Monday, January 31, 2011

பாவத்தை கழுவும் தொழுகை !

தொழுகை


''உங்களில் ஒருவரது வாசலில் ஆறு ஒன்று இருக்கிறது. அதில் அவர் தினமும் ஐந்து தடவை நீராடுகிறார். அது அவரது (உட­லுள்ள) அழுக்குகüல் எதையும் தங்கவிடுமா? என்ன நினைக்கிறீர்கள் சொல்லுங்கள்?'' என்று கேட்டார்கள். ''அவரது அழுக்குகல் எதையும் தங்க விடாது'' என்று மக்கள் பதிலளித்தார்கள். ''இதுதான் ஐவேளைத் தொழுகையின் நிலையாகும்; இதன் மூலம் அல்லாஹ் பாவங்களை நீக்குகிறான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரி 528, முஸ்லிம் (1185)

உடலை அழுக்கி­ருந்து தூய்மைப்படுத்தும் ஆற்றுக்கு தொழுகையை நபி (ஸல்) அவர்கள் உதாரணம் காட்டியுள்ளார்கள். பாவப் பரிகாரத்திற்கு உடலை வருத்த வேண்டும்; நீண்ட தூரம் பயணம் செய்து பாவக் கடனைத் தீர்க்க வேண்டும் என்றெல்லாம் கூறாமல் வீட்டு வாச­ல் ஓடுகின்ற, நமக்கு எளிதில் கிடைக்கின்ற ஆற்று நீர் உடலை தூய்மைப்படுத்துவதைப் போல எந்த விலையும் கொடுக்காமல் மிகப் பெரும் சிரமமும் இல்லாமல் நாம் தொழும் தொழுகை நாம் செய்யக் கூடிய பாவங்களைப் போக்கும் மருந்தாக உள்ளது என்று கூறியுள்ளார்கள். தொழுகை வெட்கக்கேடான காரியங்களை விட்டும், தீமையை விட்டும் தடுக்கும். (அல்குர்ஆன் 29:45)


இஸ்லாம் குற்றங்களைத் தடுத்து அதற்குத் தண்டனை வழங்குவதோடு நின்று விடாமல் அதை விட்டும் தவிர்ந்து கொள்வதற்கான வழிமுறைகளை, தொழுகையின் மூலமாக சொல்­த் தருகிறது. தொழுபவர்கள் நாம் தொழுகிறோம் என்ற காரணத்திற்காகவாவது மானக்கேடான விஷயங்களை விட்டும் தவிர்ந்திருப்பார்கள். இன்று பெரும்பாலும் தொழக் கூடியவர்களிடம் பெரும் குற்றங்கள் நிகழ்வதைக் காண முடிவதில்லை. பாவங்களி­ருந்து விடுபட அல்லாஹ் நம்மை தொழுகையில் கண்காணிக்கிறான் என்பதை மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும். தொழுகையில் அல்லாஹ் நம்மைப் பார்க்கிறான் என்ற எண்ணம், பாவங்கள் குற்றங்கள் செய்யும் போதும் இறைவன் நம்மைக் கண்காணிக்கிறான் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி அவற்றைத் தடுக்கும் கருவியாக ஆகி விடுகின்றது. இது போல் ஐவேளைத் தொழுகையிலும் இந்த எண்ணத்தை வளர்த்துக் கொண்டால் பாவங்களுக்கு வழியில்லாமல் போய் விடும்.

இஹ்ஸான் என்றால் என்ன ? என்று நபியவர்களிடத்தில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் கேட்கும் போது, ''(தொழுகையில்) அல்லாஹ்வை நீ பார்க்காவிட்டாலும் அவன் உன்னை பார்க்கிறான் என்று (எண்ணி) நீ அவனை பார்ப்பது போன்று வணங்குவதாகும்'' என்றுபதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 50

நாம் என்ன செய்தாலும் இறைவன் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற எண்ணம் ஒரு மனிதனிடத்தில் வந்து விட்டால் பாவங்கள் செய்ய அஞ்சுவான்.

மேலும் மறுமை நாளில் வெற்றி பெற்று சொர்க்கத்திற்குச் செல்பவனைப் பற்றி அல்லாஹ் கூறும் போது....

தூய்மையாக வாழ்பவன் வெற்றி பெற்றான். (அவன்) தனது இறைவனின் பெயரை நினைத்துத் தொழுதான். அல்குர்ஆன் 87:14, 15

பாவங்களைக் கழுவி தூய்மைப்படுத்தும் வழிமுறையாக தொழுகையை இந்த வசனத்தில் இறைவன் விளக்கியிருப்பது தொழுகையின் முக்கியத்துவத்தையும் பாவத்தை இல்லாமல் ஆக்கும் அழகிய வழிமுறையையும் எடுத்துக் காட்டுகிறது.

''யார் எனது (இந்த) உளூவைப் போன்று உளூச் செய்து, வேறு எந்த எண்ணங்களுக்கும் இடம் தராமல் இரண்டு ரகஅத்கள் தொழுகின்றாரோ அவருக்கு அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும்'' என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக உஸ்மான் (ர­) அவர்கள் கூறினார்கள். நூல்: புகாரி 160

சாதாரணமாக இரண்டு ரக்அத்கள் தொழுதால் பாவமன்னிப்பு வழங்கப்படுகிறதென்றால் ஐவேளைத் தொழுகையையும் நிறைவேற்றினால் ஆற்றில் ஐந்து தடவை குளித்து உடலைத் தூய்மை செய்தவதைப் போல் பாவங்கள் அழியும் என்பது தெளிவாகிறது.

தொழுகையினால் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என்பதை நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தையும் உதாரணமாகக் கூறலாம்.

நான் நபி (ஸல்) அவர்கள் அருகில் இருந்து கொண்டிருந்தேன். அப்போது ஒரு மனிதர் வந்து, ''அல்லாஹ்வின் தூதரே! நான் தண்டனைக்குரிய குற்றமொன்றைச் செய்து விட்டேன். ஆகவே, என் மீது தண்டனையை நிறைவேற்றுங்கள்'' என்றார். அவர் செய்த குற்றம் குறித்து அவரிடம் நபி (ஸல்) அவர்கள் ஏதும் விசாரிக்கவில்லை. பிறகு, தொழுகை நேரம் வந்த போது அவர் நபி (ஸல்) அவர்களுடன் தொழுதார். நபி (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்த போது அவர்களை நோக்கி அந்த மனிதர் எழுந்து வந்து, ''அல்லாஹ்வின் தூதரே! நான் தண்டனைக்குரிய குற்றமொன்றைச் செய்து விட்டேன். ஆகவே, அல்லாஹ்வின் வேதத்தி(லுள்ள தண்டனையி)னை எனக்கு நிறைவேற்றுங்கள்'' என்றார். நபி (ஸல்) அவர்கள், ''எம்முடன் சேர்ந்து நீர் தொழுதீர் அல்லவா?'' என்று கேட்டார்கள். அவர், ''ஆம்!'' என்றார். நபி (ஸல்) அவர்கள், ''அவ்வாறாயின் அல்லாஹ் 'உமது பாவத்தை' அல்லது 'உமக்குரிய தண்டனையை' மன்னித்து விட்டான்'' என்று சொன்னார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி (6823)

தொழுகை பாவங்களை அழிக்கும் என்பதற்கு நிதர்சன சான்றாக இந்த ஹதீஸ் உள்ளது. நபி (ஸல்) அவர்களுக்கும், அவர்களுடைய தோழர்களுக்கும், மற்ற எவருக்கும் தெரியாமல் பாவத்தைச் செய்து விட்டு, அந்த நபித்தோழர் தன் கௌவரத்தைத் தூக்கியெறிந்து விட்டுத் தன் பாவத்தை வாய்விட்டுச் சொல்கிறார் என்றால் தொழுகை பாவத்திற்குப் பரிகாரமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் பாவத்தி­ருந்து விடுபடுவதற்கு ஒரு மனிதனை எவ்வாறு பக்குவப்படுத்துகிறது என்பதை அறியலாம்.

பாவங்கள் என்றால் பெரும் பாவங்கள் உட்பட அனைத்துப் பாவங்களும் தொழுகையின் மூலமாக மன்னிக்கப்படும் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. ஏனென்றால் நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:

ஐவேளைத் தொழுகைகள், ஒரு ஜுமுஆவி­ருந்து மறு ஜுமுஆ ஆகியன அவற்றுக்கிடையே ஏற்படும் பாவங்களுக்குப் பரிகாரங்களாகும். பெரும் பாவங்கள் செய்யாத வரை! அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல் முஸ்லிம் (394)

இவ்வாறு தொழுதால் மட்டும் தான் பாவங்கள் மன்னிக்கப்படுமா? தொழுகைக்குரிய அனைத்து முன்னேற்பாடுகளைச் செய்யும் போதும் பாவங்கள் மன்னிக்கப்படும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''தவறுகளை அல்லாஹ் மன்னித்து, தகுதிகளை உயர்த்தும் செயல்கள் சிலவற்றை உங்களுக்கு நான் சொல்லட்டுமா?'' என்று கேட்டார்கள். மக்கள், ''ஆம்! அல்லாஹ்வின் தூதரே!'' என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''சிரமமான சூழ்நிலைகளிலும் உளூவை முழுமையாகச் செய்வதும், பள்ளிவாசல்களை நோக்கி அதிகமான காலடிகளை எடுத்து வைத்துச் செல்வதும், ஒரு தொழுகைக்குப் பின் அடுத்தத் தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருப்பதும் ஆகும். இவை தாம் கட்டுப்பாடுகளாகும்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் (421)

இவ்வாறு தொழுகைக்காகச் செய்யக்கூடிய அனைத்து முயற்சிகளும் நன்மையாக அமைகிறது. தொழுகை பாவப் பரிகாரமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் சொர்க்கம் செல்வதற்குத் துணைச் சாதனமாகவும் உள்ளது.

நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, ''என்னைச் சொர்க்கத்தில் சேர்க்கும் ஒரு செயலை எனக்குக் கூறுங்கள்'' எனக் கேட்டார். அப்போது, ''நீர் அல்லாஹ்வை வணங்க வேண்டும்; அவனுக்கு எதனையும் இணையாக்கக் கூடாது; தொழுகையை நிலைநாட்ட வேண்டும்; ஸகாத் வழங்க வேண்டும்; உறவினர்களிடம் இணக்கமாக நடக்க வேண்டும்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஅய்யூப் (ரலி), நூல்: புகாரி (1396)

அல்லாஹ்வுக்கு நிகராக யாரையும் எதையும் ஆக்கக் கூடாது என்ற கட்டளைக்கு அடுத்தபடியாக, சொர்க்கம் செல்வதற்குத் தொழுகை என்ற வணக்கத்தைத் தான் நபியவர்கள் முன்னிறுத்துகிறார்கள். இது தொழுகையின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறது.

இவ்வாறு தொழுகையாளிகளுக்கு இவ்வுலகிலும் மறு உலகிலும் அதிகமான கூ­கள் இருக்கும் நிலையில், தொழக்கூடிய சிலர் பாவங்களி­ருந்து விடுபடாத சூழ்நிலையைக் காண்கிறோம். தொழுது கொண்டே மோசடி செய்கிறார்கள்; வட்டி வாங்குகிறார்கள். இதற்குக் காரணம், அவர்கள் தொழுகையை ஒரு சடங்காக நிறைவேற்றுவது தான்.

நபி (ஸல்) அவர்கள் சொன்னதைப் போன்று, அல்லாஹ் நம்மைப் பார்க்கிறான் என்ற எண்ணத்தில் தொழுகையை அமைத்துக் கொள்ளவில்லை. இவ்வாறு தொழுபவர்களுக்கு அல்லாஹ் ஒரு எச்சரிக்கையை விடுக்கிறான்.

தமது தொழுகையில் கவனமற்று தொழுவோருக்குக் கேடு தான். அல்குர்ஆன் (107:4, 5)

இவர்களின் நிலைமை தான் இப்படி என்றால் குர்ஆன், ஹதீஸை விளங்கிய தவ்ஹீதைப் பேசக் கூடிய மக்களிடத்திலும் இந்தக் குறைபாடுகளைக் காண்கிறோம். குர்ஆன், ஹதீஸை மட்டும் பேசக்கூடிய பள்ளிவாயில்களில் கூட, சுப்ஹு தொழுகையில் ஒரு சில நபர்கள் மட்டும் வருவதே இதற்குச் சான்று! ஆனால் ஜும்ஆ தினங்களில் கால் வைக்கக் கூட இடமிருக்காது.

இது போன்று நடப்பவர்கள் நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கையைக் கவனியுங்கள்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஃபஜ்ர், இஷா ஆகிய தொழுகைகளை விட நயவஞ்சகர்களுக்கு மிகவும் சுமையான தொழுகை வேறேதுவும் இல்லை. அவ்விரு தொழுகைகüலுமுள்ள சிறப்பை அவர்கள் அறிவார்களானால் தவழ்ந்தாவது அத்தொழுகைகளுக்கு அவர்கள் வந்து சேர்ந்து விடுவார்கள். தொழுகை அறிவிப்பாளரிடம் இகாமத் சொல்லுமாறு கட்டளையிட்டுப் பின்னர் ஒருவரிடம் மக்களுக்குத் தலைமை தாங்(கித் தொழுவிக்)குமாறு பணித்து விட்டு, பிறகு தீப்பந்தத்தை எடுத்துக் கொண்டு, இன்னும், தொழுகைக்குப் புறப்பட்டு வராமலிருப்பவரை எரித்து விட முடிவு செய்தேன். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி (657)

நபி (ஸல்) அவர்கள் சுப்ஹு தொழுகையில் சோம்பல் காட்டுபவர்களை நயவஞ்சகர்களுக்கு ஒப்பிட்டுள்ளார்கள்.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த தொழுகையே மறுமை வெற்றிக்கும் அடிப்படையாக உள்ளது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு அடியானிடத்தில் மறுமை நாளில் முதன் முதலாக அவனுடைய அமல்கள் சம்பந்தமாக விசாரிக்கப்படுவது தொழுகையைப் பற்றித் தான். அது சரியானால் அவன் வெற்றியடைந்து விடுவான். அது தவறினால் அவன் நஷ்டமடைந்து விடுவான். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்: திர்மிதீ 378

தொழுகை தான் ஒருவனுடைய மறுமை வெற்றியைத் தீர்மானிப்பதாக இந்த ஹதீஸ் கூறுகிறது. எனவே நாம் தொழுகையைப் பேணி, பாவங்கள் மன்னிக்கப்பட்ட மக்களாக சொர்க்கம் செல்வோமாக!

பொறியாளர்களைப் போல் கூடு கட்டும் சிறிய பறவைகள்..!?

மரக்கிளைகளிலோ, கட்டிடங்களிலோ, சிலவேளைகளில் உங்களது வீட்டுப்
பால்கனியின் மூலையிலோ சிறிய பறவைகள் கூடுகள் கட்டியிருப்பதை நிச்சயமாக
நீங்கள் பார்த்திருக்க வேண்டும். இவைகள் எல்லாம் நீங்கள் அறிந்திருக்கும்
சில சாதாரண பறவையினங்களின் கூடுகளே. ஆனால் இந்த உலகில் வாழும்
பறவையினங்களில் நீங்கள் அறியாத எண்ணற்ற பறவையினங்கள் முற்றிலும்
வித்தியாசமான முறையில் தங்களது கூடுகளை அமைத்துக் கொள்கின்றன. இந்த
கூடுகளைப் பற்றி நாம் ஆய்வு செய்வோம்.

மற்ற எல்லா காரணங்களையும் கருத்தில் கொள்ளும் முன்பு, பறவைகள் தாங்கள்
வாழும் இயற்கைத் சூழலுக்கு ஏற்ப தங்களது கூடுகளை கட்டிக் கொள்கின்றன
என்பதை நாம் முதலில் கவனத்தில் கொள்ள வேண்டும். இங்கு நாம் கடற்கரை
ஓரத்தில் வாழும் பறவையினங்களை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்ளலாம்.

கடற்கரை ஓரத்தில் வாழும் பறவையினங்கள் கடல்நீரின் மேற்பரப்பில்,
தண்ணீரில் மூழ்கி விடாதபடி, தங்களது கூடுகளை அமைத்துக் கொள்கின்றன.
கடல்நீரின் மட்டம் அதிகரித்தாலும், கடல் நீரில் அவைகளின் கூடுகள் மூழ்காத
வடிவத்திலும், தண்ணீரில் மிதக்கக்கூடிய பொருட்களையும் கொண்டே பறவைகள்
இத்தகைய கூடுகளை உருவாக்குகின்றன.

பறவைகள் இந்த உலகில் தோன்றும்போதே, இத்தகைய கூடுகளை உருவாக்கும் திறமை
கொண்டதாகவே பிறக்கின்றன. மேலும் அவைகளுக்கு எப்படி கூடு கட்ட வேண்டும் என
யாரும் பயிற்சி அளிக்க வேண்டிய அவசியமே இல்லை. அல்லது பறவைகள் நீண்ட
காலமாக கூடு கட்டும் முயற்சியை மேற்கொண்டு தண்ணீரில் மூழ்காத கூடுகளை
உருவாக்கியிருக்கலாம் என கற்பனை செய்து பார்த்தோம் எனில், பறவைகள்
எடுக்கும் முதல் முயற்சியிலேயே அவைகளின் கூடுகள் கடல் நீரில் மூழ்கிப்
போயிருக்கும்.

எப்படியிருப்பினும் அது போன்ற செயல் ஒருபோதும் நடைபெறவில்லை.
ஏனெனில்,இவ்வவுலகில் தோன்றிய முதல் நாளிலிருந்தே மேலே குறிப்பிடப்பட்ட
அதே முறையில்தான் பறவைகள் தங்களது கூடுகளை உருவாக்கி வருகின்றன.

சதுப்பு நிலப்பகுதியில் வாழும் பறவையினங்கள் தங்களது கூடுகளின் சுவர்களை
சற்று உயரமாக அமைத்துக் கொள்கின்றன. ஏனெனில் தாங்கள் இடும் முட்டைகள்,
வேகமாக காற்று வீசும்போது கீழே விழுந்துவிடாமல் இருக்க பறவைகள் மேற்கண்ட
முறையை கையாளுகின்றன.

முட்டைகள் கீழே விழுந்தால் உடையக்கூடிய அபாயம் உண்டு என்பதை உணர்ந்து,
தங்களது முட்டைகளை முழுக்கவனத்துடனும் பாதுகாக்க வேண்டும் என்கிற இந்த
அறிவு இச்சிறிய பறவைகளுக்கு எப்படி வந்தது? பறவைகள் எடுக்கும்
மதிநுட்பமுள்ள ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையைத்தான் இங்கு நாம்
காண்கிறோம்.

சதுப்பு நிலப்பகுதியில் வாழும் மற்றொரு பறவையினம், நிலத்தை விட்டு விட்டு
புதர்களில் தன்னுடைய கூட்டினை அமைத்துக் கொள்கிறது. அவ்வாறு அது
புதர்களில் தனது கூட்டினை அமைத்துக் கொள்ள வேண்டிய காரணம் என்னவெனில்,
நிலத்திற்கும் புதருக்கும் இடையேயுள்ள தட்பவெப்ப நிலை. நிலத்தில்
இருக்கும் வெப்ப நிலையைவிட, பத்து டிகிரி சென்டிகிரேட் குறைவாகவே
இருக்கும் புதர்களின் வெப்பநிலை.

நிலத்திற்கும், புதருக்கும் இடையில் வெப்பநிலையில் மாறுதல் உண்டு என்கிற
விபரம் நம்மில் அநேகம் பேருக்கு தெரியாது. ஆனால் இச்சிறிய பறவைகள்
நிலத்திற்கும், புதருக்கும் வெப்ப நிலையில் மாறுதல் உண்டு என்கிற
விபரத்தை தெரிந்து கொண்டு தங்களையும், தங்களது குஞ்சுகளையும் சூடான வெப்ப
நிலையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள சூடான வெப்பநிலை உள்ள நிலத்தை விட்டு
விட்டு, குளிர்ந்த வெப்பநிலை உள்ள புதர்களில் தங்களது கூடுகளை அமைத்துக்
கொள்கின்றன.

ஐந்தறிவு மாத்திரமே கொண்டு, பகுத்தறியும் திறன் இல்லாதவைகள் என நாம்
கருதிக் கொண்டிருக்கும் இச்சிறிய பறவைகள் எப்படி இத்தனை நேர்த்தியான
திறமைகள் கொண்டிருக்கின்றன என்பது பற்றி எப்போதாவது நீங்கள் சிந்தித்துப்
பார்த்திருக்கிறீர்களா?

பல ஆண்டுகள் படித்து, பட்டம் பெற்று தங்களது துறையில் பயிற்சியும்
பெற்றுக்கொண்ட பொறியாளர்கள் கொண்டுள்ள திறமையை, இச்சிறிய பறவைகள்
கொண்டுள்ள திறமைக்கு ஒப்பிடலாம். ஒரு வீட்டை கட்ட வேண்டுமெனில் திறமையான
பொறியாளார் ஒருவர் விபரமாக திட்டமிடுவார். அதாவது - கட்டப்பட வேண்டிய
வீட்டிற்கு தேவையான பலத்தைக் கணக்கில் கொள்வார். அதற்கு பயன்படுத்த
வேண்டிய பொருட்களை பட்டியலிடுவார். கட்டப்படக் கூடிய பூமியின் தன்மையை
ஆராய்ந்து கட்டிடத்தைக் கட்டுவது என தனது வேலையைத் துவங்குவார்.

இங்கு நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டிருக்கும் பறவைகளும் தங்களது கூட்டை
ஒரு வகுக்கப்பட்ட ஒரு திட்டத்தின் படிதான் கட்டுகின்றன. ஆனால் அவைகளுக்கு
தங்களது கூடுகளை கட்ட எந்தவித உபகரணமோ, அல்லது படிப்பறிவோ அவசியமில்லை.
அவைகள் தாங்கள் செயலாற்ற எடுத்துக் கொண்ட காரியங்களை வல்ல அல்லாஹ்
வழங்கிய தூண்டுதல் மூலம் மிகவும் எளிதாக செய்து முடிக்கின்றன.

பறவைகள் செய்கின்ற இந்த காரியங்கள் அனைத்தும் அல்லாஹ் இருக்கின்றான்
என்பதற்கு ஒரு அத்தாட்சியாகும். பறவைகள் செய்யும் எல்லாக்
காரியங்களுக்கும் நிச்சயமாக எல்லாம் அறிந்த வல்ல அல்லாஹ்வே
தூண்டுகோலாவான். வல்ல அல்லாஹ் அருள்மறையில் கூறுகிறான்:

لَّهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۗ وَإِنَّ اللَّهَ
لَهُوَ الْغَنِيُّ الْحَمِيدُ

22:64. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே
உரியவனவாகும்; நிச்சயமாக அல்லாஹ் தேவைகள் அற்றவனாகவும் புகழ்
மிக்கோனாகவும் இருக்கிறான்.

22:65 أَلَمْ تَرَ أَنَّ اللَّهَ سَخَّرَ لَكُم مَّا فِي الْأَرْضِ
وَالْفُلْكَ تَجْرِي فِي الْبَحْرِ بِأَمْرِهِ وَيُمْسِكُ السَّمَاءَ أَن
تَقَعَ عَلَى الْأَرْضِ إِلَّا بِإِذْنِهِ ۗ إِنَّ اللَّهَ بِالنَّاسِ
لَرَءُوفٌ رَّحِيمٌ

22:65. (நபியே!) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ்
இப்பூமியிலுள்ளவற்றையும், அவன் கட்டளையால் கடலில் செல்லும் கப்பல்களையும்
உங்களுக்கு வசப்படுத்தித் தந்திருக்கின்றான்; தன் அனுமதியின்றி பூமியின்
மீது வானம் விழுந்துவிடாதவாறு அவன் தடுத்து கொண்டிருக்கிறான். நிச்சயமாக
அல்லாஹ் மனிதர்கள் மீது மிக்க இரக்கமும், அன்பும் உள்ளவன்.



But, who ever turns away from the Quran he will have a hard life, and
We will raise him up blind on the Day of Judgment.
Al Quran (20:124)

மேலும் அவர்கள் இந்தக் குரானை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது
அவர்களின் இருதயங்களின் மீது பூட்டுக்கள் போடப்பட்டு விட்டனவா?
Al Quran (47:24)

----------------This mail received from
என்றும் மாறா அன்புடன்...
குவைத்திலிருந்து...
பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ

--

பெற்றோர் மற்றும் மனைவிக்கு இடையே ஏற்படும் பிரச்சினைகளை தீர்ப்பது எவ்வாறு?

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகதுஹு...

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....







அன்புச் சகோதரர்களே!

பெற்ற தாய் சொல்வதை கேட்டு மனைவியை விரட்டாதீர்கள், உங்களுக்கு இல்லற சுகம் தருவதற்காக சொந்த ரத்த பந்தங்களை விட்டுப் பிரிந்து வந்த மனைவியின் சொல்லைக் கேட்டு பெற்றோரை விரட்டாதீர்கள்! முதலில் நீங்கள் யார் என்பதை அறிந்துக் கொள்ளுங்கள் இதோ உங்களுக்கு ஒரு உவமையை தருகிறேன்!

நீங்கள் ஒரு நாட்டின் அரசனாக இருக்கிறீர்கள், உங்கள் நாட்டின் நிதி நிர்வாகத்தை சீர்படுத்த ஒரு மந்திரியும், எதிரிகளிடமிருந்து தற்காக்க ஒருபடைத்தளபதியும் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம், இப்போது படைத்தளபதியும் மந்திரியும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு உங்களிடம் நீதி கேட்டு வந்தால் நீங்கள் சமாதானம் செய்வீர்களா அல்லது மந்திரிக்காக படைத்தளபதியையும், படைத்தளபதிக்காக மந்திரியையும் இழப்பீர்களா?

இரண்டில் எந்த ஒன்றை இழந்தாலும் உங்கள் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் கேடாக அமையுமே தவிர உங்களுக்கு நல்ல தீர்வாக அமையாது! இப்போது உங்கள் குடும்பத்தை ஒரு சுநத்திர நாடாகவும் உங்களை ஒரு அரசனாகவும், உங்கள் பெற்றோரை படைத் தளபதியாகவும்! உங்கள் மனைவியை நிதி மந்திரியாகவும் பாவித்துப் பாருங்கள் இரண்டில் ஒன்றை இழந்து குடும்பத்தில் பிரச்சினை வந்தால் பரிதவிப்பது உங்கள் பிஞ்சுக் குழந்தைகளும், உடன் பிறந்தவர்களுமே! அவர்கள் என்ன பாவம் செய்தார்கள்!

இல்லற சுகத்திற்காக மனைவியிடம் அடிமையாகவோ, அன்பிற்காக பெற்றோரிடம் அடிமையாகவோ இருக்காதீர்கள் இதற்கு மாறாகஅல்லாஹ்வுக்கு அடிமையாக இருந்து குடும்பத்தில் நீதியை நிலைநாட்டக்கூடிய குடும்ப தலைவான ஒரு மாபெரும் அரசனாக வாழுங்கள் அல்லாஹ் நாடினால் நிம்மதி உங்களைத் தேடிவரும்! மனைவியோ, பெற்றோரோ உடன் பிறந்தவர்களோ, பிள்ளைகளோ உங்களின் உரிமையை பரிக்க முற்பட்டால் நீங்கள்தான் முட்டாளாக ஆக்கப்படுகிறீர்கள் என்றுதான் அர்த்தம்

தாயை பார்க்க வேண்டாம் என்று மனைவி கூறினாலும்! மனைவியை பார்க்க வேண்டாம் விட்டுவிடு என்று பெற்றோர் கூறினாலும் கீழ்கண்ட வார்த்தையை பயன்படுத்துங்கள்! விழிப்புடன் இருங்கள்!

”நான் அல்லாஹ்வை அஞ்சுகிறேன்! அவனுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்படுகிறேன்! மறுமையில் என் தவறுக்கு நானே பதில் கூற வேண்டும் நீங்கள் அல்ல!எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கீழ்படிந்து அல்லாஹ்வுக்கு பயபக்தியாக நடந்து கொள்கிறார்களோ அவர்கள் நற்பாக்கியம் பெற்றவர்கள். அல்குர்ஆன் 24:52

குறிப்பு

மார்க்க அறிவு குறைந்த, இணைவைப்பு பெற்றொர் அல்லது மனைவி, பிள்ளைகள், சகோதர சகோதரரிகள், உறவுமுறைகளை உடையவராக நீங்கள் இருந்தால் அவர்கள் வெறுக்காதீர்கள் மாறாக அவர்கள் திருந்தும் வரை அவர்களிடம் அழகிய முறையில் தாஃவா செய்யுங்கள் உங்கள் மூலமாக அல்லாஹ் அவருக்கு நேர்வழிகாட்டினால் உங்கள் சுவனப்பாதை வலுவாக அமையலாம். ஒவ்வொருவரும் தத்தம் குடும்பத்தை சிறந்த தாஃவா தளமாக அமைத்துக்கொண்டால் நிம்மதி கிடைக்குமே ஆனால் நாம் நம் குடும்பத்தை சினிமா திரையரங்கு போலத்தானே மாற்றியுள்ளோம்! எப்படி வரும் நிம்மதி!

தங்கள் பெற்றோர் மற்றும் மனைவியை கவனியுங்கள

மனிதன் தன் பெற்றோருக்கு நன்மை செய்யும்படி உபதேசம் செய்தோம். அவனுடையதாய் வெகு சிரமத்துடனேயே அவனைப் பெற்றெடுக்கிறாள். (கர்ப்பத்தில்) அவனைச்சுமப்பதும் அவனுக்கு பால் குடி மறக்கச் செய்வதும் (மொத்தம்) முப்பதுமாதங்களாகும். அவன் வாலிபமாகி, நாற்பது வயதை அடைந்ததும் ”இறைவனே! நீ என்மீதும், என் பெற்றோர் மீதம் புறிந்த நிஃமத்துக்காக (அருள் கொடைகளுக்காக!)நன்றி செலுத்தவும், உன்னுடைய திருப்தியை அடையக்கூடிய ஸாலிஹான நல்லஅமல்களைச் செய்யவும் எனக்கு அருள் பாலிப்பாயாக!

(இதில் எனக்கு உதவுவதற்காக) என்னுடைய சந்ததியையும் ஸாலிஹானவர்களாக (நல்லது செய்பவர்களாக) சீர்படுத்தி யருள்வாயாக! நிச்சயமாக நான் உன்பக்கமே திரும்புகிறேன், அன்றியும் நான் முஸ்லிம்களில் நின்று முள்ளவனாக (உனக்கு முற்றிலும் வழிபட்டவனாக) இருக்கிறேன்” என்று கூறுவான். (உலகப் பொதுமறை திருக்குர்அன் 46:15)

அவனையன்றி (வேறு எவரையும்)நீர் வணங்கலாகாது என்றும் பொற்றோருக்கு நன்மைசெய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கிறான். அவ்விருவறில்ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ)என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் – அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் – இன்னும் அவ்விருவறிடமும் கனிவான கண்ணியமான பேச்சையை பேசுவீராக! (உலகப் பொதுமறை திருக்குர்அன் 17:23)

பெற்றோரை கண்ணியப்படுத்தி கவனிப்பது நபிமார்களின் பண்புகள் இந்த சுன்னத்தையும் கடைபிடியுங்கள் சகோதரர்களே ஏனெனில் நீங்களும் ஒருநான் வயதான கிழட்டுப்பருவத்தை எட்டலாம் உங்களுக்கும் உங்கள் பிள்ளைகள் தொந்தரவு கொடுக்கலாம்! உங்களுக்கு மட்டும் இளமை நிரந்தரமா?????

நபிமார்களின் கனிவான அறிவுரை இதோ குர்ஆனில்

இன்னும் நினைவு கூறுங்கள் நாம் (யாஃகூப் என்ற) இஸ்ராயீல் மக்களிடத்தில் அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் எதனையும் நீங்கள் வணங்கக்கூடாது! (உங்கள்) பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன் (களான ஏழை களுக்கும்) நன்மை செய்யுங்கள்! மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்!

மேலும் தொழுகையை முறையாக கடைபிடித்து வாருங்கள்! ஜகாத்தையும் ஒழுங்காகக் கொடுத்து வாருங்கள்! என்று உறுதி மொழியை வாங்கினோம் ஆனால்உங்களில் சிலரைத் தவிர (மற்ற யாவரும் உறுதி மொழிலை நிறைவேற்றாமல்அதிலிருந்து) புரண்டுவிட்டீர்கள். இன்னும் நீங்கள் புறக்கணித்தவர்களாகவே இருக்கின்றீர்கள்! (உலகப் பொதுமறை திருக்குர்அன் 2:83)

மனைவியின் மீது உங்கள் கடமை


‘அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும்அதற்காக கூலி வழங்கப்படுவீர்.

உம்முடைய மனைவியின் வாயில் (அன்புடன்) நீர்ஊட்டும் ஒரு கவள உணவு உட்பட என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஸஃது இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார். (சஹீஹுல் புகாறி Volume:1Book:2, Verse:56)

‘எவரிடம் மூன்று தன்மைகள் அமைந்துவிட்டனவோ அவர் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் சுவையை உணர்ந்தவராவார். (அவை) அல்லாஹ்வும் அவனுடையதூதரும் ஒருவருக்கு மற்றெதையும் விட அதிக நேசத்திற்குரிய வராவது, ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது, நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பது போல் இறை நிராகரிப்புக்குத் திரும்பிச் செல்வதை வெறுப்பது’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அனஸ் (ரலி) அறிவித்தார். Volume:1 Book:2 : Verse 16

மார்க்க அறிஞரான சாகோதரர் பி. ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு ஸலாம் கூறலாமா? கூறக்கூடாதா?பட்டிமன்றகேடுகெட்ட செயல்கள் ?

சகோதரர் பி.ஜே அவர்களை அல்லாஹ் ஆக்க சதித்திட்டமா?
நவம்பர் 26, 2010 சிராஜ் அப்துல்லாஹ் ஆல்
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)



சகோதரர் பி.ஜே அவர்களை அல்லாஹ் ஆக்க சதித்திட்டமா?



அன்புச் சகோதரர்களே!

முதல் முறையாக தனிப்பட்ட மனிதருடைய பெயரை முன்மொழிந்து பதில் பதிக்கிறேன் எந்தவொரு தனிப்பட்ட நபரின் அனுமதியுமின்றி அவரது பெயரால் பதில் கொடுப்பது என்னைப் பொருத்தவறையில் தவறுதான் எனினும் இன்று சில முட்டாள் முல்லாக்கள் மார்க்கத்தை கேளிக்குறியதாக ஆக்கி மார்க்க அறிஞரான சாகோதரர் பி. ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு ஸலாம் கூறலாமா? கூறக்கூடாதா? என்று பாட்டிமன்றம் நடத்துகிறார்களாம் எனவேதான் சமூகத்தில் இதுபோன்ற கேடுகெட்ட செயல்கள் தொடரக்கூடாது என்று கருதி அந்த தனிப்பட்ட சகோதரர் என்னுடைய செயலை மன்னிப்பார் என்று கருதிக்கொண்டு அவருடைய பெயரை முன்மொழிந்து கருத்து பதிக்கிறேன்! என்னில் தவறு இருப்பின் அனைவரும் மன்னிக்கவும்! அல்லாஹ் கிருபை செய்வானாக!



இங்கு சகோதரர் பி.ஜே அவர்களின் பெயர் அடிபடுவதால் அந்த பெயரை வைத்தே பதில் கூறுகிறேன் இதை வைத்துக்கொண்டு அண்ணன் பி.ஜேவுக்கு வக்காளத்து வாங்குகிறாயா? என்று உங்களில் கேள்வி எழுப்பினால் எழுப்புங்கள் நான் கீழ்கண்ட நபிமொழிக்கு கட்டுப்பட்டு அல்லாஹ் என்னை கைவிடமாட்டான், மஹ்ஷரில் கைவிடக்கூடாது என்று உணர்வின் அடிப்படையில் பதிலளிக்கிறேன் ஏனெனில் நான் முஸ்லிமாக வாழ்ந்து முஸ்லிமாகவே மரணிக்க விரும்புகிறேன்! நீங்களும் இதுபோன்று வாழ விரும்பினால் வாருங்கள்!



இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதியிழைக்கவும் மாட்டான்; அவனை (பிறரின் அநீதிக்கு ஆளாகும்படி) கைவிட்டு விடவும் மாட்டான். தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபட்டிருக்கிறரின் தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கிறான். ஒரு முஸ்லிமின் ஒரு துன்பத்தை நீக்குகிறவரைவிட்டு அல்லாஹ்வும் மறுமை நாளின் துன்பங்களில் ஒரு துன்பத்தை நீக்குகிறான். ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கிறவரின் குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கிறான். என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். (புகாரி 2442)





பி.ஜே என்ன அல்லாஹ்வா? இதன் பதில் இறுதியில் இருக்கும் தயவு செய்து அறைகுறையாக படித்துவிட்டு என்னை திட்டாதீர்கள்! முழுவதுமாக படிக்கவும்!



இஸ்லாத்தில் சிறந்தது எது?


இஸ்லாம் என்பதே சிறந்ததுதான் அதிலும் சிறந்த செயல் என்ன என்று கேட்டால் ஸலாம் என்ற முகமன்தான். நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒருவர் இஸ்லாதை பற்றி வினவுகிறார் அந்த நேரத்தில் மாநபி (ஸல்) அவர்கள் என்ன பதில் அளித்தார்கள் தெரியுமா? இதோ ஆதாரம்


‘ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ‘இஸ்லாத்தில் சிறந்தது எது’ எனக் கேட்டதற்கு, ‘(பசித்தோருக்கு) நீர் உணவளிப்பதும் நீர் அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் ஸலாம் கூறுவதுமாகும்’ என்றார்கள்” என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார். (புகாரி)



யாருக்கு ஸலாம் கூறவேண்டும்

நம்மில் பெரும்பாலானோர் யாருக்கு ஸலாம் கூறவேண்டும் என்ற கருத்துவேறுபாடுகளிலேயே காலத்தை கழிக்கிறார்கள் இவர்கள் கீழ்கண்ட அருள்மறைவசனத்தில் உள்ள அல்லாஹ்வின் வார்த்தையை உணர்ந்துவிட்டால் அவர்களின் விவாத நேரம் மிச்சமாகும்!



(எவராலும்) உங்களுக்கு முகமன் (ஸலாம்) கூறப்பட்டால் (அதற்குப் பிரதியாக) அதைவிட அழகான (வாக்கியத்)தைக் கொண்டு நீங்கள் முகமன் கூறுங்கள். அல்லது அதனையே திருப்பிக் கூறுங்கள். நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளைப் பற்றியும் கணக்குப் பார்க்கிறவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன்: 4:86)




இங்கு அல்லாஹ் பயன்படுத்தும் வார்த்தை எவராலும் என்று வருகிறது அதாவது ஒரு காஃபிர் கூட உங்களுக்கு ஸலாம் கூறினால் நீங்கள் அவருக்கு பதில் ஸலாம் கூறலாம் இதுதான் இங்கு நாம் அறியும் செய்தி எனவே ஒரு காஃபிர் உங்களுக்கு ஸலாம் கூறினால் அதற்கு பதில் அளித்தால் உங்களுக்கு என்ன கேடு வந்துவிடும்! சிந்தித்துப்பாருங்கள் நீங்களாக காஃபிர்களை தேடிச்சென்று ஸலாம் கூறவில்லையே மாறாக காஃபிர்கள் உங்களைத் தேடி வந்து அன்பாக ஸலாம் கூறுகிறார்கள் அவர்களை வாழ்த்தவது கூடாதா?



யாருக்கு ஸலாம் கூறக்கூடாது

ஸலாம் என்ற முகமன் வாழ்த்தை யாருக்கு கூறக்கூடாது என்று நானறிந்தவரை எந்த வரைமுறையும் தென்படவில்லை தென்பட்டால் கூறவும்! ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நடைமுறைப்படி பார்த்தால் சிலருக்கு வேண்டுமானால் ஸலாம் கூறுவதை தவிர்க்கலாம். யாராவது நமக்கு அஸ்ஸாமு அலைக்க (உமக்கு மரணம் நேரட்டும்) என்று பாலஸ்தீனத்தில் கலகம் விளைவிக்கும் யூத நாய்ககளின் ஸ்டைலில் முகமன் கூறினால் பதிலுக்கு மனிதருள் மாணிக்கமாக திகழ்ந்த நபியின் ஸ்டைலில் வ அலைக்க என்று கூறலாம்!



இதன் மூலம் நாம் அறிவது ஸலாம் என்ற வார்த்தையை மழித்துவிட்டு அஸ்ஸாமு அலைக்க என்று கூறுபவனுக்கு ஸலாம் கூறக்கூடாது என்பதே! ஆதாரம் இதோ


அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
ஒரு யூதன் இறைத்தூதர்(ஸல்) அவர்களைக் கடந்து சென்றபோது, ‘அஸ்ஸாமு அலைக்க’ (உமக்கு மரணம் நேரட்டும்) எனக் கூறினான். அதற்கு (பதிலாக) இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘வ அலைக்க’ (அவ்வாறே உனக்கு உண்டாகட்டும்) என்றார்கள். பின்னர் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (மக்களை நோக்கி), ‘அவன் என்ன சொல்கிறான் என்று உங்களுக்குத் தெரியுமா?’ என்று கேட்டுவிட்டு, ‘அவன் ‘அஸ்ஸாமு அலைக்க’ (உங்களுக்கு மரணம் நேரட்டும்) என்று சொன்னான்’ என்றார்கள். மக்கள், ‘இறைத்தூதர் அவர்களே! அவனை நாங்கள் கொல்ல வேண்டாமா?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘வேண்டாம். வேதக்காரர்கள் உங்களுக்கு சலாம் சொன்னால் (அதற்கு பதிலாக) நீங்கள் ‘வ அலைக்கும்’ (அவ்வாறே உங்களுக்கு உண்டாகட்டும்) என்று சொல்லிவிடுங்கள்’ என்றார்கள். (புகாரி 6926)




யாருக்காவது ஸலாம் கூறுவதை புறக்கணித்தால் என்ன நிகழும்

வேண்டுமென்றே ஸலாத்தை புறக்கணித்தால் அவன் வேண்டுமென்றே நபிவழியை புறக்கணிக்கிறான் அவ்வாறு புறக்கணிப்பவன் அல்லாஹ்வை இகழ்கிறான் ஏனெனில் அல்லாஹ்தான் ஸலாம் என்ற முகமனை கற்றுத்தந்தவன்!



ஒருவேளை சகோதரர் பி.ஜே அல்லது ஜமாலி ஆகிய இருவரோ? அல்லது இருவரில் ஒருவரோ ஒரு சபையில் அமர்ந்திருந்தால் இந்த இருவருக்குமோ? அல்லது இருவரில் ஒருவருக்கோ எந்த மடையனாவது திட்டம்போட்டு ஸலாம் கூறவில்லை அல்லது ஸலாமுக்கு பதில் கூறவில்லை என்று வைத்துக்கொள்வோம் அப்படிப்பட்ட நிலையில் அந்த மடையர்கள் கீழ்கண்ட நபிவழியை வேண்டுமென்றே புறக்கணிக்கிறார்கள்



நபி(ஸல்) அவர்கள் (சபையோருக்கு அல்லது அயலார் வீட்டுக்குள் நுழைய அனுமதி கேட்டு) சலாம் கூறினால் மூன்று முறை சலாம் கூறுவார்கள். ஏதாவது ஒரு வார்த்தை பேசினால் (மக்கள் நன்கு விளங்கிக் கொள்வதற்காக) அதனை மூன்று முறை திரும்பச் சொல்வார்கள். அறிவிப்பவர்: அனஸ்(ரலி), ஆதாரம்: ஸஹீஹூல் புகாரி, பாகம் 6, அத்தியாயம் 79, எண் 6244



ஒருவேளை சகோதரர் பி.ஜே அல்லது ஜமாலி ஆகிய இருவருமோ? அல்லது இருவரில் ஒருவரோ ஒரு சாலையோரம் நடந்து சென்றாலோ? அல்லது சாலையோரம் உள்ள மரத்தடி நிழலில் அமர்ந்திருந்தாலோ இந்த இருவருக்குமோ? அல்லது இருவரில் ஒருவருக்கோ எந்த மடையனாவது திட்டம்போட்டு ஸலாம் கூறவில்லை அல்லது ஸலாமுக்கு பதில் கூறவில்லை என்று வைத்துக்கொள்வோம் அப்படிப்பட்ட நிலையில் அந்த மடையர்கள் கீழ்கண்ட நபிவழியை வேண்டுமென்றே புறக்கணிக்கிறார்கள்



சிறியவர் பெரியவருக்கும், நடந்து செல்பவர் அமர்ந்திருப்பவருக்கும், சிறு குழுவினர் பெருங் குழுவினருக்கும் (முதலில்) சலாம் (முகமன்) சொல்லட்டும். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி), ஆதாரம்: ஸஹீஹூல் புகாரி, பாகம் 6, அத்தியாயம் 79, எண் 6231



ஒருவேளை ஸலாம் கூற மறுக்கும் மடையர்கள் தங்கள் வாதத்தில் நிலைத்திருந்தால் அவர்கள் கீழ்கண்ட நபிமொழியை மறுப்பது மட்டுமல்லாமல் இஸ்லாத்தில் சிறந்ததை வேண்டுமென்றே புறக்கணிக்கிறார்கள்!


‘ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ‘இஸ்லாத்தில் சிறந்தது எது’ எனக் கேட்டதற்கு, ‘(பசித்தோருக்கு) நீர் உணவளிப்பதும் நீர் அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் ஸலாம் கூறுவதுமாகும்’ என்றார்கள்” என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார். (புகாரி)




சகோதரர் பி.ஜே அவர்களை அல்லாஹ் ஆக்க சதித்திட்டமா?


அன்புச்சகோதர, சகோதரிகளே நாம் ஒருவருக்கு ஸலாம் கூறக்கூடாது என்று தீர்மானம் எடுத்தால் அந்த ஒருவரை நாம் அல்லாஹ்வாக கருதுகிறோம் என்றுதான் பொருள்படுகிறது. குழப்பமாக உள்ளதா? இதோ கீழ்கண்ட நபிமொழியை பாருங்கள்!



அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருக்கும்போது ‘அடியார்கள் சார்பாக அல்லாஹ்வுக்கு ஸலாம் உண்டாகட்டும். இன்னின்னாருக்கு ஸலாம் உண்டாகட்டுமாக’ என்று கூறிக் கொண்டிருந்தோம். (இதனை அறிந்த நபி(ஸல்) அவர்கள் ‘அல்லாஹ்வின் மீது ஸலாம் உண்டாகட்டுமாக என்று கூறாதீர்கள். ஏனெனில் அல்லாஹ்வே ஸலாமாக இருக்கிறான். எனினும் ‘காணிக்கைகளும் வணக்கங்களும் பாராட்டுகளும் அல்லாஹ்வுக்கே உரியன. நபியே உங்களின் மீது ஸலாமும் அல்லாஹ்வின் ரஹ்மத்தும் பரகத்தும் ஏற்படட்டுமாக! எங்களின் மீதும் அல்லாஹ்வின் ரஹ்மத்தும் பரகத்தும் ஏற்படட்டுமாக! எங்களின் மீதும் அல்லாஹ்வின் நல்லடியார்கள் அனைவர் மீதும் ஸலாம் உண்டாகட்டும்’ என்று கூறட்டும். இதை நீங்கள் கூறினால் வானம் பூமியிலுள்ள அனைத்து நல்லடியார்களுக்கும் ஸலாம் கூறினார்கள் என அமையும். ‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்று உறுதியாக நம்புகிறேன். மேலும் முஹம்மத்(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாக இருக்கிறார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்’ என்று கூறுங்கள். இவ்வாறு கூறும்போது வானம் பூமியிலுள்ள எல்லா அடியாருக்கும் நீங்கள் ஸலாம் கூறியவர்களாவீர்கள். இதன் பிறகு உங்களுக்கு விருப்பமாக துஆவைத் தேர்ந்தெடுத்து அதன் மூலம் பிரார்த்தியுங்கள்‘ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி 835)



இங்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுக்கு ஸலாம் கூறக்கூடாது என்று கூறுகிறார்கள். இந்த அடிப்படை அறிவு கூட இல்லாத சில உலமாக்கள் பிஜேவுக்கு ஸலாம் கூறலாமா? கூறக்கூடாதா என்று பாட்டிமன்றம் நடத்துகிறார்களாமே அவர்கள் சகோதரர் பி.ஜே அவர்களை அல்லாஹ்வாக ஆக்கிவிட சதித்திட்டம் போடுகிறார்களா? மூட முல்லாக்களே இதுதான் உங்கள் தேடுதலா? இப்படிப்படட விவாதங்களின் மூலம் உங்களுக்கு சொர்க்கம் கிடைக்குமா? ஒரு தஃவா சகோதரரை குறிப்பிட்டு ஸலாம் கூறலாமா? கூறக்கூடாதா? என்று விவாதம் நடத்தும் நீங்கள் எல்லாம் உலமாக்கள் ஆலிம்கள் அல்ல மாறாக அறிவிழிகள்!



ஆலிம்கள் என்பவர்கள் நபியின் வாரிசுகள் என்று கேள்விப்பட்ட துண்டு எந்த நபியாவது இந்த கேடுகெட்ட செயலை செய்தாரா? அப்படியெனில் இந்த மூட ஆலிம்கள் தங்களை நபியின் வாரிசுகள் என்று கூறிக்கொண்டு நபிமார்களை கேவலப்படுத்து கிறார்களா? இப்படித்தான் நாமும் கேள்வி எழுப்புவோம்! எனவே இந்த சம்பவத்தின் மூலம் எந்த ஆலிம், உலமாக்கள் சகோதரர் பி.ஜேவுக்கு ஸலாம் கூறக்கூடாது என்று கூறுகிறானோ அந்த ஆலிம் ஆலிமே அல்ல அந்த தகுதியை அவன் இழந்துவிட்டான் அவன் அல்லாஹ்வின் பார்வையில் பொதிசுமக்கும் கழுதைதான் ஆதாரம் இதோ



எவர்கள் தவ்ராத் (வேதம்) சுமத்தப்பெற்று பின்னர் அதன்படி நடக்கவில்லையோ, அவர்களுக்கு உதாரணமாவது: ஏடுகளைச் சுமக்கும் கழுதையின் உதாரணத்திற்கு ஒப்பாகும்; எச்சமூகத்தார் அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்ப்பிக்கிறார்களோ அவர்களின் உதாரணம் மிகக் கெட்டதாகும் – அல்லாஹ் அநியாயக்கார சமூகத்தாரை நேர்வழியில் செலுத்தமாட்டான். (அல்குர்அன் 62:5)



இந்த வசனம் தவ்ராத்திற்கு மட்டுமல்ல குர்ஆனுக்கும் தான் ஏனெனில் தவ்ராத்தும் குர்ஆனும் அல்லாஹ்வுடைய வேதம் தானே! இந்த குர்ஆன் வசனத்தின் அடிப்படையில் தவ்ஹீத் மார்க்க அறிஞர்கள் இந்த மூட முல்லாக்களை பொதி சுமக்கும் கழுதைகள் என்று ஃபத்வா கொடுக்க முன்வரவேண்டும்!



சகோதர, சகோதரிகளே இறுதி வேண்டுகோள்

எந்த தனிமனிதனுக்காவது, மார்க்க அறிஞருக்காவது, முஸ்லிமாக பிறந்து, முஸ்லிமாக வாழ்ந்து வரும் மனிதனுக்காவது ஸலாம் கூறமாட்டேன் என்று எவராவது உறுதிமொழி எடுத்திருந்தால் உடனே அந்த உறுதிமொழியை கழிவுகள் நிறைந்த குப்பையில் தூக்கி போட்டுவிட்டு கீழ்கண்ட நபிமொழி்க்கு தலைசாய்க்கவும்!


நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை சொர்க்கத்தில் நுழைய முடியாது, ஒருவரை ஒருவர் நேசிக்காமல் நம்பிக்கை கொண்டவர்களாக முடியாது. ஒரு செயலைச் செய்தால் நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிப்பீர்கள். அச்செயலை நான் உங்களுக்குக் கூறட்டுமா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டுவிட்டு ”உங்களிடையே ஸலாமை பரப்புங்கள் என்றார்கள். (நூல் முஸ்லிம் 81)


ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு சகோதரன் என்ற அடிப்படையில் பி.ஜே என்ற இந்த முஸ்லிம் சகோதரருக்கு நேர்ந்த துன்பத்தை, இழைக்கப்பட்ட கொடுமைக்கு எதிர்த்து குரள் எழுப்பக்கூடிய முஸ்லிம் சகோதரன் உங்களில் யார்? நீங்கள் மஹ்ஷரில் நீதிமான்களுக்கு அர்ஷின் நிழல் கிடைக்கும் அப்படிப்பட்ட அந்த அர்ஷின் நிழலில் நீங்கள் நிற்க தகுதியானவராக மாற விரும்பினால் வேற்றுமைகளை மறந்து நீதி செலுத்துங்கள்!

அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக!

அல்ஹம்துலில்லாஹ்!

எகிப்து கலவரம் நீடிப்பதால் கச்சா எண்ணை விலை அதிகரிப்பு: பெட்ரோல் விலை மீண்டும் உயரும்; எண்ணை நிறுவனங்கள் ஆலோசனை !!!

புதுடெல்லி, பிப். 1-MAALAI MALAR
சென்னை 01-02-2011 (செவ்வாய்க்கிழமை)

பெட்ரோல் விலையை எண்ணை நிறுவனங்களே சூழ்நிலைக்கு ஏற்ப உயர்த்திக் கொள்ள மத்திய அரசு அனுமதித்து உள்ளது. இதையடுத்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை உயரும் போதெல்லாம் பெட்ரோல் விலையை எண்ணை நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன.

கடந்த மாதம் 15-ந்தேதி ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.2.50 உயர்த்தப்பட்டது. அதற்கு முன்பு டிசம்பர் மாதம் 15-ந்தேதி லிட்டருக்கு ரூ.2.90 உயர்த்தப்பட்டது. அதாவது ஒரு மாத காலத்துக்குள் 2 முறை பெட்ரோல் விலையை உயர்த்தினார்கள்.

இப்போது மீண்டும் பெட்ரோல் விலையை உயர்த்துவது குறித்து எண்ணை நிறு வனங்கள் ஆலோசித்து வருகின்றன. எகிப்து நாட்டில் அரசுக்கு எதிராக நடந்து வரும் கலவரத்தால் அரபு நாடுகளில் இருந்து கச்சா எண்ணைகளை மற்ற நாடு களுக்கு அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. எகிப்து நாட்டில் தான் புகழ் பெற்ற சூயஸ்கால்வாய் உள்ளது. செங்கடலையும், மத்திய தரைக் கடலையும், இணைக்கும் இந்த கால்வாய் மூலம்தான் ஐரோப்பிய நாடுகளுக்கும், அமெரிக்க நாடுகளுக்கும் கச்சா எண்ணை அனுப்பப்படுகிறது.



சூயஸ்கால்வாய் மூலம் தினமும் 18 லட்சம் பேரல் கச்சா எண்ணை அனுப்பப்பட்டு வந்தது. எகிப்து கலவரத்தால் இந்த வழியாக கச்சா எண்ணைகளை அனுப்புவது பாதிக்கப்பட்டுள்ளது. எனவே சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை உயர்ந்து விட்டது.

எகிப்து கலவரத்துக்கு பிறகு மட்டும் 16 சதவீதம் உயர்ந்து உள்ளது. தற்போது ஒரு பேரல் விலை 100 அமெரிக்க டாலரை எட்டி உள்ளது. இதனால் இந்திய எண்ணை நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. பெட்ரோல் மூலம் லிட்டருக்கு 3 ரூபாயும், டீசல் மூலம் லிட்டருக்கு 8 ரூபாயும் இழப்பு ஏற்படுகின்றன.

எனவே பெட்ரோல் விலையை உயர்த்த எண்ணை நிறுவனங்கள் திட்டமிட்டு உள்ளன. இது பற்றி தீவிர மாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதுபற்றி இந்தியன் ஆயில் நிறுவன சேர்மன் பி.எம்.பன்சாலிடம் கேட்டபோது பெட்ரோல் விலை உயர்வு குறித்து இப்போது என்னால் எதுவும் சொல்ல முடியாது. ஆனால் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என்றார்.

கச்சா எண்ணை விலை உயர்வை அடுத்து விமான பெட்ரோலுக்கான விலையை எண்ணை நிறுவனங்கள் உடனடியாக உயர்த்திவிட்டன. ஏற்கனவே இருந்த விலையை விட 4 சதவீதம் உயர்த்தி கிலோ லிட்டருக்கு ரூ.50 ஆயிரத்து 958 என நிர்ணயித்து உள்ளனர்.

கருத்து

Tuesday, February 01,2011 11:05 AM, தமிழ் said:
சைக்கிள் விலை ஏறபோகுது...! உடனே எல்லோரும் சைக்கிள் வாங்குங்க...! இல்லன அதையும் விலை எதிருவணுக...!
.....?
Tuesday, February 01,2011 10:56 AM, ரகு said:
இந்தியா (விலை) வளர்ச்சி பாதையில் போகுதுன்னு சொல்லுங்க
.....?

Tuesday, February 01,2011 10:52 AM, போடா said:
வெரி குட்......கீப் இட் அப்

....?
Tuesday, February 01,2011 10:49 AM, ECONOMIST said:
In world economy petrol and disel will stil go up, cannot be stopped.

.....?
Tuesday, February 01,2011 10:41 AM, minnel said:
ஓகே ஓகே ஆன பெட்ரோல் வரியை முற்றிலும் நீகினால் பெட்ரோல் 23 கெடைக்கும்


On Tuesday, February 01,2011 10:47 AM, ராஜ் said :
வரி குறைக்க மாட்டாங்க , சீக்கரம் பெட்ரோல் 100 ருபாய் வந்திடும்
.....?

சாதனை படைத்த "காயிதே மில்லத்" தொகுதிக்கு போகாமலேயே தேர்தல்களில் வென்றவர்!

இஸ்லாமியர்களின் ஒப்பற்ற தலைவராக விளங்கியவர் `காயிதே மில்லத்' இஸ்மாயில் சாகிப். நீண்ட காலம் முஸ்லிம் லீக் கட்சி தலைவராக இருந்து சமுதாயத்துக்கு உழைத்தவர். அரசியல், பொது வாழ்க்கை இரண்டிலும் மக்களின் ஆதரவை பெற்று விளங்கியவர்.

அன்பு, அடக்கம், ஆற்றல் ஆகியவற்றின் உறைவிடமாக திகழ்ந்தவர். தொகுதிக்கு நேரில் செல்லாமலேயே தேர்தலில் வெற்றி பெறுகிற அளவுக்கு மக்களிடம் செல்வாக்கு பெற்றவர்.

அனைத்து கட்சியினரும் மதிக்க தக்க தலைவராக விளங்கினார். இந்திரா காந்தி, லால்பகதூர் சாஸ்திரி, ஜாகீர் உசேன், ஈ.வெ.ரா. பெரியார், ராஜாஜி, காமராஜர், அண்ணா, கருணாநிதி ஆகியோருடன் கட்சி பாகுபாடின்றி நட்புறவு கொண்டிருந்தார்.

இத்தகைய பெருமைக்குரிய இஸ்மாயில் சாகிப், திருநெல்வேலியை அடுத்த பேட்டை என்ற ஊரில் 1896_ம் ஆண்டு பிறந்தார். இவருடைய தகப்பனாரின் பெயர் மியாகான் ராவுத்தர். திருவாங்கூர் அரச குடும்பத்தினருக்கு துணிகள் விற்பனை செய்யும் வணிகராகவும், முஸ்லிம் மத தலைவர் (மவுலவி) ஆகவும் இருந்தார். இஸ்மாயில் சாகிப் சிறுவயதிலேயே தந்தையை இழந்தார். தாயார்தான் அரபு மொழியும், மத நூலும் கற்றுக்கொடுத்தார்.

திருநெல்வேலியில் உள்ள உயர்நிலைப்பள்ளிக்கூடத்தில் படிப்பு முடிந்ததும் திருச்சி ஜோசப் கல்லூரியிலும், பிறகு சென்னை கிறிஸ்தவ கல்லூரியிலும் படித்து பி.ஏ. பட்டம் பெற்றார்.

பட்டம் பெற 2 மாதம் இருந்தபோது, காந்தி தொடங்கிய ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டார். 1920_ம் ஆண்டு சுதந்திரப் போராட்டத்தில் குதித்தார். அந்த ஆண்டில் திருநெல்வேலியில் நடந்த காங்கிரஸ் கட்சி மாநாட்டில் ஒத்துழையாமை இயக்கத் தீர்மானத்தை பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே நிறைவேற்றினார்.

1936_ம் ஆண்டு இஸ்மாயில் சாகிபு, முஸ்லிம் லீக் கட்சியில் சேர்ந்தார். 1945_ம் ஆண்டில், தமிழ்நாட்டில், தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் ஆனார். 1948_ம் ஆண்டு இந்திய ïனியன் முஸ்லிம் லீக் தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டார்.

1946 முதல் 52_ம் ஆண்டு வரை பழைய சென்னை மாகாண சட்ட சபை உறுப்பினராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார். 1952_ம் ஆண்டு முதல் 58_ம் ஆண்டு வரை டெல்லி மேல்_சபை உறுப்பினராக பதவி வகித்தார்.

1962_ம் ஆண்டில் கேரளாவில் போட்டியிட்டு பாராளுமன்றத்துக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார். அதன் பின் 1967, 1971 தேர்தல்களிலும் போட்டியிட்டு பாராளுமன்றத்துக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார்.

தொகுதிக்கு செல்லாமலேயே தேர்தலில் வெற்றி பெற்றவர் இஸ்மாயில் சாகிப் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வளவு தூரம் தொகுதி மக்களின் செல்வாக்கை பெற்றவர்.

இஸ்மாயில் சாகிப்பின் மனைவி பெயர் அமீதா பீவி. இவர் 1962_ம் ஆண்டில் காலமானார். இஸ்மாயில் சாகிப்பின் ஒரே மகன் மியாகான்.

"காயிதே மில்லத்" இஸ்மாயில் சாகிபுக்கு 1972 மார்ச் 25_ந்தேதி திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. வயிற்றில் கடுமையாக வலி ஏற்பட்டது. இதனால் அவர் சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

குடல் புண் (அல்சர்) நோய்க்காக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. டாக்டர் யு.முகமது தலைமையில் 15 டாக்டர் கள் கொண்ட குழு சிகிச்சை அளித்தார்கள். 31_ந்தேதி காலை அவர் ரத்த வாந்தி எடுத்தார். கல்லீரலும் சரிவர வேலை செய்யவில்லை. இதனைத் தொடர்ந்து உணர்வு இழந்தார். உடல்நிலை கவலைக்கிடமாக இருந்து வந்தது. டாக்டர்கள் இரவு பகலாக அவருக்கு சிகிச்சை அளித்தனர்.

ஏப்ரல் 4_ந்தேதி சிறுநீரகம் சரிவர இயங்கவில்லை. அதை சீராக்க ஒரு மணி நேரம் ஆபரேஷன் நடந்தது. ஆயினும் அவர் உடல் நிலை தேறவில்லை. தொடர்ந்து மோசம் அடைந்தது.

முதல்_அமைச்சர் கருணாநிதி, அமைச்சர்கள் சாதிக்பாட்சா, சி.பா.ஆதித்தனார், திராவிட கழக தலைவர் ஈ.வெ.ரா. பெரியார் ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு சென்று அவரை பார்த்தனர். முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த சட்டமன்ற, பாராளு மன்ற உறுப்பினர்களும், பிரமுகர்களும் ஆஸ்பத்திரியிலேயே இருந்தனர்.

அன்றைய தினம் (4_4_1972) இரவு 10 மணி அளவில் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாகியது. உறவினர்கள் அவரைச் சுற்றி அமர்ந்து "குர்ஆன்" ஓதினார்கள்.

நள்ளிரவு 1_15 மணிக்கு இஸ்மாயில் சாகிப் மரணம் அடைந்தார். உயிர் பிரியும்போது, அவருடைய மகன் மியாகான், மருமகள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் அருகில் இருந்தனர்.

இஸ்மாயில் சாகிப் உடல் ஆஸ்பத்திரியில் இருந்து குரோம்பேட்டையில் உள்ள அவர் வீட்டுக்கு காரில் கொண்டு போகப்பட்டது. மரணம் அடைந்தபோது காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிபுக்கு வயது 76.

மறுநாள் (5_ந்தேதி) காலை பொதுமக்கள் இறுதி மரியாதை செலுத்துவதற்கு வசதியாக ராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டது. கல்லூரியின் கலை அரங்கின் மத்தியில் ஒரு மேடை அமைத்து அதில் இஸ்மாயில் சாகிப் உடல் வைக்கப்பட்டது. உடல், முஸ்லிம் லீக் கொடியால் போர்த்தப்பட்டு இருந்தது. காலையில் இருந்தே மக்கள் ஆயிரக்கணக்கில் வந்து, இறுதி மரியாதை செலுத்தினார்கள்.

முதல்_அமைச்சர் கருணாநிதி, காலை 8_25 மணிக்கு வந்து மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். மற்றும் அமைச்சர்கள் நெடுஞ்செழியன், என்.வி.நடராசன், மாதவன், ப.உ.சண்முகம், சத்தியவாணிமுத்து அம்மையார், சாதிக்பாட்சா, சி.பா.ஆதித்தனார், ராசாராம், மன்னை நாராயணசாமி, ராமச்சந்திரன், ஓ.பி.ராமன், கண்ணப்பன் ஆகியோரும் மலர் மாலை வைத்தனர்.

பிற்பகலில் திராவிட கழக தலைவர் ஈ.வெ.ரா.பெரியார் வந்து இறுதி மரியாதை செலுத்தினார். இஸ்மாயில் சாகிப்பின் மகன் மியாகானுக்கு ஆறுதல் கூறினார்.

பழைய காங்கிரஸ் தலைவர் காமராஜர், சபாநாயகர் மதியழகன், மேல்_சபை தலைவர் சி.பி.சிற்றரசு, தமிழரசு கழக தலைவர் ம.பொ.சிவஞானம், முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கம், நீதிபதி இஸ்மாயில், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் பொன்னப்ப நாடார், ராஜாராம் நாயுடு ஆகியோரும் இறுதி மரியாதை செலுத்தினர்.

பின்னர் புதுக்கல்லூரியில் உள்ள மசூதிக்கு இஸ்மாயில் சாகிப் உடல் எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு தொழுகை நடைபெற்றது. பிறகு இறுதி ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலம் புறப்படுவதற்கு முன் முதல்_அமைச்சர் கருணாநிதியும், மற்ற அமைச்சர்களும் வந்து இறுதி மரியாதை செலுத்தினார்கள்.

ஊர்வலத்தில் அமைச்சர்கள், சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள், மத்தியபிரதேசம், மகாராஷ்டிரம், மேற்கு வங்காளம் முதலிய வெளி மாநிலங்களில் இருந்து வந்த முஸ்லிம் லீக் பிரமுகர்கள் நடந்து சென்றனர்.

தி.மு.க. பொருளாளர் எம்.ஜி.ஆரும் நடந்து போனார். ஊர்வலத்தில் போனவர்கள் எண்ணிக்கை லட்சத்துக்கு மேல் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது.

இறுதி ஊர்வலத்தில் கேரள கல்வி மந்திரி முகமது கோயா, ஊராட்சி மந்திரி அவுக்காதல் குட்டிநகா, பொதுப்பணி மந்திரி திவாகரன், ரெவினிï மந்திரி பேபி ஜான், சபாநாயகர் மொகிதீன் குட்டி, புதுச்சேரி மந்திரி ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

காஞ்சீபுரத்தில், அண்ணாவை ஆதரித்து நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் "காயிதே மில்லத்" கலந்து கொண்டார். கூட்டத்தில் பேசிக்கொண்டிருப்பது அப்துல் சமது (1962). ஊர்வலம் பீட்டர்ஸ் ரோடு, பெசன்ட் ரோடு வழியாக, திருவல்லிக்கேணி ஐரோட்டில் உள்ள வாலாஜா மசூதியை அடைந்தது. அங்கு இஸ்மாயில் சாகிப் உடல், முஸ்லிம் மத சம்பிரதாயப்படி அடக்கம் செய்யப்பட்டது. அடக்கம் நடந்தபோது கூடி இருந்தவர்கள் "அல்லாஹ் _ அக்பர்" என்று குரல் எழுப்பினார்கள்.

இஸ்மாயில் சாகிப் உடல் அடக்கம் செய்யப்பட்ட பிறகு அங்கு இரங்கல் கூட்டம் நடந்தது. அதில் கருணாநிதி பேசுகையில் கூறியதாவது:-

"தனது 50 ஆண்டு கால வாழ்வில் 8 கோடி முஸ்லிம்களுக்காக உழைத்து பொற்கால மாக்கித் தந்தார். தமிழர்களுக்கு மட்டும் அல்ல _ இந்தியர்களுக்கும் அவர் மறைவு மாபெரும் இழப்பு. இஸ்மாயில் சாகிப் மனிதருள் மாமணி. அடக்கம், அறிவு, ஆற்றல் ஆகியவற்றின் உறைவிடம். இஸ்மாயில் சமூகத்துக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் நீண்ட நெடுங்கால தொடர்பு இருந்து வருகிறது.

எங்கள் அண்ணன் மறைவுக்கு பிறகு இஸ்மாயில் சாகிப் அண்ணனுக்கு அண்ணனாக திகழ்ந்தார். அவர் மறைந்து விட வில்லை. நெஞ்சத்தில் உறைந்து விட்டார். அவர் நம்மோடு இல்லாமல் இருக்கலாம். ஆனால் உள்ளத்தில் இருக்கிறார்."

இவ்வாறு கருணாநிதி கூறினார்.

கூட்டத்தில் கேரள அமைச்சர்கள் முகமது கோயா, திவாகரன், பாண்டிச்சேரி அமைச்சர் ராமசாமி, சபாநாயகர் மதியழகன், தி.மு.க. பொருளாளர் எம்.ஜி.ஆர்., கேரள முஸ்லிம் லீக் தலைவர் தங்கல், இந்திய முஸ்லிம் லீக் செயலாளர் இப்ராகிம் சுலைமான் சேட், அப்துல் சமது, பீர்முகமது, திருப்பூர் மொய்தீன் மற்றும் பலர் பேசினார்கள்.

இஸ்மாயில் சாகிப் மறைவுக்கு ஜனாதிபதி வி.வி.கிரி, தமிழக கவர்னர் கே.கே.ஷா, திராவிட கழக தலைவர் பெரியார், சுதந்திரா கட்சி தலைவர் ராஜாஜி, பழைய காங்கிரஸ் தலைவர் காமராஜர், கேரள முதல்_மந்திரி அச்சுதமேனன் உள்பட ஏராளமான தலைவர்கள் அனுதாப செய்தி வெளியிட்டார்கள்.

டெல்லி பாராளுமன்றத்திலும், தமிழ்நாடு சட்டசபையிலும் அனுதாப தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எல்லா உறுப்பினர் களும் ஒரு நிமிடம் மவுனமாக எழுந்து நின்று மரியாதை செலுத்தினார்கள்.

Sunday, December 05,2010 03:00 PM, kkr said:
மனிதநேயமிக்க ஓர் நல்ல தலைவர்,சாதி மத பேதமின்றி அனைத்துதரப்பு மக்களுக்காககும் உண்மையாய் உழைத்தவர்,இவரை போன்ற நல்ல தலைவர்களை இனி நாம் காணுவது அரிதே! மத நல்லிணக்க நாயகரும் இவரே! ஏழை எளியோருக்காக கடுமையாய் உழைத்தவர்,
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .....?
Monday, November 29,2010 05:06 PM, சண்முகம் said:
நல்லிணக்க தலைவர், வாழ்க

Thursday, January 13,2011 07:16 PM, விண்ணகர் சித்தீக் said:
அரசியல் தலைவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு வுதாரனமாக விளங்கியவர், தான் பெரிய தலைவர் என்ற மமதை கொஞ்சம்குடா இல்லாமல் திகழ்ந்தவர், மற்றும் சட்ட சபைக்கு ரயிலில் சென்று வந்தவர் என்ற தகவலையும் கேடு அதிசயதிருகிறேன்
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .....?

இமெயில் பிரதி
Chennai சனிக்கிழமை, மே 08, 10:45 AM IST
முந்தைய பதிவுகள்
http://www.maalaimalar.com/2010/05/08

குறட்டையை தடுக்க வழிகள்!

நாம் உறங்கியபின், நம் சுவாசக்குழாயில் உள்ள தசைகள் சற்றே சாவகாசமாக வேலை செய்ய ஆரம்பிக்கும். இந்த நேரத்தில் நம் தொண்டையானது சுருங்கத் தொடங்கும். சுருங்கும் தொண்டைவழியாக செல்லும் காற்றுக்கு இப்போது உள்சென்று வெளியேற போதிய இடம் இல்லை.

ஆக சுருங்கிய தொண்டை வழியாக செல்லும் காற்றானது அழுத்தத்துக்குட்படுகிறது. அழுத்தம் நிறைந்த காற்று தொண்டையின் பின்புற தசைகளை அதிரச் செய்கின்றன.

இந்த அதிர்வைத் தான் நாம் குறட்டை என்கிறோம் என்கிறார் சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள கே.கே.ஆர்.காதுமூக்கு தொண்டை மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரவிராமலிங்கம். அவர் கூறியதாவது:-

காரணங்கள்:

நாம் தூங்கும் போது தலைக்கு வைத்து கொள்ளும் தலையணையை மிகவும் பெரிதாக உயரமாக வைத்துக் கொள்வதால் ஏற்படும். சில வகையான ஒவ்வாமை காரணமாக சுவாசக் குழாயில் ஏற்படும் சளி, சிலருக்கு உடல் பருமன் காரணமாகவும் குறட்டை ஏற்படுகிறது.

முழு தூக்கம் இருக்காது:

யாராவது குறட்டை விட்டு தூங்கினால் அவனுக்கென்ன நிம்மதியாக தூங்குகிறான் என பலர் நினைப்பதுண்டு. ஆனால் அது தவறு. குறட்டை விடுபவர் நன்றாக தூங்க முடியாது என்பதுடன் பல பாதிப்பு நிலைக்கும் தள்ளப்படும் நிலையும் வரலாம். குறட்டை விடுபவர் மனம் தெளிவாக இருக்காது.

உடல் மிகவும் களைப்பாக இருக்கும் உடலில் சக்தி குறைவாக இருக்கும். தெளிவற்ற சிந்தனை வரும். அதிகமாக கோபம் வரும். இதுமட்டுமின்றி உடலுக்கு போதிய அளவு பிராணவாயு கிடைக்காது. இதனால் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இருதய நோய் பக்கவாதம் போன்ற நோய் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

அத்தோடு மிக தீவிரமாக குறட்டை விடுபவர்கள் உறக்கத்திலேயே இறந்து விடும் வாய்ப்பும் அதிகம் உள்ளது. அதனால் இவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தவிர்க்க வேண்டியவை:

சுவாசப் பாதையில் தேவையின்றி சதை வளர்ந்தால் சீராக காற்று போக வழியின்றி குறட்டை ஏற்படலாம். எனவே சதை வளராமல் இருக்க உடல் எடையில் கவனம் வேண்டும். பக்க வாட்டில் படுக்க வேண்டும். 4 அங்குல உயரத்திற்கு மேல் தலையணை வைத்து தூங்க கூடாது.

சாப்பிட்ட உடன் படுக்க போக கூடாது. புகை பிடிக்க கூடாது. அளவுக்கு அதிகமான மருந்துகள் சாப்பிடக் கூடாது. மருந்து அருந்த கூடாது. அத்தோடு இதனால் பாதிக்கப்படுபவர்கள் தொண்டை மூக்கு, காது நிபுணரை அணுகி ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்.

3 வகை நோயாளிகள்:

குறட்டையின் தீவிரத்தன்மையைப் பொறுத்து நோயாளிகளை 3 குழுக்களாக வகைப்படுத்தலாம்.

1. மெல்லிய குறட்டை- அடுத்திருக்கும் அறையில் ஒலியைக் கேட்க முடியும். மூச்செடுப்பதில் சிரமம் இல்லை.

2. உயரமான குறட்டை- கதவு மூடி இருந்தாலும் கூட அடுத்துள்ள அறையில் ஒலியைக் கேட்கலாம்.

3. உறங்கும் போது மூச்சுத் திணறுதல், நேரத்துக்கு நேரம், மூச்சு 10 வினாடிகளுக்கு மேலாக நிறுத்தப்படும்.

மாரடைப்பு அபாயம்:

7 மணி நேர நித்திரையின் போது 30 முறை மூச்சு திணறல் ஏற்பட்டால் இது ஆபத்தானதாக இருக்கலாம். பெருமூச்செடுத்த வண்ணம், நேரத்துக்கு நேரம் நோயாளி தூக்கம் கலையலாம்.

ரத்தத்தில் காணப்படும் குறைவான செறிவுடைய ஆக்சிஜன் இதயம், சுவாசப்பை மற்றும் மூளையை பாதிக்கலாம். ரத்த அழுத்தம் உயர்வடைவதால், மாரடைப்பு ஏற்படும்.

கட்டிலில் மரணம் கூட ஏற்படலாம். இந்த நோயாளிகள் பகலில் கூட நித்திரைத் தன்மையை, சோம்பேறித்தனத்தை உணர்வார்கள். டாக்டர் தூக்க வரலாற்றை சோதிக்கும் போது, இந்த பிரச்சினை பற்றி கூடுதலாக அறிந்த நோயாள ரின் துணையும் இருக்க வேண்டும்.

ஆபத்தான நோய்:

டான்சில் வீக்கம், அடினாய்டு பிரச்சினைகள் ஏற்படும் போதோ சளி பிடிக்கும் போதோ குறட்டை சத்தம் ஏற்படலாம். இந்தப் பிரச்சினைகளால் ஏற்படும் அடைப்பு நீங்கியவுடன், குறட்டை சத்தமும் நின்று விடும். அதிக உடல் எடை கொண்ட குழந்தைகள் மற்றும் இள வயதினருக்கு குறட்டை ஏற்படுகிறது.

கழுத்தைச் சுற்றி அளவுக்கு அதிகமான தசை வளர்வதால், சதை அடைப்பு உருவாகி, குறட்டை ஏற்படுகிறது. ஆபத்தான மருத்துவக் கோளாறாக இது கருதப்படுகிறது. ஆபத்தான, தூக்கத் தடை ஏற்படுத்தும் நோயாக இது கருதப் படுகிறது.

ஆழ்ந்த தூக்க நிலைக்குச் செல்லும் போது கண்கள் வேகமாக அசையும், அந்த நேரத்தில் நம் மூச்சுக் காற்றும் வேகமாக உள் சென்று வெளியேறும். இதற்கு `அப்ஸ்ட்ரக்டிவ் ஸ்லீப் அப்னியே' என்று பெயர். அந்த நேரத்தில் குறட்டையும் அதிகரிக்கும். ஒரு நேரத்திற்கு 18-க்கும் மேற்பட்ட முறை நம் கண்கள் வேகமாக அசைந்து, மூச்சுக் காற்றும் வேகமாக உள் சென்று வெளிவருகிறது.

குறட்டை விடும் போது திடீரென நின்று திடீரென அதிகரிக்கும் சுவாசத்தால் நம் உடலில் ரத்த அழுத்தம் அதிகரித்து இதய அடைப்பு திடீர் மரணம் ஆகியவை ஏற்படலாம்.

இந்தியாவில் அதிகம் பேர் பாதிப்பு:

இந்தியர்களில் பெரும்பாலோர் இந்த நோயால் பாதிக்கப் பட்டுள்ளனர். இதனால் திடீர் மரணம் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. நம் வாழ்க்கை முறை மாறி விட்டதால், இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

குறட்டை ஏற்படுவதற்கான காரணத்தை அறிந்து `ஸ்லீப் அப்னியே' நோய் உருவாகி உள்ளதா என்பதைக் கண்டுபிடிக்க தமிழகத்தின் பெரிய நகரங்களில் மருத்துவமனைகள் உள்ளன.

உங்கள் தூக்க முறையை வைத்து, உங்களுக்கு நோய் உள்ளதாப என்பதை அவர்கள் கண்டறிந்து விடுவர். காரணத்தைக் கண்டறிந்து விட்டால், 30 சதவீதத்தினர் நோயைக் குணப்படுத் திக்கொள்ளலாம். டான்சில் அடினாய்டு, மூக்கினுள் வீக்கம் போன்ற பிரச்னைகளை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்து கொள்ளலாம்.

குறட்டையை குறைக்க:

ஆக்சிஜனை உடலில் தேவையான இடத்திற்கு எடுத்து செல் லும் வகையில் புதிய கருவிகள் தற்போது கிடைக்கின்றன. அறையில் உள்ள ஆக்சிஜனை உள்ளிழுத்து நம் மூக்கின் வழியே உடலுக்குச் செலுத்தும் இவற்றை வீட்டிலும் வைத்துக் கொள்ளலாம்.

குறட்டையைக் குறைக்க மேலும் சில கருவிகள் விளம்பரப் படுத்தப்படுகின்றன. விசேஷ தலையணை, கழுத்துப் பட்டைகள், நாக்கை அழுத்திப் பிடிக்கும் கருவிகள் என பல வகைகள் உள்ளன. குறட்டை விடுபவரை, ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்கு திருப்பி படுக்க வைத்தாலே குறட்டை ஒலி குறையும்.

ஸ்பைரோ மீட்டர் கருவியால் மூச்சுப் பயிற்சி செய்தல், பலூன் ஊதுதல், புல்லாங்குழல் ஊதுதல், ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் 30 நிமிடம் மேற்கொண்டால் குறட்டை குறைகிறது என்பது ஆய்வில் கண்டறிந்த உண்மை.

யோகாவில் உள்ள மூச்சுப் பயிற்சியும் மிகச் சிறந்தது. தினமும் 45 நிமிடம் யோகா, மூச்சுப் பயிற்சியுடன் கூடிய நடை பயிற்சி போன்ற பழக்கங்களை, சிறு வயது முதலே கடைபிடிக்க வேண்டும். இதனால் இளவயது பருமனைக் குறைக்கலாம். திடீர் மரணத்தையும் தவிர்க்கலாம்.

சிகிச்சை முறை:

குறட்டை பிரச்சினையை அறுவை சிகிச்சை மூலம் குணப் படுத்தலாம். எல்.ஏ.யு.பி. என்னும் லேசர் சிகிச்சை மூலம் குறட்டையைக் குறைக்க முடியும். குறட்டைக்கு முதல் சிகிச்சை உடல் எடையை குறைப்பதுதான்.

அடுத்து காற்றுச் செல்லும் பாதையிலுள்ள அடைப்பு அதிகமாக இருந்தால் மூக்கு, உள்நாக்கு, தொண்டை போன்ற பகுதிகளை பரிசோதித்து அடைப்புள்ள இடத்தைக் கண்டறிந்து லேசர் கிச்சையின் மூலம் அடைப்பை சரி செய்யலாம்.

முற்றிய நிலையிலிருக்கும் நோயாளிக்கு ஆபரேஷன் செய்தாலும் சரியான தீர்வளிக்காது என்பதால் சிறிகிறி என்கிற மாஸ்க்கை ஒவ்வொரு நாளும் தூக்கத்தின்போதும் அணிந்துகொள்ளத் தருகிறோம். அதை அவர்கள் அணிவதால், அந்த மாஸ்க்கிலுள்ள ஆக்சிஜன் அடைப்புள்ள இடத்தில் வேகமாக அழுத்தம் கொடுத்து அடைப்பை விலக்கி, காற்று நன்கு செல்ல உதவுகிறது.

இதனால் அவர்கள் குறட்டை பிரச்சினையில்லாமல் ஆழமான தூக்கத்தை அனுபவிக்க முடிகிறது. காற்றடைப்பை கண்டறிய மருத்துவ மனையில் நவீனமான சிலிப்லேப் என்கிற முழுதும் கம்ப்ïட்டர் மயமாக்கப்பட்ட தூங்கும் அறையுள்ளது. நோயாளியை அந்த அறைக்குள்ளே ஒரு இரவு முழுவதும் தூங்க விடவேண்டும்.

அவரது உடலில் ஒன்பது இடங்களில் கம்ப்யூட்டரோடு இணைக்கப்பட்ட கேபிள்கள் பொருத்தப்படும். அது அன்று இரவு முழுவதும் அவர் தூங்குவது, குறட்டை விடுவது எத்தனை முறை விழிப்பு வந்து புரண்டு படுத்தார், எந்தப் பக்கமாக படுக்கும்போது குறட்டைகளின் தன்மை எப்படியிருந்தது.

ரத்த அழுத்தம், இதயத்துடிப்பு, மூளைக்கும், மார்புக்கும் காற்று சென்று வந்த நிலை, அடைப்பு எங்கேயிருக்கிறது என்பதை துல்லியமாகக் கண்டறிந்து விடலாம் என்கிறார் டாக்டர் ரவிராமலிங்கம்
Chennai புதன்கிழமை, ஜனவரி 26, 12:58 PM IS
Thttp://www.maalaimalar.com

செல்வந்தர்களே!

செல்வந்தர்களே! நீங்கள் சேமித்து வைத்துக்கொண்டு பெருமைப்பட்டுக் கொண்டிருக்கும் செல்வத்தைக் கொண்டு நீங்கள் உண்மையில் அனுபவிப்பது எவற்றை என்பதை நிதானமாகச் சிந்தியுங்கள். எவ்வளவுதான் செல்வம் இருந்தாலும் மனிதன் ஒரு வயிற்றுக்குத்தானே சாப்பிட முடியும். இரண்டு வயிற்றுக்கு சாப்பிட முடியுமா? இரண்டு வாகனங்களில் தான் பிரயாணம் செய்ய முடியுமா? மனிதன் அனுபவிப்பதற்கென்று அல்லாஹ் ஒதுக்கியதற்கு மேல் ஒரு ஊசி முனை அளவுதானும் அனுபவிக்க முடியுமா? இன்னும் தெளிவாகச் சொன்னால் ஒரு ஏழை நடுத்தர வர்க்கத்தினன் அனுபவிக்கும் உலக சுகங்களைக்கூட அனுபவிக்க விடாமல் உங்களது செல்வம் உங்களைத் தடுத்துக்கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை.

செல்வத்தை பெருக்கும் லட்சியம்
செல்வத்தை பெருக்குவதற்கு அதே லட்சியமாக வாழ்ந்து வரும் மனிதனைப்பற்றி அல்லாஹ் கூறுகிறான். “செல்வத்தை பெருக்கும் ஆசை உங்களைப் பாராக்கி விட்டது” அல்குர்ஆன் (102:1) என்று அல்லாஹ் கூறுவது மறுமையை மறந்த நிலைதான். ஆனால் செல்வந்தர்களில் பலர் இவ்வுலகில் அவர்கள் அனுபவிக்க வேண்டியவைகளையும் அனுபவிக்காமல் மறந்து செல்வங்களைச் சேர்ப்பதில் மூழ்கி இருப்பதையே பார்க்க முடிகிறது. ஆக பெரும்பாலான செல்வந்தர்கள் செல்வங்களைச் சேர்த்து குவிப்பதில் குறியாக இருப்பது அனுபவிப்பதற்காக அல்ல, மக்களிடையே கிடைக்கும் பெரும் செல்வந்தன் என்ற பெயரையும், அந்த மக்கள் கொடுக்கும் மரியாதையையும், கூழைக்கும்பிடையும், உலகில் கிடைக்கும் அற்ப பதவிகளையும் எதிர் பார்த்தே. இவற்றால் தனக்கு இவ்வுலகில் உரிய பயனில்லை, மறுமயிலும் பயனில்லை அதற்கு மாறாக மிகப்பெரும் வேதனை தண்டனை காத்திருக்கிறது என்பதை அறியாதிருக்கிறார்கள்.

ஆக எவ்வளவு பெரிய செல்வந்தனாக இருந்தாலும் அவன் உண்டு கழித்தது, உடுத்தி கிழித்தது, மறுமைக்கென்று அவன் முன்கூட்டியே அனுப்பி வைத்தது மட்டும்தான் அவனுடையதாகும். எஞ்சிய செல்வங்கள் அனைத்தும் அவனது வாரிசுகளுக்குரியதாகும். அந்த வாரிசுகளாவது அது கொண்டு அனுபவிக்கிறார்களா என்றால் அதுதான் இல்லை. அந்த செல்வங்களைப் பங்கிட்டு கொள்வதில் கூடப்பிறந்த அண்ணன் தம்பிகளிடையே சண்டை சச்சரவு, அடி தடி தகராறு, கோர்ட் கச்சேரி என்ற அவல நிலையையே பார்க்க முடிகிறது. செல்வந்தன் சேர்த்து வைத்த செல்வம் அவனது வாரிசுகளையும் நிம்மதி இழக்கச் செய்து வழக்கு வம்பு என்று அச்செல்வம் கரைந்து போகும் நிலையே ஏற்படுகிறது.

மிதமிஞ்சிய பெரும் சொத்து சுகங்களைச் சேர்த்து வைத்து விட்டுச் சென்றவர்களின் மக்கள், சொத்தைப் பிரித்துக் கொள்வதில் சண்டை சச்சரவு, வழக்கு வம்பு என செல்வத்தை கரைத்து வருவதையும் பார்த்து வருகிறோம். அண்ணன் தம்பிகளிடையேயுள்ள தகராறினால் பல சொத்துக்கள் பாழடைந்து கிடப்பதையும் பார்த்து வருகிறோம். இப்படி பெருங்கொண்ட சொத்து சேர்த்து வைத்த குடும்பங்கள் அவற்ரை முறையாக அனுபவிப்பதற்கு மாறாக சீரழிந்து கொண்டு வருவதையே பார்க்கிறோம். 10 தலை முறை 20 தலை முறை என சொத்து சேர்த்து விட்டுச் செல்கிறார்கள். அவர்களது வாரிசுகள் அவற்றை அழித்துவிட்டு பிச்சை எடுக்கும் நிலைக்கும் தள்ளப்படுவதயும் நாம் பார்த்துத்தான் வருகிறோம்.

வாரிசுகளுக்கு நீங்கள் அளிக்கும் செல்வம்!
செல்வந்தர்களே! இதை எல்லாம் இங்கு ஏன் குறிப்பிடுகிறோம் தெரியுமா? பெரும் சொத்துக்களை சேர்த்து வைத்து விட்டுச் செல்கிறவர்கள் தங்களின் வாரிசுகளுக்குப் பெரும் துரோகத்தைச் செய்து விட்டுச் செல்கிறார்கள் என்பதை புரிய வைக்கத்தான். அவர்களின் இவ்வுலக வாழ்க்கையும், மறு உலக வாழ்க்கையும் பாழாக்குகிறார்கள் என்பதே உண்மையாகும். சொத்து சேர்க்கும் பேராசையாகப்பட்டது உங்கள் வாரிசுகளை நல்லொழுக்க முடையவர்களாக, மார்க்கத்தில் பேணுதல் உடையவர்களாக பயிற்றுவிப்பதை விட்டும் உங்களைத் தடுத்து விடுகிறது. அதற்கு மாறாக உங்களின் மிதமிஞ்சிய செல்வம் அவர்களைப் பல தவறான வழிகளில் இட்டுச் செல்ல வழிகாட்டுகிறது. பல தீய பழக்க வழக்கங்களுக்கும் ஆளாகி விடுகிறார்கள். பல செல்வந்தக் குடும்பங்களில் இதை நிதர்சனமாகப் பார்க்க முடிகிறது.

சொந்த உழைப்பே உயர்வுக்கு வழி!
சொத்து சுகங்களைச் சேர்க்காவிட்டாலும், தங்கள் குழந்தைகளை நல்லொழுக்கம் உடையவர்களாக மார்க்கம் பேணக்கூடியவர்களாக ஐங்காலத் தொழுகைகளைப் பேணித் தொழுபவர்களாகப் பழக்குவதோடு, தங்கள் கைகளால் உழைத்து ஹலாலான முறையில் தங்களின் வாழ்வாதாரங்களைத்த் தேடிக்கொள்ள அவர்களை பயிற்றுவிப்பதே சாலச் சிறந்ததாகும். உங்கள் சம்பாத்தியத்தில் சேர்த்து வைத்ததைக்கொண்டு அவர்கள் வாழ்வதைவிட அவர்களே அவர்களது வாழ்வாதரங்களைத் தேடிக்கொள்ள பயிற்றுவிப்பதே மிக மிக ஏற்றமாகும்.

அல்குர்ஆனை பொருள் விளங்கி நீங்கள் படிப்பீர்களானால் எண்ணற்ற இடங்களில் அல்லாஹ்வுடைய பாதையில் பந்துக்களுக்கும், அனாதைகளுக்கும், மிஸ்கீன்களுக்கும், வழிப்போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், கடனாளிகளுக்கும் செலவிடுவதை உற்சாகப்படுத்து வலியுறுத்தி சொல்லப்பட்டுள்ளதைப் பார்க்கலாம். அவற்றை நன்கு படித்து விளங்கினால் வருடா வருடம் ஜகாத் கொடுப்பது மட்டுமல்லாமல் தாராளமாக இந்த வகைகளுக்கு அதிகம் அதிகமாக செலவிடுவதை எந்த அளவு அல்லாஹ் வலியுறுத்துகிறான் என்பதை விளங்க முடியும். அந்த வசனங்கள் வருமாறு:

2:3,177,195,219,254,261,267,270-274,3:92,134,4:34,38,39,95, 5:64, 8:3,36,60,72, 9:20,34,44,53,54,91,98,99,13:22,14:31,16:75, 22:35,24:33,25:7,26:88,89,28:54,29:15, 32:16,34:39,35:29,36:47,42:38, 47:38,57:7,10,59:8,60:10,11,63:7,10,64:16,65:7,70:24

இந்த வசனங்கள் அனைத்தையும் கவனமாக பொருள் அறிந்து படித்துப் பார்ப்பவர்கள், அல்லாஹ் அளித்துள்ள செல்வத்தை எந்த அளவு இல்லாதவர்களுக்கும் கொடுத்து
உதவ வேண்டுமென்பதை விளங்க முடியும்.

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த http://www.readislam.net

நபி வழி என்றால் என்ன?

நபிவழி எப்போது தொகுக்கப்பட்டது? எப்படித் தொகுக்கப்பட்டது? என்ற வரலாற்று உண்மைகளைத் தெரிந்து கொள்வதற்கு முன்னால், நபிவழி என்றால் என்ன? நபி வழியைப் பின்பற்ற வேண்டியதன் அவசியம் என்ன? நபி வழியைப் பின்பற்றாதவருக்குரிய தண்டனை என்ன? என்பதை முதலில் பார்ப்போம்.

நபி வழிக்கு அரபியில் ''சுன்னத்'' என்று சொல்லப்படும். இந்தச் சொல்லிற்கு அகராதியில் பொதுவாக ''வழி'' என்று பொருள் இருந்தாலும், இஸ்லாமிய பழக்கத்தில் அது நபி வழிக்குத்தான் பயன் படுத்தப்படுகிறது. அதாவது நபி அவர்களுடைய சொல், செயல், அங்கீகாரம் ஆகியவைகளுக்கு ''சுன்னத்'' என்று சொல்லப்படுகிறது. இவைகளுக்கு ''ஹதீஸ்'' என்று ஒரு மறு பெயர் சொல்லப்படுவதுண்டு, என்றாலும் 'சுன்னத்' என்ற சொல்லிற்கும், 'ஹதீஸ்' என்ற சொல்லிற்குமிடையில் சிறு வேறுபாட்டை நம்மால் காண முடிகிறது.

உதாரணமாக ''தனக்கென எதை விரும்புகிறானோ, அதை தனது சகோதரனுக்கும் விரும்பாதது வரை ஒருவன் உண்மை விசுவாசியாகமாட்டான்'' என்று நபி அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

நபி அவர்கள் ''சொன்னதாக'' அவர்களைப் பற்றி அறிவிக்கப்பtடுள்ள இந்தச் செய்திக்கு ''ஹதீஸ்'' என்று சொல்லப்படும். இந்தச் செய்தி மூலமாக நமக்குக் கிடைக்கின்ற விஷயம் இருக்கிறதே அது ''சுன்னத்'' அதாவது தனக்கென விரும்பும் ஒன்றை தனது சகோதரனுக்கும் ஒருவன் விரும்பும்போது நபி அவர்களின் "சுன்னத்தை" செயல் வடிவில் பின்பற்றியவனாக ஆகிவிடுகின்றான்.

இதுதான் ''ஹதீஸ்'' என்ற சொல்லுக்கும் ''சுன்னத்'' என்ற சொல்லுக்குமிடையிலுள்ள ஒரு சிறு வேறுபாடு. இவ்விரு சொல்லும் ஒரே பொருளைத்தான் குறிக்கும் என்று சொல்லிக் கொண்டாலும், நன்கு சிந்தித்துப் பார்த்தால் அவ்விரு சொற்களுக்குமிடையில் சிறு வேறுபாடு இருப்பதை உணர முடியும்.

நபி வழியைப் பின்பற்றுவதன் அவசியம்
சஹாபாக்கள் (நபித்தோழர்கள்) ஷரீயத் சட்ட விளக்கங்களை திருக்குர்ஆனிலிருந்து பெற்றுக்கொள்வார்கள். அதன் விளக்கங்களை நபி அவர்களிடமிருந்து நேரடியாகக் கேட்டுத் தெரிந்து கொள்வார்கள். குர்ஆனை பொறுத்தவரையில் அதிலுள்ள பல வசனங்கள் சுருக்கமானவையாக இருக்கின்றன. உதாரணமாக தொழுகையை எடுத்துக்கொள்வோம், குர்ஆனில் தொழுமாறு சொல்லப்பட்டுள்ளது. ஆனால் எப்படித் தொழவேண்டும், எந்தெந்த நேரங்களில் தொழ வேண்டுமென்ற விரிவான விளக்கம் அதில் இல்லை. இதுபோன்ற விரிவான, தெளிவான விளக்கங்களை நபித்தோழர்கள் நபி அவர்களிடமிருந்து நேரடியாகப் பெற்றுத் தெரிந்து கொண்டார்கள். இவ்வாறே அவர்கள் மத்தியில் எழும் பல்வேறு பிரச்சனைகளுக்குரிய சட்டங்களைக் குர்ஆனிலிருந்து பெற முடியாதபோது அவற்றின் விளக்கங்களை நபி அவர்கள் விளக்கிக் கூறவேண்டிய அவசியம் ஏற்பட்டது. காரணம் குர்ஆனை மக்களுக்கு விளக்கிக் கொடுப்பதற்காகவே நபி அவர்களை அல்லாஹ் தேர்ந்தெடுத்தான்.

(நபியே) மனிதர்களுக்காக அருளப்பட்ட வேதத்தை அவர்கள் சிந்தித்து உணர வேண்டுமென்பதற்காக, தெளிவாக அவர்களுக்கு விளக்கிக் கொடுப்பதற்கே வேதத்தை நாம் உம்மீது அருளினோம். (அல்குர்ஆன், 16:44)

(நபியே) மேலும் அவர்கள் எந்த விஷயத்தில் தர்க்கித்துக் கொண்டார்களோ, அதை நீர் தெளிவாக்குவதற்காகவே உம்மீது இவ்வேதத்தை இறக்கினோம். (அல்குர்ஆன் 16:64)

தமது ஒவ்வொரு மார்க்கப் பிரச்சனைக்கும், நபி அவர்களை தீர்ப்பு வழங்கக் கூடியவர்களாக ஆக்கிக் கொள்ளாதவரை நாம் ஒருபோதும் உண்மை விசுவாசிகளாக ஆக முடியாது என்பதை அல்லாஹ் பின்வரும் வசனத்தில் குறிப்பிடுகிறான்.

(நபியே) உம் இறைவன் மேல் சத்தியமாக, அவர்கள் தங்களிடையே எழுந்த சச்சரவுகளில் உம்மை நீதிபதியாக ஏற்றுப் பின்னர் நீர் தீர்ப்பு செய்தது பற்றி எத்தகைய அதிருப்தியையும் தம் மனங்களில் கொள்ளாது (அத்தீர்ப்பை) முற்றிலும் ஏற்றுக் கொள்ளாத வரையில் அவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள் ஆகமாட்டார்கள். (அல்குர்ஆன் 4:65)

மார்க்க சம்பந்தமான எந்தப் பிரச்சனையானாலும் அதனை நபி அவர்கள் அல்லாஹ்வின் பெயரிலேயே மக்களுக்கு அறிவிக்கிறார்களே தவிர சுயமாக எதையும் அவர்கள் சொல்வதில்லை.

நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களுக்கு அருள் புரிந்திருக்கின்றான், அவன் அவர்களுக்கு அவர்களிலிருந்தே ஒரு தூதரை அனுப்பி வைத்தான். அவர் அவனுடைய வசனங்களை அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கிறார். இன்னும் அவர்களைப் (பாவத்தைவிட்டும்) பரிசுத்தமாக்குகிறார். மேலும் அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுக்கின்றார் அவர்களோ நிச்சயமாக இதற்கு முன் பகிரங்கமான வழி கேட்டிலேயே இருந்தனர். (அல்குர்ஆன் 3:164)

இவ்வசனத்தின் ஞானம் (ஹிக்மத்) என்று சொல்லப்பட்டிருப்பது ''சுன்னத்'' என்னும் நபி வழியேயாகும் என குர்ஆன் விளக்கவுரையாளர்கள் குறிப்பிடுகின்றனர். இதை வலியுறுத்தும் வகையில் ஒரு ஹதீஸில் ''நான் வேதமும் கொடுக்கப்பட்டுள்ளேன், அதைப்போன்று ஒன்றும் கொடுக்கப்பட்டுள்ளேன்'' என்று நபி அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத்)

அதைப்போன்று ஒன்று என்பதின் பொருள் ''சுன்னத்'' என்னும் நபி வழியான குர்ஆனின் விளக்கமாகும் என அனைத்து ஹதீஸ் விரிவுரையாளர்களும் கருத்து கொண்டுள்ளனர்.

''உங்களிடம் ஹதீஸ் வருமானால் அதை குர்ஆனோடு ஒப்பிட்டு சரி பாருங்கள். குர்ஆனுக்கு ஒத்திருந்தால் அதை எடுத்துக் கொள்ளுங்கள். குர்ஆனுக்கு மாற்றமாக இருக்குமானால் அதை விட்டு விடுங்கள்'' என்று ஒரு ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது புனையப்பட்ட தவறான ஹதீஸாகும். இதற்கு ஹதீஸ் நூல்கள் எதிலும் ஆதாரமில்லை. (ஷரஹ் சுனன் அபூதாவூத்)

நபி வழியை முற்றிலும் பின்பற்றி நடக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பல வசனங்கள் உள்ளன அவற்றில் சில:

(நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள், இன்னும், எதை விட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள். (அல்குர்ஆன்59:7)

அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படியுங்கள், நீங்கள் (அதனால் அல்லாஹ்வினால்) கிருபை செய்யப்படுவீர்கள். (அல்குர்ஆன் 3:132)

நபி வழியை புறக்கணிப்பவனின் கதி
நபிவழியைப் பின்பற்றாதவனுக்குரிய தண்டனையை அல்லாஹ் பின்வரும் வசங்களில் தெளிவுபடுத்துகிறான்.

எவர் அவருடைய கட்டளைக்கு மாறு செய்கிறார்களோ அவர்கள் தங்களை சோதனை பிடித்துக் கொள்வதையோ, அல்லது தங்களை நோவினை தரும் வேதனை பிடித்துக் கொள்வதையோ அஞ்சிக் கொள்ளட்டும். (அல்குர்ஆன் 24:63)

''அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் வழிப்படுங்கள்." ஆனால் அவர்கள் புறக்கணித்துத் திரும்பி விடுவார்களானால் நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களை நேசிப்பதில்லை. (அல்குர்ஆன் 3:32)

''அல்லாஹ்வின் மீதும், (இத்)தூதர் மீதும் நாங்கள் ஈமான் கொண்டோம்; (அவர்களுக்குக்) கீழ்படிகிறோம்" என்று சொல்லுகிறார்கள். (ஆனால் அதன்) பின்னர் அவர்களிலிருந்து ஒரு பிரிவார் புறக்கணித்து விடுகின்றனர் எனவே, இவர்கள் (உண்மையில்) முஃமின்கள் அல்லர். (அல்குர்ஆன் 24:47)

மேற்கூறப்பட்ட வசனங்கள் நபிவழியை பின்பற்றுவதின் அவசியத்தையும், பின்பற்றாதவனுக்கு தண்டனையையும் மிகத்தெளிவாக விளக்குகின்றன.

இந்த அடிப்படையில் சஹாபாக்கள் தங்களுக்கு ஏற்படுகின்ற எல்லாப் பிரச்னைகளுக்கும் தீர்வு காணுவதற்காகவும், குர்ஆனின் சட்ட திட்டங்களுக்குரிய தெளிவைப் பெறுவதற்காகவும் நபி அவர்களை நாடவேண்டிய அவசியம் இருந்தது. அப்பொழுதெல்லாம் சஹாபாக்கள் நபி அவர்களிடத்தில் சென்று, தங்கள் பிரச்னைக்குரிய தீர்ப்பைப் பெற்று, அப்படியே அதைக் கடைபிடித்தும் வந்தார்கள். வணக்க வழிபாடுகள், கொடுக்கல் வாங்கல்கள் இவை அனைத்திலும் நபி வழியை அப்படியே கடைபிடித்தார்கள்.

"என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழுங்கள்" என்று நபி அவர்கள் கட்டளையிட்டார்கள். நூல்: புகாரி

நான் எவ்வாறு ஹஜ் கடமையை நிறைவேற்ற கண்டீர்களோ அப்படியே நீங்களும் செய்யவேண்டும் என நபி அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்) அதற்கொப்ப நபித்தோழர்களும் அப்படியே செயல்பட்டார்கள். சில சந்தர்ப்பங்களில் நபிவழியைப் பின்பற்றத் தயங்கிய சில தோழர்களிடம் நபி அவர்கள் கோபம் அடைந்திருக்கிறார்கள்.

ஒரு சஹாபி தன் மனைவியை நபி அவர்களிடம் அனுப்பி நோன்பாளி தனது மனைவியை முத்தமிடுவதன் சட்டத்தைப்பற்றி கேட்டு வரும்படி அனுப்பி வைத்தார். அப்பெண்மணி நபி அவர்களது மனைவி உம்முஸலமா (ரழி)யிடம் சென்று கேட்டபோது, நபி அவர்கள் நோன்பு நோற்றிருக்கையில் தங்கள் மனைவியை முத்தமிடுவார்கள் என்று சொன்னார்கள். இதை அப்பெண்மணி தனது கணவனிடத்தில் சொன்னபோது "நான் ரசூலுல்லாஹ்வைப் போன்றல்ல. அல்லாஹ் தனது ரசூலுக்கு அவன் நாடியதை ஹலாலாக்கிக் கொடுப்பான்" என்று சொன்னார். இச்செய்தி நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிந்ததும் கோபமடைந்தவர்களாக "உங்களையெல்லாம் விட நான் அல்லாஹ்வை மிக அஞ்சக்கூடியவனும் உங்களையெல்லாம் விட அவனது சட்டங்களை அதிகம் தெரிந்தவனுமாக இருக்கிறேன்" என்று சொன்னார்கள். (முஸ்லிம்)

http://www.readislam.net

அழிவிற்கு அழைக்கும் அவசர உணவுகள்!!!

உடல் நலம்
பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் இந்த அவசர உலகில் Fast Foods எனப்படும் அவசர உணவுகளின் தேவைகள் அதிகரித்து விட்டன. அதற்கேற்றாற் போல் வீதிக்கு வீதி, முக்குக்குமுக்கு அவசர உணவு விடுதிகள் முளைத்துக் கொண்டிருக்கின்றன.

பாரம்பரியமான உணவுகளை ஆற அமர ரசித்து ருசித்துச் சாப்பிடும் காலம் மெல்ல மெல்ல மலையேறி வருகிறது. இன்று அவசர உணவுகளை அள்ளி விழுங்கிவிட்டு ஓடும் அவல நிலையே எங்கும் நிலவுகிறது. குறிப்பாக குழந்தைகளை இந்த வகை உணவுகள் அதிகம் கவர்கின்றன. விளைவு – சிறு வயது முதல் அவர்களுக்குப் பலவித நோய்கள் தாக்குகின்றன. குறிப்பாக உடல் பருமன் (Obesity) ஏற்படுகிறது.

இதனாலேயே பிரிட்டிஷ் அரசு தொலைக்காட்சிகளில் குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளில் அவசர உணவுகளின் விளம்பரங்களை 2006-ம் ஆண்டு தடை செய்தது. நகர வாழ்க்கையும், அவசர உணவுகளும் இணைக்க முடியா ஜோடிகளாக மாறிவிட்டன.

2006-ம் ஆண்டு மட்டும் உலக அவசர உணவுச் சந்தையின் வளர்ச்சி 4.8 சதவீதமாக வளர்ச்சியடைந்துள்ளது. உலகிலேயே மிகப் பெரிய சந்தையான இந்தியாவில் வருடத்திற்கு 4.1 சதவீதம் இது வளர்ச்சியடைந்து வருகின்றது.

அவசர உணவின் ஜாம்பவானான மெக்டோனால்ட் 6 கண்டங்களில், 126 நாடுகளில் தனது கிளைகளைப் பரப்பியுள்ளது. மொத்தம் 31,000 கடைகள் அதற்கு உள்ளன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். எந்த அளவுக்கு அவசர உணவுகளின் சந்தைகள் அதிகரித்து வருகின்றன என்பது இதன் மூலம் விளங்கும்.

மெக்டோனால்டுக்கு அடுத்து அவசர உலகின் ஜாம்பவானாக விளங்கும் பிஸ்ஸா ஹட் 97 நாடுகளில் கால் பதித்துள்ளது. அவசர உணவுகளில் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் முதன்மையானதாக வருவது அமெரிக்காதான்.

கடந்த 2003ல் எடுத்த கணக்கெடுப்பின்படி, உடல் பருமன்தான் அமெரிக்கர்களின் உடல்நலப் பாதிப்புகளுக்கு தலையாய காரணம் எனக் கண்டுபிடித்துள்ளார்கள். இதனால் ஒவ்வொரு வருடமும் சுமார் நான்கு லட்சம் அமெரிக்கர்கள் மரணிக்கிறார்களாம். சுமார் 6 கோடி பேர் உடல் பருமனுள்ளவர்களாக அமெரிக்காவில் உள்ளனர். சுமார் 12.7 கோடி பேர் அதிக எடையுள்ளவர்களாக இருக்கின்றனர்.

அவசர உணவுகள் ஏற்படுத்தும் விளைவுகளைப் பார்த்தீர்களா? இந்த நிலை நமது நாட்டுக்கும் வரவேண்டுமா?

Sunday, January 30, 2011

Qatar to provide visa on arrival for 188 categories/January 3, 2011 gulfnews.com

The validity of the visa will be for one month and will only be issued if the person’s GCC residency permit is valid for at least six months
Staff Report
Published: 10:06 January 3, 2011 gulfnews.com

Dubai: Qatar’s Ministry of Interior has published a revised list of 188 categories of professionals who can get visa on arrival at Doha International Airport, and are GCC residents.
The validity of the visa will be for one month and will only be issued if the person’s GCC residency permit is valid for at least six months, and the passport has at least six-month validity with a return ticket.
The visa on arrival would cost QR100 and can be extended for another three months by paying extra fees for every additional month.
Apart from doctors, engineers, and businessmen, the revised list of professionals include journalists, businesswomen, military officers, medical equipment technicians, opticians, broadcasters, marketing agents, bankers, quality monitors, teachers and lawyers.

List of professions that allow the visa-upon-arrival:
1. Aquatic specialist
2. Statistics specialist
3. Agricultural specialist
4. Gardening specialist
5. Medical analysis specialist
6. Speech specialist
7. Breeding specialist (animals/birds/bees)
8. Medical X-ray specialist
9. Nutrition specialist
10. Zoology specialist
11. Psychiatrist
12. Lab specialist
13. Sports medicine specialist
14. Sociologist
15. X-Ray specialist
16. Media specialist
17. Customs specialist
18. Medical therapy specialist
19. Writer
20. University professor
21. Media person
22. Secretary or director of library
23. Staffs at embassies in GCC (except support services jobs)
24. Archeological researcher
25. Administrative researcher
26. Legal researcher
27. Professor
28. Trader
29. Geologist
30. Quantity enumerator
31. Referee (sports)
32. Finance/Economics expert
33. Law expert
34. Information Systems expert
35. Diplomat (Members of diplomatic corps)
36. President/CEO
37. President or director of a university
38. Chief Justice
39. Head of Prosecution
40. President or director of a club
41. Weather expert
42. Earthquakes expert
43. Captain of Ship/Cruise/Carrier/Steamship
44. Businessman
45. Religious person
46. Architectural draftsman
47. Business lady
48. Executive secretary
49. Journalist
50. Pharmacist
51. Jeweler
52. Army officer
53. Police officer
54. University student
55. Physician (All specialisation)
56. Surgeon (All specialisation)
57. Veterinary doctor
58. Pilot
59. Scientist
60. College dean
61. Astronomer
62. Artist (Actor, Musician, Composer, Poet, Painter, Singer…..etc)
63. Telecom technician
64. Professional security and safety technician
65. Medical equipments technician
66. Control equipments technician
67. X-ray technician
68. Dental technician (fixing)
69. Radio or TV transmission technician
70. Optical technician
71. ECG technician
72. Horse breeding technician
73. Mining technician
74. Microscopic technician
75. Geology technician
76. Well drilling technician
77. Pharmaceutical technician
78. Foodstuff technician
79. Ship maintenance technician
80. Aircraft maintenance technician
81. Train Maintenance Technician
82. Lab Technician
83. Aviation Technician
84. Physicist
85. Judge
86. Chemist (All Specializations)
87. Player (All sports items in a sports club)
88. Author
89. Computer Programmer

90. Translator
91. Accountant / Auditor
92. Lecturer

193. Lawyer / Advocate
94. Economic Analyst
95. Systems Analyst
96. Operations Analyst
97. Director
98. Customs Clearer
99. Sports Trainer
100. Aviation Trainer
101. General Professional Trainer (Industrial/Agricultural/Commercial)
102. Teacher / Instructor
103. Proofreader
104. Investment Manager
105. Archeological Director
106. Research & Studies Director
107. Insurance Manager
108. Banking business Manager
109. Production Director
110. Manager or Director of any government departments or companies
111. Administrative Manager
112. Broadcasting Manager
113. Media Manager
114. Regional Director
115. Bank Manager
116. Commercial Manager
117. Marketing Manager
118. Television Manager
119. Executive Manager / Director
120. Cooperative Society Manager
121. Accounts Manager
122. Cinema Director
123. Company or Factory Manager
124. Maintenance Manager
125. Printing and Publishing Manager
126. Hotel Manager
127. Electrical Manager
128. Finance Manager
129. Sales Manager
130. Museum Manager
131. School Manager
132. Plant Manager
133. Theatre Manager
134. Hospital Manager
135. Institute Manager

136. Library Manager
137. Laboratory Manager
138. Marine Transport Manager
139. Land Transport Manager
140. Air Transport Manager
141. Tourism Agency Manager
142. TV or Radio Programs Presenter
143. Correspondent (Newspaper/Radio/TV)
144. Food Controller
145. Aircraft Takeoff Controller
146. Maritime Controller
147. Quality Controller
148. Air Controller
149. Marine Traffic Controller
150. Media Controller
151. Road Controller
152. Aircraft Landing Controller
153. Cruise Ship Guide
154. Tourist Guide
155. Aviation Guide
156. Surveyor
157. Assistant Pharmacist
158. Co-Pilot
159. Assistant Engineer (All specializations)
160. Consultant
161. General Supervisor
162. Ships Supervisor
163. Banker
164. Decoration Designer
165. TV Cameraman
166. Cinema Cameraman
167. Press Photographer
168. Land Hostess
169. Air Hostess

170. Program Producer
171. Ship Captain
172. Aircraft Pilot
173. Male or Female Nurse
174. Cinema or Television Producer
175. Marketing Representative
176. Sports Representative
177. Sales Representative
178. Procurement Representative
179. Administration Coordinator
180. Archeological Prospector
181. Engineer (All specializations)
182. Career Counselor
183. Assistant General Manager
184. Captain
185. Commercial Broker
186. Travel or Tourism Agent
187. Prosecutor
188. Ministry Undersecretar

இந்திய முஸ்லிம்களின் அவல நிலையும் - அதற்கான தீர்வும்!!!

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகதுஹு...

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....




நன்றி : சகோ. Naseerudeen Mohammed



இந்தியநாடு சுதந்திரம் பெற்ற பின்பு இன்றுவரையுள்ள எந்த ஒரு அரசும் இந்திய முஸ்லிம்களுக்கு அவர்களுக்குரிய உரிமைகளை வழங்க எந்த ஒரு முயற்சியும் மேற்கொண்டதில்லை என்பதே உண்மை. இந்திய பாகிஸ்தான் பரிவினையின்போது முஹம்மது அலி ஜின்னா மாத்திரம் பிரிவினைக்கு ஆதரவு அளித்தபோது, மௌலானா அபுல்கலாம் ஆஸாத், ஜாஹிர் ஹுஸைன், பக்ருதீன் அலி அஹமது போன்ற முஸ்லிம் பெரும் புள்ளிகள் இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மக்களுடன் கைகோர்த்து கொண்டார்கள். தனிமனிதராக நின்ற முஹம்மது அலி ஜின்னா, தான் நினைத்ததைச் சாதித்துக் கொண்டார். ஆனால் இந்திய மக்களுடன் கைகோர்த்த மௌலானா அபுல்கலாம் ஆஸாத், ஜாஹிர் ஹுஸைன், பக்ருதீன் அலி அஹமது போன்ற முஸ்லிம் பெரும் புள்ளிகள் உள்ளடங்கிய இந்திய முஸ்லிம் சமுதாயம் சாதித்தது என்ன என்பதை இன்றைக்கும் நாம் கண்கூடாக கண்டு கொண்டிருக்கிறோம்.

இந்திய பாகிஸ்தான் பிரிவினையின்போது இந்தியாவில் உள்ள முஸ்லிம் மக்களின் எண்ணிக்கை 10 கோடியாக இருந்தது. முஹம்மது அலி ஜின்னாவின் பின்னால் சென்ற மூன்றுகோடி முஸ்லிம்கள் தங்களது அடிப்படை உரிமைகளை(குறிப்பாக தங்களது வணக்க வழிபாட்டு உரிமைகளைப்) பெற்றவர்களாக வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் பிரிவினையை எதிர்த்து அல்லது பரிவினைக்கு ஆதரவு அளிக்காமல் இந்தியாவிலேயே வாழ்ந்து வரும் எஞ்சியுள்ள முஸ்லிம்கள் மிரட்டப்படுவதோடு மட்டுமில்லாமல், மூன்றாம்தர குடிமக்களாகவும் நடத்தப்படுகிறார்கள். மதச்சார்பின்மை காற்றோடு பறக்கவிடப்பட்டது. சுதந்திரத்திற்கு பின் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் 9 கோடிபேரை மக்கள் தொகையாக கொண்டிருந்த தலித் இயக்கம் டாக்டர் அம்பேத்கார் என்ற தனி மனிதரின் தலைமையில் 150 நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால் 7 கோடிபேரை மக்கள் தொகையாக் கொண்டிருந்த முஸ்லிம் இயக்கங்கள் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறாமல் தலைகுனிவைச் சந்தித்தது. முஸ்லிம்கள் மாத்திரம் ஒரே தலைமையின்கீழ் ஒரு தனிக்கட்சியில் நின்று தேர்தலைச் சந்தித்து இருந்தால் அநேகமான தொகுதிகளில் நாம் நிச்சயமாக வெற்றி பெற்றிருப்போம். ஆனால் மதச்சார்பற்ற மற்ற கட்சிகளுக்கு கொடி தூக்கியதன் விளைவு கட்சிகள் வெற்றிபெற்றதேத் தவிர, அத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்களிலும் ஒருவர் கூட முஸ்லிம் இல்லை என்பதே உண்மை நிலையாக இருந்தது.

இந்தியர்களுடன் தோளோடு தோள் நின்ற காஷ்மீரத்து சிங்கம் ஷேக்அப்துல்லா தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வடகோடியாம் காஷ்மீரில் கைது செய்யப்பட்டு தென்கோடியாம் தமிழகத்தில் உள்ள கோடைக்கானல் சிறையில் அடைக்கப்பட்டார். ஹைதராபாத் நிஜாம், ஆற்காடு நவாப் போன்றவர்கள் ராஜ பரம்பரையைத் துறந்து, இந்திய ராணுவத்திற்காக தங்களை அர்பணித்துக் கொண்டார்கள். முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டு, சீக்கியர்கள் மற்றும் கூர்க்கா போன்றவர்களுக்கு மாத்திரம் ராணுவத்தில் தனி மரியாதைச் செலுத்தப்பட்டது. அவர்களுக்கென்று ராணுவத்தில் தனி பிரிவுகளே உருவாக்கப்பட்டன. கேரள முஸ்லிம்கள் தீவிரவாதிகள் என்று முத்திரைக் குத்தப்பட்டு ஓரங்கட்டப்பட்டனர். மராத்திய மாநில முஸ்லிம்கள் குடிசைகளில் தஞ்சம் புகுந்தனர். உத்திரபிரதேசம், பீகார் மற்றும் குஜராத் மாநில முஸ்லிம்கள் அனைவரும் மதக்கலவரங்களால் மிரட்டப்பட்டு, முடமாக்கப்பட்டனர். இன்னும் இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் தலைதூக்க முடியாத அளவுக்கு மிரட்டப்பட்ட நிலையிலேயே தங்களது வாழ்வைத் தொடர்கின்றனர். ஆனால் இதற்கெல்லாம் மாற்றமாக கேரள மாநில முஸ்லிம்களின் நிலை இருக்கின்றது. இதற்கு காரணம் கேரள மாநிலத்தில் முஸ்லிம்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவதால், தேர்தல் நேரங்களில் மற்ற அரசியல் கட்சிகள் முஸ்லிம்களைத் தேடி ஓடிவருகின்றன.

1984 ஆம் ஆண்டு பாரதப்பிரதமர் இந்திராகாந்தி படுகொலைக்குப் பிறகு டெல்லியில் நடந்த கலவரத்தில் ஏரத்தாள 3000 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். வெறும் 2கோடி மட்டுமே மக்கள் தொகையினைக் கொண்ட சீக்கியர்களின் அரசியில் பிரிவான அகாலிதளம் நீதிமன்றத்தில் போராடி கலவரத்தில் கொல்லப்பட்ட அனைவருக்கும் அரசு வழங்கிய நிவாரணத் தொகையைப் பெற்றுக் கொடுத்ததோடு மட்டுமின்றி முன்னாள் மத்திய அமைச்சரான பி. சி. சுக்லா மற்றும் அவரது ஆதரவாளர்களையும் சிறையில் கம்பி எண்ண வைத்தது. பீவண்டி, மீரட், பகல்பூர், மும்பை, லக்னோ, டெல்லி, குஜராத், கோயம்புத்தூர் உட்பட இந்தியாவின் பல பகுதிகளில் திட்டமிட்டு நடத்தப்பட்ட கலவரங்களில் ஆயிரக்கணக்காக முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். முஸ்லிம்களின் சொத்துக்கள் சூரையாடப்பட்டன. அரசு பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்காதது மட்டுமில்லாமல், மேற்கூறப்பட்ட இடங்களில் நடைபெற்ற கலவரங்களுக்கு காரணமானவர்களில் ஒருவர் கூட இதுவரை தண்டிக்கப்படவேயில்லை என்பதே உண்மை நிலை.

மகாத்மா காந்தி பிராமணர்களால் கொல்லப்பட்டார்.

இந்திரா காந்தி சீக்கியர்களால் கொல்லப்பட்டார்.

ராஜீவ் காந்தி இலங்கையைச் சார்ந்த தமிழ்பேசும் இந்துக்களால் கொல்லப்பட்டார்.

அவர்களெல்லாம் இன்றைக்கு தேசாபிமானிகளாக கருதப்படுகிறார்கள். ஆனால் எந்த பாவமும் அறியாத எந்த குற்றமும் செய்யாத, இந்திய அரசியல் பிரிவுச் சட்டம் நமக்கு வழங்கியிருக்கும் அடிப்படை உரிமை கூட மறுக்கப்பட்டவர்களாகிய நாம் தேசிய எதிரிகளாக முத்திரைக் குத்தப்பட்டுள்ளோம். இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகள் நிலைமைகளை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு, பாகிஸ்தானோடு எந்;த சம்பந்தமும் இல்லாத ஒன்றுமறியாத அப்பாவி முஸ்லிம்களை தண்டிக்கின்றன. இஸ்லாத்தின் பெயரால் பாகிஸ்தான் செய்யும் செயல்பாட்டுக்கு இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் எப்படி பொறுப்பாவார்கள்?

இந்திய முஸ்லிம்களின் இன்றைய நிலை

இன்றைய இந்திய முஸ்லிம்கள் பிரித்தாளும் சூழ்ச்சியின் காரணமாக முற்றிலும் வலுவிழந்தவர்களாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். முஸ்லிம்களுக்கென இருந்த அடிப்படை உரிமைகளைக் கூட கேட்டுப் பெறத் தகுதியில்லாத அளவுக்கு வலுவிழந்து போவதற்கு முன்னால், முஸ்லிம்கள் அனைவரும் ஒரு அணியில் கீழ் ஒன்றுபடுவது இன்றைய சூழ்நிலையில் மிக மிக அவசியம். மிகவும் குறைந்த அளவிலேயே இருக்கும் மதவாத கட்சிகளின் வளர்ச்சியை முறியடிக்க வேண்டுமெனில், இந்திய முஸ்லிம்கள் அனைவரும் ஒரு அணியின் கீழ் ஒன்றுபடுவது அவசியம். ஆனால் நாம் ஒன்றுபடுவதற்கு பதிலாக, சிறு சிறு கூட்டங்களாக பிரிந்துபோய், சிதறுண்டு கிடக்கும் மதவாத கட்சிகள் ஒன்றுபட்டு செயல்பட உதவிக்கொண்டிருக்கிறோம். இன்னும் காலம் கடந்து செல்லும் முன்பு இந்தியாவின் இன்றைய சூழ்நிலையிலாவது முஸ்லிம்கள் அனைவரும் ஓரணியின் கீழ் ஒன்று படுவோம்.

சிறுபான்மையினமான முஸ்லிம்களின் வாக்குகளை பெறவேண்டும் என்பதற்காக இந்தியாவில் உள்ள அனைத்து அரசியில் கட்சிகளும் முஸ்லிம்களுக்கான நலன் தரும் திட்டங்களை தேர்தல் கால வாக்குறுதிகளாக வழங்குகின்றன. ஆனால் தேர்தலில் முஸ்லிம்கள் அளித்த வாக்குகள் மூலம் வெற்றி பெற்ற பின்பு, முஸ்லிம்களின் முதுகில் குத்தும் வேலையே தொடர்ந்து செய்து வருகின்றன இந்திய அரசியில் கட்சிகள். தேர்தலுக்கு முன்பு முஸ்லிம்களின் நலன் காக்கும் ஏராளமான வாக்குறுதிகளை வழங்கியதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், சட்டமன்றமோ அல்லது நாடாளுமன்றமோ சென்ற பிறகு தங்களது சொந்த நலனுக்கு பயன்தரும் திட்டங்களுக்கு மாத்திரமே தலைசாய்க்கிறார்கள். இவைகளையெல்லாம் சிந்தித்து கொண்டிருப்பதைவிட நமக்கென்று ஒரு தனி அமைப்பை உருவாக்கி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதே சாலச் சிறந்தது.

இன்றைக்கு இந்தியாவில் இருக்கும் இஸ்லாமிய பெயர் தாங்கிய அரசியல் அமைப்புகள் பிற அரசியில் கட்சிகளிடம் கெஞ்சிக் கூத்தாடி முஸ்லிம் வாக்கு வங்கிகள் அதிகமாக இருக்கின்ற ஒன்றிரண்டு தொகுதிகளை பெற்றுக்கொள்கின்றன. தொகுதிகளை ஒதுக்கும் அரசியல் கட்சிகளும் முஸ்லிம்களுக்கு ஏதோ ஒரு நல்ல காரியம் செய்துவிட்டதைப் போன்றதொரு தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. உண்மையில் முஸ்லிம்களுக்கு தொகுதிகளை வழங்கும் இக்கட்சிகள் செய்யும் இச்செயல் முஸ்லிம்களுக்கு செய்யும் நன்மையான காரியமா என்றால் இல்லை. முஸ்லிம்கள் நிறுத்தப்பட்டால் மாத்திரமே இத்தொகுதிகளில் வெற்றிபெற முடியும் என்கிற காரணத்தால் வழங்கப்பட்டதேத் தவிர, முஸ்லிம்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கம் எதுவும் இல்லை.

எந்த அரசியில் கட்சியைச் சார்ந்தவராக இருந்தாலும் பரவாயில்லை அவர் முஸ்லிம் என்கிற காரணத்தால் மாத்திரம் ஒரு முஸ்லிம் வேட்பாளருக்கு நம் வாக்குகளை அளித்து வெற்றிபெறச் செய்வோம் எனில், சட்டமன்றமோ, நாடாளுமன்றமோ செல்லும் இதுபோன்ற முஸ்லிம் உறுப்பினர்கள் முஸ்லிம்களுக்கு ஒரு கஷ்டமான சூழ்நிலை என்றால் தாம் சார்ந்திருக்கும் கட்சியிலிருந்து அல்லது பதவியிலிருந்து வெளியேற்றப்படுவோமோ என்கிற பயத்தின் காரணத்தால் முஸ்லிம்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பமுடியாத சூழ்நிலை. இதுபோன்ற மக்கள் பிரதிநிதிகளை சட்டசபைக்கோ அல்லது நாடாளுமன்றத்திற்கோ தேர்ந்தெடுத்து அனுப்புவதால் உள்ள பயன்தான் என்ன? இதுபோன்ற முஸ்லிம் அரசியில்வாதிகள் அவைகளில் பேச அனுமதிக்காத, தம்மை மதிக்காத அரசியல் கட்சிகளில் ஏன் இருக்கிறார்கள்? இதுபோன்ற பிரதிநிதிகள் இருப்பதும் இல்லாமலிருப்பதும் ஒன்றே. அதில் எந்த வித்தியாசமும் இல்லை.

முஸ்லிம்களின் வாக்கு வங்கிகள் அதிகமாக இருக்கின்ற தொகுதிகளில், எல்லா அரசியில் கட்சிகளும் முஸ்லிம் பெயர்தாங்கிகளை வேட்பாளர்களாக நிறுத்தும். இவ்வாறு முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்துவதால் முஸ்லிம்களுக்கு ஏதேனும் பயன் உண்டா என்றால் இல்லை. முஸ்லிம் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டால் மாத்திரமே இத்தொகுதிகளில் வெற்றிபெற முடியும் என்பதை அறிந்திருக்கும் அவர்கள் தங்களது சுயநலம் கருதி இச்செயலை செய்கிறார்களேத் தவிர, வேறில்லை. முஸ்லிம்கள் வேட்பாளராக நிறுத்தப்பட்டால் நிச்சயம் வெற்றிபெற முடியும் என கண்கூடாகத்தெரியும் இது போன்ற தொகுதிகளில் முஸ்லிம்கள் அனவைரும் ஒன்றுகூடி ஒரு பொது வேட்பாளரை ஏன் நிறுத்தக்கூடாது?

எனதருமை முஸ்லிம்களே! மத்திய மற்றும் மாநில அரசுகள் இந்திய முஸ்லிம்களை அடக்கி ஒடுக்கி ஓரங்கட்டியதேத் தவிர, வேறு சாதித்தது என்ன? முஸ்லிம்கள் அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, ஓரங்கட்டப்பட்டாலும், சில முஸ்லிம் அரசியல்வாதிகள் இந்திய அரசியல் கட்சிகளுக்கு ஆதரவளித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஆதரவு யாருக்காக? எதற்காக? என்பது இவ்வாறு ஆதரவு அளிப்பவர்களுக்கே வெளிச்சம். திறந்த மனதுடன், சார்பற்ற நிலையில் உங்கள் அறிவாற்றலைப் பயன்படுத்தி இந்திய முஸ்லிம்களின் இன்றைய நிலை குறித்து சற்றே சிந்தனை செய்து பாருங்கள். இந்திய முஸ்லிம்களின் பிரச்னைகளுக்கு உண்டான தீர்வு தெளிவாகக் தெரியவரும்.

1. இதற்கான தீர்வுதான் என்ன?

2. இந்த தவறான அச்சுறுத்தலுக்கான தீர்வுதான் என்ன?

3. நாம் இழந்த உரிமைகளை மீண்டும் திரும்பப் பெறுவது எப்படி?

இந்திய மக்கள் தொகையில் 30கோடி பேர் முஸ்லிம்களாக இருந்தாலும், நாடாளுமன்றத்தில் முஸ்லிம் பிரதிநிதிகளின் எண்ணிக்கை வெறும் 10க்கு மேல் ஒருபோதும் இருந்ததில்லையே. ஏன்?

இந்திய முஸ்லிம்கள் அனைவரும் ஒரு கட்சிக்கு மாத்திரம் வாக்களிப்போம் எனில், நிச்சயமாக இது ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். ஆனால் நாம் நமக்குள்ளேயே பல பிரிவுகளாக பிரிந்து, இந்திய அரசியல் கட்சிகளில் பல கட்சிகளுக்கும் வாக்களிப்பதால் நம்முடைய வாக்கு வங்கி சிதறடிக்கப்பட்டு, நமக்குள்ளேயே வலுவிழந்து போகிறோம். இதற்கு உதாரணமாக சீக்கியர்களை (ஒருசில தனி நபர்களைத் தவிர) எடுத்துக் கொள்வோம். இந்திய மக்கள் தொகையில் வெறும் 2 சதவீதம் மாத்திரம் இருக்கும் சீக்கியர்கள், இந்திய அரசியலில் கோலோச்ச முடியும் என்றால் இந்திய மக்கள் தொகையில் 25 சதவீதம் இருக்கும் நாம் ஏன் மற்றவர்களிடம் மண்டியிட வேண்டும்? இது ஏனென்றால் நாம் நமக்குள்ளேயே ஒற்றமையின்றி பல பிரிவுகளாக பிரிந்து, தலா 1 சதவீதம் வீதம் இந்திய அரசியல் கட்சிகள் 25க்கும் வாக்களிப்பதால் இந்திய மக்கள் தொகையில் 25 சதவிகிதம் உள்ள நம்முடைய பலம் 1 சதவிகிதமாக வலுவிழந்து விடுகிறது. ஏதேனும் ஒரு கட்சி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வரும்போது, நாடாளுமன்றத்தில் நம்முடைய பலம் வெறும் 1 சதவிகிதமாகவே பிரதிபலிக்கிறது. இந்திய மக்கள்தொகையில் 25 சதவீதம் இருக்கும் நம்முடைய பலம் ஆட்சி மன்றம் என்று வரும்போது வெறும் 1 சதவிகிதம் மட்டும்தான் பிரதிபலிக்கப்படுகிறது என்பதை எண்ணி நாமெல்லாம் வெட்கித் தலைகுனிய வேண்டும். இந்நிலையைக் காணும் முழு உலகமும் நம்மைப் பார்த்து நகைப்பது நம் காதுகளில் ரீங்காரமிடுகிறது. மதச்சார்பற்ற இந்திய அரசியல் கட்சிகளின் பிரித்தாளும் சூட்சிக்கு முஸ்லிம்களாகிய நாம் பலிகிடாவாக மாறிக் கொண்டிருக்கிறோம் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும்.

ஆந்திராவில் உள்ள தெலுங்கு தேசம், தமிழகத்தில் உள்ள திமுக, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் அகாலிதளம் உள்ளிட்ட பல மாநில கட்சிகள் தங்களது ஆதரவு இன்றி மத்தியில் எந்த ஒரு ஆட்சியும் அமைய முடியாது என்பதை தெளிவாகத் தெரிந்து வைத்திருக்கின்றன. காங்கிரஸும், பிஜேபியும், மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டுமெனில் மேற்கூறப்பட்ட மாநில கட்சிகளின் காலடியில் வந்து விழுந்து கிடக்கின்றன. தெலுங்கு தேசம், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் அகாலிதளம் உள்ளிட்ட பல மாநில கட்சிகள் ஆட்சி அமைக்க ஆதரவு கொடுக்கும் முன்னால் தங்களுக்குத் தேவையானவைகள் கொடுக்கப்பட வேண்டும், இல்லையெனில் ஆதரவு திரும்பப் பெறப்படும் என்பதை நிபந்தனையாக வைத்து தாங்கள் நினைப்பதைச் சாதித்துக் கொள்கின்றன. இதற்கு காரணம் நாடாளுமன்றத்தில் அவர்களுக்கு இருக்கும் பிரதிநிதிகளின் எண்ணிக்கை. இதே நிலையை நாம் மேற்கொள்ள முடியுமா? நிச்சயமாக முடியும். நமக்கென்று ஒரு தனி அமைப்பு கண்டு, அந்த அமைப்பின் மூலமாக மக்கள் பிரதிநிதிகளை நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுத்து அனுப்பினால் நாமும் நம்முடைய முக்கிய பிரச்னைகளுக்கான தீர்;வுகளை பெற்றுக் கொள்ள முடியும். குறிப்பாக பாதுகாப்பு, சமநீதி, சட்ட உரிமை, இடஒதுக்கீடு, கலவரத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கான நிவாரண உதவி போன்ற பல பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும்.

தமிழகத்தில் கோவை குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பிறகு நடத்தப்பட்ட வகுப்பு கலவரத்தில் எண்ணற்ற முஸ்லிம்கள் இந்து தீவரவாதிகளால் கொல்லப்பட்டனர். அக்கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் எவருக்கும் இதுவரை அரசுத் தரப்பிலிருந்து எந்த ஒரு உதவித் தொகையும் வழங்கப்படவில்லை. ஆனால் அதற்கு முன்னால் அதே கோவை மாநகரில் நடைபெற்ற வகுப்புக் கலவரத்தில் பாதிக்கப்பட்ட இந்துக்கள் ஒவ்வொருவருக்கும் தலா 1 இலட்சம் வீதம் அரசுத் தரப்பிலிருந்து உதவித் தொகை வழங்கப்பட்டது. ஏன் இந்த பாரபட்சம்? நம்முடைய உரிமையை சட்டசபையில் எடுத்துரைக்க சரியான பிரதிநிதித்துவம் நம்மிடையே இல்லாததே காரணம். ஆனால் அதேசமயம் இந்து மக்களின் பிரதிநிதிகள் தங்களது கோரிக்கையை சட்டசபையில் எடுத்துரைத்தனர். தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லையென்றால், அரசுக்கு அளித்து வரும் ஆதரவு விலக்கிக் கொள்ளப்படும் என்ற எச்சரிக்கை வேறு. ஆட்சி கவிந்துவிடும் என்று அச்சம் கொண்ட அரசு, இந்துக்கள் ஒவ்வொருவருக்கும் தலா 1 இலட்சம் என உதவித் தொகை வழங்கியது.

இந்திய முஸ்லிம்களுக்கென தனியாக ஒரு அரசியல் அமைப்பு காண்பது இவ்வேளையில் மிகவும் அவசியமாகிறது. நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் ஆதரவு இல்லையென்றால், மத்தியிலும், மாநிலங்களிலும் ஆட்சி அமைக்க முடியாது என்கிற சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும். இந்நிலை உருவாக்கப்பட முற்றிலும் அவசியம் முஸ்லிம்களிடையே ஒற்றுமை. சமுதாய நலனை கருத்தில் கொண்டு நாம் விடுக்கும் கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதியளிக்கும் கட்சிக்கு மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி அமைக்க நம்முடைய ஆதரவை வழங்கலாம். நமக்கென்று ஒரு தனி அரசியல் அமைப்பு இருந்திருந்தால், இன்றைக்கு முஸ்லிம்களாகிய நாம் அனுபவிக்கும்; இந்த சித்திவதைகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது. நாட்டை ஆள வேண்டுமெனில் முஸ்லிம்களின் ஆதரவு வேண்டும் என்ற நோக்கத்திற்காவது, ஆளும் கட்சிகள் நம்மை சிறப்பாக நடத்தியிருக்கும்.

இழைக்கப்படும் கொடுமைகளையும், நடத்தப்படும் சித்திரவதைகளையும் தாங்கிக் கொள்ள வேண்டிய அவசியம் என்ன? இதற்கான சரியான தீர்வு இல்லையா? அல்லது நேரான வழிகாட்ட சரியான தலைமை இல்லையா? மத்திய மற்றும் மாநில அரசை எதிர்த்து நடத்தப்படும் கண்டன ஊர்வலங்களும், நாம் நடத்தும் கோரிக்கைப் பேரணிகளும் - கண்டன ஊர்வலங்களும் செவிடன் காதில் ஊதிய சங்காக மாறும். எப்போதும்போல் முஸ்லிம்கள் அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, ஓரங்கட்டப்படுவர் என்பது நிச்சயம்.

பிரச்னைகளுக்கான தீர்வும் அடுத்த கட்ட நடவடிக்கையும்

நாம், நம்முடைய உரிமைகளைப் பெற வேண்டும். அதற்குரிய சரியான வழிமுறை என்ன? இக்கேள்விக்கான விடையை கண்டறிய பல நாட்களாக சிந்தித்து, ஆய்வு செய்து, அறிந்த விதத்தில் கிடைத்த தீர்வுகள் இரண்டுதான்.

1. அறிவு

2. ஆயுதம்

ஆயுதம் ஏந்தி போராடி வெற்றி பெற்ற வரலாறு உலகில் ஒரு சில நாடுகளில் சாத்தியப்பட்டிருக்கலாம். ஆனால் ஆயுதம் ஏந்தியவர்கள் ஆயுதத்தாலேயே அழிவார்கள் என்பது நிச்சயம். இன்றைய சூழ்நிலையில் ஆயுதம் ஏந்தி போராடி கிடைக்க வேண்டிய உரிமையைப் பெற்றுக் கொள்வது என்பது சாத்தியக்கூறானது அல்ல. ஆசியாவிலேயே அதிநவீன ஆயுதங்களைக் கொண்டிருந்த சீக்கியர்கள், ஆயுதப் போராட்டத்தில் தோல்வியடைந்ததை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம். இன்றைக்கு அவர்கள் புத்திசாலித்தனமாக அறிவு என்னும் ஆயுதம் ஏந்தியுள்ளார்கள். பிளவுபட்டிருந்த சீக்கியர்கள் அனைவரும் ஒன்றிணைந்தார்கள். தமக்கென ஒரு அரசியல் இயக்கம் கண்டார்கள். தமக்காக சட்டசபையிலும், நாடாளு மன்றத்திலும் வாதாடக்கூடிய பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்தார்கள். எல்லா பிரதான அரசியல் கட்சிகளையும் தங்கள் பின்னால் ஓடிவரச் செய்தார்கள். ஆயுதங்களால் வெல்ல முடியாத காரியங்களை உயர் மதிநுட்பத்தால் வெற்றி கொள்கிறார்கள்.

மஹாராஷ்டிர மாநிலத்தில் மதவாதம் பேசித் திரிந்த பால் தாக்கரே போன்றவர்கள் பல பேர் கொல்லப்பட காரணமாக இருந்தாலும், மத்திய மாநில அரசுகள் பால் தாக்கரே மீது கைவைக்க தயங்குகின்றன. காரணம் பால் தாக்கரே போன்றோர் அறிவு என்றும் ஆயுதம் ஏந்தி மராத்திய மண்ணின் மைந்தர்களை ஒன்றிணைத்து, பல சட்டசபை மற்றும் நாடாளுமன்ற பிரதிநிதிகளைப் பெற்றுக் கொண்டு, கோரிக்கைகள் மூலம் இவ்வுலகில் அவர்களுக்குத் தேவையானதை நிறைவேற்றிக் கொள்கின்றனர்.

இந்திய முஸ்லிம்கள் அனவைரும் ஒரே தலைமையின் கீழ் ஒன்றிணைவது. நமக்கென ஒரு தனி அரசியல் அமைப்பு காண்பது. கண்ட அரசியல் அமைப்பின் மூலம் தேர்தலில் போட்டியிட்டு நமக்கென நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றங்களுக்கும் என பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்து அனுப்பி வைப்பது. இறைவனின் நாட்டத்தில் இந்திய முஸ்லிம்களின் முயற்சியில் மேற்குறிப்பிட்ட செயல்பாடுகள் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டால் இந்திய முஸ்லிம்களுக்கு விடிவுகாலம் நிச்சயம்.

இந்தியாவில் முஸ்லிம்களின் பலம்

மாநிலத்திற்கு 3 நாடாளுமன்ற உறுப்பினர் என்று கணக்கிட்டால் கூட இந்தியாவில் உள்ள 30 மாநிலங்களில் 90 நாடாளுமன்ற உறுப்பினர்களை முஸ்லிம்களின் பிரதிநிதிகளாக அனுப்பி வைக்க முடியும். இது பற்றி ஆழ்ந்து சிந்தித்து தலைமையேற்று நடைமுறைப்படுத்தி நடத்திச் செல்ல யார் தயாராக இருக்கிறார்கள்?

இந்திய முஸ்லிம்களுக்கு தமிழக முஸ்லிம்கள் வழிகாட்டட்டும்

இந்திய முஸ்லிம்களை ஒன்றிணைத்து வழிநடத்திச் செல்ல முன்னுதாரணமாக தமிழகம் வழிகாட்டட்டும். இந்தியாவிலேயே, ஏன் உலகத்திலேயே இல்லாத வகையில் தமிழகத்தில் மட்டும்தான் முஸ்லிம்களிடையே எண்ணற்ற பிரிவுகளும், தேவையில்லா அமைப்புகளும் உள்ளன. இதன் காரணத்தால் முஸ்லிம்களின் ஓட்டு வங்கி உடைந்து, வலுவிழந்து நிற்கிறது. இன்ஷா அல்லாஹ் இந்த இஸ்லாமிய சமுதாயத்தின் நலன் நாடும் அனைவரும் ஒன்றிணைந்து தமிழகத்தின் இஸ்லாமியர்கள் அனைவரையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வருவது காலத்தின் கட்டாயமும் அவசியமுமாகும்.

தமிழக முஸ்லிம்களின் பலம்

தமிழகத்தின் 1லட்சத்து 20 ஆயிரம் முஸ்லிம் வாக்குகளை கொண்ட நன்னிலம் சட்டமன்றத் தொகுதி தவிர, ஏரத்தாள 60க்கும் மேற்பட்டத் தொகுதிகள் 80ஆயிரம் முஸ்லிம் வாக்காளர்களை கொண்டவை. நன்னிலம் சட்டமன்றத் தொகுதியில் 1லட்சத்து 20 ஆயிரம் முஸ்லிம் வாக்காளர்கள் இருந்தாலும் இன்றுவரை அந்த தொகுதியில் எந்த ஒரு முஸ்லிம் வேட்பாளரோ அல்லது முஸ்லிம் அரசியல் கட்சியோ தமிழகத்திற்காக இதுவரை நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடவேயில்லை என்பது ஆச்சரியகரமான, அதே சமயம் வருத்தத்திற்குரிய செய்தியாகும். தமிழகத்தில் 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்ட தொகுதிகள் முப்பதுக்கும் அதிகமாக இருக்கின்றது. அவைகளில் சிலவற்றை இங்கே காணலாம்:

1. நன்னிலம்

2. கடலாடி

3. கேயம்புத்தூர் மேற்கு

4. மதுரை மத்தி

5. திருச்சி

6. சேலம்

7. அரவக்குறிச்சி

8. குடியாத்தம்

9. ராணிப்பேட்டை

10. ஆற்காடு

11. சென்னை துரைமுகம்

12. சேப்பாக்கம்

13. ஆயிரம் விளக்கு

14. திருவல்லிக்கேணி

15. எக்மோர்

16. சென்னை பூங்காநகர்

17. ராயபுரம்

18. திண்டுக்கல்

19. நத்தம்

20. பெரியகுளம்

21. பாளையங்கோட்டை

22. திருச்செந்தூர்.

இதுதவிர, தமிழகத்தில் 30 சட்டமன்றத் தொகுதிகள் என்பதாயிரத்திற்கும் அதிகமான முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்டவை. 23 சட்டமன்றத் தொகுதிகள் அறுபதாயிரத்திற்கும் அதிகமான முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்டவை. தமிழக முஸ்லிம்கள் அனவைரும் ஒரே குடையின் கீழ் ஒன்றினைந்து நமக்கு நாமே உருவாக்கும் அரசியல் அமைப்புக்கு வாக்களிப்போம் எனில் தமிழகத்தில் மாத்திரம் 45-55 சட்டமன்றத் தொகுதிகளிலும், 4-6 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் நமக்கு வெற்றி நிச்சயம் என்பதை உறுதியாகக் கூறமுடியும். அனைத்து அரசியல் கட்சிகளையும் நம் காலடியில் விழ வைப்பதுடன், தமிழக அரசியலைப் பொறுத்தவரை நாம் வகுத்ததுதான் சட்டம் என்கிற நிலையையும் உருவாக்க முடியும்.

தமிழகத்தின் 6 மாநகராட்சிகளில் முஸ்லிம்களே மேயர்கள் என்பதையும் உறுதியாகக் கொள்ளலாம். சென்னையைத் தவிர தமிழத்தில் மற்றுமுள்ள மாநகராட்சிகளில் ஒன்றரை இலட்சம் வாக்குகள் பெறுபவரே மேயர். மதுரை, திருச்சி மற்றும் கோவை மாநகராட்சிகள் 3 இலட்சம் முஸ்லிம் வாக்களர்களைக் கொண்டவை. சேலம் மற்றும் நெல்லை மாநகாராட்சிகள் இரண்டரை லட்சம் முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்டவை.

சட்டசபை தொகுதிகளில் உள்ள முஸ்லிம் வாக்காளர்கள் ஒருங்கிணைந்து தமது வாக்குகளையும் முஸ்லிம் வேட்பாளர்களுக்கே அளிப்பார்கள் எனில், தமிழக சட்சடசபையில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் முஸ்லிம்களே என்கிற நிலை ஏற்படும். முஸ்லிம்களின் சம்மதம் இல்லாமல் எந்த ஒரு சட்டமும் நிறைவேற்றப்பட முடியாது என்கிற நிலையை தமிழக சட்டசபையிலும் உருவாக்கமுடியும். தமிழகத்தில் மட்டுமில்லாது, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மஹாராஷ்டிரா என இந்தியாவின் பெரும்பான்மையான மாநிலங்களில் உள்ள சட்டசபைகளிலும் இந்நிலையே உருவாகும். இதே நிலை தொடருமெனில் நாடாளுமன்றத்திலும் முஸ்லிம் உறுப்பினர்களின் எண்ணிக்கை பெரும்பான்மை நிலைக்கு உயரும்.

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் 400 முதல் 800 பள்ளிவாயில்களை ஒன்றிணைப்பது மிகவும் எளிதான காரியம். தமிழகத்தில் உள்ள 8000 பள்ளிவாயில்களைச் சார்ந்த 1ஒன்றரை கோடி முஸ்லிம்களும் ஒரு பொது நலனுக்காக ஒன்றிணைவார்கள் எனில், நாம் நினைக்கும் எதையும் சாதிப்பது எளிது என்பதை முஸ்லிம்கள் அனைவரும் உணர வேண்டும். இது நேர்த்தியான, அதேசமயம் யாருக்கும் எந்தவித ஆபத்தும் இல்லாத அமைதியான முடிவு என்பதையும் முஸ்லிம்கள் அனைவரும் உணர வேண்டும். தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் இஸ்லாமியர்கள் அரசியல் செல்வாக்கு மற்றும் ஆட்சி அதிகாரம் பெற வேண்டும் என்பதற்கு இதைத்தவிர ஒரு சரியான தீர்வு இல்லையென்றே சொல்ல வேண்டும். அரசியல் செல்வாக்கு மற்றும் ஆட்சி அதிகாரம் இன்றி இந்த பூமியில் நாம் எதையுமே சாதிக்க முடியாது என்பது உறுதி.

இதுபோன்ற பிற அரசியல் கட்சிகளுக்காக கொடி தூக்கி அவர்களை வெற்றிபெற செய்ய வேண்டுமா? அவர்கள் வெற்றி பெற்று ஆட்சிபீடம் ஏறிய பின்பு நம்முடைய அடிப்படை உரிமைகளுக்காக அவர்களிடம் கையேந்தி நிற்க வேண்டிய நிலை தேவைதானா? தேர்தல் காலங்களில் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு முஸ்லிம்கள் வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறோமே. ஏன்? முஸ்லிம்கள் முஸ்லிம் வேட்பாளருக்கே வாக்களிக்கட்டும். முஸ்லிம் வேட்பாளர்கள் வெற்றிபெற்று வந்த பின்புள்ள நிலைமையை ஆய்ந்தறிந்து, முஸ்லிம்களுக்கு நல்லது செய்யக்கூடியவர்களுக்கு நம்முடைய ஆதரவை வழங்கலாம். மானம் மற்றும் சுயமரியாதை ஈமானின் ஒரு பகுதி என்பதை முஸ்லிம்கள் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.

இக்கட்டுரையை மீண்டும் மீண்டும் படியுங்கள். முஸ்லிம்களுக்கு நன்மை செய்யாத எந்த ஒரு அரசியல் கட்சியையும் நம்பாதீர்கள். முஸ்லிம்களே! அனைவரும் ஒரே குடையின் கீழ் ஒன்றிணைவோம். நமது ஒற்றுமையின் மூலம் நாம் விரும்பியவைகளை உடனடியாகப் பெற முடியும். இந்த முடிவை சிந்தித்து செயல்படுத்துவது முஸ்லிம்களாகிய நம்மீது கடமையாக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களாகிய நாம் அனைவரும் ஒன்றிணைவோம். நம் அன்றாட வாழ்க்கை எளிதாக அமையும். நாம் நமது அடிப்படை உரிமையான இறைவழிபாட்டு உரிமைகளை தங்கு தடையின்றி தொடரலாம். நம் வருங்கால தலைமுறையும் பாதுகாப்பான வாழ்வைத் தொடரும்.

தேர்தலில் நாம் வாக்களிக்காமல் புறக்கணிப்போம் எனில் நஷ்டம் நமக்குத்தான். ஒவ்வொரு வாக்கும் விலைமதிப்பற்றது. நாம் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் ஏராளமான மாற்றங்களை கொண்டுவரும். அரசை எதிர்க்கிறோம் என்ற பெயரில் நம்மில் சிலர் வாக்களிக்காமல் தேர்தலைப் புறக்கணிக்கிறார்கள். அதனால் ஏற்படும் நஷ்டம் நமக்கே! மற்ற அரசியல் கட்சிகள் நம்மை எள்ளி நகையாடுவதுடன், அதிக பயனடைவது அவர்களே என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனதருமை முஸ்லிம் சொந்தங்களே! நமக்கென ஒரு தனி அரசியல் அமைப்பு காண்பதும், அந்த அமைப்பின் மூலம் நமக்காக பாடுபடக்கூடிய முஸ்லிம் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்து அனுப்புவதுமே இனி நம்முடைய தலையாய பணியாக இருக்க வேண்டும்.

நாளைய உலகம் நம் கையில் என்பதை தெளிவாக தெரிந்த நாம், மரணித்த பிணம் போல் நடமாட வேண்டுமா?

நாம் நம்முடைய குறிக்கோளில் தெளிவாக இருப்போம். அனைத்து அரசியல் கட்சிகளையும் நம் பின்னால் கைகட்டி நிற்க வைப்போம். அமைதியாக நாம் நம்முடைய குறிக்கோளை எட்டுவோம். நமது உறுதிமொழி நம் வருங்கால தலைமுறையின் வாழ்வுரிமைக்கு அடிப்படையாக அமையட்டும். எந்த காரணம் கொண்டும் முஸ்லிம்களின் ஒற்றுமை என்னும் அடிப்படை குறிக்கோளை விட்டு நம் கவனம் சிதறாமல் இருக்கட்டும். எல்லாம் வல்ல அல்லாஹ் இதற்கு அருள் புரியட்டும்!





என்றும் அன்புடன் உங்கள் சகோதரன்.

அஸ்கர்
மாதவலாயம். [ஷார்ஜா - அமீரகம் ]
அநீதிக்கு எதிராக நியாயத்தின் குரலாக உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.
Shahul Askar
===========================================================================

போர்க் பெப்பெரோனி (Pork Pepperoni) ஹலாலா? ஹராமா?

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகதுஹு...

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....




ஜன.30:வளர்ந்து வரும் இந்தியாவில் குவியும் வெளிநாட்டுப் பொருட்கள் மற்றும் கலாச்சராத்துடன் இப்பொழுது அதிகமாக வெளிநாட்டு உணவுப் பொருட்கள் அதிகமாகக் கிடைக்கிறது. அதில் முன்னிலையில் இருப்பது ஃபாஸ்ட் ஃபுட் (Fast Food) கலாச்சாரம்.

கம்பெனிகளில் வேலை பார்ப்பவர்கள் தாங்கள் வீட்டிற்குச் செல்ல நேரமாகிவிட்டாலும் அல்லது பார்ட்டி (Party) என்றாலும் ஆர்டர் பண்ணுவது ஃபாஸ்ட் ஃபுட் (Fast Food) ஆகத்தான் இருக்கும். அதிலும் முக்கியமாக பிஸ்ஸா (Pizza). பிஸ்ஸாவை நகரத்தில் இருப்பவர்கள் மட்டுமல்லாது கிராமங்களில் உள்ளவர்கள் கூட இப்பொழுது டிவி விளம்பரங்கள் மூலம் தெரிந்து வைத்துள்ளார்கள். அவர்களுடைய ஓரே எண்ணம் ஒரு முறையாது இந்த பிஸ்ஸாவை ருசித்து விடவேண்டும் என்பதுதான்.

பிஸ்ஸாவை (Pizza) இந்தியாவில் PIZZA HUT DOMINO’S PIZZA என்ற இரண்டு கம்பெனிகள் விற்பனை செய்கின்றன. குறிப்பாக, பிஸ்ஸா பெரிய ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் (Shopping Complex) ளில்தான் கிடைக்கும். பிஸ்ஸா (Pizza) வெவ்வேறு ருசிகளில் கிடைக்கி்ன்றது. எடுத்துக்காட்டாக சைவம், அசைவம் (ஆட்டுக்கறி, மாட்டுக்கறி மற்றும் பன்றிக் கறி).

கடந்த டிசம்பர் விடுமுறையில் குடும்பத்துடன் சென்னைக்குச் சென்றிருந்தேன். புதிதாக ஒரு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் திறந்திருப்பதாகவும் எல்லாப் பொருட்களும் அங்கே கிடைப்பதாகவும் சொன்னார்கள். நாங்களும் அங்கே சென்றோம். ஒரு தளத்தில் PIZZA HUT கடையைப் பார்த்த என்னுடைய மகன்கள் "பிஸ்ஸா (Pizza) சாப்பிடலாம்" என்று அடம் பிடித்தனர். நான், "இந்தியாவில் உள்ள PIZZA HUT ஹலாலா என்று தெரியாது. ஆகையால் போக வேண்டாம்" என்று சொன்னேன்.

நிறைய முஸ்லிம் நபர்களை PIZZA HUT ல் பார்த்த என்னுடைய மகன்கள், "அங்கே பாருஙகள். முஸ்லிம் ஆட்கள் இருக்கிறார்கள்" என்று சொன்னார்கள். "ஹலாலாக இருப்பதனால்தானே அவர்கள் சாப்பிடுகிறார்கள்" என்று சொன்னார்கள். நானும் அரை மனதுடன் வெளிநாட்டில் உள்ள பிஸ்ஸாவிற்கும் இந்தியாவில் உள்ள பிஸ்ஸாவிற்கும் எப்படி சுவை வித்தியாசம் இருக்கிறது என்று பார்க்கலாம் என்று அங்கே சென்றேன்.

உணவுப் பட்டியலை (Menu Card) வாங்கி என்ன ஆர்டர் செய்யலாம் என்று பார்த்தேன். வெஜிடேரியன், ஃபியரி சிக்கன்... என்று பார்த்துக் கொண்டு வந்த எனக்கு PEPPERONI (100% Pork Pepperoni) என்று பார்த்தவுடன் தலை சுற்றியது.

உடனே வெளியே வந்து விட்டேன். சாப்பிட்டுக் கொண்டிருந்த முஸ்லிம் குடும்பங்களைப் பார்த்து மனதிற்குக் கஷ்டமாக இருந்தது. Pork Pepperoni தவிர வேறு பிஸ்ஸாவை அவர்கள் சாப்பிடலாம் என்று எண்ணிக்கொண்டேன். இருந்தாலும் மனது கேட்கவில்லை. ஆகையால் அங்கே நின்றிருந்த சில முஸ்லிம் நபர்களிடம் "PIZZA HUT ஹலாலா?" என்று கேட்டேன். சிறிது யோசித்து விட்டு "ஹலால்தான்" என்றார்கள். ஆனால் Pork Pepperoni என்று உணவுப் பட்டியலில் போட்டிருக்கிறதே.. என்று இழுத்தேன். அதைப் பார்த்து விட்டு, "அதனால் ஒன்றுமில்லை" என்று சொன்னார்கள்.

மற்ற சிலர், "நாங்கள் வெஜிடேரியனைத்தான் வாங்குகிறோம்" என்று சொன்னார்கள். எனக்கு ஒன்று நன்றாகப் புரிந்தது. நிறைய போ்களுக்கு PORK என்றால் பன்றியின் இறைச்சி என்றே தெரியவில்லை. நான் அவர்களிடம் "PORK என்றால் பன்றியின் இறைச்சி" என்று சொல்லிவிட்டு வந்தேன். அவர்கள் நான் சொல்வதை நம்புவதா வேண்டாமா என்று அரை மனதுடன் வெளியே வந்தார்கள்.

இதற்கு முஸ்லிம்களின் அறியாமைதான் காரணம். "இந்தியாவில் கிடைக்கும் இறைச்சி எல்லாம் நம்மாளுகதானே (முஸ்லிம்கள்) அறுக்கிறார்கள்" என்று நினைப்பது. தற்பொழுது கிடைக்கும் வெளிநாட்டு உணவுப் பொருட்கள் வெளிநாட்டிலிருந்து வருகின்றன. ஆகையால் ஹலாலாக இல்லாமல் இருக்கலாம். இந்தியாவில் பன்றி இறைச்சி அதிகம் சாப்பிடுதில்லை. ஆகையால் எல்லா உணவுக் கடைகளிலும், சூப்பர் மார்கெட்டுகளிலும் பன்றிக் கறி விற்க மாட்டார்கள் என்று நினைப்பது தவறு. PIZZA HUT மற்றும் DOMINO’S PIZZA போன்றவை வளைகுடா நாடுகளில் ஹலாலாக இருக்கலாம். ஆனால் அவை இந்தியாவிலும் ஹலாலாக இருக்கும் என்று எண்ணுவது தவறு.

LARD எனப்படும் பன்றியின் கொழுப்பை பிஸ்ஸா சுவையாக இருக்க CHEESE ல் பயன்படுத்துகின்றனர். LARDஐ எல்லா பிஸ்ஸாவுக்கும் பயன்படுத்தமாட்டார்கள் என்று எந்த உத்திரவாதமும் இல்லை. நாம் வெஜிடேரியன் பிஸ்ஸாவைத்தானே சாப்பிடுகிறோம் என்று நினைப்பது மிகத் தவறு. பிஸ்ஸாவைச் சுட வைக்க வெஜிடேரியனுக்கும் மற்ற பிஸ்ஸாவிற்க்கும் வெவ்வேறான தட்டுக்களை உபயோகப்படுத்துவதில்லை. PORK மற்றும் LARD மற்ற பிஸ்ஸாவில் கலப்பதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.

உங்களுக்கு பிள்ளைகள், தெரிந்தவர்கள் மற்றும் சொந்தங்களுக்கு PIZZA HUT மற்றும் DOMINO’S PIZZA ஹலால் இல்லை என்று எடுத்துச் சொல்லி மிகப் பெரிய தவறிலிருந்து தடுக்க அல்லாஹ் அருள் புரிவானாக. முஸ்லிம் சமூக அமைப்புகள் கூட மக்களிடம் இதனை எடுத்துச் சொல்லலாம்.

உங்களுக்குத் தெரிந்தவர்கள் மற்றும் சொந்தங்களுக்கு SMS மூலம் "In India, Pizza Hut and Domino’s Pizza are NOT HALAL. Their PIZZA contains PORK (Flesh of PIG) and LARD (Fat of PIG)" என்று தெரியப்படுத்துங்கள்.

இன்னும் சந்தேகமா? PIZZA HUT மற்றும் DOMINO’S PIZZA பற்றி அவர்களின் இணையதளத்தில் தெரிந்து கொள்ளுங்கள்.
1. http://www.pizzahut.co.in/cheesybites_menu.php OR http://www.pizzahut.co.in/
2. http://www.dominos.co.in/nonvegpizzas.jsp
and Click CHEESE AND PEPPERONI menu.

source : http://paalaivanathoothu.blogspot.com/2011/01/pork-pepperoni.html