்களைப் பயிற்றுவிக்கின்றன.
குமுதவியல்
குமுதம் முதலாளிகள் உருவாக்கியிருக்கும் குமுதவியல் என்ற இரசனைதான் அவர்கள் கட்டிக்காத்து வரும் ஓரே சொத்து. அரசியல், ஆன்மீகம் தொடங்கி, செக்ஸ், சினிமா வரை ஆட்சி செய்யும் அந்த இரசனை, மூளையின் சிந்தனை நரம்புகளை மக்கிப் போகவைக்கிறது.
குமுதத்தின் அட்டையில் 80 சதவீதம் திரைப்பட நடிகைகள் கவர்ச்சியுடன் இடம் பெறுவர். அந்தக் கவர்ச்சியின் பின்னணியில் அரசியல் – சமூகக் கட்டுரைகளின் தலைப்பு பளிச்சென்று தெரியும். வெள்ளை பனியன் அணிந்த சிம்ரனின் இடையில் ஃப்ளோரசன்ட் ஆரஞ்சு வண்ணத்தில் தீண்டாமைக் கிராமங்கள் என்றொரு அட்டை சமீபத்தில் வெளிவந்தது. தீண்டாமைக் கட்டுரைக்கு தாழ்த்தப்பட்ட மக்களையோ, சேரிகளையோ போடுவதற்குப் பதில் சிம்ரனைப் போட்டிருப்பது ஆத்திரமாக அருவருப்பாக இல்லையா? அடுத்த வாரத்தின் வாசகர் கடிதத்தில் “சினிமாவில் கூட சிம்ரன் இத்தனை அழகாக இல்லை” என்று ஒருவர் எழுதுகிறார். இதுதான் குமுதவியலின் சாதனை.
எழுத்தில் குமுதம் செய்வதை காட்சியாக 24 மணிநேரமும் சன்.டி.வி செய்கிறது. அதனால் ஓரளவு முற்போக்கு – அரசியல் ஆர்வலர்களின் வட்டத்தை இழுப்பதற்கு கரூரில் தாலி கட்டிய சிறுமிகள், மதுரையில் விபச்சாரம் செய்யும் சிறுமிகள், வீட்டை விட்டு ஓடிவரும் சிறுவர்கள், மேலவளவு தீண்டாமை போன்ற செய்திகளை குமுதம் வெளியிடுகிறது. இந்தத் தூண்டிலில் சிக்கும் புதியவர்கள் ஏனைய பக்கங்களையும் படிக்க வேண்டும் என்பதுதான் நோக்கம். குமுதத்தின் ஆன்மீகம், வேலை வாய்ப்பு, கல்விப் பயிற்சி, உடல்நலம் போன்ற பிரிவுகளுக்கும் இது பொருந்தும். தத்தமது நோக்கத்திற்காக குமுதத்தை திறப்பவர்கள், மூடும்போது மூளை மரத்த பிண்டங்களாக மாற்றப்படுவதுதான் குமுதவியலின் மகிமை.
அரசியலையும், சமூகவியலையும் உருவிவிட்டு தலைவர்களது பழக்கவழக்கங்கள், உறவுகள், மோதல்கள் போன்றவற்றைத் தருவதுதான் குமுதத்தின் அரசியல் கட்டுரைகள். “வைரமுத்துவுடன் திடீரென்று மாமல்லபுரம் செல்கிறார் கலைஞர். ரஜினி, கமல், அண்ணா, பெரியார் பற்றி விவாதிக்கும் கலைஞர், பொறித்த மீனை வைரமுத்துவுக்குப் போடச் சொல்லும் கலைஞர், வீட்டு நாயை சமாதானப்படுத்துமாறு செல்போனில் அழைக்கும் தயாளு அம்மாளுடன் பேசும் கலைஞர் – இலையே கலைஞரின் மாமல்லபுரம் விசிட் பற்றிய 4 பக்கக் கட்டுரைச் செய்திகள்.
இப்படி தலைவர்களது சேட்டைகள், பேட்டிகள், சவுடால்கள், சந்தர்ப்பவாதங்கள் அனைத்தையும் மறக்கச் செய்து அவர்கள் பல் தேய்த்து – பழம் தின்ற கதைகளை ரசனையுடன் வெளியிடுவதில் குமுதம் ஒரு முன்னோடி.
காந்தி ஜயந்தியை நினைவு கூறும் குமுதம், பொள்ளாச்சி பூச்சி மருந்து வியாபாரி ஒருவர் காந்தி தபால் தலைகளைச் சேகரித்திருப்பதை தெரிவிக்கிறது. பொங்கல் சிறப்பிதழ் ஒன்றில், தமிழே தெரியாத பம்பாய் நடிகை பொங்கலிடுவதையும், கோலமிடுவதையும், பொங்கல் பற்றிய அவரது தத்துவங்களையும் வெளியிடுகிறது. காதல் சிறப்பிதழ் ஒன்றில், சேலம் அருகே உள்ள கிராமத்தினர், ஓடிப்போகும் காதலர்களை மீட்டு வந்து சுடுகாட்டில் தாலிகட்ட வைப்பதாக ஒரு செய்தி. இங்கே காந்தியும், காதலும், பொங்கலும் கீழான ரசனையில் ஜொலிப்பதுதான் குமுதவியலின் புதுமை.
முன்அட்டை முதல் பின் அட்டை வரை எல்லா பக்கங்களிலும் சினிமா விரவியிருக்கும். நடுத்தர வர்க்கத்து பெண்மணிகள் சமைத்து ஓய்ந்த நேரங்களில் பேசிக் கொள்ளும் ஒரே சமூக விசயம் குமுதத்தின் சினிமா செய்திகள்தான். அரசியல் தலைவர்களை விட சினிமா நாயகிகளின் பழக்க வழக்கங்கள் நுணுக்கமாகப் பதியப்படும். சினிமாக் குமுதம்தான் வாசகர்களின் ரசனை, படிப்பு, கண்ணோட்டம் அனைத்தையும் கற்றுக் கொடுக்கிறது.
மோனிகா லிவின்ஸ்கி குண்டான செய்தியும், டென்னிஸ் நட்சத்திரங்கள் அகாஸி – ஸ்டெபிகிராப் காதல் படங்களும் அயல்நாட்டு செய்திகளாய் அணி வகுக்கும். ‘குடும்ப விழாவில் உங்களை ரகசியமாக பெண் பார்க்கும் போதும்’, விருந்திற்கு வந்த இளைஞர் கூட்டம் உங்கள் மார்பிலிருந்து கண்ணை அகற்றாமல் இருப்பதற்கும் போட வேண்டிய உடைகள், அழகுக் குறிப்புகள் ‘பேஷன் வாட்ச் பகுதியில் இடம் பெறும். இவையெல்லாம் விபச்சாரத்திற்கான வழிமுறைகள் என்பது படிக்கும் பெண்களுக்கு தோன்றாது.
பக்திக் கட்டுரையில் தஞ்சாவூர்க் கோவில்களின் புராண புரட்டுக் கதைகள் குமுதவியலின் திரைக்கதை வடிவில் வெளிவரும். சென்று வரும் செலவு, பாவ – பரிகார பட்டியல், கதை சொல்லும் நீதி, குறிப்பிட்ட கடவுள் எந்தப் பிரச்சினையைத் தீர்ப்பார் என்று குறிப்பும் உண்டு. ‘இந்து’ உணர்வை எழுப்பப் போராடும் இந்து முன்னணி கூட இவ்விசயத்தில் குமுதத்திடம் பிச்சை எடுக்க வேண்டும்.
பக்திக்குப் பிறகு வியாபாரம், சுய முன்னேற்றம், இரண்டரை லட்சம் முதல் போட்டு 73,000 கோடியில் நிற்கும் திருபாய் அம்பானியின் கதை ஆங்கிலப் படத்தின் டிரெய்லர் போல வரும். மோசடியால் முன்னேறிய இத்தகைய ‘பிசினஸ் மகாராஜாக்கள்’ குமுதத்தில் கைபட்டு உழைப்பால் உயர்ந்த உத்தமர்களாக காட்சியளிப்பார்கள்.
பாலுறுவு இச்சையைத் தூண்டிவிட்டு வேறு ஒன்றில் முடியும் 1 பக்க கதைகள், கள்ள உறவு தத்துவப் புகழ் பாலகுமாரன் போன்றோரின் தொடர்கதைகள் போன்றவை குமுதவியலின் கதை இலாகாவில் தவறாமல் இடம் பெறும்.
இப்படித்தான் குமுதத்தின் ஒவ்வொரு பக்கமும் உழைத்து, இழைத்து , செதுக்கி உருவாக்கப்படுகிறது. சர்ரியலிசம், மாஜிகல் ரியலிசம், போஸ்ட் மாடர்னிசம் போன்ற, சிறு பத்திரிகைகள் மண்டை பிளக்க விவாதிக்கும் இசங்களின் நடைமுறை உதாரணம் குமுதம் மட்டும்தான். வாழ்க்கையை விளையாட்டாக, வேடிக்கையாக, ரசனையாகப் பார்க்க வைக்கும் குமுதவியல், வாழ்க்கையைத் தீவிரமாகப் பார்க்க விடாமலும் வினையாற்றுகிறது. நினைவில் நிற்காத குமுதத்தின் பக்கங்கள், நினைவில் நிறுத்த வேண்டிய பிரச்சினைகளை மறப்பதற்கும் கற்றுக் கொடுக்கிறது. குமுதத்தின் நொறுக்குத் தீனி ரசனை, வாழ்க்கை பற்றிய சமூக மதிப்பீடுகளை நொறுக்குகிறது.
தமிழ் சினிமாவிற்கு முன்பு விதிக்கப்பட்ட கேளிக்கை வரி குமுதத்திற்கு கிடையாது. குமுதத்திற்கு அளிக்கப்பட்டிருக்கும் தபால் இரயில் சலுகைக் கட்டணங்களின் மதிப்பு பல கோடியிருக்கும். பொதுத் துறைகள் நட்டமடைய குமுதமும் ஒரு காரணம் என்பதை தொழிலாளிகள் உணர வேண்டும். மரங்களை வெட்டிக் கூழாக்கித்தான் செய்திக்காகிதம் தயாரிக்கப்படுகிறது. ஒரு வருட குமுதத்திற்கு தேவைப்படும் காகிதம் பல லட்சம் மெட்ரிக் டன்னாகும். குமுதத்திற்காக உலகெங்கும் லட்சக்கணக்கான மரங்கள் ஆண்டு தோறும் அழிக்கப்படுகின்றன.
குமுதத்திடமிருந்து காட்டின் இயற்கை வளத்தையும், நாட்டின் சிந்தனை வளத்தையும் காப்பாற்றுங்கள் !
-புதிய கலாச்சாரம், மார்ச் – 2000
பின் குறிப்பு: இதே ஆய்வு பிற ‘குடும்ப’ பத்திரிக்கைகளான ஆனந்த விகடன், குங்குமம் போன்ற பத்திரிக்கைகளுக்கும் பொருந்தும். டப்பா வேறு, லேகியம் ஒன்று

கற்றோருக்கிடையே கருத்து வேறுபாடுகள்!
Filed under 2011 ஜனவரி by அந்நஜாத்
முஹிப்புல் இஸ்லாம்
“எவர்களுக்குத் தெளிவான ஆதாரங்கள் வந்த பின்னரும் பிளவுண்டு பிரிந்து போனார்களோ அவர்களைப் போன்று நீங்களும் ஆகிவிட வேண்டாம்… அவர்களுக்கே தாம் மகத்தான வேதனையுண்டு. (அல்குர்ஆன் 3:105)
தூய இஸ்லாத்தை கருத்து வேறுபாட்டுத் தீயிலிட்டுப் பொசுக்கும் திருப்பணியைத் தொடர்ந்து வரும் மார்க்கம் கற்றோரே (ஆலிம்களே)! நீங்கள் கற்றது உண்மையான இஸ்லாமிய கல்வியயன்றால் உங்களிடம் ஏனித்தனை வன்மம்? மற்றவர்களுக்குப் பிரச்சனையேற்பட்டால் தீர்த்து வைக்கும் பொறுப்பேற்ற நீங்கள் இன்று சமுதாயத்திற்குப் பெரும் பிரச்சனையாகி விட்டீர்களே….
அல்லாஹ்வின் கயிற்றைப் பற்றிப் பிடித்து சமுதாயத்தை ஒற்றுமைப்படுத்த வேண்டிய நீங்கள்! இன்று வேற்றுமையையல்லவா விதைத்துக் கொண்டிருக்கிறீர்கள்!
நீதியின் அரியாசனத்தை அலங்கரிக்க வேண்டியவர்கள்-குற்றவாளிக் கூண்டிற்கு விரைந்து கொண்டிருக்கும் கொடுமை உங்களுக்கு இதமாகவா இருக்கிறது? சமுதாயத்தில் ஒருவர் கூடவா இதன் கடமையை இன்னும் உணராமலிக்கிறீர்கள்? உணர்ந்தோர் ஒரு சிலரும்-உணர்த்த முற்படாமல் நமக்கேன் இந்த வீண் வம்பு என்று ஒதுங்கியிருக்கிறீர்கள்.
மார்க்கம் கற்றவர்களே! சற்று சிந்தியுங்கள்-பொறுமையாக….!
நீங்கள் முட்டி மோதி பிளவுபட்டுக் கொண்டிருக்கும் இழுக்கு-உங்களோடு மட்டும் ஒழியவில்லை. மாறாக அந்த அழுக்கு-இஸ்லாத்தை அசுத்தப்படுத்துவதை நீங்கள் அறியவில்லையா? நீங்கள் கற்றது உண்மையில் தீனுல் இஸ்லாம் ஒன்றேயெனில் நீங்கள் பல்வேறு பிரிவுகளாய் செயல்படுவதேன்?
உங்களுடைய கருத்து வேறுபாடு-சமுதாயத்தை சின்னாபின்னமாக்கிக் கொண்டிருப்பதும் நீங்கள் அறியாததல்ல.
சமுதாயம் சிதறினால்தான் உங்கள் பிழைப்பை வெற்றிகரமாய் தொடர முடியும் என்ற வரட்டு முடிவுக்கு வந்து விட்டீர்களா? அறிஞர்கள் என்ற பட்டயத்திற்கு சொந்தம் கொண்டாடும் நீங்கள் அறிவிலிகளாக மாறிக் கொண்டிருப்பதை அறியவில்லையா? சிறு-சிறு சில்லறை விஷயங்களில் வேறு பட்டாலே சிதறும் சமுதாயத்தை இன்று மூலக் கொள்கைகளில் மோதலையேற்படுத்தி அதிர வைத்துக் கொண்டிருக்கிறீர்களே? நியாயம்தானா? அறியாத மக்கள் உண்மை புரிய உழைக்க வேண்டிய நீங்கள் அந்த மக்களைக் குழப்பத்திலாழ்த்தி அலைக்கழிக்கலாமா?
நாங்கள் மற்றதெல்லாம் கற்றோம். மார்க்கத்தைக் கற்கவில்லை. எல்லோருக்கும் பொதுவுடமையாக வேண்டிய இஸ்லாமியக் கல்வியை உங்களுக்கு மட்டும் தனியுடமையாக்கியது மட்டுமே நாங்கள் செய்த தவறு…! இமாலயத் தவறு! ஒப்புக் கொள்கிறோம் இப்போது காலம் கடந்தாவது. அதற்காக நீங்கள் அறியாமையில் மூழ்கிக் கிடக்கும் அப்பாவி மக்களை உங்கள் மோதலுக்கு பலியாக்கிக் கொண்டிருக்கிறீர்களே!
ஓ! எத்துணை கொடூர தண்டனை!
அன்று! இறைத் தூதர்(ஸல்) அவர்கள் அந்த காரத்தில் மூழ்கிக் கிடந்த அப்பாவி மக்களுக்கு அறிவொளியல்லவா பாய்ச்சினார்கள். ஆனால் நீங்கள் இன்று! இறை வாக்கிற்கு முரண்பட்டாலும் உங்கள் வாக்கை வேதவாக்கென்றும்…
நபி வழிக்கு மாற்றமாய் நீங்கள் நடைபோட்டாலும் உங்கள் வழியே நபி வழியென்றும் அப்பட்டமாய் நம்பும் அப்பாவி மக்கள்!
ஓ..! இந்த சமுதாய மக்களுக்கு உங்கள் மேல் எத்தனை நம்பிக்கை! உறுதியான அசைக்க முடியாத நம்பிக்கை!
நீங்கள் தவறிழைக்க மாட்டீர்கள்!
நீங்கள் தவறுரைக்க மாட்டீர்கள்!
உங்களிடம் அல்லாஹ்மேல் ஆணையிட்டுக் கேட்கிறோம்! நீங்கள் இந்த நம்பிக்கைக்கு உரித்தானவர்கள்தானா…?
உங்கள் நடவடிக்கைகள் இந்த நம்பிக்கையைத் தகர்த்தெறிந்து கொண்டிருக்கின்றன; இதை நீங்கள் நன்கறிந்திருந்தும் அறியாதோர் போல் வாளாவிருக் கின்றீர்களே….!
“”ஏன் திருடினாய் உன் எஜமானர் உன் மேல் பரிபூரண நம்பிக்கை வைத்திருந்த நிலையில்?” என்று குற்றவாளிக் கூண்டிலேற்றப்பட்ட திருடனி டம் நீதிபதி வினவியபோது…
“அப்படியொரு நம்பிக்கை வைத்ததால் தான் என்னால் திருட முடிந்தது’ என்று திருடன் தன் தவறை நியாயப்படுத்திய சம்பவம் தான் நினைவுக்கு வருகிறது.
உங்கள் மேல் நாங்கள் காட்டும் அபரிமித மரியாதையும், மார்க்கத்தைச் சரியாக உணர்ந்தவர்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையும்…எங்கள் மீது எதையும் திணித்து விடலாம்! நீங்கள் கூறும், எழுதும் எதையும் எவ்வித மறுப்புமின்றி ஏற்றிடுவோம்! என்ற உறுதி உங்களுக்கு ஏற்பட்டு விட்டது.
மக்கள் அறியாமையால் ஏமாறுகிறார்கள், எப் படி வேண்டுமானாலும் அவர்களை ஏமாற்றலாம்.காட்டுவோம் கைவரிசையை.. என்று மார்க்கம் குறித்து எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பேசலாம்; எழுதலாம்; விளக்கலாம் என்று மக்களின் நம்பிக்கையைத் துஷ்பிரயோகம் செய்து கொண்டிருக்கிறீர்களே…! நியாயம் தானா?
மார்க்கம் கற்றவர்கள் அனைவரும்-எல்லா வகை விமர்சனங்களுக்கும் அப்பாற்பட்ட-அப்பழுக்கற்றவர்கள், என்ற தப்பான எண்ணத்தை மக்களின் மனதில் பதித்து-நீங்கள் செய்து வரும் தவறுகளை வெகு சாமர்த்தியமாக மறைத்து வெற்றிகரமாய் உங்கள் பிழைப்பைத் திட்டமிட்டு நடத்திக் கொண்டு வருகிறீர்கள்.
நீங்கள் இஸ்லாமியக் கொள்கைக் கோட்டையைத் தகர்க்கும் நேரங்களில்-அதைத் தகுந்த ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டினாலும்-எடுத்துக் காட்டிய வரை எதிரியாகப் பாவித்து-அவர்மீது வீண்பழி சுமத்தி மக்கள் முன் குற்றவாளியாக்கி-உங்கள் தவறை நியாயப்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்கிறீர்களேயன்றி, தவறை தவறென்றுணர்ந்து திருந்த முன் வருவோர். (அரிதிலும் அரிது) விரல் விட்டெண்ணுமளவே…!
…நீங்கள் அறிந்து கொண்டே உண்மையை மறைக்கவும், சத்தியத்தை அசத்தியத்தைக் கொண்டு கலக்கவும் செய்யாதீர்கள்.” (அல்குர்ஆன் 2:42)
ஒன்றே தெய்வம்-அல்லாஹ்…!
ஒன்றே நமது நெறிநூல்… அல்குர்ஆன்…!
நமது வழிகாட்டியும் ஒருவரே… இறைத் தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் மட்டுமே…!
இவை உங்கள் பேச்சிலும் எழுத்திலும் முழக்கத்திற்குரிய தத்துவமாய் மாற்றப்பட்டு விட்டனவேயன்றி… இன்று இஸ்லாத்தின் பெயரால் உங்கட்கிடையே எண்ணிலடங்கா கொள்கை வேறுபாடுகள் நாளும் பல்கிப் பெருகிக் கொண்டிருக்கின்றன. ஏனிந்த வேறுபாடுகள்…? எப்படி யாரால் இந்த வேறுபாடுகள் எழுகின்றன? என்று என்றாவது எண்ணிப் பார்த்ததுண்டா?
இஸ்லாமிய கொள்கை கோட்பாடுகளில் … மார்க்கம் கற்றவருக்கு… மார்க்கம் கற்றவர் மாறுபடுவதேன்?
ஒரே விஷயத்திற்குப் பல்வேறு மாறுபட்ட .. ஒன்றிற்கொன்று முற்றிலும் முரண்பட்ட விளக்கங்கள்….!
ஆளுக்கொரு கொள்கை…!
வேளைக்கொரு ஃபத்வா…!
நாளுக்கொரு கருத்து…!
ஒரே மதரஸாவில் ஒன்றாக ஓதி… ஒன்றாக தஹ்ஸீல் (பட்டம்) ஆகி… அதே மதரஸாவில் ஒன்றாகப் பணி புரியும் இரு பேராசிரியர்கள்…! இஸ்லாமியக் கொள்கை சம்மந்தப்பட்ட எந்த விஷயமானாலும் சரி…ஒருமித்த கருத்தைக் கொண்டிருந்ததில்லை. மக்கள் இருவரிடமும் அபிமானம் பூண்டவர்கள்! ஒருவருக்கு இருவரிடம் கேட்டு விஷயத்தை விளங்க வேண்டும் என்ற ஆர்வம் அவர்களுக்கு…! ஒரே விஷயத்திற்கு இருவரும் கொடுக்கும் மாறுபட்ட விளக்கங்கள்…! இருவரும் தத்தமது கூற்றே சரியயன வாதித்து விளக்கம் கேட்க வந்தவரை, அப்பாவியைக் குழப்பத்திலாழ்த்திவிடுவர்.
ஏன் விளக்கம் பெற வந்தோம்…! விளக்கத்திற்கு பகரமாய் குழப்பமல்லவா எமக்குப் பரிசாய் கிடைத்திருக்கிறது! ஏமாற்றம். இறுதியில் மிஞ்சுவது வேதனை! எதைத் தெரிய விழைந்தாலும் குழப்பம் தான்! ஏனிப்படி…? இது விளக்குபவர் குறை என்பதை உணராத மக்கள்-இஸ்லாத்தில் எதற்கும் தெளி வில்லை போல் தெரிகிறது! மதரஸாவில் ஓதி பட்டம் பெற்றவர்கள் நிலையே இதுவெனில் ஒன்று மறியாத நாம் எப்படி உண்மையை உணர முடியும்…? குழப்பம் நிறைந்த விஷயங்களில் ஒளிந்திருக்கும் உண்மையை எந்த அளவு கோலைக் கொண்டு பாகுபடுத்தி உண்மையை உணர்வது…? நமக்கேன் இந்த வேண்டாத வேலை…? இறையருளிய எளிய இனிய மார்க்கம், பாமர மக்கள் முன் பூதகரமாய், கடுமையாய், சிக்கல் நிறைந்த தாய் சித்தரிக்கப்படுவதால், மக்கள் மார்க்கத்தை அறிவதிலிருந்து ஒதுங்கிக் கொண்டு வருகிறார்கள் பல இடங்களில்….
ஒரு ஊரின் நிலைதானிப்படி…! மற்ற ஊர்களில் இந்த நிலையிருக்காது என்று அங்குள்ளோரை அணுகினாலும் எங்கும் இதே நிலைதான் நீடிக்கிறது என்பது மிகவும் வேதனைக்குரிய கசப்பான உண்மை. நாடெங்கிலும் இதே நிலை தான்… இன்றளவும்.
மதரஸாக்களில் வெளியாகும் ஃபத்வா (மார்க் கத் தீர்ப்புகள்) மவ்லவிகள், மவ்லவிகள் அல்லாதார் வெளியிடும் கருத்துக்கள்: மேடைகளில் முழக்கம் செய்யப்படும் இஸ்லாமியக் கருத்துக்கள் இவையனைத்தும் ஒன்றிற்கொன்று முரணாகவோ அல்லது சில்லறை அபிப்பிராய பேதங்களை உண்டாக்குகிறதேயன்றி ஒருமித்தக் கருத்தை உருவாக்க உதவவில்லை.
இதனால் இன்று நம் சமுதாயத்தில் பல்வேறு கொள்கைப் பிரிவுகள் பல்வேறு பெயர்களில் உருவாகி வருகிறது. ஒரே கொள்கைப் பிரிவார் மற்றொரு கொள்கைப் பிரிவாரை எதிரியாக-விரோதியாக பாவிக்கும் சூழ்நிலையும் கருக் கொண்டுள்ளது. ஆங்காங்கே தாக்குதல்களும் நிகழ்ந்துள்ளன. இதற்கெல்லாம் ஒட்டுமொத்த மாய் பலியாகிக் கொண்டிருப்பது மார்க்கமறியா மக்கள் கூட்டம்தான். மார்க்கம் கற்றவர்களால் உருவாக்கப்படும் கருத்து வேறுபாடுகள் தான் இதற்கு முக்கியக் காரணம் என்பதில் மாற்றுக் கருத்திற்கிடமில்லை.
இதைத் தடுத்து நிறுத்த சமுதாயம் முழுமையும் ஒட்டுமொத்தமாய்-முழு மூச்சுடன்-போர்க்கால அவசரத்துடன் இயங்க முன்வர வேண்டும். குர்ஆன், ஹதீஸை நேரடியாக விளங்கிச் செயல் பட வேண்டும். மாற்றான் நமது ஷரீஅத்தில் சிறு மாறுதல் செய்ய முனைந்தபோது ஒன்றுபட்டு வெற்றி கண்டதுபோல்… நமது மார்க்கம் கற்றோரே… இஸ்லாத்தின் கொள்கைகளைப் புரட்ட முனைந்திருக்கும் இந்த இக்கட்டான காலகட்டத்தில்… நாம் இன்னும் அதிவேகத்துடனும், விவேகத்துடனும் செயல்பட்டு….
இறையருளிய இஸ்லாமிய வாழ்க்கை நெறி ஒன்றே என்று உலகிற்கு உணர்த்தக் கடமைப் பட்டுள்ளோம்.
“மேலும் நீங்கள் அனைவரும் ஜமாஅத்தாக அல்லாஹ்வின் கயிற்றைக் கெட்டியாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்து விடவும் வேண்டாம்.” (அல்குர்ஆன் 3:103)

இந்து பயங்கரவாதத்தின் நிரூபணங்கள்: மாலேகான், அஜ்மீர், மெக்கா மசூதி, சம்ஜவ்தா குண்டு வெடிப்புகள்!
“மலேகான் நகரில் முஸ்லிம்கள் 80 சதவீதத்தினராக இருப்பதால், எங்களது முதலாவது குண்டுவெடிப்பை மலேகானில் நடத்தினோம்… இதற்காக 2006-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பிரக்யா சிங், சுனில் ஜோஷி, பாரத் ரித்தேஷ்வர் ஆகியோருடன் சேர்ந்து நான் திட்டமிட்டேன்… அஜ்மீர் தர்காவுக்கு இந்துக்களும் அதிக அளவில் வழிபாட்டுக்கு வருவதால், அதனைத் தடுக்கவும் இந்துக்களை அச்சுறுத்தவும் குண்டு வெடிப்பு நடத்தப்பட்டது… சம்ஜவ்தா விரைவு வண்டி குண்டுவெடிப்பை சுனில்ஜோஷி பொறுப்பேற்று நடத்தினான்…”
- ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதி அசீமானந்தாவின் ஒப்புதல் வாக்குமூலம்.
***
கடந்த 2006-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ஆம் நாள் மகாராஷ்டிரா மாநிலம் மலேகான் நகரின் முஸ்லிம்கள் நெருக்கமாக வாழும் பகுதியில் நான்கு குண்டுகள் வெடித்தன. 2007 நவம்பர் 11-ஆம் தேதியன்று ராஜஸ்தானின் அஜ்மீர் தர்காவில் ரம்ஜான் நோன்பு காலத்தில் குண்டுகள் வெடித்தன. 2007-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இந்தியாவின் டெல்லிக்கும் பாகிஸ்தானின் லாகூருக்குமிடையே ஓடும் சம்ஜவ்தா விரைவு வண்டியில், அரியானா மாநிலத்தின் பானிபட் அருகே குண்டு வெடித்தது. அதைத் தொடர்ந்து மே மாதத்தில் ஆந்திராவின் தலைநகர் ஐதராபாத்தின் மெக்கா மசூதியில் குண்டு வெடித்தது. மலேகான் நகரில் 2008-ஆம் ஆண்டு செப்டம்பர் 29-ஆம் தேதியன்று மீண்டும் குண்டுகள் வெடித்தன. இக்குண்டு வெடிப்புகளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கோரமாகக் கொல்லப்பட்டார்கள். பலர் படுகாயமடைந்தார்கள்.
இப்படி ஒவ்வொரு முறையும் குண்டுகள் வெடிக்கும் போதெல்லாம், பார்ப்பன – முதலாளித்துவ ஊடகங்கள் இதற்கு முஸ்லிம் தீவிரவாதிகள்தான் காரணம் என்று எவ்வித விசாரணையுமின்றி குற்றம் சாட்டின. 2007-ஆம் ஆண்டில் பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சர் குர்ஷித் கசூரி அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா வந்திருந்த போது, சம்ஜவ்தா விரைவு வண்டியில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இந்தியா-பாகிஸ்தானிடையே நல்லுறவு ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கத்துடன் இஸ்லாமியத் தீவிரவாதிகள் இக்குண்டு வெடிப்பை நடத்தியதாக பார்ப்பன – முதலாளித்துவ ஊடகங்கள் சகட்டு மேனிக்குக் குற்றம் சாட்டின. இது ஹூஜி மற்றும் லஸ்கர்-இ-தொய்பா ஆகிய இஸ்லாமிய பயங்கரவாத இயக்கங்களின் சதி என்று அமெரிக்காவும் கூறியது.
இக்குண்டு வெடிப்புகள் குறித்து ஆரம்ப விசாரணை தொடங்குவதற்கு முன்பாகவே போலீசையும் துணை ராணுவப் படைகளையும் ஏவி முஸ்லிம் குடியிருப்புகளை அரசு சுற்றி வளைத்தது. சட்டப்படியும் சட்டவிரோதமாகவும் நூற்றுக்கணக்கான அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு கொடிய சித்திரவதைக்கு ஆளாயினர். அவர்களது இளமையும் எதிர்காலமும் நொறுங்கிப் போயின. பயங்கரவாதி என்ற அவமானத்தோடு, அவர்களது குடும்பங்கள் அலைக்கழிக்கப்பட்டு கையறு நிலையில் தவித்தன. குண்டு வெடிப்புகளில் கொல்லப்பட்டோரின் குடும்பங்களைப் போலவே, குண்டு வெடிப்பில் ஈடுபட்டதாகப் பொய்க்குற்றம் சாட்டி கைது செய்யப்பட்ட அப்பாவிகளின் குடும்பங்களும் பிச்சையெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டன.
***
கடந்த 2006-ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலத்தின் நான்டெட் நகரில் வெடிகுண்டுகள் தயாரித்தபோது விபத்து நடந்து ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகள் இருவர் மாண்டனர். ஐந்துபேர் படுகாயமடைந்தனர். அதைத் தொடர்ந்து பார்ப்பன பயங்கரவாதிகள் 21 பேரை மகாராஷ்டிர பயங்கரவாத எதிர்ப்பு அதிரடி போலீசு அடுத்தடுத்து கைது செய்து ஔரங்காபாத் தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் அவர்களுக்கு எதிராகக் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது. இருப்பினும், போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி நீதிமன்றம் அவர்களுள் 11 பேரை விடுவிக்க எத்தணித்தது. இதை எதிர்த்து உள்ளூர் முஸ்லிம்கள் போராடியதோடு, சி.பி.ஐ. விசாரணை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். நீண்ட இழுபறிக்குப் பிறகே, சி.பி.ஐ.யின் விசாரணை தொடங்கியது.
சம்ஜவ்தா விரைவு வண்டி குண்டு வெடிப்பில் பயன்படுத்தப்பட்ட ஆர்.டி.எக்ஸ். ரகத்தைச் சேர்ந்த வெடிபொருளை முன்னாள் இராணுவ அதிகாரியான சிறீகாந்த் புரோகித் கள்ளத்தனமாக ஜம்முவிலிருந்து வாங்கிக் கொடுத்ததற்கான அறிகுறிகள் கிடைத்தன. மலேகான் குண்டு வெடிப்பிலும் ஆர்.டி.எக்ஸ். ரக வெடிபொருள் பயன்படுத்தப்பட்டிருந்தது. இக்குண்டு வெடிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளின் சேசிஸ் எண்ணைக் கொண்டு, அது அகில பாரத வித்யார்த்தி பரிசத் எனும் மாணவர் அமைப்பின் தலைவராக இருந்து, பின்னர் அபிநவ் பாரத் எனும் அமைப்பின் பெண் சாமியாரான சாத்வி பிரக்யா சிங்கினுடையது என்பதை மகாராஷ்டிர தீவிரவாத எதிர்ப்பு சிறப்புப் போலீசுப்படைத் தலைவரான ஹேமந்த் கார்கரே கண்டறிந்தார். கடந்த 2008-ஆம் ஆண்டில் பிரக்யா சிங் கைது செய்யப்பட்டாள்.
அவளைத் தொடர்ந்து முன்னாள் இராணுவ அதிகாரியான சிறீகாந்த் புரோகித், ஜம்முவில் சாரதா பீடம் என்ற பெயரில் ஆசிரம் நடத்தி வந்த தயானந்த் பாண்டே மற்றும் மலேகான் குண்டுவெடிப்பில் ஈடுபட்ட 11 பேரை ஹேமந்த் கார்கரே கைது செய்தார். பிரக்யா சிங்கை விசாரணை செய்த போது, ம.பி.யைச் சேர்ந்த சுனில்ஜோஷி, ராமச்சந்திர கல்சங்கரா, சந்தீப் டாங்கே, அசீமானந்தா, பாரத் ரித்தேஷ்வர் முதலானோர் முக்கிய சதிகாரர்கள் என்பது தெரிய வந்தது. விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே 2008, நவம்பர் 26 அன்று மும்பையில் நடந்த இஸ்லாமியத் தீவிரவாதிகளின் தாக்குதலில் கார்கரே பலியானார். இதற்கிடையே சுனில்ஜோஷி இந்துவெறி பயங்கரவாதிகளாலேயே கொல்லப்பட்டான். மற்றவர்கள் தப்பியோடி தலைமறைவாகிவிட்டனர்.
மலேகான் மற்றும் சம்ஜவ்தா எக்ஸ்பிரசில் வெடித்த குண்டுகள் ஆர்.டி.எக்ஸ். ரகத்தைச் சேர்ந்தவையாக இருந்ததால், இக்குண்டு வெடிப்புகளில் இந்துவெறி பயங்கரவாதிகளுக்குத் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் சி.பி.ஐ. விசாரணையை மேற்கொண்டது. தயானந்த் பாண்டேயின் கணினியிலிருந்து கிடைத்த 37 உரையாடல்கள் பதிவு செய்யப்பட்டன. இவையனைத்தும் பயங்கரவாதத் தாக்குதலுக்கு இவர்கள் திட்டமிட்டதை நிரூபித்துக் காட்டின. இதனடிப்படையில், கடந்த 2010-ஆம் ஆண்டு நவம்பர் 19-ஆம் தேதியன்று ஆர்.எஸ்.எஸ்.-இன் முழுநேர ஊழியரான சுவாமி அசீமானந்தா எனப்படும் நாப குமார் சர்க்கார் கைது செய்யப்பட்டு சிறையிடப்பட்டான். ஒரு மாதம் கழித்து டிசம்பர் 18-ஆம் தேதியன்று டெல்லி வழக்கு மன்றத்துக்கு விசாரணைக்குக் கொண்டுவரப்பட்ட அசீமானந்தா, இக்குண்டுவைப்புகளில் ஈடுபட்டது நாங்கள்தான் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளான். போலீசாரின் முன்னிலையில் பெறப்படும் வாக்குமூலங்களை விட, நீதிபதி முன்னிலையில் அளிக்கப்பட்ட வாக்குமூலங்கள் சட்டப்படி உறுதியான ஆதாரங்களாகியுள்ளதால், குண்டுவைப்பு பயங்கரவாதச் செயல்களில் இந்துவெறி ஆர்.எஸ்.எஸ். ஈடுபட்டிருப்பது சந்தேகத்திற்கிடமின்றி நிரூபணமாகியுள்ளது.
மே.வங்கத்தைச் சேர்ந்த நாப குமார் எனப்படும் அசீமானந்தா, 1977-இல் ஆர்.எஸ்.எஸ்-இன் முழுநேர ஊழியனாகி மே.வங்கத்திலும் பின்னர் அந்தமானிலும் ஆர்.எஸ்.எஸ்.-இன் பரிவாரங்களில் ஒன்றான வனவாசி கல்யாண் ஆசிரமத் தலைவராகப் பணியாற்றியுள்ளான். பின்னர் 1997-இல், இவன் குஜராத்தின் டாங் மாவட்டத்தில் ஷப்ரிதாம் என்னும் ஆசிரமத்தை நிறுவிக் கொண்டு சிறுபான்மை முஸ்லிம்களுக்கும் கிறித்துவர்களுக்கும் எதிராக ஆத்திரமூட்டும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வந்தான். இவன் குஜராத் முதல்வர் மோடி, ம.பி. முதல்வர் சிவராஜ்சிங் சௌகான், ஆர்.எஸ்.எஸ். தலைவர்களான சுதர்சன், மோகன் பாகவத் ஆகியோருக்கு நெருக்கமானவன். பயங்கரவாதிகளின் சித்தாந்த குருவான இவன்தான் அஜ்மீர், ஐதராபாத், மலேகான் முதலான இடங்களில் குண்டுவைக்க இலக்குகளைத் தீர்மானித்து வழிகாட்டியுள்ளான். 2008-இல் பெண் சாமியாரான பிரக்யா சிங் கைது செய்யப்பட்ட பிறகு, அசீமானந்தா தப்பியோடி தலைமறைவாகிவிட்டான். கடந்த 2010 நவம்பர் 19-ஆம் தேதியன்று அரித்துவாரில் பதுங்கியிருந்தபோது சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டான்.
தன்னோடு இக்குண்டுவைப்பு சதியில் ஈடுபட்ட ஆர்.எஸ்.எஸ். மத்தியக் கமிட்டி உறுப்பினர் இந்திரேஷ் குமார், மத்தியப் பிரதேச ஆர்.எஸ்.எஸ். முழுநேர ஊழியரான (பிரச்சாரக்) சுனில் ஜோஷி, இந்தூர் மாநகர ஆர்.எஸ்.எஸ். முழுநேர ஊழியரான சந்தீப் டாங்கே, மூத்த ஆர்.எஸ்.எஸ். முழுநேர ஊழியரான ராம்ஜி, தேவேந்திர குப்தா, மேல்மட்ட உறுப்பினரான சிவம் தாக்கத், முன்னாள் இராணுவ அதிகாரியான சிறீகாந்த் புரோஹித், பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினரான யோகி ஆதித்யானந்த், குஜராத்தின் விவேகானந்தா சேவா கேந்திரத்தின் பாரத் பாய், அந்த அமைப்பின் மாநில அமைப்பாளரான டாக்டர் அசோக், முக்கிய பிரமுகர்களான லோகேஷ் சர்மா, ராஜேஷ் மிஸ்ரா, ஜம்முவைச் சேர்ந்த சாரதா பீட சாமியார் தயானந்த் பாண்டே ஆகியோரின் பெயர்களையும் அவன் வாக்குமூலமாக அறிவித்துள்ளான். “யாருடைய தூண்டுதலோ, நிர்ப்பந்தமோ இல்லாமல், எவ்வித அச்சமுமின்றி சுய நினைவோடு” தான் இந்த வாக்குமூலத்தை அளிப்பதாகவும் அவன் தெரிவித்துள்ளான்.
ஐதராபாத்தின் சன்சல்குடா சிறையில் அசீமானந்தா அடைக்கப்பட்டபோது, அந்தச் சிறைக் கொட்டடியில் அவனுடன் இருந்த கைதியான கலீம் என்ற இளைஞர், வயதில் மூத்தவரான அவனுக்குத் தண்ணீர் எடுத்துக் கொடுப்பது, உணவு எடுத்து வந்து கொடுப்பது முதலான பல உதவிகளைச் செய்துள்ளார். ஐதராபாத் மெக்கா மசூதி குண்டுவெடிப்பையொட்டி கைது செய்து சிறையிடப்பட்ட அப்பாவி இளைஞர்தான் கலீம். குண்டு வைத்த அசீமானந்தா, தன்னால் ஒரு அப்பாவி முஸ்லிம் இளைஞன் சிறையில் வதைபடுவதைக் கண்டு வருந்தியதாகவும், மனசாட்சி உலுக்கியதாகவும், அதற்குப் பிராயச்சித்தம் தேடும் வகையில் உண்மைகளை வாக்குமூலமாக அளிப்பதாகவும் தெரிவித்துள்ளான்.
இப்பயங்கரவாதச் சதித் திட்டத்தில் முக்கியமானவனாகிய சுனில் ஜோஷி, கடந்த 2007-ஆம் ஆண்டு டிசம்பரில் ஆர்.எஸ்.எஸ். குண்டர்களாலேயே கொல்லப்பட்டான். இக்குண்டுவெடிப்பு வழக்கில் மேலிருந்து கீழ்மட்டம் வரை சங்கிலித் தொடர்போல பலர் கைதாகி வருவதால், ஆர்.எஸ்.எஸ். தலைமை தனது விசுவாச ஊழியனையே கொன்றொழிக்க உத்தரவு பிறப்பித்திருக்க வாய்ப்புள்ளது. இதேபோன்ற நிலைமை தனக்கும் ஏற்படும் என்பதாலும், முஸ்லிம் இளைஞரால் ஏற்பட்ட குற்ற உணர்ச்சியும் சேர்ந்துதான் அசீமானந்தாவை ஒப்புதல் வாக்குமூலத்துக்குத் தள்ளியிருக்க வேண்டும்.
கடந்த டிசம்பர் 20-ஆம் தேதியிட்டு அசீமானந்தா, இந்திய அரசுத் தலைவிக்கும் பாகிஸ்தான் அதிபருக்கும் பாவமன்னிப்பு கோரி கடிதம் எழுதியுள்ளான். அதில், அஜ்மீர், மலேகான், ஐதராபாத், சம்ஜவ்தா விரைவு வண்டி குண்டு வெடிப்புகளைத் திட்டமிட்டு நடத்தியவர்களில் நானும் ஒருவன் எனக் குறிப்பிட்டுள்ளான். ஐதராபாத்தின் சஞ்சலகுடா சிறையிலிருந்து அவன் எழுதிய இக்கடிதங்கள் இப்போது ஊடகங்களில் பகிரங்கமாகியுள்ளது.
***
பா.ஜ.க.வும் ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களும் அசீமானந்தாவைச் சித்திரவதை செய்து கட்டாயப்படுத்தி வாக்குமூலம் பெறப்பட்டதாகவும், இந்துத்துவப் பயங்கரவாதம் என்ற அவதூறு கிளப்பப்படுவதாகவும் வழக்கம் போலவே கூச்சலிடுகின்றன. ஆனால் அசீமானந்தாவின் ஒப்புதல் வாக்குமூலம் மட்டுமின்றி, வலுவான தடயவியல் ஆதாரங்களும் சி.பி.ஐ. விசாரணையில் கிடைத்துள்ளன. புதுப்புது அமைப்புகளை திட்டமிட்டு உருவாக்கி, இத்தகைய பயங்கரவாத நடவடிக்கைகளை அத்தகைய அமைப்புகளின் பெயரால் நடத்தி வருவதை ஆர்.எஸ்.எஸ். ஒரு உத்தியாகக் கொண்டு இயங்கி வருவதும் இப்போது நிரூபணமாகியுள்ளது.
ஐதராபாத் மெக்கா மசூதி குண்டு வெடிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட நோக்கியா செல்போனும் அதிலுள்ள வோடபோன் சிம் கார்டும் குண்டு வைக்கப்பட்ட இடத்தில் கிடைத்துள்ளன. இது, குறிப்பிட்ட நேரத்தில் அலாரம் அடிக்குமாறு செய்து அதன் மூலம் மின் இணைப்பு பெற்று குண்டுகளை வெடிக்கச் செய்யும் அதிநவீன தொழில்நுட்ப முறையாகும். இதேபோன்ற செல்போன் மூலமாக குண்டுகளை வெடிக்கச் செய்யும் முறையில்தான் சம்ஜவ்தா விரைவு வண்டியிலும் குண்டு வெடித்துள்ளது. மெக்கா மசூதியில் 6.53 வாட்ஸ் திறன் கொண்ட பேட்டரி பயன்படுத்தப்பட்டது. அதே வகையான பேட்டரிகள்தான் சம்ஜவ்தா விரைவு வண்டி குண்டு வெடிப்பிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. குண்டுக்கான வார்ப்பு இரும்பு உலோகமும் ஒரே மாதிரியாக இருந்துள்ளன. இத்தடயவியல் ஆதாரங்களின் அடிப்படையில்தான் இக்குண்டுவெடிப்புகள் அனைத்திலும் ஒரு இந்துவெறி பயங்கரவாத கும்பல் ஈடுபட்டுள்ளதென புலனாவுத் துறையினர் அறுதியிட்டனர்.
செல்போன்கள் வாங்கப்பட்ட இடமும், வாங்கிய நபரின் பெயர் பாபுலால் யாதவ் என்பதும், போலியான ஆவணங்களைக் கொடுத்து இதேபெயரில் 11 சிம் கார்டுகள் வாங்கப்பட்டிருப்பதும் விசாரணையில் தெரிய வந்தன. பாபுலால் யாதவ் வாங்கிய செல்போன்களின் குறியீட்டு எண்ணை வைத்து அவற்றில் நான்கு செல்போன்களை ராஜஸ்தானிலுள்ள ஆர்.எஸ்.எஸ் முழுநேர ஊழியர்கள் பயன்படுத்தி வருவதை வைத்து, அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மூலமாக பாரத் ரித்தேஷ்வர் உள்ளிட்ட இதர சதிகாரர்கள் சிக்கினர்.
இவர்கள் மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான் முதலான பிற மாநிலங்களிலிருந்தும் இப்பயங்கரவாதச் செயல்களுக்கு ஆட்களைத் திரட்டியுள்ளனர். ஆர்.எஸ்.எஸ். மட்டுமின்றி அதன் பரிவாரத்தைச் சேர்ந்த பஜ்ரங்தள், விசுவ இந்து பரிஷத், அபிநவ் பாரத், ஜெ வந்தேமாதரம், வனவாசி கல்யாண் ஆசிரமம் முதலானவற்றிலிருந்தும் ஆட்களைப் பொறுக்கியெடுத்து மூன்று குழுக்களை உருவாக்கினர். இதன்படி, ஒரு குழு நிதி ஏற்பாடுகளையும் வாகன ஏற்பாடுகளையும் செய்யும். அடுத்த குழு, வெடிகுண்டுகளையும் தேவையான சாதனங்களையும் ஏற்பாடு செய்யும். கடைசியாக உள்ள குழு, குண்டு வைப்புகளில் ஈடுபடும். ஒரு குழுவினருக்கு மற்ற குழுவினர் பற்றித் தெரியாது. இதனால் ஒருவர் கைது செய்யப்பட்டாலும் மற்ற குழுவினர் பற்றித் தெரியாது. இந்தச் சதித் திட்டத்துடன்தான் இப்பயங்கரவாதக் கும்பல் இயங்கியது என்பதும் இப்போது ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இவை மட்டுமின்றி, 2002-இல் குஜராத் பயங்கரவாதப் படுகொலைகளைத் தொடங்கிவைத்த கோத்ரா எம்.எல்.ஏ.வான ஹரேஷ் பட்டுக்குச் சொந்தமான பட்டாசுத் தொழிற்சாலையில், டீசல் வெடிகுண்டுகளும் பைப் வெடிகுண்டுகளும் தயாரிக்கப்பட்டு குஜராத் பயங்கரவாதப் படுகொலையின்போது இந்துவெறி பயங்கரவாதிகளுக்கு விநியோகிக்கப்பட்டன என்பதும், சபர்கந்தா மாவட்ட விசுவ இந்து பரிசத்தின் தலைவரான தவால் ஜெயந்தி பட்டேலின் கல்குவாரியில் ஆர்.டி.எக்ஸ். ரக வெடிகுண்டுகள் ஏராளமாகத் தயாரிக்கப்பட்டு வெளியிடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன என்பதும் ஏற்கெனவே ஆதாரங்களுடன் நிரூபணமாகியுள்ளது. மேலும், கடந்த 2007-ஆம் ஆண்டில் “தெகல்கா” வார இதழ் குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக பார்ப்பன பாசிச பயங்கரவாதிகள் நடத்திய கொலைவெறியாட்டத்தையும், இந்துவெறி பயங்கரவாதிகளிடையே ஊடுருவி அந்தக் கொடூரங்களை அரங்கேற்றியவர்களின் வாயிலிருந்தே மறுக்க முடியாத ஒப்புதல் வாக்குமூலங்களையும் ஆதாரங்களுடன் வெளியிட்டது. கடந்த 2007-ஆம் ஆண்டு தென்காசியில் நடந்த குண்டுவெடிப்பை நிகழ்த்தியவர்கள் இந்து முன்னணி கும்பலைச் சேர்ந்தவர்கள்தான் என்பதும் நிரூபணமாகியுள்ளது.
உண்மைகள் அம்பலமானபோதிலும், ம.பி.யில் பா.ஜ.க. ஆட்சியில் இருந்ததால் இந்துவெறி பயங்கரவாதிகள் கைது செய்யப்படவில்லை. நெருக்கடிகள் அதிகரித்த பின்னரே ம.பி. போலீசு வேறு வழியின்றி இந்துவெறி பயங்கரவாதிகளில் சிலரைக் கைது செய்தது. அஜ்மீர், மெக்கா மசூதி விசாரணைகளில் உண்மைகள் வெளிவந்துள்ள போதிலும், ராஜஸ்தான் மற்றும் ஆந்திரப் போலீசார் குற்றவாளிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆந்திராவிலும் ராஜஸ்தானிலும் அப்பாவி முஸ்லிம்கள் சிறையில் வதைக்கப்பட்ட பின்னர், அவர்கள் குற்றமற்றவர்கள் என்று தீர்ப்பாகிய போதிலும், வேறொரு பொய்வழக்கு சோடித்து அவர்களை மீண்டும் சிறையிலடைத்து வதைத்தது, இம்மாநிலங்களின் போலீசு.
இந்துவெறி ஆர்.எஸ்.எஸ்.-இன் பயங்கரவாதம் அடுத்தடுத்து வெளியான போதிலும், ஒருசில ஆங்கில ஊடகங்கள் மட்டுமே இவற்றை வெளியிட்டுள்ளனவே தவிர, தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் அவை திட்டமிட்டே மறைக்கப்பட்டு வருகின்றன. அதேசமயம், தீவிரவாதிகள் என்றாலே முஸ்லிம்களும் நக்சல்பாரிகளும்தான் என்ற கருத்து ஊடகங்களால் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. இந்த அடிப்படையிலேயே போலீசும் அதிகார வர்க்கமும் ஒருதலைப்பட்சமாக அணுகுகின்றன. மதச்சார்பற்றவர்களாகக் கூறிக்கொள்ளும் “இந்து’’க்களே கூட ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள் இரகசிய குண்டுவைப்புகள் மூலம் அப்பாவி பொதுமக்களைக் கொல்லும் பயங்கரவாதச் செயல்களில் இறங்க மாட்டார்கள் என்றே இன்னமும் கருதுகின்றனர்.
ஆர்.எஸ்.எஸ். ஒரு பயங்கரவாத அமைப்பு என்பது நிரூபிக்கப்பட்டுள்ள போதிலும், பல்வேறு சாட்சியங்கள், தடயவியல் ஆதாரங்கள், ஒப்புதல் வாக்குமூலங்கள் வாயிலாக தெளிவாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள போதிலும், இந்துவெறி பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ். பரிவாரம் சட்டபூர்வமாகத் தடை செய்யப்படவில்லை. தண்டிக்கப்படவும் இல்லை. உண்மைகள் அடுத்தடுத்து வெளிவந்துள்ள போதிலும், எந்த ஓட்டுக் கட்சியும் இதுகுறித்து வாய்திறப்பதுமில்லை. இந்துக்கள் பெரும்பான்மையாக இருப்பதாலும், இந்நாட்டின் அரசியலமைப்பு முறையின் பிரிக்கமுடியாத அங்கமாக இந்துத்துவம் கோலோச்சுவதாலும் அரசும் ஓட்டுக்கட்சிகளும் ஊமையாகி நிற்கின்றன.
ஆர்.எஸ்.எஸ். ஒரு பயங்கரவாத அமைப்பு என்று நிரூபணமாகியிருப்பது மட்டுமல்ல; நாட்டுக்கும் மக்களுக்கும் பேரபாயமாகிவிட்ட இப்பயங்கரவாத கும்பலை கடுமையான நடவடிக்கைகள் மூலமாகவோ, சட்டரீதியாகவோ, ஓட்டுக்கட்சிகளின் தேர்தல் வெற்றிகள் மூலமாகவோ வீழ்த்திட முடியாது என்பதும் இப்போது நிரூபணமாகியுள்ளது. பார்ப்பனியத்தால் இந்து எனும் பெயரில் அடிமைப்படுத்தப்பட்டிருக்கும் பெரும்பான்மை உழைக்கும் மக்களை ஒன்றிணைத்துப் போராடுவதும், இக்கொடிய பயங்கரவாத மிருகங்களை அம்பலப்படுத்தி மக்களிடமிருந்து தனிமைப்படுத்துவதும், நேருக்குநேராக நின்று எதிர்த்து முறியடிப்பதும் மதச்சார்பற்ற-ஜனநாயக சக்திகளின் அவசர அவசியக் கடமையாகியுள்ளது.
_______________________________________
தனபால், புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2011
_______________________________________
வினவுடன் இணையுங்கள்

Friday, February 4, 2011
செல்பேசி மலிவும் விண்ணை முட்டும் விலைவாசி உயர்வும் !
புதிய மாடல் செல்போன்களின் விலை நாளுக்கு நாள் மலிவாகிக் கொண்டே போகிறது. உணவுப் பொருட்களின் விலையோ தொடர்ந்து ஏறுமுகமாய் இருந்து வருகிறது. சென்ற ஆண்டின் இறுதி மாதத்தில் குறிப்பிட்ட சில காய்கறிகளின் விலை அதன் முந்தைய மாதத்தை விட 82% அதிகரித்துள்ளது. சந்தைக்குக் காய்கறிகள் வாங்க வந்த நடுத்த வர்க்கக் குடும்பத்தினர் அதன் விண்முட்டும் விலையைக் கண்டு மலைத்துப் போய், தங்கள் ஏமாற்றத்தைத் தம் குடும்பத்தாரோடு பகிர்ந்து கொள்ளத் தான் மலிவு விலை செல்பேசிகள் பயன்படுகின்றன.
இதில் குறிப்பாக வெங்காயத்தின் விலை 70 ரூபாயிலிருந்து 90 ரூபாய்கள் வரை விற்கப்பட்டது. தற்போது சில மாநிலங்களில் மட்டும் விலை சற்று குறைந்திருக்கிறது. ஏற்கனவே இரண்டு முறை வெங்காயத்தால் பதம் பார்க்கப்பட்டிருக்கும் ஆளும் வர்க்கம் உடனடியாக வெங்காய ஏற்றுமதியின் மேல் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பினாலும் ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளாலும் கூட பெரிதாகப் பயன் ஏதும் இல்லாத நிலையில் பாகிஸ்தானில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய தற்போது முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.
வெங்காய விலையேற்றம் என்பதை மற்ற பொருட்களின் விலையேற்றங்களில் இருந்து தனியே பிரித்துப் புரிந்து கொள்ள முடியாது. கடந்த சில ஆண்டுகளாகவே மற்ற உணவுப் பொருட்கள் மற்றும் காய்கறிகள், சமையல் எண்ணை விலைகளும் தொடர்ச்சியாக உயர்ந்தே வந்துள்ளது. 2008இல் 5.62 சதவீதமாக இருந்த சர்க்கரையின் விலை உயர்வு, 2010இல் 58.94 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. 2008இல் 5.94 சதவீதமாக இருந்த பழங்கள் மற்றும் காய்கறிகளின் விலை உயர்வு, 2010இல் 8.33 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. 2008ல் 1.3 சதவீதமாக இருந்த பருப்பு வகைகளின் விலை உயர்வு, 2010இல் 45.62 சதவீதமாக உயர்ந்துள்ளது. (இணைப்பு / சுட்டி – 1).
இதற்கிடையே காய்கறிகளின் இந்த விலையேற்றத்தால் தொழிலாளிகள் அதிகக் கூலி கேட்டுப் போராடும் நிலை வரலாம் என்று கவலை தெரிவித்திருக்கிறார் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் கவுன்சிலின் தலைவரான சக்ரவர்த்தி ரங்கராஜன். இதற்கு மேலும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்று களத்தில் இறங்கியுள்ள அரசு, வெங்காயத்தின் விலை உயர்வுக்கு பதுக்கல்காரர்கள் தான் பெருமளவு காரணம் என்று அறிவித்துள்ளது. நாடெங்கும் உள்ள விவசாயச் சந்தைகளில் இருக்கும் வெங்காய மண்டிகளில் சோதனைகள் நடத்தியுள்ளது. பதுக்கல்காரர்கள் மேல் நடவடிக்கை எடுக்கும்படி மாநில முதல்வர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார் நிதிமந்திரி பிரணாப் முகர்ஜி.
வெங்காயத்தின் உண்மைக் கதை!
ஆனால், இந்தப் பருவத்தில் (kharif season ) விளையும் வெங்காயத்தில் ஈரப்பதம் அதிகம் இருக்கும். அதாவது விளைந்த வெங்காயத்தை காயவைக்க முடியாது. மழையும், பனியும் இக்காலத்தில் அதிகம் என்பதால் விளைந்த வெங்காயத்தை எவ்வளவு சீக்கிரம் நுகர்வோரை அடைகிறதோ அந்த அளவுக்கு நல்லது. நாட்கள் நீடித்தால் காலநிலை காரணமாக ஈரப்பதம் அதிகரித்து வெங்காயம் அழுகிவிடும். எனவே அறுவடை முடிந்த நாளில் இருந்து அதிகபட்சம் இரண்டு வாரங்களுக்கு மேல் கையிருப்பில் வைத்திருக்க முடியாது.
இதில் விவசாயி சந்தைக்குக் கொண்டு வருவதில் ஒரு நாளும், உள்ளூர் சந்தையில் இருந்து வெளி மாநில சந்தைகளுக்கு மூன்று நாட்கள் வரையும் ஆகிவிடுகிறது. வெங்காயம் ஈரப்பதத்துடனேயே பயணிப்பதால் அது அழுகல் நிலை ஏற்படுவதற்கு முன்பாகவே நுகர்வோரிடம் சேர்க்க வேண்டும். எனவே இந்த பருவத்தில் வரும் வெங்காயத்தை ஒரு வியாபாரி எத்தனை நாட்கள் ‘பதுக்கி’ வைக்கிறாரோ அந்தளவுக்கு இழப்பு அவருக்குத் தான் ஏற்படும் (இணைப்பு 2ஐ பார்க்க). எனவே பிரணாபின் உண்மையான அக்கறை பதுக்கலின் மேல் இல்லை – எனில், இந்த பதுக்கல்காரர் பூதத்தை அவர் கிளப்பி விடுவதன் காரணத்தை பின்னர் பார்க்கலாம்.
இதற்கிடையே வெங்காய விலை உயர்வு பற்றி தேசிய அளவிலான பத்திரிகைகள் தொடர்ந்து எழுதத் துவங்கின. பொதுமக்களின் கோபம் கொஞ்சம் கொஞ்சமாக உயரத் துவங்கிய நிலையில், இதற்கான ஆறுதலையும் விலை உயர்வு பற்றிய தத்துவ விளக்கத்தையும் அளிக்க வேண்டிய கட்டாயத்திற்கு மத்தியில் ஆளும் கும்பல் தள்ளப்பட்டது.
வெங்காய விலை உயர்வு தற்காலிகமானதென்றும், கூடிய விரைவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் என்றும் ஆறுதல் தெரிவித்துள்ளார் மத்திய விவசாய மந்திரி சரத் பவார். ஒரு படி மேலே போன பிரதமர், ஜனவரி 13ஆம் தேதி “உணவுப் பொருள் உற்பத்தியைக் கட்டுப்படுத்த ஒரே வழி உற்பத்தியைப் பெருக்குவது தான்” என்கிற மாபெரும் பொருளாதார உண்மையைத் தெரிவித்துள்ளார். மான்டேக் சிங் அலுவாலியாவோ இந்திய கிராமப்புறங்களில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியின் காரணமாகத் தான் தற்போது அதிகளவு உணவுப் பொருட்கள் நுகரப்படுகிறது என்றும், அதனாலேயே இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது என்று சொல்கிறார்.
வாங்கும் சக்தி அதிகரிப்பு என்ற மோசடிப் பிரச்சாரம்!
மேலும், ஆளும் வர்க்க ஊதுகுழல்களான முதலாளித்துவ பத்திரிகைகள் சில, மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP) அதிகரிப்பதுதான் விலையேற்றங்களுக்கு ஒரு காரணம் என்று எழுதுகின்றன. அதாவது உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பால் கிராமத்து மக்களிடம் வாங்கும் சக்தி அதிகரித்துள்ளதாகவும், இதனால் நுகர்வு அதிகரித்து விலைவாசி உயருகிறது என்றிகிறார்கள் இந்த ‘ஆய்வாளர்கள்’. ஆனால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்தின் பங்கு மிகவும் குறைவு என்பது பல ஆண்டுகளாக மாறவே இல்லை. இது உண்மையாகும் பட்சத்தில் கிராம மக்களுக்கு வாங்கும் சக்தி எப்படி அதிகரிக்கும்? விவசாயம்தான் கிராமங்களின் முதன்மையான தொழில் என்பதிலும் மாற்றமேதுமில்லை.
மேலும் இணைப்பு – 1இல் கொடுக்கப்பட்டுள்ள பட்டியலைக் கூர்ந்து கவனித்தால், இந்த விலையேற்றங்கள் குறிப்பாக 2008ஆம் ஆண்டிலிருந்து துவங்கிய உலகப் பொருளாதார பெரு மந்த காலத்தில் ஏற்பட்டுள்ளது தெரியவருகிறது. அந்தச் சமயத்தில் தான் ஆட்குறைப்பு, வேலை பறிப்பு, சம்பளக் குறைப்பு போன்ற நடவடிக்கைகளை பொரும்பாலான தனியார் நிறுவனங்கள் அமல்படுத்தின. நியாயமாகப் பார்த்தால், வாங்கும் சக்தி குறைந்து போன இந்தக் காலகட்டத்தில் நுகர்வும் குறைந்திருக்க வேண்டும் – விலைகளும் குறைந்திருக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக விலைகளோ தொடர்ந்து நிலையாக உயர்ந்தே வந்துள்ளது.
கிராமப்புறங்கள், நூறு நாள் வேலைத் திட்டம் போன்றவற்றால் கொழிப்பதாகவும், அதனால் நுகர்வு அதிகமாகியிருப்பதாகவும், சந்தையில் பொருட்களுக்கான போட்டி அதிகரித்திருப்பதால், விலைகளும் அதிகமாகிறது என்று சொல்கிறார் அலுவாலியா. இந்தப் புளுகை ஐ.நா சபையின் குழுவொன்று இந்தியாவில் நிலவும் வறுமை பற்றி நடத்திய ஆய்வொன்றே தகர்த்தெரிகிறது. உலகிலேயே வறுமையான நாடுகளாகக் குறிப்பிடப்படும் 26 ஆப்ரிக நாடுகளைச் சேர்ந்த ஏழைகளை விட இந்தியாவின் 8 மாநிலங்களில் மிக அதிகளவில் ஏழைகள் இருப்பதாக அந்த ஆய்வு சொன்னது. மேலும், சப் சகாரா பாலைவன நாடுகளைக் காட்டிலும், ஊட்டச்சத்துக் குறைவான குழந்தைகள் இந்தியாவில் தான் அதிகம் என்றும் பிற ஆய்வுகளில் வெளியானது. (இணைப்பு 3- வினவு கட்டுரை / ஐ.நா குழுவின் ஆய்வு பற்றி)
அடுத்து உற்பத்தி குறைந்து போனதே விலையேற்றத்திற்கான முக்கிய காரணம் என்று முதலாளித்துவ பத்திரிகைகள் எழுதுகின்றன. உற்பத்திக் குறைவு என்பது விலையேற்றத்திற்கு ஒரு காரணம் தான் என்றாலும் இப்படிச் சுணங்கிப் போவதற்கு என்ன காரணம்? முதலாளித்துவப் பத்திரிகைகளில் குறித்த காலத்திற்கு மேல் நீண்ட பருவ மழையைக் காரணம் காட்டியிருக்கிறார்கள். அது உண்மை தான் என்றாலும் உண்மையின் ஒரு சிறிய அங்கம் மட்டும் தான்.
வெங்காயத்தின் உற்பத்தி நிலவரமும், உலகமயமாக்கத்தின் பாதிப்பும்!
உலகளவில் இந்தியாவில் தான் அதிகமான நிலப்பரப்பில் வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. சீனத்திற்கு அடுத்தபடியாக இந்தியா தான் உலகில் அதிகளவில் வெங்காய உற்பத்தி செய்கிறது. மகாராஷ்ட்டிரா, குஜராத், கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் தான் இதில் அதிகளவு பங்களிப்பைச் செய்கின்றன. 2008-09 நிதியாண்டில் 8,34,000 ஹெக்டேரில் வெங்காய சாகுபடி நடந்து 1,35,65,000 டன் வெங்காயம் உற்பத்தி செய்யப்பட்டிருந்தது. இதுவே 2010-11 நிதியாண்டில் 1.17 லட்சம் டன்களாக உற்பத்தி குறைந்துள்ளது. மேலும் 2008ஆம் ஆண்டு இருந்ததை விட 2010ஆம் ஆண்டு வெங்காயத்தின் சாகுபடிப் பரப்பு 20% அளவுக்குக் குறைந்துள்ளது.
அரசாலேயே கொடுக்கப்பட்டுள்ள இந்தப் புள்ளி விவரங்கள் சொல்வது என்னவென்றால், பருவமழைக் கோளாறு காரணமாகவும், சாகுபடிப் பரப்புக் குறைந்ததன் காரணமாகவும், சந்தைக்கு வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளது; இதன் காரணமாக விலையேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதாகும். மேலும், இந்த நிதியாண்டில் நவம்பர் மாதம் வரையில் 11,58,000 மெட்ரிக் டன் வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது. இதில் சென்ற நிதியாண்டு முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட்ட வெங்காயத்தின் அளவு 18,73,002 மெட்ரிக் டன்கள். (EPW Jan 08, 2010 மற்றும் தி இகனாமிக்ஸ் டைம்ஸ்)
இது இரண்டு முக்கியமான விஷயங்களை உணர்த்துகிறது. ஒன்று – ஏற்றுமதி வெங்காயத்தை உள்நாட்டுச் சந்தைக்குத் திருப்பி விட்டாலும் அது சந்தையின் தட்டுப்பாட்டை பூர்த்தி செய்யாது. இரண்டு – சென்ற நிதியாண்டின் உற்பத்தியில் ஏற்றுமதி அளவைக் கழித்து விட்டால் ஏறக்குறைய இந்த ஆண்டின் உற்பத்தி அளவை எட்டுகிறது. இந்த நிதியாண்டின் மொத்த உற்பத்தியில் செய்யப்பட்டிருக்கும் 11லட்சம் டன்கள் ஏற்றுமதி சந்தைத் தேவையில் உண்டாக்கியிருக்கும் இடை வெளியை விட தற்போது ஏற்பட்டிருக்கும் விலையேற்றம் கற்பனைக்கெட்டாத வகையில் அதிகமானதாகும்.
மேலும், ஏற்றுமதி ரகங்கள் உள்நாட்டு ரகங்களை விட தரத்தில் மேம்பட்டதாகும். ஏற்றுமதிக்கான வெங்காயத்தின் அளவு குறைந்தது 6 செ.மீ இருக்க வேண்டும். மேலும் எல்லா வெங்காயங்களும் ஒரே சீரான நிறம், அளவில் இருக்க வேண்டும். இந்த வெங்காயம் ஏற்றுமதி செய்யப்படாமல் உள்நாட்டுச் சந்தைக்கு திருப்பப்பட்டாலும் கூட, இதன் தரம் கருதி உள்நாட்டுச் சந்தையில் இதன் விலை கிலோ 70 ரூபாய்களுக்குக் குறையாமல் தான் இருக்கும். (தினமணி தலையங்கம் 21-12-2010).
ஆக, பிரதமர் சொல்வது போல விலையேற்றத்திற்கு உற்பத்தியில் ஏற்பட்டுள்ள குறைவு முழுகாரணம் அல்ல. அதைப் பற்றிப் பார்க்கும் முன் உற்பத்தி பரப்பு குறைந்ததற்கான காரணத்தைப் புரிந்து கொள்வதும் அவசியமாகும். விவசாயத்தின் ஒரு பொதுப் போக்காக விவசாயிகள் விவசாயத்திலிருந்தே விலக்கப்படுவது உலகமயமாக்கலுக்குப் பின் தீவிரமாக நிகழ்ந்து வருகிறது.
விதை, உரம், பூச்சிக் கொல்லி மருந்து என்று அனைத்தும் பன்னாட்டு பகாசுர நிறுவனங்கள் வைக்கும் கொள்ளை விலைக்குத் தான் வாங்கியாக வேண்டும் என்கிற நிர்பந்தத்தில் இருக்கும் விவசாயிகளுக்குப், பயிர்க்கடன்களும் விவசாய இயந்திரங்களை வாங்கவும் வங்கிகள் கடன் கொடுக்க ஆயிரம் நிபந்தனைகள் விதித்தும் மறுத்தும் வருகின்றது. இதனால் கந்து வட்டி கும்பல்களிடம் மாட்டிக் கொள்ளும் அப்பாவி விவசாயிகள் தற்கொலைக்குத் தள்ளப்படுகிறார்கள். காலம் தப்பிப் பெய்த பருவ மழையால் பயிர்கள் நாசமானதால் கடந்த செப்டெம்பர் மாதம் மூன்று வெங்காய விவசாயிகள், மராட்டிய மாநிலத்தின் நாசிக் மாவட்டத்தில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆக மழையின் பாதிப்பை அந்த விவசாயி மட்டுமே ஏற்றுக்கொள்ள வேண்டுமென்ற அளவில்தான் நமது அரசின் அக்கறை இருக்கிறது.
இதே மாராட்டிய மாநிலத்தின் மராத்வாடா பகுதியில் ஒரு பணக்காரக் கிறுக்கன் 65 கோடி மதிப்பிலான 150 மெர்சிடஸ் பென்ஸ் கார்களை வாங்க வெறும் ஏழு சதவீத வட்டிக்கு 40 கோடிகளை அள்ளிக் கொடுத்துள்ளது பாரத ஸ்டேட் வங்கி. ஒரு விவசாயி டிராக்டர் வாங்கக் கடன் கோரினால் அதற்கான வட்டி 12%. (ஆதாரம் – ஹிந்துவில் பி.சாய்நாத்தின் கட்டுரை)
விவசாயப் பொருட்களில் ஊக வணிகம்
ஆக, மன்மோகன் கும்பல் விசனப்பட்டுச் சொல்லும் பருவ மழையோ – அதனால் குறைந்து போன காய்கறி உற்பத்தியோ, கிராமப் புறக் கொழிப்போ – அதனால் பொருட்களுக்கு சந்தையில் உண்டாகியிருக்கும் போட்டியோ, மொத்த உள் நாட்டு உற்பத்திக் குறியீட்டின் வீக்கமோ – அதனால் நுகர்வில் ஏற்பட்டிருக்கும் பெருக்கமோ அல்ல காரணம் என்பது தெளிவாகிறது.
சர்வதேசப் பொருளாதார மந்த நிலைக்குக் காரணமான நிதி மூலதனச் சூதாடிகள், ரியல் எஸ்டேட், தங்கம், இரும்பு, வெள்ளி போன்ற மூலப் பொருட்களில் தமது நிதிகளை இறக்கிச் சூதாடத் துவங்கிய போதே உலகளவில் உணவுச் சந்தையிலும் தமது சூதாட்டத்தைத் துவங்கி விட்டிருந்தனர். விவசாய விளை பொருட்களிலும் அத்தியாவசிய உணவுப் பொருட்களிலும் முன்பேர வர்த்தகத்தை அனுமதிக்குமாறு உலகவங்கியே இந்தியாவுக்குக் கட்டளையிட்டுள்ளது. உலகவங்கியின் முன்னாள் நேரடி ஊழியரும், இந்நாள் மறைமுக ஊழியருமான மன்மோகன் சிங் சுமார் நாற்பது முக்கியமான விவசாய உற்பத்திப் பொருட்களில் முன்பேர வணிகத்துக்கு அனுமதி வழங்கியுள்ளார்.
சர்வதேச பொருளாதார பெரு மந்தத்தை அடுத்து பங்குச் சந்தைகளிலும், நாணயங்கள், நிதிப் பத்திரங்கள், வீட்டுக்கடன் பத்திரங்களில் நடந்து வரும் பங்குச் சந்தை சூதாட்டங்களில் லாபம் இல்லாத காரணத்தால், இப்போது மக்களின் அத்தியாவசியமான நுகர்வுப் பொருட்களில் சூதாட்டத்தை முடுக்கி விட்டுள்ளனர் சர்வதேசச் சூதாடிகள். உலகளவில் உணவுப் பொருள் விலையேற்றம் என்பது இதன் காரணமாகத் தான் ஏற்பட்டுள்ளது. தற்போது உலகின் பல பாகங்களில் தொடர்ந்து நடந்து வரும் உணவுக் கலகங்களுக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம். இந்தப் பின்னணியிலேயே இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்டு வரும் உணவுப் பொருள் விலையேற்றத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
கடந்த 2009-10 நிதியாண்டில் மட்டுமே இந்தியாவில் நடந்த முன்பேர சூதாட்டத்தின் மதிப்பு சுமார் 78 லட்சம் கோடிகள். நடப்பு நிதியாண்டில் இதன் மதிப்பு 110 லட்சம் கோடிகளை எட்டி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் மட்டுமே விவசாய விளை பொருட்களில் நடந்த முன்பேர வர்த்தகத்தின் அளவு 25 சதவீதத்திற்கு உயர்ந்துள்ளது. இந்த நிதியாண்டில் நவம்பர் வரையிலான கால கட்டத்தில் மட்டும் விவசாய விளை பொருட்களில் நடந்த முன்பேர வர்த்தகச் சூதாட்டத்தில் புழங்கிய தொகையின் அளவு 6.51 லட்சம் கோடிகள்.
கடந்த ஆண்டின் இறுதி மாதங்களில் துவங்கி இந்த வருடத்தின் துவக்கம் வரையில் உணவுப் பொருட்களில் ஏற்பட்டிருக்கும் விலையேற்றத்திற்கான காரணத்தை இந்தப் புள்ளிவிவரங்களே தெளிவாக எடுத்துரைக்கிறது.
பன்னாட்டு நிறுவனங்களை சில்லறை வணிகத்தில் திணிக்க முயற்சி
அடுத்து ‘பதுக்கல்காரர்கள்’ குறித்து பிரணாப் முகர்ஜிக்கு ஏற்பட்டிருக்கும் திடீர் அக்கறை குறித்து பார்ப்போம்.
வெங்காய விலையும் பிற காய்கறிகளின் விலைகளும் விஷம் போல் ஏறிக்கொண்டிருந்த நிலையில் விவசாயத் துறை அமைச்சர் ஒரு பக்கம் பார்வையற்றவன் யானையைத் தடவிய கதையாய் விலையேற்றத்தைப் பற்றி உளறிக் கொட்டிக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் ஒருநாளும் இல்லாத திருநாளாய் தொழில் துறை அமைச்சர் ஆனந்த் சர்மா இதில் காட்டிய அக்கறை கவனத்திற்குரியது. மொத்த விவகாரத்திற்கும் காரணம் பதுக்கல்காரர்கள் தானென்றும் சந்தைக்குப் போதுமான வெங்காயம் கையிருப்பில் இருப்பதாகவும் சொல்லியிருக்கிறார்.
இதற்கான தீர்வாக பன்னாட்டு நிறுவனங்களுக்கு சில்லறை வணிகத்தில் நுழைவதற்காக இருக்கும் கொஞ்ச நஞ்ச கட்டுப்பாடுகளையும் தளர்த்துவது பற்றி டிசம்பர் மாத இறுதிவாக்கில் ஆனந்த் சர்மா காபினெட் மட்டத்தில் ஆலோசனைகளைத் துவங்கியிருக்கிறார். அந்த ஆலோசனையில் உள்துறை அமைச்சர் சிதம்பரம், நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி போன்றவர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். டிசம்பர் 23ஆம் தேதி பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஆனந்த் சர்மா, மொத்த விலைக்கும் சில்லறை விலைக்கும் இருக்கும் இடைவெளியைக் குறைக்கவும், பன்னாட்டு நிறுவனங்களை சில்லறை வணிகத்தில் இறக்கி விடுவது தான் சரியான தீர்வு என்று அறிவித்துள்ளார்.
பன்னாட்டுக் கம்பெனிகளை சில்லறை வர்த்தகத்தில் அனுமதிப்பதை ஆதரித்துப் பேசும் முதலாளித்துவ ஊடகங்கள், அவ்வாறு செய்வது இடைத்தரகர்களை ஒழித்து விடுமென்றும், விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைப்பதை உத்திரவாதப்படுத்தும் என்றும் சொல்கின்றன. ஏற்கனவே பகுதியளவில் சில்லறை வணிகம் திறந்து விடப்பட்டிருக்கும் நிலையிலேயே இது போன்ற பகாசுர நிறுவனங்களால் விவசாயிகளுக்குப் பெரியளவில் பலன் ஏதும் கிடைத்து விடவில்லை. மேலும், அசுரத்தனமான மூலதன பலத்துடன் சந்தையில் இறங்கும் இவர்களால் கோடிக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பை அளித்து வரும் சில்லரை வணிகம் ஒழிந்து போய் விடும் அபாயமும் இருக்கிறது.
ஏற்கனவே ரிலையன்ஸ், ஐ.டி.சி, பெப்சிகோ போன்ற நிறுவனங்கள் ஒப்பந்த விவசாயத்தின் மூலம் விவசாயிகளைக் கசக்கிப் பிழிந்து வரும் நிலையில், இவர்களை விட அதிகமான மூலதன பலத்துடனும் அளும் வர்க்க ஆசீர்வாதத்துடனும் அமெரிக்காவின் பின்புலத்துடனும் களமிறங்கும் வால்மார்ட்டால் விவசாயிகள் பலனடைவார்கள் என்று நம்புவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. சுதந்திரச் சந்தையின் கோட்டையான அமெரிக்காவில் விவசாயச் சந்தையை வால்மார்ட்டும் கேரிஃபோர் நிறுவனமுமே கைப்பற்றி வைத்துள்ளது. இந்நிறுவனங்கள் வளர்ந்த அதே வேகத்தில் அமெரிக்க விவசாயிகளின் எண்ணிக்கை படுபாதாளத்தில் விழுந்துள்ளது. இரண்டாயிரமாவது ஆண்டிலிருந்து எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்புகளில் விவசாயிகளைச் சேர்க்காமல் விடும் அளவுக்கு விவசாயிகள் விவசாயத்திலிருந்தே விரட்டப்பட்டுள்ளனர். ஐரோப்பாவிலோ ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஒரு விவசாயி விவசாயத்திலிருந்து விரட்டப்படுகிறார்.
முதலாளித்துவ நாடுகளைப் பொருத்தவரை நவீன தொழில் நுட்ப உற்பத்தியில், பிரம்மாண்டமான அளவில்தான் விவசாயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் இந்நாடுகளில் 5 சதவீதம் மக்களே விவசாயிகளாக இருக்கின்றனர். தற்போது இந்த உடமை உறவு கூட ஒழிக்கப்பட்டு அந்த இடத்தில் பெரும் நிறுவனங்கள் விவசாயத்தை ஆக்கிரமித்து வருகின்றன.
ஆனால், ஆனந்த் சர்மா வால்மார்ட் தான் விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் இருக்கும் ஒரே கதி மோட்சம் என்பது போலச் சொல்கிறார். இதுவும் கூட அவராகச் சொல்லவில்லை. சென்ற நவம்பரில் இந்தியாவில் எழுந்தருளிய ஒபாமாவதார் இட்டுச் சென்ற முக்கியமான கட்டளைகளில் ஒன்று சில்லறை வணிகத்திலும் விவசாயத்துறையிலும் பன்னாட்டு மூலதனத்தை இந்தியா அனுமதிக்க வேண்டும் என்பதாகும்.
நவம்பரில் ஒபாமா வருகை – டிசம்பரில் வெங்காய விலையேற்றம் – அதே டிசம்பர் இறுதியில் வால்மார்ட்டை அனுமதிப்பதற்கான் காபினெட் சந்திப்பு. நிகழ்ச்சிப் போக்கு வரிசைக்கிரமமாக அமைந்துள்ளது தற்செயல் இல்லை அல்லவா?
அரசின் திட்டமிட்ட துரோகத்தனத்தால் ஓய்ந்து போன விவசாய உற்பத்தியினால் உயர்ந்து போயிருக்கும் விலைவாசியைக் காரணமாக்கிக் கொண்டு, கிடைக்கும் இடைவெளியில் பன்னாட்டுக் கம்பெனிகளை நுழைக்கும் நரித்தனத்தில் அரசு ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே விதைக்கும் உரத்திற்கும் பன்னாட்டு நிறுவனங்களின் முன் இந்திய விவசாயிகளை கையேந்த விட்டுள்ள அரசு, இப்போது விளைச்சலுக்கான விலைக்கும் அவர்களிடமே கையேந்தச் சொல்கிறது. கீழ்மட்ட அளவில் உணவுப் பொருள் உற்பத்தியைக் கைபற்றும் பன்னாட்டு நிறுவனங்கள், இன்னொரு பக்கம் உணவுப் பொருள் வினியோகச் சங்கிலியைக் கைப்பற்றுவதன் மூலம் நுகர்வுச சந்தையையும் கட்டுப்படுத்தும் வெறியுடன் களமிறங்கியுள்ளன.
இயற்கையான காரணிகளையும் அதனோடு செயற்கையான காரணிகளையும் இணைத்து சந்தையில் விலைவாசிகளை தாறுமாறாக ஏற்றுவதும், அதனால் மக்கள் பீதியடைவதை சாதகமாக்கிக் கொண்டு ஒரு பொதுக்கருத்தை உண்டாக்கி அதை தமக்குச் சாதமகாப் பயன்படுத்திக் கொள்வது இவர்களின் புதிய செயல்தந்திரம் அல்ல. சமீபத்தில் விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள அமெரிக்க அரசின் இரகசிய ஆவணங்களில் இதே போன்ற உத்தியை உலகின் வேறு பாகங்களிலும் செயல்படுத்தியிருப்பது தெரியவந்துள்ளது.
2008ஆம் ஜனவரி மாதம் அமெரிக்கா மற்றும் ஸ்பெயின் வர்த்தகத் துறை அதிகாரிகள் மட்டத்தில் நிகழ்ந்த சந்திப்பு ஒன்றில், உணவுப் பொருட்களின் விலை உயர்வு, மரபணு மாற்றப்பட்ட உணவுப் பொருட்களுக்கு நுகர்வோர் இடையே வரவேற்பைப் பெற்றுத் தரும் என்று விவாதிக்கப்பட்டுள்ளது. அதே ஆண்டு ஜூன் மாத வாக்கில் வரலாறு காணாத வகையில் உணவுப் பொருட்களின் விலைகள் ஏறியுள்ளது. முழு விபரம் அறிய – ( )
இப்போது நாடு சந்தித்துக் கொண்டிருக்கும் உணவுப் பொருள் விலைவாசி உயர்வை வழமையான விலை ஏற்றம் என்பதாக மட்டும் சுருக்கிப் புரிந்து கொள்ளக் கூடாது. இது இந்நாட்டின் உணவுத் தன்னிறவை பன்னாட்டுக் கம்பெனிகளிடம் ஒப்படைக்கும் ஆளும் வர்க்கத்தின் துரோகத்தனமான தொடர் நிகழ்ச்சிப் போக்கின் ஒரு அங்கமாகவே புரிந்து கொள்ள வேண்டும். வெறுமனே விலைவாசி உயர்வுக்கெதிரான மனப்புழுக்கமாக மட்டும் அடங்கி விடாமல், விவசாயத்தை திட்டமிட்டு அழித்த அரசின் துரோகத்தனத்திற்கு எதிரான கோபமாகவும், அரசின் நேரடி ஆசீர்வாதத்துடன் மக்களைக் கவ்விப் பிடிக்க களமிறங்கியிருக்கும் ஏகாதிபத்திய நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டுக் கம்பெனிகளின் நயவஞ்சகத்தை எதிர்த்து முறியடிக்கும் போராட்டமாகவும் மலர வேண்டும்.
http://www.vinavu.com
________________________________________________________

2008ஆம் ஜனவரி மாதம் அமெரிக்கா மற்றும் ஸ்பெயின் வர்த்தகத் துறை அதிகாரிகள் மட்டத்தில் நிகழ்ந்த சந்திப்பு ஒன்றில், உணவுப் பொருட்களின் விலை உயர்வு, மரபணு மாற்றப்பட்ட உணவுப் பொருட்களுக்கு நுகர்வோர் இடையே வரவேற்பைப் பெற்றுத் தரும் என்று விவாதிக்கப்பட்டுள்ளது. அதே ஆண்டு ஜூன் மாத வாக்கில் வரலாறு காணாத வகையில் உணவுப் பொருட்களின் விலைகள் ஏறியுள்ளது. முழு விபரம் அறிய – (
இப்போது நாடு சந்தித்துக் கொண்டிருக்கும் உணவுப் பொருள் விலைவாசி உயர்வை வழமையான விலை ஏற்றம் என்பதாக மட்டும் சுருக்கிப் புரிந்து கொள்ளக் கூடாது. இது இந்நாட்டின் உணவுத் தன்னிறவை பன்னாட்டுக் கம்பெனிகளிடம் ஒப்படைக்கும் ஆளும் வர்க்கத்தின் துரோகத்தனமான தொடர் நிகழ்ச்சிப் போக்கின் ஒரு அங்கமாகவே புரிந்து கொள்ள வேண்டும். வெறுமனே விலைவாசி உயர்வுக்கெதிரான மனப்புழுக்கமாக மட்டும் அடங்கி விடாமல், விவசாயத்தை திட்டமிட்டு அழித்த அரசின் துரோகத்தனத்திற்கு எதிரான கோபமாகவும், அரசின் நேரடி ஆசீர்வாதத்துடன் மக்களைக் கவ்விப் பிடிக்க களமிறங்கியிருக்கும் ஏகாதிபத்திய நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டுக் கம்பெனிகளின் நயவஞ்சகத்தை எதிர்த்து முறியடிக்கும் போராட்டமாகவும் மலர வேண்டும்.
http://www.vinavu.com
________________________________________________________
Subscribe to:
Posts (Atom)