இரண்டு நாளுக்கு முன்பு என் ஈமெயில்-ஐடி க்கு SBI ல இருந்து ஒரு மெயில் வந்துச்சு.. நானும் open பண்ணி பார்த்தேன்... இப்படி இருந்துச்சு அந்த மெயில்..
(படம் பெரிதாக தெரிய படம் மீது கிளிக்கவும்.. )
(படம் பெரிதாக தெரிய படம் மீது கிளிக்கவும்.. )
பொதுவா பேங்க்-இடம் இருந்து எந்த மெயில் வந்தாலும் அதோட " sender " அட்ரஸ் பார்த்துட்டு தான் மெயில்-அ படிச்சு பார்ப்பேன்.. இதுல " sender " அட்ரஸ் ல
<server-alert@onlinesbi.co.in> இருந்துச்சு... உண்மைலேயே பேங்க் ல இருந்து தான் அனுப்பி இருக்காங்க போல நு நினைச்சு அவங்க அனுப்பி இருந்த அந்த " File " அ ஓபன் பண்ணேன்...
அவங்க சிஸ்டம் ல என்னமோ error வர்றதாகவும் , அதை சரி பண்ண என்னுடைய சுய விவரங்களை ஒண்ணு விடாம குடுத்தா தான் அந்த problem அ சரி பண்ண முடியும் நு போட்டு இருந்துச்சு ... சரி.. நாம தான் ஏதோ தப்பு பண்ணிட்டோம் போல, அதான் SBI இந்த மாதிரி அனுப்பி இருக்குனு அவன் குடுத்த link -ah ஓபன் பண்ணதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சுச்சு அதோட வில்லங்கம் என்னன்னு.. ..
இது தான் அந்த லிங்க்
" http://jonathangosselin.info/wp-theme.php "
SBI க்கும் இந்த லிங்க் அட்ரஸ்க்கும் என்னடா சம்பந்தம் நு ஓபன் பண்ணி பார்த்தேன்..
(Chrome , Firefox இந்த லிங்க் ஓபன் பண்ணும் போதே warning காமிக்குது ) ... நான் ஓபன் பண்ணுனது " IE " ல...
அந்த லிங்க்-அ ஓபன் பண்ணுனா அது இன்னொரு லிங்க்-க்கு redirect ஆச்சு..
"http://amexapparel.com/online/sbi/indexx.html "
அச்சு அசலாக "SBI Bank website " போலவே டிசைன் பண்ணி இருக்குற போலியான வெப்சைட் அது...
இந்த வெப்சைட் ல என்னுடைய விவரங்களை குடுத்து இருந்த என்னுடைய கணக்கில் இருந்து என்னுடைய பணம் களவாடப்பட்டு இருக்கும்..
உண்மையான SBI பேங்க் வெப்சைட்
https://www.onlinesbi .com
உடனடியாக "SBI " கு மெயில் அனுப்பி இந்த விஷயத்தை தெரிவித்தேன்.. அவர்கள் இந்த மாதிரி வர்ற மெயில்-க்கு respond பண்ண வேண்டாம் என்று பதில் அனுப்பி இருந்தனர்.. மேலும் சில விவரம் கேட்டு இருந்துந்தாங்க.. அதையும் அனுப்பிட்டேன்...
ஏமாற்ற படுவதை தவிர்க்க வழிகள்..
1 . ஈமெயில் ல வர்ற இந்த மாதிரி link - அ கிளிக் பண்ண கூடாது ..
2 . பொதுவா பேங்க் சைட் லாம் " https " ல தான் ஆரம்பிக்கும்.. நம்முடைய பெயர் மற்றும் password கொடுப்பதற்கு முன் இதை உறுதி படுத்திகொள்ளணும் ..
3 . நாம தான் ரொம்ப உஷாரா இருக்கணும்.. இந்த மாதிரி எந்த சுய விவரம் கேட்குற மாதிரி மெயில் வந்தா, உடனடியா சம்பந்தப்பட்ட பேங்க் -ஐ தொடர்பு கொண்டு உறுதிப் படுத்திக்கொள்ள வேண்டும்..
4 . இந்த பதிவை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி இதை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தணும்..
எனக்கு சில சந்தேகம் இருக்குது..
1 . நான் SBI ல கணக்கு ஆரம்பிச்சு மூணு மாதம் தான் ஆகுது... இதுக்கு முன்னாடி எனக்கு இந்த மாதிரி மெயில் வந்தது இல்ல.. நான் SBI ல கணக்கு ஆரம்பிச்சது எப்படி இவங்களுக்கு தெரிஞ்சுது...
(எனக்கு இன்னும் பல வாங்கி கணக்குகள் ஏற்கனவே இருக்கு.. வேற எந்த "பேங்க்" த இருந்தும் இந்த மாதிரி மெயில் வந்தது இல்ல..
2 . "sender " அட்ரஸ் ல எப்படி "server-alert@onlinesbi.co.in> " இந்த மாதிரி அனுப்ப முடிஞ்சுது..
கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணம், சில நிமிட அஜாக்கிரதையால் தொலைத்து விடாமல் , நாம தான் விழிப்புணர்வாய் இருக்கணும் ..
டிஸ்கி:
இந்த லிங்க் அ ஓபன் பண்ணி "http://amexapparel.com/online/sbi/indexx.html " , தப்பும் தவறுமா நம்முடைய விவரங்களை குடுத்தாலும் அமைதியா நம்முடைய விவரங்களை களவாடி கொண்டதாக நினைத்து வாங்கி கொண்டு அடுத்த பக்கத்திற்கு தாவுகிறது..
and
Umar Farook
அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
சுவர்கத்தின் கதவுகள் திங்கட்கிழமையும், வியாழக்கிழமையும் திறந்து வைக்கப்படும். தனது சகோதரனுடன் பகைமை பாராட்டுபவனைத் தவிர அல்லாஹ்விற்கு இணை கற்பிக்காத அனைவரும் மன்னிக்கப்படுவார்கள். (பகைமை பாராட்டும் சகோதரர்களைப் பற்றி பின்வருமாறு மூன்று முறை சொல்லப்படும்). அவர்கள் இருவரும் சமரசத்திற்கு வரும் வரை (மன்னிப்பை) தாமதப்படுத்துங்கள். அவர்கள் இருவரும் சமரசத்திற்கு வரும்வரை (மன்னிப்பை) தாமதப்படுத்துங்கள். அவர்கள் இருவரும் சமரசத்திற்கு வரும்வரை (மன்னிப்பை) தாமதப்படுத்துங்கள்.
Umar Farook
அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
சுவர்கத்தின் கதவுகள் திங்கட்கிழமையும், வியாழக்கிழமையும் திறந்து வைக்கப்படும். தனது சகோதரனுடன் பகைமை பாராட்டுபவனைத் தவிர அல்லாஹ்விற்கு இணை கற்பிக்காத அனைவரும் மன்னிக்கப்படுவார்கள். (பகைமை பாராட்டும் சகோதரர்களைப் பற்றி பின்வருமாறு மூன்று முறை சொல்லப்படும்). அவர்கள் இருவரும் சமரசத்திற்கு வரும் வரை (மன்னிப்பை) தாமதப்படுத்துங்கள். அவர்கள் இருவரும் சமரசத்திற்கு வரும்வரை (மன்னிப்பை) தாமதப்படுத்துங்கள். அவர்கள் இருவரும் சமரசத்திற்கு வரும்வரை (மன்னிப்பை) தாமதப்படுத்துங்கள்.
No comments:
Post a Comment