1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்
!
by Padmanaban Mdu on Wednesday, 18 May 2011 at 10:39
http://facebook.com/gispadhu |
Contact Information
இது 1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்..இன்றைய தலைமுறையினருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.அதிகாரம் அத்தனையையும் மூடி மறைத்துவிட்டது.அப்போது முதன்முறையாக முதல்வர் பதவியில் அமர்ந்திருந்தார் கருணாநிதி.
தலைமுறைக்கும் தாந்தான் முதல்வராக இருக்க வேண்டும் என அடித்தளம் அமைத்துக்கொண்டிருந்த நேரம் .அதே காலகட்டத்தில் ‘ஜவகரிஸ்ட்’என்ற பத்திரிக்கையும் வெளிவந்து கொண்டிருந்தது!அதன் ஆசிரியர் ஒன்றும் அறியப்படாதவர் அல்ல.ஒரு காலத்தில் கலைஞர் கருணாநிதி மேடையேறி பேச உழைத்துக்கொண்டிருந்த என்.கே.டி.சுபிரமணியம்!
அவர் நடத்திய ஜவகரிஸ்ட் பத்திரிக்கையில் ,இந்த தேதியில் சென்னையில் உள்ள இந்த மருத்துவமனையில்,இந்த நேரத்திற்கு ராசாத்தி என்கிற தர்மாம்பாளுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.மருத்துவமனையின் பதிவேட்டில் அந்த பெண் குழந்தைக்கு தகப்பனார் மு.கருணாநிதி என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.யார் அந்த கருணாநிதி..?என்ற ஒரு பெட்டி செய்தியை வெளியிட்டிருந்தார்.அந்த செய்தி முதல்வராக இருந்த கருணாநிதியை கோபப்பட வைத்துவிட்டது.முதல்வர் பதவிக்கு களங்கம் ஏற்படுத்தியதாக பொங்கி எழ வைதது.அரசியலில் நேர்மை,தூய்மை,அப்பழுக்கில்லாத ஒழுக்கத்தை எல்லாம் அண்ணாவிடமிருந்து அப்படியே எடுத்துக்கொண்டவரல்லவா..?
‘’ராசாத்தி..தர்மாம்பாள் யார் என்றே எனக்கு தெரியாது.எனக்கு அப்படி எந்த பெண் குழந்தையும் இல்லை’’என்று கூறி பரபரக்க வைத்தார்.இது ஒழுக்கத்திற்கே சவால் விடும் செய்தியல்லவா..?விட்டுவிடக்கூடாது...என்று நீதிமன்றத்துக்கும் போனார்...பெண் குழந்தை ..மகள்.ஏன்று யாருமே தெரியாது என்றார்..
பிறகு நடந்தது என்ன என்பது இன்றைய மூத்த தி.மு.கவினருக்கே வெளிச்சம்.செய்தியை வெளியிட்ட பத்திரிக்கை ஆசிரியரை நீதிமன்றம் வரை இழுத்தடிக்க,அந்த காலகட்டத்தில் அவரால் எந்த ஆதரத்தையும் நிரூபிக்க முடியாமல் போக தண்டனைக்கு உள்ளானதாகவும் நடந்தேறியது..என்ற பழைய வரலாற்றை ஒரு நேர்காணலில் போட்டுடைத்தவர் காங்கிரஸ்காரரான திருச்சி வேலுசாமி.
சரி.41 ஆண்டுகள் உருண்டோடி விட்டது.இன்று ஏன் இது சந்திக்கு வருகிறதென்றால்.....
எந்த பெண் குழந்தையை தன் மகளே இல்லை என மறுத்தாரோ...எந்த பெண் குழந்தையை வெளியில் சொன்னால்கூட தன் பெயருக்கு இழுக்கு என மூடி மறைத்தாரோ...,அந்த மகள் கனிமொழிக்காகத்தான் இன்று த்னது தன்மானத்தோடும் மணிமுடியையும் இழந்திருக்கிறார் கருணாநிதி.
நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு மூடி மறைத்த ,மறுத்த மகள் கனிமொழிக்காக இன்று தன் எல்லா அதிகாரத்தையும் பயன்படுத்திவிட்டார்..ஊர் அறிய உலகறிய!
நன்றி;சூரியக்கதிர்
No comments:
Post a Comment