கனடா நாட்டில் உள்ள டொரண்டா பல்கலைக்கழகத்தில் மனித உடற்கூறு இயல் துறையின் தலைவராக (Head and Chair Person of the Department of Anatomy) இருப்பவர் தான் பேராசிரியர் டாக்டர் கீத் மூர் (Dr. Keith Moore). இவர் கருவியல் (Empryology) துறையில் தேர்ச்சி பெற்ற வல்லுனர் ஆவார். இவர் எழுதிய ‘Developing Human’ என்ற கருவியல் பற்றிய நூல் உலகம் முழுவதிலும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் பாடபுத்தகமாக (Reference Book) இருக்கிறது.
குர்ஆன் கூறும் கருவியல் சம்பந்தமான வசனங்களுக்கான விளக்கங்களை இவரிடம் கேட்டபோது, ‘தாயின் கருவில் குழந்தை எப்படி வளர்கின்றது என்பதை மைக்ரோஸ்கோப் என்ற கருவி இல்லாமல் அறிந்து கொள்ளவே முடியாது. 17-ஆம் நூற்றாண்டின் இறுதிவரையிலும் மைக்ரோஸ்கோப் கண்டுபிடிக்கப்படவில்லை. மேலும், 18-ஆம் நூற்றாண்டு வரை கருவியல் சம்பந்தமான ஆராய்ச்சிகளுக்கு மைக்ரோஸ்கோப் பயன்படுத்தப்படவில்லை’
மேலும் டாக்டர் மூர் கூறுகையில்: -
‘மனிதக்கரு வளர்ச்சியானது (Development of Embryo) பல்வேறு வளர் நிலைகளைக் (Stages) கொண்டது என்ற அறிவியல் உண்மையை கி.பி. 1940 வரை கண்டுபிடிக்கப்படவில்லை. உலகம் முழுவதும் நாம் பெற்றிருக்கும் கருவளர்ச்சி பற்றிய தற்கால அறிவை சில ஆண்டுகளுக்கு முன்னரே பெற முடிந்தது. ஆனால், குர்ஆன் “தாயின் கர்ப்பப்பையில் மனிதக்கரு பல்வேறு நிலைகளில் வளர்கின்றது” என்பதை கி.பி. 7-ஆம் நூற்றாண்டிலேயே கூறியது என்னை மிகப்பெரிய வியப்பில் ஆழ்த்தியது என்றார்.
“உங்களுக்கு என்ன நேர்ந்தது? அல்லாஹ்வின் மகத்துவத்தை(யும் மேன்மையையும்) நீங்கள் உணராமலிருக்கின்றீர்கள். ‘நிச்சயமாக அவன் உங்களை பல நிலைகளிலிருந்து படைத்தான்” (அல்குர்ஆன்: 71:13-14)
மேலும் டாக்டர் மூர் கூறுகையில், கருவில் வளரும் குழந்தையின் குணாதிசயங்கள் (Genetic Plan) கருத்தரித்த முட்டையில் (Zygote)-ல் உள்ள குரோமோஸோம்களில் இருப்பதைப்பற்றி 19-ஆம் நூற்றாண்டின் இறுதிவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், குர்ஆன், கருவில் வளரும் குழந்தையின் எதிர்கால குணாதிசயங்களும், அமைப்பும் ‘நுத்ஃபா’வில் இருக்கின்றது.
(’Nutfa’ Contains the Plan or Blueprint for the Future Characteristics and Futures of the Developing Human Being) என்று தெளிவாக கூறி விட்டது என்றார். மேலும், அவர் கூறுகையில்,
குழந்தை கருத்தரித்தவுடன் அது தாயின் கர்ப்பப்பையில் வேறூன்றும் காலகட்டங்களில், கருவளர்ச்சியின் நிலைகளில் சிறு இடைவெளி இருக்கிறது (There is a Lag or Delay in the Development of Embryo During Implantation) என்பது நிரூபிக்கப்பட்ட உண்மையாகும். கருத்தரித்த இரண்டாவது - மூன்றாவது வாரங்களில் கருவளர்ச்சியின் நிலைகளில் இருக்கும் இந்த இடைவெளி குறித்து குர்ஆன் கூறியிருப்பது மிகவும் அற்புதமான விஷயமாகும்” என்றார்.
இந்த சான்றுகள் அனைத்தும், யாவற்றையும் படைத்த அல்லாஹ்வால் இறக்கப்பட்டதே திருக்குர்ஆன் என்பதை நிரூபிக்கின்றது.
“அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா? (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்” (அல்குர்ஆன்: 4:82)
No comments:
Post a Comment