Wednesday, August 3, 2011

முதலில் இதைப் படியுங்கள் ?


பெயர் மாற்றம் செய்வோர் தம்முடைய பழைய பெயரையும் புதிய பெயரையும் அரசு கெஜட்டில் வெளியிட்டால்தான் சட்டப்படி பெயர் மாற்றம் செல்லும். இதற்காக அரசு பத்து நாட்களுக்கு ஒரு முறை அரசிதழ் (Gazette) ஒன்றை வெளியிட்டுவருகிறது. இதன் விலை ரூ. 30.

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள ஜூலை (13) - 2011 கெஜட்டை (Part VI - Section4) அண்மையில் பார்க்க நேர்ந்தது. இதில் பெயர் மாற்றங்கள் மட்டுமன்றிமதமாற்றங்கள் பற்றிய அறிவிப்பும் காணப்படுகிறது.

ஜூலை (13) - 2011 இதழில் பெயர் மாற்றம் செய்துகொண்டோர் சுமார்1330 பேர். இவர்களில் மதம் மாறியோர் 106 பேர். அதன் சுருக்க விவரம் வருமாறு:
  • இந்து மதத்திலிருந்து கிறித்தவ மதத்திற்கு மாறியோர் 38 பேர். இது மதம் மாறியோர் எண்ணிக்கையில் 35.84 விழுக்காடு ஆகும்.
  • இந்து மதத்திலிருந்து இஸ்லாத்திற்கு வந்தவர்கள் 31 பேர். இது    மொத்தத்தில் 29.24 விழுக்காடு ஆகும்.
  • இந்து மதத்திலிருந்து புத்த மதத்திற்கு மாறியோர் 5 பேர். இது4.71 விழுக்காடு.
  • கிறித்தவத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறியோர் 18 பேர். இது16.98 விழுக்காடு.
  • கிறித்தவத்திலிருந்து இஸ்லாத்திற்கு வந்தவர்கள் 3 பேர். இது2.83 விழுக்காடு.
  • கிறித்தவத்திலிருந்து புத்த மதம் சென்றோர் 2 பேர். இது 1.88விழுக்காடு.
  •  இஸ்லாத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறியவர்கள் 8பேர். இது மொத்தத்தில் 7.54 விழுக்காடு.
  • இஸ்லாத்திலிருந்து கிறித்தவம் சென்றவர் ஒருவர். இது0.94 விழுக்காடு.

மதம் மாறிய முஸ்லிம்கள்:
வ. எண்
பழைய பெயர்
பழைய பெயர்
தந்தை / கணவன் பெயர்
வயது
ஊர்
மாறிச் சென்ற மதம்
1
அஃப்ரோஸ்
நிவேதிதா
த /பெ. நேரு
4
கோவை
இந்து
2
ஷரஃபுந் நிசா
பிரியா
க/பெ. நேரு
33
கோவை
இந்து
3
தானிஸ்தா பேகம்
கீர்த்தினா
த/பெ. ஹைதர் ஷரீப்
28
சென்னை
இந்து
4
ஜமால் மைதீன்
பிரதீஷ்
த/பெ. சலாஹுத்தீன்
23
சென்னை
இந்து
5
முஸஃப்பர்
ரகு
த/பெ. யாசீன்
37
சென்னை
இந்து
6
மக்பூல் ஜான் (பெண்)
ஐஸ்வர்யா
க/பெ. சுந்தர்
34
சென்னை
இந்து
7
அப்துல் மஜீத்
மகேஷ்
த/பெ. நயினார்
40
சென்னை
இந்து
8
ஷேக் உஸ்மான்
பாலகிருஷ்ணன்
த/பெ. சிவன்
32
சென்னை
இந்து
9
மும்தாஜ் பேகம்
மும்தாஜ் பேகம்
த/பெ. ஷானு
24
சென்னை
கிறித்தவம்
இவர்களில் 7 பேர் முஸ்லிம் பெற்றோருக்குப் பிறந்தவர்கள்இருவர் வேறு மதத்திலிருந்து இஸ்லாத்திற்கு மாறிபின்னர் மதம் மாறியவர்கள் என்று தெரிகிறது.

இன்னொரு விவரம்: மதம் மாறிய இந்த 106 பேரில் இந்து மதத்திலிருந்து விலகியோர் 74 பேர்அதே நேரத்தில்இந்து மதத்திற்கு திரும்பியோர் அல்லது புதிதாகச் சேர்ந்தோர் 26 பேர். மீதி 48 பேர் இந்து மதத்தைத் துறந்துள்ளனர்.

கிறித்தவத்திலிருந்து வேறு மதம் சென்றவர்கள் மொத்தம் 23 பேர். வேறு மதங்களிலிருந்து கிறித்தவத்திற்கு வந்தோர் 39 பேர். ஆக, 16 பேர் அதிகமாகியுள்ளனர்.

இஸ்லாத்திலிருந்து வேறு மதம் மாறியோர் 9 பேர். புதிதாக இஸ்லாத்தில் இணைந்தோர் 34 பேர். ஆக, 25 பேர் அதிகமாகியுள்ளனர்.

ஏன் மாறினர்?
இஸ்லாத்திலிருந்து இந்து மதத்திற்கும் கிறித்தவ மதத்திற்கும் சென்ற அந்த 9 பேர் ஏன் சென்றனர்அவர்களில் 7 பேர் முஸ்லிம் பெற்றோருக்குப் பிறந்தவர்களாயிற்றே! காரணம் என்னபெற்றோர்களும் சமுதாயமும் தீவிரமாகப் பரிசீலனை செய்ய வேண்டிய விஷயமல்லவா இதுஅதிகாரபூர்வமாக அரசிதழின் ஒரு வெளியீட்டில் தெரிந்த எண்ணிக்கைதான் இது. வெளியுலகுக்குத் தெரியாமல் நடக்கின்ற மாற்றங்கள் எத்தனையோ!

பெரும்பாலும் இந்த மாற்றங்களுக்குக் காரணம் காதல் வலையில் சமுதாய இளவல்கள் சிக்கித் தவிப்பதுதான். கல்லூரிகள்விடுதிகள்,அலுவலகங்கள் ஆகிய ஆண் - பெண் கலப்புள்ள இடங்களில் நம் பிள்ளைகளும் சுதந்திரமாகப் பழகிவருகின்றனர். இனக் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டுகாதல் என்ற பெயரில் எல்லாவற்றையும் இழக்கத் துணிந்துவிடுகின்றனர். இது ஒரு வரட்டுத் துணிச்சல் என்பது திருமணத்திற்குப் பின்போகற்பை இழந்ததற்குப் பின்போதான் அந்த இளசுகளுக்குத் தெரிகிறது. அதற்குள் காரியம் கைமீறிப்போயிருக்கும்.

பெற்றவர்கள்உடன்பிறந்தவர்கள், உறவினர்கள்சமுதாயம்ஏன் விலைமதிக்க முடியாத ஈமானையே தூக்கியெறியத் துணியும் இன்றைய இளவல்கள் யாரைப் பற்றியும்எதைப் பற்றியும் யோசிக்கத் தயாராயில்லை. காதல் மயக்கம்அதில் கிடைக்கும் தாற்காலிக சுகம்,சிறகடித்துப் பறக்கும் பக்குவமில்லாத பருவம்நண்பர்கள் தரும் ஊக்கம்,சினிமாத்தனமான ஹீரோயிஸம்... எல்லாம் சேர்ந்து எல்லாவற்றையும் மறக்கடித்துவிடுகின்றன.

பெற்ற தாயும் தந்தையும் புத்திர சோகத்தால் அழுது புலம்பிவெளியே தலைகாட்ட முடியாமல் கூனிக் குறுகிஅணுஅணுவாகச் செத்துக்கொண்டிருப்பதோஉற்றார் உறவினர் பரிதவிப்பதோ,சமுதாயத்திற்கு ஏற்படும் தலைகுனிவோ எதுவும் காதல் போதையில் இருக்கும் அவர்களின் கண்களில் படுவதில்லை. குறைந்தபட்சம்,தங்களுக்குப் பிறக்கும் குழந்தைகளும் இதே பாணியைக் கையாண்டால்,தங்கள் நிலைமை என்னவாகும் என்பதைக்கூட இந்த விடலைகள் எண்ணிப்பார்ப்பதில்லை.

இதையெல்லாம் காதலுக்குச் செய்யும் தியாகம்‘ என இவர்கள் சினிமா வசனம் பேசுகிறார்கள். சினிமாநடைமுறைக்கு ஒத்துவராது என்பதும் இவர்களுக்கு உறைப்பதில்லை. மூன்று மணிநேர பொழுதுபோக்குக்காக,எதார்த்தங்களுக்கு எதிரான கற்பனைகளைக் கலந்து இளசுகளை நாசமாக்கிக்கொண்டிருக்கும் திரையுலகத்தினருக்குச் சிறிதளவேனும் மனசாட்சியும் சமூக அக்கறையும் இருக்க வேண்டும். பணம் மட்டுமே கோலோச்சும் அந்த உலகில் குணத்தை எதிர்பார்ப்பது நமது முட்டாள்தனம்.

அடிப்படை கோளாறு
பெற்றோர்கள்தம் பிள்ளைகளைக் கஷ்டமே தெரியாமல் செல்லமாக வளர்க்கிறார்கள்கடன் பட்டாவது படிக்கவைக்கிறார்கள்மக்களின் மனம் நோகாதுகேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுக்கிறார்கள்கொஞ்சம் வளர்ந்தவுடன் சுயமாக முடிவெடுக்க அனுமதிக்கிறார்கள்.

ஆனால்பாலுக்கும் பாய்ஷனுக்கும் வித்தியாசம் சொல்லி வளர்த்தவர்கள்பாவத்திற்கும் புண்ணியத்திற்கும் வித்தியாசம் சொல்லி வளர்க்கவில்லையே! மார்க்கத்தின் அறநெறிகளைச் சொல்லி வளர்க்க வேண்டிய அவர்கள்மேலை நாட்டு நாகரிக்கத்தையல்லவா புகட்டுகிறார்கள்!

இதனால்நம் இளைய தலைமுறையினரிடம் வெட்கம்மானம்ஒழுக்கம் ஆகிய மாண்புகள் எல்லாம் கேலிப்பொருட்களாகத் தெரிகின்ற பரிதாப நிலைதான் காணப்படுகிறது. தொழுகைதிக்ர்நோன்புநல்லுரைகள் கேட்பதுநல்ல பழக்கவழக்கங்கள்நபிவழிநல்ல நண்பர்களுடனான பழக்கம் - இவற்றையெல்லாம் சொல்லி வளர்க்காத வரை உங்கள் மக்கள் செல்வம் உங்களுக்குச் சொந்தமில்லை.

மதமாற்றத்திற்கு வறுமையும் ஒரு காரணம்தான். வறுமையால் ஈமானையே இழக்கத் துணிகின்ற ஒருவரிடம்அந்த ஈமான் ஆழமாகப் பதியவில்லை என்பதுதான் பொருள். இதற்கும் பெற்றோரே காரணம்! சிறுவயதிலேயே இஸ்லாத்தைக் கற்பிக்க வேண்டும்! ஈமானின் அவசியத்தை உணர்த்த வேண்டும்! மறுமையைப் பற்றிய சிந்தனையை ஊட்ட வேண்டும்!

அத்துடன்வறுமைக் கோட்டிற்குக் கீழே மூச்சுவிட முடியாமல் திணறும் குடும்பங்களைக் கண்டறிந்துஅவர்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவேற மஹல்லா ஜமாஅத்கள்இஸ்லாமிய அமைப்புகள்இளைஞர் மன்றங்கள் பாடுபட வேண்டும். ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் நம் பிள்ளை தானே வளரும்! இறைவன் வளர்ப்பான்!

ஆகமதமாற்றம் என்பது சமுதாயத்தின் அழிவுக்கு அடிகோலும்;கலாசாரச் சிதைவுக்கு வழிகோலும்நம் இருப்பையே கேள்விக் குறியாக்கிவிடும்! சம்பந்தப்பட்ட அனைவரும் இதன் தீவிரத்தை உணர்ந்துஉடனடியாகச் செயல்பட முன்வர வேண்டும்!
THANKS BY NET FRIEND

No comments:

Post a Comment