தரைதட்டிவிட்ட அரசு!
First Published : 05 Aug 2011 02:45:37 AM IST
Last Updated : 05 Aug 2011 04:33:50 AM IST
சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கப்பல் திடீரென கரையொதுங்கி தரைதட்டி நிற்குமானால் எல்லோரும் குடும்பத்துடன், குழந்தைகளுடன் வந்து வேடிக்கை பார்ப்பார்கள். அதிகாரிகளும் இதுகுறித்து அலட்டிக்கொள்ள மாட்டார்கள்.
ஆனால், இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. கடலோரத்தில் ஓர் இயந்திரப் படகு கைவிடப்பட்ட நிலையில் கிடந்தால், கடலோரக் காவல்படை முதல் ராணுவம் வரை அதை வந்து பார்த்து, அது யாருக்குச் சொந்தம் எங்கிருந்து வந்திருக்க முடியும் என்பதையெல்லாம் விசாரிக்கும் அளவுக்குத் தீவிரவாதமும், பாதுகாப்பு அச்சுறுத்தல்களும் அதிகரித்துவிட்டன. இந்த நிலையிலும்கூட ஒரு கப்பல் மும்பைக் கடற்கரையில் ஒதுங்கி வந்து, தரைதட்டி நிற்கிறது... யாருக்குமே தெரியாமல்! அதைவிட மோசம்... இதற்கு யார் பொறுப்பு என்பது தீர்மானிக்கப்படாமல்!
இப்படியொரு கைவிடப்பட்ட கப்பல் கடலில் மிதந்து மிதந்து, நகர்ந்து நகர்ந்து வந்துகொண்டே இருக்கிறது. 100 மணி நேரத்தில் - அதாவது நான்கு நாள்கள் - இக்கப்பல் மும்பைக்கு வந்து தரைதட்டி நிற்கும்வரை கடலோரக் காவல் படைக்கோ, கடற்படைக்கோ, மாநிலக் காவல்துறைக்கோ தெரியவில்லை என்றால், அதிலும் குறிப்பாக, மும்பையில் 26/11 தாக்குதலுக்குப் பிறகு ஏற்படுத்தப்பட்ட கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்குப் பிறகும் இந்த நிலைமை என்றால் இந்த அலட்சியத்தை என்னவென்று சொல்வது!
ஓமன் வளைகுடா பகுதியில் இந்தக் கப்பல் மூழ்கிக் கொண்டிருப்பதாகவும், இதில் இருந்த இந்திய ஊழியர்கள் மீட்கப்பட்டதாகவும் ஜூலையில் தகவல் கிடைத்தது. இந்தக் கப்பல் மூழ்கிவிட்டதாகத் தகவல்கள் வந்தன. ஆனாலும் இந்தக் கப்பல் மிதக்கும் தன்மையுடன் இருக்கிறது என்பது இப்போதுதான் தெரியவந்துள்ளது என்று கப்பல் நிர்வாகப் பிரிவு சொல்கிறது. இதெல்லாம் சரிதான். ஆனால், 1,000 டன் எடையுள்ள கப்பல் தரைதட்டி நிற்கும் வரை யார் கண்ணுக்கும் தெரியாமல் போனது ஏன்?
இப்போது ""மும்பைக் கடற்கரையில் தரைதட்டி நிற்கும் "பவித்' கப்பலில் எந்தவிதமான அச்சுறுத்தும் பொருள்கள், நச்சுக்கழிவுகள், வெடிமருந்துகள் ஏதும் காணப்படவில்லை. இந்தக் கப்பலால் மும்பைக் கடற்கரையின் சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தல் ஏதுமில்லை'' என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போதைய பிரச்னை, சுற்றுச்சூழலைக் காட்டிலும், தீவிரவாதம் மிகுந்து கிடக்கும் காலக்கட்டத்தில் எப்படி இந்தக் கப்பல் தரை தொடும் வரை கண்ணுக்கே படவில்லை என்பதுதான்.
கடல்வழியாக மும்பைக்கு வந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவத்துக்குப் பின்னர் இங்கு கடல்பாதுகாப்பு மூன்று அடுக்குகளாக மாற்றப்பட்டது. கடற்கரையிலிருந்து 5 கடல் மைல்கள் வரை மாநிலக் காவல்துறையின் தனிப்பிரிவையும், 5 கடல்மைல்கள் முதல் 12 கடல்மைல்களுக்கு இடைப்பட்ட தொலைவுக்குள் வரும் படகுகள், கப்பல்களைக் கண்காணிக்கும் பொறுப்பு கடலோரக் காவல்படையையும் சார்ந்தது. அதற்கு அப்பால் இயங்கும் கப்பல்கள், படகுகள் தொடர்பான கண்காணிப்புக்கு இந்தியக் கடற்படை பொறுப்பாக உள்ளது. ஆனால், இவர்கள் யாரும் இதுவரை இந்தக் கப்பல் சுமார் 4 நாள்கள் இந்தியக் கடல் எல்லை வழியாக நகர்ந்து தரைதட்டியதற்கு பொறுப்பேற்கவில்லை.
இந்தியாவுக்குள் வரும், போகும் கப்பல்கள் அனைத்தையும் தனிஅடையாளக் குறியீட்டுக்கு உள்படுத்தி, அவற்றின் இயக்கம், நிற்கும் இடம் அனைத்தையும் செயற்கைக்கோள் மூலமாகக் கண்காணிக்கும் முறை, முழுமையாக அமலுக்கு வரவில்லை என்று சொல்லப்படுகிறது. இதுவரை நடந்தவை எப்படியாக இருந்தாலும், இனியாகிலும் மத்திய அரசு இதில் மிகத் தீவிரமான கவனம் செலுத்தியாக வேண்டும்.
இதுபோன்று கைவிடப்பட்ட கப்பல்களைத் தீவிரவாதிகள் தங்களது ஆயுதமாகப் பயன்படுத்துவார்கள் என்றும், இத்தகைய கப்பல்களில் பல ஆயிரம் டன் வெடிமருந்துகளை வைத்து ஆளிலில்லாமல் மிதக்கவிட்டால், அக்கப்பல் இதுபோன்று தரைதட்டி நிற்கும் நேரத்தில் வெடித்தால் அந்தப் பகுதிவாழ் மக்களும், மாறாக துறைமுகத்தில் வெடித்தால், அங்கு நிற்கும் பிற கப்பல்களுடன் நூற்றுக்கணக்கான உயிர்ச்சேதமும் நேரிடும் என்றும் அமெரிக்காவில் இரட்டைக் கோபுர தகர்ப்பு சம்பவத்துக்குப் பின்னர் எச்சரிக்கைவிடுக்கப்பட்டு, உலகில் உள்ள பெரும்பாலான துறைமுகங்கள் இத்தகைய ஆளில்லா படகுகள், கப்பல்கள் குறித்தும், கைவிடப்பட்டு மிதக்கும் கப்பல்கள் குறித்தும் கண்காணிப்பதில் அதிகச் செலவு செய்துள்ளனர்.
ஆனால், நமது சர்வவல்லமை பொருந்திய இந்திய அரசு, மும்பைக்குள் தீவிரவாதிகள் நுழைந்து தாக்குதல் நடத்தி பல அப்பாவிகளை நாய்களைச் சுடுவதுபோல சுட்டு வீழ்த்தியபோதும் மெத்தனமாக, எத்தகைய முன்னேற்பாடுகளோ, முன்னெச்சரிக்கையோ இல்லாமல் இருக்கிறது என்றால், அது வெட்கக்கேடான விஷயம். ஓர் அரசின் அடிப்படைக் கடமை தேசப்பாதுகாப்பு. அதைக்கூட ஒழுங்காக நிறைவேற்றத் துப்பில்லாத - வேறு வார்த்தை எதுவும் மூளையைக் கசக்கித் தேடியும் கிடைக்கவில்லை - ஓர் அரசை நாம் தேர்ந்தெடுத்து ஆட்சியில் அமர்த்தியிருக்கிறோம்.
மும்பை 26/11 தாக்குதலுக்குப் பிறகு, பாதுகாப்பு ஏற்பாடுகளையும், கண்காணிப்பையும் பலப்படுத்த ரூ.70 கோடி செலவிடப்பட்டுள்ளது. ஆனால், இதற்கான எந்தப் பயனும் நடைமுறையில் காணோம் என்பதைத்தான் இந்தச் சம்பவம் அம்பலமாக்குகிறது. கப்பல் மட்டுமா தரைதட்டி செயலிழந்திருக்கிறது? நமது மத்திய அரசும்தான்!
கருத்துகள்

8/5/2011 11:37:00 AM
8/5/2011 11:34:00 AM
8/5/2011 11:07:00 AM
8/5/2011 10:16:00 AM
8/5/2011 10:07:00 AM
8/5/2011 9:53:00 AM
8/5/2011 9:16:00 AM
8/5/2011 9:16:00 AM
8/5/2011 9:08:00 AM
8/5/2011 8:52:00 AM
8/5/2011 7:27:00 AM
8/5/2011 7:10:00 AM
8/5/2011 7:06:00 AM
8/5/2011 7:03:00 AM
8/5/2011 6:50:00 AM
8/5/2011 5:23:00 AM
8/5/2011 4:52:00 AM