Saturday, January 8, 2011

வழைகுடாவாழ் கொள்கை சகோதரர்களுக்குமுதல்வர் B.M.இப்ராஹீம் காசிமீ அஸ் சஃப்வா இஸ்லாமிய பெண்கள் கல்வியகம்அறந்தாங்கி-புதுக்கோட்டை மாவட்டம்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
அன்புக்குரிய வழைகுடாவாழ் கொள்கை சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..!
கடந்த துல்ஹஜ் 15-11-10 முதல் நான் சார்ந்திருந்த TNTJ இயக்கத்தைவிட்டும் வெளியேறிவிட்டேன். என்பதை தாங்கள் அறிவீர்கள். நான் எதற்காக வெளியேறினே; என்பதை அறியாத பலர் என்னிடம் விளக்கம் கேட்டு சவுதி,துபை,குவைத் போன்ற நாடுகளிலிருநத்தும் தமிழகத்தின் பல பாகங்களிலிருந்தும் தொலைபேசி மூலம் விளக்கம் கேட்டனர். அவர்கள் அனைவருக்கும் TNTJ பிற தவ்ஹீத் இயக்கங்களின் மேல் கொண்டுள்ள நிலைபாடு தான் என் விலகளுக்கான காரணம் என்பதை தெரிவித்தேன். இதனிடையே சில சகோதரர்கள் என்னை பற்றி உண்மைக்கு புறம்பான தகவல் பேசப்படுவதாகவும் அது பற்றி தாங்கள் தெரிவிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
நான் ஹஜ் சர்வீஸ் நடத்திவருவதை அனைவரும் அறிவர். TNTJ தலைமை மூலம் ஹஜ் சர்வீஸா? அல்லது TNTJ யா என்று என் முன்னால் கேள்வி வைக்கபட்டதாகவும் நான் ஹஜ் சர்வீஸை தேர்ந்தெடுத்ததாகவும் இதுதான் இப்ராஹீம் காசிமீ விலகளுக்கு காரணம் என என் நிலைபாட்டை கொச்சைபடுத்தி பரப்பிவருகின்றனர். உண்மையில் சகோதரர் பீஜே அவர்கள் தனியார் ஹஜ் சர்வீஸுக்கு எதிரான நிலைபாட்டை மூன்று வருடங்களுக்கு முன்பே எடுத்துவிட்டார்கள். தொலைகாட்சியில் அது பற்றி பேசியும் எழுதியும் வருகின்றார்கள். ஹஜ் சர்வீஸ்தான் காரணம் என்றால் அன்றே நான் விலகியிருந்திருப்பேன். நான் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று முடிவெடுப்பவனல்ல. அதே போல் நான் ஐ,என்,டி.ஜே க்கு ஆதரவான கருத்தை விதைத்து வந்ததாகவும் பரப்பப்படுகிறது. இருசாரார் சண்டையிட்டுக்கொண்டிருக்கும் போது சமாதான பேசுபவனது முயற்சிகள் இப்படி கொச்சைபடுத்தப்படுவது வேதனைதான் இருப்பினும் நான் யாரையும் குற்றம் சொல்வதற்கில்லை. அவரவர் பேசுவதற்குறிய விசாரணை மறுமையில் உள்ளது. என்பதை மறக்காமல் அறிவுருத்திக்கொள்கிறேன்.இயக்கங்களும் எனது நிலைபாட 1993 ல் சவுதி அரபியா தாயிஃபில் வைத்து ஏகத்துவ கொள்கைக்கு வந்த நான் ஜாக்,தமுமுக,அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் கூட்டமைப்பு TNTJ என சகோதரர் Pது அவர்கள் சார்ந்துள்ள இயக்கங்களிலேயே தொடர்ந்து இருந்துவந்தேன். தாயிஃபில் இருந்தபோது TNTJ இயக்கவாதியாக நான் இருந்ததால் நான் சந்தித்த இடையூறுகள் எனது ரப்புக்கே தெரியும். சகோதரர் பாக்கர் TNTJ பிரச்சாரகராக சவுதி வந்தபோது அவருடைய பிரச்சார பணிகளுக்கு உதவியதால் நான் பணிபுரிந்த எனது அலுவலக நிர்வாகத்திற்கும் எனக்கும் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டின் காரணத்தால் விடுமுறையில் தாயகம் வந்த நான் மீண்டும் சவுதிக்கு பணிக்கு செல்லாமல் இந்தியாவிலேயே தங்குவது என முடிவெடுத்து தங்கிவிட்டேன். அன்று TNTJ மர்கஸ்களில் மட்டும் பிரச்சாரத்திற்கு சென்றுவந்தேன். TNTJ யின் சமீபத்திய இயக்க நிலைபாடுகில் எனக்கு உடன்பாடு இல்லாத காரணத்தால் அதிலிருந்து விலகி சுதந்திரமாக ஏகத்துவ பிpரச்சாரம் செய்யப்போகிறேன். என மக்காவில் ஹாஜிகள் ஒன்று கூடிய அரஃபா நாளன்று (சகோதரத்துவத்தையும் கண்ணியத்தையும் காக்க வேண்டுமென்ற நபி(ஸல்) அவர்களின் இறுதிப்பேருரையயை நினைவு கூர்ந்து 15-11-10 அன்று நிச்சயமாக உங்களின் உயிர்களும்,உங்களின் உடமைகளும்,மானமும் இந்தபுனித மாதத்தின் இந்த புனித நாளின் புனித ஊரின் கன்னியத்தைப்போல் உங்களிடையே ( அதை சீர் குழைப்பது) ஹராமாகும்.

என்ற நபிவழியை நினவுகூர்ந்து முடிவெடுத்து TNTJ மாநில தலைமையகத்திற்கு தபால் எழுதிவிட்டேன்.

இயக்கங்களும் இயக்கத்தலைவர்களும் கொண்டுள்ள கருத்துவேறுபாடுகள் வளர்ந்துகொண்டே வருகிறது. உயர்ந்த ஜாதி,தாழ்ந்த ஜாதி என பிரிவினைகாட்டும் சமூகத்தாரைப்போல் இஸ்லாமிய இயக்கவாதிகள் தம்மிடையே பாகுபாடு காட்டிவருகின்றனர், கருத்துவேறுபாடுகள் ஆரோக்யமான முறையில் விவாதிக்கப்படாமல் மக்கள் மன்றத்தில் வைக்கபட்டு வரம்புமீறி ஒருவரை ஒருவர் மட்டம் தட்டும் போக்கும் குரோதம் கக்கும் வார்த்தை பிரயோகங்களும் பயன்படுத்தப்படுகின் இயக்கங்கள் நம் வசதிகாகாக நாமே உருவாக்கியவை என்பதை மறந்து மார்க்கமும் இயக்கமும் ஒன்று போல் தவறாக புரிந்துகொண்டு இயக்கத்தில் இல்லாதவரையும் கருத்துவேறுபாடுகள் உள்ள மார்க்கச்சட்டத்தில் தமது நிலைபாட்டை ஏற்காதவரையும் அவர் ஏகத்துவ வாதியாயினும் கொள்கை மாறியவன், வழிகெட்டவன் என சர்வசாதாரணமாக பிரச்சாரம் செய்கின்றனர். மார்க்க கருத்துவேறுபாடுகள் இயக்கத்தை இன்னொரு மத்ஹபாக்கிவிட்டததை என்னால் உணரமுடிகிறது. மாநில அளவிலான ஒரு இயக்கத்தை மட்டும் ஆதரிப்பதால் அந்த இயக்கம் வளருகிறபோது அனைவரும் இந்நிலைபாட்டை கடைபிடிக்கின்றனர். இதனால் ஒவ்வாரு ஊரிலும் பிரச்சனைகள், சண்டைகள்.

ஒரு இறைவிசுவாசிக்கு பிரச்சனை வந்தால் ஓடிசென்று உதவ வேண்டும், அவனை காப்பாற்றவேண்டு மென்ற இஸ்லாமிய சகோரத்துவமெல்லாம் செத்துப்போய் அவன் எப்போது பிரச்சனையில் மாட்டுவான் நாம் மகிழ்ச்சியடைவோம் . என்ற நோய் இயக்கவாதிகளின் உள்ளத்தை வெகுவாக பாதித்துள்ளது. இதை நினைத்து வெகுநாட்களாகவே நான் வேதனையடைந்துவந்தேன்.
முஸ்லிம்களின் நலனுக்காக பாடுபடும் எந்த இயக்கமானாலும் அந்த நலனை மட்டும் கருத்தில் கொண்டு மட்டும் நாம் ஆதரிப்போம் என நான் முடிவுக்கு வந்துவிட்டேன்.
இறைவனை வணங்குவதற்காக ஏகத்துவவாதிகளால் கட்டப்படும் பள்ளிவாசல்கள் தேர்தல் நேரங்களில் கட்சி அலுவலகங்களைப்போல் மாறி ஒரு இயக்கம் தான் ஆதரிக்கும் முஷ்ரிக்குகளுக்காக தேர்தல் பிரச்சார மேடையாக்கப்படுகிறது.

நாம் கொண்ட குர்ஆன் ஹதீஸ் கொள்கையை பிரச்சாரம் செய்வதற்காக மாற்று மதத்தார் அழைத்தாலும் அந்த மேடை குர்ஆன் ஹதீஸ் கொள்கைக்கு முறண்படாத வகையில் பிற இஸ்லாமிய இயக்கங்கங்களை தரக்குறைவாக விமர்சனம் செய்வதற்காக இல்லாமலும் இருந்தால் அதில் சென்று பிரச்சாரம் செய்ய தாயார் என்ற முடிவுக்கும் வந்துவிட்டேன்.

இதே சிந்தனைக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 100 க்கும் மேற்பட்ட சகோதரர்கள் இருக்கிறார்கள்.
இயக்க சண்டைகளை விரும்பாத இவர்கள் ஏகத்துவ கொள்கையை பிரச்சாரம் செய்ய எந்த இயக்கத்துக்கும் அதன் உறுப்பினராக இல்லாமலேயே இன்ஷாஅல்லாஹ் உதவுவார்கள்.

ஒரு இயக்கத்தை சார்ந்தவர் அதில் உறுப்பினராக இருக்கிறபோது அவரது மாநில தலைமையின் நிலைபாடுகள் அனைத்திற்கும் பங்குதாரர் ஆகிரார்

ஓற்றுமை என்பது ஒரு இயக்கத்தின் கீழ் அனைவரும் வருவது தான் என்றால் இந்தியாவில் பிற இயக்கதவர் அனைவரையும் கொன்றொழித்தால்தான் சாத்தியமாகும்.
தத்தம் பகுதியில் சமுதாயப்பனி ஆற்றிட ஒரு நிர்வாகம் அமைப்பது தவறில்லை. அதை மாநில அளவில் ஒரு இயக்கத்துக்குமட்டும் சம்பந்தபடுத்திவிட்டால் பின்நாளில் அதில் ஒரு இயக்கவாதி பொருப்புக்கு வருகிறபோது பிர இயக்கவாதி உள்ளே வரவோ குர்ஆன், ஹதீஸ் பிரச்சாரம் செய்யவோ அந்த இயக்கத்தின் மாநில தலைமை அனுமதி அளிக்காது. அன்றிலிருந்து அந்த ஊரில் முஸீபத் ஆரம்பமாகிவிடும். இதை நான் வசிக்கும் அறந்தாங்கியிலும் இன்னும் பல ஊர்களிலும் கண்கூடாக காண்கிறோம். ஒருசார்பு இயக்க நிலைபாடு சரியாக கருதுவோர் தஃவா பனிகளை விட இயக்கத்தை காப்பாற்ற என்னன்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்வர்.

அந்தந்தபகுதி சகோதரர்கள் ஒரு பக்க இயக்க சார்பு இல்லாமல் தம் பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு நிர்வாகத்தை அமைத்தால் கொள்கைவாதிகளிடம் பிரிவினை வராது. சவுதி அரபியாவில் பிரசித்தி பெற்ற ஏகத்துவ அறிஞர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களிடையே மார்க்க சட்டங்களில் கருத்துவேறுபாடுகள் உள்ளன அதைவைத்து யாரும் பிரிவினைகாட்டுவதில்லை. மார்க்க அறிஞர்களையும்,சமுதாயத்தலைவர்களையும் மதிப்போம். கருத்து வேறுபாடுள்ள சட்டங்களை பற்றி அவர்கள் கருத்து கூறும் போது அதனை விரும்பினால் ஏற்போம். அதைவைத்து நம்மிடையே பிரிவினை காட்ட மாட்டோம். இயக்கத்தை சார்ந்தவர்களிடம் இன்னுமொரு ஆபத்தான போக்கு உள்ளது . மார்க்கத்தகவலை சொல்லும் போது ஒன்றுக்கு பலமுறை ஆய்வு செய்து சட்டம் சொல்வோர் ஒரு முஃமினை பற்றி செய்தி பரப்ப ஆதாரம் பார்ப்பதில்லை. மார்க்க சட்ட ஆய்வில் தவறுசெய்தாலும் ஆய்வுக்கான நன்மை உண்டு. மனிதன் விஷயத்தில் தவறு செய்தால் மனிதன்; மன்னிக்காத வரை அல்லாஹ் மன்னிக்க மாட்டான் என்பதை இயக்கவாதிகள் எண்ணிப்பார்பதில்லை. செவிமடுப்பவற்றையெல்லாமட் பரப்புபவன் தான் பொய்யன் என்பதற்கு அவனே சாட்சியாளன் என்ற நபி மொழியை யாரும் நினைவு கூர்வதாக இல்லை.
நான் தனி இயக்கம் கட்டிவிட்டதாக தவறான தகவலை பரப்புகின்றனர். நான் வசிக்கும் எல்.என் புரம் பகுதியில் உள்நாடு, வெளிநாட்டில் சுமார் 50 க்கும் மேற்பட்ட தவ்ஹீத் சகோதரர்களின் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். குர்ஆன் ஹதீஸை பிரச்சாரம் செய்வதற்காகவும் ஐவேளை தொழுவதற்காகவும் ஒரு பள்ளியை கட்ட ஏற்பாடு செய்துள்ளோம். அதற்காக வசூலும் செய்து வருகிறோம். அதை கொச்சை படுத்தியே ஏமாற வேண்டாம் எனக்கூறி நம் சகோதரர்கள் விளம்பரம் செய்து வருகின்றனர். இதனால் அவர்கள் மீது நாம் கொஞ்சமும் கோபப்படமாட்டோம்.
நாம் எல். என். புரம் தவ்ஹீது ஜமாஅத் என பெயரிட்டது இணைவைக்கும் முஸ்லிம்களின் ஆதிக்கம் வரக்கூடாது என்பதற்காகவன்றி பிர இயக்கத்திற்கு போட்டியாக அல்ல!. நம் பள்ளியில் குர்ஆன் ஹதீஸ் பிரச்சாரம் செய்ய இணைவைப்பையும் பித்அத்தையும் ஆதரிக்காத எந்த இயக்கவாதி வந்தாலும் நாம் தடுக்க மாட்டோம்.
மேலும் 3. ஆண்டுகளாக அறந்தாங்கியில் அஸ் சஃபிய்யா இஸ்லாமிய பெண்கள் கல்வியகம் என்ற ஒன்றை துவங்கி நானே அதன் முதல்வராக இருந்து நான்கு ஆலிமாக்களைக் கொண்டு நடத்தி வந்தேன். நான் TNTJ யில் இருந்த காரணத்தால் அந்த இயக்க நிர்வாகத்திற்குட்பட்டதாகவே நடத்தி வந்தேன். எனது இந்த நிலைபாட்டிற்கு பிறகு TNTJ மாவட்ட நிர்வாகிகள் என்னை அழைத்து மத்ரசாவை தொடர்ந்து என்னையே நடத்தும் படி என்னிடமே ஒப்படைத்து விட்டனர். இந்த மத்ரசா எக்காலத்திலும் ஒரு இயக்க சார்பு நிலைக்கு போகாத வகையிலும் குர்ஆன் ஹதீஸ் பரப்பும் மர்கசாகவும் இருக்க வேண்டும் என்ற வகையிலும் நிர்வாகத்தை கொண்டு செல்ல இன்ஷா அல்லாஹ் அனைத்து கொள்கை சகோதரர்களும் உத வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். குர்ஆன்,சுன்னாவை போதிக்கும் நூற்றுக்கணக்கான தாயிகள் இயக்கத்துக்கு கட்டுபடாமல் தஃவா ஃபீல்டில் உள்னர். அதே நரம் குர்ஆன் சுன்னாவை அவர்கள் எந்த இயக்கவாதிக்கும் காழ்புணர்வு இன்றி பிரச்சாரம் செய்யவும்,அதற்காக தியாகம் செய்யவும் தயாராக உள்ளனர்.
சமுதாயத்தை சத்தியத்தில் இணைக்க வந்த இஸ்லாம் ஒருபோதும் சமூக பிளவுக்குக் காரணமாகாது. பகைமை பாராட்டிக் கொண்டு, சிதறி, சிக்குண்டு கிடந்த அரபுலகை சகோதரத்துவ முன்மாதிரிச் சமுதாயமாக எந்த இஸ்லாம் மாற்றியதோ அதே இஸ்லாம்தான் இன்று நம்மிடமும் உள்ளது. அங்கே கொள்கையில் எவ்வித விட்டுக் கொடுத்தலும் நடைபெற்றிடவில்லை. அல்லாஹ்வின் மீது சத்தியமாக நபி (ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் நம் அனைவரைவிடவும் கொள்கையில் உறுதியாக இருந்தார்கள். அங்கே தனிமனித குரோதங்கள் காணாமற்போனது, பழிவாங்கும் படலங்கள் நிறுத்தப்பட்டன, சுய கௌரவங்கள் மார்க்கத்திற்கு முன் சரணடைந்தன, அல்லாஹ்வின் திருப்பொருத்தம் மட்டுமே அவர்களின் இலக்காணது.
இந்த நிலைபாடுதான் என்னுடையதே அன்றி மார்க்க அறிஞர்களையும், ஜமாஅத் தலைவர்களையும் விமர்சிப்பதற்காக அல்ல. நான் என்னைபற்றி எதுவும் எழுத வேண்டாம் என்றுதான் இருந்தேன். என்னை பற்றி உண்மைக்கு முறணான தகவல்கள் பரப்பட்டது என்பதை அறிந்து இதனை எழுதியுள்ளேன். இதில் தவறு காணும் சகோதரர்கள் தாராளமாக என்னிடம் தெரிவிக்கலாம். எனது இ.மெயில் முகவரி
ibrahimqasimi@yahoo.com
தொலைபேசி : 9965744360
அன்புடன் உங்கள் மார்க சகோதரன்B.M.இப்ராஹீம் காசிமீ>
முதல்வர் அஸ் சஃப்வா இஸ்லாமிய பெண்கள் கல்வியகம்
அறந்தாங்கி-புதுக்கோட்டை மாவட்டம்

No comments:

Post a Comment