Tuesday, February 1, 2011

நண்டு குருமா !

நண்டு குருமா

தேவையான பொருட்கள்:

நண்டு - அரைக் கிலோ
மஞ்சள் தூள் - அரைத் தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
தக்காளி - 4
சின்ன வெங்காயம் - 200 கிராம்
மிளகாய்த்தூள் - 3 தேக்கரண்டி
கரம் மசாலாத்தூள் - ஒரு தேக்கரண்டி
தேங்காய் - 1
பச்சை மிளகாய் - 10
சோம்பு - 2 தேக்கரண்டி
கொத்தமல்லித்தழை சிறிதளவு
கறிவேப்பிலை சிறிதளவு
உப்பு தேவையான அளவு
எண்ணெய் சிறிதளவு
>

செய்முறை:

தேங்காயைத் துருவிக் கொள்ள வேண்டும். தக்காளியை நான்காக நறுக்கிக் கொள்ள வேண்டும். வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் தக்காளியைப் போட்டு லேசாக வதக்கிக் கொள்ள வேண்டும். வதக்கியவற்றை அம்மியில் அல்லது மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். கடலைப் பருப்பையும் வறுத்து எடுத்து, துருவியத் தேங்காயுடன் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சோம்பு, கறிவேப்பிலைத் தாளிக்க வேண்டும். பிறகு இதில் சுத்தம் செய்த நண்டு, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், மஞ்சள் தூள், தக்காளி வெங்காயம் விழுது மற்றும் நண்டு நனையும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி வேகவிட வேண்டும். நண்டு வெந்ததும் தேவையான உப்பு மற்றும் தேங்காய் விழுது சேர்த்து மேலும் இரண்டு நிமிடம் வேகவைத்து இறக்கி, கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாற வேண்டும்.

No comments:

Post a Comment