Thursday, August 25, 2011

ஃபித்ரா - ஸதகத்துல் ஃபித்ர் எனும் நோன்பு பெருநாள் தர்மம்.

http://puduvaiexpress.blogspot.com
நன்றி : சகோ. Naseerudeen Mohammed/
புனிதமிக்க ரமலானில் ஸதகத்துல் ஃபித்ர் எனும் நோன்பு பெருநாள் தர்மத்தை நபி[ஸல்] அவர்கள் நம் மீது கடமையாக்கியுள்ளார்கள்.
இப்னு உமர்(ரலி) அறிவித்தார்கள்;.
ஆண்கள், பெண்கள், அடிமை, சுதந்திரமானவர் அனைவர் மீதும் ஒரு ஸாவு அளவு பேரீச்சம் பழத்தையோ அல்லது ஒரு ஸாவு தீட்டாத கோதுமையையோ பெருநாள் தர்மமாக நபி(ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள். [புஹாரி எண் 1504 ]

நோன்பில் நிகழ்ந்த தவறிலிருந்து தூய்மைப்படுத்துவதற்காகவும் ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும் என்பதற்காகவும் நபி (ஸல்) அவர்கள் ஸதகத்துல் ஃபித்ரைக் கடமையாக்கினார்கள். (ஆதாரம்: அபூதாவூத்)

இந்த தர்மம் கடமையாக்கப்பட்டத்தின் நோக்கம் நோன்புடைய காலங்களில் நாம் செய்த சிறு சிறு தவறுகளுக்கு பரிகாரமாகவும், பெருநாள் அன்று ஏழைகள் யாரும் பசியோடு இருக்கக்கூடாது என்பதற்காகவும்தான்.

நம்முடைய ஃபித்ரா முறையாக ஏழைகளை சென்றடைய ஒரே வழி நாமே நேரடியாக வழங்குவதுதான்.

பொதுவாக மார்க்கத்தில் எந்த தர்மமாக இருந்தாலும் முதலில் உறவினர்களில் இருந்து தொடங்கவேண்டும். அவ்வாறு உறவினர்களுக்கு நாம் நமது தர்மங்களை வழங்கும்போது இருமடங்கு கூலி கிடைக்கும் என்பது நபிமொழி. எனவே நமது உறவினர்களில் உள்ள ஏழைகளுக்கு நமது ஃபித்ராவை வழங்கி அவர்களை அரவணைப்போம்.

நமது உறவினர்களில் ஃபித்ரா பெறும் தகுதியுடைய ஏழைகள் இல்லையெனில் நமது ஊரில் உள்ள நமக்கு தெரிந்த ஏழைகளுக்கு நமது ஃபித்ராவை வழங்குவோம்.

ஒவ்வொருவரும் அவரவர் ஊரில் உள்ள அவரவர் உறவினர்களில்  உள்ள ஏழைகளையும், பொதுவான ஏழைகளையும்  கவனத்தில் கொண்டு செயல்பட்டாலே ஃபித்ரா சேரவேண்டியவர்களுக்குச் சென்றடைந்துவிடும்.

No comments:

Post a Comment