Wednesday, February 2, 2011

சவுத் இந்தியன் வங்கியின் பணி வாய்ப்புகள் !

வேலை வாய்ப்பு மலர் செய்தி

தினமலர்
பதிவு செய்த நாள் : ஜனவரி 31,2011,00:00 IST
கருத்தை பதிவு செய்ய

இந்தியாவின் தனியார் துறை ஷெட்யூல்டு வங்கிகளில் ஒன்றான சவுத் இந்தியன் வங்கி கேரளாவை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இந்த வங்கியில் 25 மேலாளர் மற்றும் முது நிலை மேலாளர் பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வயது வரம்பு
சவுத் இந்தியன் வங்கியின் இந்த 2 பதவிகளுக்கும் விண்ணப்பிக்க 31.12.2010 அன்று 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
தேவை என்ன
சவுத் இந்தியன் வங்கியின் மேலாளர் பதவிக்கு விண்ணப்பிக்க சி.ஏ., முடித்திருக்க வேண்டும். வங்கித் துறையில் விண்ணப்பதாரருக்கு உள்ள அனுபவம் மற்றும் சிறப்பான கல்வித் தகுதியைப் பொறுத்தே பணி கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்ச்சி முறை
சவுத் இந்தியன் வங்கியின் இந்த காலி இடங்களுக்கு நேர்காணல் அடிப்படையில் தேர்ச்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி
ஒரு வெள்ளைத் தாளில் விண்ணப்பதாரர் குறித்த விபரங்களை அழகாக டைப் செய்து அதில் சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப் படத்தை ஒட்டி அனுப்ப வேண்டும். இந்த விண்ணப்பத்துடன் கல்வித் தகுதி, வயது சான்று போன்றவற்றிற்கான நகல்களையும் இணைக்க வேண்டும். இத்துடன் "Why I consider myself suitable for appointment in South Indian Bank Ltd., " என்ற தலைப்பில் 300 வார்த்தைகளுக்கு உட்பட்ட ஒரு இணைப்பையும் விண்ணப்பதாரரின் கையெழுத்தில் எழுதி இணைக்க வேண்டும். விண்ணப்பத்தை அனுப்பும் கவரின் மீது தவறாமல் "Application for the post of Charted Accountants & Scale II / III" என்று குறிப்பிடவும்.
முழு விபரங்களறிய இந்த வங்கியின் இணைய தளத்தைப் பார்க்கவும். முழுமையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங் களைப் பின்வரும் முகவரிக்கு 05.02.2011க்குள் கிடைக்குமாறு அனுப்பவும்.
முகவரி
Asst. General Manager
(Personnel),
The South Indian Bank Ltd.,
SIB House, Mission Quarters,
Thrissur 680 001.
KERALA.

No comments:

Post a Comment