தினமலர்- வேலை வாய்ப்பு மலர்
பதிவு செய்த நாள் : ஜனவரி 31,2011,00:00 IST
கருத்துகள் (1) கருத்தை பதிவு செய்ய
புது டில்லியைத் தலைமையகமாகக் கொண்டு விவசாயத்துறை விஞ்ஞானிகள் பணிவாய்ப்பு வாரியம் என்ற அக்ரிகல்சுரல் சயின்டிஸ்ட்ஸ் ரெக்ரூட்மெண்ட் போர்டு (ஏ.எஸ்.ஆர்.பி.,) இயங்கி வருகிறது. இந்த அமைப்பு நிர்வாக அதிகாரிகள் மற்றும் நிதி அதிகாரிகளை நியமிப்பதற்கான பணி வாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. நிர்வாக அதிகாரிப் பிரிவில் 19 இடங்களும், நிதி அதிகாரிப் பிரிவில் 8 பேரையும் போட்டித் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்ய இந்த அமைப்பு உத்தேசித்துள்ளது.
கல்வித் தகுதி
ஏ.எஸ்.ஆர்.பி.,யின் நிர்வாக அதிகாரிப் பிரிவுக்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக குறைந்த பட்சம் 55 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். இத்துடன் கம்ப்யூட்டர் திறனும் கூடுதலாகத் தேவைப்படும். நிதி அதிகாரிப் பதவிக்கு விண்ணப்பிக்க நிர்வாக அதிகாரிப் பதவிக்கான தகுதிதான் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்ற போதும் நிதி, அக்கவுண்டிங், காமர்ஸ் அல்லது இத்துறையில் சிறப்புப் படிப்பு முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு
மேலே குறிப்பிடப்பட்டுள்ள பதவிகளுக்கு விண்ணப்பிக்க 01/01/2011 அன்று 21 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
எழுத்துத் தேர்வு
ஏ.எஸ்.ஆர்.பி.,யின் பதவி களுக்கான போட்டித் தேர்வு தமிழ் நாட்டில் கோயம் புத்தூரில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முழு விபரங்களறிய இணைய தளத்தைப் பார்க்கவும்.
கட்டணம் எவ்வளவு
அக்ரிகல்சுரல் சயிண்டிஸ்ட்ஸ் ரெக்ரூட்மெண்ட் போர்டின் பதவிகளுக்கு விண்ணப்பிக்க ரூ.500/-க்கான டி.டி.,யை "Secretary, A.S.R.B., " என்ற பெயரில் புது டில்லியில் மாற்றத்தக்கதாக எடுத்து அனுப்ப வேண்டும். பெண் விண்ணப்பதாரர்கள், எஸ்.சி., எஸ்.டி., உடல் ஊனமுற்ற பிரிவினருக்கு இந்தக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிப்பது எப்படி ?
பூர்த்தி செய்த விண்ணப்பங்களைப் பின்வரும் முகவரிக்கு 14.02.2011க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். விண்ணப்பத்தை அனுப்பும் கவரின் மீது தவறாமல் "Application for Competitive Examination for Administrative Officers and Finance & Accounts Officers 2011 " என்று குறிப்பிட வேண்டும். மேலும் விபரங்கள் அறிய இணைய தளத்தைப் பார்க்கவும்.
முகவரி
Controller of Examinations,
Agricultural Scientists Recruitment Board,
Krishi Anusandhan Bhavan, Pusa,
New Delhi.
No comments:
Post a Comment